May 18, 2010

கார்த்தி…


 

   குசும்பன் கூப்பிட்டு எழுத முடியுமாடான்னு கேட்டுட்டுதான் இந்த தொடருக்கு கூப்பிட்டாரு. அப்படியும் எழுத மாட்டியாடா கார்க்கின்னு பல முறை மனசாட்சி பொங்குவதும், பின்பு அடங்குவதும் நாலஞ்சு நாளா நடந்துக் கொண்டிருக்கிறது. தொடர்பதிவு பார்த்து பயப்பட அது என்ன எக்சாமா? எப்பூடி புடிச்சேன் பார்த்திங்களா நூலை?அதான். தேர்வுபயத்தைப் பற்றிதான் எழுத சொன்னார் குசும்பன்.

பொதுவாக எனக்கு எக்சாம்ன்னா பயமே கிடையாதுங்க. அதெல்லாம் ஸ்கூலுக்கு போறவங்களுக்குத்தானேன்னு என்னால பிராக்கெட்டுல எழுத முடியும். வேணாம்ன்னு பார்க்கிறேன். விஷயம் என்னன்னா, நான் சுமாரா படிக்கிற பையன். அதனால் எக்சாமுக்கு பயம் என்பது அவ்வளவா கிடையாது. ஏழாவது படிக்கிறப்ப கடைசி ரிவிஷன்ல ஒரு பாடத்துல மட்டும் புட்டுக்குச்சு. அதுவரைக்கும் நான் யூரின் கூட ஃபெய்ல் ஆனதா ஹிஸ்டரியே கிடையாது. உடனே மனசுடைஞ்சு போகாம யோசிச்சேன். எப்படிடா கார்க்கி இதை வீட்டுக்குத் தெரியாம மறைக்கப் போறேன்னு. உடனே நம்ம மூளை ஒரு ஐடியா தந்துச்சு. அதன்படி ஏதோ ஒரு நோட்டுலே நாமளே ஒரு டெஸ்ட் எழுதி பக்கத்து பெஞ்சு பையன திருத்த சொல்லி, 15/15 போட்டு, அதுல அப்பா கிட்ட கையெழுத்து வாங்கப்பட்டது. ரேங்க் கார்டுல, கையெழுத்து போடற இடத்துல இங்க் ஊற்றி மொழுவப்பட்டது. வகுப்பாசிரியரிடம் “சார்.அப்பா கையெழுத்துப் போடும் போது இப்படி ஆயிடுச்சு. வேற எங்க சார் வாங்கிட்டு வரட்டும்” என்றேன். அறிவாளி ஆசிரியர் சொன்னார் “முட்டாள். ஒரு வெள்ளைப் பேப்பரில் கையெழுத்துப் போட்டு அதை கட் பண்ணி ஓட்டி எடுத்துட்டு வாடா”. அப்புறம் என்ன ஆயிருக்கும்ன்னு சொல்லணுமா? கடைசி ரிவிஷன் என்பதால் அந்த ரேங்க் கார்டு அவ்ளோதான். இப்படி பல ஐடியாக்கள் தோன்றும் மூளை இருக்கும் வரை தேர்வைக் கண்டு பயமா? நெவர்.

ஆறாவதுல இருந்து என் பக்கத்துல ஒருத்தன் இருப்பான். அவன் பேரு கார்த்தி. எனக்கு நினைவு தெரிஞ்சு நான் எழுதின எல்லா எக்சாமிலும் எனக்கு அடுத்து அவன் தான். என் புண்ணியத்துல அவனும் 10வது வரைக்கும் வந்துட்டான். பத்தாவது பொதுத் தேர்வில் வந்தது வினை. அவ்வளவு எளிதில் பார்த்து எழுதும்படி எங்கள் இருக்கை அமையவில்லை. முதல் தேர்வு தமிழ் என்பதால் சமாளித்த கார்த்தியை, அடுத்தடுத்த தேர்வுகளில் பாஸ் செய்ய வைப்பதாக நான் சொன்ன சத்யத்தை எப்படி காப்பாற்றலாம் என யோசிக்கத் தொடங்கினேன். அவன் ஹாஸ்டலில் தங்கிப் படித்ததால்..மன்னிக்க ஹாஸ்டலில் தங்கி சும்மா இருந்ததால் அவனால் எளிதில் பிட்டும் ரெடி செய்ய முடியாது. எனவே அந்த வேலையும் என்னிடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டது. பக்காவாக இண்டெக்ஸோடு, 2 மார்க் 5 மார்க் கேள்வி என தரம் பிரித்து பிட் அவனுக்கு தயார் செய்து வருவேன். கேள்வித்தாள் கைக்கு வந்ததும் எந்தெந்த பிட் எங்கே இருக்கு என்பது அவனுக்கு சமிக்ஞை மூலம் சொல்லப்படும்.

ஒரு மார்க் தான் எங்களுக்கு வரப்பிரசாதம். கண்ணுதான் A. மூக்குதான் B.உதடுதான் C. கழுத்துதான் D. அவன் கேள்வி நம்பரை சிக்னலால் சொன்னால், விடை இங்கே சிக்னலாக தரப்படும். காலேஜ் வரை இது தொடர்ந்தது. ஒரு வழியாக இதைத் தெரிந்துக் கொண்ட நண்பன் ஒருவன் “நல்ல வேளை  Dயோட போச்சு. அப்படியே J,Kன்னு போயிருந்தா என்னென்ன கூத்தடிச்சிருப்பிங்களோ” என்று சொன்னான். கிட்டத்தட்ட நாங்கள் அட்டெண்ட் செய்த 4 கேம்பெஸ் தேர்வில், மூன்றில் இந்த முறையைப் பின்பற்றி கார்த்தி முதல் ரவுண்டை கடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பள்ளிக்கு வருவோம். 10வது மார்க் வந்தது. கார்த்தி 435.(இங்கே நான் எடுத்த மார்க்கை சொன்னால், என்னடா விளம்பரம் என்ற பின்னூட்டம் வருமென்பதால் சென்சார்டு) கார்த்தியின் அப்பாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அங்கேயே 11வது சேர்த்தார். நான் டிப்ளொமா போகப் போகிறேன் என்றதும் கார்த்திக்கு இதயமே நின்றுவிட்டது. அவனும் கிளப்பினான் சென்னைக்கு வண்டியை. இங்கேயும் இருவரும் ஒரு கிளாஸ். எனக்கு அடுத்து கார்த்தி. முதல் நாள் வகுப்பிற்கு வந்த கார்த்தி ஓடிப்போய் எம்பி சீலிங்கைத் தொட்டுப் பாடினான் “நண்பன் ஒருவன் வந்தபிறகு. விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு”. மீண்டும் கல்லூரிக்கு  போவோம். பயம் வேண்டாம்.அந்தப் படத்துக்கு இல்லைங்க.

டிப்ளொமா தேர்வு ஹால் வேறு மாதிரி. கார்த்திக்கும் எனக்கும் இடையே குறைந்தது 21 எஞ்சினியர்கள் அமர்ந்திருந்தார்கள். வேறு மாதிரிதான் இதை டீல் செய்யணும் என்று புரிந்தது. எங்களை காப்பாற்றியது கால்குலேட்டர்தான். ஆம். தேவையோ இல்லையோ.. எல்லா தேர்வுக்கும் கால்குலேட்டர் எடுத்து செல்வோம். நான் எந்த தேர்வாக இருந்தாலும் 1 மணி நேரத்தில் முடித்துவிடுவது வழக்கம். முடித்தவுடன் கேள்வித்தாளில் 40 மார்க் நிச்சயம் பெறத்தேவையான விடைகளை பென்சிலில் எழுதி அதை மடித்து கால்குலேட்டரில் வைத்துக் கொள்வேன். சூப்பர்வைசர் அந்த பக்கம் போகும்போது எழுந்து சென்று கார்த்தி டேபிளில் என் கால்குலேட்டரை வைத்துவிட்டு, தயராக இருக்கும் அவன் கால்குலேட்டரை எடுத்துக் கொள்வேன். வழியில் சூப்பர்வைசைரிடம் என் பேப்பரைத் தந்துவிட்டு வெளியே சென்றால் கார்த்தியும் பாஸ்.நானும் பாஸ். பெரிய பாஸுடா நீங்க என்று கூட சொல்வார்கள் நண்பர்கள்.

அவனை ஒரு வழியாக டிப்ளோமாவும் முடிக்க வைத்தேன். எல்லாம் முடிந்து நான் சிங்கப்பூருக்கு நேர்முகத்தேர்வில் தேர்வாகி சென்றுவிட்டேன். கார்த்தியால் வரமுடியவில்லை. அங்கே இருந்து ஒரு நாள் ஃபோனில் அழைத்தேன். ஃபுல் மப்பில் இருந்த கார்த்தி சொன்னான் “த்தா.. என் வாழ்க்கையே அழிச்சிட்டியேடா. இத்தனை எக்சாமுல விதவிதமா காப்பியடிக்க சொல்லித்தந்த நீ கொஞ்சம் படிக்கவும் சொல்லித் தந்திருக்கலாமில்ல?”

கார்த்தி இப்போது பாண்டியில் அரிசிக்கடை வைத்திருக்கிறான்.

38 கருத்துக்குத்து:

இராமசாமி கண்ணண் on May 18, 2010 at 12:40 AM said...

நல்லாத்தான் யோசிச்சிறுக்கீங்க.

இனியா on May 18, 2010 at 1:09 AM said...

neengathaan antha kaarthiya???

அக்பர் on May 18, 2010 at 1:16 AM said...

//இத்தனை எக்சாமுல விதவிதமா காப்பியடிக்க சொல்லித்தந்த நீ கொஞ்சம் படிக்கவும் சொல்லித் தந்திருக்கலாமில்ல?”//

நாமென்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம். இல்லையா பாஸ் :)

நினைவுகூர்ந்தது மிக நன்றாக இருந்தது.

ஆனால் நம்மில் சிலருக்கு எது படித்தாலும் புரியாததற்கு என்ன காரணமென்று இதுவரை புரியவில்லை.

சுசி on May 18, 2010 at 2:24 AM said...

ரொம்ப வித்தியாசமா எழுதி இருக்கிங்க கார்க்கி..

//கண்ணுதான் A. மூக்குதான் B.உதடுதான் C. கழுத்துதான் D. அவன் கேள்வி நம்பரை சிக்னலால் சொன்னால், விடை இங்கே சிக்னலாக தரப்படும்.//

இன்றிலிருந்து தாங்கள் சிக்னல் சிங்கம் என்ற பட்டப் பெயரையும் பெறக்கடவீர்களாக.

தேர்வுப் பயமறியா சிக்னல் சிங்கம் கார்க்கி வாழ்க வாழ்க!!

கமலேஷ் on May 18, 2010 at 2:35 AM said...

நினைவுகூர்ந்தது மிக நன்றாக இருந்தது.

மகேஷ் : ரசிகன் on May 18, 2010 at 8:10 AM said...

சகா.... நீங்க செம படிப்ஸா?

மகேஷ் : ரசிகன் on May 18, 2010 at 8:10 AM said...

அந்த ரிவிஷன் டெஸ்ட் மேட்டர் கலக்கல்.

மகேஷ் : ரசிகன் on May 18, 2010 at 8:12 AM said...

நான் எங்க பாட்டி கிட்ட தான் கையெழுத்து வாங்குவேன்.. என்ன ரேங்க் வந்தாலும் இது தான் ஃபர்ஸ்ட் ரேங்க்னு சொல்லிடுவேன்,

முகிலன் on May 18, 2010 at 9:24 AM said...

பு

முகிலன் on May 18, 2010 at 9:24 AM said...

னை

முகிலன் on May 18, 2010 at 9:25 AM said...

வு

முகிலன் on May 18, 2010 at 9:25 AM said...

தான?

vanila on May 18, 2010 at 9:40 AM said...

கடைசி பத்தியைப்படிக்கும் பொழுது, "Label" புனைவு'ன்னு இருந்துருக்க கூடாதா.. என்று நினைத்தேன்..

மோகன் குமார் on May 18, 2010 at 10:02 AM said...

இவ்வளவும் மெய்யாலுமே நடந்துச்சா??நம்ப முடிய வில்லை.. இல்லை ..இல்லை

கார்க்கி on May 18, 2010 at 10:02 AM said...

நன்றி இராமசாமி

இனியா, கடைசியா பின்குறிப்பு சேர்க்க நினைத்தேன். நீங்க சொல்லிட்டிங்க. :)

அக்பர், காரணம் ரொம்ப சிம்பிள். நமக்கு அது ஒத்துவராது. கத்துக்க உலகில் இன்னும் ஏராளம் உண்டு

சுசி, ஹிஹிஹிஹி

நன்றி கமலேஷ்

மகேஷ், என்ன இதுக்கு நாலு கெட்ட வார்த்தைல திட்டி இருக்கலாம்.சரி விடுங்க. பாட்ட் கையெழுத்து போடுவாஙக்ளா? அப்புறம் நீங்க மட்டும் எப்படி சகா கைநாட்டு ஆனீங்க?

முகிலன்,

ல்
லை


கா..

வாநிலா, :))

Anbu on May 18, 2010 at 10:13 AM said...

Raavanan...?

Swf editor..

Vijay on May 18, 2010 at 10:14 AM said...

boss, kalakkureenkaa......vaalthukkal

Hanif Rifay on May 18, 2010 at 10:51 AM said...

ஆஹா... இப்படியும் ஒரு நல்லவரா... அட அட... நாளைக்கு எனக்கு எக்ஸாம் கார்கி.. வந்து கால்குலேட்டரை கொடுக்கவும்.. இல்ல அட்லீஸ்ட் கண்ணு மூக்கு வாயாவது தொட்டு காட்டவும்....

Hanif Rifay on May 18, 2010 at 10:51 AM said...

ஆஹா... இப்படியும் ஒரு நல்லவரா... அட அட... நாளைக்கு எனக்கு எக்ஸாம் கார்கி.. வந்து கால்குலேட்டரை கொடுக்கவும்.. இல்ல அட்லீஸ்ட் கண்ணு மூக்கு வாயாவது தொட்டு காட்டவும்....

அமுதா கிருஷ்ணா on May 18, 2010 at 11:13 AM said...

ஓ நீங்க அந்த கடையில தான் பப்லுக்கு அரிசி வாங்கிறீங்களா...கலக்கல் காப்பி...

ர‌கு on May 18, 2010 at 1:12 PM said...

//கண்ணுதான் A. மூக்குதான் B.உதடுதான் C. கழுத்துதான் D.//

தோழி அப்டேட்ஸ் ப‌டிக்க‌றோமோன்னு நினைச்சுட்டேன் ச‌கா ;)

செ.சரவணக்குமார் on May 18, 2010 at 1:40 PM said...

நினைவுகூர்ந்த விதம் மிக அருமை கார்க்கி.

நேசன்..., on May 18, 2010 at 1:46 PM said...

\\“த்தா.. என் வாழ்க்கையே அழிச்சிட்டியேடா. இத்தனை எக்சாமுல விதவிதமா காப்பியடிக்க சொல்லித்தந்த நீ கொஞ்சம் படிக்கவும் சொல்லித் தந்திருக்கலாமில்ல?”//

கலக்கல் கார்த்தி!நல்லாக் கேட்டிருக்காரு!

இரசிகை on May 18, 2010 at 2:51 PM said...

:)

இரசிகை on May 18, 2010 at 2:51 PM said...

:)

RaGhaV on May 18, 2010 at 3:01 PM said...

:-)))

குசும்பன் on May 18, 2010 at 3:09 PM said...

// ஃபுல் மப்பில் இருந்த கார்த்தி சொன்னான் “த்தா.. என் வாழ்க்கையே அழிச்சிட்டியேடா.//

இது என்ன கார்க்கி பிட்டு படங்கள் முடிவில் சொல்லப்படும் மெசேஜ் மாதிரி:))

ரைட்டு இருந்தாலும் படிக்கிற புள்ளையோட சகவாசம் வெச்சிருக்கேன் என்பதே பெருமைதானே:)))

கார்க்கி on May 18, 2010 at 3:45 PM said...

மோகன், நம்புங்க சார்

அன்பு, நாளைக்கு சிங்கம் விமர்சனம் :)

நன்றி விஜய்

ஹனீஃப், அது கார்த்திக்கு மட்டும்தான்:)

அமுதா மேடம், எப்படிங்க? சான்சே இல்ல

ரகு, ஹிஹிஹிஹி

நன்றி சரவணக்குமார்

நேசன், லேட்டா கேட்டத கூட கலக்கலா?

நன்றி ரசிகை

நன்றி ராகவ்

குசும்பரே, யாருக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கட்டும் :))

நாய்க்குட்டி மனசு on May 18, 2010 at 4:34 PM said...

கடைசியா ஒரு கேள்வி கேட்டாலும் சூப்பர் ஆ கேட்டீங்க !

அன்புடன் அருணா on May 18, 2010 at 4:35 PM said...

:(

கும்க்கி on May 18, 2010 at 5:53 PM said...

:))

:(((

Ganesh on May 18, 2010 at 7:08 PM said...

கேம்பஸ் இண்டெர்வியூ வரைக்குமா....:)

தாரணி பிரியா on May 18, 2010 at 9:32 PM said...

படிப்பாளியா :)

தாரணி பிரியா on May 18, 2010 at 9:32 PM said...

படிப்பாளியா :)

தாரணி பிரியா on May 18, 2010 at 9:32 PM said...

படிப்பாளியா :)

அதிலை on May 18, 2010 at 11:55 PM said...

Karki.. you should ask the same question to yourself..in a way, you spoiled him!!! tamil nadu state syllabus is very simple.if you study only 40% of your syllabus you can easily score more than 60%.. I am sure you know how it is possible...I remember your sslc mark is about 91% right?

கார்க்கி on May 19, 2010 at 1:24 AM said...

நன்றி நாய்க்குட்டி

டீச்சர் என்ன ஆச்சு?

நன்றி கும்க்கி

கணேஷ், ஆமா

நான் இல்ல தா.பி

அதிலை, உண்மைய சொல்லனும்ன்னா அந்த கேள்வி கூட அவன் கேட்கல.. எனக்கா தோணுச்சு... ஆனா அப்ப தெரியல சகா. அது கூட என் தப்பா தெரியல.. அந்த கல்விமுறைதான் காரணமா இருக்க முடியும்..நன்றி


5 லட்சம் ஹிட்சுக்கும் அனைவருக்கும் ஸ்பெஷல் நன்றி

சுசி on May 19, 2010 at 1:43 AM said...

500696 ஹிட்ஸ்கு வாழ்த்துக்கள் கார்க்கி..

ட்ரீட் எங்கே?? எப்போ?? என்ன??

 

all rights reserved to www.karkibava.com