May 17, 2010

மாறுகிறார் விஜய்


 

  தொடர்ந்து படங்கள் சறுக்கியதால், எல்லா முனைகளிலிருந்தும் ஏவுகனைகள் வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என இளைய தளபதி  ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார். வேறு வழியின்றி ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்புவதாக   வலையுலகில் செய்தி கசிந்து விட்டதால் எல்லா பதிவர்களும் தத்தம் கதைகளோடு நாளைய சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள்.

அதிஷா  :  மெர்சில் ஆவாத தலீவா.என்கிட்ட பாரு நிவேதான்னு ஒரு கேரக்டர் கீது.. அதுக்கு நீங்கதான் கரீக்ட்.சரின்னு சொல்லுங்க உயிர்மை மூவிஸ் வழங்கும் இளைய தளபதி இன் &ஆஸ் "பாரு நிவேதா" (பாரீஸில் பிரபலமானவன்) அப்பிடினு நீயூஸ் வுட்டுலாமா?

பாரு பாரு பாரு பாரு நிவேதா என்னை பாரு
கூறு கூறு கூறு கூறு என்னைப் போல யாரு கூறு
ஆறு ஆறு ஆறு ஆறு கடலில் போய் சேரும் ஆறு
யாரு யாரு யாரு யாரு என்னை வெல்ல இங்க யாரு?

அப்படி ஒரு என்ட்ரி சாங்கோட வந்தீங்கண்ணா அடுத்த சி.எம் நீங்கதாண்ணா

அனுஜன்யா: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.  எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.உங்க‌ளை அப்ப‌டியே லவ்டுடே, பூவே உனக்காக காலத்து விஜயாக காட்டும்....

அதிஷா  : என்ன சொல்றப்பா நீ? ஒழுங்கா தமிள்ல சொல்லு.. மராத்தி டிராமக்கு கதை சொல்ற? சச்சினும் இப்பிதான் நென்ச்சோம்.. வோனாம் த‌லீவா.. நீ பாரு நிவேதாதான்..

எஸ்.ஏ.ஸி: (மெதுவாக) ரெண்டு பேரும் வேணாம் விஜி..இவங்க பழய ஆளுங்க..புதுசா யாரவது டிரை பண்ணலாம்.

கேபிள்: என் பேருதான் யூத் சங்கர். நான் எழுதற விமர்சனத்தில் இருந்துதான் பத்திரிக்கைகளே உருவறாங்க. என்கிட்ட ஒரு கதை இருக்கு. ஆனா அதை அடுத்த புத்தகமா போடறேனு குகன் சொல்லியிருக்கார். நீங்க சொன்னா ஒரு கதை எழுதறேன். அப்படியே ஓப்பன் பண்ணா “குறுகிய நாளில் 2.4 கோடி கலெக்‌ஷன் தந்த ரசிகர்களுக்கு நன்றி”ன்னு ஸ்லைடு போட்டுதான் படமே ஆர்மபிக்கிறோம்

விஜய்: என்னை கொத்திடுவார் போலிருக்கே

டக்ளஸ்: தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல, இருங்க பாஸ் டென்ஷன் ஆகாதீங்க. எங்க தல  ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

விஜய் : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து..

புதுசாய் வருபவர்: நீங்க எந்தக் கதைல நடிச்சாலும், யாரு கூட நடிச்சாலும் சொந்தமா முடிவெடுங்க. சங்கீதா மேடத்தோட பேச்ச கேட்ட டர்ருதான். தங்கமணிய ஓரங்கட்டினா வெற்றி நமக்குதான்.

விஜய் : யாருப்பா நீ? தெளிவா பேசுற‌..

புதுசாய் வருபவர்:  என் பேரு சொல்ல‌ மாட்டேன்.ஆதில என்னை தாமிரான்னு சொல்லுவாங்க.இப்ப ஆதின்னே சொல்றாங்க. த‌ங்க‌ம‌ணிக‌ள‌ திருத்த‌ முடியாதுனு ஒரு ப‌ட‌ம் எடுங்க‌.க‌ல்யாண‌ம் ஆன‌ எல்லோரும் ப‌த்து த‌ட‌வ‌ பார்ப்பாங்க‌.கண்டிப்பா ஹிட்டுதான்..

ப்ரியமுடன் வசந்த் : த‌லைவா!!!!!!!!!!!!!!!! நீ எப்ப‌டி ந‌டிச்சாலும் ப‌ட‌ம் ஹிட்டுதான்..இவ‌ங்க‌ள‌ ந‌ம்பாதிங்க‌...

நர்சிம் : இந்தக் கதையெல்லாம் காப்பிங்க. ஒரிஜினல் எல்லாமே கம்பர்தான். அதுல இருந்து ஒரு கதை சொல்றேன். அப்படியே உங்களுக்கு ஆப்ட்டா மேட்ச் ஆகற மாதிரி

விஜய்: இல்ல பாஸ். ரீமேக் கொஞ்ச நாளைக்கு வேணாமே,

நர்சிம்: (மனதுக்குள்) அடப்பாவி. கம்பர்ன்னா ஏதோ கன்னட பட டைரக்டர்ன்னு நினைச்சுட்டானோ?

ரைட்டு தளபதி. சரித்தர படமெடுப்போமா? மாறவர்மன் பத்திரமா என் ஃப்ரிட்ஜுல இருக்காரு.

விஜய்: எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண், அயிரத்தில் ஒருவன் மாதிரி இருக்குமா?

நர்சிம் : இல்ல தளபதி. இது முற்றிலும் புதுமையான களம். சினிமா என்னும் கலையை கற்பதில் நீங்கள் நிரந்தர மாணவன். அதனாலே நிரந்தரமானவன்.

எஸ்.ஏ.சி: (மெதுவாக) இன்னும் படிச்சிட்டேதான் இருக்க. உனக்கு நடிப்பே வராது. அப்படின்னு நக்கலடிக்கிறார் விஜி.

விஜய் : நாறவர்மனும் வேண்டாம். கம்ப கஞ்சியும் வேண்டாம். நெக்ஸ்ட்டு

முரளி : சுப்பனாலே கெட்டா பரவாயில்லை. இவரு அப்பனாலே கெட்டுப் போறாரே!!

பரிசல்: கவலைப்படாதீங்க விஜய். மாஸும், கிளாஸூம் கலந்தவன் நான். என் ரூட்டை கூட இப்பதான் கவிதை பக்கம் திருப்பி இருக்கிறேன். உங்களுக்கும் ஒரு நல்ல திருப்பம் தருகிறேன்.

விஜய்: உங்கள பார்த்தாலே எனக்கு நம்பிக்கை வருது. கதையை சொல்லுங்க

பரிசல் : என்ன இது கெட்டப் பழக்கம்? நீங்க டைரக்டர்கிட்ட கதையெல்லாம் கேட்பிங்களா?

எஸ்.ஏ.சி: விஜி, இவர்தான் வில்லு விமர்சனத்துல, பீமன் கிட்ட கதையை கேட்ட நீங்க பிரபுதேவாகிட்ட கதையை கேட்டு இருக்கலாம்ன்னு எழுதியவரு. இவரு வேணுமா?

உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். .கதை இதுதான்

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

விஜய்: என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா?

அப்துல்லா: உதவி தேவைப்படறவங்களுக்கு உதவத்தான் நான் இருக்கேன். உங்க படத்துல நான் ஒரு பாட்டு பாடுறேண்ணா.

சினிமா ஒரு சூதாட்டம்டா நண்பா..
அதில் சூன்யாக்காரன் நிறையப் பேரு நண்பா..
ஒழுங்கா நடிச்சா ஓடாது.. ஒதை விட்டு நடிச்சா தோற்காது
நல்ல நல்ல படத்தையெல்லாம் நம்ம சனங்க பார்க்காதுடா..
நூறு நாள் ஓடத் தேவையில்லை
நண்பா மூணு வாரத்துக்கே இங்கே நூறு தொல்லை..

விஜய்: அதெல்லாம் நானே பாடிப்பேன். கொஞ்சம் ஓரமா நகருங்க. என்னையே அண்ணான்னு சொல்றாம்ப்பா இவன்.

குசும்பன் : அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குருவி ஏன் ஓடலனா, பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. கில்லி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க.

" சூப்பரான மொக்க போடுறா சத்தம் போடாம மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா    சொக்கா போடாம மொக்க போடுடா" னு சூரத்தேங்கா மெட்டில் போட்டோம்னா டாஸ்மாக் மாதிரி கலெக்ஷன் பொங்குமில்ல..

___________________________

35 கருத்துக்குத்து:

S.Sudharshan on May 17, 2010 at 2:36 PM said...

"அடப்பாவி. கம்பர்ன்னா ஏதோ கன்னட பட டைரக்டர்ன்னு நினைச்சுட்டானோ"
hehehe,,,....

ரசித்தேன் .. சுவாரசியமாக இருந்தது .. வாழ்த்துக்கள்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on May 17, 2010 at 2:40 PM said...

ஏகப்பட்ட குறியீடுகள் கொண்ட நல்லதொரு கருது கொண்ட இடுகை தோழர்!!

வாழ்த்துகள்!!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on May 17, 2010 at 2:41 PM said...

பின்னூட்ட நீட்சியாய் வடை தந்தமைக்கும் மிக்க நன்றி தோழர்!!

;)

அதிஷா on May 17, 2010 at 2:51 PM said...

விஜய வச்சு எங்கள காமெடி கீமெடி பண்ணலையே!

Anonymous said...

இவங்கெல்லாம் இப்படி விஜய் யோட எதிர்காலத்தை கெடுக்க நினைக்கும்போது கார்க்கி எங்கே போனார். அவரையும் வரச்சொல்லுங்க

நேசன்..., on May 17, 2010 at 3:12 PM said...

நர்சிம்,பரிசல்,குசும்பன் - கிளாஸ்!...

பேநா மூடி on May 17, 2010 at 3:29 PM said...

Neenga pogalaya story telling panna..

செ.சரவணக்குமார் on May 17, 2010 at 3:50 PM said...

கலக்கல் கார்க்கி. ரசித்து சிரிக்க வைத்ததற்கு நன்றி.

ILA(@)இளா on May 17, 2010 at 4:22 PM said...

நடக்க முடியாத விசயத்தைத் தானே கற்பனை பண்ணிப்பார்க்கனும். btw, இது கற்பனைப் பதிவுதானே.

ஜானு... on May 17, 2010 at 4:24 PM said...

:D ... Ha ha ha ... kalakkal karki ..

Darvin on May 17, 2010 at 4:45 PM said...

Ha ha ha...Sirthen...Rasithen..

ர‌கு on May 17, 2010 at 5:05 PM said...

கார்க்கி: வ‌ண‌க்க‌ம் ச‌கா, உங்க‌ளுக்காக‌ இள‌மை துள்ள‌லோட‌ ஒரு க‌தை வெச்சிருக்கேன் ச‌கா

விஜ‌ய்: ப்பா, யாருப்பா இவ‌ர், ச‌கா ச‌கான்னு சொல்லி, 'அன்பே சிவ‌ம்' ப‌ட‌த்தை ஞாப‌க‌ப்ப‌டுத்த‌றாரு, ஏன் என்னால‌ அந்த‌ மாதிரிலாம் ந‌டிக்க‌ முடியாதா?

எஸ்.ஏ.சி: விஜி, என்ன‌ப்பா, நீ பாட்டுக்கு ஆவேச‌ப்ப‌ட்டு 'ந‌டிக்க‌ற‌த‌' ப‌த்திலாம் பேச‌ற‌, கொஞ்ச‌ம் பொறுமையா இரு, சி.எம் ஆக‌ணும்னா பொறுமை அவ‌சிய‌ம்..த‌ம்பி நீ க‌தை சொல்லுப்பா

கார்க்கி: முத‌ல் நாள்‌ நீங்க‌ காலேஜ்ல‌ எண்ட‌ர் ஆக‌றீங்க‌

விஜ‌ய்: ஸ்கூல் போற‌ வ‌ய‌சுல‌ என‌க்கு பைய‌ன் இருக்கான்பா

கார்க்கி: இருக்க‌ட்டும் ச‌கா, நீங்க‌ ஒரு எட‌ர்ன‌ல் யூத்து...க‌தை கேளுங்க‌, முத‌ல் நாள் காலேஜ்ல‌ எண்ட‌ர் ஆகும்போது, ஒரு பொண்ணை தெரியாம‌ இடிச்சுட‌றீங்க‌...முத‌ல்ல‌ ச‌ண்டை ஆகி, சில‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளுக்கு அப்புற‌ம் தோழி ஆகிட‌றாங்க‌. அந்த‌ தோழி ஒரு நாள் பூக்க‌ள் டிசைன் போட்ட‌ டைட் டிஷ‌ர்ட் போட்டுட்டு வ‌ர்றாங்க‌....அப்போ நீங்க‌ ஒரு க‌விதை சொல்றீங்க‌..

ஆல்தோட்ட‌ பூப‌திக்கே
அச‌ராம‌ல் ஆடிய‌வ‌ன்
பூந்தோட்ட‌ புய‌லைக்
க‌ண்டு ஆடிபோய்
நிற்கிறான்

எஸ்.ஏ.சி: த‌ம்பி, அந்த‌ சில‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்னு சொன்னீயே, அங்க‌ ஸ்க்ரீன்பேளேவை நான் டெவ‌ல‌ப் ப‌ண்றேன்பா, இப்ப‌டித்தான் 'ர‌சிக‌ன்' ப‌ட‌த்துல‌...

கார்க்கி: நீங்க‌ உருப்ப‌டாம‌ போற‌துக்கு முத‌ல் கார‌ண‌மே இவ‌ர்தான் ச‌கா!

(பிண்ண‌ணியில் "ஒரு சூறாவ‌ளி கிள‌ம்பிய‌தே" பாட‌ல் ஆர‌ம்பிக்க‌, இய‌க்குன‌ர் (ஆகியிருக்க‌ வேண்டிய‌) கார்க்கி கோப‌மாக‌ கிள‌ம்புகிறார்!)

SenthilMohan K Appaji on May 17, 2010 at 6:02 PM said...

//*நாளைய சூப்பர் ஸ்டாரை**/
என்ன சகா..? அவர அடுத்த புரட்சித்தலைவர் ஆக்காம விடப் போவதில்லைன்னு அவரோட அப்பா கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிறார்னும், இதனை அவரே ஒத்துக் கொண்டிருக்கின்றார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ள இந்நிலையினில் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். என்னதான் Mass/Fan following இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சமில்ல. ரொம்பவே ஓவரு தான். இது மாதிரி உசுப்பேத்துற டைரக்டர்s கிட்ட கதை கேக்குறத முதல்ல நிறுத்த சொல்லுங்க.

கார்க்கி on May 17, 2010 at 6:09 PM said...

நன்றி சுதர்ஷன்

நன்றி ஷங்கர்.என்ன குறியீடு என்று எடுத்தியம்பினால் தன்யனாவேன்

அதிஷா, நீ பேசாத... :(

அம்மிணி, தலைவருக்காக பக்கா ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன் :)

நேசன், குசும்பன் வந்து நன்றின்னு சொல்ல போறாரு.. அவரை பாராட்டுவதாக நினைத்து

பேநாமூடி, இல்லை சகா

நன்றி சரவணக்குமார்

இளா, என்ன சொல்ல வறீங்க?

நன்றி ஜானு

நன்றி டார்வின்

ரகு, நடத்துங்க பாஸ்..நடத்துங்க

செந்தில், ரஜினி அளவுக்கு அவர் இன்னும் வரலைன்னு சொன்னாலும், இப்போதைக்கு முண்ணனியில் இருப்பவர் அவர்தானே? ரஜினி இன்னும் ஒன்னு, ரெண்டு படமே நடிப்பார். அப்புறம் யார் அதிக மாஸ் ஹீரோ? சொல்லுங்க

இரசிகை on May 17, 2010 at 6:16 PM said...

:)

Bala on May 17, 2010 at 6:16 PM said...

//நாளைய சூப்பர் ஸ்டாரை

இதானே வேணாங்கிறது.

//ரஜினி இன்னும் ஒன்னு, ரெண்டு படமே நடிப்பார்.

இதை எப்படி நீங்க முடிவு பண்ணலாம்?

எப்படி ரஜினி புரட்சி தலைவர் ஆக முடியாதோ அதே போல விஜய் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது

இராமசாமி கண்ணண் on May 17, 2010 at 7:10 PM said...

:-)

ஜெட்லி on May 17, 2010 at 9:03 PM said...

விஜய்னா யாரு.....??

Ammu Madhu on May 17, 2010 at 9:03 PM said...

நல்லா இருக்கு கார்க்கி.
ராவணன் பாடல் விமர்சனம் எதிர்பார்த்து வந்தேன்.

ஆதிமூலகிருஷ்ணன் on May 17, 2010 at 9:40 PM said...

மீள்பதிவுன்னா இப்பல்லாம் சொல்றதேயில்ல போலருக்குது.

அப்புறம் பத்திரப்படுத்தவும். அடுத்தப்படம் ஊத்தினபிறகும் மீள்பதியலாம். ஹிஹி..

தர்ஷன் on May 17, 2010 at 10:40 PM said...

ஏற்கனவே எழுதியதில் அதிஷாவுக்கு பதில் லக்கி இருந்தார் என நினைக்கிறேன். இப்படி மீள்பதிவு எல்லாம் போட்டு ஏமாத்த முடியாது சகா கண்டுபிடிச்சுடுவோம்

தாரணி பிரியா on May 17, 2010 at 10:52 PM said...

மீள்பதிவாதானே கார்க்கி, விஜய் படத்தோட கதைகளும் மீள்பதிவு போலத்தான் சொல்லாம சொல்லறீங்க சரியா .

Minmini on May 17, 2010 at 11:47 PM said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

சுசி on May 18, 2010 at 2:31 AM said...

அவ்வ்வ்..
மாப் என் கைலவா..
ஆவ்வ்வ்..

"ராஜா" on May 18, 2010 at 11:05 AM said...

//நாளைய சூப்பர் ஸ்டாரை

ரெண்டு பிரியாணி பொட்டலம் பார்சல்...

@ பாலா

ரிபீட்டு ....

செல்வேந்திரன் on May 18, 2010 at 12:04 PM said...

நன்றாக இருந்தது.

Vidhoosh(விதூஷ்) on May 18, 2010 at 5:08 PM said...

நல்ல பதிவு நன்றி தாண்டவராயன்

LK on May 19, 2010 at 12:18 PM said...

nallathu

குசும்பன் on May 19, 2010 at 1:10 PM said...

விஜய்: அதெல்லாம் நானே பாடிப்பேன். கொஞ்சம் ஓரமா நகருங்க. என்னையே அண்ணான்னு சொல்றாம்ப்பா இவன்.//

ஹா ஹா ஹா விஜய் பையனையே அப்படிதான் சொல்வாரு இவரு:)))

Rajasurian on May 20, 2010 at 2:02 PM said...

விஜய் படத்த பத்தி யார் என்ன கமென்ட் அடிச்சாங்கன்ற தகவலுக்கே மெமரில GB கணக்குல space ஒதுக்கீருப்பீங்க போல....

:)

சுவாரசியமான பதிவு.

பனங்காட்டான் on May 20, 2010 at 2:35 PM said...

இப்பத்தான், நீங்க சொன்னதக் கேட்டு விஜயத்தவிர உருப்படியா வேற எதையாவது எழுதிப்பாப்போம் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். விட மாட்டீங்க போல!
மத்தபடி மேட்டர் சூப்பரப்பு!

பனங்காட்டான் on May 20, 2010 at 2:36 PM said...

நிஜமாவே பாவங்க டாக்டர் தம்பி!

Robin on May 24, 2010 at 11:07 AM said...

:)

ராஜன் on May 24, 2010 at 11:39 AM said...

இனி நான்லாம் தேவையே இல்ல ! கார்க்கியே போதும் !

"உழவன்" "Uzhavan" on May 25, 2010 at 4:31 PM said...

//அடப்பாவி. கம்பர்ன்னா ஏதோ கன்னட பட டைரக்டர்ன்னு நினைச்சுட்டானோ?//
 
:-))

 

all rights reserved to www.karkibava.com