May 23, 2013

ரூம் மேட்   Cricket is sexier than girls. கார்த்திக் சொன்னது 100% சரி. இது ஒரு செம கேமுங்க. சின்ன வயசுல இருந்தே.. இப்பவும் எனக்கு சின்ன வயசுதான் இல்ல? அப்போ, குழந்தையா இருக்கும் போதிருந்தே நான் கிரிக்கெட் காதலன். அந்த வயசிலே காதாலான்னு என்னை கேட்க மாட்டிங்கன்னு நம்பறேன். என் வயசு பசங்களுக்கு குருன்னா நம்ம சச்சின் தான். அவருடைய டெஸ்ட் மேட்ச் பார்ப்பிங்களா? கிளாசிக். குவார்ட்டேலி, ஹாஃப் இயெர்லின்னு எந்த டெஸ்ட் வந்தாலும்,சச்சின் ஆடுற டெஸ்ட்ட மிஸ் பண்ணவே மாட்டேன். அதுக்காகவே மிஸ் என்னை அடிப்பாங்க.ஆனா நான் சச்சின் அடிக்கிற எந்த ஷாட்டையும் மிஸ் பண்ண மாட்டேன்.

  டிவில டெஸ்ட் மேட்ச் ரீடெலிகாஸ்ட் ஆனாலும் ஒரு பால் விடாம பார்ப்பது நான் மட்டும்தான்னு அம்மா சொல்வாங்க. அப்போலாம் அம்மா என்னை கடைக்கு அனுப்பி பால் வாங்கிட்டு வர சொல்வாங்க. நான் போய் நல்லதா ஒரு டென்னிஸ் பால் வாங்கிட்டு வந்து அம்மா கிட்ட அடி வாங்குவேன். அந்த கோவத்தோடு மேட்ச் விளையாட போனா, உன்னாலதானே அடி வாங்கினேன்னு அந்த பால செமையா அடிப்பேன். அதுக்காகவே அம்மா கிட்ட குச்சியால அடிக்க சொல்வேன். அப்போதானே நானும் பேட்டால அடிக்க முடியும்?.

காலேஜ்ல சேர்ந்தப்ப கிரிக்கெட்டுல பெரிய ஆளா வரணும்னு வெறி வந்துச்சு. எங்க காலேஜ் கிரவுண்டுலதான் ராபின் சிங் பிராக்டீஸ் பண்ணுவாருன்னு சொன்னாங்க. அவர்கிட்ட போய் சேரலாம்னு விசாரிச்சேன். சேரலாம். ஆனா மாசம் 1500 ருபாய், பேட், கிட் என 5000 ரூபாய் கேட்டாங்க. சேர முடியல. ஒரு வாரம் சோகமா இருந்தேன். ரூம் மேட் ஒரு மாதிரியா பார்த்தான். கபில்தேவை கூட இப்படித்தான் பார்த்தாங்களாம். அவன்கிட்ட சச்சின் பத்தி சொன்னேன். எனக்கு கொச்சின்தான் தெரியும்னு சொன்னான். நான் உனக்கு சொல்லித் தறேண்டானு சொன்னேன். வேற வழியில்லாம சரின்னு சொன்னான். என் ரூம் மேட் ரொம்ப நல்லவன். நான் ரொம்ப திறமைசாலின்னு அவனுக்கு தெரியும். சரி விடுங்க. அப்படின்னு அவன் நம்பறான்.

தினமும் மாலையில் காலேஜ் முடிந்து வந்து அவனுக்கு பிராக்டீஸ் தருவேன். பேப்பருல பிள்ளையார் சுழி போடற மாதிரி பேட்டுல MRFன்னு எழுத சொன்னேன். அப்பதான் சச்சின் மாதிரி லெக் சைடுல ஃப்ளிக் பண்ண முடியும்ன்னு சொன்னத அவன் நம்பல. அதை எழுதிட்டு நானே பந்தை மேல போட்டு ஃப்ளிக் பண்ணி காமிச்சேன். அப்பவும் அவன் நம்பல.அவன் அடிச்சு பார்த்தப்ப எட்ஜ் ஆகி மேல இருந்த ட்யூப் லைட் மேல பட்டுடுச்சு. அப்பதான் எனக்கு ஸ்பார்க் ஆச்சு. அவன் பந்தை மேல போடும்போது சுழட்டி விட்டான். அப்பவே அவன் பேட்ஸ்மென் இல்ல, ஸ்பின்னர்ன்னு தெரிஞ்சிடுச்சு எனக்கு.
உடனே அவனுக்கு பிரசன்னாவை பத்தி சொல்ல ஆரம்பிச்சேன். அவரோட ஃபோட்டோ இருக்கிற நியுஸ் பேப்பர் கொண்டு வந்து அவர மாதிரி பால் போட சொன்னேன். ஏதோ செஞ்சான். ஆனா அவன் கையில் ஏதோ சக்தி இருந்துச்சு. அவன் போடற ரெண்டுல ஒரு பால் என் ஸ்டம்ப்ப தூக்கிடும். அந்த 10க்கு 10 ரூமுல பெருசா ஷாட் அடிக்க முடியாது. சுவத்துல நேரா பட்டாலே அவுட். கவனமா தரையிலே அடிப்பேன்.  ரெண்டு பேரும் வேகமா வளர்ந்தோம். நான் ஒரு பேட்ஸ்மேனாகவும், அவன் ஒரு பவுலராகவும் அந்த ரூமுக்குள்ளே வளர்ந்தோம். ஒரு நாள் அந்த ரூமைத் தாண்டி நாங்க வெளிய வருவோம். வந்து கலக்குவோம்னு மட்டும் எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.

  அந்த வருஷம் முடியும் போது டீம் செலக்‌ஷன் பண்ணாங்க. என் ரூம்மேட் அவன் அக்கா கல்யாணம் இருந்ததால் வர முடியல. நீயாவது போய் செல்க்ட் ஆவுடா மச்சான்னு சொல்லியிருந்தான். அவன் கனவெல்லாம் நான் இந்தியா டீமுக்காக சிக்ஸ் அடிக்கணும்ன்றதுதான். நல்ல ஃப்ரெண்ட். அதை விட நல்ல பவுலர். என்னை இதுவரைக்கும் 798 தடவை போல்ட் ஆக்கியிருக்கானே. செலக்‌ஷன்ல வந்தவங்க எல்லாம் சிக்ஸா அடிச்சாங்க. என் டர்ன் வந்துச்சு, ரூமுல ஆடியே பழக்கப்பட்ட எனக்கு ஷாட் எல்லாம் ஸ்லோவாதான் வந்துச்சு. பிட்ச்ச தாண்டி பந்து நேரா வெளிய கூட போகல. அதை விட முக்கியமா பந்து போட்டவன் ரூம்மேட் மாதிரி ஸ்பின்னர் இல்லை. வேகமா போட்டான். ஸ்பின்னராவது ஸ்டம்ப்பாதான் தூக்குவான். ஆனா இவன்.. இவன்.. கண்ணு மூடி தொறக்குறதுக்குள்ள அது நடந்துடுச்சு. ஆனா என்னால்தான் நடக்க முடியல.

ரூமுக்கு தூக்கிட்டு வந்து விட்டாங்க. ரெண்டு நாள் பெட் ரெஸ்ட். அடுத்த நாள் ரூம்மேட் வர்றதுக்குள்ள MRF பேர் போட்ட குச்சி, பந்து, சுவத்துல இருந்து மூணு ஸ்டம்பு, ரெண்டு பெயில்ஸ், பவுண்டரி லைன் எல்லாத்தையும் அழிச்சிட்டேன். அவன் வந்தவுடனே செலக்‌ஷன் என்ன ஆச்சுடான்னு கேட்டான். நான் எதுவும் பேசல. அவன் உடனே “விடு மச்சான். மறுபடியும் பிராக்டீஸ் பண்ணுவோம். செகண்ட் இயர் நீதாண்டா கேப்டன்”ன்னு சொன்னான். சொன்ன பிறகுதான் கவனிச்சான். கிரிக்கெட் சம்பந்தமா எதுவுமே ரூமில இல்ல. என்னடான்னு கேட்டான். நான் சொன்னேன்.

“செஸ் தெரியுமா மச்சி? இண்ட்டெலிஜெண்ட்கேம்டா. ஆனந்த்தான் இப்போ உலக சாம்பியன். நம்ம ஊருதான். எனக்கு செஸ்ன்னா உயிரு. சிசிலியன் டிஃபென்ஸ் தான் என் ஃபேவரிட். நான் உனக்கு சொல்லி தர்றேன்”. ரூம் மேட் சாக்பீஸைத் தேடி தரையில் 8க்கு 8 கட்டம் போட்டுக் கொண்டிருந்தான்

29 கருத்துக்குத்து:

Kafil on May 13, 2010 at 12:51 AM said...

night shiftla ivanunga koduma thaangama inga vantha.. athukum mela..kadichu thuppureengale sir.. neenga piranthathula irundhe ipdiya illa paathila ipdiya...

தமிழ்ப்பறவை on May 13, 2010 at 12:52 AM said...

:-)

சுசி on May 13, 2010 at 1:22 AM said...

உங்க ரூம் மேட் இப்போ உயிரோட இருக்காரா கார்க்கி??

குட்டி on May 13, 2010 at 4:18 AM said...

"ரூம் மேட்" Part-2:
செஸ் tournament selection ல கார்க்கி ஒரு பெரிய்ய ரவுண்டு வருவார்ங்கற நம்பிக்கைல நண்பன் மறுபடியும் ஊருக்கு போனாரு..,ராஜா ராணி மந்திரி மாதிரி (இளைய)தளபதியும் இருந்தாதான் ஆட்டம் ஜெயிக்கும்ன்னு selection committee கிட்ட பீலா உட்டு அதுலயும் செம்ம்ம்ம அடி..மறுபடியும் 8x8 கட்டம் எல்லாம் அழிச்சுட்டு கார்க்கி உக்காந்து சொல்லி தர்றாரு நண்பனுக்கு... "டேய் கொலகொலையா முந்திரிக்கான்னு ஒரு very interesting கேம், நான் சொல்லி தர்றேன் டா உனக்கு"


கி கி கி.....

மகேஷ் : ரசிகன் on May 13, 2010 at 7:11 AM said...

// இப்பவும் எனக்கு சின்ன வயசுதான் இல்ல? //

நாராயணா....

Ganesh on May 13, 2010 at 9:38 AM said...

\\கபில்தேவை கூட இப்படித்தான் பார்த்தாங்களாம்\\

:)

கார்க்கி on May 13, 2010 at 9:58 AM said...

கஃபில்,
இது ஒரு பின்நவீனத்துவ பதிவுங்க. பதிவுல எத்தனை குறியீடு இருக்கு தெரியுமா? ரூமுக்குள்ளே கிரிக்கெட் என்பது ஐபிஎல். வெளியே போன உதைதான் வாங்குவாங்க இந்திய கிரிக்கெட் அணி என்பது போல. சமீபத்தில உலக கோப்பையில் அடிவாங்கியதுதான் ஸ்டம்ப்ப் போனது. ஆனந்த ஜெயிச்சது தெரியுமில்ல? ரூம் மேட்டுக்கு பேரே சொல்லல பார்த்திஙக்ளா? அவன் தான் காமன் மேன். மீடியா என்ன சொல்லுதோ அதுதான் வேத வாக்கா நினைக்கிறவன். இப்போ மீடியா இந்தியா தோத்தவுடனே, செஸ் பக்கம் திரும்புது. அவனும் திரும்பறான். இந்த மாதிரி இன்னும் பல குறியீடு இருக்கு. அத கண்டுபுடிங்கன்னா, இதை போய் மொக்கைன்னு சொல்றீங்க??????

நன்றி தமிழ்ப்பறவை

சுசி, அவனி விட்டு நான் தூரம் வந்து பல வ்ருஷம் ஆச்சு. இருப்பான்.

குட்டி, ரைட்டு

மகேஷ், இதான் கலிகாலம். கொசுவ பார்த்து நாராயணான்னு சொன்ன காலம் போய் கொசுவே...சரி விடுப்பா

கணேஷ், நிஜமாத்தாங்க..

மோகன் குமார் on May 13, 2010 at 10:42 AM said...

பதிவை ரசித்தேன்.. கூடவே குறியீடு பற்றிய உங்க விளக்கத்தையும்...

Hanif Rifay on May 13, 2010 at 11:28 AM said...

ஆஹா...கார்கி...சகா நேத்து மணிஜி கவித படிச்சா எப்பெக்டா....:-)

நல்லா இருக்கு சகா...

மங்களூர் சிவா on May 13, 2010 at 11:31 AM said...

நேத்தே பஸ்ல படிச்சேன் மிக அருமை.

வெண்பூ on May 13, 2010 at 11:35 AM said...

//
இது ஒரு பின்நவீனத்துவ பதிவுங்க.
//

(க‌வுண்ட‌ர் ஸ்டைலில் ப‌டிக்க‌வும்)
என்ன‌டா விள‌ம்ப‌ர‌ம்.. இந்த‌ எழுத்தாள‌ருங்க‌, க‌விஞ‌ருங்க‌ தொல்லைதான் தாங்க‌ முடிய‌ல‌, புரியாம‌ ஒரு க‌தையோ க‌விதையோ எழுதுவாங்க‌.. த‌மிழ்ல‌தான் எழுதுவாங்க‌ன்னாலும் ந‌ம‌க்கு புரியுதான்ன்னா புரியாது.. அதுவாவ‌து ஒரு 10 வ‌ரியில‌ இருக்கான்னா இருக்காது ப‌க்க‌ம் ப‌க்க‌மா எழுதி கொல்லுவாங்க‌.. ந‌ம‌க்கு எதுக்கு இதெல்லாம்???? :)))

குசும்பன் on May 13, 2010 at 12:02 PM said...

//செஸ் தெரியுமா மச்சி?//

இதுக்கும் ஏதும் வார்த்தை மாத்தி போட்டு தெரியும் மச்சி ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் இருக்குன்னு சொல்லிபாரேன் கார்க்கி:)))

T.V.ராதாகிருஷ்ணன் on May 13, 2010 at 12:55 PM said...

:)))

Palay King on May 13, 2010 at 12:56 PM said...

Puriyala saga..

COngrats

திருஞானசம்பத்.மா. on May 13, 2010 at 1:09 PM said...

//.. அது நடந்துடுச்சு. ஆனா என்னால்தான் நடக்க முடியல. ..//


:-)))

விக்னேஷ்வரி on May 13, 2010 at 1:49 PM said...

நல்ல ரூம் மேட். நக்கல், நையாண்டி, கனவு, இழப்பு, நட்பு எல்லாமே சேர்ந்து ஒரு உயிர்ப்பு இருந்தது இந்தப் பதிவுல.

கயல் on May 13, 2010 at 2:11 PM said...

//
சுசி said...
உங்க ரூம் மேட் இப்போ உயிரோட இருக்காரா கார்க்கி??

//

உயிரோட இருந்தா கீழ்ப்பாக்கத்துல தானுங்க இருப்பாரு!

ர‌கு on May 13, 2010 at 2:48 PM said...

//கார்க்கி said...
கஃபில்,
இது ஒரு பின்நவீனத்துவ பதிவுங்க.//

ந‌ல்ல‌வேளை சொன்னீங்க‌ளே!

லேபிளை 100% ஜ‌ஸ்டிஃபை ப‌ண்ணிய‌ ப‌திவு..ஹி..ஹி..;)

செ.சரவணக்குமார் on May 13, 2010 at 3:00 PM said...

ஒரு சிறுகதையின் சாயலில் நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுத்த பதிவு கார்க்கி.

Anonymous said...

//காலேஜ்ல சேர்ந்தப்ப கிரிக்கெட்டுல பெரிய ஆளா வரணும்னு வெறி வந்துச்சு. //

கனவு இன்னும் கனவாவெ இருக்கா. பப்லுவை டீம் சேத்துக்கோங்க. அவன் நிறைய நண்பர்களை கூட்டி வருவான்.

Pradeep on May 13, 2010 at 3:21 PM said...

Singam songs review podunga saga..

இரசிகை on May 13, 2010 at 6:10 PM said...

//
கஃபில்,
இது ஒரு பின்நவீனத்துவ பதிவுங்க. பதிவுல எத்தனை குறியீடு இருக்கு தெரியுமா? ரூமுக்குள்ளே கிரிக்கெட் என்பது ஐபிஎல். வெளியே போன உதைதான் வாங்குவாங்க இந்திய கிரிக்கெட் அணி என்பது போல. சமீபத்தில உலக கோப்பையில் அடிவாங்கியதுதான் ஸ்டம்ப்ப் போனது. ஆனந்த ஜெயிச்சது தெரியுமில்ல? ரூம் மேட்டுக்கு பேரே சொல்லல பார்த்திஙக்ளா? அவன் தான் காமன் மேன். மீடியா என்ன சொல்லுதோ அதுதான் வேத வாக்கா நினைக்கிறவன். இப்போ மீடியா இந்தியா தோத்தவுடனே, செஸ் பக்கம் திரும்புது. அவனும் திரும்பறான். இந்த மாதிரி இன்னும் பல குறியீடு இருக்கு. அத கண்டுபுடிங்கன்னா, இதை போய் மொக்கைன்னு சொல்றீங்க??????
//

:))

அன்புடன் அருணா on May 13, 2010 at 6:22 PM said...

ஓ இது பின் நவீனத்துவமா?????அப்போ எனக்குப் புரியாது.

Kafil on May 13, 2010 at 7:01 PM said...

Vara Vara intha Elakiyavathingaloda tholla thaanga mudiyalappa, siruvarmalar padikra payyan kitta poi "Pin naveenathuvam"pesureengale.. ungala ellam... by the way apdi veladumpothu engayo adipattuchunnu sonnengale.. athukku appuramum thozhi updates eluthureengale.. oru vela ithuthaan pin naveenathuvomo????

வெற்றி on May 14, 2010 at 10:25 AM said...

//இது ஒரு பின்நவீனத்துவ பதிவுங்க. பதிவுல எத்தனை குறியீடு இருக்கு தெரியுமா? ரூமுக்குள்ளே கிரிக்கெட் என்பது ஐபிஎல். வெளியே போன உதைதான் வாங்குவாங்க இந்திய கிரிக்கெட் அணி என்பது போல. சமீபத்தில உலக கோப்பையில் அடிவாங்கியதுதான் ஸ்டம்ப்ப் போனது. ஆனந்த ஜெயிச்சது தெரியுமில்ல? ரூம் மேட்டுக்கு பேரே சொல்லல பார்த்திஙக்ளா? அவன் தான் காமன் மேன். மீடியா என்ன சொல்லுதோ அதுதான் வேத வாக்கா நினைக்கிறவன். இப்போ மீடியா இந்தியா தோத்தவுடனே, செஸ் பக்கம் திரும்புது. அவனும் திரும்பறான். இந்த மாதிரி இன்னும் பல குறியீடு இருக்கு. அத கண்டுபுடிங்கன்னா, இதை போய் மொக்கைன்னு சொல்றீங்க??????//

:))

வெற்றி on May 14, 2010 at 10:26 AM said...

//மகேஷ், இதான் கலிகாலம். கொசுவ பார்த்து நாராயணான்னு சொன்ன காலம் போய் கொசுவே...சரி விடுப்ப//

yeppidi ippdiyellaam :))

காற்றில் எந்தன் கீதம் on May 14, 2010 at 11:55 AM said...

பதிவு நல்லா இருக்குங்க அத விட உங்க குறியீட்டு விளக்கம் நல்லா இருக்கு.

ஆதிமூலகிருஷ்ணன் on May 14, 2010 at 4:16 PM said...

சிலதுங்க பட்டாத்தான் திருந்தும்.!

philosophy prabhakaran on May 15, 2010 at 10:22 AM said...

/* அதுக்காகவே மிஸ் என்னை அடிப்பாங்க.ஆனா நான் சச்சின் அடிக்கிற எந்த ஷாட்டையும் மிஸ் பண்ண மாட்டேன். */

நல்ல வார்த்தை விளையாட்டு...

 

all rights reserved to www.karkibava.com