May 12, 2010

தலைகீழ் விதி


 

”வணக்கம்ம்ம்ம்ம் சென்னை. இது ஹலோ எஃப்.எம் 106.4. நான் உங்க நந்தினி. இந்த நிகழ்ச்சி எல்லாமே ஈசிதான். உங்க பிரச்சினை என்னன்னு சொல்லுங்க. நாங்க உங்களுக்கு உதவ இருக்கிறோம். .இன்னைக்கு யாரு முதல் காலருன்னு பார்க்கலாம்” வழக்கமான முதல் வசனத்தோடு அன்றைய நிகழ்ச்சியை துவங்கினாள் நந்தினி. நிகழ்ச்சியை இவ்வளவு இலகுவாக ஆரம்பித்தவளின் காதல் அவ்வளவு எளிதில் தொடங்கவில்லை.

________________________-

நந்தினி பொறியியல் இரண்டாம் ஆண்டு வந்தபோதுதான் லோகேஷை சந்தித்தாள். லோகேஷ். அவனைப் பற்றி அங்கங்கமாக விவரிக்க ஒன்றுமில்லை. மின்னலே மாதவன் என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். அப்படியென்றால் நந்தினி ரீமா சென்தானே என்பீர்களேயானால் நீங்கள் சொன்னது சரிதான். நந்தினியும் அப்படித்தான். கொள்ளை அழகு. வீட்டிலிருந்து வரும்பொழுதே செலவு செய்ய வார்த்தைகளையும் எடுத்து வருவாள். அதைத் தாண்டி ஒரு வார்த்தை பேசுவதில்லை அவள். பூக்களை பறிக்க கோடரி எதற்கு என்ற கவிப்பேரரசு கூட லோகேஷை பார்த்தால் சொல்லுவார் “உன்னை காதலனாக்க க்ளியோபேட்ராவால் கூட முடியாது” என்று. நந்தினியால் அது முடிந்தது.

_______________________________

ஹலோ எஃப்.எம் 106.4 யார் பேசறீங்க?

நா…ன்…லோ.. லோகநாதன்.

சொல்லுங்க லோகநாதன். எப்படி இருக்கிங்க?எங்க இருந்து பேசறீங்க.

மயிலாப்பூர்

எப்படி இருக்கேன்னு கேட்டேனே. அதுக்கு பதில் இல்லையா மிஸ்ஸ்ஸ்டர் லோகநாதன்?

நல்லா இருக்கேன்.

என்னங்க சொன்னிங்க?டல்லா இருக்கிங்களா?

______________________

நீதான் நந்தினியா?

ம்ம்

எப்படி இருக்க?

நல்லா இருக்கேன்

இல்லையே.. டல்லாதானே இருக்க?

(முறைக்கிறாள்)

வீட்டுல அம்மா கோதுமை அல்வா செஞ்சாங்களா?

(முறைக்கிறாள்)

பின்ன வாய் ஓட்டிக்கிட்ட மாதிரி இருக்கே. வாய தொறந்து பேசு.

நான் தான் நந்தினி. என்ன வேணும்?

குட் கேர்ள் . இதே மாதிரி என்கிட்ட மனசு தொறந்தும் பேசணும்.சரியா?

(மீண்டும் முறைக்கிறாள்)

அதில்லம்மா. நான் உன்னை லவ் பண்றேன். அதனால சொன்னேன்.

______________________________________

லோகநாதன் சொல்லுங்க. என்ன பிரச்சினை உங்களுக்கு?

காதல்தான்.

காதல்னா சந்தோஷங்க அதுல என்ன பிரச்சினை உங்களுக்கு? அதை சொல்லுங்க

கூட இருந்தவரைக்கும் அவதான் என்னை அதிகமா லவ் பண்ணா. இப்ப அவ போன பிறகு என் டர்ன் வந்துடுச்சு. மறக்க முடியல நந்தினி.

பேர் சொல்லி கூப்பிடற அளவுக்கு நாம ஃப்ரெண்ட் ஆயிட்டோம். உங்க ஃப்ரெண்ட் சொல்றேன் கேளுங்க. அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல?

இல்ல

அப்புறம் என்ன சார்? நம்பிக்கை வைங்க. உங்க ஆளு உங்களுக்குத்தான்.

____________________________________

லோகேஷ். எனக்கு பயமா இருக்கு.

எதுக்கு?

நம்ம காதல்தான்.

லூசு. காதல்ன்னா சந்தோஷம். அத தவிர வேறு எதுவும் நினைக்காத.

இல்லடா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அப்பாவ நினைச்சாதான். உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்னுடுவேன்னு சொன்னாரு.

அப்பாவுக்கும், மகளுக்கும் என்னை கொல்றதே வேலை.

கைய எடுடா. அவரு கத்தியால குத்தி கொலை செய்வாரு.

நம்பிக்கை வைடா. எப்படியும் நாம சேர்ந்து வாழ்வோம். நம்பிக்கை வை.

ஒரு வேளை நாம பிரிஞ்சிட்டா, என்னைக்குமே என் முன்னால வந்துடாதடா

பின்னால வந்து கட்டிப்பிடிக்கிறேன் சரியா.

போடா. எனக்காக அந்த பாட்டு பாடேன்

அழகான மனைவி. அன்பான துணைவி.அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில..

___________________________________

இப்ப அவங்க எங்க இருக்காங்க? சொல்லுங்க. நாங்க இருக்கிறோம்.

சென்னைலதான்.

லோகநாதன்.  லைன்ல இருங்க, அவங்கள பத்தின இன்ஃபர்மேஷன் வேணும். அவங்களுக்கோ, உங்களுக்கோ புடிச்ச பாட்ட சொல்லுங்க.

::::

ஹலோ லோகநாதன். கேட்குதுங்களா?

ம்ம்.

சொல்லுங்க

அவ எப்பவும் என் மனசுலதான் இருக்கா. அது போதுங்க. விட்டுடுங்க. ரொம்ப தேங்க்ஸ்

இருங்க லோகநாதன், முதல்ல அவங்களுக்கு புடிச்ச பாட்ட சொல்லுங்க

புதுப்புது அர்த்தங்கள் படத்துல இருந்து  கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே.

::::

ஹலோ..மேட..நந்தினி…

(பாடல் ஒலிக்கிறது)

25 கருத்துக்குத்து:

மகேஷ் : ரசிகன் on May 12, 2010 at 1:50 AM said...

:)

மகேஷ் : ரசிகன் on May 12, 2010 at 1:50 AM said...

நல்லா இருக்கு....

மீள்பதிவா என்ன?

Gatz on May 12, 2010 at 2:45 AM said...

@ மகேஷ், இல்லை

டம்பி மேவீ on May 12, 2010 at 5:41 AM said...

super karki. sema irukku. innum konjam detaila eluthi irukkalam.


vote poduren

(unga rasigar mantrathukku kondattam thaan)

பிரபாகர் on May 12, 2010 at 7:40 AM said...

நல்லாருக்கு சகா!

ரசித்துப்படித்தேன்!

பிரபாகர்...

Ganesh on May 12, 2010 at 8:52 AM said...

\\கைய எடுடா. அவரு கத்தியால குத்தி கொலை செய்வாரு\\

\\ஒரு வேளை நாம பிரிஞ்சிட்டா, என்னைக்குமே என் முன்னால வந்துடாதடா..... பின்னால வந்து கட்டிபிடிக்கிறேன் சரியா.\\

நல்லாயிருக்கு ணா....

இரசிகை on May 12, 2010 at 10:11 AM said...

:)

புன்னகை on May 12, 2010 at 10:48 AM said...

இந்தத் தலைகீழ் விதி நல்லா இருக்கு! Reminds me of Newon's 3rd law - Every action has an equal and opposite reaction!!! :-)

கார்க்கி on May 12, 2010 at 10:53 AM said...

நன்றி ரசிகன். மீள்பதிவாகவா தெரியுது?

நன்றி கட்ஸ். :)

நன்றி மேவி..

நன்றி பிரபாகர்

நன்றி கணேஷ்

நன்றி ரசிகை

புன்னகை..அபப்டியும் சொல்லலாம். நான் சொல்ல வந்தது.. நந்தினியின் பேச்சு, செயல் எல்லாமே லோகேஷின் செய்கையை ஒத்திருக்கிறது. இருவரும் பிரிந்துவிட்டாலும், நந்தினி இன்னும் லோகேஷை மறக்கவில்லை என்பதும், அவளது குணமே மாறி லோகேஷ் போல வாழ்கிறாள் என்பதும். நா.மு சொன்னாரே “ஒரு தருணம் என்னடா காதலா.. உன்னுள் வாழ்கிறேன்” அது போல அவளுள் வாழ்கிறால் லோகேஷ். நன்றி

ர‌கு on May 12, 2010 at 11:46 AM said...

ஏதோ மிஸ்ஸாகிற‌ மாதிரி தோணுனாலும், ந‌ல்லாருக்கு ச‌கா.

அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மா எழுதினீங்க‌ளோ?

விக்னேஷ்வரி on May 12, 2010 at 12:19 PM said...

ப்ராக்டிக்கலான கதை. நல்லாருக்கு கார்க்கி.

நேசன்..., on May 12, 2010 at 12:37 PM said...

இது!.........

சுசி on May 12, 2010 at 12:58 PM said...

//லூசு. காதல்ன்னா சந்தோஷம். அத தவிர வேறு எதுவும் நினைக்காத. //
:))))

எளிமையான நடை..
ரொம்ப நல்லாருக்கு..

//நா.மு சொன்னாரே “ஒரு தருணம் என்னடா காதலா.. உன்னுள் வாழ்கிறேன்” அது போல அவளுள் வாழ்கிறால் லோகேஷ்.//

யப்பா.. முடியல.. உண்மையான வரிகள்!!

Hanif Rifay on May 12, 2010 at 1:38 PM said...

தொடரும் போட்டு செகண்ட் பார்ட் போடுங்க சகா...அழகா போற கதைய டக்குன்னு END கார்டு போட்டுடீங்க சகா...

செ.சரவணக்குமார் on May 12, 2010 at 1:38 PM said...

ரொம்ப நல்லாயிருக்கு கார்க்கி.

லோகேஷ்வரன் on May 12, 2010 at 1:58 PM said...

கதையும், பெயர்களும் அழகா இருந்தது சகா.. ஆனா கதையோட முடிவு என்ன சகா ???

Pradeep on May 12, 2010 at 3:26 PM said...

writervisa.blogspot.com/2010/05/blog-post.html

//intha karuthutkku unga karuthai athigam yaethirpaarpudan

ரமேஷ் கார்த்திகேயன் on May 12, 2010 at 4:16 PM said...

இந்த வாரம் சிறுகதை வாரம்
very nice

கார்க்கி on May 12, 2010 at 4:35 PM said...

ரகு, அவசரம் எல்லாம் இல்ல சகா.. :)

விக்கி,
நன்றி

நேசன்,
நல்லா இருக்குன்னு சொல்றீஙக்ளா சகா? உங்கள இப்படி சொல்ல வைக்க எவ்ளோ கஷ்டப்ப்ட வேண்டியிருக்கு?:)

சுசி,
நன்றி

ஹனீஃப்,
இன்னொரு கதையா எழுதிடலாம் சகா.. :)

லோகேஷ்,
அட நீஙக்ளும் லோகேஷா? முடிவு என்ன சகா முடிவு.. அவளும் லவ் பண்றா.. அவ்ளோதான் விஷயம் :)

ரமேஷ்,
ஹிஹிஹி.. நாளையே மரண மொக்கை வருகிறது

பிரதீப்,
கருத்து என்ன பாஸ்... அவரு ரொம்ப நல்லவ்ரு.. வல்லவரு. உலக சினிமாவை கரைச்சு குடிச்சவரு..அவர் சொன்னதெல்லாமே சரி.

விஜய் ஒரு பேக்கு. அவர் டேன்ஸ்லாம் வெத்து ஷேக்கு.. அவர நம்புது கோக்கு.. பதிவர்கள் எல்லோரும் விஜய போட்டு தாக்கு..

ஓகேவா பாஸ்?

Kafil on May 12, 2010 at 7:18 PM said...

intha mathiri sad love story elutharatha ithoda niruthunga.. illa veetukku kappal varum {nanga royal family autolam anuppa maatom}

ஆதிமூலகிருஷ்ணன் on May 12, 2010 at 7:33 PM said...

பெரிய சைஸ் ஒரு பக்கக்கதை.! ஓகே.!

Pradeep on May 12, 2010 at 7:52 PM said...

பிரதீப்,
கருத்து என்ன பாஸ்... அவரு ரொம்ப நல்லவ்ரு.. வல்லவரு. உலக சினிமாவை கரைச்சு குடிச்சவரு..அவர் சொன்னதெல்லாமே சரி.

விஜய் ஒரு பேக்கு. அவர் டேன்ஸ்லாம் வெத்து ஷேக்கு.. அவர நம்புது கோக்கு.. பதிவர்கள் எல்லோரும் விஜய போட்டு தாக்கு..


// Vijay vaeriyar aana ungalayae intha sura padam maatiduchae... very bad.. singam will make us happy dont worry

Goutam on May 12, 2010 at 8:23 PM said...

Arumai Karki... :)

தமிழ்ப்பறவை on May 12, 2010 at 10:57 PM said...

:-) :-)

Karthik on May 13, 2010 at 4:01 PM said...

Boss Kalakitenga.. Semaya irunduchu

Tangalish Thavapudalvan

 

all rights reserved to www.karkibava.com