May 10, 2010

செஸ்..ட்விட்டர்..ஃபோட்டோ..கார்க்கி


 

  சனி, ஞாயிறு முழுவதும் செஸ்ஸிலும், கிரிக்கெட்டிலுமே போய் விட்டது. யோசித்து வைத்த எதையுமே எழுதவில்லை. ட்விட்டரில் சிலருடன் செஸ் குறித்து லைவ் அரட்டை அடித்தது சுவாரஸ்யமாக இருந்தது. பல ”பழைய” பதிவர்கள் ட்விட்டரிலே முழு நேரத்தையும் செலவழக்கிறார்கள். ம்ம்.. ”பின்ன.. நீ எல்லாம் எழுதிட்டே இருந்தா வெறுப்பில் வேறு என்ன செய்வார்கள்” என்றெல்லாம் சொல்ல மாட்டிங்கதானே? ட்விட்டர் போக ,கூடவே இன்னொரு கெட்டப் பழக்கமும் ஒட்டிக் கொண்டது. அது பதிவின் கடைசியில் பார்க்கலாம்.

_______________________________________

செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை கவனிப்பவரா நீங்கள்? அப்படின்னா வாங்க. நேற்று நடந்த 11வது ஆட்டம் குறித்து பேசலாம்.

Untitled

65வது மூவில் ஆனந்து செக் வைப்பதற்கு பதில் சிப்பாயை G7  நகர்த்தி இருந்தால் ஆட்டம் எப்படி இருந்திருக்கும்? பதிலுக்கு டோப்பொலோவ்(இனிமேல “டோ”) அவரது ராஜாவை H7 க்கு நகர்த்தி  இருந்தால் மட்டுமே ஆட்டம் இன்னும் கொஞ்சம் இழுக்கப்பட்டிருக்கும். அதைத்தவிற வேறு எதை செய்தாலும் ஆனந்த் வெல்ல வாய்ப்பு இருந்தது. என்னவெல்லாம் மூவ் செய்யலாம் என வரிசையாக பார்க்கலாம்.

   1) யானையால்(H3) வெள்ளை ராஜாவுக்கு செக் வைத்தால் G6க்கு செல்லலாம். அதன் பின் மீண்டும் செக் வைத்தால் F6ல் இருக்கும் சிப்பாயை வெட்டி சேஃபாக மறைந்துக் கொள்ளலாம். இப்போது ஒரு முறை செக் வைக்காமல் விட்டாலும் நமது யானையை B8ல் வைத்தால் செக் மேட்.

2) யானையால் செக் வைக்காமல் டோ, A7ல் இருக்கும் சிப்பாயை முன்னேற்ற முயலலாம்.அப்படி செய்தால் ஆனந்த் ராஜாவை G6ல் வைக்க வேண்டும். இப்போது டோ யானையால் செக் வைத்தால், F6 சிப்பாயை வெட்டி மறைந்துக் கொள்ளலாம். யானையால் நமது சிப்பாயை வெட்ட முடியாது. நமது யானையால, அவரது யானையை வெட்டிவிட்டால் நமக்கு ஒரு யானை எக்ஸ்ட்ரா. அவரது சிப்பாய் எல்லையைத்தொட்டு ராணியாகும் முன் வெட்டவும் நேரமிருக்கிறது

3) எக்காரணம் கொண்டும் வெள்ளை ராஜாவை H6ல் வைக்க கூடாது. பின் நமக்கு செக் வைத்தால் ஆட்டம் க்ளோஸ்.

முதல் பத்தியில் சொன்னது போல கறுப்பு ராஜா H7 வந்திருந்தாலும் ஆனந்துக்கு வாய்ப்பு இருந்தது. அவர் செல்கிறாரா என்று பார்த்த பின் டிராவிற்கு ஒத்துக் கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன். H7சென்றால் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

நமது சிப்பாயை G8ல் வைக்க வேண்டும். வேறு வழியின்றி அவர் சிப்பாயை ராஜாவால் வெட்டுவார்.இப்போது நமது ராஜாவை G6ல் வைக்க வேண்டும். End gameல் ராஜாவும் ராஜாவும் நேருக்கு இது போன்று இருக்கும்போது, யானையால் செக் வைத்தால் ஆட்டம் முடிந்துவிடும் என்பது பாலபாடம். அதனால் அவர் வேறு வழியில்லாமல் ராஜாவை F8க்கு நகர்த்துவார். அல்லது யானையால நமக்கு செக் வைப்பார். எது வைத்தாலும் நமது ராஜா F6 சிப்பாயை வெட்டி சேஃபாகி விடலாம். அதன் பின் ஆட்டத்தை முடிப்பதற்கோ, F5 சிப்பாயை ராணியாக்குவதற்கோ பல வாய்ப்புகள் வெள்ளைக்கு உண்டு. இந்த ஆட்டத்தை ஆடிப்பார்க்க நினைப்போர் எனனைத் தொடர்பு கொள்ளலாம்.

அவர் யானையை 3rd லைனை விட்டு எடுத்த உடனே B3ல் இருக்கும் சிப்பாயை வெட்டி விட வேண்டியது அவசியம். மேலே சொன்ன எல்லா மூவ்களிலும் நமது யானை B லைனிலே இருக்கிறதை கவனிக்க வேண்டும்.

லட்டு போன்ற வாய்ப்பை ஆனந்த் மிஸ் செய்தாரா? அல்லது ஏதாவது பெரிய ஓட்டையை ஙே வென நான் கோட்டை விட்டுருக்கேனா? சொல்லுங்கள்.

______________________________________________________________________

PIT குறித்து பலருக்கு தெரிந்திருக்கலாம். தமிழில் பல திறமைகளை ஊக்குவிக்க இது போன்ற பல குழுக்கள் உண்டு. என்னைக் கேட்டால்  அவற்றில் உச்சம் தொட்ட குழு பிட்தான். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் புகைப்படங்களே இதற்கு சான்று. முன்னர் வெற்றி பெற்ற பலர் சொன்ன வார்த்தைகள் இவை ”பிட் பென்ச்மார்க். எங்கேயோ போயிடுச்சுப்பா. அதனால்தான் நானெல்லாம் போட்டியில் அடிக்கடி கலந்துக் கொள்வதில்லை. திருப்தியான படம் கிடைத்தாலே அனுப்புகிறேன்”

யார் எப்படி போனா நமக்கு என்னங்க? நாம இறங்கி ஆடித்தானே பழக்கம்? ஜெயிக்கிறதா முக்கியம் என்ற பன்ச் லைனோடும், அண்ணனிடம் ஆட்டயைப் போட்ட SONLY ALPHA200 SLR கேமரோவோடும் களமிறங்கியாச்சு. போட்டிக்கும், பொதுவாகவும் எடுத்த படங்ளில் சில உங்கள் பார்வைக்கு. நோ நோ கண்ணையெல்லாம் மூடக் கூடாது. இது என் ஃபோட்டோ இல்ல, நான் எடுத்த ஃபோட்டோதான்

4589059552_c0dd762835_b-1

a'dmk

DSC00204

பிகாசா ஆல்பம்

ஃப்லிக்கர் ஆல்பம்

41 கருத்துக்குத்து:

தாரணி பிரியா on May 10, 2010 at 10:15 AM said...

திமுகவையும் அதிமுகவையும் இணைத்த கார்க்கி வாழ்க‌

புன்னகை on May 10, 2010 at 10:15 AM said...

The last one is pretty! :-)

Anbu on May 10, 2010 at 10:21 AM said...

Present Sir

radhika on May 10, 2010 at 10:21 AM said...

romba naal aachu karki.how are you? pictures are too good. I like the first one very much. All the best for the contest

இளைய கவி on May 10, 2010 at 10:31 AM said...

சூப்பரு போட்டோ மக்கா...

நர்சிம் on May 10, 2010 at 10:43 AM said...

செஸ்ல பின்றீங்களே சகா.. சூபர்.

Kafil on May 10, 2010 at 10:46 AM said...

Vishwanathan Aanandukke Chessa !! ayyo, neenga Grand Mastera, illa Atleast oru Grand Minora... y thalaiva, pathivu elutha matter kedaikalaya...We want 7 we want 7 we want 7

சங்கர் on May 10, 2010 at 10:51 AM said...

சகா, இங்க வாங்க செஸ் ஆடலாம்

http://www.redhotpawn.com/


My username - sanrv1f

பேநா மூடி on May 10, 2010 at 10:55 AM said...

Aiyo sagaa.. Pinnitinga masterkelam nenga than master.. Masteromaster..

மோனி on May 10, 2010 at 11:13 AM said...

.//எக்காரணம் கொண்டும் வெள்ளை ராஜாவை H6ல் வைக்க கூடாது//..

புள்ளி ராஜா தெரியும் .. அது என்ன சகா வெள்ளை ராஜா ?

கார்க்கி on May 10, 2010 at 11:19 AM said...

தாபி, பாதி பேரு சூரியன காணோம்னு சொன்னாங்க. நீங்களாவது சொன்னிங்களே.. ஹிஹிஹி

நன்றி புன்னகை.

வாங்க அன்பு

நல்லா இருக்கேன் ராதிகா மேடம். அரசி எபப்டி போது?

நன்றி இளைய கவி

நர்சிம், ஹிஹிஹி. கும்முங்க எசமான் கும்முங்க

கஃபில், எழுதிட்டா போச்சு :)

சஙக்ர், நைட்டு?

பேநா மூடி, பாஸ் ஒரு டவுட்டுன்னு கேட்டேன். ஏங்க? ஏன்?

மோனி, யார் யாருக்கு எது எது தேவையோ அந்த ராஜாதான் சகா :)

சுசி on May 10, 2010 at 11:23 AM said...

//இது என் ஃபோட்டோ இல்ல, நான் எடுத்த ஃபோட்டோதான்//

ஐ லைக் யுவர் நேர்மை கார்க்கி..

ரொம்ப அழகா இருக்கு ஃபோட்டோஸ்.

Hanif Rifay on May 10, 2010 at 11:25 AM said...

சகா... போட்டோ தொழிலையும் ஆரம்பிச்சாச்சா...???

ஆதிமூலகிருஷ்ணன் on May 10, 2010 at 11:25 AM said...

1. செஸ்ஸெல்லாம் புத்திசாலிகள் விளையாடுறதுன்னு கேள்விப்பட்டேனே.. ஹிஹி.

2. போட்டோவுக்கு இன்னொரு போட்டியாளர் கிடைச்சாச்சு. நான் உன்னைய அழக்கா எடுத்த மாதிரியே நீ என்னைய எடுத்துக்கொடுத்தாத்தான் ஒத்துக்கமுடியும்.

விஜய் on May 10, 2010 at 11:30 AM said...

perpetual check ஆக முடிகிறது நண்பா

ஆகவே தான் டிரா

விஜய்

மோகன் குமார் on May 10, 2010 at 11:35 AM said...

Photoes are very nice.

விக்னேஷ்வரி on May 10, 2010 at 11:41 AM said...

கார்க்கிக்குள்ள ஒரு புகைப்படக் கலைஞன் ஒளிஞ்சிருக்கார்ன்னு தெரியாமப் போச்சே. புகைப்படங்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு கார்க்கி.

கார்க்கி on May 10, 2010 at 11:44 AM said...

சுசி, நன்றி

hanif, தொழில் எல்லாம் இல்ல பாஸ்> ஓசி கேமரா. ஓசி பூ. ஓசி போட்டி.ஓசி பதிவு. அவவ்ளவே

ஆ.மு.கி, அதனால் நீங்க ஆட மாட்றீங்கன்னு சொல்லாதிங்க சகா. நீஙக்ளும் புத்திசாலிதான் :)

விஜய், செக் வைப்பதே ஆனந்த்தானே? அதற்கு பதிலாகத்தானே சிப்பாயை G7க்கு நகர்த்தலாம் என்கிறேன். அது பற்றி சொல்லுங்கள்

நன்றி மோகன்

Ganesh on May 10, 2010 at 12:14 PM said...

A karki photography....:)

photosலாம் நல்லாயிருக்கு சகா..

பிள்ளையாண்டான் on May 10, 2010 at 12:51 PM said...

போட்டாஸ் ந‌ல்லாயிருக்கு! வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்!!

என‌க்கும் ஆன‌ந்த் கோட்டை விட்டாப் போல‌த்தான் இருந்த‌து!!

எட்வின் on May 10, 2010 at 2:09 PM said...

மூன்று படங்களுமே அருமைங்க. வாழ்த்துக்கள்.
செஸ்ஸா... அவ்வ்வ்வ் நமக்கு சுட்டுப்போட்டாலும் அது வராதே. செஸ்ல அயர்லாந்த் கிரிக்கெட் டீம் மாதிரி தான் நானு.

தாரணி பிரியா said...

//திமுகவையும் அதிமுகவையும் இணைத்த கார்க்கி வாழ்க‌//

ஹ ஹ ஹா ஹா ஹா... :))

புன்னகை on May 10, 2010 at 2:12 PM said...

//நல்லா இருக்கேன் ராதிகா மேடம். அரசி எபப்டி போது?//
ராதிகா எப்பவோ அரசில இருந்து "செல்லமே" ஆகிட்டாங்க இல்ல கார்க்கி? ;-)

விஜய் on May 10, 2010 at 2:23 PM said...

66. g8=Q+ Kxg8 67. Kg6 Rg3+
68. Kxf6 a5

Black wins

விஜய் on May 10, 2010 at 2:25 PM said...

deep shredder load பண்ணி விளையாடி பாருங்கள்

விஜய்

கார்க்கி on May 10, 2010 at 2:56 PM said...

நன்றி விக்கி. உள்ளுக்குள்ள இருக்கு பல ரூபங்கள் :)

நன்றி கணேஷ்

நன்றி பிள்ளையாண்டான். ம்ம்.ஆமா சகா

நன்றி எட்வின்.

புன்னகை, அபப்டியா? மாறியது எனக்கு தெரியாதுங்க :)

விஜய், இப்ப செக் வைங்க, Rb8. ராஜா F7 தான் வர முடியும். then Rf8. ராஜா நகந்த உடனே பவர் ஏத்துங்க. அவர் யானையால் வெட்டினா, நாம யானையை வெட்டலாம். இப்போ அவங்க பான் பவர் ஏறுவதற்குள் அதை வெட்டுவது சுலபம். அவரிடம் இரண்டு பாண். நம்மிடம் ஒரு யானை. ஓக்கே?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on May 10, 2010 at 3:07 PM said...

கார்க்கி இங்கு புதுமையாகத்தான் இருக்கிறது . பார்த்துங்க!

அமுதா கிருஷ்ணா on May 10, 2010 at 3:10 PM said...

nice photos..

விஜய் on May 10, 2010 at 3:19 PM said...

69. Rb8+ Kh7 70. Rf8 a4 71. Ke6 b2

கார்க்கி on May 10, 2010 at 3:36 PM said...

நன்றி சங்கர்

நன்றி அமுதா

விஜய், நம்ம ராஜா H6ல் இருக்கும்போது அவ்ர் H7க்கு வர முடியாது. ஒரே வழி F7 தான்

விஜய் on May 10, 2010 at 3:46 PM said...

Kg6 Rg3+ Kxf6 a5

விஜய் on May 10, 2010 at 3:47 PM said...

deep shredder download பண்ணி கேம் pgn பார்மட்டில் விளையாடி பாருங்கள் புரியும்

விஜய்

Anonymous said...

படங்கள் அருமையா வந்திருக்கு. எனக்கு தெரிஞ்சு வலையில் மோஹந்தாஸ் இளவஞ்சி தீபா இவங்களோட போட்டோஸ் ரொம்ப நல்லா வரும். அதுக்கப்புறம் உன்னோடது...

தஞ்சாவூர் கங்கைகொண்டபுரம்னு போய் சுட்டுத்தள்ளு சகா..

கார்க்கி on May 10, 2010 at 5:04 PM said...

நன்றி ரவி.. இனிமேலதான் வண்டியை கிளப்பனும் :))

விஜய், தொடர் கமெண்ட்டுக்கு நன்றி. விளையாடி பார்த்தேன். முடிவுகளையும், மூவ்களையும் இங்கே பாருங்கள்

http://twitpic.com/1mo1ao

விஜய் on May 10, 2010 at 6:10 PM said...

Save your game in pgn and send to me
alphapegasir@gmail.com

thank u

vijay

RaGhaV on May 10, 2010 at 6:22 PM said...

அருமையான Pictures.. நல்ல ரசனை சகா உங்களுக்கு.. :-))

இரசிகை on May 10, 2010 at 7:04 PM said...

3rd one i liked.

ஷர்புதீன் on May 10, 2010 at 11:47 PM said...

still i am waiting to play with you and your suggestion of game 11th is not correct., i have RYBKA software and its shows its right.,
we can play saga., chesscube.com and my id - vellinila

தமிழ்ப்பறவை on May 12, 2010 at 10:58 PM said...

fotos gud.... chess...?????

Annaraj on May 14, 2010 at 3:12 AM said...

60.g7 Rg3

சுரேகா.. on May 26, 2010 at 10:52 PM said...

கலக்குறீங்களே சகா! செஸ் பத்தி நிறைய பேசலாம் போல....வேணாம்..நேரா விளையாடலாம். :)


போட்டோ சூப்பரா இருக்கு! வாழ்த்துக்கள் சகா!

செ.சரவணக்குமார் on May 26, 2010 at 11:47 PM said...

செஸ்ல கலக்குறீங்க நண்பா. புகைப்படங்கள் வெகு அழகு.

 

all rights reserved to www.karkibava.com