May 7, 2010

வீ வாண்ட் பரிசல்


 

சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்..

”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார்

கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன்.

அவர் சொன்னது போலவே மே13ம் தேதி 1969.. பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி. உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து.  பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார்.

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக்  டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது.

வளர்ந்த பின் அவ்வப்போது பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார்.

எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது.

அப்படி இப்படி என  தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். 2008 மே மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய லயோலா கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது.

தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அது மின்னஞ்சலில் ஒரு பெரிய விவாத பொருளாக வலம் வந்துக் கொண்டிருப்பதை பலரும் அறிவார்கள்.அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண். நம்மாளு சொன்னது

சென்னை ரோடுல நெரிசல்

மதுரை பக்கம் கரிசல்

நம் நட்பிலில்லை விரிசல்

நல்லவன் என் பேரு ………..

எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க வலையுல்கிற்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும்.

  ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாசகம்: “ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும். இதேப்போல இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து எழுதி எழுதி எங்களை சாவடிக்க வாழ்த்துகிறோம் சகா.

தலைக்கு கீழேதான் கழுத்து-நம்ம

தலைக்கு எல்லாமே எழுத்து.

_______________________________________________________________________-_________

சென்ற மே13 ஆம் தேதி பரிசல்காரரின் பிறந்தநாள் அன்று எழுதியது. சமீபகாலமாக ஆளை இணையம் பக்கம் காணவில்லை. மெயிலிலும் பிடிக்க முடியவில்லை. யாராவது அவரிடத்தில் சொல்லி பிறந்த நாள் வருவதற்குள் ஒரு பதிவு எழுத சொல்லுங்கப்பா.

வீ வாண்ட் பரிசல்.

வீ வாண்ட் பரிசல்..

வீ வாண்ட் பரிசல்…

20 கருத்துக்குத்து:

Anbu on May 7, 2010 at 10:09 AM said...

1st...

Anbu on May 7, 2010 at 10:15 AM said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரிசல் அண்ணே..

கார்க்கி அண்ணே..

ராவணன் பாட்டு கேட்டீங்களா...

உசுரே போகுதே..உசுரே போகுதே..பாடலில் கார்த்திக் கலக்குகிறார்...

எப்போ இசை விமர்சனம்..

தர்ஷன் on May 7, 2010 at 10:38 AM said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்

சுசி on May 7, 2010 at 11:02 AM said...

பரிசலுக்கு வாழ்த்துக்கள்.

கலக்கல் வாழ்த்து கார்க்கி..

//எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. //
:))))

Hanif Rifay on May 7, 2010 at 11:34 AM said...

பரிசலாருக்கு வாழ்த்துக்கள்....

கார்கி அண்ணே...ஏன் இந்த கொலைவெறி???

விக்னேஷ்வரி on May 7, 2010 at 12:01 PM said...

மனுஷன் கொஞ்ச நாளா இந்தப் பக்கமெல்லாம் வர்றதில்லைன்னு இவ்ளோ டேமேஜா... பாவம். அவர் வயசை வேற ஊர் முழுக்க சொல்லி அசிங்கப்படுத்திட்டீங்க. உங்களுக்கும் ஒரு நாள் இருக்குடி...

நாய்க்குட்டி மனசு on May 7, 2010 at 12:15 PM said...

நாங்களும் அவரைத்தான் தேடிட்டு இருக்கோம். பார்த்தவர்கள் சொல்லுங்கள்

டம்பி மேவீ on May 7, 2010 at 12:45 PM said...

அவர் கிட்ட ஒரு இரவு தெரியாதனமா சாட் பண்ணினேன்....அந்த போதையே இன்னும் தெளியல


வி வான்ட் பரிசல்

அன்புடன் அருணா on May 7, 2010 at 2:59 PM said...

/தலைக்கு கீழேதான் கழுத்து-நம்ம தலைக்கு எல்லாமே எழுத்து. /
அய்யய்யோ கழுத்து வெட்டு பட்டுத் தொங்குது!இப்பிடியா????
பரிசலுக்குப் பிறந்த நாள் பூங்கொத்து!

செந்தழல் ரவி on May 7, 2010 at 3:12 PM said...

ஹேப்பி பர்த்டே பரிசல்ஜி..!!!

RaGhaV on May 7, 2010 at 3:20 PM said...

வீ வாண்ட் பரிசல்..

வீ வாண்ட் பரிசல்..

வீ வாண்ட் பரிசல..

Rajaraman on May 7, 2010 at 4:04 PM said...

நமக்கு நாமே சொம்பு தூக்கும் திட்டம் என்பது இது தானா. சூப்பர். இன்று இவருக்கு நாம் தூக்கினால் நாளை நமக்கு அவர் தூக்குவார் என்ற அற்புத அம்சம் கொண்ட இத்திட்டத்தினை பெரிதும் வரவேற்கிறேன்.

கார்க்கி on May 7, 2010 at 4:08 PM said...

அனைவருக்கும் நன்றி.

ஆமாம் ராஜாராமன். உங்களை போல இனா வானாக்கள் யாராவது எஙக்ளுக்கு சொம்பு தூக்கினால் எங்களுக்கு பாரம் குறையும். வறீஙக்ளா? சோறும், சம்பளமுமாக எட்டணாவும் தருகிறேன்

Anonymous said...

பரிசலுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Palay King on May 7, 2010 at 8:17 PM said...

All the Best to பரிசல் !!!

வால்பையன் on May 7, 2010 at 8:54 PM said...

வரலைனா ஆட்டோ அனுப்ப வேண்டியது தான்!

இரசிகை on May 7, 2010 at 10:03 PM said...

vaazhthukkal parisal.....!

nalla pathivu:)

nagarajan on May 7, 2010 at 10:43 PM said...

Thanks Karki...

Paiya Vimarsan than last.... Sura, IPL ,pala matter aadichu.. no blogs....

nagarajan on May 7, 2010 at 10:43 PM said...

Thanks Karki...

Paiya Vimarsan than last.... Sura, IPL ,pala matter aadichu.. no blogs....

ஆதிமூலகிருஷ்ணன் on May 9, 2010 at 7:03 PM said...

நானும் பரிசல் பற்றி எழுதவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

 

all rights reserved to www.karkibava.com