May 5, 2010

உதார் விட கத்துக்கனும்


 

பெரியவங்க சொல்வாங்க “ஆள் பாதி ஆடை பாதி”. உண்மைதாங்க. ஆங்கிலத்தில் சொல்லணும்ன்னா “Presentation is everything”. அல்லது “An idea is nothing without the presentation of the idea”. அதனால்தான் எல்லா மேதைகளும் நல்ல ஆசிரியர் ஆக முடிவதில்லை. ஒரு ஆசிரியர் அந்தப் பாடத்தில் எவ்வளவு பெரிய கில்லாடி என்பது முக்கியமில்லை. அவர் எந்தளவுக்கு அதை திறம்பட சொல்கிறார் என்பதே முக்கியம். ஒரு விஷயம் எப்படி தரப்படுகிறது என்பது அந்த விஷயத்தை விட மிக முக்கியமான விஷயம். சினிமாவ எடுத்துப்போம். படத்தோட கதையை விட அது எப்படி எடுத்து இருக்காங்க என்பதில் இருக்கிறது அதன் வெற்றி. இப்ப சுறாவையே எடுத்துக்கோங்களேன். சரி விடுங்க. நாம வேற பார்ப்போம். செல்வராஜ் ஒரு நல்ல கதாசிரியர். பாரதிராஜாவின் பல மாஸ்டர்பீஸ் அவரின் கதைதான். ஆனால் அவர் படம் இயக்கினால் பாரதிராஜா அளவுக்கு வருமா?

நாம ரெண்டு பேரும் வாக்குவாதம் செய்றோம். எதுக்கா? பார்த்திங்களா அதுக்கு கூட நாம வாக்குவாதம் செய்றோம். கிடக்குது கழுதை. செய்றதா நினைச்சுக்கோங்க.அதுல யார் சொல்றது சரியென்பதை விட யார் சூதனமா பேசறாங்கன்னுதான் பார்க்கணும். அதைத்தான் பார்ப்பாங்க. ஒருத்தன் வேலை வெட்டி இல்லாம ஒரு ஆராய்ச்சி செஞ்சிருக்கான். அது முடிவுல என்ன சொல்றாங்கன்னா ஒரு ஆர்க்யுமெண்ட்டுல 55% கண்ணால ஆகற காரியமாம். அதாவது எப்படி நாம இருக்கோம், அது என்னது.. ம்ம் பாடி லேங்குவேஜ், இதுதான் 55%மாம். 38% நாம என்னா சவுண்ட் விடறோம்னு பார்க்கிறாங்க. சவுண்டுன்னா நாம எப்படி பேசறோம்ன்றது. வெறும் 7% தான் நாம் என்ன வார்த்தை பேசறோம் என்பது கவனிக்கப்படுகிறதாம். என்ன கொடுமை சார் இது?

எப்படி சொல்றோம்கிறதுல கவனம் இல்லைன்னா என்ன சொன்னோம்கிறது புஸ்ஸுன்னு போயிடுமாம்.ஆயிரத்தில் ஒருவன் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் ஜவாப்தார் இல்லப்பா.  ஃப்ரெண்டோ, லவ்வரோ, சொந்தக்காரங்களோ, கூட்டணி கட்சியோ.. எல்லா உறவிலும் பிரச்சினை வர்றதே என்ன சொன்னான்கிறதால இல்ல, எப்படி சொன்னாங்கிறதாலதான். எல்லோருக்கும் கலைஞரைப் போல தொகுதிதாம்ப்பா தரமுடியல. ஆனா இதயத்துல இடமிருக்கு என்று சொல்ல தெரிந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்? நாம சொல்ல வர்ற விஷயம் மூளைக்குப் போகும். ஆனா எப்படி சொன்னோம்கிறது இதயத்துக்கு போகும். இதயம் செமி ஃபைனல்ஸ். அத ஜெயிச்சாதான் ஃபைனல்ஸ்க்கு மூளைக்கிட்ட போக முடியும். கில்லி படத்த எடுத்துக்கோங்க. பிரகாஷ்ராஜும் லவ் பண்றாரு. விஜயும் லவ்  பண்றாரு. ஆனா திரிஷா யாருக்கு செட் ஆச்சு? அதான் மேட்டரு.

இன்னொரு வெட்டிப்பயல் செஞ்ச ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னா, ஒரு புக்க விக்கிறதே அதன் அட்டைப்படத்தாலதானாம். உள்ள என்னா டகால்டி மேட்டரு இருந்தாலும் அட்டைதான் பெருசா மாற்றத்த கொடுக்குதாம். புக்கோட மதிப்பு உள்ள இருக்கிற சரக்க வச்சிதான்றதால் கருத்து வேறுபாடு இல்ல. ஆனா விக்கிறது அட்டைய வச்சுதானாம். இதுக்கு என்ன உதாரணம் சொல்லலாம்? அதேதான். சுறாவும் அங்காடித் தெருவும். ஷார்ப்புங்க நீங்க.

யோசிச்சு பாருங்க. ம்ம்.. பார்த்திங்களா? இப்ப எதுக்கு யோசிச்சிங்கன்னு யோசிச்சு பாருங்க. ஹிஹி. விஷயம் என்னன்னா பத்தி பத்தியா பேசுவாங்களே.. சொற்பொழிவு, பட்டிமன்றம், சுகி சிவம் மாதிரி ஆளுங்க..எல்லோரும் ஸ்டேஜ், அதுல ஃபோகஸ் லைட் இப்படிப்பட்ட மேட்டருக்கு எவ்ளோ முக்கியத்துவம் தர்றாங்க? ஏன்னு யோசிச்சு பாருங்க. உண்மை எது? எது உண்மையாகவே உண்மையோ அது உண்மை இல்லை. எதை மக்கள் மனசு உண்மைன்னு நம்புதோ அதான் உண்மை.

இப்போ என்னதாண்டா சொல்ல வர்றன்னு கேட்க தோணுதா? அப்போ இதோட நிறுத்திக்கலாம். ஒரு புக் படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுல இருந்த மேட்டர் ரொம்ப முக்கியம்னு தோணுச்சு. அது வேற இங்கிலிபீச்சுல இருந்துச்சா அதான் மொத தடவையா டிரான்ஸ்லேட் பண்ணி பார்க்கலாம்னேன்னு… எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா.

Scan05052010_094206

30 கருத்துக்குத்து:

damildumil on May 5, 2010 at 10:06 AM said...

இந்த புக்கை சீக்கிரமா காவாகாரன் டீமுக்கு அனுப்புங்க,

damildumil on May 5, 2010 at 10:07 AM said...

// பாரதிராஜாவின் பல மாஸ்டர்பீஸ் ஆவ்ரின் கதைதான். ஆனால் அவர் படம் இயக்கினால் பாரதிராஜா அளவுக்கு வருமா?//

ரொம்ப சரி. அலைபாயுதே கூட செல்வராஜோட கதை தான்

damildumil on May 5, 2010 at 10:09 AM said...

//எப்படி சொல்றோம்கிறதுல கவனம் இல்லைன்னா என்ன சொன்னோம்கிறது புஸ்ஸுன்னு போயிடுமாம்.ஆயிரத்தில் ஒருவன் உங்களுக்கு நினைவுக்கு வந்தான் நான் ஜவாப்தார் இல்லப்பா.//

அழகிய தமிழ் மகன் நினைவுக்கு வந்தா யார் பொறுப்பு

"ராஜா" on May 5, 2010 at 10:29 AM said...

தொடரட்டும் உங்கள் தொண்டு ... மொழிபெயர்ப்பதில் எப்பவும் கில்லாடிகள்தான் சகா நீங்கள்....

damildumil on May 5, 2010 at 10:35 AM said...

தொடரட்டும் உங்கள் தொண்டு ... மொழிபெயர்ப்பதில் எப்பவும் கில்லாடிகள்தான் சகா நீங்கள்....//

தெலுங்கு புக்கா இருந்தா இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்

மோனி on May 5, 2010 at 10:37 AM said...

..//மதிப்பு உள்ள இருக்கி சரக்க வச்சிதான்றதால் கருத்து வேறுபாடு இல்ல//..

..//உண்மை எது? எது உண்மையாகவே உண்மையோ அது உண்மை இல்லை//..

இதெல்லாம் நண்பனோட மேட்டர்-ங்குறதால உடனே அழைக்கிறேன் ஈரோடு அருணை...

நண்பா ! கார்க்கி என்னமோ சொல்றாப்டீ. வா, பதில் சொல்லலாம்...

கார்க்கி on May 5, 2010 at 10:41 AM said...

டமால்டுமீல், உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்க அனுப்பிடறேன்.

ராஜா, நல்ல விஷயஙக்ளை மொழிபெயர்ப்பதில் தவறில்லை சகா. மே 1 கலைஞர் டிவி பார்த்திங்களா? 100வது நா நிகழ்ச்சிதான் டிவில போடுவாங்க. ஆனா படத்தோட 100வது நாளையே டிவில கொண்டாடிய ஒரு அப்பு, அவர்தாம்ப்பூ :))

டமால்டுமீல், அடுத்த படத்துக்கு முதல் ஷோ டிக்கெட் புக் பண்ணியாச்சா?

மோனி, ஹிஹிஹி. அது புக்ல இருந்த சரக்குப்பா. என்னது இல்ல. அப்புறம் வால்பையன்னு சொல்லுங்க. அப்பதான் தெரியும் :)

SenthilMohan K Appaji on May 5, 2010 at 11:22 AM said...

//*மொத தடவையா டிரான்ஸ்லேட் பண்ணி பார்க்கலாம்னேன்னு**/
அத அப்படியே Translate பண்ணது தான் தப்பு. உங்க பாணில(Karki's way)பண்ணியிருந்தா(சொல்லியிருந்தா) கடைசி பத்தில முதல் வரியினை எழுதாமல் விட்டிருக்கலாம்.

நர்சிம் on May 5, 2010 at 11:27 AM said...

சகா கலக்குங்க..

புன்னகை on May 5, 2010 at 11:29 AM said...

அவ்ளோ தானா? இன்னும் இருக்கா???

Darvin on May 5, 2010 at 11:45 AM said...

What is Book name Karki ?

ர‌கு on May 5, 2010 at 11:52 AM said...

த‌ல‌யே(இதுக்கெல்லாம் 'ள‌' போட‌ முடியாது ச‌கா;))) சுத்துதுப்பா சாமீ!

//ஒரு புக்க விக்கிறதே அதன் அட்டைப்படத்தாலதானாம். உள்ள என்னா டகால்டி மேட்டரு இருந்தாலும் அட்டைதான் பெருசா மாற்றத்த கொடுக்குதாம். புக்கோட மதிப்பு உள்ள இருக்கி சரக்க வச்சிதான்றதால் கருத்து வேறுபாடு இல்ல. ஆனா விக்கிறது அட்டைய வச்சுதானாம்//

இதுல‌ எந்த‌ உள்குத்தும் இல்ல‌ங்க‌ற‌த‌ ந‌ம்ப‌றேன் ;))

சுசி on May 5, 2010 at 11:59 AM said...

//அது வேற இங்கிலிபீச்சுல இருந்துச்சா //

இந்த பீச்சு எந்த ஊர்ல இருக்குங்க??

முகிலன் on May 5, 2010 at 12:01 PM said...

//ரொம்ப சரி. அலைபாயுதே கூட செல்வராஜோட கதை தான்//

மணிரத்னம் அலைபாயுதே Knotஐ சுஜாதாக்கிட்ட சொல்லி சிறுகதையா எழுதித் தரச் சொன்னதா கற்றதும் பெற்றதும்ல படிச்சதா நினைவு..

Palay King on May 5, 2010 at 12:44 PM said...

நல்ல பதிவு நன்றி அதிஷா !

"ராஜா" on May 5, 2010 at 12:45 PM said...

சகா பாக்கலையே சகா என்ன நிகழ்ச்சி அது...
அப்புறம் நீங்களாவது நல்ல விசயத்தை எல்லோரும் ரசிக்கும்படி மொழி மாத்துறீங்க சகா... தொடரட்டும் .... அப்படியே அவருக்கும் கத்துகொடுங்க சகா...

Palay King on May 5, 2010 at 12:56 PM said...

நல்ல பதிவு நன்றி யுவகிருஷ்ணா

கார்க்கி on May 5, 2010 at 12:59 PM said...

செந்தில், ஹிஹிஹி. நன்றி

நன்றி நர்சிம்.

புன்னகை, என்ன வேணும்? டீ.,காபி?

டார்வின், frozen thoughts. Jan edition சகா

ரகு, எந்த குத்தும் இல்லை சகா

சுசி, உங்க நாட்டுக்கு பக்கத்துல இருக்கிர யூ.கேலதான் :)

முகிலன், அது கன்னத்தில் முத்தமிட்டால். இந்த கதை செல்வராஜ் எழுதியதுதான்

நன்றி கிங்

ராஜா, ரைட்டு :))

வெற்றி on May 5, 2010 at 1:19 PM said...

:))

// Palay King said...

நல்ல பதிவு நன்றி அதிஷா !//

யாரோ வழி மாறி வந்துட்டாங்க சகா :)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on May 5, 2010 at 1:32 PM said...

//////யோசிச்சு பாருங்க. ம்ம்.. பார்த்திங்களா? இப்ப எதுக்கு யோசிச்சிங்கன்னு யோசிச்சு பாருங்க. ஹிஹி. விஷயம் என்னன்னா பத்தி பத்தியா பேசுவாங்களே.. சொற்பொழிவு, பட்டிமன்றம், சுகி சிவம் மாதிரி ஆளுங்க..எல்லோரும் ஸ்டேஜ், அதுல ஃபோகஸ் லைட் இப்படிப்பட்ட மேட்டருக்கு எவ்ளோ முக்கியத்துவம் தர்றாங்க? ஏன்னு யோசிச்சு பாருங்க. உண்மை எது? எது உண்மையாகவே உண்மையோ அது உண்மை இல்லை. எதை மக்கள் மனசு உண்மைன்னு நம்புதோ அதான் உண்மை. //////


மிகவும் சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி !

தராசு on May 5, 2010 at 1:42 PM said...

கண்டதையும் படிக்கவேண்டியது, அப்புறம் வந்து எங்க கிட்ட அவன் என்ன சொல்றான்னா, இவன் சொல்றன்னான்னு அலப்பறை பண்ண வேண்டியது.

பதிவுலகமே, சீக்கிரமா அந்த தோழிய பாத்து பேச வேண்டியத பேசுங்கப்பா, ஆக வேண்டியது ஆகட்டும்... டும், டும்.

சுசி on May 5, 2010 at 2:42 PM said...

கார்க்கி, எங்க நாட்டுக்கு பக்கத்தில சுவீடன்தாங்க இருக்கு.. யூகே கொஞ்சம் தூரம் ;)

Balavasakan on May 5, 2010 at 3:22 PM said...

சரிதான் கார்க்கி... இதோட எத்தினியாவது பதிவு ஒரு பதிவு சுறாவைப்பத்தியோ உங்க தலய பத்தியோ ஒரு வார்த்தை இல்லாம வராதா.... எப்பவுமே அண்ணனத்தான் நினச்சுகிட்டு இருப்பீங்களா.!!

செந்தழல் ரவி on May 5, 2010 at 3:29 PM said...

வெளையாட்டு தனத்தை கொஞ்சம் கொறைச்சு இன்னும் கொஞ்சம் டீட்டெயிலா செய்திருக்கலாம் கார்க்கி.

கார்க்கி on May 5, 2010 at 3:56 PM said...

@வெற்றி,
அது ஒரு கூட்டு சதி. கண்டுக்காத:)

@சஙக்ர்,
நன்றி சகா

@தராசு,
என் தெய்வமே... காலை காட்டுங்க. அபப்டியே என் காலை கட்டுங்க :)

சுசி,
அது அந்தப்பக்கம். நீங்க காவாய்க்கு, ச்சே கடலுக்கு இந்தப் பக்கம் பாருங்க

@பாலா,
நானும் யோசிச்சேன். இனிமேல வராது சகா.. :))

@ரவி,
தலை.. முழுவதும் தமிழ்ல சீரியஸா எழுதி வச்சேன், எனக்கே பிடிக்கல.. மேட்டர் ரொம்ப முக்கியம்னு எனக்கு தோணுச்சு. சரி இந்த ஸ்டைலில் சொல்லிப் பார்க்கலாம்னு முயற்சித்தேன். தோல்வி என்பது தெரிந்துவிட்டது :))

அனுஜன்யா on May 5, 2010 at 4:27 PM said...

பரவாயில்லையே.

@ ரவி - ஏதோ இந்த அளவுக்காவது எழுதறானேன்னு பாராட்டாம... கார்க்கி, இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது!

அனுஜன்யா

ஷர்புதீன் on May 5, 2010 at 9:46 PM said...

i will come to watch tomorow anand game in anand-topalov.com and my comment in CHESSGAMES.COM., will u come after 8pm ?

goindu on May 6, 2010 at 2:22 PM said...

Soooper

இரசிகை on May 7, 2010 at 10:19 PM said...

:))

இரசிகை on April 28, 2014 at 11:42 PM said...

யோசிச்சு பாருங்க. ம்ம்.. பார்த்திங்களா? இப்ப எதுக்கு யோசிச்சிங்கன்னு யோசிச்சு பாருங்க.
:)))))))

 

all rights reserved to www.karkibava.com