May 4, 2010

விஷ்வனாத் ஆனந்தும் கார்க்கியும் பின்னே பத்தாத உப்புமாவும்


 

   இளைஞர் காங்கிரசின் முக்கியமான தூணைப் பற்றி இங்கே எழுதி இருந்தேன். மீண்டும் நேற்று அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எந்தளவுக்கு அரசியல் ஞானம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். “தமிழக இளைஞர் காங்கிரஸின் புதிய தலைவர் யார்?”. சில நொடிகள் தடுமாறிய கைத்தம்பி சடாரென நான் தான் என்றார். தொடர்ந்தவர் “எங்க கட்சில எல்லோருமே தலைவர்தான். எல்லோருமே தொண்டர்தான்” என்றார்.

  “நீ இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் இல்லப்பா. திமுக, அதிமுகன்னு சேர்ந்து பொழைச்சுக்கோ” என்றவுடன் வீரப்ப சிரிப்பு சிரித்தார் இளம் அரசியல்வாதி. கடைசியா ஒரே ஒரு கேள்வி என்றேன்.  ”கூட்டம் அதிகமா இருக்கிற படத்துக்குப் போய் உனக்கு சீட் கிடைச்சா என்ன செய்வ” என்றேன். முதல்ல போய் உட்கார்ந்துப்பேன் என்று வகையாக வந்து மாட்டினார் எதிர்கால கவுன்சிலர். இறுதியில் நம்ம கேள்வியைக் கேட்டேன்.

”அப்புறம் ஏன் எலக்‌ஷனில் சீட் கிடைச்சா மட்டும் நிக்குறீங்க? உட்காரலமில்ல?”

________________________________________________________________________________

கோடை விடுமுறைக்கு பாட்டியின் ஊருக்கு போயிருக்கிறான் பப்லு. ஃபோன் செய்து குற்றப்பத்திரிக்கை வாசித்தான். அவனுக்கு எதுவுமே வாங்கித் தரமாட்டேன் என்கிறார்களாம். கூடவே இன்னொரு குரல் கேட்டது “காலைல தாண்டா 30 ரூபாய்க்கு ஐஸ் கிரீம் வாங்கின”. வாங்கினியாடா என்றால் ஆமாம் என்றவன் ஆனால் அதை ஜிகிர்தாண்டாவில் போட்டுவிட்டதாக சொன்னான். கொஞ்சம் கூட அவனுக்குத் தரவில்லையாம். உடனிருந்தவரிடம்  கேட்டால் ஆமாம் என்றார். சரி அப்போ வாங்கித் தர சொல்கிறேன் என்று சொல்லிய நேரம் மைல்டா டவுட்டு வந்துச்சு. ஜிகிர்தாண்டா என்னடா ஆச்சு என்றால் “எல்லாத்தையும் நானே சாப்ட்டே்ன்” என்கிறான்.

இன்னொரு நாள் உப்புமா செய்திருக்கிறார்கள். சாப்பிட்டவர் உப்பு பத்தலை என்று சொல்லியிருக்கிறார். அவன் வேலையை மட்டும் பார்க்காத பப்லு சொன்னானாம் “எங்க கார்க்கி மாமா எப்பவும் உப்புமா பத்தலைன்னுதான் சொல்வான்” என்றானாம்.

________________________________________________________________________________

செஸ் ஆனந்த் என்றால் எனக்கு உயிர். சின்ன வயதில் பள்ளி அளவிலான போட்டிகளில் வென்றது உண்டு. அது முதலே அவர் என் ஆதர்சம். சில வருடங்கள் முன்னால் வித்யாதர் என்ற தொண்டு நிறுவனத்தின் தூதராக அவர் இருந்தபோது அவருடன் செஸ் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. 5000 ரூபாய் நன்கொடை அளிக்கும் 50 பேருடன் அவர் விளையாடினார். அது கிடக்கட்டும். இப்போது சாம்பியன்ஷிப் போட்டி அவருக்கும் டோபோலொவுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. 4-3 என்ற புள்ளி கணக்கில் நம்ம ஆள் முன்னணியில்தான் இருக்கிறார். மேலதிக தகவலை இந்த தளத்தில் காணலாம். முழு ஆட்டத்தையும் ஃப்ளாஷ்-ல் தந்திருப்பது அருமையான விஷயம்.ஆனந்த் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

ANAND_KARKI

என்னாது? நாங்க ஆடினா ஆட்டம் என்ன ஆச்சா? போங்க பாஸ். புள்ள குட்டிங்கள தலைவர் படத்துக்கு கூட்டிட்டு போங்க. கப்பித்தனமா பேசிட்டு

__________________________________________________________________________________

கோ – படம் நன்றாக வந்திருப்பதாக தெரிகிறது. . ஹாரிசின் கூட்டணியில் ஏற்கனவே ஹிட்டடித்த கே.வி.ஆனந்த் இந்த முறையும் ஒரு நல்ல கமர்ஷியல் எண்டெர்டெயினர் தருவார் என எதிர்பார்க்கலாம். அதில் சில பாடல்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய ஒரு மெலடி ஹாரிசின் சிறந்த பாடலாக இருக்கக்கூடுமென ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பினார். நேற்று ஒரு தளத்தில் கே.வி.ஆனந்த் பேட்டியிலும் அதைக் குறிப்பிட்டிருந்தார். எல்லா துணையும் இழந்து தனியே நிற்கும் நாயகனின் நிலையை சொல்லும் ஒரு பாடலில் இப்படி எழுதி இருந்தாராம் மதன் கார்க்கி

”திசைமாணி இல்லாத நாளில் அடிவானம் ஏனில்லை
கடையாணி இல்லா பயணத்தில் கடிவாளம் ஏனில்லை”

பார்வையாளனுக்கு புரிந்துக் கொள்ள கடினமாக இருக்குமென இயக்குனர் வெட்டிய வரிகளில் இதுவும் ஒன்று. எனக்கு என்னவோ மதன் கார்க்கி எந்திரனுக்கு பிறகு  பட்டையை கிளப்புவார் என்று தோன்றுகிறது. ஆமாங்க. எந்திரனிலும் சில பாடல்கள் எழுதியுள்ளார் இந்த ஜூனியர் வைரமுத்து

________________________________________________________________

தினமும் காலை எழுந்தவுடன் குட் மார்னிங் பதிலாக காலை வணக்கம் சொல்லுடா என்று நண்பர் ஒருவர் அவரது மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். விடுங்க சகா. அதாவது சொல்றானே என்றால் அவர் கேட்பதாக இல்லை. தனியே அழைத்து அவரிடம் கேட்டேன் “காலை வணக்கம் சொல்ல சொல்லி இப்படி செய்றீங்களே. பொதுவா கை கூப்பிதானே வணக்கம் சொல்லுவாங்க?நீங்க எதுக்கு காலை(Leg leg) போய் வணக்கம் சொல்ல சொல்லி டார்ச்சர் பண்றீங்க” என்றேன். காலால தர வேண்டியதை அவர் தர எத்தனிக்க எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

27 கருத்துக்குத்து:

விக்னேஷ்வரி on May 4, 2010 at 10:25 AM said...

உப்புமா மாதிரியே கலந்து கட்டி நல்லா வந்திருக்கு. உங்களை மாதிரி (இந்த) உப்புமா பத்தலைன்னு நாங்க சொல்ல மாட்டோம். :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on May 4, 2010 at 10:28 AM said...

எப்படி இருந்த கார்க்கி?? ஹும்ம்ம்..

:)

மோகன் குமார் on May 4, 2010 at 10:32 AM said...

உங்க சட்டை பிரமாதம் கார்க்கி :))

புன்னகை on May 4, 2010 at 10:35 AM said...

Where did u buy dat shirt man? :-)

LOSHAN on May 4, 2010 at 11:05 AM said...

வாவ்.. ஆனந்துடன் சகா.. :)
ஐயாயிரம் ரூபாய் போட்டோ? :)

//போங்க பாஸ். புள்ள குட்டிங்கள தலைவர் படத்துக்கு கூட்டிட்டு போங்க. //
ஏன் சகா இப்படி ஒரு தண்டனை? ;)

உப்புமா அருமை.. நல்லாக் கிண்டுறீங்க

damildumil on May 4, 2010 at 11:19 AM said...

//உங்க சட்டை பிரமாதம் கார்க்கி :))
//

அவர் எப்போதுமே விஜய் ஃபேன் தான்

வெற்றி on May 4, 2010 at 11:25 AM said...

நீங்க போட்டுருக்குற ரெட் கலர் சட்டை சூப்பர் சகா :)

வெற்றி on May 4, 2010 at 11:28 AM said...

அதுவும் அந்த ரெட் கலர் சட்டையில அஜித் மாதிரி அழகா இளமையா இருக்கீங்க சகா :)

வெற்றி on May 4, 2010 at 11:32 AM said...
This comment has been removed by the author.
சுசி on May 4, 2010 at 11:35 AM said...

கலக்கல் கார்க்கி..

பப்லு வந்தாலே கச்சேரி களை கட்டுது.. சாரி.. காக்டெயில் களை கட்டுது.. :))))

நடுவுல ஒருத்தர் சூப்பர் சட்டை போட்டுட்டு நிக்கிறாரே.. அவர்தான் விஷ்வநாதன் ஆனந்தா??

ஆதிமூலகிருஷ்ணன் on May 4, 2010 at 12:12 PM said...

இன்னிக்கு வரைக்கும் உனக்கு மீசையே முளைக்கலையே சகா.? :-(

கார்க்கி on May 4, 2010 at 12:15 PM said...

விக்கி, ஃபோட்டோ எல்லாம் போட்டு இருக்கிங்க? உங்க ஃபோட்டோதானா?

ஷங்கர், ஹிஹிஹி

உங்களுக்கு குசும்பு மோகனண்ணே

நன்றி புன்னகை :)

லோஷன், சகாவுடன் ஆனந்த்னு சொன்னா எவ்ளோ நல்லா இருக்கு?

டமால்டுமீல், ஃபேனா? அது போய் எப்பவோ ஏ.சி ஆயாச்சுங்க..

வெற்றி, முதல்ல அது ரெட் கிடையாது. அப்புறம் அது நான் கிடையாது. அஜித்தும் இளமையுமா?
:))

சுசி, அவரேதான்.. அடுத்து எந்த படத்துல நடிச்சிருக்காருன்னு கேட்க மாட்டிங்க இல்ல?

லோகேஷ்வரன் on May 4, 2010 at 12:17 PM said...

போட்டோ வில கார்கி தெரியுது ... கார்கி பக்கதுல கோர்ட் போட்டுன்னு இருக்கிறது யாரு ?

ஆனாலும் சட்டை superr என் கண்ணுலே நிக்குது

நேசன்..., on May 4, 2010 at 12:42 PM said...

ஏன் சகா!...எலெக்சன்ல நிக்குறதுக்குத் தான சீட்டேத் தற்றாங்க பின்னே எப்படி உக்கார முடியும்?.....

- விஜய் படத்தை விடாது பார்ப்போர் சங்கம் -

வெற்றி on May 4, 2010 at 1:06 PM said...

//அதுவும் அந்த ரெட் கலர் சட்டையில அஜித் மாதிரி அழகா இளமையா இருக்கீங்க சகா :)//

இதுல முதல் பார்ட் ஃபால்ஸ் ஸ்டேட்மென்ட்னா ரெண்டாவது பார்ட்டும் ஃபால்ஸ் ஸ்டேட்மென்ட் சகா :)

இரசிகை on May 4, 2010 at 1:34 PM said...

:))

thalaivan on May 4, 2010 at 1:36 PM said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

சுசி on May 4, 2010 at 1:41 PM said...

//சுசி, அவரேதான்.. அடுத்து எந்த படத்துல நடிச்சிருக்காருன்னு கேட்க மாட்டிங்க இல்ல?//

கேக்க மாட்டேனே.. அவர பிரபல பதிவர் ஆதி எடுத்த ஒரு படத்தில நான் பாத்திருக்கேனே ;)

தராசு on May 4, 2010 at 1:45 PM said...

இது இன்னொரு காக்டெயிலா தல???

நர்சிம் on May 4, 2010 at 2:05 PM said...

ஃபோட்டோ சூப்பர் சகா

நர்சிம் on May 4, 2010 at 2:07 PM said...

என்று பின்னூட்டம் இடச் சொன்னவர் உங்கள் கார்க்கி

ஆதிமூலகிருஷ்ணன் on May 4, 2010 at 3:05 PM said...

வணக்கம்
நண்பரே

எம் தலைவனின் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக உம் தலைவன் தளம் உங்களுக்கு அமையுமா அதை சொல்லும் முதலில்?

எம் தலைவனின் திறமைகள் காட்டாற்று வெள்ளம் போல யாராலும் அதை தடுக்க முடியாது.
எங்கள் தலைவன் தளத்தில் பிரசுரிக்கும் அனைத்துமே சிறந்த ஆக்கங்கங்கள்தான் அதை உமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் தளத்தை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.

நன்றி
கார்க்கி எனும் ஒரே தலைவன் குழுமம்
www.karkibava.com

சின்ன அம்மிணி on May 4, 2010 at 3:44 PM said...

பப்லு வழக்கம் போல கலக்கல்

கார்க்கி on May 4, 2010 at 5:53 PM said...

ஆ.மு.கி, உஙக்ளுக்குத் தந்த அதே சாய்ஸ்தான் எனக்கும் தந்தார் கடவுள். உங்கள மாதிரி சொல்லாம எனக்கு மூளைதான் முக்கியம் என்று சொல்லிட்டேன் சகா

லோகேஷ், நாம சந்திக்கிற பிளான தள்ளி வைக்கலாம்னு இருக்கேன் :)

நேசன், விஜய் படத்த விடாம பார்த்தா நீங்க சிங்கம் பாஸ்

சிரித்த ரசிகைக்கு நன்றி

சுசி, ரைட்டு

தராசண்ணே, லேபிள பாருங்க

நர்சிம், ஹிஹிஹி.. டேங்க்ஸுப்பா

ஆ.மூ.கி,குசும்பனிடம் சொல்றேன்

அம்மிணி, ஆனந்த் ஃபோட்டோ கண்ணுலே படாதே

ஷர்புதீன் on May 4, 2010 at 6:12 PM said...

தல , நீங்க செஸ் பிரியரா., தெரியாம போச்சே.,

எதோ கடந்த எட்டு வருட இடை விடாத (?!!) மு(ப)யற்சியில் ஏதோ
1800 ELO ரேட்டிங் லெவெலில் விளையாடுவேன் தல., அந்த ஏழாவது ஆனந்த்-தபோலோவ் மேட்ச் பார்த்தேன் தல ( ஆன்லைனில்)
சும்மா நம்ம ஆனந்த் டைம் பிரசர்லேர்ந்து தப்பித்து வந்தது ,பாமர மக்களுக்கு புரியிறமாதிரி சொல்லன்னும்ம்னா., நம்ம டோனி தர்மசாலா ( IPL -3)
மேட்ச் ல ஜெயிச்சமாதிரி , ஆனந்த் அந்த பிரசர்லேர்ந்து தப்பிச்சு டிரா செஞ்சாரு., இந்த முறையும் ஆனந்த் தான் தல ஜெயிக்கபோறாரு ( ஏழு கேம் முடிஞ்சி ஆனந்த் ஒரு பாயிண்ட் அதிகமா இருக்காரு...)

சென்னைக்கு வந்தபிறகு நாம விளையாடலாம் தல, போர்ட தொடச்சி வையுங்க தல !
:)

ஷர்புதீன் on May 4, 2010 at 10:52 PM said...

thala, today (8th game) anand lost ....( now score 4-4)
:(

கார்க்கி on May 4, 2010 at 10:55 PM said...

தலைவரே லைவா பார்த்துட்டுதான் இருந்தேன்.. கடைசி 10 ஸ்டெப்ல தலைவர் ஸ்ப்ப்டு எதுக்கு எடுத்தாரு? அதான் சொதப்பினா மாதிரி தெரியுது...நின்னு ஆடியிருக்கலாம்

 

all rights reserved to www.karkibava.com