May 2, 2010

பட்டய கிளப்புது படம்


 

பொங்கலுக்கே வெடி வெடிக்கிறவனிடம் பொட்டி நிறைய பட்டாசு  தந்தால் என்ன செய்வான்?  அதுவும் தீபாவளியும் வந்தால்… அப்படி ஆயிடுச்சுங்க.இருங்க பாஸ்.நான் சுறாவை பத்தி சொல்லல.

   திருமணம் முடிந்து ஊருக்கு திரும்பிய அண்ணன் SONY alpha 200 என்ற SLR வகை கேமரவை வச்சிக்கோடா என்று தந்துவிட்டு போனான். கூடவே இரண்டு நாட்கள் விடுமுறை. எடுடா வண்டிய கார்க்கி என்று கிளம்பினேன். கிளம்பும் முன் மெயில் பார்க்கலாம் என்று பார்த்தால் இன்னொரு அதிசயம். இந்த மாத PIT போட்டியின் தலைப்பு “சன்ரைஸ்/சன்செட்” என்றும், கலந்து கொள்ளுமாறும் எழுதி இருந்தார் என் குரு ஜீவ்ஸ். எல்லாம் கூடிவருதுடா கார்க்கி என்று நினைத்துக் கொண்டேன். அம்மாவிடம் மறுநாள் காலை 5.30க்கே எழுப்ப சொன்னேன். பெசண்ட் நகருக்கு சென்று சூரியோதயத்தை எடுத்துவிட்டுதான் அடுத்த வேலை என்று முடிவானது.

இரவு 10 மணிக்கு அலாரம் வைத்தேன். எதுக்கா? சீக்கிரம் தூங்கினாதானே காலைல எழுந்திருக்க முடியும்? அதான் 10 மணிக்கு அலாரம் வைத்தேன். காலையில் அலாரம் அடித்தால் நம்ம குறட்டை சத்தத்தில் அலாரம் சத்தம் காணாம போய்விடும் என்பதால் அம்மாதான் எனக்கு அலாரம். மறுநாள் காபியோடு எழுப்பினார்கள். குடித்துவிட்டு டைம் பார்த்தா 7 . என்னம்மா. 5.30க்கு இல்ல எழுப்ப சொன்னேன் என்றேன். அவரே 6.30க்கு எழுந்ததால் திட்டம் தவிடு பொடியானது. மனம் தளராமல் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதற்குள் சூரியன் உச்சிக்கு வந்துவிட்டது.

மாலையில் “சன்செட்” காட்சியை படம்பிடித்து விடலாம் என என் உள்மனது சொன்னாலும் ஏதாவது செய்டா கார்க்கி என்று வெளிமனது சொன்னது. தீவிர யோசனைக்குப் பின் இந்த “சன்ரைஸ்” படம் எடுத்தேன். போட்டிக்கு அனுப்பும் அளவிற்கு இல்லையென்பது எனக்கே தெரியும். லைட்டிங்கும் சரியில்லை. ஆங்கிளும் சரியில்லை. இங்கே க்ளிக்கி பாருங்க. பார்த்துட்டு கருத்து சொல்லுங்க.

என்னடா இன்னைக்கு உன் பிளான் என்ற தோழியிடம், மாலையில் எப்படியாவது தவறாமல் பீச்சுக்கு சென்று படம் பிடித்தே ஆக வேண்டுமென சொல்லிக் கொண்டிருந்தேன் . அவளும் உடன் வருவதாக சொன்னாள். போட்டியின் தலைப்பு நிலா அல்ல, சூரியன் தான் என்றேன். ச்சோ ஸ்வீட் என்றவள் தனது வருகையை ஊர்ஜிதப்படுத்தினாள்.  அவள் வருவதிலும் ஒரு நன்மை இருப்பதாக சொன்னேன். என்ன என்றாள் தோழி.

“பீச் உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண்ணடிக்கும்.
வீடு செல்ல சூரியனும் அடம்பிடிக்குமே”

   அதற்குள் சூரியனை பல ஆங்கிளில் படம் பிடித்துவிடலாமே என்றேன். வெட்கி, நாணி, கோணி ஃபோனை வைத்துவிட்டாள் தோழி. மாலையில் சரியாக 5 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டேன். தோழியும் 5.30க்கு அங்கே வந்துவிடுவதாக சொன்னாள். ஆர்வத்துடன் போனால், காணவில்லை.முடிந்தவரை திருவான்மியூர் பீச் முழுக்கத் தேடினேன் கிடைக்கவில்லை.

”என்ன சொல்றீங்க? தோழிக்கு கால் பண்ணி கேட்டிருக்கலாமா?”

அட நீங்க வேற.நான் காணோம்னு சொன்னது தோழியை அல்ல. சூரியனை. அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு. உதிப்பதுதானே கிழக்கு? மறைவது மேற்குதானே? தோழிக்கு தெரிந்தால் கிண்டல் அடிப்பாளே..அவளை எப்படி சமாளிக்கலாம் என்று மூளையை.. சரி விடுங்க. காலைல இருந்து எல்லா திட்டமும் டமால் ஆவதால் மூளையை விட்டுடறேன். தோழியும் வந்தாள். அவளையே படமெடுத்துக் கொண்டிருந்தேன். போட்டிக்கு எடுக்கலையா என்றாள் தோழி.

“அது சும்மா கப்சா விட்டேன். உன்னை பீச்சுக்கு வரவைக்கதான் அப்படி சொன்னேன். சூரியன் உதிக்கிறதுதான் இங்க. மறையறதும் இங்கயா? நான் சொன்னா நம்பிட்டு வந்துடுவியா” என்றேன். சிரித்தாள். “உன் அளவுக்கு எனக்கு அறிவில்லைடா. அது மட்டுமில்லை. நீ எதை சொன்னாலும் நம்பிடுவேன்” என்று தோளில் சாய்ந்தாள். நான் சூரியனாக எரிந்துக் கொண்டிருந்தேன்.

சூரியன் என்று சொல்லும்போதுதான் ஞாபகம் வருது. கடைசியா போட்டிக்கு ஒரு படம் எடுத்து அனுப்பிவிட்டேன். இதுதான் அந்தப் படம்.

;;

;;

;;

;;

;;

;;

;;

;;

;;

 

Sura HQ 66

எதிர் நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டு பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை
குளிரும் பனிமலை குமுறும் எரிமலை
ரெண்டும் கலந்த இதயம்
ஏழை எங்கள் வாழ்வில் இவனே காலை உதயம்..

காலை உதயம்ன்னா சன்ரைஸ்தானே????????????????

43 கருத்துக்குத்து:

தமிழ்ப்பறவை on May 3, 2010 at 12:01 AM said...

யோவ்.... நீ சீரியஸா இல்ல மொக்கையா... உன்ன முழுசா நம்பவே முடியலை...
by the way.. nice post...

இராகவன் நைஜிரியா on May 3, 2010 at 12:09 AM said...

ஆஹா... கலக்கிட்டீங்க கார்க்கி...

எம்.எம்.அப்துல்லா on May 3, 2010 at 12:10 AM said...

டேய்..கல்யாணமாகாத பய..இப்படி நடு ராத்திரி முழுச்சு போஸ்டு போட்டுகிட்டு இருந்தீன்னா ஊரு ஒலகம் என்ன நினைக்கும்?? போடா..போய் தூங்கு.

சுசி on May 3, 2010 at 12:24 AM said...

கலக்கல் கார்க்கி.. :))))

இன்னியோட BRU லேர்ந்து Sunriseக்கு நான் மாறிட்டேன்..

//இவனே காலை உதயம்.. காலை உதயம்ன்னா சன்ரைஸ்தானே????????????????//

இன்னமும் ரெண்டு நாள் இருக்கு எங்கூர்ல உதயத்துக்கு..

Rajalakshmi Pakkirisamy on May 3, 2010 at 12:32 AM said...

he he he.. superb mokkai

Starjan ( ஸ்டார்ஜன் ) on May 3, 2010 at 12:48 AM said...

மேலும் பட்டய கிளப்பட்டும்.

பா.ராஜாராம் on May 3, 2010 at 1:07 AM said...

உதயம்,அஸ்தமனம்,தோழி.. :-)

சன்ரைஸ் மேட்டரில்..

எதிர்க்கட்சி வக்கீலா இருந்தாலும் உங்க argument,confident ரசிப்பிற்குரியது பாஸ். :-)

better luck next time. :-)

குட்டி on May 3, 2010 at 2:41 AM said...

venaaaam.......valikkudhu !

அதிஷா on May 3, 2010 at 5:04 AM said...

நீ உட்கார்ந்தால் எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்...!

டம்பி மேவீ on May 3, 2010 at 5:11 AM said...

கார்க்கி, வாரத்துல முத நாளு ஆபீஸ் போரரதுக்கு முன்னாடி உங்க பிளாக்கை பிடிச்சு இருக்கேன் ...என்னக போகுதோ .... (போன மாசம் டார்கெட் அம்பேல்....இந்த மாசம் எப்படியோ)


எப்புடிங்க தோழி உங்க மொக்கையை தாங்குரங்க????

Jaya on May 3, 2010 at 7:09 AM said...

Eppadinga Ippadi? Nijamave Mudiala:))

மகேஷ் : ரசிகன் on May 3, 2010 at 7:30 AM said...

முதல் நாள் முதல் ஷோ பார்க்காதீங்கன்னா கேட்டாத்தானே?.

Bavan on May 3, 2010 at 8:31 AM said...

ஹாஹாஹா... ஸ்ஸ்சப்பா.... முடியல... உக்காந்து யோசிப்பீங்களோ??

ஆனா சும்மா பல்டி இல்ல அந்தர் பல்டி அடிச்சிருக்கீங்க..:p

தராசு on May 3, 2010 at 9:11 AM said...

அப்துல்லா அண்ணனை வழிமொழிகிறேன்.

♠ ராஜு ♠ on May 3, 2010 at 9:30 AM said...

”தல”யை வெட்டனும்னே ஹெலிக்காப்டர் ரெக்கைக்கு நேரா நிக்க வச்சு எடுத்தீங்களாண்ணே..?
:-)

Kiruba on May 3, 2010 at 9:41 AM said...

கலக்கல். ப்ரைஸ் என்னமோ நீங்க அனுப்பின படத்துக்குத்தான். ஆனா உங்களுக்குத் தரமாட்டாங்களே.

T.V.ராதாகிருஷ்ணன் on May 3, 2010 at 9:52 AM said...

ஆஹா...

புன்னகை on May 3, 2010 at 10:22 AM said...

// "நீ எதை சொன்னாலும் நம்பிடுவேன்” என்று தோளில் சாய்ந்தாள்.//
கடவுள் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல புத்தி தரணும்! :p

விக்னேஷ்வரி on May 3, 2010 at 10:23 AM said...

சுறா படம் பார்த்த எஃபெக்ட்டா? போஸ்ட் முழுக்க வாசிச்சதும் ஏதோ விஜய் படம் பார்த்த மாதிரி இருக்கு.

கார்க்கி on May 3, 2010 at 10:40 AM said...

பறவை, சீரியசாவே நான் மொக்கைதான் பாஸ்

நன்றி ராகவன்

அண்ணே, இது ஷெட்யூல் பண்ணது

சுசி, பார்த்துட்டு சொல்லுங்க

நன்றி ராஜி

நன்றி ஸ்டார்ஜன்.பதிவ ஃபுல்லா படிச்சிஙக்ளா?

ராஜாராம், இதெல்லாம் பழகிபோச்சு பாஸ் எனக்கு :)

குட்டி, ஹிஹிஹி

அதிஷா, பச்சை.......

மேவீ, திருடினாலும் கிடைக்காத திங்கிள் கிழமைப்பா. திறமப்ட வேலை செய்ய வாழ்த்துகள்

ஜயா, ஹிஹிஹிஹி

ரசிகன், அது வேறு இது வேறு :)

பவன், எந்த பல்டியும் இல்ல பாஸ். நான் அபப்டியேதான் இருக்கேன் :))

தராசண்ணே.. ரூட்டட் மாத்துங்க :)

ராஜு, ”தலை”யை வெட்டி வெட்டி போரடிக்குதுப்பா

கிருபா, உஙக்ள மாதிரி மக்கள் என் பக்கம் இருக்கும் வரை..(தளபதி மாதிரியே பேசறேனோ)

நன்றி டி.வி.ஆர் அய்யா

புன்னகை, கடவுள் புத்திய தவிர எல்லாத்தையும் நல்லபடியா கொடுத்திட்டாருங்க

விக்கி, பதிவு அவ்ளோ சூப்பராவா இருக்கு? டேங்க்ஸ்

தாரணி பிரியா on May 3, 2010 at 11:13 AM said...

படம் நல்லா இருக்கு. நான் சன்ரைஸை சொன்னேன் :)

யுவகிருஷ்ணா on May 3, 2010 at 11:16 AM said...

ஒரு சுறாவளி கிளம்பியதே... :-)

ர‌கு on May 3, 2010 at 12:29 PM said...

ஃபோட்டோலாம் ந‌ல்லாத்தான் இருக்கு, ஆனா.........

குசும்பன் on May 3, 2010 at 12:32 PM said...

சன்ரைஸ் குடிச்சுக்கோ, முழிச்சிக்கோ!

Balavasakan on May 3, 2010 at 12:38 PM said...

கார்க்கி உங்க மொக்கை சாமி என்ற லேபிள பார்க்காத்தது என் தப்புதான் என்றாலும் உங்க ச்ணறைஸ பார்த்திட்டு ...................... திட்டோ திட்டுன்னு திட்டிப்புட்டேன்... மன்னிச்சிடுங்க பாஸ்...

SanjaiGandhi™ on May 3, 2010 at 12:53 PM said...

விஜய் ரசிகர்களும் ஒரு மார்க்கமாத்தான்யா இருக்காங்க :)

கார்க்கி on May 3, 2010 at 1:05 PM said...

தா.பி,நன்றி. பரிசு கிடைக்குமா?

லக்கி, உங்க விமர்சனத்தினால் காண்டா இருக்கேன்... அவ்ளோதான் சொல்லுவேன் :)

ரகு, உங்க் அளவுக்கு எல்லா சுவத்திலும் ஃபோட்டோ அடிச்சு ஒட்ட முடியுமா சகா? :)

குசும்பன், அவர்தான் லூச்த்தனமா சொன்னாரு. முழிக்காம எப்படி குடிக்க முடியும்? புனல் வழியாதான் ஊத்தனும்.

பாலா, எங்க படத்தோட அருமை தெரியாம பலரும் திட்டறாங்கத்தான். பரவாயில்லை. ஒரு நாள் உலகம் எங்க அருமையை புரிஞ்சிக்கும் :)

சஞ்சய், எப்பவும் நாங்க நல்ல மார்க் வாங்குற ஆளுங்கதான் சகா.

Jeeves on May 3, 2010 at 3:22 PM said...

வெறும் டான்ஸுக்குன்னா விஜய்படம் பாட்டு மட்டும் பார்த்தா போதாதா? மொத்தப் படமும் பார்த்தே ஆகனுமா ?

உனக்கு சென்னைல சேர்க்கை சரியில்ல. இல்லாட்டா சோனி எஸ்.எல்.ஆர் வச்சுட்டு இப்படியா மொக்கை போட்டுட்டு இருப்ப...

A Simple Man on May 3, 2010 at 3:38 PM said...
This comment has been removed by the author.
மீடில் ஈஸ்ட் முனி on May 3, 2010 at 3:58 PM said...

Karki,

Kai la nalla nalla varthaya vanthathu ...but control panni typeindu irruken !!!

You must know something, when i open my browser every single day the first web address i type is yours , rest is next .

Ungala oru viosayathala paratanum Velliyurkaran vida mana thairiyaam jasthipa !! Aennadhaaan live Sura , sura puttu ahnalum salaikama irrukingalae...athukagavae paratanum !!! well done.

" Triple M " allathu Marana Mokkai Mannar aendru indril irunthu alaika paduveeraga !!!

damildumil on May 3, 2010 at 4:15 PM said...

//. அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு. உதிப்பதுதானே கிழக்கு? //

அப்போ கன்யாகுமரியில மட்டும் சன் ரைஸ் சன் செட் ரெண்டும் பார்க்க முடியுதே எப்படி?

Anonymous said...

kadavuleeeeeee

காவேரி கணேஷ் on May 3, 2010 at 5:26 PM said...

அப்துல்ல்லா,

இவன் அடங்கவே மாட்டானா?

கார்க்கி on May 3, 2010 at 6:09 PM said...

ஜீவ்ஸ் அண்ணே, பெரிய திரையுல பார்த்தா அந்த சுகமே தனி :))

முனி, ரொம்ப நன்றி பாஸ். இப்ப நீங்க பாராடறீங்களா? இல்லை திட்டறீங்களா??????

டமால் டுமீல்,
உலகத்துல ரெண்டே அறிவாளிங்க. ஒன்னு அந்த ஜி.டி.நாயுடு.. இன்னொன்னு

மஹா,
கூப்ட்டிங்களா?

காவேரியண்ணே,
அப்துல்லா அடங்காம என்ன செஞ்சிட்டாரு?

VAAL PAIYYAN on May 3, 2010 at 6:20 PM said...

SUPERB SIR
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

மாதேவி on May 3, 2010 at 6:44 PM said...

நல்லாயிருக்கு.

அறிவிலி on May 3, 2010 at 9:00 PM said...

காலை உதையும்.


No spelling mistakes.

Kafil on May 3, 2010 at 9:44 PM said...

ivan edukkum padathinil india olirkirathu.......

ஷாஜி on May 3, 2010 at 11:10 PM said...

Good One Karkki... but don't keep it up... sema mokkaii.......

வாய்கொழுப்பு on May 4, 2010 at 5:05 AM said...

I have never seen a worst movie like SURA in my lifetime, even new Heroes will not act in this Story, nothing is good in this movie, and even Vijay’s family will not watch this movie, how come this guy is acting in such terrible movies

வாய்கொழுப்பு on May 4, 2010 at 5:05 AM said...

I have never seen a worst movie like SURA in my lifetime, even new Heroes will not act in this Story, nothing is good in this movie, and even Vijay’s family will not watch this movie, how come this guy is acting in such terrible movies

கார்க்கி on May 4, 2010 at 10:06 AM said...

நன்றி வாலிபையன் (?)

நன்றி மாதேவி

அறிவிலி, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கஃபில், ஆவ்வ் அப்போ நான் காமெடி ஹீரொவ்வா?

ஷாஜி, ஹிஹிஹிஹிஹி

வாய்க்கொழுப்பு,
// how come this guy is acting//

காமெடி பண்ணாதிங்க பாஸ் :))

A Simple Man on May 6, 2010 at 2:23 PM said...

இரத்ததானப் பின்னூட்டத்தை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி.

 

all rights reserved to www.karkibava.com