May 14, 2010

இன்னைக்கு +2 முடிவுகள்


 

    நீர் கீழே வீழுவதை அருவி என்றும் ‘நீர்வீழ்ச்சி’ என்றும் சொல்கிறோம். அதே நீர்தான் மேலே இருந்து விழுகிறது, என்றாலும் ‘மழை’ என்றும் அழைக்கிறோம். ஏன் என்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா தம்பிகளே? அது போலத்தான் சில நிகழ்வுகள் அதனதன் அளவில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.வரும். தேர்வும், அதில் தோல்வி என்று சொல்லப்படும் வார்த்தைகளும் அந்த அளவே...

   மெக்காலே கல்வித்திட்டத்தின் மிச்ச எச்சமே இந்த எழவெடுத்த தேர்வுமுறை. வெற்றி பெற்றவர்கள் மட்டுமே கொண்டாடப்படுவதால் தோல்வியின் வலி தோற்றவனுக்குள் புதைந்து போகிறது. போகட்டும். தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது.

  தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளும் வெற்றியும் கொண்டாப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அதற்கு முன் அவர் தோற்ற அத்தனை முயற்சிகளையும் மறந்துவிட்டே இருக்கிறது.அல்லது அந்த தோல்விகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கூட இல்லை.

  தாமதிக்கப்பட்ட ஒவ்வொரு வெற்றியும் தோல்வியாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. பரவாயில்லை.

   “இனி வாழ்வே இருண்டுவிட்டது. அவ்வளவுதான்” என்று யாராவது சொன்னால் ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுங்கள். ஆனால் இரும்பு இதயத்தோடு. ஏனெனில் இங்கு தேர்வின் தோல்விக்கும் வாழ்வின் வெற்றிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நீங்கள் தோல்வியை சரியாக எதிர்கொள்ளும் பட்சத்தில்.

   குற்றவுணர்வில் குறுகிப் போய்விடாதீர்கள். வாழ்வில் இஃது ஒரு நிகழ்வு. விழுந்தால் எழத்தான் வேண்டுமேயன்றி அழ அல்ல.

   உலகம் எவ்வளவு பெரியது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கிறது. ஒரு மெடிக்கல்ஷாப் ஓனரின் உலகம் அந்த 20க்கு 20 கடையளவுதான். ஆனால் அங்கு வந்துபோகும் வாடிக்கையாளர்களின் உலகத்தின் அளவு மொத்தமும் அவரின் உலக அளவில் அடங்கும்.

   உங்களைப் பொருத்தவரை இன்று இந்த தோல்வி மட்டுமே கண்முன் இருக்கும் உலகம்.உண்மை அதுவல்ல. அதன் பின் இருக்கும் மிகப் பெரிய வெற்றிகள் தான் உண்மையான உலகம். அதைப் பார்ப்பதற்கான பாஸ்போர்ட்தான்/பயணச்சீட்டுதான் இந்த தோல்வி என்று கூறப்படும் தாமதிக்கப் பட்ட வெற்றி.

   எனக்குத் தெரிஞ்ச ஒருவர்... +2 ல சுமாரான மார்க் வாங்குனதால பி.இ. சேர முடியாம பிஎஸ்சி சேந்தாரு. அத முடிச்சுட்டு ஐஐஎம் இல் போய் எம்பிஏ படிச்சாரு. +2 வுல சுமார் மார்க் வாங்குன அவரு சில வருட இடைவெளியில் தன் முயற்சியால அகமதாபாத் ஐஐஎம்லேயே சீட் வாங்குனாரு.அவரோட என்ட்ரன்ஸ் எழுதுன எத்தினியோ பி.இ. படிச்சவுங்களுக்கு ஐஐஎம் இல் இடம் கிடைக்கல. வாழ்க்கை யாருக்கு எப்ப மாறும்னு சொல்ல முடியாது. ஆக தொடர் முயற்சி மட்டுமே பலன் தரும்.

   இன்னும் நீங்கள் பெரிதும் விரும்பும் திரைத்துறையில் எத்தனை வித பாடங்கள்.. தோல்விகள்.. அதிலிருந்து மீண்ட வெற்றிகள்..

   முன்னனி இதழ் ஒன்று விஜயின் முகத்தைப் பற்றி அப்பட்டமாக கேலிசெய்து எழுதியது. இன்று அதே இதழ் மாதமிருமுறை விஜயின் அட்டைப் படம் தாங்கி வருகிறது.விஜயின் விடா முயற்சியும் உழைப்பும் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்..

   அஜித்.. எத்தனை வித தோல்விகள். முதல் பட முடிவிலேயே முதுகுத் தண்டில் ஆப்பரேஷன்கள். இனி அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நிமிர்ந்தெழுந்தவர் அஜித். இன்று முக்கிய நாயகர்களில் அவரும் ஒருவர். இடர்களை இடறியதால்தான் இது சாத்தியமாயிற்று.

  இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ தோல்விகள் வெற்றிகளாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழிபெயர்க்க வேண்டியவர்கள் நீங்கள் தான்.

   இது முடிவல்ல.. இறுதியும் அல்ல. ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடம். ஆம்.. இனி எல்லாம் வெற்றி மட்டுமே என்ற உறுதியுடன் மீண்டும் உழைக்க வேண்டிய தருணம்.
ஏதோ ஒரு காரணத்தினால் இப்படியான நிகழ்வு. மிக நன்றாகப் படித்திருந்தும் தொண்டைவரை இருந்த வார்த்தைகளை பேனாவின் முனையில் இறக்கமுடியாமல் போயிருக்கக்கூடும். வீட்டின் அன்றாடப் பிரச்சனைகளில் தொலைந்து போயிருக்கக்கூடும். தேர்வன்று மட்டுமே படிக்கவேண்டிய கடைசி நிமிட ஞானம் கைகொடுக்காமல் போயிருக்கக் கூடும்.. எதுவாயினும்..இன்று நடந்த நிகழ்வை ஒரு சிறு தோள்குலுக்கலில் தட்டி விடுங்கள்.ஏனெனில் இந்த மிகப் பெரிய உலகம் உங்களின் விரல் சொடுக்கிற்காக காத்திருக்கிறது.

   மீண்டும் உழையுங்கள்.. மீண்டு வாருங்கள்.. நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது நீங்கள்.காத்திருக்கிறோம்.

   இது முடிவு என்று முடிவெடுத்துவிடாதீர்கள். ஆரம்பம்...
முயற்சியை விடாதீர்கள்.. விடாமுயற்சிதான் மனவலிகளை போக்கும் வழி.

பி.கு: சென்ற வருடம் நர்சிம் எழுதிய பதிவிது. தேவையான விஷயமென்பதால் மீள்பதிவாக இங்கே. குசும்பம் அழைத்த “எக்ஸாம் பயம்” தொடர்பதிவு தயாராக இருந்தாலும் இன்று பதிவிடுவது சரியாக இருக்காது என்பதால் நாளை…..

26 கருத்துக்குத்து:

லோகேஷ்வரன் on May 14, 2010 at 10:23 AM said...

அண்ண நான் தான் first...

லோகேஷ்வரன் on May 14, 2010 at 10:27 AM said...

//குற்றவுணர்வில் குறுகிப் போய்விடாதீர்கள். வாழ்வில் இஃது ஒரு நிகழ்வு. விழுந்தால் எழத்தான் வேண்டுமேயன்றி அழ அல்ல.//

அண்ணே என் அறிவு கண்ணே படாருன்னு தொருதீண்டீங்க ...

நர்சிம் on May 14, 2010 at 10:49 AM said...

நன்றி சகா.

cheenu on May 14, 2010 at 10:51 AM said...

இன்று யாறேனும் இதுபோல பதிவிட மாட்டார்களா என்று பார்த்தேன். மீள்பதிவாயினும் இன்றைக்கு தேவயான பதிவு இது.

நன்று.

முகிலன் on May 14, 2010 at 11:29 AM said...

என்னடா கார்க்கி தளத்துல சீரியஸா ஒரு மேட்டர் வருதேன்னு நினைச்சேன். கடைசியில அது நர்சிம் எழுதுனதா?

Hanif Rifay on May 14, 2010 at 11:47 AM said...

அண்ணே.... அதான பாத்தேன்...நம்ம கார்கியாவது....இவ்ளோ சீரிசாவது.....

பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Vidhoosh(விதூஷ்) on May 14, 2010 at 12:12 PM said...

காலையிலிருந்தே எல்லாருக்காகவும் சாமிக்கிட்ட வேண்டிகிட்டே இருக்கேன், எல்லாரும் வாழணும் சாமீ .....!!!

Ganesh on May 14, 2010 at 1:43 PM said...

தேர்வெழுதிய அனைவருக்கும்
வாழ்த்துக்கள்......

தேவையான மீள்பதிவுதான்ணா.....

அமுதா கிருஷ்ணா on May 14, 2010 at 2:05 PM said...

நல்ல சுட்ட பதிவு...

சுசி on May 14, 2010 at 2:08 PM said...

படிக்க ஆரம்பிச்சதுமே தெரிஞ்சது இது உங்க எழுத்தில்லன்னு.. சரியான நேரத்தில நம்பிக்கை வளர்க்கும் பதிவு. மீள் பதிவிட்ட உங்களுக்கும் எழுதிய நர்சிம்முக்கும் வாழ்த்துக்கள்.

சுசி on May 14, 2010 at 2:09 PM said...

இது உங்களுக்கு நர்சிம்..

//தோல்வியின் வலி தோற்றவனுக்குள் புதைந்து போகிறது.//
செம..

//தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது.//
தோல்வின்னு வரப்போ ஹோன்னு அழத்தான் தோணுதே தவிர இப்டி யோசிக்கத் தெரில எனக்கு.. அதனாலதானோ என்னவோ தோல்விகள் தோல்விகளாகவே என்னுள் :))))

SK on May 14, 2010 at 2:29 PM said...

நான் நினைவு படுத்தனும்னு நினைச்சேன் நீங்க பண்ணிடீங்க. நன்றி சகா.

www.thalaivan.com on May 14, 2010 at 2:44 PM said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

r.selvakkumar on May 14, 2010 at 2:56 PM said...

ஒவ்வொரு முறையும் மதிப்பெண்கள் வெளியிடும் நாளன்று மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய வரிகள்.

அஜித், விஜய்யை தாண்டி சினிமா அல்லாத துறைகளில் உள்ள சாதனையாளர்களையும் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆதிமூலகிருஷ்ணன் on May 14, 2010 at 4:06 PM said...

ஹிஹி.. நாலு பாரா வரைக்கும் புதுசா படிக்கிறா மாதிரியே படிச்சுட்டேனே..

(அப்புறம் மீள்பதிவுன்னா அவரு போடணும்யா.! இன்னிக்கு நான் கூடத்தான் ஒண்ணுமே எழுதல.. சொல்லியிருந்தா போட்டிருக்கமாட்டேனா? ஹிட்ஸ் போச்சே)

நாய்க்குட்டி மனசு on May 14, 2010 at 5:23 PM said...

அதானே! நம்ம எழுதினதை மறுபடியும் போட்டா மீள் பதிவு.
இது பிட் தானே?

வெற்றி on May 14, 2010 at 6:28 PM said...

இந்த மேட்டரை இன்றைய செய்தித்தாள்கள் கவர் செய்திருந்தால் கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்..

அன்புடன் அருணா on May 14, 2010 at 6:37 PM said...

தேவையான நேரத்தில் வந்த அவசியமான மீள்ஸ்!
பூங்கொத்து நர்சிமுக்கு பதிவுக்காக.
தேவையான நேரத்தில் பகிர்ந்தததற்காக உங்களுக்கு ஒன்று!

டம்பி மேவீ on May 14, 2010 at 7:18 PM said...

:)

தேவையான பதிவு தான்

Kafil on May 14, 2010 at 7:28 PM said...

sir neenga tenthlaye arriar veichu paasaneengalla...

Ravi on May 14, 2010 at 9:34 PM said...

very good post. Absolutely needed in this time. When every one congratulates the toppers, here is one consoling who were not so fortunate. kudos to you!

மோனி on May 15, 2010 at 10:49 AM said...

:-) ரைட்டு ...

அஹமது இர்ஷாத் on May 15, 2010 at 12:11 PM said...

//விஜயின் விடா முயற்சியும் உழைப்பும் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்//

ATM ,வேட்டைக்காரன், சுறா..... NEXT...??

நல்ல விடாமுயற்சி...

கார்க்கி on May 15, 2010 at 2:23 PM said...

ahmed,

ethavthu sollida poren.. poidunga

அஹமது இர்ஷாத் on May 15, 2010 at 3:21 PM said...

//ethavthu sollida poren.. poidunga///


Ennaga Solluveenga...?!

இரசிகை on May 17, 2010 at 1:05 PM said...

remba nallaayirukku neenga seithathu..:)

[pareetchchaiyila bit adippaanga.pareetchchai patri yezhuthinathaiyumaa bit adippaanga...:)]

 

all rights reserved to www.karkibava.com