May 31, 2010

இனி யாரும் என்னை அடக்க முடியாது


   பிரச்சினைக்குரிய பதிவெழுதுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஓரிருமுறை அனுபவப்பட்டிருக்கிறேன். முதலில் ஒரு முறை எழுதியபோது ஆதி வந்து பின்னூட்டத்தில் எச்சரித்தார். கூடவே இன்னும் சிலரும். அப்போதெல்லாம் அமைதியாகத்தான் போனேன். இனிமேல் முடியாது. தயவு செய்து என்னை அடக்க வேண்டாம் ஆதி. ஒவ்வொரு முறை நான் சீறும்போதும் ”வேணாம் கார்க்கி இந்த வேகம். நல்லதல்ல” என்பதே அவர் வேலை. நேற்று அவரே பார்த்தார் இனியும் சொல்வீங்களா என்றபோது அமைதியாகத்தான் இருந்தார். என்ன விஷயம் என்று எழுதுவதை விட இந்த நேரத்தில் இந்தப் பதிவை சில மாற்றங்களுடன் மீள்பதிவு செய்வது பொருத்தமென நினைக்கிறேன். ஒண்ணு சொல்லிக்கிறேன். சரி கடைசியா சொல்லிக்கிறேன். ஓவர் டூ பதிவு
______________
அதிவேகத்தில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். 9.30க்கு எல்லாம் எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டுமென்பதில் குறியாய் இருப்பேன் நான். அன்று பப்லுவிற்கு விடுமுறை. சேவாக்கின் அட்டகாச பவுண்டரியை பார்க்கவிடாமல் சாராவையோ டோராவையோ வைத்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தான். மணி 9.10. இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் 9.30க்கு செல்ல முடியாது. இருந்தாலும் சேவாக்கை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனிடம் சண்டை போட்டு இரண்டு பவுண்டரிகள் பார்த்தேன். லேட்டா ஆயிடுச்சா என்று பரிகசித்தான் பப்லு. 9.30க்கு ஆஃபீஸ் போயிட்டு ஃபோன்(லேண்ட்லைனில் இருந்து)  பண்றேன் பாருடா என்று கிளம்பினேன். என்ன லேட்டானாலும் காதில் இயர்பிளகை மாட்டாமல் கிளம்பமாட்டேன். ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து அவனுக்கு பை சொல்லிவிட்டு ஐபோடை ஆன் செய்து ரிப்பீட் பட்டனைத் தட்டினேன்.
ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

ரட்சகன் படத்தில் நாகர்ஜுனனுக்கு ஆனது போல் நரம்புகள் புடைக்கிறதா என்று பார்த்தேன். ம்ஹூம். ஆக்ஸீலேட்டரை திருகி கிளட்ச்சை விட்ட போது முன்சக்கரம் குதிரை போல கனைத்துக் கொண்டே மேலேழுந்தது.
சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்

பப்லு. மனதுக்குள் கத்திக் கொண்டே விர்ர்ர்ர்ர்ர்ரென கிளம்பினேன். பிக்கப் மட்டுமே பஜாஜ் வண்டியில் எதிர்பார்க்கலாம். வ்ரூஊஊஊஊஉமென்று மெதுவாக பறக்கத் தொடங்கினேன்
கோடீஸ்வரா அனுபவிப்பாய்
கோடீஸ்வரா நீ அனுபவிப்பாய்

பப்லுவை பார்த்து பாடினால், கேடீஸ்வரா என்றுதானே வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பந்தயம் என்னவென்று மீண்டும் யோசித்தேன். ஒரு வாரம் என்னை வாடா போடா சொல்ல மாட்டான். நினைத்துப் பார்க்கவே எவ்ளோ நல்லா இருக்கு? பஜாஜ் XCDல் நான்கு கியர் மட்டும்தான் போலும். அதற்கு மேல் அழுத்தினாலும் விழவில்லை.
ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

குறுக்கு சந்துகளை கடந்து மெயின்ரோட்டை அடைந்த போது கிறுக்கு பசங்க வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த சந்துக்குள் பைக்கை செலுத்தினேன்.
தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்

எதிர்பாராமல் அங்கே ஒரு கட்டை கட்டியிருந்தது. காலால் தட்டியவுடன் பிரச்சினையில்லாமல் கிழே விழுந்து வழிவிட்டது. கட்டையை சட்டை செய்யாமல் முன்னேறி சென்றேன். கை வந்த கலைதானே? ஏன் காலால் தட்டினோம் என்று யோசிப்பதற்குள் அடுத்த வரியை பாடிவிட்டார் ஷங்கர் மகாதேவன்.
பணத் திமிரினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
துணிந்தவன் யாரு இவன்தான்

மீண்டும் மெயின் ரோட்டில் ஏறியபோது டிராஃபிக் மாமா, ச்சே போலிஸ் வழி மறித்தார். ஒன்வே என்றார். நான் என் வே சார் என்றேன். காலையிலே கரன்சியை எதிர்பார்க்கிறார் என்று தெரிந்ததும், ஃபைன் போடுங்க சார்.கட்டிட்டு போறேன் என்று வண்டியை குறுக்கே நிறுத்தேனேன். என்ன நினைத்தாரோ போங்க சார். இனிமேல் வராதிங்க என்றார்.
இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில் தூங்காது விழி.

3 நிமிடங்கள் வீணாகிவிட்ட துயரத்தில் இன்னும் முறுக்கினேன். வண்டியின் அலறல் சத்தத்தில் தானாக விலகி வழிவிட்டனர் சென்னை வாசிகள். அது ஜெயிக்க வேண்டுமென்று என் ரத்த செல்கள் போட்ட சத்தம் என்பது பிற்பாடுதான் எனக்கே தெரிந்தது
தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது

முறுக்கினேன். வண்டியின் வேகம் 70ஐ தாண்டியது. அவ்வளவுதான். பஜாஜ் தன் வேலையைக் காட்ட, பிரேக் நிற்காமல் வண்டி நல்லதாய் ஒரு குப்பை லாரியின் மீது மோதியது. ஏண்டா கார்க்கி உனக்கு இந்த வேலை என்றாலும் தவறு என் மேலல்ல, வீணாப்போன பைக் மீதுதான் என்பது நன்றாக தெரிந்தது. என்ன செய்ய? அந்த குப்பை வண்டி வேற  மரண வாசனை வீசும் குப்பை வண்டி. தெரியாம மோதினாலும் வாசனை வரத்தானே செய்யும்?
இனி நடக்க வாய்ப்பில்லை. ஆமாம். தோழியின் விருப்பப்படி புது பைக் வாங்கிவிட்டேன். Yamaha F16. குப்பை லாரிகளை இடிக்கத் தேவையில்லை. இந்த வண்டியில் பின்னால் உட்கார போதுமான இடமில்லை என்றார்கள் சிலர். இருந்தாலும் அதுதான் வேண்டும் என்று தோழி கேட்டதை போன பதிவில் படித்தீர்கள்தானே? அப்போதே சொன்னேன் “கார்க்கி பெண்களுக்கு போதுமான மரியாதை கொடுக்காதவன் என்று உலகம் சொல்லுமே” என்று. கூலாக சொன்னாள் தோழி “உன் உலகம் நான் தானே? நானே சொல்லுவேனா செல்லம்? மத்தவங்கள பத்தி உனக்கெதுக்கு கவல?”. அதுவும் சரிதானே?
நேற்று ஹாயாக இருவரும் ஈசிஆரில் ஒரு டிரைவ் போனோம். நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். பைக்கும் கேமராவுமாக தனியே கோவளம்  வரை சென்று வந்தேன். வாழ்வின் சந்தோஷமான வெகு சில தருணங்கள் கடந்த இரு நாட்களில் நடந்தது. மனம் நிறைந்த சந்தோஷத்துடன் இருக்கிறேன். இதோ என் புது பைக். குப்பை லாரிகள் இனி ஒதுங்கிவிடுதல் நலம். ஏனெனில் இனி யாரும் என்னை அடக்க முடியாது.ஹிஹிஹி..
DSC00337

May 28, 2010

பைக்க மாத்துடா கார்க்கி

26 கருத்துக்குத்து

 

  எப்படி சகா ஒருத்தவங்கள இந்தளவுக்கு லவ் பண்ண முடியும் என்று வியந்தார் சகா ஒருவர். தோழி அப்டேட்ஸ் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று அவரிடம் சொன்னதை போட்டு தந்துவிட்டார் தோழியிடம். “பின்ன. உனக்கும் இதுல பெரும்பங்கு இல்லையா செல்லம்” என்று சமாதானப்படுத்தினேன் தோழியை.

__________________________________________________________________________________

திடீரென கண்கள் வீங்கிவிட்டன தோழிக்கு. . என் கண்ணுக்குள்ள வராதன்னு சொன்னா கேட்டியா என்கிறாள் அவள். எப்போது அவள் மனதுக்குள் நுழையலாம் என்று காத்திருக்கிறேன் நான்

__________________________________________________________________________________

பாதி தின்ன ஐஸ் கீரிமை தா என்றேன் தோழியிடம். கொடுத்தவள் “ஐஸ் க்ரீம் நல்லா இருக்கா” என்கிறாள். “லூசு.. நீ சாப்பிட்டபின் எப்படி ஐஸாக இருக்கும்? ஹாட் க்ரீம் நல்லாத்தான் இருக்கு” என்றேன்

__________________________________________________________________________________

எங்க ஏரியா  பதிவர் ஒருவரின் பக்கத்துவீட்டுக்காரர் தன் மனைவியிடம் கேட்டாராம் “கார் கீயை நீதானே வச்சிருக்க” என்று . கூகிள் பஸ்ஸில் போட்டு அவர் மானத்தை வாங்கியதை தெரியாமல் தோழியிடம் காட்டிவிட்டேன். உடனே பேர் மாத்துடா என்றவளிடம் சொன்னேன் “இப்பவாது அது காரோட கீ என்று சமாளிக்கலாம். பேர் மாத்திட்டா என்ன செய்ய” என்றேன். வழக்கம் போல் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த லைலா சர்வ நிச்சயம்

____________________________________________________________________________________

அடுத்த புயலுக்காவது தன் பெயரை வைக்க சொன்னாள் தோழி, அடிச்சு ஓயும் புயலுக்கு உன் பெயரை வைக்க முடியாது, ஓயாமல் அடிக்கும் புயலுக்கு தான் உன் பெயரை வைக்கலாம் என்றேன்! – குசும்பன் சொன்னது

__________________________________________________________________________________

சன் டிவியின் ட்ரெயிலரைப் போல தோழி அப்டேட்ஸ் பலரையும் எரிச்சல்படவைக்கிறதாம். ஆக, தோழி அப்டேட்ஸ் சூப்பர் ஹிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

____________________________________________________________________________________

இந்த பைக்கை தயவு செய்து மாத்தேண்டா என்று நச்சரித்துக் கொண்டேயிருப்பாள் தோழி. ”உனக்கு என்ன பிரச்சினை. நீ உட்கார எவ்ளோ இடம் இருக்கு பாரு” என்று ரிப்பீட்டிக் கொண்டேயிருந்தேன் நான். சில்லிய மழைத்தூறலில் நனைந்துக் கொண்டே கடற்கரையோரம் சென்று கொண்டிருந்தபோது நெருங்கியமர்ந்தவள் சொன்னாள் “அதனால்தாண்டா மாத்த சொல்றேன்”.

yamaha_fz16_color_1

May 27, 2010

போடாங்ங்ங்ங்ங்

31 கருத்துக்குத்து

 

xxx: சகா எபப்டி இருக்கிங்க?

me : மிக்க நலம். தாங்கள்?

xxx : என்னப்பா? மொக்கை தர்பார் எழுதிட்டு இருக்கியா? தூய தமிழ்ல விளாசுற.. ஆனா சகா. மொக்கை தர்பார் எழுதறத நிறுத்துங்க. அதெல்லாம் கலோக்கியலா ஏழு சொன்னாதான் நல்லா இருக்கு

me : ரைட்டு சகா.அதை நான் எபப்வோ ஸ்டாப் பண்ணிட்டேன். நன்றி

xxx : அட.இதுக்கெல்லாம் எதுக்கு சகா தேங்க்ஸ். நர்சிம் அளவுக்கு உன்னால கவிதையெல்லாம் எழுத முடியலனாலும் எப்பவாது கவிதைன்னு எழுதி உயிர வாங்குவியே. அது கூட ஸ்டாப் பண்ணிடலாம். என்னைக் கேட்டா சிறுகதை கூட வேணாம்

me : சிறுகதையுமா பாஸ்? அது மாசத்துக்கு ஒண்ணுதான் எழுதறேன். வேணாமா?

xxx : என்னவோ உங்கிட்ட சொல்லனுன்னு தோணுச்சுப்பா. நீயெல்லாம் நல்லா எழுதறவன் அதனால் சொன்னேன்

me : ம்ம்ம்

xxx :   தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்றேன். எதுக்கு சினிமா விமர்சனம்? அதுவும் பிரச்சினை வர்ற மாதிரி. There are many things under they sky. y cinema? விட்றுப்பா. இசை விமர்சனம் ஓக்கே. ஆனா அதையும் ஸ்டாப் பண்றது நல்லது

me : ம்ம்

xxx : ஏன் சொல்றேன்னா, சாளரத்த படிச்சா ஜாலியா இருக்கும்ன்னு நம்பறாங்க. எதுக்கு வீண் சண்டை? விஜய் பத்தி எழுதறதையும் நிறுத்திடு.

me : அது வந்து சகா.

xxx : உன் இஷ்டம்ப்பா. நீ எல்லோருக்கும் பொதுவானவன். அதனால் சொன்னேன்..

me : ம்ம்

xxx : புதுசா ஃபோட்டோ எல்லாம் போடுற. கலக்கல்

me : நன்றி சகா

xxx : ஆனா அதுக்கு தனியா ஒரு பிளாக வச்சிக்கோ. அதே மாதிரி தோழி அப்டேட்ஸ் தான் ட்விட்டர்ல போடறியே. மறுபடியும் எதுக்கு பிளாகுல? ஏன் சொல்றேன்னா அப்பதான் உனக்கு ட்விட்டர்லயும் ஃபாலோயர்ஸ் கூடுவாங்க. அததுக்கு ஒரு ஸ்பெஷல் வச்சிக்கோ.. ஆல் ஏரியாலும் நீ கில்லிப்பா

me : ஆமா சகா. நல்ல ஐடியா

xxx : நீ தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்றேன். கார்க்கி எதுக்கு மெசெஜ் சொல்லனும்? குசும்பனே கிண்டலடிச்சார். அதனால சிவா, ரூம் மேட் மாதிரி மெசெஜ் சொல்ற பதிவ தவிர்த்தா நல்லது. அப்புறம் நீ ஏன் வீட்டுல இருக்கிறவங்கள பத்தி எழுதற? பப்லுவுக்கு கண்ணு பட்டுடும். இன்னொரு தடவ அந்த பேர பிளாகுல பார்த்தேன். அவ்ளோதான்

me : ரைட்டு சகா. உங்க அக்கறைக்கு நன். சரி விடுங்க

xxx : உன் பிசினஸ் எல்லாம் எழுதறியே. அது ஓக்கே.

me : அப்ப அத பத்தி மட்டும் எழுதவா?

xxx : எல்லா விஷயத்தையும் எழுதிட்டா உனக்குன்னு என்ன இருக்கு சகா? அதை எழுதாம இருந்தா நல்லதுன்னு தோணுது.

me : புட்டிகதைகள், காக்டெயில் மட்டும் தான் இருக்கு

xxx : இப்பலாம் நீ காக்டெயில்னு தலைப்பு வைக்காம எழுதற போலிருக்கு. ஆனா ஒன்னு சொல்றேன் சகா. அந்த மாதிரி தொகுப்பு பதிவு மலிவாயிடுச்சு. மொக்கையை குறை. அந்த மாதிரி வேணாம். வலையுலக மேட்டரும் பொதுவான ஆட்களுக்கு புரியாது. சோ ஸ்டாப் தட் நான்சென்ஸ் டூ

me : சரி சகா.  வாரம் 4 புட்டிக்கதை போட்டு ஜமாய்ச்சிடுவோம்

xxx : அய்யோ. அப்படி டைல்யூட் பண்ணிடாத சகா. மாசம் ஒண்ணோ ரெண்டோ போடு

me : ம்ம். அப்படி சொல்றீங்களா?

xxx : ஏதோ நீ நல்லா வருவன்னு நம்பிக்கை இருக்கிறதால் நேரம் ஒதுக்கி சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். மொக்கைதான் உன் பலம். ஆனா கொஞ்ச நாளைக்கு மொக்கையே எழுதாம இரு. அப்புறம் பாரு உன் எழுத்த. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா?

me : ச்சே. அப்படியில்ல சகா.

xxx : சரி அதெல்லாம் விடு. நாளைக்கு என்னப்பா போஸ்ட்?

me :  போடாங்ங்ங்ங்ங்ங்ங்க…

May 23, 2010

டெவில் ரிட்டர்ன்ஸ்

22 கருத்துக்குத்து

 

    கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பினார் பப்லு. பப்லு யாரென தெரியாதவர்களுக்கு.. அக்கா பையன். அக்கா எப்படி பையனா இருக்க முடியும் என என் மொக்கையை எனக்கே ரிப்பீட் அடிக்காமல் கேளுங்க. மொக்கையில் இருந்து விஜய் வரை எல்லாமே எங்களுக்கு அப்படியொரு பொருத்தம். அவனைப் பற்றி தெரிய இதைப் படியுங்கள்.

DOY சோப் போட்டுதான் குளிப்பான் பப்லு. ஒவ்வொரு முறையும் விதவிதமான பொம்மைகள் வடிவத்தில் வாங்குவான். இந்த முறை சிங்கம். கவரைப் பிரித்தவன் என்னிடம் காட்டி சொன்னான், ”தூள் சோப்புடா. இத போட்டு குளிச்சா ஃப்ரெஷ்ஷா இருக்கும் தெரியுமா?”

”சிங்கம் கடிச்சுடாதாடா” என்றபடி சோப்பை வாங்கிய நான் கைத்தவறி கீழேப் போட்டுவிட்டேன்.

கோவத்துடன் முறைத்த பப்லு சொன்னார் “ தூள் சோப்புன்னுதான் சொன்னேன். நீ அத உடைச்சு சோப்பு தூள் ஆக்கிடுவியே”

இன்னொரு உதாரணம்..

யோகாவெல்லாம் செய்கிறான் பப்லு. வீட்டுக்கே வந்து சொல்லித் தருகிறார் மாஸ்டர் ஒருவர். ஆர்வத்தில் இவன் எல்லாத்தையும் கொஞ்சம் அதிகமாகவே செய்கிறான் போல. பத்மாசனத்தில் அமர்ந்தவனை முன்னே வர சொல்லி இருக்கிறார். வேகமாக சாய்ந்தவன் தொபுக்கடீர் என்று குடை சாய்ந்த வண்டியை போல் கவிழ்ந்து விட்டானாம். ரப்பர் போல வளையறீயேப்பா என்றாராம் மாஸ்டர். மேட்டர் அதுவல்ல. மறுநாள் ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தவன் தப்பாக எழுதிவிட்டு கையால் அழிக்க முயற்சி செய்திருக்கிறான். ஏண்டா என்றால், இவன் தான் ரப்பர் ஆச்சே. அதனால்தானாம்

இதெல்லாம் பழசு.. இந்த விடுமுறையில் நடந்ததைப் பார்ப்போம்.

பீச்சுக்கு சென்றால் நானும் பப்லுவும் 50ரூபாய்க்காவது பலூன் ஷூட் செய்வோம். ஹார்ஸ் ரைடிங், ஷூட்டிங்.. இதெல்லாம் ஐ.பி.எஸ் ஆகவிருக்கும் பப்லுவுக்கு டிரெயினிங்.ஹிஹிஹி. விஷயம் என்னவென்றால் நேற்று ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், ”மம்மி இவன் ஒரு கடைல 50 ரூபாய் சுட்டுட்டான்” என்றான் பப்லு. அக்காவும் என்னடா என்பது போல் முறைக்க, சிரித்துக் கொண்டே சொன்னான் “பலூன் சுட்டான் மம்மி”

இதைக் கேட்ட என் மம்மி ஒரு பழையக் கதை சொன்னார்கள். அப்போது நான் அஞ்சாவது படிச்சிக்கிட்டு இருந்தேனாம்.(தூள் படம் பார்த்தவர்கள் அமைதியாக இருக்கவும்). அப்பாவிடம் வந்து 50 கி.மீ ஸ்பீடில் ஓடுன பஸ்ஸ சைக்கிளில் ஓவர்டேக் செய்ததாக சொல்லியிருக்கேன். அவரும் வேகமாக போகக் கூடாது என்று சொல்ல, பதிலுக்கு நான் சொன்னது” ஆனா நான் ஓவர்டேக் செஞ்சப்ப அது நின்னுக்கிட்டுதான் இருந்தது”

பப்லு என்னைப் பார்த்து அப்ப நீயும் என் டீம்தாண்டா என்றான். ரெண்டு மம்மியும் ஒன்றாக சொன்னார்கள். ம்க்கும்

_______________________________________________________________________

இது பண்ருட்டியில் நடந்தது.

”சக்கர சீக்கிரம் வைடா. ஸ்ரீ சாப்பிட உட்கார்ந்திட்டான் பாரு” என்று சொன்னாராம் பப்லு பாட்டி. சக்கரபாணியும் பொறுப்பாக இட்லி வைத்திருக்கிறான். “உன்னை சக்கரதானே வைக்க சொன்னாங்க. இட்லி வைக்கிற” என்றானாம் பப்லு.

இது போன்ற தொடர் மொக்கைகளை கவனித்த பக்கத்து வீட்டு அக்கா (கவனிக்க: பப்லுவுக்கு அக்கா) “என்னம்மா பேசுறான்.. எங்கடா கத்துக்கிட்ட?” என்று வியந்தாராம். எங்க கார்க்கி மாமாகிட்ட கத்துக்கிட்டேன் என்று பதில் சொன்னானாம் பப்லு.தகவலோடு  ஃபோன் நம்பரும் தந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ?????????

_______________________________________________________________________________

May 21, 2010

ஏழுவுக்கு வந்த டவுட்டு

33 கருத்துக்குத்து

 

சென்னைக்கு வந்திருந்தான் ஏழு. வழக்கம் போல் முதல் நாள் இரவு அடித்த பியர் ஏழுவுக்கு இன்னமும் போதையைத் தந்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் அன்று இண்டெர்வ்யூ இருந்ததால் காலையிலே குளித்து புத்தாடை அணிந்து, டை கட்டி சேல்ஸ் ரெப் போல தயாராகி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான். பாலாஜியின் நண்பன் ஒருவர் தனது கப்பல் போன்ற காரில் வந்து ஏழுவையும் பாலாஜியையும் பிக்கப் செய்துக்கொண்டு கிளம்பினார். வழக்கம் போல பாலாஜி  பின்புற சீட்டில் அமர்ந்து மொபைலில் கடலை விவசாயம் செய்ய ஆரம்பித்தான். இனி ஏழுவும், அந்த நண்பரும்

ஹலோ.நான் ஏழுமலை.

ஹாய் நான் அண்ணாமலை

கூல் பாஸ்.நாம ஒண்ணா சேர்ந்தா வெற்றிதான்

என்ன சொல்றீங்க?

மலை மலை. ஹிட்டுன்னுதானே சொன்னாங்க? இல்லையா?

ஓ அதுவா… அப்புறம்.. வேற என்ன?

அடுத்து மாஞ்சா வேலு பாஸ். சீக்கிரம் ரிலீஸ் ஆகுது.

ஹலோ. அத விடுங்க. நீங்க எப்படி இருக்கிங்க?

ஃபைன். எனக்கு கார் சம்பந்தமா ஒரு டவுட்டுங்க

சொல்லுங்க. நான் ஆட்டோமொபைல்தான்.

ஓ.பெட்ரோலா டீசலா?

நக்கலா? நான் படிச்சது ஆட்டோமொபைல்ன்னு சொன்னேங்க

நல்ல வேளை.. நீங்க வெட்னரி டாக்டர் ஆகல..

ஏன் உங்களுக்கு ஃப்ரீயா வைத்தியம் பார்த்திருப்பேனா?

இல்லங்க. நான் நாய்.நான் மாடுன்னு நீங்களே சொல்லிக்கிட்டு இருப்பிங்கல்ல?

ஷிட். ரொம்ப கடிக்காதிங்க. உங்க டவுட்டு என்ன?

விடுங்க சார். அத புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்ல ரொம்ப பொறுமை வேணும். நீங்க டென்ஷன் ஆவறீங்க..

அதெல்லாம் இல்ல பாஸ். எனக்கு ஆட்டோமொபைல்ல இண்டெரெஸ்ட் அதிகம். கேளுங்க

பெட்ரோல்ல ஓடுற காரு, கேஸல் ஓடுற காருன்னு சொல்றாங்களே..

ஆமா..

ஆனா எல்லா காரும் ரோடுலதானே ஓடுது?

இதெல்லாம் எல்.கே.ஜி காமெடி சார். வேற சொல்லுங்க

ஹிஹிஹி. மறுபடியும் உங்க பொறுமைய சோதிச்சேன். கூலாதான் இருக்கிங்க.

ஏசி ஓடுது சார்.

அதான் சார் அடுத்த டவுட்டு.

என்ன?

காருல வர்ற கரண்ட் எல்லாமே டிசி தானே?

ஆமா.

அப்புறம் எப்படி ஏசி ஓடுது?

ஆவ்வ்வ்வ்வ்..உருப்படியா ஒரு டவுட்டும் இல்லையாங்க.

இருக்குங்க. இப்ப வர்றேன் விஷயத்துக்கு. வண்டி வாங்கி இஞ்சின எவ்ளோ வருஷம் கழிச்சு மாத்துவீங்க?

அதெல்லாம் மாத்த தேவையில்லை சார்.

டயர்?

ரெண்டு வருஷத்துல

சீட் கவர்?

அது நம்ம இஷ்டம் சார். நான் பொதுவா ஒரு வருஷத்துல மாத்துவேன்.

அப்புறம் ஏன் சார் கியர மட்டும் அடிக்கடி மாத்தறீங்க?

அய்யோ.. 1960 கடியிலே இருக்கிங்களே..

சார் நான் இறங்குற இடம் வந்துடுச்சு. உருப்படியா என் டவுட்ட கேட்டுட்டு போறேன்.

ம்ம்

Which is the longest car in india?

ஹாஹா.அதுலதான் இப்ப நீங்க இருக்கீங்க..

நல்லதா போச்சு சார். என் டவுட்டு என்னன்னா, காரை நீங்க வச்சிருக்கிங்க. கார வச்சிருந்த சினிமா கவர்ச்சி நடிகை சொப்பனசுந்தரிய இப்ப யார் வச்சிருக்கா???

!@#$%^&*&^%$#@

May 20, 2010

சிங்கம்..சிங்கம்.. He is துரைசிங்கம்

23 கருத்துக்குத்து

 

  சிங்கம். சூர்யாவின் 25வது படம். சன் டிவி டிரயிலரில் ”ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா” என்று அடிக்கும்போது மடாரென்று நம் தலையில் அடிப்பது போலவே இருந்தாலும் மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷம். இதுவரை விஜய் மட்டுமே இந்த எஸ்.எம்.எஸ்வாதிகளிடம் மாட்டிக் கொண்டிருந்தார். இதோ வறேண்டா நண்பா என சீறிப் பாய்கிறது இந்த நட்பு சிங்கம். ரிஸ்க் எடுப்பதெல்லாம் சூர்யாவுக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்பதை நாமறிவோம். அதுக்குன்னு அனுஷ்காவையெல்லாமா ஜோடியாக்குவது? எத்தனை க்ளோஸ் ஷாட்தான் வைக்க முடியும்? தேடிப் பார்த்தேன். ஒரு ஸ்டில் கூட இருவரும் ஒன்றாக இருக்கும்படி முழு ஃபோட்டோ கிடைக்கவில்லை. சிங்கமும் ஒட்டகசிவிங்கியும் என்ன செய்யப் போகிறது என்று பார்க்கும் முன்னர், பாடல்கள் குறித்துப் பார்க்கலாம்.

1) Stole my heart (ஷான், மேகா) ஹரி

இதில் இரண்டு வெர்ஷன்கள் இருக்கிறது. ஹரியே எழுதிய பாடலென்று ஒன்றும், விவேகா எழுதியதாக ஒன்றும் இருக்கிறது. சின்ன வெர்ஷன் தான் எனது ஃபேவரிட். சின்னப் பாடல்தான் என்றாலும் கொள்ளை அழகு. அதுவும் பாடல் முடியும்போது புல்லாங்குழலும், கிடாரும் கலந்துக் கட்டி அடிப்பது சுகம். ராஜா பாடல்களில் வயலினைப் போல தற்கால இசையமைப்பாளர்களுக்கு கிட்டார். கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களிலும் உபயோகிக்கிறார்கள். ஹாரீஸ் distortion வகையில் அதிகம் கிடாரைப் பயன்படுத்துவார். தேவி எப்போதும் RAWவாக பயன்படுத்துவார். இதில் குழலும் கிட்டாரும் கலக்கியிருக்கும் விதத்திற்காக ஸ்பெஷல் ஷொட்டு. ஷானுக்கும் நல்ல பாடல் இது.

2) காதல் வந்தாலே (பாபா சேகல்,பிரியதரிஷினி) விவேகா

பைலா டைப் பாடல். வாடா மாப்ளேவின் ஒன்னு விட்ட மாமன் முறை எனலாம். ஃபெயிலே ஆகாத பீட். எஃப்.எம்மில் டெடிகேஷன்களுக்காக சமர்ப்பித்திருக்கிறார் இசையமைப்பாளர். தேவியின் ஆர்கெஸ்ட்ரைசேஷன் 440 வோல்ட்ஸ் த்ரீ ஃபேஸ் மின்சாரம். கேக்கின் மீதான செர்ரியாக பாபா சேகலின் எனர்ஜி துள்ளும் குரல். ”சட்டினியை விட்டுப்புட்டு இட்லியை தின்னுட்டேன்” என்று இவர் சொல்லும் அழகில் இன்னொரு உதித் நாரயணனாக எனக்கு தெரிகிறார். இந்தப் பாட்டுக்காகவாது யாரேனும் பார்ட்டி வைங்கப்பா.

இடுப்பு கொண்டை ஊசி..  சிரிப்பு  விண்டோ ஏசிதான்
முதுகு தேக்கு மரம்தான்.முழுசா பார்த்தா ஜுரம்தான்

மீசை திருத்த சின்ன கத்திரிக்கோலை வச்சேன்.
முத்த நினைப்பில் நானும் மூக்கை வெட்டிக்கிட்டேன்”

உனக்கு முன்னால நிலாவே டல்லா இருக்கு”,

கந்தசாமியின் மிச்சமாக தெரிந்தாலும் விவேகாவும் தன் பங்குக்கு துவைச்சு எடுக்கிறார்.  ஃபாஸ்ட்  பீட்டாக இல்லாமல் ஹெவி பீட்டில் ஒரு பெர்ஃபெக்ட் குத்துப் பாட்டு. அனுஷ்காவும் சூர்யாவுமா?? ம்ம்ம். Easily, PICK OF THE ALBUM.

3) என் இதயம் (சுசித்ரா) நா.முத்துக்குமார்

அனுஷ்காவுக்கு காதல் வந்துடுச்சாம். அப்படி ஒரு மெலடி. தேவியின் இசை என்று சொல்லிவிட்டு இந்த மெட்டை ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கு என்று சொன்னால் திட்ட மாட்டிங்க? பீட்டும் ஓகேதான். கிட்டாரும் ஓக்கேதான். சுசியின் குரல்தான் சற்று நெருடுகிறது. மஹதின்னு ஒருத்தங்க இருந்தாங்களே!!! அவங்க பாடறதில்லையா? நா.முத்துக்குமாருக்கு பேமண்ட் தந்தாங்களான்னு தெரியல. மென்மையாகவும் இல்லாமல், பீட்டாகவும் இல்லாமல் பாட்டு முடிகிறது. தம்மடிப்பிங்களா?

4) சிங்கம் சிங்கம் (தேவிஸ்ரீபிரசாத், மேகா) நா.முத்துக்குமார்

ஒரே வகுப்பு. ஒரே புத்தகம். ஒரே ஆசிரியர். ஆனா ஒருவர் 100 எடுப்பார்.இன்னொருவர் முட்டைக் கூட வாங்குவார். அப்படித்தான் இசையும். அதே கிட்டார்.. அதே கீ போர்டு. கற்க கற்க என வேட்டையாடு விளையாடுவில் ஹாரீஸ் அட்டகாசம் பண்ணியிருப்பார். அப்படி ஒரு பாட்டு சார் என்றுதான் ஹரியும் சொல்லியிருப்பார். மேலோட்டாமாக பார்த்தால் அப்படி தெரியலாம். ஆனால் கிளாஸ் அதுவென தெளிவாக புரிகிறது. எத்தனை ஹிட்ஸ் தந்தாலும் தேவிஸ்ரீ, ஹாரீஸ், யுவன் இடத்துக்கு வர முடியாது. இன்னொரு டமால் டுமீல் பாட்டு. சூர்யாவை இடுப்பளவுக்கு துப்பாக்கியுடன் 150 ஷாட் எடுத்து வைத்திருப்பார்கள் . நா.முத்துக்குமாருக்கு கையிலே பணம் தந்து செட்டில் பண்ணியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

ரவுடிகளின் ராஜ்ஜியங்கள் ரணகளமாய் இருக்கும்
காவல்துறை தேர்ந்தெடுத்து சிங்கத்தினைதான் அனுப்பும்

5) நானே இந்திரன் (பென்னி, மாணிக்க விநாயகம்), விவேகா

ஆடுறா ராமா பாட்டே போக்கிரி பொங்கலின் காப்பி. அதை இன்னொரு காப்பி போட்டிருக்கிறார் தேவி. ஆரம்ப அடியே ஆதாராமாயிருக்கிறது. சரணத்தின் முதல் இருவரிகளும் மென்மையாய் ஒலிக்கும்போது கன்ஃபார்ம் ஆகிவிடுகிறது. அதிரடி ஓபனிங் பாடல்கள் புடிக்குமென்றால் ரசிக்கலாம். பென்னிக்கு இதெல்லாம் வேணாங்க. சூர்யாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரிவதில்லை. இன்னொரு மாஸ் ஹீரோவாக மாறாமால் தூங்க மாட்டேன் என்றிருக்கிறார் போல. விவேகா, சூர்யாவுக்கு கபிலன் போல.

குலதெய்வம் ஆறுமுகம். எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம் 

அதான் சார். இப்படித்தான் அவரும் ஹெல்த் மினிஸ்டர் ஆகனும்னு சொல்லிட்டே இருந்தார். இப்ப இந்த நிலமையில இருக்காரு.  நீங்களும் இன்னைக்கே அட்மிட் ஆயிடுங்க. எல்லோரும் டாக்டர் ஆயிடலாம்.

_____________________________________

எல்லாப் பாடல்களும் கேட்டபின் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது.இந்த ஸ்டில் பார்த்துட்டு அந்த விஷயத்த படிங்க.

singam310809_4

ஆறுச்சாமியை சாமி என்றது போல, இதில் சூர்யா துரைசிங்கம். அதான் சிங்கம். அவ்ளோதான். காதல் வந்தாலே, Stole my heart பாடல்களை மட்டும் டவுன்லோடு செஞ்சுக்கோங்க.

May 19, 2010

இப்படியும் செய்யலாம் ரத்ததானம்

27 கருத்துக்குத்து

 

   அட்சய திருதியை அன்று காலையில் வீட்டுக்கு வந்த‌ தோழி “உடனே ஒரு முத்தம் தாடா “ என்றாள். என்னவென்று கேட்டதற்கு ”அன்று என்ன வாங்கினாலும் பல மடங்கு பெருகும்” என்றாள். ”வழக்கமாய் எல்லோரும் அன்று  தங்கம்தானே வாங்குவார்கள். இங்கு தங்கமே வாங்குகிறதே “ என்றேன். பற்கள் தெரிய சிரித்து வைரக்கல்லையும் காட்டினாள் தோழி

___________________________________________________________________________________

ஒல்லியாக இருப்பதை உன்னதமாக கருதும் தோழியிடம் சொன்னேன் உன் பிறந்தநாளில் இரத்ததானம் செய்தேன் என்று. நகத்தைக் கடித்து துப்பியவள் சொன்னாள் “எனக்கே தந்திருக்கலாமே”. அப்போதிலிருந்து சிரித்துக் கொண்டிருக்கும் என்னிடம் எதற்கு சிரிக்கிறாய் என்று இன்னமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள் பச்சிளங்குழந்தை.

___________________________________________________________________________________

”உன் ஜாதகம் வேணும்டா. எனக்கு எட்டில் ராகு இருக்கிறாராம்.இப்ப நேரம் சரியில்லையாம். உனக்கு ஏழில் இருந்தா பொருத்தம் நல்லாயிருக்குமாம்” என்கிறாள் தோழி.  எட்டு,ஏழு என எல்லாக் கட்டங்களிலும் உன் பெயர்தானடி இருக்கிறது என்றேன். கட்டிப்பிடித்தவளிடம் மேலும் சொன்னேன் “இப்போ உன்னை சனி வேற பிடிச்சிக்கிச்சு”

___________________________________________________________________________________

தோழியுடன் இருப்பதையே முழுநேர வேலையாக செய்துக் கொண்டிருக்கும் என்னிடம்  என் மாமா என்னடா செய்ற என்று அதட்டியபோது தைரியமாக "லவ் பண்றேன்" என்றேன்.சன்னமான குரலில் கேட்டார் "எவ்வளவுடா தினக்கூலி?". தோழியிடம் சொல்லி வருத்தப்பட்ட போது என் கன்னங்களிலும் உதடுகளிலும் மாறிமாறி பலமுறை முத்தமிட்டாள். பின் என் கண்களை உற்று நோக்கி சொன்னாள் "அது நாளுக்குநாள் ஏறிக்கொண்டிருக்கிறது என சொல்"

___________________________________________________________________________________

”நீதான் அறிவாளி ஆச்சே. முதலிரவில் என்னவெல்லாம் பண்ணுவாங்க சொல்லு பார்ப்போம்” என்றாள் தோழி. “நான் அறிவாளிதான். ஆனா உனக்கு சொல்லி புரியவைக்க முடியாது” என்றபடி அவளருகில் நகர்ந்தேன். “வேற என்ன செய்றது” என்றபடி அவளும் என்னருகில் வருகிறாள். சீக்கிரம் போயேன் சூரியனே என்று காத்திருக்கத் தொடங்கினேன் நான்

___________________________________________________________________________________

பி.கு: 5 லட்சம் ஹிட்ஸுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

May 18, 2010

கார்த்தி…

38 கருத்துக்குத்து

 

   குசும்பன் கூப்பிட்டு எழுத முடியுமாடான்னு கேட்டுட்டுதான் இந்த தொடருக்கு கூப்பிட்டாரு. அப்படியும் எழுத மாட்டியாடா கார்க்கின்னு பல முறை மனசாட்சி பொங்குவதும், பின்பு அடங்குவதும் நாலஞ்சு நாளா நடந்துக் கொண்டிருக்கிறது. தொடர்பதிவு பார்த்து பயப்பட அது என்ன எக்சாமா? எப்பூடி புடிச்சேன் பார்த்திங்களா நூலை?அதான். தேர்வுபயத்தைப் பற்றிதான் எழுத சொன்னார் குசும்பன்.

பொதுவாக எனக்கு எக்சாம்ன்னா பயமே கிடையாதுங்க. அதெல்லாம் ஸ்கூலுக்கு போறவங்களுக்குத்தானேன்னு என்னால பிராக்கெட்டுல எழுத முடியும். வேணாம்ன்னு பார்க்கிறேன். விஷயம் என்னன்னா, நான் சுமாரா படிக்கிற பையன். அதனால் எக்சாமுக்கு பயம் என்பது அவ்வளவா கிடையாது. ஏழாவது படிக்கிறப்ப கடைசி ரிவிஷன்ல ஒரு பாடத்துல மட்டும் புட்டுக்குச்சு. அதுவரைக்கும் நான் யூரின் கூட ஃபெய்ல் ஆனதா ஹிஸ்டரியே கிடையாது. உடனே மனசுடைஞ்சு போகாம யோசிச்சேன். எப்படிடா கார்க்கி இதை வீட்டுக்குத் தெரியாம மறைக்கப் போறேன்னு. உடனே நம்ம மூளை ஒரு ஐடியா தந்துச்சு. அதன்படி ஏதோ ஒரு நோட்டுலே நாமளே ஒரு டெஸ்ட் எழுதி பக்கத்து பெஞ்சு பையன திருத்த சொல்லி, 15/15 போட்டு, அதுல அப்பா கிட்ட கையெழுத்து வாங்கப்பட்டது. ரேங்க் கார்டுல, கையெழுத்து போடற இடத்துல இங்க் ஊற்றி மொழுவப்பட்டது. வகுப்பாசிரியரிடம் “சார்.அப்பா கையெழுத்துப் போடும் போது இப்படி ஆயிடுச்சு. வேற எங்க சார் வாங்கிட்டு வரட்டும்” என்றேன். அறிவாளி ஆசிரியர் சொன்னார் “முட்டாள். ஒரு வெள்ளைப் பேப்பரில் கையெழுத்துப் போட்டு அதை கட் பண்ணி ஓட்டி எடுத்துட்டு வாடா”. அப்புறம் என்ன ஆயிருக்கும்ன்னு சொல்லணுமா? கடைசி ரிவிஷன் என்பதால் அந்த ரேங்க் கார்டு அவ்ளோதான். இப்படி பல ஐடியாக்கள் தோன்றும் மூளை இருக்கும் வரை தேர்வைக் கண்டு பயமா? நெவர்.

ஆறாவதுல இருந்து என் பக்கத்துல ஒருத்தன் இருப்பான். அவன் பேரு கார்த்தி. எனக்கு நினைவு தெரிஞ்சு நான் எழுதின எல்லா எக்சாமிலும் எனக்கு அடுத்து அவன் தான். என் புண்ணியத்துல அவனும் 10வது வரைக்கும் வந்துட்டான். பத்தாவது பொதுத் தேர்வில் வந்தது வினை. அவ்வளவு எளிதில் பார்த்து எழுதும்படி எங்கள் இருக்கை அமையவில்லை. முதல் தேர்வு தமிழ் என்பதால் சமாளித்த கார்த்தியை, அடுத்தடுத்த தேர்வுகளில் பாஸ் செய்ய வைப்பதாக நான் சொன்ன சத்யத்தை எப்படி காப்பாற்றலாம் என யோசிக்கத் தொடங்கினேன். அவன் ஹாஸ்டலில் தங்கிப் படித்ததால்..மன்னிக்க ஹாஸ்டலில் தங்கி சும்மா இருந்ததால் அவனால் எளிதில் பிட்டும் ரெடி செய்ய முடியாது. எனவே அந்த வேலையும் என்னிடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டது. பக்காவாக இண்டெக்ஸோடு, 2 மார்க் 5 மார்க் கேள்வி என தரம் பிரித்து பிட் அவனுக்கு தயார் செய்து வருவேன். கேள்வித்தாள் கைக்கு வந்ததும் எந்தெந்த பிட் எங்கே இருக்கு என்பது அவனுக்கு சமிக்ஞை மூலம் சொல்லப்படும்.

ஒரு மார்க் தான் எங்களுக்கு வரப்பிரசாதம். கண்ணுதான் A. மூக்குதான் B.உதடுதான் C. கழுத்துதான் D. அவன் கேள்வி நம்பரை சிக்னலால் சொன்னால், விடை இங்கே சிக்னலாக தரப்படும். காலேஜ் வரை இது தொடர்ந்தது. ஒரு வழியாக இதைத் தெரிந்துக் கொண்ட நண்பன் ஒருவன் “நல்ல வேளை  Dயோட போச்சு. அப்படியே J,Kன்னு போயிருந்தா என்னென்ன கூத்தடிச்சிருப்பிங்களோ” என்று சொன்னான். கிட்டத்தட்ட நாங்கள் அட்டெண்ட் செய்த 4 கேம்பெஸ் தேர்வில், மூன்றில் இந்த முறையைப் பின்பற்றி கார்த்தி முதல் ரவுண்டை கடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பள்ளிக்கு வருவோம். 10வது மார்க் வந்தது. கார்த்தி 435.(இங்கே நான் எடுத்த மார்க்கை சொன்னால், என்னடா விளம்பரம் என்ற பின்னூட்டம் வருமென்பதால் சென்சார்டு) கார்த்தியின் அப்பாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அங்கேயே 11வது சேர்த்தார். நான் டிப்ளொமா போகப் போகிறேன் என்றதும் கார்த்திக்கு இதயமே நின்றுவிட்டது. அவனும் கிளப்பினான் சென்னைக்கு வண்டியை. இங்கேயும் இருவரும் ஒரு கிளாஸ். எனக்கு அடுத்து கார்த்தி. முதல் நாள் வகுப்பிற்கு வந்த கார்த்தி ஓடிப்போய் எம்பி சீலிங்கைத் தொட்டுப் பாடினான் “நண்பன் ஒருவன் வந்தபிறகு. விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு”. மீண்டும் கல்லூரிக்கு  போவோம். பயம் வேண்டாம்.அந்தப் படத்துக்கு இல்லைங்க.

டிப்ளொமா தேர்வு ஹால் வேறு மாதிரி. கார்த்திக்கும் எனக்கும் இடையே குறைந்தது 21 எஞ்சினியர்கள் அமர்ந்திருந்தார்கள். வேறு மாதிரிதான் இதை டீல் செய்யணும் என்று புரிந்தது. எங்களை காப்பாற்றியது கால்குலேட்டர்தான். ஆம். தேவையோ இல்லையோ.. எல்லா தேர்வுக்கும் கால்குலேட்டர் எடுத்து செல்வோம். நான் எந்த தேர்வாக இருந்தாலும் 1 மணி நேரத்தில் முடித்துவிடுவது வழக்கம். முடித்தவுடன் கேள்வித்தாளில் 40 மார்க் நிச்சயம் பெறத்தேவையான விடைகளை பென்சிலில் எழுதி அதை மடித்து கால்குலேட்டரில் வைத்துக் கொள்வேன். சூப்பர்வைசர் அந்த பக்கம் போகும்போது எழுந்து சென்று கார்த்தி டேபிளில் என் கால்குலேட்டரை வைத்துவிட்டு, தயராக இருக்கும் அவன் கால்குலேட்டரை எடுத்துக் கொள்வேன். வழியில் சூப்பர்வைசைரிடம் என் பேப்பரைத் தந்துவிட்டு வெளியே சென்றால் கார்த்தியும் பாஸ்.நானும் பாஸ். பெரிய பாஸுடா நீங்க என்று கூட சொல்வார்கள் நண்பர்கள்.

அவனை ஒரு வழியாக டிப்ளோமாவும் முடிக்க வைத்தேன். எல்லாம் முடிந்து நான் சிங்கப்பூருக்கு நேர்முகத்தேர்வில் தேர்வாகி சென்றுவிட்டேன். கார்த்தியால் வரமுடியவில்லை. அங்கே இருந்து ஒரு நாள் ஃபோனில் அழைத்தேன். ஃபுல் மப்பில் இருந்த கார்த்தி சொன்னான் “த்தா.. என் வாழ்க்கையே அழிச்சிட்டியேடா. இத்தனை எக்சாமுல விதவிதமா காப்பியடிக்க சொல்லித்தந்த நீ கொஞ்சம் படிக்கவும் சொல்லித் தந்திருக்கலாமில்ல?”

கார்த்தி இப்போது பாண்டியில் அரிசிக்கடை வைத்திருக்கிறான்.

May 17, 2010

மாறுகிறார் விஜய்

35 கருத்துக்குத்து

 

  தொடர்ந்து படங்கள் சறுக்கியதால், எல்லா முனைகளிலிருந்தும் ஏவுகனைகள் வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என இளைய தளபதி  ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார். வேறு வழியின்றி ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்புவதாக   வலையுலகில் செய்தி கசிந்து விட்டதால் எல்லா பதிவர்களும் தத்தம் கதைகளோடு நாளைய சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள்.

அதிஷா  :  மெர்சில் ஆவாத தலீவா.என்கிட்ட பாரு நிவேதான்னு ஒரு கேரக்டர் கீது.. அதுக்கு நீங்கதான் கரீக்ட்.சரின்னு சொல்லுங்க உயிர்மை மூவிஸ் வழங்கும் இளைய தளபதி இன் &ஆஸ் "பாரு நிவேதா" (பாரீஸில் பிரபலமானவன்) அப்பிடினு நீயூஸ் வுட்டுலாமா?

பாரு பாரு பாரு பாரு நிவேதா என்னை பாரு
கூறு கூறு கூறு கூறு என்னைப் போல யாரு கூறு
ஆறு ஆறு ஆறு ஆறு கடலில் போய் சேரும் ஆறு
யாரு யாரு யாரு யாரு என்னை வெல்ல இங்க யாரு?

அப்படி ஒரு என்ட்ரி சாங்கோட வந்தீங்கண்ணா அடுத்த சி.எம் நீங்கதாண்ணா

அனுஜன்யா: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.  எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.உங்க‌ளை அப்ப‌டியே லவ்டுடே, பூவே உனக்காக காலத்து விஜயாக காட்டும்....

அதிஷா  : என்ன சொல்றப்பா நீ? ஒழுங்கா தமிள்ல சொல்லு.. மராத்தி டிராமக்கு கதை சொல்ற? சச்சினும் இப்பிதான் நென்ச்சோம்.. வோனாம் த‌லீவா.. நீ பாரு நிவேதாதான்..

எஸ்.ஏ.ஸி: (மெதுவாக) ரெண்டு பேரும் வேணாம் விஜி..இவங்க பழய ஆளுங்க..புதுசா யாரவது டிரை பண்ணலாம்.

கேபிள்: என் பேருதான் யூத் சங்கர். நான் எழுதற விமர்சனத்தில் இருந்துதான் பத்திரிக்கைகளே உருவறாங்க. என்கிட்ட ஒரு கதை இருக்கு. ஆனா அதை அடுத்த புத்தகமா போடறேனு குகன் சொல்லியிருக்கார். நீங்க சொன்னா ஒரு கதை எழுதறேன். அப்படியே ஓப்பன் பண்ணா “குறுகிய நாளில் 2.4 கோடி கலெக்‌ஷன் தந்த ரசிகர்களுக்கு நன்றி”ன்னு ஸ்லைடு போட்டுதான் படமே ஆர்மபிக்கிறோம்

விஜய்: என்னை கொத்திடுவார் போலிருக்கே

டக்ளஸ்: தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல, இருங்க பாஸ் டென்ஷன் ஆகாதீங்க. எங்க தல  ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

விஜய் : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து..

புதுசாய் வருபவர்: நீங்க எந்தக் கதைல நடிச்சாலும், யாரு கூட நடிச்சாலும் சொந்தமா முடிவெடுங்க. சங்கீதா மேடத்தோட பேச்ச கேட்ட டர்ருதான். தங்கமணிய ஓரங்கட்டினா வெற்றி நமக்குதான்.

விஜய் : யாருப்பா நீ? தெளிவா பேசுற‌..

புதுசாய் வருபவர்:  என் பேரு சொல்ல‌ மாட்டேன்.ஆதில என்னை தாமிரான்னு சொல்லுவாங்க.இப்ப ஆதின்னே சொல்றாங்க. த‌ங்க‌ம‌ணிக‌ள‌ திருத்த‌ முடியாதுனு ஒரு ப‌ட‌ம் எடுங்க‌.க‌ல்யாண‌ம் ஆன‌ எல்லோரும் ப‌த்து த‌ட‌வ‌ பார்ப்பாங்க‌.கண்டிப்பா ஹிட்டுதான்..

ப்ரியமுடன் வசந்த் : த‌லைவா!!!!!!!!!!!!!!!! நீ எப்ப‌டி ந‌டிச்சாலும் ப‌ட‌ம் ஹிட்டுதான்..இவ‌ங்க‌ள‌ ந‌ம்பாதிங்க‌...

நர்சிம் : இந்தக் கதையெல்லாம் காப்பிங்க. ஒரிஜினல் எல்லாமே கம்பர்தான். அதுல இருந்து ஒரு கதை சொல்றேன். அப்படியே உங்களுக்கு ஆப்ட்டா மேட்ச் ஆகற மாதிரி

விஜய்: இல்ல பாஸ். ரீமேக் கொஞ்ச நாளைக்கு வேணாமே,

நர்சிம்: (மனதுக்குள்) அடப்பாவி. கம்பர்ன்னா ஏதோ கன்னட பட டைரக்டர்ன்னு நினைச்சுட்டானோ?

ரைட்டு தளபதி. சரித்தர படமெடுப்போமா? மாறவர்மன் பத்திரமா என் ஃப்ரிட்ஜுல இருக்காரு.

விஜய்: எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண், அயிரத்தில் ஒருவன் மாதிரி இருக்குமா?

நர்சிம் : இல்ல தளபதி. இது முற்றிலும் புதுமையான களம். சினிமா என்னும் கலையை கற்பதில் நீங்கள் நிரந்தர மாணவன். அதனாலே நிரந்தரமானவன்.

எஸ்.ஏ.சி: (மெதுவாக) இன்னும் படிச்சிட்டேதான் இருக்க. உனக்கு நடிப்பே வராது. அப்படின்னு நக்கலடிக்கிறார் விஜி.

விஜய் : நாறவர்மனும் வேண்டாம். கம்ப கஞ்சியும் வேண்டாம். நெக்ஸ்ட்டு

முரளி : சுப்பனாலே கெட்டா பரவாயில்லை. இவரு அப்பனாலே கெட்டுப் போறாரே!!

பரிசல்: கவலைப்படாதீங்க விஜய். மாஸும், கிளாஸூம் கலந்தவன் நான். என் ரூட்டை கூட இப்பதான் கவிதை பக்கம் திருப்பி இருக்கிறேன். உங்களுக்கும் ஒரு நல்ல திருப்பம் தருகிறேன்.

விஜய்: உங்கள பார்த்தாலே எனக்கு நம்பிக்கை வருது. கதையை சொல்லுங்க

பரிசல் : என்ன இது கெட்டப் பழக்கம்? நீங்க டைரக்டர்கிட்ட கதையெல்லாம் கேட்பிங்களா?

எஸ்.ஏ.சி: விஜி, இவர்தான் வில்லு விமர்சனத்துல, பீமன் கிட்ட கதையை கேட்ட நீங்க பிரபுதேவாகிட்ட கதையை கேட்டு இருக்கலாம்ன்னு எழுதியவரு. இவரு வேணுமா?

உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். .கதை இதுதான்

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

விஜய்: என்னைக் காப்பாத்த யாருமே இல்லையா?

அப்துல்லா: உதவி தேவைப்படறவங்களுக்கு உதவத்தான் நான் இருக்கேன். உங்க படத்துல நான் ஒரு பாட்டு பாடுறேண்ணா.

சினிமா ஒரு சூதாட்டம்டா நண்பா..
அதில் சூன்யாக்காரன் நிறையப் பேரு நண்பா..
ஒழுங்கா நடிச்சா ஓடாது.. ஒதை விட்டு நடிச்சா தோற்காது
நல்ல நல்ல படத்தையெல்லாம் நம்ம சனங்க பார்க்காதுடா..
நூறு நாள் ஓடத் தேவையில்லை
நண்பா மூணு வாரத்துக்கே இங்கே நூறு தொல்லை..

விஜய்: அதெல்லாம் நானே பாடிப்பேன். கொஞ்சம் ஓரமா நகருங்க. என்னையே அண்ணான்னு சொல்றாம்ப்பா இவன்.

குசும்பன் : அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குருவி ஏன் ஓடலனா, பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. கில்லி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க.

" சூப்பரான மொக்க போடுறா சத்தம் போடாம மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா    சொக்கா போடாம மொக்க போடுடா" னு சூரத்தேங்கா மெட்டில் போட்டோம்னா டாஸ்மாக் மாதிரி கலெக்ஷன் பொங்குமில்ல..

___________________________

May 14, 2010

இன்னைக்கு +2 முடிவுகள்

26 கருத்துக்குத்து

 

    நீர் கீழே வீழுவதை அருவி என்றும் ‘நீர்வீழ்ச்சி’ என்றும் சொல்கிறோம். அதே நீர்தான் மேலே இருந்து விழுகிறது, என்றாலும் ‘மழை’ என்றும் அழைக்கிறோம். ஏன் என்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா தம்பிகளே? அது போலத்தான் சில நிகழ்வுகள் அதனதன் அளவில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.வரும். தேர்வும், அதில் தோல்வி என்று சொல்லப்படும் வார்த்தைகளும் அந்த அளவே...

   மெக்காலே கல்வித்திட்டத்தின் மிச்ச எச்சமே இந்த எழவெடுத்த தேர்வுமுறை. வெற்றி பெற்றவர்கள் மட்டுமே கொண்டாடப்படுவதால் தோல்வியின் வலி தோற்றவனுக்குள் புதைந்து போகிறது. போகட்டும். தோல்வி என்று ஒன்றுமே இல்லை.. தள்ளிப்போடப்பட்ட வெற்றி தான் அது.

  தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளும் வெற்றியும் கொண்டாப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வுலகில் அதற்கு முன் அவர் தோற்ற அத்தனை முயற்சிகளையும் மறந்துவிட்டே இருக்கிறது.அல்லது அந்த தோல்விகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பது கூட இல்லை.

  தாமதிக்கப்பட்ட ஒவ்வொரு வெற்றியும் தோல்வியாகத்தான் சித்தரிக்கப்படுகிறது. பரவாயில்லை.

   “இனி வாழ்வே இருண்டுவிட்டது. அவ்வளவுதான்” என்று யாராவது சொன்னால் ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுங்கள். ஆனால் இரும்பு இதயத்தோடு. ஏனெனில் இங்கு தேர்வின் தோல்விக்கும் வாழ்வின் வெற்றிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நீங்கள் தோல்வியை சரியாக எதிர்கொள்ளும் பட்சத்தில்.

   குற்றவுணர்வில் குறுகிப் போய்விடாதீர்கள். வாழ்வில் இஃது ஒரு நிகழ்வு. விழுந்தால் எழத்தான் வேண்டுமேயன்றி அழ அல்ல.

   உலகம் எவ்வளவு பெரியது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவு இருக்கிறது. ஒரு மெடிக்கல்ஷாப் ஓனரின் உலகம் அந்த 20க்கு 20 கடையளவுதான். ஆனால் அங்கு வந்துபோகும் வாடிக்கையாளர்களின் உலகத்தின் அளவு மொத்தமும் அவரின் உலக அளவில் அடங்கும்.

   உங்களைப் பொருத்தவரை இன்று இந்த தோல்வி மட்டுமே கண்முன் இருக்கும் உலகம்.உண்மை அதுவல்ல. அதன் பின் இருக்கும் மிகப் பெரிய வெற்றிகள் தான் உண்மையான உலகம். அதைப் பார்ப்பதற்கான பாஸ்போர்ட்தான்/பயணச்சீட்டுதான் இந்த தோல்வி என்று கூறப்படும் தாமதிக்கப் பட்ட வெற்றி.

   எனக்குத் தெரிஞ்ச ஒருவர்... +2 ல சுமாரான மார்க் வாங்குனதால பி.இ. சேர முடியாம பிஎஸ்சி சேந்தாரு. அத முடிச்சுட்டு ஐஐஎம் இல் போய் எம்பிஏ படிச்சாரு. +2 வுல சுமார் மார்க் வாங்குன அவரு சில வருட இடைவெளியில் தன் முயற்சியால அகமதாபாத் ஐஐஎம்லேயே சீட் வாங்குனாரு.அவரோட என்ட்ரன்ஸ் எழுதுன எத்தினியோ பி.இ. படிச்சவுங்களுக்கு ஐஐஎம் இல் இடம் கிடைக்கல. வாழ்க்கை யாருக்கு எப்ப மாறும்னு சொல்ல முடியாது. ஆக தொடர் முயற்சி மட்டுமே பலன் தரும்.

   இன்னும் நீங்கள் பெரிதும் விரும்பும் திரைத்துறையில் எத்தனை வித பாடங்கள்.. தோல்விகள்.. அதிலிருந்து மீண்ட வெற்றிகள்..

   முன்னனி இதழ் ஒன்று விஜயின் முகத்தைப் பற்றி அப்பட்டமாக கேலிசெய்து எழுதியது. இன்று அதே இதழ் மாதமிருமுறை விஜயின் அட்டைப் படம் தாங்கி வருகிறது.விஜயின் விடா முயற்சியும் உழைப்பும் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்..

   அஜித்.. எத்தனை வித தோல்விகள். முதல் பட முடிவிலேயே முதுகுத் தண்டில் ஆப்பரேஷன்கள். இனி அவ்வளவுதான் என்று அனைவரும் நினைத்திருந்த வேளையில் நிமிர்ந்தெழுந்தவர் அஜித். இன்று முக்கிய நாயகர்களில் அவரும் ஒருவர். இடர்களை இடறியதால்தான் இது சாத்தியமாயிற்று.

  இப்படி இன்னும் இன்னும் எத்தனையோ தோல்விகள் வெற்றிகளாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழிபெயர்க்க வேண்டியவர்கள் நீங்கள் தான்.

   இது முடிவல்ல.. இறுதியும் அல்ல. ஆனால் முடிவெடுக்க வேண்டிய இடம். ஆம்.. இனி எல்லாம் வெற்றி மட்டுமே என்ற உறுதியுடன் மீண்டும் உழைக்க வேண்டிய தருணம்.
ஏதோ ஒரு காரணத்தினால் இப்படியான நிகழ்வு. மிக நன்றாகப் படித்திருந்தும் தொண்டைவரை இருந்த வார்த்தைகளை பேனாவின் முனையில் இறக்கமுடியாமல் போயிருக்கக்கூடும். வீட்டின் அன்றாடப் பிரச்சனைகளில் தொலைந்து போயிருக்கக்கூடும். தேர்வன்று மட்டுமே படிக்கவேண்டிய கடைசி நிமிட ஞானம் கைகொடுக்காமல் போயிருக்கக் கூடும்.. எதுவாயினும்..இன்று நடந்த நிகழ்வை ஒரு சிறு தோள்குலுக்கலில் தட்டி விடுங்கள்.ஏனெனில் இந்த மிகப் பெரிய உலகம் உங்களின் விரல் சொடுக்கிற்காக காத்திருக்கிறது.

   மீண்டும் உழையுங்கள்.. மீண்டு வாருங்கள்.. நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது நீங்கள்.காத்திருக்கிறோம்.

   இது முடிவு என்று முடிவெடுத்துவிடாதீர்கள். ஆரம்பம்...
முயற்சியை விடாதீர்கள்.. விடாமுயற்சிதான் மனவலிகளை போக்கும் வழி.

பி.கு: சென்ற வருடம் நர்சிம் எழுதிய பதிவிது. தேவையான விஷயமென்பதால் மீள்பதிவாக இங்கே. குசும்பம் அழைத்த “எக்ஸாம் பயம்” தொடர்பதிவு தயாராக இருந்தாலும் இன்று பதிவிடுவது சரியாக இருக்காது என்பதால் நாளை…..

May 12, 2010

தலைகீழ் விதி

25 கருத்துக்குத்து

 

”வணக்கம்ம்ம்ம்ம் சென்னை. இது ஹலோ எஃப்.எம் 106.4. நான் உங்க நந்தினி. இந்த நிகழ்ச்சி எல்லாமே ஈசிதான். உங்க பிரச்சினை என்னன்னு சொல்லுங்க. நாங்க உங்களுக்கு உதவ இருக்கிறோம். .இன்னைக்கு யாரு முதல் காலருன்னு பார்க்கலாம்” வழக்கமான முதல் வசனத்தோடு அன்றைய நிகழ்ச்சியை துவங்கினாள் நந்தினி. நிகழ்ச்சியை இவ்வளவு இலகுவாக ஆரம்பித்தவளின் காதல் அவ்வளவு எளிதில் தொடங்கவில்லை.

________________________-

நந்தினி பொறியியல் இரண்டாம் ஆண்டு வந்தபோதுதான் லோகேஷை சந்தித்தாள். லோகேஷ். அவனைப் பற்றி அங்கங்கமாக விவரிக்க ஒன்றுமில்லை. மின்னலே மாதவன் என ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். அப்படியென்றால் நந்தினி ரீமா சென்தானே என்பீர்களேயானால் நீங்கள் சொன்னது சரிதான். நந்தினியும் அப்படித்தான். கொள்ளை அழகு. வீட்டிலிருந்து வரும்பொழுதே செலவு செய்ய வார்த்தைகளையும் எடுத்து வருவாள். அதைத் தாண்டி ஒரு வார்த்தை பேசுவதில்லை அவள். பூக்களை பறிக்க கோடரி எதற்கு என்ற கவிப்பேரரசு கூட லோகேஷை பார்த்தால் சொல்லுவார் “உன்னை காதலனாக்க க்ளியோபேட்ராவால் கூட முடியாது” என்று. நந்தினியால் அது முடிந்தது.

_______________________________

ஹலோ எஃப்.எம் 106.4 யார் பேசறீங்க?

நா…ன்…லோ.. லோகநாதன்.

சொல்லுங்க லோகநாதன். எப்படி இருக்கிங்க?எங்க இருந்து பேசறீங்க.

மயிலாப்பூர்

எப்படி இருக்கேன்னு கேட்டேனே. அதுக்கு பதில் இல்லையா மிஸ்ஸ்ஸ்டர் லோகநாதன்?

நல்லா இருக்கேன்.

என்னங்க சொன்னிங்க?டல்லா இருக்கிங்களா?

______________________

நீதான் நந்தினியா?

ம்ம்

எப்படி இருக்க?

நல்லா இருக்கேன்

இல்லையே.. டல்லாதானே இருக்க?

(முறைக்கிறாள்)

வீட்டுல அம்மா கோதுமை அல்வா செஞ்சாங்களா?

(முறைக்கிறாள்)

பின்ன வாய் ஓட்டிக்கிட்ட மாதிரி இருக்கே. வாய தொறந்து பேசு.

நான் தான் நந்தினி. என்ன வேணும்?

குட் கேர்ள் . இதே மாதிரி என்கிட்ட மனசு தொறந்தும் பேசணும்.சரியா?

(மீண்டும் முறைக்கிறாள்)

அதில்லம்மா. நான் உன்னை லவ் பண்றேன். அதனால சொன்னேன்.

______________________________________

லோகநாதன் சொல்லுங்க. என்ன பிரச்சினை உங்களுக்கு?

காதல்தான்.

காதல்னா சந்தோஷங்க அதுல என்ன பிரச்சினை உங்களுக்கு? அதை சொல்லுங்க

கூட இருந்தவரைக்கும் அவதான் என்னை அதிகமா லவ் பண்ணா. இப்ப அவ போன பிறகு என் டர்ன் வந்துடுச்சு. மறக்க முடியல நந்தினி.

பேர் சொல்லி கூப்பிடற அளவுக்கு நாம ஃப்ரெண்ட் ஆயிட்டோம். உங்க ஃப்ரெண்ட் சொல்றேன் கேளுங்க. அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல?

இல்ல

அப்புறம் என்ன சார்? நம்பிக்கை வைங்க. உங்க ஆளு உங்களுக்குத்தான்.

____________________________________

லோகேஷ். எனக்கு பயமா இருக்கு.

எதுக்கு?

நம்ம காதல்தான்.

லூசு. காதல்ன்னா சந்தோஷம். அத தவிர வேறு எதுவும் நினைக்காத.

இல்லடா. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அப்பாவ நினைச்சாதான். உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்னுடுவேன்னு சொன்னாரு.

அப்பாவுக்கும், மகளுக்கும் என்னை கொல்றதே வேலை.

கைய எடுடா. அவரு கத்தியால குத்தி கொலை செய்வாரு.

நம்பிக்கை வைடா. எப்படியும் நாம சேர்ந்து வாழ்வோம். நம்பிக்கை வை.

ஒரு வேளை நாம பிரிஞ்சிட்டா, என்னைக்குமே என் முன்னால வந்துடாதடா

பின்னால வந்து கட்டிப்பிடிக்கிறேன் சரியா.

போடா. எனக்காக அந்த பாட்டு பாடேன்

அழகான மனைவி. அன்பான துணைவி.அமைந்தாலே பேரின்பமே
மடி மீது துயில..

___________________________________

இப்ப அவங்க எங்க இருக்காங்க? சொல்லுங்க. நாங்க இருக்கிறோம்.

சென்னைலதான்.

லோகநாதன்.  லைன்ல இருங்க, அவங்கள பத்தின இன்ஃபர்மேஷன் வேணும். அவங்களுக்கோ, உங்களுக்கோ புடிச்ச பாட்ட சொல்லுங்க.

::::

ஹலோ லோகநாதன். கேட்குதுங்களா?

ம்ம்.

சொல்லுங்க

அவ எப்பவும் என் மனசுலதான் இருக்கா. அது போதுங்க. விட்டுடுங்க. ரொம்ப தேங்க்ஸ்

இருங்க லோகநாதன், முதல்ல அவங்களுக்கு புடிச்ச பாட்ட சொல்லுங்க

புதுப்புது அர்த்தங்கள் படத்துல இருந்து  கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே.

::::

ஹலோ..மேட..நந்தினி…

(பாடல் ஒலிக்கிறது)

May 10, 2010

விஞ்ஞான சிறுகதை

40 கருத்துக்குத்து

 

கி.பி. 2020.

அந்த கிராமத்தின் மிக குறுகலான சந்தில் இருக்கும் வீட்டில் இருந்துதான் அந்த சத்தம் கேட்டது.  அந்த வீட்டின் சன்னல் வழியே தெறித்து வந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் “50 FEET ROAD” என்று ஒளிர்ந்துக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே வழிகாட்டி மீது விழுந்தது. விழுந்த அதிர்வில் வீட்டின் வெளியே நின்றிருந்த ஹார்வெஸ்டர் மிஷினின் அலாரம் கீகீகீயென கத்தத் தொடங்கியது. மிச்சமிருந்த உயிரைக் கொண்டு இன்னமும் பாடியது ஸ்பீக்கர்.

நில்லுடா என்ற குரலுக்கு பதில் சொல்லாமல் வெளியே வந்த ராகேஷ், தன் வாட்ச்சை அழுத்த தூரத்தில் நின்ற ஹார்லி டேவிட்சன் பைக் உறும தொடங்கியது. ஏறியமர்ந்தவன் முறுக்கிய வேகத்தில், வீட்டு மெயின் கேட் சென்சாரின் சிக்னல் கண்ட்ரோலுக்கு கடந்து திறப்பதற்குள் முன் சக்கரம் நங்கென கேட்டின் மீது மோதியது. ஓவர் ஸ்பீட் அலாரமும் சேர்ந்து அடிக்க “அப்பனும், அலாரமும் அடங்கினதா சரித்தரமே இல்ல போலிருக்கு” என்றபடி வெளியேறினான் ராகேஷ்.

”விளையாடத்தானே போறான். அவனை ஏன் திட்டறீங்க?” வழக்கமான அம்மாவின் பணியை செவ்வனே தொடங்கினாள் கலையரசி. ராகேஷின் அம்மா. ”அவன் என்ன கோல்ஃப் விளையாடவா போறான்? நம்பிட்டே இரு. அவன் பைக்ல ஜிபிஎஸ் நேத்துதான் செட் செஞ்சேன். அவன் எங்க போறான்,, என்ன பண்றான்னு காட்றேன் வா என அழைத்தார் ராகேஷின் அப்பா.  அவர் சென்ற அந்த அறையின் கதவு, அவரின் கைரேகையை பதிவு செய்து சோதனை செய்தபின் திறந்தது “வாங்க நல்லக்கண்ணு” என்ற வரவேற்பும் தந்தது. 72 இன்ச் எல்.ஈ.டியை ஆன் செய்தவர் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி ரிமோட்டாக மாற்றினார். எதையோ அவர் அழுத்த அந்த பிரம்மாண்ட திரையில் ராகேஷின் ஹார்லி டேவிட்சன் பச்சை நிற புள்ளியாக தெரிந்தது. வலது கீழ் மூலையில் சிவப்பு நிறத்தில் 250 KMPH என்று ஒளிர்வதைக் கண்டு இன்னும் பிபி ஏறியது அவருக்கு. பார்த்தியா 200ல போனா கெளரவ குறைச்சல் சாருக்கு” என்று அம்மாவிடம் சண்டைக்கு போனார்.

அவன் எங்கதாங்க போறான் என்று உங்களைப் போலவே கலையரசியும் ஆர்வம் தாங்காமால் கேட்டார். “மேப்ல பாரு. ”வில்லேஜ் வில்லாவுக்கு போறாரு.  அதுவும் காலைல 6 மணிக்கு. அங்க என்ன தெரியுமா?அதையும் காட்றேன்”.  என்றவர் அருகில் இருந்த இன்னொரு திரையில் பிரவுசரை ஓப்பன் செய்தார். www.villagevilla.com என்று தளத்தில் நுழைந்தவர், ஒரு வீடியோவை க்ளிக்கி ஓட விட்டார்.

வில்லா முழுக்க அலங்கார விளக்குகளால் ஜோடிக்கப் பட்டிருந்தது. நியான் விளக்குகளின் வெளிச்சம் அந்த கட்டிடம் முழுவதையும் தங்கம் போல தகதகவென ஜொலிக்க வைத்தது. இரண்டு வயது குழந்தை முதல் 75 வயது கிழவர் வரை அனைவரின் முகத்திலும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை காண முடிந்தது. இளம்பெண்கள் குளிரையும் பொருட்படுத்தாது தங்கள் புல் ஓவரை கழட்டி தலைக்கு மேல் சுற்றி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். வேகமாக பார்க்கிங்கில் நுழைந்த ராகேஷ், அட்டையை ஸ்வைப் செய்தபின் அந்த கூண்டுக்குள் வண்டியைத் தள்ளினான். அது அப்படியே அலேக்காக பைக்கை மேலே தூக்கி சென்று ஒரிடத்தில் இறக்கி வைத்து மீண்டும் பழைய இடத்துக்கே வந்தது.நேரம் சரியாக 6 மணியாக அந்த 80 அடி திரை மின்ன தொடங்கியது. கீழிருந்து மேலாக திரை விலக உள்ளேயும் விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.

”இளைய தளபதி விஜய் நடிக்கும் உலகம் சுற்றும் வாலிபன்” என்ற எழுத்தின் மேல் ஸ்லீவ்லெஸ் டாப்புடனும், அழகிய கார்கோவுடனும் நின்று கொண்டிருந்தார் நடிகர் விஜய். ஒரே நேரத்தில் வில்லா முழுக்க இருந்த ரசிகர் மன்ற எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள் ஒளிரத் துவங்கின. “LONG LIVE OUR CM – Rakesh& frds” என்ற கேப்ஷனோடு இருந்த எல்.ஈ.டியை தனது கூலிங் கிளாசில் இருந்த கேமரா மூலம் படம்பிடித்துக் கொண்டிருந்தான் ராகேஷ்.

வீடியோவில் லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த ராகேஷின் அப்பா சொன்னார் “இவனையெல்லாம் பி.ஈ படிக்க வைத்து வேலைக்காக ஒவ்வொரு ஐ.டிபார்க்குக்கும் அலைய வச்சிருக்கணும். இம்போர்ட்டட் ஹார்வெஸ்டர் மிஷினும், ஸ்பெயின் நாட்டு மாடு 10ம் வாங்கித தந்திருக்கேன் இல்ல. இப்படித்தான் சினிமா சினிமான்னு விஜய் படம் பார்த்துட்டு இருப்பான். எல்லாம் என் தலையெழுத்து. ” கோவத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்தவர் காலில் ஸ்பீக்கர் தட்டுப்பட்டு பாடத் தொடங்கியது

“இவனைப் போல தலைவன் யாரடா..
இவனை வெல்ல இங்கே யாரு கூறடா”

பிகு: படம் முடிந்து வெளியே வந்ததில் பாதி பேர் தத்தம் மொபைலில் டைப்பி பதிவு போட்டன்னர். அனைவரும் சொல்லி வைத்தது போல “இனிமேல் விஜய் படம் பார்க்கக்கூடாது. இவன் திருந்தவே மாட்டான்” என்பதாக இருந்தது அது.

செஸ்..ட்விட்டர்..ஃபோட்டோ..கார்க்கி

41 கருத்துக்குத்து

 

  சனி, ஞாயிறு முழுவதும் செஸ்ஸிலும், கிரிக்கெட்டிலுமே போய் விட்டது. யோசித்து வைத்த எதையுமே எழுதவில்லை. ட்விட்டரில் சிலருடன் செஸ் குறித்து லைவ் அரட்டை அடித்தது சுவாரஸ்யமாக இருந்தது. பல ”பழைய” பதிவர்கள் ட்விட்டரிலே முழு நேரத்தையும் செலவழக்கிறார்கள். ம்ம்.. ”பின்ன.. நீ எல்லாம் எழுதிட்டே இருந்தா வெறுப்பில் வேறு என்ன செய்வார்கள்” என்றெல்லாம் சொல்ல மாட்டிங்கதானே? ட்விட்டர் போக ,கூடவே இன்னொரு கெட்டப் பழக்கமும் ஒட்டிக் கொண்டது. அது பதிவின் கடைசியில் பார்க்கலாம்.

_______________________________________

செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை கவனிப்பவரா நீங்கள்? அப்படின்னா வாங்க. நேற்று நடந்த 11வது ஆட்டம் குறித்து பேசலாம்.

Untitled

65வது மூவில் ஆனந்து செக் வைப்பதற்கு பதில் சிப்பாயை G7  நகர்த்தி இருந்தால் ஆட்டம் எப்படி இருந்திருக்கும்? பதிலுக்கு டோப்பொலோவ்(இனிமேல “டோ”) அவரது ராஜாவை H7 க்கு நகர்த்தி  இருந்தால் மட்டுமே ஆட்டம் இன்னும் கொஞ்சம் இழுக்கப்பட்டிருக்கும். அதைத்தவிற வேறு எதை செய்தாலும் ஆனந்த் வெல்ல வாய்ப்பு இருந்தது. என்னவெல்லாம் மூவ் செய்யலாம் என வரிசையாக பார்க்கலாம்.

   1) யானையால்(H3) வெள்ளை ராஜாவுக்கு செக் வைத்தால் G6க்கு செல்லலாம். அதன் பின் மீண்டும் செக் வைத்தால் F6ல் இருக்கும் சிப்பாயை வெட்டி சேஃபாக மறைந்துக் கொள்ளலாம். இப்போது ஒரு முறை செக் வைக்காமல் விட்டாலும் நமது யானையை B8ல் வைத்தால் செக் மேட்.

2) யானையால் செக் வைக்காமல் டோ, A7ல் இருக்கும் சிப்பாயை முன்னேற்ற முயலலாம்.அப்படி செய்தால் ஆனந்த் ராஜாவை G6ல் வைக்க வேண்டும். இப்போது டோ யானையால் செக் வைத்தால், F6 சிப்பாயை வெட்டி மறைந்துக் கொள்ளலாம். யானையால் நமது சிப்பாயை வெட்ட முடியாது. நமது யானையால, அவரது யானையை வெட்டிவிட்டால் நமக்கு ஒரு யானை எக்ஸ்ட்ரா. அவரது சிப்பாய் எல்லையைத்தொட்டு ராணியாகும் முன் வெட்டவும் நேரமிருக்கிறது

3) எக்காரணம் கொண்டும் வெள்ளை ராஜாவை H6ல் வைக்க கூடாது. பின் நமக்கு செக் வைத்தால் ஆட்டம் க்ளோஸ்.

முதல் பத்தியில் சொன்னது போல கறுப்பு ராஜா H7 வந்திருந்தாலும் ஆனந்துக்கு வாய்ப்பு இருந்தது. அவர் செல்கிறாரா என்று பார்த்த பின் டிராவிற்கு ஒத்துக் கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன். H7சென்றால் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

நமது சிப்பாயை G8ல் வைக்க வேண்டும். வேறு வழியின்றி அவர் சிப்பாயை ராஜாவால் வெட்டுவார்.இப்போது நமது ராஜாவை G6ல் வைக்க வேண்டும். End gameல் ராஜாவும் ராஜாவும் நேருக்கு இது போன்று இருக்கும்போது, யானையால் செக் வைத்தால் ஆட்டம் முடிந்துவிடும் என்பது பாலபாடம். அதனால் அவர் வேறு வழியில்லாமல் ராஜாவை F8க்கு நகர்த்துவார். அல்லது யானையால நமக்கு செக் வைப்பார். எது வைத்தாலும் நமது ராஜா F6 சிப்பாயை வெட்டி சேஃபாகி விடலாம். அதன் பின் ஆட்டத்தை முடிப்பதற்கோ, F5 சிப்பாயை ராணியாக்குவதற்கோ பல வாய்ப்புகள் வெள்ளைக்கு உண்டு. இந்த ஆட்டத்தை ஆடிப்பார்க்க நினைப்போர் எனனைத் தொடர்பு கொள்ளலாம்.

அவர் யானையை 3rd லைனை விட்டு எடுத்த உடனே B3ல் இருக்கும் சிப்பாயை வெட்டி விட வேண்டியது அவசியம். மேலே சொன்ன எல்லா மூவ்களிலும் நமது யானை B லைனிலே இருக்கிறதை கவனிக்க வேண்டும்.

லட்டு போன்ற வாய்ப்பை ஆனந்த் மிஸ் செய்தாரா? அல்லது ஏதாவது பெரிய ஓட்டையை ஙே வென நான் கோட்டை விட்டுருக்கேனா? சொல்லுங்கள்.

______________________________________________________________________

PIT குறித்து பலருக்கு தெரிந்திருக்கலாம். தமிழில் பல திறமைகளை ஊக்குவிக்க இது போன்ற பல குழுக்கள் உண்டு. என்னைக் கேட்டால்  அவற்றில் உச்சம் தொட்ட குழு பிட்தான். ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் புகைப்படங்களே இதற்கு சான்று. முன்னர் வெற்றி பெற்ற பலர் சொன்ன வார்த்தைகள் இவை ”பிட் பென்ச்மார்க். எங்கேயோ போயிடுச்சுப்பா. அதனால்தான் நானெல்லாம் போட்டியில் அடிக்கடி கலந்துக் கொள்வதில்லை. திருப்தியான படம் கிடைத்தாலே அனுப்புகிறேன்”

யார் எப்படி போனா நமக்கு என்னங்க? நாம இறங்கி ஆடித்தானே பழக்கம்? ஜெயிக்கிறதா முக்கியம் என்ற பன்ச் லைனோடும், அண்ணனிடம் ஆட்டயைப் போட்ட SONLY ALPHA200 SLR கேமரோவோடும் களமிறங்கியாச்சு. போட்டிக்கும், பொதுவாகவும் எடுத்த படங்ளில் சில உங்கள் பார்வைக்கு. நோ நோ கண்ணையெல்லாம் மூடக் கூடாது. இது என் ஃபோட்டோ இல்ல, நான் எடுத்த ஃபோட்டோதான்

4589059552_c0dd762835_b-1

a'dmk

DSC00204

பிகாசா ஆல்பம்

ஃப்லிக்கர் ஆல்பம்

May 7, 2010

வீ வாண்ட் பரிசல்

20 கருத்துக்குத்து

 

சரியாக நாற்பது வருடங்களுக்கு முன்..

”கடவுளே!! இந்த மனித இனத்தின் கொடுமைக்கு அளவேயில்லையா? எங்களை அழித்து வரும் இவர்களுக்கு நீ தண்டனை தர மாட்டாயா” என அனைத்து மரங்களும் கடவுளிடம் முறையிட்டன. சற்று நேரம் யோசித்தக் கடவுள் சொன்னார்

கவலை வேண்டாம். இன்று நான் பூமிக்கு அனுப்பப் போகும் ஒருவனால் உலகமே அல்லோலகலப் படப்போகிறது. உங்களை அழித்து காகிதமாக்கி அதை வீணடிக்கும் மூடர்களை அந்த காகிதம் மூலமே பாடம் புகட்டுகிறேன்.

அவர் சொன்னது போலவே மே13ம் தேதி 1969.. பூமிக்கு வந்தார் அந்த தீவிரவாதி. உலகை அழிக்க அவரிடம் கடவுள் கொடுத்தனுப்பிய ஆயுதம் எழுத்து.  பேசிப்பேசியே சாகடிக்க இங்கே ஆயிரம் பேரிருக்க, எழுதி எழுதியே கொல்வதற்கு இவர் ஒருவர்தான் இருக்கிறார்.

முன்னூறு வார்த்தைகளில் குதிரைப் பற்றி எழுத சொன்னார்கள் நம் தீவிரவாதியிடம். “காட்டுக்குள்ளே ஓடியது குதிரை டடக் டடக் டடக்  டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் டடக் டடக் டடக் டடக் டடக்டடக் டடக் டடக்டடக் என எழுதியதைப் பார்த்து மாரடைப்பு வந்த ஆசிரியரின் நினைவு நாள் சென்ற மாதம்தான் சென்றது.

வளர்ந்த பின் அவ்வப்போது பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கினார். அதில் கணிசமான கணக்கில் மரணங்கள் சம்பவித்தாலும் அடிக்கடி அது நிகழாமல் போனதில் வருத்தம் கொண்டார்.

எழுதி மட்டுமே பல பேரைக் கொல்ல முடியாதென்று தெரிந்துக் கொண்ட பின், பேசிப்பேசியே சாகடிக்க தொடங்கினார். பக்கத்து வீட்டுக்காரர் ஒருநாள் பைக்கில் வெளியே வந்தவுடன் ரைட்டிலே வந்துக் கொண்டிருந்தார். நேர்மையின் சிகரமான நம்மாளு காலை எட்டு மணிக்கு அவரிடம் கேட்டார் ”நான் வந்தது லெஃப்ட்டு.ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?” அங்கேயே மயங்கி விழுந்தவர் இன்னமும் கோமாவிலே இருப்பதாக தெரிகிறது.

அப்படி இப்படி என  தன் நோக்கத்தை செவ்வனே செய்து வந்தவரிடம் தக்க சமயத்தில் கிடைத்தது அந்தப் பேரழிவு ஆயுதம். ஆம். ப்ளாக் தொடங்கினார். 2008 மே மாதத்தில் இருந்து கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்து வருகிறார். சமீபத்திய லயோலா கருத்து கணிப்புப்படி தினம் தினம் செத்து மடியும் பதிவுலக வாசகர்களில் இவரால் மடிபவர்களே அதிகம் என்று தெரிகிறது.

தன் வயதை மறைக்க எப்போதும் ஷார்ட்சில் இருப்பது அவர் வழக்கம். சென்ற வாரம் ஒரு திருமணத்திற்கு சென்ற அவரிடம், ஒரு இளம்பெண் ஏதோ கேட்க இவரும் எடக்க மடக்காக சொல்லிவிட, அது மின்னஞ்சலில் ஒரு பெரிய விவாத பொருளாக வலம் வந்துக் கொண்டிருப்பதை பலரும் அறிவார்கள்.அந்தப் பெண்ணுக்கு என்னாச்சா? கேரளா பகவதியம்மன் கோவிலில் பேய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்ன தகவல்படி, இவரின் பெயரைத்தான் கேட்டிருக்கிறது அந்தப் பெண். நம்மாளு சொன்னது

சென்னை ரோடுல நெரிசல்

மதுரை பக்கம் கரிசல்

நம் நட்பிலில்லை விரிசல்

நல்லவன் என் பேரு ………..

எதை எழுதி இவரு சாவடிக்கிறாருன்னு யோசிச்சுப் பார்த்தா இவரு எதை எழுதினாலும் சாவடிக்கிறார்ன்னுதான் சொல்லத் தோணுதுங்க. பொதுவாக நல்ல வாசிப்பனுபவத்தை தருபவர்களே நல்ல எழுத்தாளர்கள் என்று சொல்வார்கள். இவரு அனுபவத்தையே வாசிக்க தருவதால் நொல்ல எழுத்தாளர்ன்னு சொல்லலாம். ரொம்ப சொல்லியாச்சு. அவரு யாருன்னு இன்னமும் தெரியாதவங்க வலையுல்கிற்கு வந்து ஒரு வாரமே ஆகியிருக்ககூடும்.

  ராஜாவின் இசையைக் கேட்பவர்கள் சொல்லும் பிரபலமான வாசகம்: “ங்கொய்யால செத்து போலாம்டா ராஜாவுக்காகத்தான்..” அதேத்தான் இவருக்கும். இதேப்போல இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து எழுதி எழுதி எங்களை சாவடிக்க வாழ்த்துகிறோம் சகா.

தலைக்கு கீழேதான் கழுத்து-நம்ம

தலைக்கு எல்லாமே எழுத்து.

_______________________________________________________________________-_________

சென்ற மே13 ஆம் தேதி பரிசல்காரரின் பிறந்தநாள் அன்று எழுதியது. சமீபகாலமாக ஆளை இணையம் பக்கம் காணவில்லை. மெயிலிலும் பிடிக்க முடியவில்லை. யாராவது அவரிடத்தில் சொல்லி பிறந்த நாள் வருவதற்குள் ஒரு பதிவு எழுத சொல்லுங்கப்பா.

வீ வாண்ட் பரிசல்.

வீ வாண்ட் பரிசல்..

வீ வாண்ட் பரிசல்…

May 5, 2010

உஷார் பத்ரி ரெய்டு

44 கருத்துக்குத்து

 

join__gurlzgroup__008  

  ”ஏண்டா என்னைப் பார்த்து பேச மாட்ற. பசங்க பார்த்து பேசினாதான் பொண்ணுங்களுக்கு புடிக்கும்” என்கிறாள் தோழி. என் கண்ணையே நான் பார்த்து பேசணுமா என்ன” என்றேன் நான். சற்று நேரம் யோசித்தவள் “நான் உன் கண்ணுன்னு சொல்றியா?” என்றாள். “ஆமாம். கண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பதுதான் இப்போதைய கேள்வி” என்றேன். மீண்டும் முழிக்கத் தொடங்கினாள்.

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

”எத்தனை தடவை நான் கேட்காம நீ ஐ லவ் யூ சொல்லியிருப்ப” என்று சண்டைக்கு வருகிறாள் தோழி. ”உனக்கு கேட்கும்படி ஐ லவ் யூ சொல்லி மாட்டிக்க நான் என்ன முட்டாளா?” என்றேன் நான்.  ஐ லவ் யூ என்று மற்ற தோழிகளிடம் சொல்வதைத்தான் சொன்னேன் என்பது வழக்கம் போல் புரியிவைல்லை என் செல்லத்துக்கு.

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

ஒவ்வொரு முறை என்னைக் கட்டிக்கோ என்று இரண்டு கைகளையும் தோழி நீட்டும் போதும் இரண்டடி முன்னால் செல்வேன் நான். நான் கேட்கும் போதெல்லாம்  கையை மட்டும் நீட்டுவாள்.  # உஷார் பத்ரி ரெய்டு

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

தொலைபேசியை சிரித்துக்கொண்டே எடுக்காதே என்றால் முடியாது என்கிறாள் தோழி .எடுத்த பின்பும்  ரிங் அடித்துக் கொண்டிருப்பதாய் நினைத்து பேசாமலே இருக்கிறேன் என்பதை சொன்னால் மீண்டும் சிரிப்பாள் என விட்டுவிட்டேன்

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

சஞ்சிகையில் பார்த்ததுண்டு. புத்தகமாய் பார்த்ததுண்டு..வாழ்த்து அட்டையில் கூட. இப்போதுதான் முதல் முறை சுடிதாரில் பார்க்கிறேன் கவிதைகளை என்றேன் தோழியிடம். கவிதை நான் சரி. கவிதைகள்ன்னா யாரெல்லாம் என்று மிரட்டினாள். கவிதைகள் காண என் கண் சென்ற திசையைக் கண்டவள் அடிக்க துரத்தினாள்

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

நகம் கடிக்கும் பழக்கத்தை விடுமாறு சொன்னேன் தோழியிடம். தங்க பஸ்பம் உடம்புக்கு நல்லதுதானே என்றாள். பைத்தியக்காரி. வைரம் வயித்தையே அறுத்துடும் என்பது கூட அறியவில்லை அவள்.

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

பூக்கள் இரண்டை அழகாய்  எம்பிராய்டரி போடப்பட்டிருந்த சட்டையில் வந்தாள் தோழி. என் சிரிப்பைக் கண்டு பயந்தவள் அதை மறைக்கும்படி மேல்சட்டை அணிந்தாள். பூக்களை மறைத்த பூக்களையே மறைக்கிறாயே என்றேன். உதடு சுழித்து தன் அறியாமையை மீண்டும் நிரூபித்தாள்

தோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழிதோழி

உதடுகள் பேசும் வார்த்தைகளை விட இதயங்கள் பேசும் வார்த்தைக்கு அர்த்தம் அதிகம் என்கிறாள் தோழி. சரியென்ற நான் ஒரு கமலஹாசன் முத்தம் தாயேன் என்றேன். துள்ளி வந்தவளிடம் இதற்கு மட்டும் உதடுகள் எதற்கு என்றவுடன் வெட்கி, நாணி, கோணி ஓடினாள், முத்தம் தந்த பின் தான்.

உதார் விட கத்துக்கனும்

30 கருத்துக்குத்து

 

பெரியவங்க சொல்வாங்க “ஆள் பாதி ஆடை பாதி”. உண்மைதாங்க. ஆங்கிலத்தில் சொல்லணும்ன்னா “Presentation is everything”. அல்லது “An idea is nothing without the presentation of the idea”. அதனால்தான் எல்லா மேதைகளும் நல்ல ஆசிரியர் ஆக முடிவதில்லை. ஒரு ஆசிரியர் அந்தப் பாடத்தில் எவ்வளவு பெரிய கில்லாடி என்பது முக்கியமில்லை. அவர் எந்தளவுக்கு அதை திறம்பட சொல்கிறார் என்பதே முக்கியம். ஒரு விஷயம் எப்படி தரப்படுகிறது என்பது அந்த விஷயத்தை விட மிக முக்கியமான விஷயம். சினிமாவ எடுத்துப்போம். படத்தோட கதையை விட அது எப்படி எடுத்து இருக்காங்க என்பதில் இருக்கிறது அதன் வெற்றி. இப்ப சுறாவையே எடுத்துக்கோங்களேன். சரி விடுங்க. நாம வேற பார்ப்போம். செல்வராஜ் ஒரு நல்ல கதாசிரியர். பாரதிராஜாவின் பல மாஸ்டர்பீஸ் அவரின் கதைதான். ஆனால் அவர் படம் இயக்கினால் பாரதிராஜா அளவுக்கு வருமா?

நாம ரெண்டு பேரும் வாக்குவாதம் செய்றோம். எதுக்கா? பார்த்திங்களா அதுக்கு கூட நாம வாக்குவாதம் செய்றோம். கிடக்குது கழுதை. செய்றதா நினைச்சுக்கோங்க.அதுல யார் சொல்றது சரியென்பதை விட யார் சூதனமா பேசறாங்கன்னுதான் பார்க்கணும். அதைத்தான் பார்ப்பாங்க. ஒருத்தன் வேலை வெட்டி இல்லாம ஒரு ஆராய்ச்சி செஞ்சிருக்கான். அது முடிவுல என்ன சொல்றாங்கன்னா ஒரு ஆர்க்யுமெண்ட்டுல 55% கண்ணால ஆகற காரியமாம். அதாவது எப்படி நாம இருக்கோம், அது என்னது.. ம்ம் பாடி லேங்குவேஜ், இதுதான் 55%மாம். 38% நாம என்னா சவுண்ட் விடறோம்னு பார்க்கிறாங்க. சவுண்டுன்னா நாம எப்படி பேசறோம்ன்றது. வெறும் 7% தான் நாம் என்ன வார்த்தை பேசறோம் என்பது கவனிக்கப்படுகிறதாம். என்ன கொடுமை சார் இது?

எப்படி சொல்றோம்கிறதுல கவனம் இல்லைன்னா என்ன சொன்னோம்கிறது புஸ்ஸுன்னு போயிடுமாம்.ஆயிரத்தில் ஒருவன் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் நான் ஜவாப்தார் இல்லப்பா.  ஃப்ரெண்டோ, லவ்வரோ, சொந்தக்காரங்களோ, கூட்டணி கட்சியோ.. எல்லா உறவிலும் பிரச்சினை வர்றதே என்ன சொன்னான்கிறதால இல்ல, எப்படி சொன்னாங்கிறதாலதான். எல்லோருக்கும் கலைஞரைப் போல தொகுதிதாம்ப்பா தரமுடியல. ஆனா இதயத்துல இடமிருக்கு என்று சொல்ல தெரிந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்? நாம சொல்ல வர்ற விஷயம் மூளைக்குப் போகும். ஆனா எப்படி சொன்னோம்கிறது இதயத்துக்கு போகும். இதயம் செமி ஃபைனல்ஸ். அத ஜெயிச்சாதான் ஃபைனல்ஸ்க்கு மூளைக்கிட்ட போக முடியும். கில்லி படத்த எடுத்துக்கோங்க. பிரகாஷ்ராஜும் லவ் பண்றாரு. விஜயும் லவ்  பண்றாரு. ஆனா திரிஷா யாருக்கு செட் ஆச்சு? அதான் மேட்டரு.

இன்னொரு வெட்டிப்பயல் செஞ்ச ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னா, ஒரு புக்க விக்கிறதே அதன் அட்டைப்படத்தாலதானாம். உள்ள என்னா டகால்டி மேட்டரு இருந்தாலும் அட்டைதான் பெருசா மாற்றத்த கொடுக்குதாம். புக்கோட மதிப்பு உள்ள இருக்கிற சரக்க வச்சிதான்றதால் கருத்து வேறுபாடு இல்ல. ஆனா விக்கிறது அட்டைய வச்சுதானாம். இதுக்கு என்ன உதாரணம் சொல்லலாம்? அதேதான். சுறாவும் அங்காடித் தெருவும். ஷார்ப்புங்க நீங்க.

யோசிச்சு பாருங்க. ம்ம்.. பார்த்திங்களா? இப்ப எதுக்கு யோசிச்சிங்கன்னு யோசிச்சு பாருங்க. ஹிஹி. விஷயம் என்னன்னா பத்தி பத்தியா பேசுவாங்களே.. சொற்பொழிவு, பட்டிமன்றம், சுகி சிவம் மாதிரி ஆளுங்க..எல்லோரும் ஸ்டேஜ், அதுல ஃபோகஸ் லைட் இப்படிப்பட்ட மேட்டருக்கு எவ்ளோ முக்கியத்துவம் தர்றாங்க? ஏன்னு யோசிச்சு பாருங்க. உண்மை எது? எது உண்மையாகவே உண்மையோ அது உண்மை இல்லை. எதை மக்கள் மனசு உண்மைன்னு நம்புதோ அதான் உண்மை.

இப்போ என்னதாண்டா சொல்ல வர்றன்னு கேட்க தோணுதா? அப்போ இதோட நிறுத்திக்கலாம். ஒரு புக் படிச்சிக்கிட்டு இருந்தேன். அதுல இருந்த மேட்டர் ரொம்ப முக்கியம்னு தோணுச்சு. அது வேற இங்கிலிபீச்சுல இருந்துச்சா அதான் மொத தடவையா டிரான்ஸ்லேட் பண்ணி பார்க்கலாம்னேன்னு… எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா.

Scan05052010_094206

May 4, 2010

விஷ்வனாத் ஆனந்தும் கார்க்கியும் பின்னே பத்தாத உப்புமாவும்

27 கருத்துக்குத்து

 

   இளைஞர் காங்கிரசின் முக்கியமான தூணைப் பற்றி இங்கே எழுதி இருந்தேன். மீண்டும் நேற்று அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எந்தளவுக்கு அரசியல் ஞானம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். “தமிழக இளைஞர் காங்கிரஸின் புதிய தலைவர் யார்?”. சில நொடிகள் தடுமாறிய கைத்தம்பி சடாரென நான் தான் என்றார். தொடர்ந்தவர் “எங்க கட்சில எல்லோருமே தலைவர்தான். எல்லோருமே தொண்டர்தான்” என்றார்.

  “நீ இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் இல்லப்பா. திமுக, அதிமுகன்னு சேர்ந்து பொழைச்சுக்கோ” என்றவுடன் வீரப்ப சிரிப்பு சிரித்தார் இளம் அரசியல்வாதி. கடைசியா ஒரே ஒரு கேள்வி என்றேன்.  ”கூட்டம் அதிகமா இருக்கிற படத்துக்குப் போய் உனக்கு சீட் கிடைச்சா என்ன செய்வ” என்றேன். முதல்ல போய் உட்கார்ந்துப்பேன் என்று வகையாக வந்து மாட்டினார் எதிர்கால கவுன்சிலர். இறுதியில் நம்ம கேள்வியைக் கேட்டேன்.

”அப்புறம் ஏன் எலக்‌ஷனில் சீட் கிடைச்சா மட்டும் நிக்குறீங்க? உட்காரலமில்ல?”

________________________________________________________________________________

கோடை விடுமுறைக்கு பாட்டியின் ஊருக்கு போயிருக்கிறான் பப்லு. ஃபோன் செய்து குற்றப்பத்திரிக்கை வாசித்தான். அவனுக்கு எதுவுமே வாங்கித் தரமாட்டேன் என்கிறார்களாம். கூடவே இன்னொரு குரல் கேட்டது “காலைல தாண்டா 30 ரூபாய்க்கு ஐஸ் கிரீம் வாங்கின”. வாங்கினியாடா என்றால் ஆமாம் என்றவன் ஆனால் அதை ஜிகிர்தாண்டாவில் போட்டுவிட்டதாக சொன்னான். கொஞ்சம் கூட அவனுக்குத் தரவில்லையாம். உடனிருந்தவரிடம்  கேட்டால் ஆமாம் என்றார். சரி அப்போ வாங்கித் தர சொல்கிறேன் என்று சொல்லிய நேரம் மைல்டா டவுட்டு வந்துச்சு. ஜிகிர்தாண்டா என்னடா ஆச்சு என்றால் “எல்லாத்தையும் நானே சாப்ட்டே்ன்” என்கிறான்.

இன்னொரு நாள் உப்புமா செய்திருக்கிறார்கள். சாப்பிட்டவர் உப்பு பத்தலை என்று சொல்லியிருக்கிறார். அவன் வேலையை மட்டும் பார்க்காத பப்லு சொன்னானாம் “எங்க கார்க்கி மாமா எப்பவும் உப்புமா பத்தலைன்னுதான் சொல்வான்” என்றானாம்.

________________________________________________________________________________

செஸ் ஆனந்த் என்றால் எனக்கு உயிர். சின்ன வயதில் பள்ளி அளவிலான போட்டிகளில் வென்றது உண்டு. அது முதலே அவர் என் ஆதர்சம். சில வருடங்கள் முன்னால் வித்யாதர் என்ற தொண்டு நிறுவனத்தின் தூதராக அவர் இருந்தபோது அவருடன் செஸ் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. 5000 ரூபாய் நன்கொடை அளிக்கும் 50 பேருடன் அவர் விளையாடினார். அது கிடக்கட்டும். இப்போது சாம்பியன்ஷிப் போட்டி அவருக்கும் டோபோலொவுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. 4-3 என்ற புள்ளி கணக்கில் நம்ம ஆள் முன்னணியில்தான் இருக்கிறார். மேலதிக தகவலை இந்த தளத்தில் காணலாம். முழு ஆட்டத்தையும் ஃப்ளாஷ்-ல் தந்திருப்பது அருமையான விஷயம்.ஆனந்த் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

ANAND_KARKI

என்னாது? நாங்க ஆடினா ஆட்டம் என்ன ஆச்சா? போங்க பாஸ். புள்ள குட்டிங்கள தலைவர் படத்துக்கு கூட்டிட்டு போங்க. கப்பித்தனமா பேசிட்டு

__________________________________________________________________________________

கோ – படம் நன்றாக வந்திருப்பதாக தெரிகிறது. . ஹாரிசின் கூட்டணியில் ஏற்கனவே ஹிட்டடித்த கே.வி.ஆனந்த் இந்த முறையும் ஒரு நல்ல கமர்ஷியல் எண்டெர்டெயினர் தருவார் என எதிர்பார்க்கலாம். அதில் சில பாடல்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய ஒரு மெலடி ஹாரிசின் சிறந்த பாடலாக இருக்கக்கூடுமென ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பினார். நேற்று ஒரு தளத்தில் கே.வி.ஆனந்த் பேட்டியிலும் அதைக் குறிப்பிட்டிருந்தார். எல்லா துணையும் இழந்து தனியே நிற்கும் நாயகனின் நிலையை சொல்லும் ஒரு பாடலில் இப்படி எழுதி இருந்தாராம் மதன் கார்க்கி

”திசைமாணி இல்லாத நாளில் அடிவானம் ஏனில்லை
கடையாணி இல்லா பயணத்தில் கடிவாளம் ஏனில்லை”

பார்வையாளனுக்கு புரிந்துக் கொள்ள கடினமாக இருக்குமென இயக்குனர் வெட்டிய வரிகளில் இதுவும் ஒன்று. எனக்கு என்னவோ மதன் கார்க்கி எந்திரனுக்கு பிறகு  பட்டையை கிளப்புவார் என்று தோன்றுகிறது. ஆமாங்க. எந்திரனிலும் சில பாடல்கள் எழுதியுள்ளார் இந்த ஜூனியர் வைரமுத்து

________________________________________________________________

தினமும் காலை எழுந்தவுடன் குட் மார்னிங் பதிலாக காலை வணக்கம் சொல்லுடா என்று நண்பர் ஒருவர் அவரது மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். விடுங்க சகா. அதாவது சொல்றானே என்றால் அவர் கேட்பதாக இல்லை. தனியே அழைத்து அவரிடம் கேட்டேன் “காலை வணக்கம் சொல்ல சொல்லி இப்படி செய்றீங்களே. பொதுவா கை கூப்பிதானே வணக்கம் சொல்லுவாங்க?நீங்க எதுக்கு காலை(Leg leg) போய் வணக்கம் சொல்ல சொல்லி டார்ச்சர் பண்றீங்க” என்றேன். காலால தர வேண்டியதை அவர் தர எத்தனிக்க எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

May 2, 2010

பட்டய கிளப்புது படம்

43 கருத்துக்குத்து

 

பொங்கலுக்கே வெடி வெடிக்கிறவனிடம் பொட்டி நிறைய பட்டாசு  தந்தால் என்ன செய்வான்?  அதுவும் தீபாவளியும் வந்தால்… அப்படி ஆயிடுச்சுங்க.இருங்க பாஸ்.நான் சுறாவை பத்தி சொல்லல.

   திருமணம் முடிந்து ஊருக்கு திரும்பிய அண்ணன் SONY alpha 200 என்ற SLR வகை கேமரவை வச்சிக்கோடா என்று தந்துவிட்டு போனான். கூடவே இரண்டு நாட்கள் விடுமுறை. எடுடா வண்டிய கார்க்கி என்று கிளம்பினேன். கிளம்பும் முன் மெயில் பார்க்கலாம் என்று பார்த்தால் இன்னொரு அதிசயம். இந்த மாத PIT போட்டியின் தலைப்பு “சன்ரைஸ்/சன்செட்” என்றும், கலந்து கொள்ளுமாறும் எழுதி இருந்தார் என் குரு ஜீவ்ஸ். எல்லாம் கூடிவருதுடா கார்க்கி என்று நினைத்துக் கொண்டேன். அம்மாவிடம் மறுநாள் காலை 5.30க்கே எழுப்ப சொன்னேன். பெசண்ட் நகருக்கு சென்று சூரியோதயத்தை எடுத்துவிட்டுதான் அடுத்த வேலை என்று முடிவானது.

இரவு 10 மணிக்கு அலாரம் வைத்தேன். எதுக்கா? சீக்கிரம் தூங்கினாதானே காலைல எழுந்திருக்க முடியும்? அதான் 10 மணிக்கு அலாரம் வைத்தேன். காலையில் அலாரம் அடித்தால் நம்ம குறட்டை சத்தத்தில் அலாரம் சத்தம் காணாம போய்விடும் என்பதால் அம்மாதான் எனக்கு அலாரம். மறுநாள் காபியோடு எழுப்பினார்கள். குடித்துவிட்டு டைம் பார்த்தா 7 . என்னம்மா. 5.30க்கு இல்ல எழுப்ப சொன்னேன் என்றேன். அவரே 6.30க்கு எழுந்ததால் திட்டம் தவிடு பொடியானது. மனம் தளராமல் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அதற்குள் சூரியன் உச்சிக்கு வந்துவிட்டது.

மாலையில் “சன்செட்” காட்சியை படம்பிடித்து விடலாம் என என் உள்மனது சொன்னாலும் ஏதாவது செய்டா கார்க்கி என்று வெளிமனது சொன்னது. தீவிர யோசனைக்குப் பின் இந்த “சன்ரைஸ்” படம் எடுத்தேன். போட்டிக்கு அனுப்பும் அளவிற்கு இல்லையென்பது எனக்கே தெரியும். லைட்டிங்கும் சரியில்லை. ஆங்கிளும் சரியில்லை. இங்கே க்ளிக்கி பாருங்க. பார்த்துட்டு கருத்து சொல்லுங்க.

என்னடா இன்னைக்கு உன் பிளான் என்ற தோழியிடம், மாலையில் எப்படியாவது தவறாமல் பீச்சுக்கு சென்று படம் பிடித்தே ஆக வேண்டுமென சொல்லிக் கொண்டிருந்தேன் . அவளும் உடன் வருவதாக சொன்னாள். போட்டியின் தலைப்பு நிலா அல்ல, சூரியன் தான் என்றேன். ச்சோ ஸ்வீட் என்றவள் தனது வருகையை ஊர்ஜிதப்படுத்தினாள்.  அவள் வருவதிலும் ஒரு நன்மை இருப்பதாக சொன்னேன். என்ன என்றாள் தோழி.

“பீச் உலா நீ வந்தால் தெருவிளக்கும் கண்ணடிக்கும்.
வீடு செல்ல சூரியனும் அடம்பிடிக்குமே”

   அதற்குள் சூரியனை பல ஆங்கிளில் படம் பிடித்துவிடலாமே என்றேன். வெட்கி, நாணி, கோணி ஃபோனை வைத்துவிட்டாள் தோழி. மாலையில் சரியாக 5 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டேன். தோழியும் 5.30க்கு அங்கே வந்துவிடுவதாக சொன்னாள். ஆர்வத்துடன் போனால், காணவில்லை.முடிந்தவரை திருவான்மியூர் பீச் முழுக்கத் தேடினேன் கிடைக்கவில்லை.

”என்ன சொல்றீங்க? தோழிக்கு கால் பண்ணி கேட்டிருக்கலாமா?”

அட நீங்க வேற.நான் காணோம்னு சொன்னது தோழியை அல்ல. சூரியனை. அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு. உதிப்பதுதானே கிழக்கு? மறைவது மேற்குதானே? தோழிக்கு தெரிந்தால் கிண்டல் அடிப்பாளே..அவளை எப்படி சமாளிக்கலாம் என்று மூளையை.. சரி விடுங்க. காலைல இருந்து எல்லா திட்டமும் டமால் ஆவதால் மூளையை விட்டுடறேன். தோழியும் வந்தாள். அவளையே படமெடுத்துக் கொண்டிருந்தேன். போட்டிக்கு எடுக்கலையா என்றாள் தோழி.

“அது சும்மா கப்சா விட்டேன். உன்னை பீச்சுக்கு வரவைக்கதான் அப்படி சொன்னேன். சூரியன் உதிக்கிறதுதான் இங்க. மறையறதும் இங்கயா? நான் சொன்னா நம்பிட்டு வந்துடுவியா” என்றேன். சிரித்தாள். “உன் அளவுக்கு எனக்கு அறிவில்லைடா. அது மட்டுமில்லை. நீ எதை சொன்னாலும் நம்பிடுவேன்” என்று தோளில் சாய்ந்தாள். நான் சூரியனாக எரிந்துக் கொண்டிருந்தேன்.

சூரியன் என்று சொல்லும்போதுதான் ஞாபகம் வருது. கடைசியா போட்டிக்கு ஒரு படம் எடுத்து அனுப்பிவிட்டேன். இதுதான் அந்தப் படம்.

;;

;;

;;

;;

;;

;;

;;

;;

;;

 

Sura HQ 66

எதிர் நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டு பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை
குளிரும் பனிமலை குமுறும் எரிமலை
ரெண்டும் கலந்த இதயம்
ஏழை எங்கள் வாழ்வில் இவனே காலை உதயம்..

காலை உதயம்ன்னா சன்ரைஸ்தானே????????????????

 

all rights reserved to www.karkibava.com