Apr 27, 2010

சுறா – விமர்சனம் (first on net by KARKI)


 

தமிழ்ப்பதிவுலகில் சுறா படத்திற்கு இதுதான் முதல் விமர்சனம்  .

 

இரவு எட்டு மணிக்கு சென்னையில் கொளுத்திய வெயிலையும் துச்சமென மதித்து, வில்லு, குருவியென நான் பட்ட கொடுமைகளை ஒரு கையால் ஒதுக்கி வைத்து, “ஒரு தடவ கைய வச்சிட்ட அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது” என்ற டிரெய்லர் பன்ச் வசனத்தை வசதியாக மறந்துவிட்டு சுறாவைக் காண சூறாவளியாக கிளம்பினேன்.

சட்டை பட்டனை போடாமல் திறந்த மார்போடு அதே திருமலை விஜய். ஆனால் இதுவரை போடாத கலர்களில் இருக்கின்றன அவர் அணியும் சட்டைகள். படத்தின் இரண்டாம்  வித்தியாசம் அவரின் வீடு. கடற்கரையோரம் இருக்கிறது. இதுவரை எந்த விஜய் படத்திலும் இப்படி இருந்ததில்லை. அந்த குப்பத்தில் ஒரு போட்டி.  யார் கடலின் நடுவே சென்று நிறைய மீன் பிடித்து வருகிறார்கள் என்ற போட்டி. வழக்கமாய் ரன்னிங் ரேஸ், கார் ரேஸ் என்றுதான் இருக்கும். ஆனால் இதில் வித்தியாசமாய் கடலில் ஒரு போட்டி. வழக்கம் போல் விஜய்தான் ஜெயிக்கிறார். ஜெயித்தவுடன் பாடல்.

வெற்றிக் கொடியேத்து..வீசும் நம்ம காத்து.

வழக்கமாக பாடல் முடிந்தவுடன் காமெடியன் வருவார். அதிலும் வித்தியாசம். முதலில் தமன்னாவை காட்டுகிறார்கள். அதன் பின்னே வடிவேலு வருகிறார். 50வது படமென்பதால் ஏதாவது வித்தியாசமாய் செய்ய வேண்டுமென்ற விஜயின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொண்டு கதை செய்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அடுத்தடுத்த காட்சிகளில் இருவருக்கும் முட்டலும் மோதலுமாய் திரைக்கதை பயணிக்கிறது. நடுவில் குப்பத்தில் திருவிழா வருகிறது. சீரியல் பல்பு சகிதம் அடுத்த குத்திற்கு முக்கால் பேண்ட்டுடன் வருகிறார் விஜய்.

வங்க கடல் எல்லை. நான் சிங்கம் பெத்த பிள்ளை

வழக்கம் போல முழுப் பேண்ட் போடாதது, மார்க்கெட் போன நடிகையை ஆட வைக்காதது போன்றவை இந்தப் பாடலில் வித்தியாசமானவை. பாடல் முடிந்தவுடன் குப்பம் பற்றி எரிகிறது. துடித்து எழும் விஜய் சண்டை போடுகிறார். யார் இதற்கு காரணம் என்பதை யோசிக்கிறார். பின் அடுத்த நாள் தமன்னாவை சந்தித்து ரொமான்ஸ் செய்கிறார். முதலில் விஜய்க்கு காதல் வர உடனே ஃப்ளைட் பிடித்து நியிசிலாந்து சென்றுவிடுகிறார். பின்னாலே தமன்னாவும் தன்னைப் பற்றித்தான் பாடப்போகிறார் என்ற ஏக்கத்தோடு ஓடுகிறார். பாவம் அவர். விஜயின் பாடல் அவரை ஏமாற்றிவிடுகிறது.ஆம்

நான் நடந்தா அதிரடி..என் பேச்சு சரவெடி

என அங்கும் தன்னைப் பற்றியே பாடுகிறார் தளபதி. ஏமாற்றத்துடன் திரும்பும் தமன்னாவின் அப்பா, விஜயின் குப்பத்தை கோபுரமாக்க திட்டமிடுகிறார். அந்த இடத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலும், பீச் ரிசார்ட்டும் கட்ட ஏற்பாடு செய்கிறார். அவர்தான் குடிசைகளை எரித்தவர் என்பது தெரியவர அவரின் வீட்டிற்கு சென்று அவரை அடித்துவிடுகிறார். அடித்ததோடு இல்லாமல் பன்ச் வசனமும் பேசிவிட கொதிக்கிறார் வில்லன்.

இதுவரை எறா. இனிமேல் சுறா என இடைவேளை விடுகிறார்கள். இடைவேளை விட்ட நேரம் கேட்டின் அருகில் சின்ன இடைவெளி விட்டிருந்தாலும் ஓடி வந்திருப்பேன். மூடிவிட்டார்கள். நானும் மூடிக் கொண்டு மீதி படத்தை காண சென்றேன். சற்று தாமதமாகிவிட்டது. அதற்குள் குப்பத்து விஜய் கோட்சூட்டுடன் நடந்துக் கொண்டிருந்தார்.

தமிழன் வீரத்தமிழன்.. தலைமை தாங்கும் ஒருவன்

என்று பாடிக் கொண்டிருந்தார் யாரோ. என்னடா.. தண்ணியடிச்சிட்டு திரிஞ்சவன் தண்ணி பாக்கெட் வாங்குற கேப்புல தலைவன் ஆயிட்டானா என்ற சந்தேகத்துடன் அமர்ந்தேன்.பாடல் முடிந்தவுடன் தமன்னா அவரைத் தேடி வந்தார். அவரைத் தெரியாது என்று சொல்லிவிடுகிறார் தலைவர். அழுதுக்கொண்டே செல்லும் தமன்னாவை பார்த்து “இதுதான் அவ கண்ணுல இருந்து வரும் கடைசி துளி கண்ணீர்” என்கிறார் விஜய். இது தமன்னா காதில் விழுந்துவிட உடனே பாடல்

சிறகடிக்கும் நிலவு. கரம்பிடித்தது என்னை

பாடல் முடிவதற்கும் ரிசார்ட் கட்ட வில்லனுக்கு அப்ரூவல் கிடைப்பதற்கும் சரியாக பொருந்திவிட சீறுகிறார் விஜய் வில்லனை நோக்கி. மீண்டும் சண்டை. மீண்டும் ஒரு பாடல். இந்த முறை

தஞ்சாவூர் ஜில்லாக்காரி கச்சேரிக்கு வாயேண்டி

அதன் பின் க்ளைமேக்ஸில் வில்லன் குழுவை பந்தாடிய பின் சுபம் போட்டார்கள்.

இனிமேல் விஜய் என்னதான் வித்தியாசமாய் நடித்தாலும் நான் என் முடிவை மாற்றிக் கொள்ளபோவதில்லை. வேட்டைக்காரன், வில்லு போன்ற முன்பழமைத்துவ காவியத்தை பார்த்துவிட்டு இனி விஜய் படமே பார்க்கக்கூடாது என்று எடுத்த அதே முடிவை இன்றும் எடுத்தேன். இனிமேல் விஜய் படம் கே டிவியில் கூட பார்க்கப்போவதில்லை.

___________________________________________________________

டிஸ்கி: வெள்ளிக்கிழமை இளையதளபதியின் 50வது படம் சுறா வெளியாகிறது. பதிவர்கள் ஒரே நாளில் 3000 ஹிட்ஸ் அடிக்க இதைவிட்டால் வேறு வழியில்லை. எப்படியும் வெளிநாட்டு பதிவர்கள் 1000 ரூபாய் கொடுத்து பார்த்துவிட்டும், வியாழன் இரவும், இந்தியவாழ் பதிவர்கள் விடுமுறைப் போட்டு பகல்காட்சி பார்த்த பின்னும் விமர்சனம் (?) எழுத போகிறார்கள். பாவம் எதற்கு அவர்களுக்கு சிரமம் என்று படத்தில் வரப்போகும் காட்சிகளை பதிவாக தந்திருக்கிறேன். தலைப்பு மட்டும் அவரவர் திறமைக்கேற்ப வைத்து 3000, 4000 ஹிட்ஸ் அடிக்க வாழ்த்துகள். தலைப்பு கூட வைக்க தெரியாத விமர்சகர்களுக்கு சில ஐடியாக்கள்

சுறா -  இம்சை அரசனின் வறுத்த புறா

சுறா -  காஞ்சு போன கருவாடு

சுறா -  ஒரு முன்,பின்,நடு,சைடு நவீன காவியம்

சுறா – விதியின் சதி

சுறா -  திருந்தாத விஜய்

சுறா : தமிழ் சினிமாவின் அசிங்கம்

76 கருத்துக்குத்து:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 27, 2010 at 11:29 PM said...

சுறா விமர்சனம் - கார்க்கி எடுத்த **தி.

க்ளிங்!!

பிரசன்னா on April 27, 2010 at 11:30 PM said...

என்னா ஒரு வில்லத்தனம் :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 27, 2010 at 11:31 PM said...

//சீரியல் பல்பு சகிதம் அடுத்த குத்திற்கு முக்கால் பேண்ட்டுடன் வருகிறார் விஜய்.//

ஆஹா! அசத்தல்..

ஜில்தண்ணி on April 27, 2010 at 11:32 PM said...

நல்லா சொன்னீங்க தல

அந்த ரெண்டு சட்ட போட்டவர பத்தி நல்ல
புரிஞ்சி வச்சிருகீங்க(ஆமாம் அவர பத்திதான் ஊருக்கே தெரியும்ல)

\\இனி விஜய் படமே பார்க்கக்கூடாது என்று எடுத்த அதே முடிவை இன்றும் எடுத்தேன். இனிமேல் விஜய் படம் கே டிவியில் கூட பார்க்கப்போவதில்லை.\\

நானும் அப்டித்தான்,ஆனா அந்த மூஞ்ச தினமும் சன் டீவில பாக்குர கொடும தாங்கல
,ஒரு மாசத்துக்கு சன் டீவி கூட பார்க்க கூடாது போலிருக்கு

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 27, 2010 at 11:33 PM said...

// அதற்குள் குப்பத்து விஜய் கோட்சூட்டுடன் நடந்துக் கொண்டிருந்தார்.//

அப்ப பின்னாடி அந்த ஹெலிகாப்டர் சீன் மறந்து பழைய படத்துலேர்ந்து போட்டாய்ங்களோ??

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 27, 2010 at 11:36 PM said...

அப்படியே ..

சரி வேணாம்.. :))

நல்லா இரு கார்ர்ர்ர்க்கி! :)

சுசி on April 27, 2010 at 11:40 PM said...

// எப்படியும் வெளிநாட்டு பதிவர்கள் 1000 ரூபாய் கொடுத்து பார்த்துவிட்டும்,//

உங்களுக்கு நக்கல் இருக்கலாம் கார்க்கி.. நளினம் இருக்கக் கூடாது..

மே 4 வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய பாவப்பட்ட ஜென்மங்கள் நாங்க.. :((

நேசன்..., on April 28, 2010 at 12:13 AM said...

எனக்கு தண்ணியோ,மின்சாரமோ,உணவோ,பணமோ எதை வீணாக்குனாலும் பிடிக்காது.....போலவே தன் திறமையை வீணாக்குனாலும் கொஞ்சமும் பிடிக்காது!.......இதுக்குப் பதிலா ஏழுவைப் பத்தியோ,பப்லுவைப் பத்தியோ எழுதி இருக்கலாம்!....சாரி சகா!.........

taaru on April 28, 2010 at 5:56 AM said...

அந்த நேர்மை பிடிச்சிருக்கு...சகா....
பப்லுவ கூட்டி போய் இருந்த செம treat ஆக இருந்திருக்கும்.... தவறிட்டீங்க....

சக்தி on April 28, 2010 at 7:59 AM said...

unga approch enakku romba pidichu irukku......

Indian on April 28, 2010 at 8:13 AM said...

:)

கார்க்கி on April 28, 2010 at 8:25 AM said...

டம்பி மேவீ on April 28, 2010 6:19 AM said...
சுறா - சுவைக்க தேவை இல்லை

சுறா - சிறகு ஒடிந்த புறா

சுறா - சுக்கு நூறாய்

(ஏதோ என்னால் முடிந்தது )
______________________

யாசவி on April 28, 2010 6:31 AM said...
Dear Karki,

உண்மையாலுமே விமர்சனம் என்று வந்தால்.... நற நற...

நீங்க காலய்ச்ச மாதிரியே உண்மையாலுமே படம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பார்த்து கலாய்க்கவும். :))

எப்ப்டியோ மற்றவர்களைவிட அட்வான்ஸ்டா ஹிட் அடிக்கிறீங்க
___________________

ஜெட்லி on April 28, 2010 7:12 AM said...
சுறா படத்துக்கு டிக்கெட் வாங்கும் போது ஒரு தடவைக்கு நூறு
தடவை யோசிச்சு வாங்கு.....
ஒரு தடவை வாங்கிட்ட அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது!!

--புதிய ட்ரைலர்!!
_______________________

கயல்விழி நடனம் on April 28, 2010 7:56 AM said...
நாராயணா...

காவேரி கணேஷ் on April 28, 2010 at 8:31 AM said...

இந்த பையன் இங்கிட்டும் பேசுறான், அங்கிட்டும் பேசுறான்.

எந்த பக்கம்னு எனக்கு புரியல.

Sukumar Swaminathan on April 28, 2010 at 8:34 AM said...

ட்ரைலர் பார்த்தாலே நீங்க எழுதி இருக்கிற விமர்சனம் 90% மேட்ச் ஆகும்னு தோணுது.. கலக்கல்ஸ் தல.. ஒ.. சாரி தளபதி...

"ராஜா" on April 28, 2010 at 9:06 AM said...

என்ன சகா நீங்களே இப்படி கலாய்ச்சிபுட்டீங்க.... நாங்க என்ன பண்றது...

எது எப்படியோ வரும் வெள்ளி உங்களுக்கு ரொம்ப சந்தோசமான நாளாய் அமைய வாழ்த்துக்கள்...

Ganesh on April 28, 2010 at 9:30 AM said...

ஒரு " 'சுறா'வலி" தொடங்கியதே...

நடத்துங்க சகா....:))

T.V.ராதாகிருஷ்ணன் on April 28, 2010 at 9:32 AM said...

அசத்தல்..

♠ ராஜு ♠ on April 28, 2010 at 9:39 AM said...

வ்வ்வ்வ்வாழ்த்துக்கள் சொன்னேங்க...!

raja on April 28, 2010 at 9:52 AM said...

சுறா தமிழ்நாட்டின் அவலம் மற்றும் மக்கள் ரசனையின் கீழ்த்தரம்.

புன்னகை on April 28, 2010 at 10:01 AM said...

விமர்சனம் எல்லாம் போதாது! படத்துக்குக் கூட்டிட்டுப் போகணும். உங்களுக்கு ஒரு துக்கம்னா நாங்களும் அதுல பங்கெடுத்துக்கணும் இல்ல?

vanila on April 28, 2010 at 10:08 AM said...

Kalakkal Karki..

முகிலன் on April 28, 2010 at 10:36 AM said...

நான் இன்னும் குருவியே பாக்கலை..

அதுக்குள்ள சுறாவா?

வெற்றி on April 28, 2010 at 10:43 AM said...

:(

லோகேஷ்வரன் on April 28, 2010 at 10:50 AM said...

சகா நீங்க என்ன சொன்னாலும் பதிவர்கள் கேட்க மாட்டார்கள் ...கருணாநிதி சொன்னது போல் '' திட்டினாலும் பாராட்டினாலும் என் பெயரை வைத்து கொண்டு தான் தமிழக அரசியல் செய்ய முடியும்" ...... அது போல் தான் விஜய் யும் " திட்டினாலும் பாராட்டினாலும் விஜய் பெயரை வைத்துகொண்டு தான் தமிழ் சினிமா இருக்கும் ....

கார்க்கி on April 28, 2010 at 10:58 AM said...

அனைவருக்கும் நன்றி

நான் சொல்ல வர்றது என்னனன்னா, எப்படியும் விஜய் அவர் ரூட்லதான் படம் எடுத்து இருப்பாரு.அது நல்லா வந்திருக்கா இல்லையான்னு கேட்டுட்டு போங்க. அப்புறம் வந்து தலை வலிக்குது , விரல் வலிகுதுன்னு அழாதிங்க..

எழுதி வச்சிக்கொங்க, குறைஞ்சுது 25 விமர்சனம் அவ்ரும் முதள் ரெண்டு நாளில். எல்லோருக்கும் 2000 ஹிட்ஸ் நிச்சயம்.. :))

மோகன் குமார் on April 28, 2010 at 11:03 AM said...

எவ்ளோ பெரிய டிஸ்கி!!

குடுகுடுப்பை on April 28, 2010 at 11:21 AM said...

முன் பழமைத்துவ காவியத்துக்கு அப்புறம் விசய் படத்த 99C டிவிடில கூட பாக்கிறதில்லை.
இப்போ கூட 6 டாலருக்கு ஷோ இருக்கு. 3000ஹிட்டுக்காக 6 டாலர் வொர்த்தான்னு யோசிக்கறேன்

குடுகுடுப்பை on April 28, 2010 at 11:22 AM said...

என்னையும் ஜீப்புல ஏத்துனதுக்கு நன்றிங்கண்ணா

ர‌கு on April 28, 2010 at 11:50 AM said...

கார்க்கி! யாரோ உங்க‌ ப்ளாகை ஹேக் ப‌ண்ணி, எப்ப‌டிலாம் எழுதியிருக்காங்க‌ பாருங்க‌...இத‌ கேக்க‌ யாருமே இல்லியா?!

//எழுதி வச்சிக்கொங்க, குறைஞ்சுது 25 விமர்சனம் அவ்ரும் முதள் ரெண்டு நாளில். எல்லோருக்கும் 2000 ஹிட்ஸ் நிச்சயம்.. :))//

என்ன‌ ச‌கா இது? "25 விமர்சனம் அவ்ரும்" வ‌ர‌ வ‌ர‌ வ‌ல்க‌ரா எழுத‌றீங்க‌ ;) க‌லாய்க்க‌ற‌துக்காக‌வாவ‌து பார்த்துதானே ஆக‌ணும்.

எம்ஜிஆர், ர‌ஜினியோட‌ ம‌சாலா ப‌ட‌ங்க‌ளும் அதே "எழைக‌ளுக்காக‌ போராடுப‌வ‌ன் vs. ப‌ண‌க்கார‌ வில்ல‌ன்" டெம்ப்ளேட்தான். ஆனா திரைக்க‌தையும், இய‌க்க‌மும் அவ‌ங்க‌ளுக்கு பெரிய‌ ப‌ல‌மா இருந்த‌து. விஜ‌ய் கோட்டை விடுவ‌தே இதில்தான்.

எங்கேயோ மாடியில் இருந்துகிட்டு தூர‌ இருக்க‌ற‌ ர‌யில் பால‌த்துக்கு தாவ‌ற‌து, ப‌ல்லாலேயே காரை ஓட்டுற‌துலாம்...விஜ‌ய் இல்ல‌, அஜித், சூர்யா, விக்ர‌ம்னு யார் ப‌ண்ணாலும் க‌லாய்க்க‌ணும்னுதான் தோணும். அவ‌ர் மாறித்தான் ஆக‌ணும் ச‌கா :)

ezhil on April 28, 2010 at 12:11 PM said...

Innum padamae release aagala adhukulae va..

கார்க்கி on April 28, 2010 at 12:14 PM said...

குடுகுடுப்பை, அதுக்கு எதுக்கு 6 டாலர் கொடுத்து பார்கனும் சகா? மத்தவங்க மாதிரி பார்க்காமலே கூட எழுதலாம் இல்ல? அதுக்குதான் பதிவு போட்டிருக்கேன் :)))

ஆனா அந்த வில்லு பதிவு எனக்கும் பிடிக்கும். ஹிஹிஹி

ரகு,
அவங்கள் விட நீங்க ரொம்ப பொங்கறீங்க அநியாயத்த கண்ட பொங்கறீங்க சகா. நான் என்ன சொல்றேனா, அவர் திருந்தமாட்டார். பறக்கத்தான் போறார்.எதுக்கு மொத நாளே அடிச்சு புடிச்சு பார்க்கனும் சொல்லுங்க?

அப்புறம் ஆதவன் சூர்யா விஜய ஓவெர்டேக் பண்ண முயற்சி செய்தார். எத்தனை பேர் கலாய்ச்சாங்க பாஸ்?

Bala on April 28, 2010 at 12:14 PM said...

உங்கள் பதிவு விரக்தியின் வெளிப்பாடா? இல்லை தன்னைத்தானே கிண்டல் செய்துகொண்டால் அடுத்தவர் கிண்டலில் இருந்து தப்பலாம் என்ற ஐடியாவா? என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு புத்திசாலித்தனமான பதிவு. படம் தோல்வி அடைந்ததால் நான்தான் முதல்லேயே ஒத்துக்கிட்டேன்ல என்று எஸ்கேப் ஆகிடலாம். வெற்றி பெற்றுட்டா வயத்தெரிச்சல் பிடிச்சவங்க எல்லாம் இந்த பதிவ படிச்சுட்டு ஆறுதல் அடைந்துகொள்ளுங்கள் என்று சொல்லி விடலாம். சுறாவை கிண்டல் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, விஜய் எதிர்ப்பாளர்களை கிண்டல் செய்துள்ளீர்கள் என்று நன்றாக தெரிகிறது.

நீங்களும் (உங்களை மட்டும் அல்ல) எப்படியாவது படம் வெளியான அன்றே பார்த்துவிட்டு, புட்டு இல்ல ஹிட்டு, வெச்சது எதிரிக்கு வேட்டு என்று ஏதாவது ஒரு பதிவை வெளியிடுவீர்களே. அதற்கும் மாதிரி பதிவு ஒன்று போட்டால் சுறாவை சூப்பர் என்று விமர்சனம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

Ponkarthik on April 28, 2010 at 1:09 PM said...

என்ன சகா? நீங்களே இப்படி சொன்னா எப்படி?

கே.ஆர்.பி.செந்தில் on April 28, 2010 at 1:28 PM said...

//சுறா படத்துக்கு டிக்கெட் வாங்கும் போது ஒரு தடவைக்கு நூறு
தடவை யோசிச்சு வாங்கு.....
ஒரு தடவை வாங்கிட்ட அப்புறம் உன்னால யோசிக்கவே முடியாது!!//


நான் திருட்டு DVD- ல கூட பாக்கறது இல்ல

கார்க்கி on April 28, 2010 at 1:44 PM said...

/சுறாவை கிண்டல் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, விஜய் எதிர்ப்பாளர்களை கிண்டல் செய்துள்ளீர்கள் என்று நன்றாக தெரிகிறது./

நீங்க ஷார்ப் சகா..ஹிஹிஹிஹி

கே.ஆர்.பி செந்தில்,
விண்ணைத் தாண்டி வருவாயா தஙக்ளின் பிடித்தமான படமென்று அறிந்தேன். அந்தளவிற்கு விஜய் படஙக்ள் நிச்சயம் இருக்காது சார். :))

ர‌கு on April 28, 2010 at 1:49 PM said...

//ரகு,
அவங்கள் விட நீங்க ரொம்ப பொங்கறீங்க அநியாயத்த கண்ட பொங்கறீங்க சகா.//

ஹாஹ்ஹா, நீங்க‌ வேற‌ ச‌கா, பொங்க‌லும் இல்ல‌, தீபாவ‌ளியும் இல்ல‌. என‌க்கு போக்கிரியும் புடிச்சிருந்த‌து (பெல் பாட்ட‌ம் போலீஸ் த‌விர்த்து), பில்லாவும் புடிச்சிருந்த‌து. ஆனா குருவியும், வில்லுவும், புடிக்க‌ல‌. அதே ம‌ன‌நிலைதான் ஏக‌னும், அச‌லும் பார்த்த‌போது.

ஒரே ஒரு உதார‌ண‌ம். இர‌ண்டு வ‌ரி க‌தையாக‌ 'அழ‌கிய‌ த‌மிழ் ம‌க‌ன்' பட‌த்தை யோசிச்சு பாருங்க‌. "சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளால் த‌ன‌க்கு ஈஎஸ்பி ப‌வ‌ர் இருப்ப‌தை தெரிஞ்சுக்க‌றார் ஹீரோ. ஒரு க‌ட்ட‌த்தில் த‌ன் காத‌லியையே கொலை செய்ய‌ற‌து போல் அவ‌ருக்கு தோணுது. அதுக்க‌ப்புற‌ம்...." கிண்ட‌ல் ப‌ண்ண‌ல‌, சீரிய‌ஸா சொல்றேன்...சூப்ப‌ரா வ‌ந்திருக்க‌வேண்டிய‌ ப‌ட‌ம் இது. ரொம்ப‌ சாதார‌ண‌மான‌ திரைக்க‌தையால‌, செம்ம்ம‌ சொத‌ப்ப‌ல்.

க‌தை எவ்வ‌ள‌வு வேணும்னாலும் அர‌த‌ப் ப‌ழ‌சா இருக்க‌லாம். ஆனா திரைக்க‌தைல‌ விறுவிறுப்பு இருந்தா ச‌க்ஸ‌ஸ் நிச்ச‌ய‌ம். இதுக்கு உதார‌ண‌ம் போக்கிரி.

திரைக்க‌தையை தேர்வு செய்யும்போதுதான் விஜ‌ய் சொத‌ப்புறார். ம‌த்த‌ப‌டி நிறைய‌ புது இய‌க்குன‌ர்க‌ளை அவ‌ர் அறிமுக‌ப்ப‌டுத்துவ‌து பாராட்ட‌ப்ப‌ட‌வேண்டிய‌ விஷ‌ய‌ம்தான்!

கார்க்கி on April 28, 2010 at 2:00 PM said...

ரகு,

நான் சும்மா நக்கல் தான் செய்தேன். :))

அப்புறம் நீங்க சொல்வதை ஏற்கிறேன். சினிமாவைப் பற்றி சத்யஜித் ரே சொன்னது. எவ்வளவுதான் உழைத்தாலும் ஒரு படம் நல்ல படமா, மகக்ள ஏத்துப்பாஙக்ளா என்பது படம் வெளிவந்த பின் தான் தெரியும்.

வார்த்தையால் கதையும், புத்தகத்தில் திரைக்கதையாக பார்ப்பதற்கும் காட்சியாக பார்ப்பதற்கும் எவ்ளோ வித்தியாசம் இருக்கிறது. அவ்வளவு எளிதில் அதை கணித்து விட முடியாது. அந்த சூட்சமம் ஒருவருக்கு தெரிந்துவிட்டால் எத்தனை கோடி கொடுத்தாவது ஹீரோக்கள் அவருடனே வைத்துக் கொள்வார்கள்.

ஆயுத எழுத்து.. கதையாக யோசியுங்கள். என்னை அசத்துகிறது. ஆனால் படமாக அது மகா குப்பை என்பது என் அபிப்பிராயம்.(நான் சூர்யா, மாதவன் நடிப்பை சொல்லவில்லை)

தனக்கு கெட் அப் சேஞ்ச் ஒத்துவராது என்பது விஜய் தெரிந்து வைத்திருக்கிறார். தனக்கு ஒவ்வாத படஙக்ளை அவர் விலக்குவதன் மூலம் நல்லதுச் செய்கிறார் என்பது என் எண்ணம். புது இயக்குனரக்ளை அறிமுகம் செய்கிறார். அவர் தானே சச்சின் நடித்தார்? அவர் தானே வசீகராவில் நடிகையில் காலில் விழும்படி நடித்தார்? ஹீரோயிசம் மட்டுமே நம்பினால் அந்த படஙக்ளை அவர் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்.

எந்த திரைக்கதை படமாக பட்டயை கிளப்பும் என்பது 100% யாராலும் சொல்ல முடியாது. அது விஜயின் தவறல்லம் என்பதே என் வாதம்.

அதிஷா on April 28, 2010 at 3:29 PM said...

மச்சி அப்புறம் அந்த போட்டோவ ரிலீஸ் பண்ணிரலாமா?

டிக்கட் புக் பண்ணியாச்சா..!

-விஜய் படங்களை முதல்நாளே பார்ப்போர் சங்கம்

க‌ரிச‌ல்கார‌ன் on April 28, 2010 at 4:48 PM said...

விஜய் படங்களை முதல்நாளே பார்ப்போர் சங்கம்

அதிஷா

இந்த‌ சங்க‌ம் "த‌மிழ் வ‌லைப‌திவாள‌ர்க‌ள் ச‌ங்க‌த்தோடு இணைக்க‌ப்ப‌ட்ட‌தா"???????????

க‌ரிச‌ல்கார‌ன் on April 28, 2010 at 4:48 PM said...

ப‌ட‌ம் ப‌ர்ஸ்ட் ஷோ முடிஞ்ச‌ உட‌னே 5 ம‌ணி நேர‌த்திற்கு "அவங்க‌" ஏரியால‌ எல்லாம் மின்சார‌ம் இருக்காது என‌ ஆற்காடு வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவித்த‌ன‌.

"அவ‌ங்க‌" எல்லாம் சுட‌ சுட‌ எழுத‌ முடியாம என்ன‌ ஆக‌ப் போறாங்க‌ளோ ?????????

"உழவன்" "Uzhavan" on April 28, 2010 at 5:14 PM said...

//இனிமேல் விஜய் படம் கே டிவியில் கூட பார்க்கப்போவதில்லை//
 
இந்த முடிவெல்லாம் நாங்க எப்பவோ எடுத்துட்டோம் தல :-)

அன்புடன் அருணா on April 28, 2010 at 5:35 PM said...

படிச்சுட்டிருக்கும் போதே இது கார்க்கி படமாத்தான் இருக்கும்னு நினைச்சேன்!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on April 28, 2010 at 6:15 PM said...

நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க போங்க

RaGhaV on April 28, 2010 at 6:22 PM said...

சகா.. கதை சூப்பர்.. நீங்க வேணும்னா இந்த கதைய அவர்ட சொல்லுங்க.. அடுத்த படத்த இயக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.. ;-)

நந்தா on April 28, 2010 at 6:40 PM said...

பாலாவின் கருத்துக்களுடன் முழுக்க ஒத்துப் போகிறேன்.

வசீகரா படத்தில் காலி விழுந்த மாதிரி நடிக்கறது, சச்சினில் புதுமுக இயக்குநர் அறிமுகம் போன்ற சொத்தை காரணங்களை வைத்துக் கொண்டு மட்டும் விஜய்யை அணுக வேண்டும் என்றால் அது வெகு தட்டையான பார்வை.

என்னுடைய படம் உலகப்படத் தரமானது என்று சொல்லி விட்டால் அதை வாந்தி என்று என்ன வேண்டுமானாலும் கிழிக்கலாம் என்று சொல்லும் நீங்கள் அப்படி ஒரு வாதத்தை விஜய் படங்கள் வைக்க வில்லை என்பதற்காகா பிடிச்சா பாருங்க, பிடிக்கலைன்னா பார்க்காதீங்க என்ற ரீதியில் பதில் சொல்ல முயற்சிப்பீர்களேயானால், அது மிக தவறான பார்வை.

விஜய் உட்பட மோசமான சினிமாக்களின் மீதான காட்டமான விமர்சனமென்பது தமிழ் சினிமாவின் பரிணாமத்திற்கு மிக முக்கிய ஒன்று. அந்த அடிப்படையில் எந்த ஒரு படம் குறித்தும் காட்டமாகவோ, மிதமாகவோ, விமர்சனம் செய்யலாம்.

http://blog.nandhaonline.com

SShathiesh-சதீஷ். on April 28, 2010 at 7:46 PM said...

அதே அதே அதே. ஆமா காரிக்கி நீங்க நல்லவரா கெட்டவரா வில்லனா வில்லாதி வில்லனா? ஒண்ணுமே புரியல. ஆனால் உங்கள் பதிவு சரியானதே. இப்படித்தான் விமர்சனங்கள் வரும். சிலரை திருத்தமுடியாது.

இதே டைப்பில் நான் அசலுக்கு எழுதிய பதிவு கொஞ்சம் படித்துப்பாருங்கள்.

http://sshathiesh.blogspot.com/2010/02/blog-post_03.html

தேஜஸ்வினி on April 28, 2010 at 8:30 PM said...

சன் டீவில வரும் வெள்ளி முதல் சுறா னு தான் விளம்பரமே போடுறாங்க ஏதோ மெகா சீரியலுக்கு போடுறமாதிரி

அதிலை on April 28, 2010 at 9:12 PM said...

'வலை'யில் சிக்கிய சுறா !!

கார்க்கி on April 28, 2010 at 10:13 PM said...

அனைவருக்கும் நன்றி....

நந்தா,

நான் விரும்பி படிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். அதனால் நான் நினைப்பதை விளக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்.

என் பார்வை தட்டையானதுதான். எல்லாவற்றையும் மேலோட்டமாக பார்ப்பதாலே பல உன்னதங்களை நான் இழக்கிறேன். ஆனால் அதுவே பல சமயம் எனக்கு கேடயமாக இருக்கிறது. எனக்கு இது வசதியாக இருக்கிறது.

விஜய்க்கு வருவோம். அங்காடித் தெரு போன்ற சினிமாக்களையும் சுறாவையும் ஒரே தராசில் வைத்து எடை போடுவதுதான் தட்டையான வாதம், அறிவிலித்தனமான செயல் என்கிறேன் நான். ஆயிரத்தில் ஒருவனை பிடிக்கவில்லையென்றேன். ஏன்? அதில் பன்ச் டயலாக் இல்லை என்பதாலா? உலக சினிமாவுக்காக தகுதி அதில் இல்லை என்பதால். அந்த படத்தை எப்படி பார்க்க வேண்டுமோ அப்படித்தான் நான் பார்த்தேன். ஆனால் வேட்டைக்காரையும், குருவியையும் விமர்சித்தவர்வர்கள் சொன்ன காரணம் என்ன? அதில் அங்காடி தெரு போல் நல்ல கதை இல்லை என்பதே.

இதில் யாருடைய பார்வை தவறானது? எங்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தது. அது முடிய ஒரு வாரம் ஆனது. எல்லோரும் களைப்பாக இருக்க, வெளிய செல்ல முடிவெடுத்தோம். அப்போது அங்காடி தெரு வந்திருந்தது. அதற்கா போக முடியும்? குழந்தை முதல் பெரியவர் வரை எல்லோரும் இருந்தோம். வேறு வழியில்லாமல் பையா போனோம்.வெளியே வந்த பலர் சொன்னது சுறா வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். அதில் பலர் சினிமா பார்த்து வருடமாகிறது. விஜயை டிவியில் பார்த்து ரசிக்கிறார்கள். பெரிய திரையில் காண ஆசைப்படுகிறார்கள். அவர்களும் அங்காடி தெரு பார்த்து அழ வேண்டுமென்கிரீர்களா? அவர்களைப் போன்றவர்களுக்கு தனியா சினிமா வரக்கூடாதா? அதுதான் விஜய் படம். ரஜினி படம்.

சமூக அக்கறையும், கூர்மையான பார்வையும் உடையவர்கள் அ.தெரு பாருங்களேன். ஏன் சுறாவுக்கு வருகிறீர்கள் என்பதே என் வாதம். இது போன்ற ஆட்கள் திருட்டு சிடியில் பார்க்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

யாராவ்து ஒருவர் விஜயின் படங்கள் குழந்தைகள் பார்க்கிறார்கள். ஆபாசமான விஷயங்களை குறைக்கலாம். வன்முறையை குறைக்கலாம் என்று சொன்னால் நானும் சேர்ந்து கொள்கிறேன். கூடவே கூடாது என்பது எந்த விதத்தில் சரி?

//விஜய் உட்பட மோசமான சினிமாக்களின் மீதான காட்டமான விமர்சனமென்பது தமிழ் சினிமாவின் பரிணாமத்திற்கு மிக முக்கிய ஒன்று//

என்ன சகா இது? எந்த நாட்டில் பாப்கார்ன் படங்கள் வரவில்லை? வெறும் அவார்ட் படம் மட்டுமே வரும் நாடு என்று ஒன்று உண்டா? அது வந்தால் இது அழியும் என்பது தட்டையான இல்லை இல்லை மொக்கையான வாதம்.

டிமாண்ட் இருக்கும் இடத்தில்தான் சப்ளை இருக்கும். நல்ல படங்களின் ஆர்வலரக்ள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. ஆனால் அதற்கான சந்தை உருவாகவில்லை. காரணம் அவர்கள் தியேட்டர் செல்வதில்லை. அதை செய்யாமல் விஜய் மேல் குற்றம் சாட்டுவது சரியா?

இரண்டு கோடுகளில் ஒன்றை பெரிதாக்க இரண்டு வழியுண்டு. ஒரு கோட்டைஒ பெரிதாக்கலாம். அல்லது அடுத்த கோட்டை அழித்து குட்டைய்யாக்கலாம். இரண்டாம் வழி வேலைககவாது சகா. அதைத்தான் நீஙக்ள் வேண்டும் என்கிறீர்கள்.

எனக்கு இரண்டு வகை படஙக்ளும் பிடிக்கும். கலைக்கு அ.தெரு. கொண்டாட்டத்திற்கு சுறா... :)))

ILA(@)இளா on April 29, 2010 at 2:26 AM said...

//சமூக அக்கறையும், கூர்மையான பார்வையும் உடையவர்கள் அ.தெரு பாருங்களேன்.//

So vijay padam paarkiravangkaLukku?

www.yestamil.com on April 29, 2010 at 4:26 AM said...

Hi author, the best review. more than 80% of the movie going to be like that... I agree with you

மகேஷ் : ரசிகன் on April 29, 2010 at 8:29 AM said...

சப்ப மேட்டர் சகா...

எந்தப் படத்துக்கும் எதிர்பார்ர்ப்பில்லாமல் போய் உட்கார்ந்தாலே 85% படங்களைப் பார்க்கலாம்.

இங்கு விமார்சனங்கள் காட்டமாக இருப்பதன் காரணம் ஏமாற்றப்படுவது தான்.

லோகேஷ்வரன் on April 29, 2010 at 9:41 AM said...

//எனக்கு இரண்டு வகை படஙக்ளும் பிடிக்கும். கலைக்கு அ.தெரு. கொண்டாட்டத்திற்கு சுறா... :)))//

Excellent point karki...

"ராஜா" on April 29, 2010 at 9:52 AM said...

//அவர்களும் அங்காடி தெரு பார்த்து அழ வேண்டுமென்கிரீர்களா? அவர்களைப் போன்றவர்களுக்கு தனியா சினிமா வரக்கூடாதா? அதுதான் விஜய் படம். ரஜினி படம்.

ரஜினி சரி ஆனா விஜய் கொஞ்சம் இடிக்கிதே? நீங்கள் சொல்லும் கருத்துக்கள் உண்மைதான் , ஆனால் மக்கள் விரும்பும் பொழுதுபோக்கு படங்கள் ரஜினி படங்களை போன்று அனைத்து தரப்பினரும் பார்க்கும்படியான எதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்கும் கதையம்சம் கொண்ட படங்களே .... சாமி , தூள் , கில்லி , வரலாறு , கஜினி , அயன் , காக்க காக்க போன்ற படங்களே அதற்க்கு உதாரணம் ... நீங்கள் அதில் விசையின் அனைத்து படங்களையும் இணைத்து சொல்லுவது கண்டிப்பாய் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று... அந்த மாதிரியான படங்களை தருவதில் கொஞ்ச வருடங்களுக்கு முன் விக்ரம் முன்னிலையில் இருந்தார். இப்பொழுது சூரியாதான் முன்னிலையில் உள்ளார் என்பது என்னுடைய அபிப்பிராயம்...


சுராவை கொண்டாடலாம் அதில் மசாலா படங்களுக்குரிய விறுவிறுப்பு இருந்தால்.... எப்படி ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு உலக சினிமாவுக்குரிய தகுதி இல்லை என்பதால் நீங்கள் அதை நிராகரித்தீர்களோ அதே போல் மசாலா படங்களுக்குரிய தகுதி இல்லை என்றால் அது ரஜினியே நடித்த படம் என்றாலும் மக்கள் நிராகரித்து விடுவார்கள்... விஜயின் இன்றைய இறங்குமுகத்துக்கு காரணம் அதுதான்...

கார்க்கி on April 29, 2010 at 10:08 AM said...

@இளா,
குறைந்தபட்சம் விஜயின் படங்கள் பார்க்கும்போது வேண்டாம் என்கிறேன். :)))

@மகேஷ்,
ஏற்றுக் கொள்கிறேன். விஜயின் படத்தில் புதுமையும், நடிப்பும் அருவியாக கொட்டும் என எதிர்பார்த்து போய் நொந்துபோவது யார் தவறு?

@ராஜா,
சாமி, தூள், கில்லி, அயன் போன்ற பிளாக்பஸ்டர்களின் நடுவே வரலாற்றையும் சேர்த்த உங்க மைக்ரோ நுண்ணரசியலை ரசித்து, வணங்குகிறேன். காக்க காக்க மசால படம் என்றதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் உஙக்ளை என்ன செய்ய போகிறதோ என்ற அச்சமே எனக்கு..

ரஜினியின் பாதையது. எல்லா படமுமே நாம் நினைப்பது போல இல்லையே. அதே போல்தான் விஜயின் பாதை அது. அசித்தின் பாதையும் அதுதான்.

இது போன்ர கமர்ஷியில் படம் சூர்யாவிற்கு அயன் மட்டுமே. ஆதவன் அவ்வளவு பெரிய ஹிட்டில்லை. அதற்குள் சூர்யா வந்துவிட்டார் என்பது தஙக்ளின் மனபிராந்தியாக இருக்கலாம். அது உண்மையென்றால் நன்றாக நடிக்க கூடியா சூர்யா இபப்டி ஆகிவிட்டாரே என்ற கவலையே எனக்கு வருகிறது.

உஙக்ள் நிலைதான் பாவம். இது போன்ற படஙக்ளின் வரிசையில் கூட தஙக்ளின் அபிமான நடிகரின் பெயர் சொல்ல முடியாமல் சூர்யா, விக்ரம் என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறதே. அய்யகோ!!!

:)))))

Bhupesh Balan on April 29, 2010 at 10:39 AM said...

கார்க்கி, நான் உங்கள் வலைபக்கத்தின் நெடுநாள் வாசகன்.

நம்மை குதூகலப்படுத்தும், அழவைக்கும், ஆச்சர்யப்படுத்தும் எல்லா படங்களுமே நல்ல படங்கள்தான். ஆனால், வெறுப்பை ஏற்ப்படுத்தும், எரிச்சல்படுத்தும் படங்களை யாரும் ரசிப்பதில்லை.

தான் நடிக்கும் கதாபாத்திரத்தை முன்னிறுத்தாமல் தன்னை முன்னிறுத்த முயற்சி செய்கிறார் விஜய் என்பதுதான் பிரச்சினை. நாற்காலி கனவை மனதில் கொண்டு, கதாபாத்திரத்தை மீறி விஜய் பேசும் வசனங்கள் எரிச்சலை ஏற்படுத்துவதால் அவர் படங்களை ரசிக்க முடியவில்லை எனபது மறுக்க முடியாத உண்மை. இதே பாணியில் நடிக்க முயற்சிக்கும் எல்லா நடிகர்களுக்கும் இது பொருந்தும்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 'ஆக்சன்' ஹீரோவை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் 'மாஸ் ஹீரோ' என்ற அசட்டுத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. 'மாஸ்' ஹீரோ என்ற போலியான பிம்பத்தை விட்டு நடிகர்கள் வெளியே வர வேண்டும்.

கார்க்கி on April 29, 2010 at 10:53 AM said...

@பூபேஷ்,

எனக்கும் விஜயின் அரசியல் ஆசை மீது விருப்பமில்லை. அவரை திரையில் மட்டுமே ரசிப்பவன்...

இதுவரை பெரிதாக அவரின் அரசியல் வசனங்கள் என்னை கடுபேற்றவில்லை. உங்களை அப்படி செய்திருந்தால் அதை ஏற்கிறேன்.

அந்த ஒன்று இல்லையென்றால் விஜயி ஏற்றுக் கொள்வீர்களா? :)))

Bhupesh Balan on April 29, 2010 at 11:12 AM said...

சில விஜய் படங்கள் எனக்கு பிடிக்கும். பொதுவாக ஹீரோக்களை மட்டும் வைத்து நான் படம் பார்ப்பது இல்லை.

கார்க்கி on April 29, 2010 at 11:31 AM said...

பின்நவீனம் அதுதான் சொல்கிறது சஹா. எனக்கு ஜெமோ பிடிக்கும், சுஜாதா பிடிக்கும்னு சொல்லக் கூடதான். எனக்கு ஏழாம் உலகம் பிடிக்கும். பிரிவோம் சந்திப்போம் பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டுமாம். அபப்டியிருக்க விஜய் ஃபேன் என்றால் லோ கிளாஸ் , கமல் ஃபேன் என்றால் ஹை கிளாஸ் என்பது சொத்தை வாதம்

எவன் ஒருவருக்கும் ரசிகன் என்பதே இழுக்கு என்றாவது சொல்லலாம். :)))

அதிஷா on April 29, 2010 at 11:32 AM said...

பின்நவீனம் அதுதான் சொல்கிறது சஹா.//

மாம்ஸ் நிஜமாதான் சொல்றீயா?

கார்க்கி on April 29, 2010 at 11:37 AM said...

அதிஷா மாப்ள,

சாரிப்பா.. நாளை மாலை அண்ணன் யூ.கே.கிளம்பறாரு. இந்த எரிமலை பிரச்சினையால டிக்கெட் கிடைக்காம இப்பதான் கிடைச்சிருக்கு. ஆஃபிஸ்லயும் லீவு எடுக்க முடியாது... நைட்டு 11 மணிக்கு மாயாஜாலில்தான் பார்க்கனும்.. டிக்கெட் வாங்கல.. ஜாரிப்பா

அதிஷா on April 29, 2010 at 11:45 AM said...

யோவ் உன்னையெல்லாம் நம்பி கொலை கூட செய்ய முடியாது..

கார்க்கி on April 29, 2010 at 11:46 AM said...

மாப்ள, டிக்கெட் வேணும்ன்ன சொல்லு.. நான் ரெடி செய்து தறேன்.. எந்த தியெட்டர்.. எப்போ வேணும்ன்னு சொல்லு :)

ஆதிமூலகிருஷ்ணன் on April 29, 2010 at 2:01 PM said...

ஏன் இப்படி வாலண்டியர் ரிப்போர்ட்.? ஹிஹி..

Sruthi on April 29, 2010 at 4:20 PM said...

Yellarukkum porama vijay padam 10 cody Budgetil veliyahi oru mathattil 30 Kodi sambathittu vidum. Vijay padam nadippathu avarathu rasiharukkaha mattume. Matravarhalukkaaha nadittal avarathu rasiharhal virumba maattarhal padam 30 kodi sambaathikkathu.

கவிப்ரியன் on April 30, 2010 at 4:20 AM said...

Well...இதோ பாருங்க கார்க்கி.. நீங்க படம் பார்த்ததுக்கு 1000ம் காரணங்கள் இருக்கலாம்.. அதே போல படத்த பாத்துரபோறாங்களே பயபுள்ளைங்கன்னு எச்சரிக்கை பண்றதுக்கும் 1000ம் காரணங்கள் இருக்கலாம்... அதே சமயத்துல பாக்கக்கூடாதுன்னு சொல்லாம சொல்லதுக்கும் 1000ம் காரணங்கள் இருக்கலாம்... அதே மாதிரி படத்தபாத்தே தீரணும்னு சொல்லாம சொல்றதுக்கும் 1000ம் காரணங்கள் இருக்கலாம்...WELL...நா..நீங்க எதுக்குமே அஞ்சாம போயி படத்த பாத்துட்டு வந்ததுக்கு பாராட்டரதுக்கும் 1000ம் காரணங்கள் இருக்கலாம்.. ஆனா இதையெல்லாம் சொல்லிட்டு நீங்க நாளைக்கு மீட்டிங்கிலே "ஐயா! மிரட்டுராங்கய்யா.."ன்னு சொன்னீங்கன்னா அதுக்கும் 1000ம் காரணங்கள் இருக்கலாம்..well... என்ன சொல்ல வரேன்னா... ஒரு நிமிஷம்... நீங்க நல்லவரா..?? கெட்டவரா..??

Kousalya on April 30, 2010 at 4:32 PM said...

summa nachunu irukku!

chinnathambi on April 30, 2010 at 8:24 PM said...

இங்க் மதுரை தங்க ரீகலில் காலை காட்சி பார்த்த பாதி பேர் பேயி அடிச்ச மாரி வந்தான்க

அப்பவே நினைச்சன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சுசீ.
இன்னும் 4 நாள்
இருக்காஆஆஅ?
'''பாவப்பட்ட ஜென்மங்கள் நாங்க.. :(("

முன் ஜென்ம் புன்னியம் அது

Anonymous said...

தெய்வமே...நீர் ஒரு தீர்க்கதரிசி...!!!
நானும் ஏதோ ஆதங்கத்துல போட்ட பதிவுன்னு நெனைச்சேன்.
எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் நல்லவனே...
உம் பேச்சை கேட்காமல் போனது என் தப்புதான்.

பொறுமை கடலினும் பெரிது.. இல்லை
பொறுமை கடல் சுறா வை பார்ப்பதினும் பெரிது.

"ராஜா" on April 30, 2010 at 11:39 PM said...

Apart from love sequence Kakka kakka is a pakka telugu karam masala.

I supposed to add a line b4 vickram in my comment tat our thala did this thing even b4 ten yrs by vali, amarkalam, dheena citizen but if i add tat it will make u more tensed. So only i didnt mention tat. We became a mass hero , wen others just play lover boy role, we spoke punch dialog wen others delivered romance dialog. Watever u say, thala masse thanithan.

Ten tat varalaru matter , nan pannathu nunnarisiyalna rajiniyodu vijaya setthu sonna neenga pannathu pasa thalaivar panra mega arasiyala

Kiruba on May 1, 2010 at 12:53 AM said...

கார்க்கி, படம் பார்த்ததுக்கப்புறம் உங்க கருத்தென்ன?

சமீபமா வந்த தளபதி படங்கள் எல்லாமே severe மொக்கைதான்னாலும் எதிலயுமே அவர் performanceஐயும் screen presenceஐயும் பொறுத்தவரைக்கும் எனக்கு எந்த விமர்சனமும் இருந்ததில்லை. அவரோட ஸ்டைலுக்காகவே இந்தக் குப்பையவெல்லாம் பலமுறை பார்த்திருக்கேன்.

சுறா?
நான் வழக்கமான தளபதி படம் பார்க்கத்தான் போனேன். சத்தியமா எந்த வித்தியாசத்தையும் உலகத்தரத்தையும் எதிர்பார்க்கலை. So,படத்தைப் பொறுத்தவரை பெரிசா எதுவும் விமர்சனமில்ல; மற்றுமொரு severe மொக்கைங்கறதைத் தவிர.

ஆனா விஜய்யைப் பத்தி சொல்லனும்னா, பயங்கர letdown. ரொம்ப சுரத்தேயில்லாம நடிச்சிருக்கிற மாதிரித் தெரிஞ்சது. கொஞ்சம் Weight போட்டு இன்னும் 'இளைய'தளபதியாத்தான் இருக்கார். ஆனா அவரோட வழக்கமான துள்ளல் இதுல missing. முக்கால்வாசி scenesல involvemenடே இல்லாத ஏனோதானோ நடிப்பு. அவ்வளவு lacklustre. ஏதோ 3 பாட்டுல மட்டுந்தான் எனக்குப் பிடிச்ச விஜயை கொஞ்சமாவது பார்க்க முடிஞ்சது. ரெண்டாவது தடவை பார்க்கும்போது பாதிக்கு மேல தூக்கத்தைக் control பண்ணவே முடியலை.

சம்பளப் பிரச்னையா? எவ்ளோ தடவைதாண்டா இப்படியே நடிக்கிறதுன்னு existential சலிப்பா?

உங்களுக்கு இப்படி ஏதும் தோணலியா?

Devanand on May 1, 2010 at 2:24 AM said...

கலாநிதி மாறனுக்கு மலர் வளையம் வெச்சாச்சா?
ஐ மீன், மலர் கொத்து :P

Devanand on May 1, 2010 at 2:24 AM said...

கலாநிதி மாறனுக்கு மலர் வளையம் வெச்சாச்சா?
ஐ மீன், மலர் கொத்து :P

கார்க்கி on May 1, 2010 at 1:24 PM said...

அனைவருக்கும் நன்றி..

ராஜா, ஆமாங்க. ரஜினிக்கும் விஜய்க்கு சம்பந்தமே இல்லை. வரலாறுதான் தமிழ் சினிமாவின் வசூல் வரலாற்றில் முதல் இஅம். உங்க தலைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் :)

கிருபா, உண்மைதான். பாடலக்ளில் மட்டும் விஜயின் உழைப்பு தெரிகிறது. அதற்காக இன்வால்வ்மெண்ட்டே இல்லாத மாதிரி தெரியவில்லை. என்னால் விஜயை மட்டும் படம் முழுக்க ரசிக்க முடிந்தது. நான் உங்களை விட தீவிரமான ரசிகன் என்பது கூஅ காரணமாக இருக்கலாம். காவல்காரனில் விஜய் வேகம் காட்டுவதைப் பார்த்தால் படத்தின் முடிவு அவருக்கு ப்ரிவுயூ பார்த்தவுட்னே தெரிந்திருக்க கூடும் என நினைக்கிறேன்.

தேவ் ஆனந்த், படத்தின் கண்டெண்ட் குறித்து யாரும் விமர்சிக்கலாம். ஆனல விஜய் ப்டஙக்ளின் கலெக்‌ஷன் குறித்து நோ டவுட். இதுவும் லாபகரமான படமாகவே இருக்கும்

சின்னத்தம்பி, தங்க ரீகல் இரவு காட்சியின் போது நட்னத ரசிகர்கள் கொண்டாட்ட வீடியோ வேண்டுமா? ரசிகர்களால் சுறா பாரட்டபப்டுகிறது. நடுநிலையாளர்க குறித்த கவலை மட்டுமே எனக்கு

Jinguchakka on May 1, 2010 at 5:25 PM said...

நானும் பாத்துட்டேன், உங்க தல ரசிகர்கள் தானப்பா ஓயாம விஜய் படங்கள முதல் நாளே பாக்குறீங்க.. அதனால தான் உங்க தலையோட எல்லா படங்களும் ஊத்திக்கிதோ..

shiva... on May 1, 2010 at 9:37 PM said...

வேட்டைகரானுக்கு பிறகு மறுபடியும் சன் picutres இந்த படத்தை வெளி இடுவதால் ஒருவித அலுப்பு ஏற்படுகிறது .. அவர்களின் trailer முறை எல்லோரையும் எரிச்சல் படுவதை போல் இருப்பதால் அந்த கோவம் விஜய் பக்கம் திரும்புகிறது .. விஜய் சன் ய் தவிர்பதே நல்லது ..

 

all rights reserved to www.karkibava.com