Apr 15, 2010

ஸ்ரீலஸ்ரீ இலக்கியானந்தா சுவாமிகள்


 

  அந்த நண்பர் நம் பலருக்கும் பரிச்சயமானவர்தான். பதிவர் என்றும் சொல்லலாம். அவர் இன்னொரு பதிவரிடம் சொல்லியிருக்கிறார் “நான் தினமும் பார்க்கும் முதல் வலைப்பூ சாளரம் தான்” என்று. காலில் வெந்நீர் கொட்டிவிட்டது இரண்டாவது நண்பருக்கு.

“என்ன சொல்றீங்க? கார்க்கியா? அவன் எழுதுவது எல்லாம் ஒரு எழுத்தா? அதெல்லாம் குப்பைக்கு போக வேண்டியது. உங்களைப் போன்ற படிப்பாளிகள் எல்லாம் எப்படி அவனை ஏத்துக்கிறீங்க? தம்படிக்கு தேறாது அவனெழுத்து. கவிதை எழுதறானாம். கதை எழுதறானாம். அவனெல்லாம் எழுத்தாளன்னு சொல்றதாலதான் நம்ம நாட்டுல ஜெமோ போன்றவர்களுக்கு மதிப்பு இல்ல.”

இன்னும் ஏதேதோ சொல்லியிருக்கிறார். புரியவில்லை எனக்கு. நான் எப்போது என்னை எழுத்தாளன் என்றேன். கவிஞன் என்றேன்? இவராக என்னை எழுத்தாளன் என்று முடிவு செய்து கொண்டு என்னைப் பழிப்பது என்ன நியாயம் என்று விளங்கவில்லை. பதிவர்கள் அனைவரும் எழுத்தாளராகவோ, கவிஞராகவோ இருக்க வேண்டுமா? அல்லது அவர்கள் மட்டும்தான் வலைப்பூ தொடங்க வேண்டுமா? மேலும், முதல் நண்பர் தனக்கு பிடித்த ஒன்றை வாசிப்பதில் இவருக்கு என்ன கஷ்டம்? இ.பி.கோ செக்‌ஷன் 302ன் கீழ் பெரிய குற்றமொன்றை அவர் செய்தது போல் ரியாக்ட் செய்கிறார். கல்கி ஆசிரமத்தில் தரப்படும் திரவம் கொண்டுதான் அவரை ஆசுவாசப்படுத்த வேண்டியிருக்கிறது.

இது இவர் மட்டும் சொல்லும் குற்றச்சாட்டு அல்ல. இன்னும் பலர், பலரை நோக்கி சொல்வதுதான்.  தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளன் என்று தன்னைத்தானே எண்ணிக் கொள்ளும் சில அரைவேக்காடுகளால்தான் இப்படி எல்லோரையும் எழுத்தாளராக பார்க்க முடியும். இணையத்தின் சாத்தியம் எண்ணிலடங்காதது. வலைப்பூ என்பது எழுத்தாளனுக்காக கிரயம் செய்யப்பட்ட நிலம் அல்ல. அது பொறம்போக்கு நிலம். யார் வேண்டுமென்றாலும், எதற்கு வேண்டுமென்றாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வலைப்பூவில் என்னென்ன செய்யலாம் என பட்டியலிட்டால் எனக்கே ஆயாசமாக இருக்கிறது.

   புரிந்துக் கொள்ளுங்கள் எழுத்தாளார்களே.. நாங்கள் எப்போதும் மொக்கைப் பதிவர்கள் தான். பதிவெழுதி சாகித்ய அகாடெமி விருதை வாங்கியே தீருவேன் என்று சபதமிட்டு தாங்கள் பீடு நடை போடும் இலக்கிய  பயணத்தின் குறுக்கே நான் ஒருகால் அல்ல, இரண்டு காலும்  வைத்து வர மாட்டேன் என்று எல்லாம் வல்ல நித்யானந்தரின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். கலக்கம் வேண்டாம். காப்பியங்கள் படைக்கும் பணியை செவ்வனே தொட(ரு)ங்குங்கள்.

_____________________________________________________

முதல் பத்தியில் சொன்ன சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது எழுத என்ன அவசியம் என சிலர் நினைக்கலாம். சில நாட்களுக்கு முன் அனுஜன்யா அவர்கள் தொடர்ந்து வாசிக்கும் பதிவர்களில் என் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்துவிட்டு எனக்கோர் மின்னஞ்சல் அனுப்பினார் ஒருவர். வாசகர் கடிதத்தை பிரசுரித்தால் நான் அமர்ந்திருக்கும் இடத்தின் தென்திசையில் இருந்து 48 மணி நேரத்தில் பிரச்சினை வரலாம் வராமலும் போகலாம் என தமிழ்மண ஆராய்ச்சி நிறுவனம் சொல்வதால் அதன் சாராம்சத்தை மட்டும் சொல்கிறேன்.

“அனுஜன்யா அறிவாளியாம். இலக்கியவாதியாம். நல்ல கவிதைகள் எழுதுபவராம். அவரை இன்னும் பக்குவப்பட விடாமல் என் பதிவை படிக்க வைப்பதால் அவரது முனை மழுங்கிவிடுகிறதாம். இதற்கு என்ன பதில் சொல்லப் போறீங்க” என்று கேட்டிருக்கிறார் அந்த நண்பர்.

   அனுஜன்யா அவர்கள் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்.முதல் வரியின் மூன்றாம் வார்த்தையை சொல்லி அவரை திட்டியது நானில்லை என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும். இது போன்ற பல நட்டு கழண்ட கேசுகள் பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன். மெயில் வருவது இது முதல் முறை. அதைப் படித்தவுடன் ஏற்பட்ட எரிச்சலில் இதை எழுத தொடங்கிவிட்டேன். எப்படி முடிப்பது என்று தெரியவில்லை. ரிப்போர்ட்டர் பாணியில் ஒரு பன்ச் சொல்லிவிட்டால் இந்த டபால்சுபாங் பதிவு முடிந்துவிடுமென்பதால் மானிட்டரை நோக்கி விரலை நீட்டி, தூசுக்கு பதிலாக பவுடரைத் தூவி, சட்டை பட்டைனையெல்லாம் திறந்து விட்டுக் கொண்டு சொல்லப் போகிறேன். ஒரே ஒரு விசிலாவது அடியுங்களேன்

“நான் அடிக்கிறது மொக்கைதாண்டா. ஆனா அத புரிஞ்சிக்க நீ ஷார்ப்பா இருக்கணும். ”

“தண்ணில மிதக்கும் தக்கை. கண்ணீரை மறைக்கும் மொக்கை”

மே மாசம் வந்தா வெக்கை. கார்க்கி பேசினாலே மொக்கை”

ஏதாவது ஒரு குத்துவரியை (அதாங்க..பன்ச் லைன்)  டிக் அடித்து பதிவை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

43 கருத்துக்குத்து:

ஆதிமூலகிருஷ்ணன் on April 15, 2010 at 11:58 PM said...

நானும் பார்த்தேன் அனுஜன் பதிவை. நம்பள ஏன் சொல்லியிருக்காருன்னு நீ இன்னும் நல்லா யோசிக்கணும்.. அது டுபாகூர் பார்ட்டி. கடந்த 10, 15 நாளா நாம 3 பேருமே ஒண்ணியும் எழுதலை. இருந்தாலும் லைவ்வா படிக்கிறதா காமிச்சுக்கணுமே, அதனால நம்ப வலையை எட்டிப்பார்க்கிறதா பம்மாத்து பண்ணியிருக்குது. அது புரியாம நீயும்.? ஹிஹி..

(அப்புறம் அதாரு. முதல் பகுதி புண்ணியவானுங்க? தலையெழுத்து.!)

SShathiesh-சதீஷ். on April 16, 2010 at 12:17 AM said...

சுவாமிகளே இவர்களை சட்டை செய்யாமல் உங்கள் எழுத்தால் சாட்டை கொடுங்கள். எழுதுவது மற்றவர்களுக்கு பிடித்ததால் தானே வருகின்றார்கள். என்னை எடுத்துக்கொள்ளுங்கள் நான் உங்களுக்கு மாமனா மச்சானா உங்கள் எழுத்தால் கவரப்பட்டே நாடு கடந்து இருந்தும் படிக்கின்றேன்....

.

“தண்ணில மிதக்கும் தக்கை. கண்ணீரை மறைக்கும் மொக்கை இத புரியாட்டி நீதாண்டா சக்கை

சதீஷானந்த சுவாமிகள்.

சுசி on April 16, 2010 at 1:52 AM said...

நீங்க எழுதுங்க கார்க்கி..

பழமொழியெல்லாம் சொல்ல வருது.. மிரட்டக் கூடாதுன்னு விட்டுடறேன்.

//மே மாசம் வந்தா வெக்கை. கார்க்கி பேசினாலே மொக்கை//

அதென்ன வெறும் மொக்கை??
முன்னாடி செம.. சூப்பர்.. கலக்கல்னு எதுனா சேர்த்து சொல்லுங்கப்பா..

இல்லை மொக்கையோ மொக்கைன்னாவது சொல்லுங்க..

டம்பி மேவீ on April 16, 2010 at 7:11 AM said...

எனக்கு பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களை விட கார்க்கி பதிவுகளே எனது நாளை சுவாரசியம் ஆக்குகிறது.

பிறகு ஒருவனின் ரசனை இப்படி தான் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க கூடாது.


(karkki, whatever post it may be, you always rock)

+யோகி+ on April 16, 2010 at 7:49 AM said...

\\ புரிந்துக் கொள்ளுங்கள் எழுத்தாளார்களே.. நாங்கள் எப்போதும் மொக்கைப் பதிவர்கள் தான். பதிவெழுதி சாகித்ய அகாடெமி விருதை வாங்கியே தீருவேன் என்று சபதமிட்டு தாங்கள் பீடு நடை போடும் இலக்கிய பயணத்தின் குறுக்கே நான் ஒருகால் அல்ல \\

அருமையான பதில் அந்த ஸ்வாமிகளுக்கு

ஆம் பதிவர்கள் எழுத்தாளர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை

எனக்கு இந்த பன்ச் தான்

"தண்ணில மிதக்கும் தக்கை. கண்ணீரை மறைக்கும் மொக்கை”

தராசு on April 16, 2010 at 9:15 AM said...

லூசுல விடுப்பா, இதுக்கெல்லாம் டென்ஷன் ஆவாத.

இப்படி பதில் சொல்லீட்டே இருந்தா எத்தனி பேருக்கு பதில் சொல்றது கார்க்கி? அதனால நம்ம சமூக தொண்டை நாம் அயராது செய்வோம்.

குத்து வரிகள் - நான் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கறேன்.

பாலாஜி on April 16, 2010 at 9:43 AM said...

"கல்கி ஆசிரமத்தில் தரப்படும் திரவம் கொண்டுதான் அவரை ஆசுவாசப்படுத்த வேண்டியிருக்கிறது."

அதில் என்ன கலந்து இருக்குனு உங்களுக்கு தெரியும் போல
நன்றாக இருந்தது

நாய்க்குட்டி மனசு on April 16, 2010 at 9:47 AM said...

U have ur own style kaarkki,
எதுவுமே பிறர்க்காக எழுதாமல் நமக்காக எழுதும் போது தான் சிறப்பாக இருக்கும். நகைச்சுவை சுலபமான விஷயம் அல்ல. U rock !

SenthilMohan K Appaji on April 16, 2010 at 10:13 AM said...

உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!
உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............................ய்.!!!

//*அவன் எழுதுவது எல்லாம் ஒரு எழுத்தா?**/
i. எழுதுறது எல்லாமே எப்படி ஒரு எழுத்தாகும்? ஒவ்வொன்னும் ஒரு எழுத்து.
ii. யார் எழுதினாலும் எழுத்து தானப்பா.
//*பதிவு முடிந்துவிடுமென்பதால் மானிட்டரை நோக்கி விரலை நீட்டி, தூசுக்கு பதிலாக பவுடரைத் தூவி, சட்டை பட்டைனையெல்லாம் திறந்து விட்டுக் கொண்டு சொல்லப் போகிறேன்**/
இன்னும் கொஞ்சம் force-ஆ எதிர்பாக்குறேன்.
//*அவரை இன்னும் பக்குவப்பட விடாமல் என் பதிவை படிக்க வைப்பதால் அவரது முனை மழுங்கிவிடுகிறதாம்.**/
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...........ஸப்பா...!!! முடில. (உங்களிடமிருந்து சானை பிடிப்பது பற்றிய பதிவினை எதிர்பாக்குறாரோ? என்னமோ?)
Last but nit the least.....


ஒரு விசில் சத்தமாவது கேட்டுச்சா? :)

vanila on April 16, 2010 at 10:15 AM said...

Ezhutthaalare ... pusthagam potturalaamaa.?

Yuva on April 16, 2010 at 10:21 AM said...

சரி விடுங்க பாஸ். இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா?

உங்கள் கடன் மொக்கைப் போட்டுக்கிடப்பதே.

;-)

Anbu on April 16, 2010 at 10:22 AM said...

காலை வணக்கங்கள் கார்க்கி அண்ணே...

Sam on April 16, 2010 at 10:28 AM said...

Hi karki,

This post made me to say something. I am trying to do that in tamil for the first time.

கார்க்கி, எங்க டீம்ல எல்லோருக்குமே முதல் வேலை உங்க பிளாக் பார்க்கிறதுதான். நாங்களும் நிறைய பேர படிப்போம். ஆனா உங்க பிளாக படிச்சா ஒரு சின்ன புன்னகையோடவோ வெடிச்சிருப்போடவோதான் அந்த நாளை தொடங்க முடியும்.அதுக்காகத்தான் முதல் பிளாக உங்கள படிக்கிறோம். இது ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல. ஒரு வருஷமா நாங்களும் படிக்கிறோம். ஒரு நாள் கூட நீங்க ஏமாத்தியது இல்ல. எதை எழுதினாலும் எங்கள அசரடிக்கிறீங்க. இந்த கன்சிஸ்டென்சி வேற எந்த பிளாக்ரிடமும் இல்லை. போன வாரம் நீங்க லீவுல இருந்த போது தேடி தேடி படிச்சோம். ஒருத்தர் கூட தொடர்ந்து சுவாரஸ்யமா எழுதனிதா எனக்கும் தெரியல. அப்பப்ப எழுதறாங்க. ஆனா கன்சிஸ்டென்சி இல்லை. மொழி தேடலுக்கு வேற சிலர (சுந்தர், பைத்தியக்காரன், நர்சிம் மாதிரி) நாங்க படிச்சாலும் நகைச்சுவைக்கும், சுவாரஸ்யத்திற்கும் உங்கள் விட்டா ஆளே இல்ல. இந்த கமெண்ட் எங்க மொத்த டீம் (5 பேர்) சார்பா எழுதறேன். இதை கூகிளில் டைப் செய்து பிழை திருத்தம் செய்ய சரியா 40 நிமிஷம் ஆச்சு எங்களுக்கு. எப்படித்தான் தினமும் எழுதறீங்களோ. ஹாட்ஸ் ஆஃப் கார்க்கி.

என்னைப் பொறுத்தவரை என் ஆல் டைம் ஃபேவரிட் நீங்க தான்.

♠ ராஜு ♠ on April 16, 2010 at 10:30 AM said...

அவருக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேடேடேதான் வேணுமாமா..?

ராம்ஜி_யாஹூ on April 16, 2010 at 10:41 AM said...

கதவை திறக்கலாமா அல்லது வேண்டாமா

நர்சிம் on April 16, 2010 at 11:04 AM said...

சகா.. இன்னும் பயிற்சி வேண்டும் உங்களுக்கு.. யார்னே தெரியாத மாதிரி எழுதிட்டீங்களே.. அடி பின்ன வேண்டாமா..

அவருக்கு வாழ்த்துகள். நல்லா இருந்தா சரிதான்.

RaGhaV on April 16, 2010 at 11:37 AM said...

எவன்டா அது, எங்க தலபத்தி தப்பா பேசினது..? தைரியமிருந்தா, இப்ப பேசுங்கடா பாப்போம்..

என்ன சகா.. சரிதானே..? ;-)

ர‌கு on April 16, 2010 at 11:58 AM said...

ந‌ம்ம‌ ச‌ந்தோஷ‌த்துக்கு நாம‌ எழுத‌றோம், இதிலென்ன‌ அவ‌ருக்கு கோப‌ம்? விட்டுத்த‌ள்ளுங்க‌,இதுக்காக‌வே அடுத்த‌ வார‌ம் முழுதும் மொக்கை வார‌மா கொண்டாடுறோம்..ஓகே?

பை த‌ வே யாரு அந்த‌ இல‌க்ஸ் பாண்டி?...:)

//மே மாசம் வந்தா வெக்கை. கார்க்கி பேசினாலே மொக்கை//

இத‌ விஜ‌ய் சொல்ற‌ மாதிரி நினைச்சு பார்த்தேன், ஒரே சிப்பு வ‌ந்த‌து சிப்பு...ஹி..ஹி..:))

தாரணி பிரியா on April 16, 2010 at 12:32 PM said...

எங்க ஆபிசில என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்க சாளரத்துக்கு ரெகுலர் விசிட்டர்ஸ். ஏழு கொஞ்சம் கற்பனைன்னு சொன்னதை நம்ம யாருமே இங்க தயாரா இல்லை. நீங்க எப்பவுமே போல எழுதுங்க கார்க்கி. மேவி சொன்னது போல உங்க பதிவுகளால சின்ன புன்னகையோட அந்த நாளை தொடங்கறோம். இதை மொக்கைன்னு தீர்மானிக்க அவங்க யாரு ?

மோனி on April 16, 2010 at 1:06 PM said...

..//பதிவர்கள் அனைவரும் எழுத்தாளராகவோ, கவிஞராகவோ இருக்க வேண்டுமா? அல்லது அவர்கள் மட்டும்தான் வலைப்பூ தொடங்க வேண்டுமா? //..

நாத்திகம் பேசுறவங்களை
நாத்திகவாதி-ன்னு சொல்றாங்க..
அரசியல் பண்றவங்களை
அரசியல்வாதி-ன்னு சொல்றாங்க...

அப்படீன்னா
கோவில்-ல மந்திரம் சொல்றவங்களை
மந்திரவாதி-ன்னு தானே சொல்லனும்?

Karthik on April 16, 2010 at 1:13 PM said...

ஃப்ரீயா விடுங்க கார்க்கி. இந்த மாதிரி காமெடி எல்லாம் அப்பப்ப நடக்கும். நாம கடுப்பாறதெல்லாம் அவங்களுக்கு கொடுக்கற ரெஸ்பெக்ட். தேவையில்லை. :)

//நர்சிம் said...
அடி பின்ன வேண்டாமா..

நர்சிம் - நரசிம்மா? :))

ர‌கு on April 16, 2010 at 1:13 PM said...

//மோனி said...
கோவில்-ல மந்திரம் சொல்றவங்களை
மந்திரவாதி-ன்னு தானே சொல்லனும்?//

ஐயையோ! இதென்ன‌ங்க‌ புதுசா? அப்போ ஒரு விஷ‌ய‌த்தை தீவிர‌மா யோசிச்சு முடிவெடுத்தா 'தீவிர‌வாதி'ன்னு சொல்லிடுவீங்க‌ போல‌ருக்கே!....:))

இராகவன் நைஜிரியா on April 16, 2010 at 1:16 PM said...

// “நான் அடிக்கிறது மொக்கைதாண்டா. ஆனா அத புரிஞ்சிக்க நீ ஷார்ப்பா இருக்கணும். ” “தண்ணில மிதக்கும் தக்கை. கண்ணீரை மறைக்கும் மொக்கை” மே மாசம் வந்தா வெக்கை. கார்க்கி பேசினாலே மொக்கை” //

உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால், உலகத்தில் போராடலாம்... வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்...

கார்க்கி... ஹாட்ஸ் ஆஃப் டூ யூ...

மொக்கை எங்கள் சொத்து என்று கூறிய உங்களை என் தலைவனாக ஏற்றுக் கொண்டேன்.

பாபு on April 16, 2010 at 1:41 PM said...

//மே மாசம் வந்தா வெக்கை. கார்க்கி பேசினாலே மொக்கை”//

அது (தல சொல்ற மாதிரி நினைச்சுக்குங்க)

kartin on April 16, 2010 at 1:55 PM said...

dear K !

i m really worried..may b, i m not jus understandin ur say..

i feel this seems unncessary! u r in next level! the different league !!

keep de gud work !

btw, this post ranks the lowest among urs in recent times :(

குட்டி on April 16, 2010 at 2:54 PM said...

//அவருக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேடேடேதான் வேணுமாமா..?//

சும்மா உருண்டு பொரண்டு சிரிச்சேன் !!

கார்க்கி, மொக்கை போடறது எல்லாருக்கும் வந்துடுமா என்ன? தில் இருந்தா உங்க அளவுக்கு முடியுமான்னு நிரூபிக்க சொல்லுங்க..
அப்புறம், நீங்க எழுதறது மொக்கைன்னு எப்படி அவரா முடிவு பண்றார்? எத்தன உபயோகமான பதிவுகள் இருந்திருக்கு தெரியுமா?
நீங்க எதுவுமே எழுதாம ஒரு வெள்ளை பக்கத்தை ஒரு நாள் போஸ்ட் பண்ணுங்க... எத்தன ஹிட் , எத்தன பின்னூட்டம் வருதுன்னு பாருங்க... (உங்களுக்கே உங்க பெருமை தெரியறதில்லை கார்க்கி)

Hanif Rifay on April 16, 2010 at 4:16 PM said...

யாருப்பா அது...
கார்க்கிய கடைஞ்ச மடப்பயபுள்ள...
நீ எழுது கண்ணா...

அப்புறம் சகா,,இந்த punch கொஞ்சம் எபெக்ட இன்கிரிசு பன்னிர்கலாமே......

தண்ணில மிதக்கும் தக்கை. கண்ணீரை மறைக்கும் மொக்கை.

சொன்னவனுக்கு அடிப்பேன் தக்கை...
U Continue UR மொக்கை....

விசில்ல்ல்..................

எறும்பு on April 16, 2010 at 4:17 PM said...

அண்ணே நீங்க தொடர்ந்து மொக்கை போடுங்க.. நாங்க இருக்கோம்...
அப்புறம் அந்த எளக்கியவாதி யார்னு எனக்கு மெயில் பண்ணுங்க

:)

கார்க்கி on April 16, 2010 at 4:59 PM said...

அனைவருக்கும் நன்றி. ஆணிகள் புடுங்குவதில் பிசியாக இருந்ததால் பதிலிட முடியவில்லை

சாம் மற்றும் குட்டிக்கு ஸ்பெஷல் நன்றிகள் :))

@kartin,

கருத்திற்கு நன்றி சகா. ஏதோ தெரியாம எழுதிட்டேன் நினைச்சுக்கொங்க.. அந்த கடிதம் படிச்ச கடுப்புல எழுதிட்டேன் :))

____________________

ஆதரவளித்த அனைவருக்கும் இன்னொரு ஸ்பெஷல் நன்றி.. சந்தோஷமா இருக்கு

SK on April 16, 2010 at 5:26 PM said...

freeya vidunga sagaa..

Palay King on April 16, 2010 at 5:29 PM said...

அவருக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேடேடேதான் வேணுமாமா..?

No chance

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on April 16, 2010 at 5:35 PM said...

அந்த குத்து வரிய விட மாட்டிங்களா சகா..

அன்புடன் அருணா on April 16, 2010 at 7:57 PM said...

/கடுப்பாறதெல்லாம் அவங்களுக்கு கொடுக்கற ரெஸ்பெக்ட். தேவையில்லை. :)/
ரிப்பீட்டு!

V.Radhakrishnan on April 16, 2010 at 8:17 PM said...

சாளரத்தின் வழியாக ஒரு புதிய உலகம் தென்படத்தான் செய்கிறது. வாழ்த்துகள். மனம் தளராத எழுத்து அருமை.

அமுதா கிருஷ்ணா on April 16, 2010 at 9:34 PM said...

ஒரு விசில் கூட எனக்கு அடிக்க தெரியாது எனக்காக என் இரண்டு பசங்களும் சேர்த்து அடித்த விசில் சத்தம் கேட்டு இருக்கும் என நினைக்கிறேன்...

நேசமித்ரன் on April 17, 2010 at 2:54 AM said...

//Blogger நர்சிம் said...

சகா.. இன்னும் பயிற்சி வேண்டும் உங்களுக்கு.. யார்னே தெரியாத மாதிரி எழுதிட்டீங்களே.. அடி பின்ன வேண்டாமா..

அவருக்கு வாழ்த்துகள். நல்லா இருந்தா சரிதான்.//

அதானே அடி பின்ன வேண்டாமா

//மொக்கை எங்கள் சொத்து என்று கூறிய உங்களை என் தலைவனாக ஏற்றுக் கொண்டேன்.//

சிரிக்க வைப்பது ஒரு கலை அதன் தலைவர் நீங்கள் என்று அண்ணன் ராகவன் நைஜீரியா சொல்வதை வழி மொழிகிறேன்

மொக்கை என்று சொன்ன அந்த இலக்கிய வாதிக்கு துக்கத்தின் மீது என்ன கா...தலோ

கேட்டுக்கொண்டிருந்த பதிவர் நண்பர் தக்க பதிலடி கொடுத்திருப்பார் என்று எண்ணுகிறேன்

அவருக்கு (இலக்கிய வியாதிக்கு )என் கண்டனங்கள்

சி.வேல் on April 17, 2010 at 12:37 PM said...

என்னைப் பொறுத்தவரை என் ஆல் டைம் ஃபேவரிட் நீங்க தான்.

may be Vijay FAN

கயல் on April 17, 2010 at 11:22 PM said...

என்னாச்சு சகா? யாரு உங்கள அழ வச்சது? ஆளக் காட்டுங்க மொக்க கவிதையா சொல்லி அலற வுட்டுருவோம்!

கார்க்கி on April 18, 2010 at 11:13 AM said...

அனைவருக்கும் நன்றி..

_____________

ஒரு முக்கிய விஷயம் : நான் ஒருவரை நினைத்து எழுதினால், பல இடங்களில் இருந்து ரியாக்‌ஷன் வருகிறது. பலரும் என்னைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துகளை தத்தம் நண்பர்களிடம் பகிருந்து கொள்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. இரண்டாம் பத்தியில் என்னைப் பற்றி சொன்ன நபர், இன்னும் இந்தப் பதிவில் பின்னூட்மிடவில்லை என்ற க்ளுவை மட்டும் தந்துவிடுகிறேன்... :))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 18, 2010 at 12:13 PM said...

மின்னஞ்சல் பிரச்சனைகள் பெரும் பிரச்சனையா இருக்கும் போலயே கார்க்கி.

--
தாதாக்கு வடை கிடைக்குமா? :))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 18, 2010 at 12:14 PM said...

"ஸ்ரீலஸ்ரீ இலக்கியானந்தா சுவாமிகள்"//

சூப்பர்.:)

பா.ராஜாராம் on April 18, 2010 at 7:28 PM said...

//இரண்டாம் பத்தியில் என்னைப் பற்றி சொன்ன நபர், இன்னும் இந்தப் பதிவில் பின்னூட்மிடவில்லை என்ற க்ளுவை மட்டும் தந்துவிடுகிறேன்... :))/

அய்யய்யோ.. :-)

//, this post ranks the lowest among urs in recent times :(//

yaa.ofcourse.

இப்படிக்கு,

மற்றொரு கார்கியின் ரசிகன்!
.(இந்த பின்னூட்டத்தை உங்கள் க்ளுக்கு முன்னாடி சேர்த்துருங்க.புண்ணியாமா போகும்.)

அனுஜன்யா on April 28, 2010 at 10:51 AM said...

இப்பதான் படிச்சேன். லைட் ரீடிங் செய்ய, ரிலாக்ஸ் செய்யணும்னா நிச்சயம் உன் ப்ளாக் படிக்கலாம். மரண மொக்கைதான் நிறைய தபா. என்ன செய்ய! தமிழ் நாட்டில் கமல் படங்கள் பத்து நாட்கள் ஓடக் கஷ்டப் படுவதும், விஜய் படங்கள் ஐம்பது நாட்கள் ஓடுவதும் போலவே - எனக்கு ஒரு வாரத்துக்கு ஐம்பது ஹிட்ஸ் வருவதும் உனக்கு ஒரு நிமிடத்தில் அதே ஐம்பது ஹிட்ஸ் வருவதும்... விதி வலியது. விட்றா விட்றா. லூஸ்ல விடு.

ஆமா, எங்கே இருந்து புடிக்கிற ஆளுங்கள? sam, குட்டி இப்படியெலாம்...

அனுஜன்யா

 

all rights reserved to www.karkibava.com