Apr 27, 2010

ஹிஹிஹி


 

  அலைபேசிக் கொண்டே வண்டி ஒட்டுவது தவறு. மறுப்பதற்கில்லை. அதை விட மகா கொடுமை பேசிக் கொண்டு சாலையைக் கடப்பது என்கிறேன் நான். நேற்று வேளச்சேரியில் நடந்தது இது. சிக்னல்படி நான் ரைட்டில் திரும்புகிறேன். மொபைலில் பேசிக் கொண்டே கடந்து செல்ல வேகமாய் வருகிறார் இளம்பெண் ஒருவர். நான் சடென் பிரேக் அடிக்க, பின்னால் வந்தவர் அடிக்க முடியாமல் டமால் என இடித்தார். அந்த இளம்பெண் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் “சாரிடா செல்லம். தெரியாமல் பண்ணிட்டேன்” என்றதும் வந்த கோவம் அடங்கிவிட்டது. அப்புறம்தான் தெரிந்தது அந்த செல்லம் அந்த முனையில் இருக்கிறார் என்பது. மீண்டும் கோவம் வருவதற்குள் எங்கேயோ சென்றுவிட்டார். அவரிடம் சொல்லியிருக்க வேண்டும் “ரோடு கிராஸ் பண்றப்ப எங்க வேணும்னானும் பார்த்துட்டு செய்ங்க. ஆனா செல்லம்னு சொல்றதுக்கு முன்னாடி நாலா பக்கம் கவனமா பாருங்கன்னு”

ஹிஹிஹிஹிஹி

_________________________________________

எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்றார் கல்கி. உண்மைதான். ஏப்ரல் 30 சுறா ரிலீஸ். மே 1 தலை பிறந்த நாள்”

இந்த எஸ்.எம்.எஸ்ஸை 10 பேராவது அனுப்பியிருப்பார்கள் எனக்கு. அவர்களுக்கான பதில் இது. இது ஃபாஸ்ட் ஃபுட் காலம் பாஸ். எல்லாமே ப்ரிபெய்ட்தான். அதனால் யார் கல்கி என்று நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. அப்புறம் முதல் வரியை மீண்டும் படியுங்கள். 13, 14 வது எழுத்துக்களை படித்தால் யார் அதர்மம் என்பது விளங்கிவிடும். :))

ஹிஹிஹிஹிஹி

__________________________________

சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் பப்லுவிடம். போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன்  என்றான் பப்லு. என்னைப் பார்த்துக் கேட்டான்,

எங்கடா brush பண்ணுவாங்க?

பல்லுல.

டேய். எந்த இடத்துல?

வாய்க்குள்ள.

அதில்லைடா. மேலயா, கீழயா?

ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.

பாட்டி, இவனை ஹைதராபாத்திற்கே போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்.

ஹிஹிஹிஹிஹி

____________________________________________

பப்லுவை வைத்து ஒரு விளம்பரப் படம் பிளான் செய்தேன். ஸ்கூலில் இருந்து அலுப்போடு வரும்படி முதல் காட்சி, பின் யூனிஃபார்ம் கூட மாற்றாமல் டிவியில் மூழ்குவது இரண்டாம் காட்சி. அதுவும் போரடிக்க படையப்பா ரஜினி ஸ்டைலில் சட்டை கழற்றி “பாட்டி கெலாக்ஸ்” என்பது அடுத்த காட்சி. ஒவ்வொன்றிலும் அவர் சுவாரஸ்யம் குறைந்து வருவது போல் காட்டிவிட்டு, கடைசியில் லேப்டாப்பில் சுவாரஸ்யமாக மூழ்குவது போல் முடியும். அடுத்து பாட்டி. இவன் விட்டு சென்ற லேப்டாப்பை அவர் எடுத்து படித்து மகிழ்வது போல இறுதிக்காட்சி. ஹிஹிஹி.அதேதான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

“பெரியவர் முதல் சிறியவர் வரை படித்து மகிழ”

www.karkibava.com   Entertainment..unlimited

33 கருத்துக்குத்து:

புன்னகை on April 27, 2010 at 10:30 AM said...

Keep rocking!!! :-)

லோகேஷ்வரன் on April 27, 2010 at 10:40 AM said...

//தலைதூக்குகிறதோ//
நீங்க வேற சகா தலை தூங்கரதுகே நேரம் சரியாய் இருக்கு இதுல தலை தூக்க போதா

தராசு on April 27, 2010 at 10:52 AM said...

இந்த பப்லு பல் தேய்கறத எங்கியோ கேட்டிருக்கறனே,

ஆமா, ஏழு எங்கய்யா போனாரு...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 27, 2010 at 10:57 AM said...

// “சாரிடா செல்லம். தெரியாமல் பண்ணிட்டேன்” என்றதும் வந்த கோவம் அடங்கிவிட்டது. அப்புறம்தான் தெரிந்தது அந்த செல்லம் அந்த முனையில் இருக்கிறார் என்பது. மீண்டும் கோவம் வருவதற்குள் எங்கேயோ சென்றுவிட்டார்.//

ஹி ஹி ஹி!!
:)

மங்குனி அமைச்சர் on April 27, 2010 at 11:05 AM said...

என்னாது பொண்ணுக மேல கோபம் வந்துச்சா ?????????????????????

senthilkumar on April 27, 2010 at 11:18 AM said...

//எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்றார் கல்கி. உண்மைதான். ஏப்ரல் 30 சுறா ரிலீஸ். மே 1 தலை பிறந்த நாள்//

உளறாத கார்க்கி.. அது கல்கி சொல்வது இல்லை. கிருஷ்ணன் சொல்வது. உனக்கு வந்த மெசேஜ் வேற, அதை இப்படி எல்லாம் மாதி சொல்ற பாரு.. உண்மையிலயே நீ ஒரு தீவிரமான விஜய் அடிவருடி.

புதுசா நீ ட்ரை பண்ணு.

T.V.ராதாகிருஷ்ணன் on April 27, 2010 at 11:19 AM said...

ஹிஹிஹி

கார்க்கி on April 27, 2010 at 11:25 AM said...

நன்றி புன்னகை

ஹிஹிஹி..லோகேஷ்.. நீங்க ஹைகேஷ் சகா

ஷங்கர், என்ன சிரிப்பு? சின்னபுள்ளத்தனமா

மங்குனி, ஆமாங்க. நம்மள விட்டு வேற யாரையோ செல்லம்னு சொன்னா எப்படி?

செந்தில், நீங்க யாருன்னு தெரில. புரொஃபைல் டிஸேபிள் ஆகியிருக்கு. உரிமையா பேசறீங்களா ஒருமைல பேசறீங்களான்னு தெரில. எனக்கு இது வேலை இல்லை. எனக்கு வந்த மெசெஜ் க்கு பதில் சொன்னேன். எனக்கு என்ன வந்துச்சுன்னு உஙக்ளுக்கு எப்படி தெரியும்? அது கிருஷணர் இல. விஷ்ணு. அவரின் 10வது அவதாரம் தான் கல்கி. தெரியாம பேசிட்டு என்னை வேற கலாய்க்கிறீரோ? நீங்க யாருக்கோ அடிய வருடிட்டு மத்தவஙக்ல சொல்லாதிங்க. ஜோக்க ஜோக்கா பாருங்க பாஸ்.

நன்றி டிவிஆர் அய்யா

சுசி on April 27, 2010 at 11:47 AM said...

என்னா வெளம்பரம்..

கலக்கல் கார்க்கி :))

SenthilMohan K Appaji on April 27, 2010 at 11:55 AM said...

//*அலைபேசிக் கொண்டே வண்டி ஒட்டுவது தவறு. மறுப்பதற்கில்லை. அதை விட மகா கொடுமை பேசிக் கொண்டு சாலையைக் கடப்பது என்கிறேன் நான்.**/
ரெண்டுக்கும் பெருசா என்ன வித்தியாசம்? முன்னதுல வண்டிக்கும், ஓட்டுறவங்களுக்கும் சேதம். பின்னதுல ஒன்னு மிச்சம்.
//*“சாரிடா செல்லம். தெரியாமல் பண்ணிட்டேன்” என்றதும் வந்த கோவம் அடங்கிவிட்டது. **/
வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அப்புறம், அந்த SMS-க்கு thanks.

காவேரி கணேஷ் on April 27, 2010 at 11:59 AM said...

உங்களுக்கு சலிக்காம காமெடி வருதுப்பா.

க‌ரிச‌ல்கார‌ன் on April 27, 2010 at 12:00 PM said...

மேட்ட‌ர் எல்லாம் சூப்ப‌ர் ச‌கா

//ஆமா, ஏழு எங்கய்யா
போனாரு...//

???????????????

senthilkumar on April 27, 2010 at 12:05 PM said...

நீங்கள் தவறாக புரிந்து விட்டீர்கள். நான் உரிமையில் தான் சொன்னேன்.(எனக்கும் விஜய் பிடிக்கும்). ஆனால் இந்த மாதிரி மெசேஜ் வைத்து உங்களை கலாய்க்கலாம். இதெல்லாம் ஒரு தமாசா எடுத்துக்குங்க.. ஹி ஹி ஹி ஹி.

அப்புறம் இந்த வார்த்தை பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வது என்று நினைக்கிறேன்.

சுறா படம் டிக்கெட் வாங்கியாச்சா? எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்த ஒன்னு கொடுங்க..

ஆதிமூலகிருஷ்ணன் on April 27, 2010 at 12:21 PM said...

படம் ஏதும் எடுத்தாயா? பிளானோடு நிக்குதா? நல்லாயிருக்கே.. ட்ரை பண்ணலாமில்ல..

கார்க்கி on April 27, 2010 at 12:22 PM said...

நன்றி சுசி

செந்தில்,ஆனா வண்டி ஓட்றவஙக்ளுக்கு தண்டனை உண்டுங்க. பேசிட்டே நடக்கிறவங்களுக்கு?????? எதுக்கு வன்மையா க்ண்டிக்கிறீங்க? புரியல பாஸ்

காவேரி, நன்றி சகா. என் காமெடி மத்தவ்ஙக்ளுக்கு சலிக்காம பார்த்துக்கிறதுதான் பெரிய விஷயமா இருக்கு :))

கரிச்ல, விரைவில் :))

@செந்தில்,
நன்றி சகா. நான் தமாஷாதான் எடுத்துக்கிட்டேன். இல்லைன்னா பதில் வேற மாதிரி இல்லை போட்டு இருப்பேன். மெசெஜை வைத்து யாரை வேண்டுமென்றாலும் ஓட்டலாம். பேரு மட்டும் மாத்திட்டா போதும் என்பது போலதான் இருக்கு இந்த எஸ்.எம்.எஸ் எல்லாம். அது கீதையில் சொல்லியதுதான். கிருஷணர் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தானே? அது போல் கல்கி அவதாரம் அதர்மம் தலைதூக்கும்போது அவதரிப்பார் என நம்புகிறார்கள். ஆனால் கல்கி பகவானே அதர்மம் ஆகிப்போனது வேறு விஷயம்

நர்சிம் on April 27, 2010 at 12:45 PM said...

ரைட்ட்ட்டு சகா.

Vidhoosh(விதூஷ்) on April 27, 2010 at 1:21 PM said...

படிச்சேன். லஞ்ச் முடிச்சு தூக்கம் வருது.............. இப்போல்லாம் உங்க பதிவுகள், கொஞ்சம் நிறையாவே கொஞ்சம் monotonous ஆக feel செய்வது எனக்கு வயசாகிப் போனதை காட்டுகிறது என்றே நினைக்கிறேன்

மாறுதலுக்கு நாலு எட்டு வச்சு சத்தமா ஏழுவைக் கூப்பிடுங்க.

அன்புடன் அருணா on April 27, 2010 at 1:49 PM said...

Entertainment..unlimited! !00% true!கலக்கல்ஸ்!

கார்ல்ஸ்பெர்க் on April 27, 2010 at 1:49 PM said...

Anna,

I'm going to tweet this today.. With your permission..

ர‌கு on April 27, 2010 at 2:06 PM said...

அது குழ‌ந்தை ச‌கா...அப்ப‌டித்தான் ரோட் க்ராஸ் ப‌ண்ணும்போது செல்லில் பேசும், டான்ஸ் ஆடும், விசில் அடிக்கும்...நீங்க‌தான் பார்த்து போக‌ணும், த‌ப்பு உங்க‌மேல‌தான்....ஹிஹிஹி..பை த‌ வே வேள‌ச்சேரியில் எந்த‌ சிக்ன‌ல்? விஜ‌ய‌ந‌க‌ர்? ;)

இந்த‌ எஸ்எம்எஸ்லாம் ஆர‌ம்ப‌த்துல‌ ந‌ல்லாத்தான் இருந்த‌து, இப்போ கொஞ்ச‌ம் போர‌டிச்சுடுச்சு..அரைச்ச‌ மாவு!

//www.karkibava.com Entertainment..unlimited//

க‌ரெக்ட்டுதான், ஆனா ச‌ர்டிஃபிகேட் U/Aன்னுதான் கிடைக்கும் ;))

ஜெட்லி on April 27, 2010 at 2:09 PM said...

சத்தியமா இவங்க ரெண்டு பேரும் கிருஷ்ணர் இல்லை....
முதல்ல சுறா முலம் தள தல தூக்கட்டும்....

Kafil on April 27, 2010 at 2:26 PM said...

Ponnunga pora roadla ungala yaarunga vandila poga sonnathu, avungalukku illatha urimaya...avunga nadanthukitte pesuvaanga, paduthukitte pesuvaanga namma vela rasikrathu mattum thaan...

"ராஜா" on April 27, 2010 at 2:27 PM said...

//எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என்றார் கல்கி. உண்மைதான். ஏப்ரல் 30 சுறா ரிலீஸ். மே 1 தலை பிறந்த நாள்”

நன்றி சகா பகிர்ந்துகிட்டது நாங்களும் நாலு பேருக்கு அனுப்புவோம்ல...

மோகன் குமார் on April 27, 2010 at 2:53 PM said...

உங்க மருமகன் உங்களை மாதிரியே பேசுறானே!! ஆபிசில் படம் பாக்க முடியலை

RaGhaV on April 27, 2010 at 2:56 PM said...

:-)))

+யோகி+ on April 27, 2010 at 3:00 PM said...

\\ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.\\

ஐய்யய்யோ நான் கீழ் பக்கம் மட்டும் தானே விளக்கினேன்

நல்ல பதிவு

நேசன்..., on April 27, 2010 at 3:14 PM said...

அந்தப் பொண்ணு செல்லம்னு சொன்னதை உங்களைத் தான்னு நம்பியிருக்கீங்களே......நீங்க தான் உண்மையான விஜய் ரசிகர்!.....

கார்க்கி on April 27, 2010 at 3:52 PM said...

@ஆ.மூ.கி,
பிளானோடுதன நிக்குது. எடுப்போமா?

@நர்சிம்,
ரைட்டு சகா

@விதூஷ்,
உண்மைதாங்க. தினமும் காலைல வந்து எழுதறேன். அதான் காரணம். இப்பதானே லீவு விட்டோம்னு பார்க்கிறேன். சீக்கிரம் கிளப்பிடுவோம் :)

நன்றி டீச்சர்

கார்ல்ஸ்பெர்க், தாராளமா

ரகு, அங்கதான். இதுக்கே U/Aவா? நாளைக்கு தோழி அப்டேட்ஸ், அடல்ட்ஸ் ஒன்லி ஸ்பெஷல் போடலாம்னு இருக்கேன்

@ஜெட்லீ,
ஹலோ மார்க் வாவ்.. கூல் டவுன். கூல் டவுன். வொய் கிரயிங்? :))

@கஃபில்,
ஹிஹிஹி.. நீங்க நம்ம சாதி சகா

@ராஜா,
நீங்க நாலு பேரோட நிறுத்துற ஆளா? பட்டையை கிளப்புங்க சகா

@மோகன்,
பல்பா? அது வீடியோ இல்லைங்க. சும்மா இடம் விட்டேன். ஹாஹாஹா

@ராகவ்,
நன்றி

@யோகி,
நன்றி சகா

@நேசன்,
விஜய் ரசிகர்ன்னா எல்லா பொண்ணும் செல்லம்னு சொல்வாங்க சகா. ஏன்னா அவஙக்ளுக்கு எங்க ஆளுதான் டார்லிங் :)

அன்புடன்-மணிகண்டன் on April 27, 2010 at 4:11 PM said...

என்னய்யா இது அக்கிரமம்.. கடை மூடி இருக்கு.. ;)
// “ரோடு கிராஸ் பண்றப்ப எங்க வேணும்னானும் பார்த்துட்டு செய்ங்க. ஆனா செல்லம்னு சொல்றதுக்கு முன்னாடி நாலா பக்கம் கவனமா பாருங்கன்னு”//

வாஸ்தவமான பேச்சு ஓய்.... :) :)

டம்பி மேவீ on April 27, 2010 at 6:55 PM said...

நானும் நேற்று BALANCE தவறி ஒரு சார் மேல மோதிட்டேன். வேளச்சேரி ஹை வே ல. ஒரு வேலை அது நீங்கள் தானோ ????? இலக்கியவாதிகளின் சந்திப்பு எப்படியெல்லாம் நடக்குது பாருங்க. நான் விபத்தில் மாட்டியது மாலை வேளையில்.......

Deivasuganthi on April 27, 2010 at 7:01 PM said...

அருமை!!!!!!!
வழக்கம் போல!!!!

வெற்றி on April 28, 2010 at 10:55 AM said...

//@நேசன்,
விஜய் ரசிகர்ன்னா எல்லா பொண்ணும் செல்லம்னு சொல்வாங்க சகா. ஏன்னா அவஙக்ளுக்கு எங்க ஆளுதான் டார்லிங் :)//

ஹா ஹா ஹா..பதிவும் இந்த பதிலும் சூப்பர் சகா :))

krishnakrishna on April 30, 2010 at 2:27 PM said...

//இனிமேல் விஜய் படம் கே டிவியில் கூட பார்க்கப்போவதில்லை//

நல்ல முடிவு

 

all rights reserved to www.karkibava.com