Apr 26, 2010

லயன் ரோர்ஸ்


 

   ஒரு வழியாக ஐ.பி.எல் 3 முடிவுக்கு வந்துவிட்டது. எங்கள் அணி கொல்கத்தா தோல்வியடைந்தாலும் கவலையில்லை. நாங்கள் அதன் ஆதரவாளராக இருக்க ஒரே காரணம் தாதா என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அதிக ரன் அடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடம். சிறந்த 10 கேட்ச்கள் வரிசையிட்டாலும் அவர் வந்துவிடுவார். சிறந்த கேப்டன்களிலும் முதல் மூன்று இடத்தில்தான் இருப்பார். இதை விட வேறென்ன வேண்டும்.? (சமாளிக்கறது எவ்ளோ கஷ்டம்???)

___________________________

ரேடியோ கமெண்டரிகள் காலாவாதியாகிவிட்டதென்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை. இந்த வருடம் ஐ.பிஎல்லில் சிறந்த எண்ட்டெர்டெய்னிங் ஃபேக்டராக நான் நினைப்பது 106.4 ஹலோ எஃப்ம்மில் ”சொல்லியடி” நிகழ்ச்சிதான். அது தரும் பரிசுகள் குறித்து நான் பேசவில்லை. அதன் தொகுப்பாளர் சுரேஷின் அதிரடி நடவடிக்கைகள். டிவியில் பார்க்கும்போதும், சத்தத்தைக் குறைத்து அவரின் கமெண்ட்ரீ கேட்டுக் கொண்டேதான் பார்த்தேன். கலக்கிட்டிங்க சுரேஷ்.

11 ஓவரில் வெறும் 66 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்திருந்தது.களமிறங்கிய தோனி ஒரு ஃபோர் அடிக்கிறார். பாடல் போடுகிறார் சுரேஷ்

ராச ராசனே வீர வீரனே நீங்க எங்க ராசா..

உடனே பவுலர் பொலார்ட் தோனியை முறைத்துவிட்டு செல்கிறார். அடுத்த பந்தை ஒத்தை கையில் அடித்து சிக்ஸ் ஆக்குகிறார் தோனி. பாட்டு வருகிறது

வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா….

இன்னொரு நாள் தோனியின் அட்டகாச பேட்டிங்கில் சென்னை அரையிறுதிக்குள் நுழைகிறது. பாதியில் இருந்து பாட்டு வருகிறது

பார்ப்பதற்கு பாமரன் போலிருப்பான்
வேலை வந்தால் விசுவரூபம் எடுப்பான்.

இடையிடையே ஸ்கோர்ஸும், அங்கு நடப்பதையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். தோனி கடைசி ரன் அடித்து வெற்றிப் பெற்ற உடன் மீண்டும் பாடல் தொடர்கிறது

சிங்கம் ஒன்று புறப்பட்டதே
அதுக்கு நல்ல காலம்….

அவரை நேரில் பார்த்து ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் போலிருக்கிறது. அந்த ஒட்டு மொத்த டீமுக்கும் ஹேட்ஸ் ஆஃப். எனக்கும் இப்படி ஒரு ஆர்.ஜேவாக வேண்டுமென்பது கனவு.. ம்ம்ம்

(ஓவர் தொடங்கும்போது எவ்வளவு ரன் அடிப்பார்கள் என்று காலர்கள் சொல்லவேண்டும். யார் சொன்ன ரன் அடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம். இது பெட்டிங்கில் வருமா வராதா???)

_________________________________________

image  

வெற்றி பெற்ற சென்னை அணிக்கு எனது சிறு அன்பளிப்பு இந்த பாடல். நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலின் மெட்டில் எழுதி இருக்கிறேன். சரியா செட் ஆகுதா என்று சொல்லவும்

நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு ஓவர் போட மாட்ட
அடுத்த சீசன் வேற டீமில்
சேர மாட்ட..

போடு போடு பால போடு
அடிச்ச பின்னே பால தேடு
சென்னைதாண்டா எங்க காடு
சூப்பர்கிங்க்ஸ்க்கு விசில போடு (நான் அடிச்சா)

ஆரஞ்ச் பர்ப்பிள் கலர் கேப்ஸ்
சூப்பர் கிங்க்ஸ்க்கு கிடைக்கனும்
நாங்க அனுபவிச்ச மிச்சம்தான்
அடுத்த டீமுக்கு கிடைக்கனும்..

தோனியோட பசங்கள
தோற்கடிக்க யாரடா
மாஸ்டர்பிளாஸ்டர் சச்சினே
அடங்கிவிட்டார் பாரடா.

கிங்க்ஸோட சாங்க்ஸ் கேளு
கேளு கேளு.. கேளு கேளு
சாங்கோட நீ ஆடு..
ஆடு ஆடு…ஆடு ஆடு

ரெய்னா விஜய் ஹைடன்னு பேட்டோட வர்றாங்கடா
முரளி மார்கல் பொலிஞ்சரு பாலோட வர்றாங்கடா
கத்து கத்து கத்து சிங்கத்தோட சேர்ந்து கத்து….

26 கருத்துக்குத்து:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 26, 2010 at 10:11 AM said...

பாடல் சூப்பர்!!

:))

SenthilMohan K Appaji on April 26, 2010 at 10:14 AM said...

//*அவர் அதிக ரன் அடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடம். சிறந்த 10 கேட்ச்கள் வரிசையிட்டாலும் அவர் வந்துவிடுவார். சிறந்த கேப்டன்களிலும் முதல் மூன்று இடத்தில்தான் இருப்பார். இதை விட வேறென்ன வேண்டும்.? **/
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது.
//*ஆரஞ்ச் பர்ப்பிள் கலர் கேப்ஸ்
சூப்பர் கிங்க்ஸ்க்கு கிடைக்கனும் **/
வேணாம் சகா..!!! ஆரஞ்சு cap holder's team cup வாங்கியதே இல்லை. எங்களுக்கு title cup-பே போதுமானது.

தராசு on April 26, 2010 at 10:26 AM said...

சரி விடுங்க பாஸ்,

அடுத்த டூர்ல பாத்துக்கலாம். ஆனா, IPL இருக்குமா, இருந்தாலும் இதே வீர்யத்தோட இருக்குமா, இப்படி கச்சிதமா நடக்குமா அப்டீன்னு யாராவது ஆல மரத்தடி கிளி ஜோசியம் பாத்து சொல்லுங்கப்பு.

Anbu on April 26, 2010 at 10:51 AM said...

நேற்று கேப்டனாக தோனி கலக்கினார்...இதே வேகம் உலகக்கோப்பை 20- 20யிலும் இருந்தா நல்லா இருக்கும்...

பாடல் நல்லா இருக்கு...

ஆதிமூலகிருஷ்ணன் on April 26, 2010 at 10:55 AM said...

ஏதோ செமிபைனலுக்கே வரமாட்டாய்ங்கன்னு சொல்லிகினுருந்தாங்க.. நீ என்னடான்னா கப்பே வாங்கிட்டாங்கோனு சொல்றயே.. ஹூம்.. எப்போ நடந்துச்சு இது? சொல்லவேயில்ல..

எட்வின் on April 26, 2010 at 11:20 AM said...

பாட்டு ஜூப்பருங்க. நல்லா அடிச்சி ஆடுங்க தல. சென்னைக்கு விசில போட்டுட்டோம்ல.

//(சமாளிக்கறது எவ்ளோ கஷ்டம்???) //

உங்க நேர்ம ரொம்பப் பிடிச்சிருக்கு

அன்புடன்-மணிகண்டன் on April 26, 2010 at 11:29 AM said...

//ஓவர் தொடங்கும்போது எவ்வளவு ரன் அடிப்பார்கள் என்று காலர்கள் சொல்லவேண்டும். யார் சொன்ன ரன் அடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம். இது பெட்டிங்கில் வருமா வராதா???) //

இது பெட்டிங்'ல வராதுன்னு நினைக்கிறேன் கார்க்கி..
போட்டியில் பங்கெடுத்துக்கிற எல்லார் கிட்டயும் பணம் வசூல் பண்ணி யாராவது ஒருத்தருக்கு மட்டும் பரிசு கொடுத்தா வேணுமின்னா (சூதாட்டம்) பெட்டிங்'ன்னு சொல்லலாம்..

சுசி on April 26, 2010 at 11:47 AM said...

பாட்டு சூப்பர்..

கலக்கிட்டிங்க கார்க்கி..

SShathiesh-சதீஷ். on April 26, 2010 at 11:49 AM said...

நல்லாய் பாட்டெலாம் எழுதுறிங்க தல. எப்போ நம்ம தளபதிக்கு ஓபனிங் சாங் எழுதப்போறிங்க. அப்புறம் உங்களுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம். வரிப்பேரரசு கார்க்கி எப்புடி இருக்கு. ஆர்.ஜே வேலை ரொம்ப இலகு என்று நினைச்சிட்டிங்களா தல. வந்து பாருங்க அப்புறம் புரியும்...ஆனால் வர வாழ்த்துக்கள்.

புன்னகை on April 26, 2010 at 12:32 PM said...

It was an amazin match!!! A well deserved victory for de Chennai team!!! Dhoni, super cool captain! India is in safe hands!!!
நாங்களும் இங்கிலீஷ்ல கமென்ட் போடுவோம்ல :P

ர‌கு on April 26, 2010 at 12:55 PM said...

அந்த‌ நிக‌ழ்ச்சியை லீக் மேட்சுக‌ளிலிருந்தே நானும் கேட்டு ர‌சித்தேன்...ஏதோ ந‌ம் ந‌ண்ப‌னுட‌ன் உரையாடுவ‌து போல‌ பின்னி எடுக்கிறார்க‌ள் சுரேஷும், அலோஷிய‌ஸும்

அரையிறுதியில் டெக்க‌ன் சார்ஜ‌ர்ஸை 'ரிவ‌ர்ஸ் வாஸ்து' என்றெல்லாம் சொல்லி செமையாக‌ க‌லாய்த்த‌ன‌ர்

//எனக்கும் இப்படி ஒரு ஆர்.ஜேவாக வேண்டுமென்பது கனவு.. ம்ம்ம்//

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வாழ்த்துக‌ள் :)

நாய்க்குட்டி மனசு on April 26, 2010 at 1:11 PM said...

I agree with anbudan manikandan.

பிரசன்னா on April 26, 2010 at 2:17 PM said...

//எனக்கும் இப்படி ஒரு ஆர்.ஜேவாக வேண்டுமென்பது கனவு..//

விஜய் பாட்டா போடுவீங்க.. கரெக்டா :)

அன்புடன் அருணா on April 26, 2010 at 2:47 PM said...

(சமாளிக்கறது எவ்ளோ கஷ்டம்???)
ஆனாலும் நல்லாவே சமாளிச்சுட்டீங்க!

கார்க்கி on April 26, 2010 at 3:09 PM said...

ஷங்கர் தங்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில் த்ங்களின் புரொஃபைல் படத்தை மாற்றினால் நான் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பதோடு...... :))

செந்தில், உங்களுக்கு டீம் முக்கியம். எனக்கு தாதா..

தராசு, எப்படி நடந்தாலும் இந்தியாவில் கிரிக்கெட் காசாகும் தலைவரே. கிரிக்கெட் விஜய் பட்ம மாதிரி. அதற்கு மோடி போன்ற இயக்குனர்கள்தான் வேண்டும் என்பது கிடையாது. எப்படியும் ஜெயிக்கும் :)

அன்பு, ஆம்.என் ஆசையும்

ஆ.மூ.கி, செமிஃபைனல் எல்லாம் தெரியுமா உங்களுக்கு???

எட்வின், வாழ்த்துகள்

மணி, நானும் டவுட்டாதாம்ப்பா கேட்டிருக்கேன். ஆனா எதெல்லாம் பெட்டிங் கீழ வரும்னு ஒரு லிஸ்ட் இருக்கும். நமக்கு தெரியல

நன்றி சுசி

சதீஷ், அது இலகுவான வேலைன்னு நான் சொல்லவே இல்லைங்க. ஆசைன்னுதான் சொன்னேன். எந்த முந்தகவ்லும் இல்லாமல் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலை எனக்கு கிட்டியது. நன்றாகவே செய்ததாக சொன்னார்கள்

புன்னகை, மன்னிக்க. எனக்கு இங்லீஷ் தெரியாது.

ஆம்.ரகு. கலக்கிட்டாங்க.

நாய்க்குட்டி, wer ikidm njik

பிரசன்னா, எல்லா ஆர்.ஜேக்களும் அதேதான் செய்கிறார்கள். நான் வித்தியாசமாக ஏதாவ்து செய்ய நினைக்கிறேன் :)

டீச்சர், நன்றி ஹிஹி

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on April 26, 2010 at 3:14 PM said...

//அதே வேளையில் த்ங்களின் புரொஃபைல் படத்தை (யும்) மாற்றினால் நான்(னும்) உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பதோடு...... :))//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு. :))

நர்சிம் on April 26, 2010 at 3:17 PM said...

தோனி!

மோகன் குமார் on April 26, 2010 at 4:17 PM said...

பாட்டு கலக்கல். ரேடியோ எப்ப கேக்குறீங்க கார்க்கி?? இந்த பையனுக்குள் என்னவோ இருக்கு பாரேன் :))

SShathiesh-சதீஷ். on April 26, 2010 at 4:54 PM said...

நான் உங்களை சாடும் படி அதை சொல்லவில்லை. நீங்கள் உங்கள் ஆசையை சொநீர்கள் வந்துபாருங்கள் தொடர்ந்து செய்ய சிலருக்கு அந்த ஆசையே போய்விடும் என்ற கருத்தில் தான் அதை சொன்னேன். கலக்குங்க கார்க்கி. அப்போ இன்னொரு அறிவிப்பாளர் ரெடி. வாழ்த்துக்கள்.

நாய்க்குட்டி மனசு on April 26, 2010 at 5:34 PM said...

wer ikidm njik//
இது என்னது. புரியலையே

கார்க்கி on April 26, 2010 at 5:37 PM said...

@நர்சிம்,
நிச்சயம் அவர் பெரியாளு சகா :))

@மோகன்,
லைவ் கமெண்ட்ரின்னா மேட்ச் நடக்கறப்பதானே சார்? :)))

@சதீஷ்,
ஹிஹிஹி.. நான் வந்தா கேட்கிறவங்கதான் சகா ஓடனும் :)))

@நாய்க்குட்டி,

ஆங்.. இப்படி தமிழ்ல கேளுங்க சொல்றேன் :))

Deivasuganthi on April 27, 2010 at 4:29 AM said...

பாட்டு சூப்பரா இருக்குதுங்க. சுரேஷ் great. நானும் அவரோட விசிறிதான்.

Jaya on April 27, 2010 at 8:03 AM said...

Enakku unga pathivin First Para thaan pidithathu...hmmmm :))

மகேஷ் : ரசிகன் on April 27, 2010 at 8:39 AM said...

//எனக்கும் இப்படி ஒரு ஆர்.ஜேவாக வேண்டுமென்பது கனவு.. ம்ம்ம்//

ஒரே அஜால் குஜால் ப்ரோக்ராம்ஸா தானே ஒலிபரப்புவீங்க?

அப்புறம் பொண்ணுங்களுக்குப் புடிச்ச மாதிரி.

கார்க்கி on April 27, 2010 at 10:43 AM said...

அனைவருக்கும் நன்றி

ரசிகன், உங்களுக்கு பிடிச்ச புரோகிராமும் பண்னனும் இல்லை. அதனால் செய்வேன் எப்பூடி?:)

LK on April 28, 2010 at 11:03 AM said...

naanum ippadithan thala thettikitten. enna pana DADAvoda neram sari illai

 

all rights reserved to www.karkibava.com