Apr 23, 2010

வாக்கிங் போனதால் குண்டானேன்


 

  வழக்கம் போல் அன்றிரவு லேப்டாப்புடன் அமர்ந்திருந்தேன். வழக்கம் போல கெலாக்சையோ எதையோ ஸ்வாஹா செய்து கொண்டிருந்தான் பப்லு. வழக்கம் போல் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அம்மா.

சேலையில் வந்த தோழி என்ற பதிவு போட்ட அன்று நடந்தது இது. சேட்டில் வந்த நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அலுவலகத்தில் ஒரு பெண் பால்கனியில் நின்று எதையோ ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவுடன் சொன்னாராம்

“ஒரு நிலா
சூரியனை
ரசிக்கிறது”.

   வேற வேலையே இல்லையாடா என்று அம்மா ஆரம்பித்தவுடன் பப்லுவைப் பார்த்தேன். மின்சார கண்ணாவில் மனோபாலா அண்ட் கோ தருவது போல வித்தியாசமான ரியாக்‌ஷன் ஒன்றை தந்துவிட்டு மீண்டும் கெலாக்சில் மூழ்கினான். அப்போதுதான் அது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு என்பதே புரிந்தது. சீரியல் முடிந்துவிட்டது போல என்றெண்ணிக் கொண்டே லேப்டாப்பை மூடினேன்.  சிறுது நேரத்தில் மொபைல் லேசாக அலறியது. எஸ்.எம்.எஸ்

“Hey. Its raining here”. அதே பெங்களூரில் இருந்து இன்னொரு நண்பன். சென்னையில் லோ வோல்டேஜ் பவரில் மின்விசிறி கூட லஷ்மன் ரன் ஓடுவது போல ஓடிக் கொண்டிருந்தது. பெருமூச்சினூடே “Lucky banglore. Enjoy “ என்று ரிப்ளை அனுப்பினேன். அடுத்த மெசெஜில் ஆலங்கட்டி மழை என்று சொல்லியிருந்தார் அந்த நண்பர். என்ன செய்யலாம் என்று யோசித்து “If it rains here, will go to beach.. mmm” என்றி பதிலனுப்பினேன். அதான் மழை வரல இல்ல என்று அவர் அனுப்பினார். இன்னும் சில நாளில் சென்னையில் மழை வரலாம். ஆனால் எத்தனை நாள் ஆனாலும் பெங்களூரில் பீச் வருமா என்று கேட்டுவிட்டுதான் யோசித்தேன், கொஞ்சம் ஓவராத்தாம் போறோமா என்று. பரிகாரமாக ஒன்று அனுப்பினேன். “Nallavanga irunthathaan mazahai varumaam.when will you come to chennai?”.

கெலாக்ஸ் தீர்ந்துவிட்டது போல.அதுவரை அமைதி காத்த பப்லு சொன்னான் “பாட்டி. இப்போ மொபைல் எடுத்துக்கிட்டான். நகரவே மாட்றான் பாட்டி” அப்போது அவன் எழுந்து நடந்துக் கொண்டிருந்தான் கிச்சனை நோக்கி. அம்மா உடனே ஆரம்பித்தார்கள். தொப்பை பெருசாகிட்டே போதுடா. கவனி. கொஞ்ச நாள் ஜாகிங், ஜிம் ஏதாவது போயேன். இல்லைனன விட்டுப் போனா டேன்ஸ் கிளாசாவது போலாமில்ல” அவர்கள் கண்ணுக்கு பப்லு தெரியவே இல்லையா என்றவுடன் அவனையும் கூட்டிட்டி போக சொன்னார்கள்.

ஜாகிங் எல்லாம் நமக்கு ஒத்துக்காதுடா வாகிங் போலாம் என்றான் பப்லு. மறுநாள் காலை போவது என்று முடிவானது. இந்தப்பக்கம் போய் அந்தப்பக்கம் வரலாமென மேப் தயாரித்தான் பப்லு. அவன் சொன்னபடியே சென்றோம். முடிவில் ஒரு ஹோட்டலின் அருகே போனவுடன் சொன்னான் பப்லு “டேய் கார்க்கி. இங்க இடியாப்பம் பாயா சுப்பரா இருக்கும்டா. சாப்ட்டு போலாமே”. வாகிங் சென்று கரைத்த மொத்த கலோரியையும் போல இரண்டு மடங்கு ஏறுவதற்கு வழி சொன்னான். அவன் பிடித்த அடத்தில் வேறு வழியில்லாமல் அவனுக்கு மட்டும் வாங்கித் தந்தேன். வீட்டில சொல்லாதடா என்று மிரட்டினானா வேண்டினானா என்று தெரியவில்லை. ஆனால் சொன்னான். இப்படியாக எங்கள் வாகிங் பாயாவிலும், வடைகறியிலும் நல்லபடியாக நடந்துக் கொண்டிருந்தது. அவ்வபோது நானும் பப்லுவுடன் ஜமாய்க்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் வாகிங் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பி வந்து பார்த்தால் தோசையுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருந்தான். வாகிங் போனதிலிருந்து ஒரு தோசை கம்மியா சாப்பிடுகிறான் என்று வேறு சொன்னார்கள் அம்மா. ”நாளைக்கு சீக்கிரம் வாங்கடா. ஸ்கூலுக்கு லேட் ஆயிடுது” என்ற அக்காவைப் பார்த்தேன். ம்க்கும். அடுத்த நாள் அதே மாதிரி பாயாவுக்கு தயாராகிவிட்டான் பப்லு. நான் கிளம்ப லேட் ஆனதும் அக்கா மீண்டும் “சீக்கிரம் வாங்கடா” என்றார்கள். வெளியே வந்து பப்லு “மாமா.ஹெல்மேட் எடுத்துக்கோ என்றான். என்னடா என்றால் லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிங் போலாம் என்றான்.

முடிவு செய்துவிட்டேன், இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன். இருக்கிற தொப்பையே போதுமென வாகிங்கை ரத்து செய்து விட்டேன்.

30 கருத்துக்குத்து:

Anbu on April 23, 2010 at 10:12 AM said...

me the first

Anbu on April 23, 2010 at 10:19 AM said...

:-))

புன்னகை on April 23, 2010 at 10:22 AM said...

//முடிவு செய்துவிட்டேன், இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன்.//
LWT!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் on April 23, 2010 at 10:58 AM said...

ஆஹா.. பைக்ல வாகிங்கா :) :)

vanila on April 23, 2010 at 11:14 AM said...

ரொம்ப Busy'யா இருக்கருதுனால, Gym, Jogging ரெண்டும் பண்ணுறதுக்கு ஒரு ஆள appoint
பண்ணி இருக்கேன்.

யாசவி on April 23, 2010 at 11:15 AM said...

நல்லா இருக்கு

:)

வளர்ர பையன கண்ணு போடாதேள்

சுசி on April 23, 2010 at 11:33 AM said...

பாவம் பப்லு :((((

//முடிவு செய்துவிட்டேன், இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன்.//

இது அவருக்கு தோண மாட்டேங்குதே..

வெற்றி on April 23, 2010 at 11:41 AM said...

//லேட் ஆகுது இல்ல. இன்னைக்கு பைக்ல வாகிங் போலாம் என்றான்//

ஹி ஹி ஹி :)))சிரிச்சுகிட்டே இருக்கேன் சகா :)))

SShathiesh-சதீஷ். on April 23, 2010 at 11:42 AM said...

நானும் ரன்னிங் பண்றன் தொப்பை குறையுதில்லை. என்ன செய்ய பெரியவரே கொஞ்சம் அட்வைஸ் பண்றது..

ர‌கு on April 23, 2010 at 11:49 AM said...

//“Nallavanga irunthathaan mazahai varumaam.when will you come to chennai?”.//

இது தோழி அப்டேட்ஸ்ல‌ வ‌ந்திருக்க‌ வேண்டிய‌ வ‌ரியோ?..;))

Karthik on April 23, 2010 at 12:13 PM said...

//லஷ்மன் ரன் ஓடுவது போல

தல தாதா மானத்தை காப்பாத்தினதுக்கு நன்னி. :)

//இவனுடன் சேர்ந்தால் நான் உருப்படாம போயிடுவேன்.

ROFLMAO. :))

Raja Subramaniam on April 23, 2010 at 12:15 PM said...

Bablu rocks

கார்க்கி on April 23, 2010 at 12:18 PM said...

நன்றி அன்பு :)

புன்னகை, இது என்னங்க? யாரு சொல்றா பாருன்னுற அர்த்தமா?

நன்றி சுந்தர்ஜி

வானிலா, சாப்பிட டைம் இருக்கா? இல்லைன்னா சொல்லுங்க

யாசவி, X axislaya, Y Axislaya?

சுசி, ரைட்டு

வெற்றி, ஹிஹிஹிஹிஹி

சதீஷ், எந்த பெரியவர கேட்கறீங்க? எனக்கும் சேர்த்து கேளுஙக்ளேன்

ரகு, ஷார்ப்புப்பா நீங்க :))

கார்த்திக், இந்த ஐ.பி.எல்லில் கொல்கத்தாவின் சிறந்த ஃபீல்டர் கூட தாதாதான்.. கலக்கறாரு

தராசு on April 23, 2010 at 12:23 PM said...

ம்,ம், சரி, சரி, அப்புறம்......

நாய்க்குட்டி மனசு on April 23, 2010 at 1:02 PM said...

முடியல கார்க்கி, நானே நினைச்சேன், லைன் clear ஆனதில ரொம்ப சந்தோசம் போலிருக்கேன்னு. வாக்கிங் தலைப்பில சரி பண்ணுங்க.

ஆதிமூலகிருஷ்ணன் on April 23, 2010 at 2:08 PM said...

கலக்கல் பதிவு, வனிலாவின் பின்னூட்டமும்.!

அமுதா கிருஷ்ணா on April 23, 2010 at 3:19 PM said...

கார்ல போலாமே பார்சல் வாங்கிட்டா கார்லேயே சாப்பிடலாம்..ஸ்கூலுக்கும் லேட் ஆகாது..

அன்புடன் அருணா on April 23, 2010 at 3:22 PM said...

Good weightt raising methods!

கார்க்கி on April 23, 2010 at 5:12 PM said...

நன்றி ராஜா சுப்ரமணியம்

நன்றி தராசு

நன்றி நாய்க்குட்டி. மாத்திட்டேன்

நன்றி ஆ.மூ.கி

அமுதா மேடம், ஐடியா கொடுங்க அவனுக்கு :((

டீச்சர், ஹிஹிஹி

RaGhaV on April 23, 2010 at 8:06 PM said...

:-)))

வால்பையன் on April 23, 2010 at 10:34 PM said...

“ஒரு நிலா
சூரியனை
ரசிக்கிறது”.//

அதே தான் சகா!
நானும் கோட்டை தாண்டி வரமாட்டேன்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வால்பையன் on April 23, 2010 at 10:35 PM said...

//இன்னும் சில நாளில் சென்னையில் மழை வரலாம். ஆனால் எத்தனை நாள் ஆனாலும் பெங்களூரில் பீச் வருமா//


இந்த மொக்கையிலிர்ந்தும் விடுவு வராது, பெங்களூருக்கு பீச்சும் வராது!

இரசிகை on April 23, 2010 at 10:45 PM said...

:))

Ganesh on April 23, 2010 at 11:11 PM said...

வழக்கம் போல் Bablu Rocks சகா....

ராஜ நடராஜன் on April 24, 2010 at 12:07 AM said...

சிரிப்பான் அதிகமா போட்டு பழக்கமில்லை:)

ரோஸ்விக் on April 24, 2010 at 9:43 AM said...

"வழக்கம் போல " - மூன்று முறை ஒரே பாராவில் உபயோகிக்கப் பட்டதால் தான் வாக்கிங் போவதை நிறுத்தும்படியாகிவிட்டது... :-)

T.V.ராதாகிருஷ்ணன் on April 24, 2010 at 10:07 AM said...

ஹி ஹி ஹி

Anonymous said...

:)

yuva on April 24, 2010 at 5:25 PM said...

Bikela pona Thoppai vilathu Sir........
Parking ku idamilla nu solli samalicha.........

spice on April 26, 2010 at 12:51 PM said...

Chennai Runners (http://www.chennairunners.com/) has a velachery chapter..you can give it a try.

 

all rights reserved to www.karkibava.com