Apr 22, 2010

போன வருஷம் இந்த நாள்..


 

1) லிஃப்டுக்குள் நுழைபவர்கள் அவர்களுக்காக ஸ்பெஷல் சர்வீஸ் வருவது போல கதவு திறந்தவுடனே உள்ளே நுழைய முயன்று வெளியே வருபவர்களை இடிப்பது போல் வந்து அசடு வழியும்போது

2) பத்தாவது தளத்திற்கு செல்ல வேண்டியவர்கள், லிஃப்ட் ஏதோ பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீஸ் என நினைத்துக் கொண்டு லிஃப்ட்டில் கூட ஃபுட்போர்டு அடிக்கும் போது..

3) சரியா பச்சை விளக்குதாங்க எரியும் நம்ம ரூட்ல. மஞ்சள் மாறிடபோதுன்னு கொஞ்சம் முறுக்குவோம். சிக்னல் பார்க்காம அவங்க குறுக்குல் வந்துட்டு "எப்படி போறான்" பாருன்னு நம்மள குத்தம் சொல்லும் பொண்ணுங்கள பார்க்கும் போது..

4) கேண்டின்ல வரிசையா டம்ளர் இருக்கும். பெரிய இவரு மாதிரி வந்து கேனோடு எடுத்து, அத கீழ் உதட்டில் முட்டுக் கொடுத்து தண்ணி குடிச்சிட்டு, கொஞ்ச தண்ணிய வாயில இருந்து அது மேல தெளிச்சிட்டு போகும் போது

5) கஷ்டப்பட்டு பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சு, அத தெளிவா ஒரு ஃப்ளோல Developer கிட்ட விளக்கி சொல்லும்போது, ஜிடாக்ல ஹாய் சொன்ன எருமமாட்டுக்கு பதில் ஹாய் சொல்லிட்டு, sorry, come again சொல்லும் போது

6) அதிசயமா ஒருத்தர் நம்மளுக்கும் புரியற மாதிரி ப‌யிற்சி வகுப்பு எடுத்திட்டு இருக்கும்போது அவரையும் கடுப்பேத்தி நம்மளையும் கொலை முயற்சி செய்ய தூண்டிற மாதிரி "அக்கட கொட்டு கொட்டு"னு ஒருத்தன் மொபைல் அலறும்போது

7) Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகலன்னு சொல்றவங்கள பார்க்கும்போது

8) காலேஜ் வரைக்கும் காடுவெட்டில புரண்ட அழுக்குமூட்டை அண்ணாமலை ,Hey dude try to avoid road side food என்று அட்வைஸ் அய்யாசாமீயா மாறும்போது

9) இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது

10) பொண்ணுங்களே அதிகம் பார்க்காம கலங்கி நின்ற என்னை மாதிரி மெக்கானிக்கல் பசங்க, அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள ந்மக்கு பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…

ங்கொய்யால மறுபடியும் நம்ம manufacturing domainக்கே போயிடலாம்ன்னு தோனுதுங்க..

_________________________________

இந்த புலம்பல் புலம்பி ஆறு மாதத்திற்குள் எங்க ஏரியாவுக்கே வந்தாச்சு. அதான் சந்தோஷத்துல ஒரு மீள்பதிவு.. :))

19 கருத்துக்குத்து:

க‌ரிச‌ல்கார‌ன் on April 22, 2010 at 11:20 AM said...

// சரியா பச்சை விளக்குதாங்க எரியும் நம்ம ரூட்ல. மஞ்சள் மாறிடபோதுன்னு கொஞ்சம் முறுக்குவோம். சிக்னல் பார்க்காம அவங்க குறுக்குல் வந்துட்டு "எப்படி போறான்" பாருன்னு நம்மள குத்தம் சொல்லும் பொண்ணுங்கள பார்க்கும் போது..//

manufacturing domainக்கே போனாலும் இது தொட‌ர்ந்து ந‌ட‌க்கும் தானே???

அப்புற‌ம் ச‌கா சைடு பார்ல‌ Diploma EEE Rs 8000 போட்டிருக்கீங்க‌ அதுல‌ ஒரு "0" மிஸ் ப‌ண்ணிட்டீங்க‌ தானே (உட‌னே 0 போட்டா அது வ‌ருச‌த்துக்குனு மொக்கை போட வேண்டாம்)

என்.ஆர்.சிபி on April 22, 2010 at 11:44 AM said...

:))

வாழ்க! வளர்க!

வெற்றி on April 22, 2010 at 11:48 AM said...

:))

Ganesh on April 22, 2010 at 11:59 AM said...

:))

RaGhaV on April 22, 2010 at 12:14 PM said...

//அழகழகான பொண்ணுங்க இருந்தும் அவளுங்கள ந்மக்கு பிடிக்காம போற மாதிரி நடந்துக்குற அலட்டல் அலமேலுகள பார்க்கும் போது…//

ஒன்னியும் புரியல சகா.. இதுக்கு தெளிவா ஒரு பதிவு போடுங்க.. ;-)

சுசி on April 22, 2010 at 12:46 PM said...

மீள் மொக்கை??!!

தராசு on April 22, 2010 at 1:18 PM said...

நாங்க அப்பவே படிச்சுட்டோம்.

தாரணி பிரியா on April 22, 2010 at 2:32 PM said...

ஆமா நானும் அப்பவே படிச்சு அப்பவே கமெண்டும் போட்டுட்டேன்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on April 22, 2010 at 4:14 PM said...

////////7) Conference roomக்கு போய் client கூட conferenceபோடுவதற்கு ஃபோன எடுத்திட்டு வந்து டெலிஃஃபோன் ஜாக்குக்கு பதிலா LAN portல சொருகிட்டு, phone ஒர்க் ஆகலன்னு சொல்றவங்கள பார்க்கும்போது/////////


அட நீங்களுமா ? நானும் இதுபோன்று பல அதிசயங்களில் தினம் தினம் ஏதேனும் ஒன்று நிகழ்ந்துவிடுகிறது .

yuva on April 22, 2010 at 5:46 PM said...

Nalla Velai paatheenga.......

அன்புடன் அருணா on April 22, 2010 at 6:14 PM said...

/இந்த புலம்பல் புலம்பி ஆறு மாதத்திற்குள் எங்க ஏரியாவுக்கே வந்தாச்சு. அதான் சந்தோஷத்துல ஒரு மீள்பதிவு.. :))/
வாழ்த்துக்கள்!

ர‌கு on April 22, 2010 at 6:53 PM said...

//Hey dude try to avoid road side food//

அவ‌ர் சொல்ற‌து ஓவ‌ர் சீன் போட‌ற‌ மாதிரி இருக்க‌லாம், அதுக்காக‌ road side foodஐ ச‌ப்போர்ட் ப‌ண்ணாதீங்க‌ ச‌கா. இந்த‌ ப‌ழ‌க்க‌த்தினாலேயே கிட்னி பாதிக்கும் அள‌வுக்கு அவ‌ஸ்தைப்ப‌ட்ட‌வ‌ரை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்

டம்பி மேவீ on April 22, 2010 at 7:27 PM said...

hey dude why மீள்பதிவு suddenly??? heAVY வேலை ??? back வலி ???

~~Romeo~~ on April 22, 2010 at 7:36 PM said...

ஒபெனிங் படிக்கும் போதே படித்து போல இருக்கே என்று . ..

மகேஷ் : ரசிகன் on April 22, 2010 at 9:55 PM said...

:))))))

செம வேலையா? இல்ல கல்யாண வீட்ல யாரையாச்சும் கரெக்ட் பண்ணி கடல வறுத்துட்டு இருக்கீங்களா?

மகேஷ் : ரசிகன் on April 22, 2010 at 10:23 PM said...

// 9) இவரு code தப்பா எழுதிட்டு, அதை யாராவது டெஸ்ட் செய்து தப்பை கரெக்ட் பண்ண சொன்னா, ஏதோ எக்ஸ்ட்ரா வேலை சொன்ன மாதிரி ”they are squeezing me” ன்னு கரும்பு மாதிரி கவலைப்படறத பார்க்கும்போது //


:)))))))))))))

வெற்றி on April 23, 2010 at 8:43 AM said...

//மகேஷ் : ரசிகன் said...

:))))))

செம வேலையா? இல்ல கல்யாண வீட்ல யாரையாச்சும் கரெக்ட் பண்ணி கடல வறுத்துட்டு இருக்கீங்களா?//

அதே டவுட்டுதான் எனக்கும்..எப்ப கால் பண்ணாலும் 'ENGAGED'ஆவே இருக்கு :)

கார்க்கி on April 23, 2010 at 10:11 AM said...

அனைவருக்கும் நன்றி

மகேஷ், வெற்றி.. என் வேலையே ஃபோன்லதாம்ப்பா.. ஐ மீன் என் புரஃப்ஷென சொன்னேன் (இதுதான் உங்க புரஃபஷேனவான்னு கேட்டிங்க, ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டுடுவேன் சொல்லிட்டேன்)

இரசிகை on April 23, 2010 at 11:01 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com