Apr 20, 2010

சேலையில் வந்த தோழி


 

அழகை மறைக்கத்தான்
சேலை என்றெண்ணியிருந்தேன்.
நீ சேலை கட்டியிருக்கும் அழகை
காணும் வரை

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

நீ சேலை கட்டி வந்த
ஒரு மழைநாளில்
நல்லாருக்கா என்று என்னிடம் கேட்டதை 
சேலையிடம் கேட்பதாக நினைத்துக்கொண்டு
அதன் பதிலுக்காய் காத்திருந்தேன் நான்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

எவ்வளவு முயன்றாலும்
இடுப்பை முழுசா மறைக்க முடியவில்லை
என ஆதங்கப்படுகிறாய்.
இடுப்பு அளவிற்கு இன்னும்
இறங்கவில்லை நான்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

அம்மனுக்கு சாத்த சேலை கேட்கிறார்கள்.
என்னிடம் அம்மனே
சாத்திக் கொண்ட சேலைதான்
இருக்கிறது என்றேன்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கித் தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ திருவான்மியூரில்தானே
இருக்கிறாய்?

50 கருத்துக்குத்து:

RaGhaV on April 20, 2010 at 12:38 AM said...

//உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கி தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்//

அட்டகாசமா இருக்கு சகா.. :-))

உங்களுக்கும் தோழிக்கும் வாழ்த்துக்கள்.. சீக்கிரமா ஒரு நல்ல செய்தி சொல்லுங்க.. :-))

அகில் பூங்குன்றன் on April 20, 2010 at 12:57 AM said...

//பூமிக்கு ஒரு நிலவுதானாம்//
அட்ரா சக்கை அட்ரா சக்கை...

உங்க தோழி மிகவும் கொடுத்து வைத்தவர்....

இராமசாமி கண்ணண் on April 20, 2010 at 1:32 AM said...

சீக்கிரம் கலயாணம் பன்னுங்க கார்க்கி.

சுசி on April 20, 2010 at 2:17 AM said...

அடடடடா..

ஊர் சரி.. பேர்??

சுசி on April 20, 2010 at 2:25 AM said...

சைடு பார் கலக்குது..

அத்திரி on April 20, 2010 at 6:48 AM said...

புலம்பல் ஜாஸ்தி ஆகிடிச்சி...ஆதி அண்ணன் எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வரவும்......

யாசவி on April 20, 2010 at 7:01 AM said...

nice words

Keep going.

Don't get married then u'll lost all ur poetical skils ;)

டம்பி மேவீ on April 20, 2010 at 7:25 AM said...

கார்க்கி ...ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க. சூப்பரா இருக்கு

நாய்க்குட்டி மனசு on April 20, 2010 at 8:18 AM said...

ரெண்டாவதில இருக்கிற குறும்பு இருக்கே!!

தராசு on April 20, 2010 at 9:02 AM said...

பின்னூட்டம் :

கொஞ்சம் ஓவராத்தான் போயிகிட்டிருக்க நீ....
என்ன பண்றது கலி முத்திடுத்து....

உண்மை:

பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.

அதும் அந்த "பூமிக்கு ஒரு நிலவுதானாம்" டாப் கிளாஸ்

முரளிகுமார் பத்மநாபன் on April 20, 2010 at 9:14 AM said...

சூப்பர் சகா, தபூ கார்க்கி..... :-)

மோகன் குமார் on April 20, 2010 at 9:28 AM said...

ம்ஹும்.. திருந்துற மாதிரி தெரியலை; இப்படியெல்லாம் அருமையா எழுதி என்னை மாதிரி சின்ன பசங்க மனசை கெடுக்குறீங்க; இதுக்கு ஒரே மருந்து கல்யாணம் தான் :))

கார்க்கி on April 20, 2010 at 10:13 AM said...

@ராகவ்,
நன்றி சகா. தோழி எங்க இருக்காங்கன்னுதான் தெரியல :)

@அகில்,
நல்ல பேருங்க உங்களது.

@ராமசாமி,
இப்பதான் அண்ணனுக்கு பண்ணேன் சகா. அடுத்து யாருக்கு பண்ணலாம்னு சொல்லுங்க. செஞ்சிடுவோம்

@சுசி,
ஊர் பேர்தாங்க அது.

@அத்திரி,
ஹலோ. ஐடியா கொடுத்த்வரே அவருதான்

@யாசவி,
அதுக்குன்னு எனக்கு கல்யாணமே ஆகக்கூடாதா? எவ்ளோ நல்லவங்க சகா நீங்க!!!!!!!!!!!!!!1

@மேவீ,
கோழி அப்டேட்ஸ் எப்போ டம்பீ?

@நாய்க்குட்டி,
ஹிஹிஹிஹி

@தராசு,
நன்றிங்கண்ணா

@முரளி,
நன்றி சகா. அத்திரி பாருங்க. “தப்பூ” கார்க்கின்னு சொல்றாரு :))

@மோகன்,
நீங்கலாம் சின்னப்பசங்கன்னு சொன்னா.. வேற வழியில்லை. நான் கல்யாணமே பண்ணிக்கிரேன் :))

T.V.ராதாகிருஷ்ணன் on April 20, 2010 at 10:21 AM said...

//நீ திருவான்மியூரில்தானே
இருக்கிறாய்//

????!!!!!

க‌ரிச‌ல்கார‌ன் on April 20, 2010 at 10:26 AM said...

க‌ல‌க்க‌ல் ச‌கா

என்ன‌ தோழி செஞ்ச‌ நீ
கார்க்கி ச‌கா நெஞ்ச‌ நீ!!!!!!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on April 20, 2010 at 10:29 AM said...

ஆஹா என்ன இன்னைக்கு ஒரே சேலை வியாபாரமா இருக்கு . சேலை ஒவ்வொன்றும் ஒரு சோலைபோல் அழகான வார்த்தைகள் .

நர்சிம் on April 20, 2010 at 10:42 AM said...

போன் பண்ணா “திருவான்மமியூர்ல ஆபிஸ் வேலையா இருக்கேன் சகா,”ன்னே சொல்றியே சகான்னு நினைச்சேன்...ரைட்ட்டு சகா.

லோகேஷ்வரன் on April 20, 2010 at 10:47 AM said...

//உனக்கு வேண்டுமென்றால்
வானையே சேலையாக்கி தருவேன்
என்ன செய்ய..
பூமிக்கு ஒரு நிலவுதானாம்!!!//

இது போன்று இரட்டை அர்த்தம் கொண்ட கவிதைகளை எழுதி என் போன்ற சின்ன பையன் மனதினை
கெடுப்பதை வன்மையாக கண்டித்து கொள்கிறேன்

radhika on April 20, 2010 at 11:03 AM said...

தூணிலும் இருப்பார்
துரும்பிலும் இருப்பார்
என்கிறார்கள்..
நீ திருவான்மியூரில்தானே
இருக்கிறாய்?

eppadithaan ippadi ellaam yosikiringalo? Very romantic.

If someone proposes me like this, I will say yes right away.

Keep rocking

taaru on April 20, 2010 at 11:20 AM said...

கொஞ்சம் கொஞ்சமா தான் உண்மை வெளிய வருது... ஏரியா கன்பார்ம் ஆயிருச்சு? இப்டியே விட்டா! பேரும் கூடிய சீக்கிரம் வந்துரும்.... வரணும்...!!! [என்ன சகா..அதுக்கு தானே இதெல்லாம்....] அவீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்காய்ங்க....

Hanif Rifay on April 20, 2010 at 11:33 AM said...

இந்தா பாருங்க கார்க்கி இது சரி பட்டு வராது..... உங்களுக்கு தோழி இருக்கறாங்க எழுதறீங்க....எங்களுக்கு இல்லியே.... நாங்க படிச்சுட்டு எங்க போறது சகா....


நல்லாருக்கு சகா... :-)

RaGhaV on April 20, 2010 at 11:40 AM said...

//தோழி எங்க இருக்காங்கன்னுதான் தெரியல//

அடங்கப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமீமீமீ... ;-)

ர‌கு on April 20, 2010 at 11:47 AM said...

திருவான்மியூரா? ஓகே ஒகே, தோழிக்கு தோழி யாராவ‌து இருக்கீங்க‌ளா ச‌கா? நெக்ஸ்ட் டைம் நீங்க‌ போகும்போது நானும் வ‌ரேன் ;))

Sam on April 20, 2010 at 12:04 PM said...

நேத்து பதிவ படிச்சு கண்ணு கலங்கிடுச்சு சகா.இன்று இதயத்தை மெல்லியதாய் வருடிவிட்டாய். நாளை வயிறு குலுங்க சிரிக்க வைக்க ஏழு வருவாரா?

அமுதா கிருஷ்ணா on April 20, 2010 at 12:06 PM said...

சகாக்கள் எல்லாம் சேர்ந்து இந்த சகா வீட்ல சொல்ல கூடாதா???

கார்க்கி on April 20, 2010 at 12:12 PM said...

@டீ.வீ.ஆர்,
என்ன சார் அர்த்தம் இதுக்கு?

@கரிசல்,
ஹிஹிஹி. நல்லாருக்கே

@சங்கர்,
நன்றி

@நர்சிம்,
ஹலோ பாஸ்.என் ஆஃபிஸும் அடையாறுதானே.

@லோகேஷ்,
சின்னப்பையன்னா இதெல்லாம் எப்படி புரியுதுப்பா? குழந்தையா அழகா போகோ சேனல் பாரு. போ போ

@ராதிகா,
நல்ல வேளை. நர்சிம் வந்துட்டு போயிட்டாரு :)

@டாரு,
நீங்களாவது நம்புங்க சகா. நான் இன்னும் சிங்கிள் சிங்கிள் சிங்கிள்தான்

@ஹனீஃப்,
அட எனக்கும் இல்லைன்னுதானே சொல்றேன் சகா

@ராகவ்,
:)))

@ரகு,
தோழிக்கு தோழி இருந்தா தப்பாயிடுமே சகா. :))

@சாம்,
அப்படி நடந்தா வியாழக்கிழமை நான் கடைக்கு லீவுதான் விடனும். இல்லைன்னா அடி பின்னுடுவாங்க என்னை :))

@அமுதா,
சொல்லுக்க மேடம். நல்லா சொல்லுங்க

Hanif Rifay on April 20, 2010 at 12:18 PM said...

@ஹனீஃப்,
அட எனக்கும் இல்லைன்னுதானே சொல்றேன் சகா


@கார்க்கி
இத நா நம்பமாட்டேன்....பொய் சொல்லாதீங்க சகா... அப்புறம் துங்கும் போது கண்ணு தெரியாது...(ஆபீஸ்ல தூங்கும்போதும்)

தமிழ் on April 20, 2010 at 12:22 PM said...

வித்தியாசமான சிந்தனை :)

நல்வாழ்த்துக்கள் :)))

லோகேஷ்வரன் on April 20, 2010 at 12:45 PM said...

//@லோகேஷ்,
சின்னப்பையன்னா இதெல்லாம் எப்படி புரியுதுப்பா? குழந்தையா அழகா போகோ சேனல் பாரு. போ போ//

கார்கி ப்ளாக் படிச்சா நாலு நல்ல விஷயகள கத்து கலாம்னு பெரியவங்க சொன்னகனு படிச்சேன் அங்கிள் ...
ஆனா நீங்க ரொம்ப மோசம் ....
நான் பேசாம மானட மயிலாட ப்ரோக்ராம் பாகரேன் அங்கிள் ...

Raja Subramaniam on April 20, 2010 at 12:49 PM said...

suuupeeerrrrbbbbb

தாரணி பிரியா on April 20, 2010 at 1:26 PM said...

: ).மொதல்ல உங்க வீட்டுல இருக்கிறவங்களை படிக்க சொல்லணும். தோழி ரொம்ப தொந்தரவு செய்யறாங்க போல‌ :)

Anonymous said...

நல்லா இருக்கு கார்க்கி

புன்னகை on April 20, 2010 at 2:57 PM said...

என்னவோ போங்க, நல்லது நடந்தா சரி! :-)

Karthik on April 20, 2010 at 3:45 PM said...

:))

yuva on April 20, 2010 at 6:59 PM said...

Thozhiyin Peyar ennavo????

ஆதிமூலகிருஷ்ணன் on April 20, 2010 at 7:05 PM said...

முதல் நான்கும் கலக்கல்ஸ்.!

தமிழ்ப்பறவை on April 20, 2010 at 7:16 PM said...

2,3,4,6 ரசித்தேன் சகா...

பிரபாகர் on April 20, 2010 at 7:41 PM said...

சேலையைப்பார்த்து வேலையை மறந்து
சிந்தித்து ஏழு சிந்திக்க வைத்தீர்...

பிரபாகர்...

டம்பி மேவீ on April 20, 2010 at 8:20 PM said...

கோழி தந்த தோழி - கார்க்கி எதிர்க் கவிதை

கார்க்கி on April 21, 2010 at 10:21 AM said...

அனைவருக்கும் நன்றி...

மூன்றாவது அப்டேட் புரியவில்லை என்று சிலர் சொன்னார்கள். ஜீன்ஸ் படத்தில் ஒரு பாடல் வரி

“பெண்ணை உனது மெல்லிடை பார்த்தேன்.அடடா பிரம்மன் கஞ்சனடி..
சற்றே நிமிர்ந்தேன்..தலை சுற்றி போனேன்..ஆஹா அவனே வள்ளலடி..”

அவர் ரிவர்ஸீல் பார்த்திருக்கிறார். நான் வரிசைப்படி வந்தேன். அவ்வளவுதான் சொல்ல முடியும் :

நர்சிம் on April 21, 2010 at 10:40 AM said...

//புன்னகை on April 20, 2010 2:57 PM said...

என்னவோ போங்க, நல்லது நடந்தா சரி! :-)
//
//If someone proposes me like this, I will say yes right away.//

//@ராதிகா,
நல்ல வேளை. நர்சிம் வந்துட்டு போயிட்டாரு :)//

;););)

கார்க்கி on April 21, 2010 at 12:34 PM said...

@நர்சிம்,

இப்போ இந்த சிரிப்பு ரொம்ப அவசியமா சகா? போயிடுங்க. ஏதாவ்து சொல்லிட போறேன் :)))

Yuva on April 21, 2010 at 1:05 PM said...

//அவர் ரிவர்ஸீல் பார்த்திருக்கிறார். நான் வரிசைப்படி வந்தேன். அவ்வளவுதான் சொல்ல முடியும் ://

நான் கண்களோன்னு நினைச்சேன். அருமையான விவரிப்புகள். ம்ஹும்...

கார்க்கி on April 21, 2010 at 2:44 PM said...

@யுவா,

சேலை கட்டினாலும், சுடிதார் அணிந்தாலும் கண்ணுல என்ன சகா மாற்றம் இருக்கும்?

அப்பாவி தங்கமணி on April 21, 2010 at 7:52 PM said...

சூப்பர் கவிதை...

nagarajan on April 22, 2010 at 2:11 AM said...

Second Snippet super...

Please write about Thozhi and Mazhaikalam....

Sen22 on April 23, 2010 at 10:31 AM said...

Simply Superb...


Senthil,
Bangalore..

Mathan Kumar on April 30, 2010 at 3:03 PM said...

எல்லாம் பொய்தானே எப்படி சொன்னால் என்ன? எல்லாதயூம் ரசிச்சுதானே ஆகணும்.

தமிழ்தோட்டம் on January 4, 2012 at 9:33 AM said...

பாராட்டுகள் நல்லா இருக்கு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

நதிக்கரை on January 5, 2012 at 6:06 PM said...

கவிதைகளில் உமது இளமை தெரிகிறது,
மத்திம வயது நிறைந்த கவிதைகளை நோக்கி எப்போது ?

 

all rights reserved to www.karkibava.com