Apr 19, 2010

சிவா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


 

  குளிரூட்டப்பட்டிருந்த அந்த அறைக்குள் நானும், என்னுடன் பணிபுரிந்த இன்னும் 20 பேரும் அமர்ந்திருந்தோம். வட்ட வடிவில் போடப்பட்டிருந்த நாற்காலி வரிசையில் சரியாக என் எதிரில் அவர் அமர்ந்திருந்தார். 35 வயதுக்காரர் போல தோற்றமளித்த அவர், தன்னை சிவக்குமார் என்று சபையில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அன்றுதான் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எல்லாமே பொதுவானவை(வேலை தொடர்பானது அல்ல) என்பதால் எளிதில் அவரால் பங்கெடுத்து பேச முடிந்தது. அவரது வசீகர பேச்சு என்னை மட்டுமல்ல, அனைவரையும் ஈர்த்தது.

சந்திப்பு முடிந்து வெளிவந்தபோதுதான் கவனித்தேன். அவரது ஒரு கால் சரிவர நடக்கவில்லை. சற்று தாங்கியபடி நடந்து வந்து நீங்கதானே கார்க்கி என்றார். என் யோசனை முடிவதற்குள் “நானும் வேளச்சேரிதான். நீங்களும் அங்கதான்னு சொன்னாங்க” என்றார். அன்று தொடங்கிய பேச்சு நேற்று இரவு கூட தொடர்ந்தது. பல விஷயங்களில் என் குரு அவர். வயதைத் தவிர எங்களிடையே பெரிதாய் வித்தியசத்தை யாரும் கண்டதில்லை. அடையாள அட்டையை மறந்த  நாட்களில் கூட தனது சிரிப்பை மறந்ததில்லை அவர். அவருடன் இருக்கும் போதெல்லாம் சந்தோஷமும் சிரிப்பும் அன்றி வேறு எதற்கும் இடமில்லை. மாப்ள என்பது அவர் என்னை அழைக்கும் பெயர்

  துறுதுறு பேச்சும், வேகமான செயல்களும் சிவாவின் அடையாளம். சிவா. வலதுகால் மட்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் எங்கள் எல்லோரையும் விட வேகமாய் நடப்பதும், வேலைகள் செய்வதும் அவர்தான். லாஜிஸ்டிக்ஸ் துறையில் வேலை என்பதால் தினமும் நடந்தே ஆக வேண்டும். லாரி கேட்டுக்குள் நுழைந்ததாக தகவல் வந்தால் போதும். லாரிக்கு முன் ஸ்டோர்ஸில் இருப்பார்

ஒரு முறை நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெறவும், கற்றுக்கொள்ளவும் சென்றார். இவரது வலது கால் குட்டை என்பதால் சாத்தியமில்லை என்பது போல் சொல்லியிருக்கிறார்கள் அந்த பயிற்சி நிறுவனத்தில். நண்பர்களிடம் ஒரே வாரத்தில் பயின்றதோடு மட்டுமல்லாமல், உரிமமும் பெற்றுக் கொண்டு அந்த பயிற்சியாளரைப் போய் சந்தித்தார். தனது காரில் அவரை ஏற்றிக் கொண்டு ஓட்டி காண்பித்தார். பெர்ஃபெக்ட் என்று பதில் வந்ததாம் அவரிடமிருந்து. எந்த ஒரு செயலும் தன்னால் சாத்தியம் என்று நம்புவார் சிவா. அதுவும் தன் காலால்தான் அது நடக்காது என்பது போல் யாராவது சொல்லிவிட்டால் அவ்வளவுதான்.

சிவாவுக்கு ஒரு நாள் பல் வலி. அருகில் இருந்த மருத்துவரிடம் சென்றார். சின்ன அ்றுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இரத்த அழுத்தத்தை சோதிக்காமல் அந்த மருத்துவர் செய்த தவறால் மறுநாளே பாதிக்கப்பட்டார் சிவா. கண்கள் இருட்டிக் கொண்டு வர என்ன செய்வதென்று தெரியாமல் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். சோதித்த மருத்துவர்கள் வெளியே வந்து சொன்னது “சிவாவுக்கு ஸ்ட்ரோக்” அவரின் இடது பாகம் முழுவதும் செயலிழந்துவிட்டது. ஆம். வலது கால் ஏற்கனவே பிரச்சினை. இப்போது இடது காலும்.

விஷயம் கேள்விப்பட்டும் நான் மருத்துவமனை செல்லவில்லை. சில நாட்களில் அவர் வீடு திரும்பியவுடன் சென்றேன். அதே சிரிப்பு. ஆனால் வார்த்தைகள்? “வாடா மாப்ள” என்பது வேறு மாதிரி ஒலித்தது. எழுந்திருக்க முயன்றார். முயன்றார்.. அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சிவா முன்பு அழுதால் அடித்து விடுவார். அடக்கிக் கொண்டேன். போன வாரம் ஃபோன் பண்ணப்ப எங்கடா இருந்த என்றவரிடம் கிரிக்கெட் ஆடிட்டிருந்தேன் தல என்றேன் அணிச்சையாக. ஜெயிச்சியா, எவ்ளோ ரன் அடிச்ச, என்பது போன்ற அவரின் தொடர் கேள்விகள் ஏதோ செய்ய வெறித்துப் பார்த்தேன். சிவாவின் கண்கள் கலங்கியது.நானும் அவரின் ஒரு கண்ணாக இருப்பவன் என்பதால் கலங்கிக் கொண்டிருந்தேன்.

இருவர் மட்டும் இருந்த அறைக்குள் மெளனமும் வந்து அமர்ந்துக் கொண்டது. வெகு நேர அமைதிக்குப் பின் சொன்னார் சிவா “மாப்ள. இனிமேல என்னைப் பார்க்க  வராத. நானே ஃபோன் பண்றேன்” என்றார். சரியென்பது போல தலையாட்டினேன். சிவாவை அப்படியொரு நிலையில் பார்க்க முடியவில்லை என்பதால் அது எனக்கு செளகரியமாக அப்போதைக்குப் பட்டது.

சிலநாட்களுக்கு முன் சிவாவிடம் இருந்து அழைப்பு. ”மாப்ள இந்த வாரம் கிரிக்கெட் ஆடறீங்களா?” என்றவரிடம் ஆம் என்றேன். நானும் வறேண்டா என்றார். வீட்டிலே இருக்க அவருக்கும் போரடிக்காதா?. காலையில் வீட்டுக்கு வந்து அழைத்துப் போவதாக சொன்னேன். வழக்கமாக பைக்கில் செல்வேன். காரில் செல்வதைப் பார்த்த அம்மாவிடம் சிவா குறித்து சொன்னேன்.

   அவர் வீடடைந்த போது படிக்கட்டில் இறங்கி வந்துக் கொண்டிருந்தார் சிவா. ஆச்சரியமாக பார்த்தேன். உடனிருந்தவரை நான் இதுவரை பார்த்ததில்லை. செல்வம் என்று அவரை அறிமுகப்படுத்தினார். ஃபிசியோதெரபிஸ்ட்டான அவர் சொன்னவை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. இரண்டு கால்களும் சரியில்லாத நிலையிலும் செல்வம் சொன்ன பல பயிரற்சிகளை செய்து இன்று நடக்கக்கூடிய அளவுக்கு வந்துவிட்டார் சிவா. சினிமாவில் சொல்வார்களே அது போல இது நிஜ மெடிக்கல் மிராக்கிள் என்ற செல்வத்தின் கண்களிலும் ஆச்சரியம் மின்னியது. தொடர்ந்து அவர் சொன்னதையெல்லாம் சிரித்துக் கொண்டே கேட்டார் சிவா. கிரிக்கெட் ஆடப்போவதாக சொன்னவுடன் பாதுகாப்புக்கு செல்வமும் வருவதாக சொல்லியிருக்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை. அவரின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியும் எவ்வளவு பெரியது என்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை.

இரண்டு கால்களிலும் வெயிட் சேர்க்கப்பட்டு, அதோடு அவர் செய்த பயிற்சிகளின் புகைப்படங்களை காட்டினார் செல்வம். சிவாவின் முகத்தில் தெரிந்தது அதன் வலி. 6 மாதத்தில் நடக்கலாம் என்று உறுதி சொன்னாராம் செல்வம். 3 மாதத்தில் அதை செய்திருக்கிறார் சிவா. சில நாட்களுக்குமுன் முதுகு வலி என்று நான் போட்ட சீன் நினைவுக்கு வந்தது.

நடக்கவே மாட்டேன்னு நினைச்சியா மாப்ள. சிவாடா என்றவர் கார் சாவியை வாங்கிக் கொண்டார். தனது ஸ்டைலில் உள்ளே ஏறியவர் தனது பழைய வேகம் குறையாமல் அதே வேகத்தில் ரிவர்ஸீல் வண்டியைத் திருப்பி வந்தார். கிள்ளிப் பார்த்துக் கொண்டே உள்ளே ஏறினேன். சிவா சிரித்துக் கொண்டே இருந்தார். கூடவே இருப்பதால் அவர் அருமை தெரியவில்லை எனக்கு. ”சிவா”வைத் திருப்பினால் “வாசி” என்று வருகிறது. ஆம். அவரிடம் படிக்கத்தான், தெரிந்துக் கொள்ளத்தான் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே இருந்தேன். சிரிப்பு மாறாமல் “என்னடா மாப்ள” என்று தட்டியவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். பாடல் தொடங்கியது.

ஒரு சூறாவளி கிளம்பியதே..

சிவ தாண்டவம் தொடங்கியதே

image

46 கருத்துக்குத்து:

சுசி on April 19, 2010 at 4:11 AM said...

// ”சிவா”வைத் திருப்பினால் “வாசி” என்று வருகிறது. ஆம். அவரிடம் படிக்கத்தான், தெரிந்துக் கொள்ளத்தான் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. //

என்ன சொல்ல..
இப்படி ஒருவரின் நட்புக் கிடைக்கவே கொடுத்து வைத்திருக்கணும் கார்க்கி.

அவர் என்றும் நல்லபடியா இருப்பார்.

இராமசாமி கண்ணண் on April 19, 2010 at 4:25 AM said...

ய ரியல் ஹீரோ. நன்றி கார்க்கி பகிர்வுக்கு.

ர‌கு on April 19, 2010 at 7:36 AM said...

என்ன‌ ச‌கா, ஒரு ஹீரோவோட‌ ஃபோட்டோ இல்லாம‌ அவ‌ர் ப‌த்தின‌ ப‌திவா? ச‌ரியில்ல‌....

என்ன‌மோ சொல்ல‌ணும்னு தோணுச்சு, அஜித்தோட‌ சில‌ ப‌ட‌ங்க‌ளில், ஹீரோவோட‌ பேரு சிவா (வாலி, வில்ல‌ன், வ‌ர‌லாறு, அச‌ல்....)....;)

ஈரோடு கதிர் on April 19, 2010 at 8:17 AM said...

வாழ்க சிவா!!!!!!!!!!!!!!

இரசிகை on April 19, 2010 at 8:27 AM said...

nalla natpu.....!

cheena (சீனா) on April 19, 2010 at 8:36 AM said...

அன்பின் கார்க்கி

நல்ல நட்பு - நண்பர் சிவாவின் ( வாசியின் ) தன்னம்பிக்கையும் - அயரா முயற்சியும் - வாழ்வில் முன்னேற நாம் கற்றுக்கொள்ள வேண்டும் கார்க்கி.
நல்வாழ்த்துகள் சிவா - கார்க்கி
நட்புடன் சீனா

க‌ரிச‌ல்கார‌ன் on April 19, 2010 at 8:45 AM said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு ச‌கா

தராசு on April 19, 2010 at 9:04 AM said...

அருமை, அருமை தல.

காலையில வாசிக்க தெம்பா இருக்கு.

சிவாவுக்கு வாழ்த்துக்கள்.

♠ ராஜு ♠ on April 19, 2010 at 9:19 AM said...

சிவா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.

@ரகுண்ணே
அஜித்திற்கு மட்டுமல்ல,சிவா என்பது டோட்டல் தமிழ் சினிமாவுக்கே செண்டிமெண்ட் பெயர்.யூத் படத்துல கூட நண்பர் விஜய் பெயர் சிவாதான்.
தமிழ்ப்படம் பார்த்தீங்களா..?
:-)

Sundar சுந்தர் on April 19, 2010 at 9:19 AM said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு!

Cable Sankar on April 19, 2010 at 9:24 AM said...

நைஸ்..

நாய்க்குட்டி மனசு on April 19, 2010 at 9:40 AM said...

ரத்த புற்று நோய் வந்த தோழியைப் பார்க்க சென்று நான் அழ அவள் 'கடவுள் என் குழந்தைகளுக்காக என்னைக் காப்பார். நீ அழாதே' னு எனக்கு ஆறுதல் சொன்னது நினைவு வந்தது. அவள் இன்றும் வரலாற்று அதிசயமாக உயிரோடு இருக்கிறாள்.

Anonymous said...

நல்ல பதிவு.

நம்முடன் உறவாடுபவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள அநேகமிருக்கிறது.

மோகன் குமார் on April 19, 2010 at 10:10 AM said...

நல்ல பதிவு கார்க்கி; உங்கள் எழுத்தை எவ்ளவோ பேர் படிக்கிறாங்க; இத்தகைய நம்பிக்கையான விஷயம் அப்பப்போ எழுதுங்க சகா

ரகு சொன்ன மாதிரி அவர் போட்டோ போட்டிருக்கலாம்

முரளிகுமார் பத்மநாபன் on April 19, 2010 at 10:20 AM said...

வாவ்..... சூப்பர் சிவா.
அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என்று எதையும் சொல்லவேண்டாம், இப்படியே வாழ்க்கையை வாழச்சொல்லுங்கள்.

கார்க்கி on April 19, 2010 at 10:35 AM said...

நன்றி சுசி

நன்றி கண்ணன்.

சேர்த்துவிட்டேன் சகா. வட்டத்துக்குள் இருப்பவர்தான் சிவா!.
ராஜு பதில் சொல்லிவிட்டார். குஷியிலும் கூட.

நன்றி கதிர்

நன்றி ரசிகை

சீனா அய்யா, உண்மைதான்

நன்றி கரிசல்

நன்றி தராசு

நன்றி ராஜூ :)

நன்றி சுந்தர்

நன்றி கேபிள்

நன்றி நாய்க்குட்டி.

உண்மைதான் அண்ணாச்சி. எப்போதும் உடனிருப்பதாலே அவர்களை கவனிக்க தவறுவதாக நினைக்க தோன்றுகிறது

மோகன், எனக்கு அப்படி ஏற்படும்போதெல்லாம் பகிருந்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

முரளி, அதேதான்.

Vidhoosh(விதூஷ்) on April 19, 2010 at 10:54 AM said...

:) nice meeting you Siva!!!

யுவகிருஷ்ணா on April 19, 2010 at 11:20 AM said...

அருமையான பதிவு கார்க்கி!

RaGhaV on April 19, 2010 at 11:44 AM said...

சூப்பர் பதிவு கார்க்கி.. :-))

தர்ஷன் on April 19, 2010 at 11:54 AM said...

நல்லப் பதிவு சகா
தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பன எல்லாம் அபத்தங்களல்ல. ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்க வேண்டியதே. நாம் அபத்தங்களாய் கருதுபவையே பல ஆச்சரியங்களை நிகழ்த்த வல்லவையாய் இருக்கின்றன.

ஆதிமூலகிருஷ்ணன் on April 19, 2010 at 12:15 PM said...

தன்னம்பிக்கை டானிக்.

சிவாவுக்கு என் அன்பு.!!

Anonymous said...

படிக்கவே தன்னம்பிக்கையா இருக்கு.

LK on April 19, 2010 at 3:53 PM said...

arumai

கார்க்கி on April 19, 2010 at 4:21 PM said...

நன்றி வீதூஷ்

லக்கி, நன்றி

நன்றி ராகவ்

நன்றி தர்ஷன்

நன்றி ஆ.மூ.கி

நன்றி அம்மினி

நன்றி எல்.கே

Karthik on April 19, 2010 at 4:41 PM said...

செம!

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க கார்க்கி!

சிவா சார் ஹாட்ஸ் ஆஃப்!

Karthik on April 19, 2010 at 4:42 PM said...

சிவா சார் உங்களால கார்க்கிக்கு ஒரு .. சரி விடுங்க. :)))

SK on April 19, 2010 at 5:51 PM said...

Excellent Siva!!!

Thanks for sharing sagaa.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on April 19, 2010 at 6:24 PM said...

அருமை !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

தமிழ்ப்பறவை on April 19, 2010 at 7:41 PM said...

எக்ஸலெண்ட்...மிக மிக முக்கிய பதிவு...

Subankan on April 19, 2010 at 7:51 PM said...

நல்ல பதிவு சகா :)

Ramsundar on April 19, 2010 at 9:18 PM said...

நீடூடி வாழ்க..
சிவா.. கார்க்கி.. மற்றும் உங்கள் நட்பு..

இப்படிக்கு..

நீண்ட நாட்களாய் உங்கள் மற்றும் பல பதிவுகளை படிக்கும் வாசகன்...

பேரரசன் on April 19, 2010 at 9:38 PM said...

பகிர்வுக்கு நன்றி சகா...!

தாரணி பிரியா on April 19, 2010 at 9:46 PM said...

நம்பிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி கார்க்கி

Raja Subramaniam on April 19, 2010 at 11:35 PM said...

சிவாவிற்கு வாழ்த்துக்கள்

chezhian on April 20, 2010 at 5:17 AM said...
This comment has been removed by the author.
chezhian on April 20, 2010 at 5:19 AM said...

நடக்கவே மாட்டேன்னு நினைச்சியா மாப்ள. சிவாடா


அது ஒன்றே போதும் பாஸ்

அன்புடன் அருணா on April 20, 2010 at 5:27 AM said...

உங்களுக்கு ஒன்றும் சிவா சாருக்கு ஒன்றுமாக ரெண்டு பூங்கொத்து!

கார்க்கி on April 20, 2010 at 10:19 AM said...

அனைவருக்கும் நன்றி

Joseph on April 20, 2010 at 8:22 PM said...

அவருகிட்ட ஒரு கை எக்ஸ்ட்ரா இருக்கு சகா. அதான் நம்பிக்”கை”.
என் சல்யூட்ட அவருகிட்ட சேர்த்துரு.

shiva... on April 20, 2010 at 8:25 PM said...

" சிவா டா " ..ரன் படத்தில் மாதவன் இந்த வார்த்தை சொன்ன போது குட இந்த அளவுக்கு மாஸ் அக இல்லை .. ... கலக்குங்க சிவா...

பா.ராஜாராம் on April 22, 2010 at 5:29 AM said...

மிக அற்புதமான பதிவு கார்க்கி!

rajasurian on April 22, 2010 at 5:59 PM said...

ரியல் ஹீரோ. நல்ல பகிர்விற்கு நன்றி

ரோகிணிசிவா on April 23, 2010 at 5:09 AM said...

good post revealing your good writing skill and shiva s confidence, and physiotherapist's personal care ,
in this as a dentist, i d love to state the particular minor surgery would never have caused anything as u have described in the post, things might aggravate following the local anesthetic given or some other side effects caused by the drugs administered.
dental surgeries are very much minor ones,and are very rarely fatal

அனுஜன்யா on April 28, 2010 at 11:38 AM said...

Truly outstanding. My best wishes to Siva & Selvam.

நீ கூட பரவாயில்லையே - சில சமயங்களில் :)

அனுஜன்யா

சங்கீதன் on May 1, 2010 at 8:03 AM said...

சிவா.. சிவா.. சிவா.. சிவா.. தலையும் நீதானே தளபதி நீதான்..

Anonymous said...

Thank to God & MY Parents & Family & Very Importantly MY friends all.
Especically very thankful to MY MAPILLA Karki.

"Hope all know who Iam, Shiva - the same shiva.
Last week of August'10 - karki came to my office - and share his blog & he shown to everybody and about me he had written. Everybody in office gone thor & Me too.

Its exactly last yr sep'09 16 night got Brain storke the last level- next to heart stroke and been in Balaji Hospital 8 day in IMCU coma stage & then 2 days shifted from IMCU. Due to this Brain stroke -I got totaly on right side of Leg / Hand got parallayse attack too. My entire body right side attacked.


I had read this from the Post comment
ரோகிணிசிவா said...
good post revealing your good writing skill and shiva s confidence, and physiotherapist's personal care ,
in this as a dentist, i d love to state the particular minor surgery would never have caused anything as u have described in the post, things might aggravate following the local anesthetic given or some other side effects caused by the drugs administered.
dental surgeries are very much minor ones,and are very rarely fatal

Ms RohiniSiva - For ur clarification. Let me know u r a dentist.
I just gone to remove my right top side teeth. The doc is our area - Before / After he not checked my BP -were thats the prob crop. After removing my teeth he never checked BP and BP tablet. Thats the problem get strucked for 4days & my BP shooted up like anything, even though personally not checked.
This is wt history before attack. Im not blaming doc, but he should check BP for each & every patience.
This is one of the reason i can say. But its time ........it was.
Hope get recoverying very well and really thank each one them who read and know abt me thro MY Mappilla.

NOW ONE YEAR COMPLETED this 16th september - MY BIRTH DAY ON 17TH SEP'10.
GOD BLESS ALL

 

all rights reserved to www.karkibava.com