Apr 15, 2010

வாழ்க இந்தியா.. வாழ்க காங்கிரஸ்.. வாழ்க கார்க்கி


 

   உறவினர் மகன் ஒருவன் இளைஞர் காங்கிரஸில் வார்டு தலைவராக இருக்கிறான். பொறியியல் படிக்கும் யாரும் எந்த அரசியல் கட்சியிலும் சேரக்கூடாது என்ற விதி ஒன்று இருந்தது. இப்போதும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதெல்லாம் நமக்கு தேவையில்லை. அவனை மொக்கைப் போட்ட சில மேட்டர்களை மட்டும் பார்ப்போம்.

   திமுக, அதிமுக, என எல்லா கட்சி விசுவாசிகளும் இருந்தார்கள் அங்கே. எல்லோரும் இவனைப் போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். அரட்டை முடிந்து சாப்பிட அமர்ந்த போது சொன்னேன் “நீங்க எந்தக் கட்சியா இருந்தாலும் கை வச்சுதான் சாப்பிட முடியும். அரிவாள வச்சோ, சூரியன வச்சோ சாப்பிட முடியுமா?” என்றேன். தலைவர் முகத்தில் ரஞ்சிதாவைக் கண்ட நித்யாவைப் போல 1000 வாட்ஸ் பிரகாசம்.

  பாட்டி ஒருவர் மாடிக்கு செல்ல முயன்ற போது இளைய தலைவரைப் பார்த்து கொஞ்சம் மேல கொண்டு போய் விடுப்பா என்றார். மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த தலைவர் இரு பாட்டி வறேன் என்றார். சும்மா இல்லாமல் 40 வயது அங்கிள் ஒருவர் “பாட்டி கைய பிடிச்சுக்கோப்பா.காங்கிரஸ்காரனே கை பிடிக்கலைன்னா எப்படி” என்றார். பதில் சொல்ல முடியாத தலைவர் என்னைப் பார்க்க நான் காப்பாற்றினேன் “அவர் இளைஞர் காங்கிரஸ் அங்கிள். பாட்டிக்கு பேத்தி இருந்தா சொல்லுங்க. பிடிப்பாரு”

   என் பேச்சாற்றலைக் கண்டு (?) வியந்த வார்டு தலைவர் காங்கிரசை ஆதரித்து பேச சில பாயிண்டுகள் கேட்டார். விரைவில் அவரது கன்னிப் பேச்சு ஒரு மேடையில் அரங்கேற இருக்கிறதாம்.என்னால் முடிந்ததை சொன்னேன்

1) நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும் மைய கையிலதான் வைப்பாங்க.அதனால் கைக்கே ஓட்டு போடுங்கள்

2) தேர்தலில் எந்த கட்சி வேட்பாளர் ஜெயிச்சாலும் கங்கிராட்ஸ் தான் சொல்லுவாங்க. யாரும் பி.ஜே.பி , கம்யூனிஸ்ட்ன்னு சொல்ல மாட்டாங்க.

மூன்றாவது பாயிண்ட் சொல்வதற்குள் தலைவர் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருந்தார். அவர் அவசரத்திற்கு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வார்களா எனத் தெரியவில்லை. வாழ்க காங்கிரஸ். வாழ்க ராகுல். வாழ்க இந்தியா.

26 கருத்துக்குத்து:

நாய்க்குட்டி மனசு on April 15, 2010 at 9:01 AM said...

சித்திரை திருநாள் நல் வாழ்த்துக்கள்.
புத்தாண்டில் புது template புது பொலிவுடன் பளபளன்னு இருக்குது.
கை வசம் இப்படிப்பட்ட மொக்கை எவ்வளவு தான் இருக்குது.

தராசு on April 15, 2010 at 9:14 AM said...

வாழ்க மொக்கை,

வாழ்க டெம்பிளேட்.

Anbu on April 15, 2010 at 9:45 AM said...

'''“அவர் இளைஞர் காங்கிரஸ் அங்கிள். பாட்டிக்கு பேத்தி இருந்தா சொல்லுங்க. பிடிப்பாரு”'''

:-)))

முகிலன் on April 15, 2010 at 10:19 AM said...

டெம்ப்ளேட் லோட் ஆக டைம் பிடிக்கிது.. மத்தபடி டெம்ப்ளேட்டும் இடுகையும் சூப்பர்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on April 15, 2010 at 10:28 AM said...

கருத்தைக் கச்சிதமாக கவ்விகொண்டேன் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

புன்னகை on April 15, 2010 at 10:33 AM said...

:-)

அமுதா கிருஷ்ணா on April 15, 2010 at 10:43 AM said...

அந்த தலைவர் இன்னுமா உங்களிடம் பேசுகிறார்...

வெற்றி on April 15, 2010 at 11:01 AM said...

//“அவர் இளைஞர் காங்கிரஸ் அங்கிள். பாட்டிக்கு பேத்தி இருந்தா சொல்லுங்க. பிடிப்பாரு”//

ROTFL :)))))

Han!F R!fay on April 15, 2010 at 11:26 AM said...

"வாழ்க இந்தியா..... வாழ்க மொக்கை...

கார்க்கி on April 15, 2010 at 12:48 PM said...

நாய்க்குட்டி, மொக்கை கை வசம் இருக்காது. அப்பப்ப, அதுவா வரும். டெம்ப்ளேட் கருத்துக்கு நன்றி

@தராசு,
வாழ்க பின்னூட்டம்

@அன்பு,
:)))

@முகிலன்,
அபப்டியா? செக் பண்றேன் சகா

@சங்கர்,
ககபோவுக்கு நன்றி

@புன்னகை,
எதுக்குங்க ரெண்டு புன்னகை?

@அமுதா,
அப்போ ஓடினவர்தான். மேலதிக தகவல் ஏதும் இல்லை :)

@வெற்றி,
நன்றி

@Han f rfay,
என்ன பேருங்க இது???????????

ர‌கு on April 15, 2010 at 12:54 PM said...

//அவர் இளைஞர் காங்கிரஸ் அங்கிள். பாட்டிக்கு பேத்தி இருந்தா சொல்லுங்க. பிடிப்பாரு//

அடுத்த‌ ப‌திவுக்கு த‌லைப்பு "வந்தார் அங்கிள், த‌ந்தார் அறை...ஹாஸ்பிட்ட‌லில் கார்க்கி"......அய்ய‌ய்யோ வேணாம் வேணாம், அப்புற‌ம் "ந‌ர்ஸ் அப்டேட்ஸ்" வ‌ர‌ ஆர‌ம்பிச்சிடும் :))

// முகிலன் said...
டெம்ப்ளேட் லோட் ஆக டைம் பிடிக்கிது//

உண்மை ச‌கா, வேற‌ மாத்திடுங்க‌ளேன்...

Han!F R!fay on April 15, 2010 at 12:57 PM said...

@Han f rfay,
என்ன பேருங்க இது???????????

HANIF RIFAY


Han!f R!fay'நு போட்டேன் ..அது இப்டி ஆகிடுச்சு...:-(

தாரணி பிரியா on April 15, 2010 at 1:34 PM said...

சஞ்சய் எழுதின போஸ்டோன்னு நினைச்சேன்

//“நீங்க எந்தக் கட்சியா இருந்தாலும் கை வச்சுதான் சாப்பிட முடியும். அரிவாள வச்சோ, சூரியன வச்சோ சாப்பிட முடியுமா?//

ஆனா சூரியன் இருந்தா தான் சாப்பிடவே முடியும் சகா :)

RaGhaV on April 15, 2010 at 1:47 PM said...

:-)))

நர்சிம் on April 15, 2010 at 2:00 PM said...

//தாரணி பிரியா said...
சஞ்சய் எழுதின போஸ்டோன்னு நினைச்சேன்

//“நீங்க எந்தக் கட்சியா இருந்தாலும் கை வச்சுதான் சாப்பிட முடியும். அரிவாள வச்சோ, சூரியன வச்சோ சாப்பிட முடியுமா?//

ஆனா சூரியன் இருந்தா தான் சாப்பிடவே முடியும் சகா :)
//

;)

சுசி on April 15, 2010 at 2:13 PM said...

வாழ்க கார்க்கி..

வாழ்க மொக்கை..

டெம்ப்ளேட் சூப்பர்பா. எங்கதான் இப்டில்லாம் தேடி பிடிக்கிறீங்களோ.. வ எ இ..

சுசி on April 15, 2010 at 2:17 PM said...

டெம்ப்ளேட்ல பீர், கிட்டார், காப்ஸ், விண்டோனு அத்தனையும் அம்சமா பொருந்துது உங்களுக்கு :))))

செந்தழல் ரவி on April 15, 2010 at 3:15 PM said...

மொக்கையோ மொக்கை. mercy.

நேசன்..., on April 15, 2010 at 4:01 PM said...

சகா..உங்களுக்குன்னே சிக்குறாங்களே!.....வாழ்க அவர்கள்!

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on April 15, 2010 at 4:03 PM said...

:-))))

template நல்லாருக்கு சகா..

அமைதி அப்பா on April 15, 2010 at 4:36 PM said...

புரியுது..!

பருப்பு on April 15, 2010 at 10:53 PM said...

அய்யா சாளரம் அவர்களே,

உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்

ஜில்தண்ணி on April 15, 2010 at 10:56 PM said...

\\“அவர் இளைஞர் காங்கிரஸ் அங்கிள். பாட்டிக்கு பேத்தி இருந்தா சொல்லுங்க. பிடிப்பாரு”\\

சொல்லுங்க நாங்களும் வருவோம்ல

தல நானும் இளைஞர் காங்கிரஸ் தான்

ஆதிமூலகிருஷ்ணன் on April 16, 2010 at 12:03 AM said...

மொக்ஸ்.!

Karthik on April 16, 2010 at 2:31 PM said...

நான் டாக்டர் டலபதி கச்சில சேரலாம்னு இருக்கேன். :)))

Deivasuganthi on April 20, 2010 at 3:16 AM said...

நல்லா யோசிக்கறீங்க !!! :-)

 

all rights reserved to www.karkibava.com