Apr 12, 2010

தோழி அப்டேட்ஸ் – திருமண ஸ்பெஷல்


 

கையில் பூக்களோடு நடந்து வந்த தோழியைப் பார்த்து நர்சிம் கேட்டார் “பூவோட வறாங்களே. அவங்கதான் தோழியா சகா?” என்று. பார்க்காமலே சொன்னேன் “அவ பூவோட வர மாட்டா சகா. பூப்போல வருவா”

______________________________________________________

நகைக்கடை மாதிரி இருக்காங்களே அவங்க யாரு சகா என்றார் இன்னொருவர். பயந்து போய் தோழி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன். நடந்ததை சொன்னவுடன் சிரித்தபடி சொன்னாள் தோழி “நான் இன்னும் தங்கம்தாண்டா. நீ தட்டினாதானே நகையாவேன்”.

____________________________________________________

தோழியின் இலையில் முதல் ஸ்வீட் நான் வைக்கலாம் என்று ரசமலாய் கொண்டு போனேன். ரசமலாயை விட ரசகுல்லா பெட்டரா இருக்குமில்ல என்றாள். ”எல்லோரும் ரசகுல்லா வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.

______________________________________________________

       அண்ணனுக்கு பரிசளிக்க எதையோ காகிதத்தால் சுற்றிக் கொண்டு வந்த தோழி ”வாழ்த்து அட்டையில் என்ன எழுதுவது என்று தெரியாமல் “காதலால் நிரப்புங்கள்” என்று எழுதி இருந்தாள். “இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்” என்றேன். இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்

______________________________________________________

காலியாய் இருந்த மணமக்கள் இருக்கையில் இருவரும் அமர்ந்து பார்க்கலாம் என அழைத்தாள் தோழி. ”எப்படியும் நாம உட்காரணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று.

______________________________________________________

46 கருத்துக்குத்து:

Nataraj on April 12, 2010 at 11:28 PM said...

Thozhi is lucky..

தமிழ்ப்பறவை on April 12, 2010 at 11:29 PM said...

நடத்து ராசா....

சுசி on April 12, 2010 at 11:30 PM said...

சட்னு ஒரு சுயம்வரமே நடத்தி இருக்கலாம்.. பதிவுலகம் சாட்சியா..

நீங்க வேஸ்டு கார்க்கி..

வேற ஒண்ணும் சொல்றத்துக்கில்ல..

துபாய் ராஜா on April 12, 2010 at 11:48 PM said...

ரைட்டு... லைன் க்ளியராச்சுன்னவுடன் கியர் போட ஆரம்பிச்சாச்சு... :))

பா.ராஜாராம் on April 12, 2010 at 11:49 PM said...

:-)

பெருமூச்சை எப்படி பின்னூட்டமாய் இடுவது கார்க்கி?

எப்படியோ?வாழ்த்துக்கள் பேரன்ஸ்!

nagarajan on April 13, 2010 at 3:22 AM said...

Eagerly awaiting to see your Wedding Invitation......

டம்பி மேவீ on April 13, 2010 at 6:42 AM said...

last one really nice:)


itharkku yethiraga koli updates intru evening eluthugiren:))) )

SenthilMohan K Appaji on April 13, 2010 at 9:12 AM said...

Route clear-ஆன உடனே top gear போட்டுட்டீங்களே.

SenthilMohan K Appaji on April 13, 2010 at 9:15 AM said...

//*இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்**/
எனக்கும் புரியலப்பா. யாராச்சும் விளக்குங்களேன். யாராச்சும் என்ன? நீங்களே சொல்லிடுங்க கார்க்கி

Anbu on April 13, 2010 at 9:17 AM said...

Present Sir...

கார்க்கி on April 13, 2010 at 10:03 AM said...

@நட்ராஜ்,
சகா, அப்போ நான் அவ்ளோ நல்லவனா?

@பறவை,
ஹிஹிஹி.நலமா சகா?

@சுசி,
நான் வேஸ்ட்டா? நீங்க ரொம்ப வெகுளிங்க

@துபாய் ராஜா,
நாம எபப்வுமே செய்றதுதானே சகா இது?

@பா.ரா,
ரொம்ப ஈசி சார். “பெருமூச்சு விடறேன்” அப்படின்னே போடலாம் :)

@நாகராஜன்,
பதிவுலகில் எனக்கு நிறைய எதிரிகள் இருப்பதாக சகா ஒருவர் சொன்னது நெசம்தான் போலிருக்கே :))

@மேவீ,
காலாங்காத்தால் 6 மணிக்கு பிளாக் படிச்சிட்டு இருந்தா கோழி அப்டேட்ஸ்தான் எழுதனும். முழிச்சிக்கோப்பா

@செந்தில்,
ஹிஹிஹி. நம்ம வண்டி ஸ்கூட்டி பெப்ங்க. நோ கியர்.ஒன்லி டியர்(dear). அதுக்கு என்னா அர்த்தம்ன்னா அவ பேர விட பெரிய காதல் குறியீடு வேற என்ன இருக்கு சகா?

@அன்பு,
செல்லாது செல்லாது.. :)

ர‌கு on April 13, 2010 at 10:12 AM said...

//அவ பூவோட வர மாட்டா சகா. பூப்போல வருவா//

இதெல்லாம் ஓவ‌ர் ச‌கா, விக்ர‌ம‌ன் ப‌ட ட‌ய‌லாக் மாதிரி இருக்கு :))

//எல்லோரும் ரசகுல்லா வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க//

இதுதான் டாப். Pick of the updates......பை த‌ வே என‌க்கும் ர‌ச‌குல்லா பிடிக்கும் ;)

ர‌கு on April 13, 2010 at 10:22 AM said...

//அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று//

அஆ....நைட் எஸ்.ஜே.சூர்யா ப‌ட‌ம் ஏதாவ‌து பார்த்தீங்க‌ளா ச‌கா? ;)

தராசு on April 13, 2010 at 10:28 AM said...

//அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று.//

அதான், அம்மா கிட்ட, அக்கா கிட்டவெல்லாம் சொல்றம்னு சொல்லீட்ம்ல, கொஞ்சம் அமைதியா இருக்ங்கப்பா.....

புன்னகை on April 13, 2010 at 11:08 AM said...

// ”எப்படியும் நாம உட்காரணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்” என்றாள். அவளிடம் இன்றிரவு சொல்ல வேண்டும் மணமக்கள் இப்போது தேனிலவு சென்றிருக்கிறார்கள் என்று.//
இந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு! ;-)

RaGhaV on April 13, 2010 at 11:59 AM said...

அட்டகாசம்.. :-))

பின்னோக்கி on April 13, 2010 at 12:48 PM said...

வழிகிறது காதல்..

ராஜன் on April 13, 2010 at 12:50 PM said...

//“அவ பூவோட வர மாட்டா சகா. பூப்போல வருவா”//

கீரோயின் :பூக்காரா ! ஏ !பூக்கரா என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லிவிடு !

கார்கி : பூக்கூடை பாராமல் ..........

ராஜன் on April 13, 2010 at 12:52 PM said...

//“நான் இன்னும் தங்கம்தாண்டா. நீ தட்டினாதானே நகையாவேன்”.//

ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வாரியா ?

ராஜன் on April 13, 2010 at 12:54 PM said...

//எல்லோரும் ரசகுல்லா வேண்டும் என்றால் நான் என்ன செய்ய. நீ ஒருத்திதானே இருக்க” என்றேன்.//


கட்டெறும்பு புகுந்துருக்கு எதுக்கு !

ராஜன் on April 13, 2010 at 12:56 PM said...

//இதற்கு உன் பேரை மட்டுமே எழுதி இருக்கலாம்//

ஆஹா முனியம்மா

நீ எந்தன் கணியம்மா

மல்லிகைக் கொடியம்மா

மனதிற்குள் மழையம்மா

மார்கழிப் பனியம்மா!

ராஜன் on April 13, 2010 at 12:56 PM said...

//எப்படியும் நாம உட்காரணும். இப்பவே ரிகர்சல் பார்க்கலாம்//

எங்க எங்க அத நாம்பாக்கறேன்

மதார் on April 13, 2010 at 1:00 PM said...

//*இன்னமும் அர்த்தம் புரியாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறாள்**/

புரியலன்னுலாம் நினைக்காதீங்க , புரிஞ்சாலும் புரியாதமாதிரியே இருக்குறதுதான் பொண்ணுங்க ஸ்பெஷல் , வாய்மொழி தவிர்த்து பிறமொழி ஏற்கா , சும்மா பல்ப் ஆக யாரு விரும்புவா?

ராஜன் on April 13, 2010 at 1:03 PM said...

//மதார்//

மதார் மேடம் ! நல்லா இருக்கீங்களா ! எவ்வளோ நாளாச்சு ! ஹ்ம்ம்

மதார் on April 13, 2010 at 1:08 PM said...

@ராஜன்

எனக்கென்னங்க நல்லாவே இருக்கேன் , ப்ளாக்க தொலைச்சு தொலைச்சு மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கேன் .

ராஜன் on April 13, 2010 at 1:10 PM said...

//எனக்கென்னங்க நல்லாவே இருக்கேன் , ப்ளாக்க தொலைச்சு தொலைச்சு மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கேன்//

தொலைச்சு மீட்டீங்களா? என்ன ஆச்சு பாஸ்வேர்ட் மறந்து போச்சா

மதார் on April 13, 2010 at 1:14 PM said...

@ராஜன்

http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/04/me-pavam.html

ராஜன் on April 13, 2010 at 1:17 PM said...

நீங்க எவ்வளவு நல்ல நல்லவங்கன்னு இப்பதான் புரிஞ்சுகிட்டேன் ஐயாம் வெறி சொறி மேடம்

மதார் on April 13, 2010 at 1:20 PM said...

நீங்களும் இவ்வளவு நல்லவரா ? உங்களைப் பத்தி இப்படி ஒத்துக்குறீங்க.

ராஜன் on April 13, 2010 at 1:22 PM said...

//நீங்களும் இவ்வளவு நல்லவரா ? உங்களைப் பத்தி இப்படி ஒத்துக்குறீங்க.

//

பாருங்களேன் நமக்குள்ள என்ன ஒரு ஒத்துமை ! கிளாட் டு மீட் யூங்க ! அப்பறம்
நான் ரொம்ப மிருதுவான டைப்புங்க ! என்ன பாத்தா தெரியாது ! ( அவ்வவ்வ்வ்வ் !) பாக்க பாக்கத்தான் தெரியும்

வால்பையன் on April 13, 2010 at 1:24 PM said...

அப்படியா!

ராஜன் on April 13, 2010 at 1:26 PM said...

//அப்படியா!//

என்ன நொப்பிடியா ? நான் என்ன பொய்யா சொல்றேன்

வால்பையன் on April 13, 2010 at 1:27 PM said...

இருங்க கேட்டு சொல்றேன்!

ராஜன் on April 13, 2010 at 1:29 PM said...

//இருங்க கேட்டு சொல்றேன்!

//

அவ்வ்வ்வவ் ! வேண்டாம் . நான் மூடிக்கறேன்

தாரணி பிரியா on April 13, 2010 at 1:47 PM said...

:) 5 தோழிகள்தான் கல்யாணத்துக்கு வந்தாங்களா கார்க்கி

அமுதா கிருஷ்ணா on April 13, 2010 at 2:44 PM said...

அந்த தோழிகளை பார்க்கவாவது நான் கல்யாணத்திற்கு வந்து இருக்கலாம்..லேட்டாதான் திருமணத்தினை பற்றி படித்தேன்...

விக்னேஷ்வரி on April 13, 2010 at 6:12 PM said...

அஞ்சு அப்டேட்ஸும் அஞ்சு வேறு தோழிகளுக்கா... ;)

அன்புடன் அருணா on April 13, 2010 at 7:29 PM said...

கல்யாண வீட்டில் பார்த்த அத்தனை தோழியர் பற்றியும் அப்டேட்ஸ் வருமா???

Venkatesh on April 13, 2010 at 8:02 PM said...

நல்ல இருகிங்க

தாரணி பிரியா on April 14, 2010 at 12:30 AM said...

hi pudu template alaga irukku enna vijay photo & dada phota than missing pola

கயல் on April 14, 2010 at 12:38 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி! நல்ல காரியத்த தள்ளிப் போடாதீங்க!

வெற்றி on April 14, 2010 at 4:53 PM said...

all are nice sagaa :)))

வெண்பூ on April 14, 2010 at 5:14 PM said...

ரசகுல்லா சூப்பர் கார்க்கி.. ஐ மீன், ரசகுல்லா அப்டேட் சூப்பர்.. :)))

கார்க்கி on April 15, 2010 at 10:14 AM said...

//மீன், ரசகுல்லா அப்டேட் சூப்பர்//

நாம சுத்த சைவம் சகா. நோ மீன் :))


அனைவருக்கும் நன்றி

நர்சிம் on April 15, 2010 at 2:05 PM said...

ஹுக்கும்...

ஆதிமூலகிருஷ்ணன் on April 16, 2010 at 12:02 AM said...

அத்தனையும் அழகான கவிதைகள். (என்ன இப்பல்லாம் இந்த மாதிரி தோணவே மாட்டேங்குது எனக்கு? அவ்வ்வ்வ்வ்வ்)

 

all rights reserved to www.karkibava.com