Apr 11, 2010

நல்லபடியாய் நடந்தது


 

கல்யாணம் பண்ணிப்பார்.. வீட்டைக் கட்டிப்பார்ன்னு சொல்வாங்க. 2 வருடங்களுக்கு முன்பு முட்டி மோதி வீட்டைக் கட்டி முடித்தோம். இப்போது அண்ணனின் திருமணம். நல்லபடியாய் முடித்த திருப்தியைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. 11 வருடங்கள் முன்பு மறைந்த என் தந்தையின் நட்பு வட்டம் மொத்தமும் வந்திருந்தார்கள்.

DSCN0102

  20 வருடங்களுக்கு முன்பு மருத்துவர்.இராமதாசு, பேராசிரியர்.கல்யாணி (நடிகர் ராஜ்குமாரை மீட்க வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் சென்றவர்) மற்றும் என் தந்தை ஆகியோர் தலைமையில் திண்டிவன நகரில் “நகர கல்வி மேம்பாட்டுக் குழு” என்று ஆரம்பித்த அந்த நகரின் பல பிரச்சினைகளுக்காக போராடினார்கள்.பின்னர் இராமதாசு அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி சென்ற பின்னாலும் என் தந்தையும், கல்யாணி அவர்களும் இன்னும் பலரும் நகர பிரச்சினைகளுக்காகவே போராடினார்கள். அப்போது அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பலரும் வந்திருந்தார்கள். பலருக்கு அழைப்பு அனுப்பக் கூட எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தோம். விஷயம் கேள்விப்பட்டு அவர்களாகவே வந்திருந்தார்கள்.

ஒவ்வொருவரின் பேச்சிலும் அப்பாவைக் காண முடிந்தது. துவண்டு போன குடும்பம் நல்ல நிலைமையில் இருப்பதைக் கண்டு அவர்கள் அடைந்த ஆனந்தம் மகிழ்ச்சியளித்தது. நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் நிர்வாக மேலாளார் வந்திருந்த சில வழக்கறிஞர்களைப் பார்த்துவிட்டு அழைப்பிதழைப் பார்த்தாராம். அவருக்கும் அப்பாவைத் தெரிந்திருக்கிறது. எல்லோரையும் வழியனுப்பிவிட்டு கணக்கு முடிக்க அவரை சந்திக்க சென்றபோது “உங்க அப்பா கம்யூனிஸ்ட் வக்கீல்தானே. எனக்கும் தெரியும்ப்பா. கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். அடக்கிவைத்த கண்ணீர் முழுவதும் இரண்டு பெரிய துளிகளாக வெளிவந்தது.

வலையுலகில் இருந்து அப்துல்லா, நர்சிம்,லக்கி,அதிஷா,டி.வி.ஆர் அய்யா, ஆதி, ரிஷி, அத்திரி,கேபிள் சங்கர்,மேவீ,  ரசிகன் மகேஷ் மற்றும் பலர் வந்திருந்தார்கள். வெண்பூ குடும்ப சகிதமாக வந்து மகிழ்ச்சியளித்தார். அப்துல்லா தொண்டை பிரச்சினை என்றபோதும் “நூறு வருஷம்” பாடலைப் பாடி உற்சாகமூட்டினார். டி.வி.ஆர் அய்யாவுக்கு எப்போதுமே நான் செல்லப்பிள்ளை. வந்திருந்த அனைவரும் நிகழ்ச்சி முடியும்வரை இருந்து சிறப்பித்தார்கள். யாரையும் அண்ணனுக்கு அறிமுகம் செய்யவில்லை. அனைவரையும் அவன் அறிவான். மூட்டை மூட்டையாக இவர்கள் கொண்டு வந்த அன்பை சுமந்து சுமந்து தான் முதுகு வலி வந்தது. நடக்க கூட முடியாமல் நான் தவித்ததாக நர்சிம் எழுதியிருந்தார். அதற்கு இவர்களின் அளவில்லா அன்புதான் காரணம். நல்ல வேளை ..தற்காலிகமாக முதுகில் சுமந்து கொண்டிருந்தேன், நெஞ்சில் சுமக்காமல்.

  ஒரு வாரகாலமாக நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தேன். யாருக்கு எது தேவையென்றாலும் கார்க்கி என்று அழைப்பது ஒலித்துக் கொண்டேயிருந்தது. நேற்று காலையில் எழுந்தபோது வீட்டில் நான், அம்மா, அக்கா, மாமா மட்டுமே. பப்லுவும் ஊருக்கு சென்றிருக்கிறான். எல்லோரும் அசதியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டை சுற்றி சுற்றி வந்தேன். ஒரு வித வெறுமையாக இருந்தது. சில வருடங்களுக்கு முன்புவரை இந்த வெறுமையும், தனிமையும் எனக்கு பழகிய ஒன்றாக இருந்தது. இப்போது புதிதாக, கடினமாக மாறிவிட்டது. இதோ.. என் வெறுமைக்கு நான் கண்ட மருந்தை எடுத்து விட்டேன். இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இனி உங்கள் தோள்களில் கைபோட்டு உரையாடவும், கைகளை கிள்ளி எள்ளி நகையாடவும் வந்துவிட்டேன். நாளை முதல்…

பி.கு: நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு.

46 கருத்துக்குத்து:

சரவணகுமரன் on April 11, 2010 at 11:42 PM said...

//நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு//

அதானே?

தமிழ் பிரியன் on April 11, 2010 at 11:47 PM said...

அண்ணனுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்கள்!
பி.கு... ஜூப்பரோ ஜூப்பர்!

SShathiesh-சதீஷ். on April 12, 2010 at 12:04 AM said...

அண்ணனுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்கள்!

~~Romeo~~ on April 12, 2010 at 12:06 AM said...

மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் .

♠ ராஜு ♠ on April 12, 2010 at 12:14 AM said...

ரொம்ப மகிழ்வா இருக்கு..!
சீக்கிரம் உங்களுக்கும் ப்ராப்திரஸ்துவா..?

இராகவன் நைஜிரியா on April 12, 2010 at 12:19 AM said...

திருமணம் நன்கு நடந்து முடிந்தது பற்றி ரொம்ப சந்தோஷம். மணமக்களுக்கு வாழ்த்துகள்.

ஜூலை மாசம் இந்தியா வருகின்றேன். வரும்போது நடக்க வேண்டிய திருமணத்தைப் பற்றி பேசுகின்றேன். அதற்கு முன்பு டி.வி.ஆர் அய்யா அவர்கள் பேசுவார்கள் என எதிர் பார்க்கின்றேன்.

Arun on April 12, 2010 at 12:20 AM said...

//யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு//
யாராவது எதுக்கு பப்லு போதுமே...

சுசி on April 12, 2010 at 12:34 AM said...

மீண்டும் வாழ்த்துக்கள்..

அப்பா.. இப்படி ஒரு அப்பா கிடைக்க குடுத்து வச்சிருக்கணும் கார்க்கி.

படம் ரொம்ப அழகா இருக்கு.

கண்டிப்பா இதையும் சொல்லியே ஆகணும்.. கலவையான உணர்வுகளோட அருமையா எழுதி இருக்கீங்க கார்க்கி.

இவன் சிவன் on April 12, 2010 at 1:16 AM said...

.. அண்ணனுக்கும் அண்ணிக்கும் வாழ்த்துக்கள் சகா... அப்பாவை பத்தி ஒரு பதிவு எழுதுங்களேன்.... ஏற்கனவே உங்க பெயர்க்காரணம் கேட்டப்பவே ஆர்வமா இருந்தேன்....

பா.ராஜாராம் on April 12, 2010 at 2:37 AM said...

:-)

அப்பாவும்,

கல்யாண வீட்டின் மறுநாளும் தாங்க இயலாததாய் இருந்தது.

உதறி, நிலை திரும்ப உதவி,லாஸ்ட் டச்! :-)

நர்சிம்,ஏதோ ஹிந்தி படம் போட்டுக் காட்டினார்...பேர் நினைவில் இல்லை. :-)

வாசகி on April 12, 2010 at 4:08 AM said...

கரெக்ட் கரெக்ட்..அடுத்த விஷயத்த பாக்கணும்ல? நான் அம்மா கிட்ட போன்ல சொல்லிட்டேன்..அம்மா கூப்பிடுறாங்க என்னன்னு கேளுங்க.


"கார்க்கி, வந்த மொய் பணம் எல்லாத்தையும் கொண்டா"

ILA(@)இளா on April 12, 2010 at 6:17 AM said...

அண்ணனுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துக்கள்

taaru on April 12, 2010 at 6:35 AM said...

சபாஷ்ரா கண்ணா!! [விசு :-) ] [எல்லாத்துக்கும்.. முக்கியமா கடைசிக்கும்]

ர‌கு on April 12, 2010 at 7:34 AM said...

Welcome Back ச‌கா :)

//அண்ணன் இருக்கும் வரை தம்பிக்கு எப்படி திருமண பேச்சு எடுப்பார்கள்? அதனால் அரணாக இருந்தான்//

//நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு//

மேல‌ இருக்கும் முத‌ல் வ‌ரியும் 'அவ‌ர்' எழுதின‌தாதான் ஞாபக‌ம் ;)

ஆமா, அதென்ன‌ 'ஹ‌ம் ஆப்கே ஹைன் கோன்'? ந‌ர்சிம் எழுதியிருந்தாரே....

முகிலன் on April 12, 2010 at 7:37 AM said...

இந்த ஹம் ஆப் கே ஹைன் கோன் பத்தி எழுதவேயில்லையே?

தோழி அப்டேட்ஸ்ல வருமா??? :))))

மன்னார்குடி on April 12, 2010 at 7:48 AM said...

வாழ்த்துக்கள்.

Cable Sankar on April 12, 2010 at 8:55 AM said...

என்ன புள்ள இது கல்யாணத்துல எத்தனை புள்ளைங்க வந்திருந்திச்சு.. அதுல ஒண்ணை பார்த்து செலக்ட் பண்ணுவான்னு பார்த்தா என்னையே பாக்க சொல்றானே.. கார்க்கி அம்மா..:)

vanila on April 12, 2010 at 9:06 AM said...

பி.கு: நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு.

Athu...

மோகன் குமார் on April 12, 2010 at 9:19 AM said...

புது மண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். வர முடியலை; மன்னிக்க.

ரொம்ப தான் அவசர படுறீங்க. கொஞ்சம் பொறுங்க

Anonymous said...

கார்க்கி, திருமண போட்டாவில் உங்க அப்பாக்கும் இடம் அளித்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாவும் சந்தோசமாவும் இருந்தது.

மண மக்களுக்கு வாழ்த்துக்கள் :)

Anonymous said...

/நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு//

பொன்னு உங்க அண்ணி பக்கமே பாருப்பா, சான்ஸ் இருக்கு :))

தராசு on April 12, 2010 at 9:24 AM said...

//நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு//

சொல்லுவோம், சொல்லுவோம். அதுவரைக்கும் கொஞ்சம் அடக்கமா, நல்ல புள்ளையா இருக்கப் பாருங்க.

SenthilMohan K Appaji on April 12, 2010 at 9:32 AM said...

அவுங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்களை convey பண்ணிடுங்க. அப்புறம் நீங்க ரொம்ப அவசரப்படாதீங்க. எங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் தோழி updates படிக்கணும்னு ஆச.

என். உலகநாதன் on April 12, 2010 at 9:55 AM said...

அண்ணாவுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துகள் கார்க்கி.

உங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துகள்.

தாரணி பிரியா on April 12, 2010 at 10:01 AM said...

உங்க அண்ணாவுக்கும், அண்ணிக்கும் வாழ்த்துகள் கார்க்கி :)

போட்டோ அழகா இருக்கு

வீட்டுல அடுத்த நடக்க வேண்டியதை பேசிடலாம். போன் நம்பர் குடுங்க. அப்படியே எந்த தோழி பத்தி பேசணும் அப்படின்ற டீடெய்லும்

கார்க்கி on April 12, 2010 at 10:17 AM said...

நன்றி சரவணகுமரன்

நன்றி தமிழ்பிரியன்.ஹிஹி

நன்றி சதீஷ்

நன்றி ரோமியோ

நன்றி ராஜூ.. தெரியலையேப்பா

நன்றி ராகவன். ஜூலை மாசமா? அதுக்கு முன்னாடி முடியாதா???

அருண், நீங்க வேற.. என் கசின் அவனிடம் என் திருமணத்தைப் பற்றி கேட்டான். என்ன சொன்னான் தெரியுமா? “நான் பிக் பாய் எனக்கு ஆகும் இல்ல. அப்போ பண்ணலாம் இவனுக்கும்”

நன்றி சுசி

சிவன், எழுதனும் சகா. எழுதிடறேன்

பா.ரா, நன்றி. அது ஹம் ஆப்கே ஹைன் கெளன் :))

வாசகி, கொண்டு போய் கொடுத்தேன். இது பொய் பணம்ன்னு சொல்றாங்க :)

நன்றி இளா

நன்றி டாரு

ரகு, கலைஞர் ஸ்டைலில் சொல்கிறேன். அவர் தானே எழுதினார். அவரிடமே கேளுங்க

முகிலன், நாளைக்கே தோழி அப்டேட்ஸ்தான். அதுவும் திருமண ஸ்பெஷல் :))

நன்றி மன்னார்குடி

நன்றி கேபிள். ஹிஹிஹி. அம்மா அபப்டி சொல்ல மாட்டாங்க :)

வாநிலா..”அது” எனக்கு பிடிக்காதில்ல :)

மோகன், பரவாயில்ல சகா.

நன்றி மயில்

தராசண்ணே, நான் எப்பவும் நல்ல பிள்ளைதானே ????

செந்தில், உங்களுக்காக இன்னும் 2 மாசம் தள்ளிப் போடறேன் சகா :)

நன்றி உலகநாதன்

நன்றி தா.பி. உங்கள நம்பி விடலாமா? பழைய பகையை மனசுல வச்சு கவுத்திட மாட்டிங்களே???

முரளிகுமார் பத்மநாபன் on April 12, 2010 at 10:24 AM said...

YES Saka, ellaa nikazvukalum nallapadiyaakavun santhosamaakavum, nadanthu mudinthahil, nadaththi mudiththathil mikka makilchi. vaalththukkal.


group photovil appaavaiyum vaiththiruppathil ungal anbu purikirathu.

nallaa irunga sakaa.

நாய்க்குட்டி மனசு on April 12, 2010 at 11:06 AM said...

அப்பா பேரை சொல்லி இருக்கலாமே கார்க்கி.
தந்தையின் இழப்பு திருமணங்களில் தூக்கலாகத் தெரியும்.

நர்சிம் on April 12, 2010 at 12:06 PM said...

வாழ்த்துகள் சகா.. அடுத்தா? இந்த வருசமேவா? ரைட்ட்ட்டு.

விக்னேஷ்வரி on April 12, 2010 at 12:41 PM said...

வாழ்த்துகள் கார்க்கி. மிக மகிழ்ச்சியாய், மிக நெகிழ்ச்சியாய் உள்ளது.

ஆதிமூலகிருஷ்ணன் on April 12, 2010 at 1:00 PM said...

உங்க அண்ணனுக்கும் உன்னை மாதிரியே மண்டை தாங்காத அளவுக்கு முடி கார்க்கி.! ஹிஹி..

ஜெட்லி on April 12, 2010 at 1:44 PM said...

கார்க்கி...சில தவிர்க்க முடியாத காரணத்தினால் வர முடியாம
போச்சி....!!
உங்க ஆர்வம் சீக்கிரம் நிறைவேற வாழ்த்துக்கள்.

புன்னகை on April 12, 2010 at 2:17 PM said...

இந்த வருஷத்துலயே உங்க கல்யாணமும் நடந்திடும்ல, அப்போ அந்த வெறுமை நீங்கிடும்.

Anonymous said...

அண்ணணுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

Yuva on April 12, 2010 at 3:17 PM said...

அடடா, போன் பேசினப்ப கேட்க மறந்திட்டனே... நா வேணும்ன அம்மா அக்காகிட்ட சொல்லட்டுமா?... கார்க்கி 'நித்யா'வோட வெற்றிடத்தை நிரப்ப தயாராகிறார்... அவர அவசரப்பட்டு இல்லறத்திற்கு இழுத்துவிடாதீர்கள் - என்று?!!!??!!!!!

Anbu on April 12, 2010 at 3:36 PM said...

அண்ணணுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

காவேரி கணேஷ் on April 12, 2010 at 3:50 PM said...

மன்னிக்கவும் .

வரமுடியவில்லை, சகோதரிக்கு குழந்தை பிறந்தது, மதுரைக்கு சென்றிருந்தேன்.

வாழ்த்துக்கள் அண்ணனுக்கும், அண்ணிக்கும்.

உன் கல்யாணம் என் முன்னிலையில் தான்.

காவேரி கணேஷ் on April 12, 2010 at 3:52 PM said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்க அண்ணனுக்கும் உன்னை மாதிரியே மண்டை தாங்காத அளவுக்கு முடி கார்க்கி.! ஹிஹி..

ஆதி எனக்கு என்னமோ குசும்பன் இடத்தை நிரப்புகிறார் என தோன்றுகிறது.

தர்ஷன் on April 12, 2010 at 4:44 PM said...

இனி அடுத்து பதிவுலகே கொண்டாடப் போகும் திருமணம்தான் என்ன
வாழ்த்துக்கள்

வெற்றி on April 12, 2010 at 5:01 PM said...

திருமணம் நல்லபடியாய் முடிந்தது சந்தோசம் சகா..

//நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றியே இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அம்மாவும் அக்காவும். யாராவது நடக்க வேண்டியதைப் பற்றி யோசிக்க சொல்ல வேண்டும் அவர்களுக்கு//

அப்போ தங்கமணி அப்டேட்ஸ் எதிர்காணலாம் போல :)

அன்புடன் அருணா on April 12, 2010 at 5:43 PM said...

அப்பா இல்லாமல் நடத்திய அக்கா கல்யாணம் நினைவுக்கு வந்து சென்றது கார்க்கி.ஒவ்வொரு விஷயமும் எனக்கு நேர்ந்தது போலத் தோன்றுகிறது.பூங்கொத்து!

பின்னோக்கி on April 12, 2010 at 7:59 PM said...

அப்பாவின் நினைவு நெகிழ்ச்சி.

கடைசியில வேளைய காட்டிட்டீங்க :). காலா காலத்துக்கு நடக்கும். கவலை வேண்டாம்.

T.V.ராதாகிருஷ்ணன் on April 12, 2010 at 9:02 PM said...

கார்க்கி..வீட்டிற்கு வந்து அம்மா கிட்ட பையன் படற கஷ்டத்தை சொல்லவா? தமிழ்நாட்டிலக் கூட மேலவை வருது.

RaGhaV on April 12, 2010 at 9:58 PM said...

:-)))

கார்க்கி on April 12, 2010 at 11:09 PM said...

அனைவருக்கும் நன்றி

வெண்பூ on April 14, 2010 at 5:12 PM said...

//
மற்றும் பலர் வந்திருந்தார்கள்
//

அப்படியா கார்க்கி???? :)))))

//
Cable Sankar said...
என்ன புள்ள இது கல்யாணத்துல எத்தனை புள்ளைங்க வந்திருந்திச்சு.. அதுல ஒண்ணை பார்த்து செலக்ட் பண்ணுவான்னு பார்த்தா என்னையே பாக்க சொல்றானே.. கார்க்கி அம்மா..:)
//
கேபிள், செலக்ட் பண்ணியாச்சின்னு என்கிட்ட சொன்னான். உங்ககிட்ட சொல்லலையா?? So sad... :)))

 

all rights reserved to www.karkibava.com