Apr 1, 2010

திருமணத்திற்கு அழைக்கிறேன்


 

உங்க அண்ணனே இன்னும் பேண்ட் போடல. அதுக்குள்ள உனக்கு வேணுமா?”

   அஞ்சாவது படிக்கும் அந்த அறிஞனை அவன் அம்மா அடித்துக் கொண்டிருந்தார்கள். பேண்ட் கிடைக்காத அறிஞன்,மன்னிக்க, சிறுவனுக்கு பேண்ட் கிடைக்கவில்லை என்பதை விட அவன் அண்ணனால் கிடைக்கவில்லை என்பதே பெரிய உறுத்தலாக இருந்தது. பேண்ட் மட்டுமல்ல, பல விஷயங்கள் அல்லது எல்லா விஷயமும் அவனுக்கு தாமதமாவதற்கு அவன் அண்ணனே காரணமாக இருந்தான்.

பெரிய சைஸ் நோட்டில் ஆரம்பித்து, ஜியோமெட்ரிக் பாக்ஸ், ஸ்கெட்ச், சைக்கிள் என எது கேட்டாலும் அவனுக்கே இன்னும் வாங்கித் தரல. உனக்கு என்ன அவசரம் என்ற பதிலே கிடைத்தது. “நான் பொறந்து பத்து வருமாச்சு. ஆனா எனக்கு இன்னும் பத்து வயசுதான் ஆகுது” என்று தமிழ்ப்பட ஹீரோ யோசித்த மாதிரி, இவனும் என்றாவது ஒரு நாள் அண்ணனை விட வயதில் மூத்தவனாகிவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினான்.

உஸ்ஸ்ஸ்ஸ்.. எனக்கே போரடிக்குது. பீடிகை எல்லாம் வேண்டாம். நேரிடையாக விஷயத்திற்கு வருகிறேன். என் அண்ணனைத்தான் சொல்கிறேன். எல்லாவற்றிலும் எனக்கு முட்டுக்கட்டையாக இருந்தவன், ஒரு விஷயத்தில் மட்டும் என்னைப் பாதுகாக்கும் அரணாக இருந்தான். இருக்கிறான். அதுதான் திருமண விஷயம்.(ஒய் சிரிப்பு????)  அண்ணன் இருக்கும் வரை தம்பிக்கு எப்படி திருமண பேச்சு எடுப்பார்கள்? அதனால் அரணாக இருந்தான். இப்போ என்ன ஆச்சா? அண்ணன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான். அப்படின்னா என் கதி? :(((((((

என் கதியை விடுங்க. இப்போ சொல்ல வர்ற விஷயம். அதேதான். அண்ணனுக்கு திருமணம். ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி.. ஆரணிக்கு அருகில் திருமலை என்ற இடத்தில் திருமணம். அன்று மாலையே சென்னையில் வரவேற்பு. பதிவுலக நண்பர்கள் அனைவரையும் வருக வருகவென அழைக்கிறேன். சென்னையில் இருக்கும் நண்பர்கள் சிலரை முடிந்தவரை நேரில் அழைத்தேன். அனைவரும் சொன்ன ஒரு வார்த்தை “பதிவு போடுப்பா. வந்துடறோம்”. போட்டாச்சு.. வந்துடுவீங்க இல்ல?????

Scan03312010_164524

அப்படியே நாளையில் இருந்து 10 நாட்கள் விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இடையில் முடிந்தால் பதிவுடுவேன். முடியாவிட்டால் 11ஆம்தேதி சந்திப்போம். அதுவரைக்கும் நிம்மதியா இருங்க. நீங்க ஆசைப்பட்டா பழைய பதிவுகளில் ஹிட்டடித்த சிலவற்றை மீள்பதிவாகும்படி ஷெட்யூல் செய்யலாம் என்றிருக்கிறேன். செய்யலாமா வேண்டாமா என்று சொல்லுங்கள்.

மறக்காதிங்க.. ஏப்ரல் 8… 6.30 மணி.. மயிலாப்பூர். சந்திப்போம்.

மேலதிக தகவலுக்கு 9789887048

முக்கியமான விஷயம் பப்லுவும் அழைக்கச் சொன்னார். உங்களையெல்லாம் சந்திக்க ஆர்வமாக இருக்கிறாராம். :))

40 கருத்துக்குத்து:

அத்திரி on April 1, 2010 at 5:49 PM said...

வாழ்த்துக்கள்,...உனக்கும் சேர்த்துதான்

எறும்பு on April 1, 2010 at 5:52 PM said...

வாழ்த்துக்கள்....................................................................................................

புன்னகை on April 1, 2010 at 5:59 PM said...

என்ன மெனு??? அதை சொல்லுங்க முதல்ல! அப்படியே எங்க அண்ணி கல்யாணம் எப்போன்னு சொன்னா கொஞ்சம் நல்லது... அட உங்களுக்கு வரப்போற பொண்ண தாங்க கேட்கிறேன் :-)

வரதராஜலு .பூ on April 1, 2010 at 6:01 PM said...

உங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

ஆனாலும் இதுக்கும் முதல்ல ஒரு ரெண்டு பேரா மொக்கையா?

சரிதான்

குசும்பன் on April 1, 2010 at 6:03 PM said...

//பெரிய சைஸ் நோட்டில் ஆரம்பித்து, ஜியோமெட்ரிக் பாக்ஸ், //

டேய் குசும்பா பேசாம போய்விடு... எதா இருந்தாலும் அங்க பேசிக்கலாம்:)))

Vidhoosh(விதூஷ்) on April 1, 2010 at 6:03 PM said...

வாழ்த்துக்கள்.

"அடுத்தது நோக்காடா"ன்னு கேட்கும் அத்தைகள் மாமிகளுக்கு உங்க பாணிலயே பதில் சொல்லிடாதீங்க. Let babloo take this opportunity :))

ரிஷி on April 1, 2010 at 6:06 PM said...

உங்கள் அண்ணனுக்கு திருமண வாழ்த்துக்கள் சகா !!

விரைவில் உங்களுக்கும் வாழ்த்து சொல்ல விரும்பும் .......


ரிஷி

பிரபாகர் on April 1, 2010 at 6:13 PM said...

உங்கள் அண்ணாவுக்கு திருமண வாழ்த்துக்கள் சகா...

பிரபாகர்.

வாசகி on April 1, 2010 at 6:18 PM said...

Reception ல நீங்க பாடவோ, ஆடவோ மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க, கரெக்டா வந்துடறேன் :-)

Best Wishes for the couple !!

(பதிவுல பொண்ணு மாப்பிளையோட போட்டோவும் போட்டிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்.)

yuva on April 1, 2010 at 6:21 PM said...

Best Wishes
Best Wishes

Mudhal Wishes for your Anna Wedding
Irandam Wishes unga line clear anathukku

அன்புடன் அருணா on April 1, 2010 at 6:39 PM said...

அப்பாடா லைன் க்ளியராயிடுச்சா???
வாழ்த்துப் பூங்கொத்து அண்ணனுக்கும் அண்ணிக்கும்!

ச்சின்னப் பையன் on April 1, 2010 at 6:41 PM said...

வாழ்த்துக்கள்..

சுசி on April 1, 2010 at 6:47 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி..

முன்னாடியே சொல்லி இருக்க கூடாதா??

உடனவே லீவ் குடுக்க மாட்டாங்கப்பா.

அப்போ சீக்கிரமே சாளரம் கதவு ஆய்டும் :))))

ராஜ நடராஜன் on April 1, 2010 at 6:54 PM said...

வாழ்த்துக்கள்!

பாலா on April 1, 2010 at 7:00 PM said...

route clear

Rajeswari on April 1, 2010 at 7:14 PM said...

vaalthukkal

அதிலை on April 1, 2010 at 7:29 PM said...

எல்லாம் ஓகே ஆனா... ஏப்ரல் ஒன்னு தான் இடிக்குது.. நம்ப முடியவில்லை

தராசு on April 1, 2010 at 7:34 PM said...

அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கு டபுள் வாழ்த்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) on April 1, 2010 at 10:06 PM said...

அண்ணனுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் சகா

ர‌கு on April 2, 2010 at 12:21 AM said...

அண்ண‌னுக்கு திரும‌ண‌ வாழ்த்துக‌ள் ச‌கா :)

//அண்ணன் இருக்கும் வரை தம்பிக்கு எப்படி திருமண பேச்சு எடுப்பார்கள்? அதனால் அரணாக இருந்தான்//

செம‌ உள்குத்து ;))

Rajalakshmi Pakkirisamy on April 2, 2010 at 2:32 AM said...

வாழ்த்துகள்...

Itsdifferent on April 2, 2010 at 3:04 AM said...

Best wishes.
Q: Why does it read as Mr & Mrs Ramya Devanathan?

துபாய் ராஜா on April 2, 2010 at 4:04 AM said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் on April 2, 2010 at 4:34 AM said...

வாழ்த்துக்களை கொடுங்க கார்க்கி.

வாழ்த்துக்களும் கார்க்கி!

Anonymous said...

//“நான் பொறந்து பத்து வருமாச்சு. ஆனா எனக்கு இன்னும் பத்து வயசுதான் ஆகுது//

இது அசத்தல்.

ஏப்ரல் பூல் ஆக்கிட மாட்டீங்களே")

மங்குனி அமைச்சர் on April 2, 2010 at 5:04 PM said...

ரைடு , வாழ்த்துக்கள் வந்துர்றோம்

ஆயில்யன் on April 2, 2010 at 5:11 PM said...

வாழ்த்துக்கள் :)

Karthik on April 2, 2010 at 10:32 PM said...

வாழ்த்துக்கள். 10 நாள் லீவா? ஜாலி ஜாலி. :))

நர்சிம் on April 3, 2010 at 1:33 PM said...

கல்யாணத்துக்கு அவங்களும் வருவாங்களா சகா? அல்லது அவங்க எல்லாரும் வருவாங்களா சகா..;););)

TamizhMugil on April 3, 2010 at 8:41 PM said...

நான் தான் சரவணா பெருமாள் தங்களுக்கு என்னை தெரியும் என்று நினைகிறேன். பரணி அவர்கள் தான் எனக்கு தங்களின் பிளாக் ஐ அறிமுகம் செய்து வைத்தார். இணையத்திற்கு செல்லும் போது எல்லாம் தங்களின் ப்ளாக் ஐ பார்த்து வருகிறேன். நன்றாக எழுதிவருகிறிர் பாராடுகள். தங்களை திருமணத்தில் சந்திக்கிறேன்.

தமிழ்ப்பறவை on April 3, 2010 at 10:11 PM said...

வாழ்த்துக்கள் சகா... தலைப்பைப் பார்த்துட்டு உங்களுக்காக்கும்னு நினைச்சு வந்தேன்...
உங்களோட கிடார் கச்சேரி கிடையாதா...?

துளசி கோபால் on April 3, 2010 at 10:30 PM said...

மணமக்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

ம்ம்ம் நெக்ஸ்ட்.....

நிலாமதி on April 4, 2010 at 12:12 AM said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு லைன் கிளியரான்தில் மகிழ்ச்சி..........

ஆதிமூலகிருஷ்ணன் on April 4, 2010 at 8:35 PM said...

ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள்.

(அப்புறம் மீள்பதிவெல்லாம் வேண்டாம்.)

Muruganandam Ramasamy on April 4, 2010 at 11:45 PM said...

வாழ்த்துக்கள் சகா...

SenthilMohan K Appaji on April 5, 2010 at 10:32 AM said...

அண்ணனுக்கு வாழ்த்துக்கள். Route clear-ஆனதுக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள். ஏழு வருவாரா?

Yuva on April 5, 2010 at 7:32 PM said...

Congrats to your brother. Hope you will be also seen in our club in no time.

விக்னேஷ்வரி on April 7, 2010 at 4:46 PM said...

இருவருக்கும் வாழ்த்துகள்.

நர்சிம் கமெண்ட்டுக்கு ஹிஹிஹி... நடத்துங்க.

எட்வின் on April 9, 2010 at 7:34 AM said...

வாழ்த்துகள்.

Anonymous said...

வாழ்த்துக்கள்...

உங்களுடன் போனில் பேசியதும் ரொம்ப சந்தோஷம்...

நல்லது...

உங்கள் அருண் பிரசங்கி (பிரகாஷ்)

 

all rights reserved to www.karkibava.com