Mar 23, 2010

ஏழுவுக்கு வேலை கிடைச்சிடுச்சு டோய்


 

  ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது. ஆம், வெகு நாட்கள் வேலையே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததால் தண்ணியடிப்பதும், தலைக்குப்புற கவிழ்ந்து கிடப்பதுவுமே அவன் தலையாய வேலையாக இருந்தது. எங்களோடு படித்தும் உருப்பட்ட ஒரு நல்லவன் ஒருவன் அவனது நிறுவனத்திலே வேலை வாங்கித் தந்தான். ஒரே ஒரு நிபந்தனை, அங்கே ஏழு அவனை மேலதிகாரியாக பாவிக்க வேண்டும். வேலைக்கு திங்களன்று சேர வேண்டும். ஞாயிறு இரவு ட்ரீட் தந்தான் ஏழு. வழக்கம் போல் மறுநாள் எழுந்திருக்க லேட்டாகி விட்டது. அவசரமாக கிளம்பினான். பாலாஜி தன் பைக்கை எடுத்துட்டு போடா என்றான். உடனே குளிக்காமல் கிளம்பிய ஏழுவை கடிந்துக் கொண்டான் ஆறு.

குளிச்சிட்டு வண்டி ஓட்டினா போலிஸ் புடிக்கும்னு அன்னைக்கே சொன்னியே மச்சி என்ற ஏழு குடிப்பதைத்தான் குளிப்பது என்று சொல்லியதன் மூலம் மப்பு இன்னும் இறங்கவில்லை என்பது உறுதியானது. வேறு வழியில்லாமல் ஏழுவை வாழ்த்தி அனுப்பி வைத்தோம் முதல் பகலுக்கு. வீட்டுக்கு வெளியே வந்து லெஃப்டடில் திரும்பினான் ஏழு. எதிரே ஒருவர் ரைட் சைடில் முறுக்கிக் கொண்டு வந்து சடென் பிரேக் அடித்தார்.

சார். நான் வந்தது லெஃப்ட்டு. ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?”  எங்கேயோ படித்த மொக்கை கேள்வியை கேட்ட ஏழுவை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே சென்றார்.

பாலாஜி மட்டும் கத்தினான் “பார்த்து ஓட்டுடா”. அவன் பைக்.

முதல் நாளே அலுவலகத்துக்கு லேட்டாக வந்த ஏழுவை எங்கள் நண்பன் கடிந்துக் கொண்டான்.

ஹாய் மச்சி

ஆஃபிஸ்ல மச்சின்னு எல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன்னடா. மொத நாளே ஏழுமலை லேட்ன்னு பேரு வாங்க போறியா? சீக்கிரம் வரலாம் இல்ல?

பாலாஜி பைக்ல வந்தேன். ஃபாஸ்ட்டா வந்து, ஆக்ஸிடென்ட் ஆகி  ”லேட்” ஏழுமலை ஆக விரும்பல.அதான்.

திஸ் இஸ் டூ மச் ஏழு.

இப்ப நீ மட்டும் எதுக்கு மச்சின்னு சொல்ற. தி இஸ் ஆஃபிஸ் யூ நோ?

ஏழுவை நன்கு அறிந்தவன் என்பதால் வேறு எதுவும் பேசாமல், அட்மினுக்கு சென்று ஜாயினிங் ஃபார்மிலிட்டிஸ் முடிக்க சொன்னான். அங்கே ஒரு ஃபிகர் அப்ளிகேஷனை நீட்டி ஏழுவை ஃபில் செய்ய சொன்னது

Last nameல் பேனாவை வைத்து இங்க என்ன எழுத என்றான் ஏழு

உங்க லாஸ்ட் நேமை எழுதுங்க

(மறுபடியும் ELUMALAI என்று எழுதினான்)

அச்சோ. லாஸ்ட் நேமை எழுத சொன்னேன்

எனக்கு ஃபர்ஸ்ட்டுல இருந்து லாஸ்ட் வரைக்கும் ஏழுமலைதாங்க பேரு

உங்க அப்பா பேர எழுதுங்க சார்.

ஓ. நான் அப்பான்னா fatherனு நினைச்சிட்டேன். Last னாலும் அப்பாவா?

சார். ஒழுங்கா ஃபில் பண்ணுங்க சார்.

இதுல இமெயில் கேட்டு இருக்காங்க

எழுதுங்க. ஏன்.ஐடி இல்லையா?

இருக்கு. ஆனா ஜிமெயில் ஐடிதான் இருக்கு. அதான் யோசிக்கிறேன்.

ஒல்லியா, தக்கையா ஒருத்தர் வருவாருன்னுதான் பாஸ் சொன்னாரு. இவ்ளோ மொக்கையா இருப்பிங்கன்னு தெரியாது. ஜிமெயிலும் இமெயில்தான் சார். எழுதுங்க.

மேடம். கோச்சிக்காம ரேட் எப்படின்னு சொல்றிங்களா?

வாட்????????

இல்ல மேடம். ரேட் என்ன ஸ்பெல்லிங்னு சொல்றீங்களா ப்ளீஸ்

எதுக்குங்க ரேட் எழுத போறீங்க?

என் மெயில் ஐடி வந்து ”ஏழுடாட்ஆறுஅட்தரேட்ஜிமெயில்.காம்”

அய்யோ சார் (@ எழுதி காட்டுகிறார்)

ஒவ்வொரு முறை கடிக்கும் போதும் ஏழு ஃபிகரையே முறைத்துப் பார்த்ததும், ரேட்டுக்கு ஸ்பெல்லிங்கை மார்க்கமாக கேட்டதும் அவரை கடுப்பேத்த பாஸிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். உள்ளே அழைத்த பாஸ் ”ஏண்டா அவளையே முறைச்சு பார்க்கிற” என்றார்.

தலை கவிழ்ந்த ஏழு சொன்னான் “பாலாஜி தான் சார் பார்த்து ஓட்டுன்னு சொன்னான். அதான் அவங்கள பார்த்து பார்த்து ஓட்டினேன்”.

அப்போ வேணும்னேதான் டீஸ் பண்ணியா. யூ ப்ளடி.

தொங்கிய முகத்துடன் வெளிய வந்த ஏழு சீட்டில் சென்று அமர்ந்தான். மாலை ஐந்து மணி ஆனது. தூக்க கலக்கத்தில் இருந்த ஏழுவுக்கு அது ஆறு மணி போல் தெரிய, வீட்டிற்கு கிளம்பினான். அதை கவனித்த பாஸ் கடுப்பாகி ”என்ன ஆச்சு ஏழு? வாட் ஹேப்பன்ட்” என்று மேஜர் சுந்தர்ராஜனாகி கொண்டிருந்தார்.

சுதாரித்த ஏழு சொன்னான் “ காலைலே லேட் ஆயிடுச்சு சார். அதான் ஈவ்னிங் சீக்கிரமா கிளம்பி காம்பென்சேட் பண்ணலாம்னு”.

ஜாயினிங் ஃபார்மை கிழித்த பாஸ், அப்படியே போயிடு. நாளைக்கு வராத என்றார். சோகத்துடன் வந்து எங்களிடம் விஷயத்தை விளக்கிய ஏழு “மச்சி. சந்தோஷத்தில் நான் ட்ரீட் தந்தேன் இல்ல. இப்போ நீங்க வாங்கி கொடுங்கடா” என்றான்.

பாலாஜியும் நானும் போய் ஆளுக்கொரு பியரும், ஏழுவுக்கு ஒரு மினிபியரும் வாங்கி வந்து பூஜையை ஆரம்பித்தோம். விஷயம் கேள்விப்பட்டு வந்த ஆறு கத்தினான். அது எப்படிடா உனக்கு மட்டும் டைம் ஆறுன்னு தெரியும்?

பாதி மப்பில் ஏழு சொன்னான் “என் கண்ணுக்கு எல்லாமே நீயா தெரியுது மச்சி. என்ன செய்ய?”

40 கருத்துக்குத்து:

Raja Subramaniam on March 23, 2010 at 11:13 PM said...

Perfect mokkai

shiva... on March 23, 2010 at 11:49 PM said...

சூப்பர் ங்க ..வார்த்தை ஜாலம் பாங்கலே ..அது மாதிரி இது நம்பர் ஜாலம் .. ஆறு ஏழு !!

ர‌கு on March 23, 2010 at 11:57 PM said...

//நேற்று ”கப்ப தூக்குறோம் மச்சி” இன்று “கம்முனு தூங்கறோம் மச்சி”//

நாளைக்கு "க‌ப்புக்குலாம் ஆசைப்ப‌ட‌மாட்டோம் ம‌ச்சி"

//”என்ன ஆச்சு ஏழு? வாட் ஹேப்பன்ட்” என்று மேஜர் சுந்தர்ராஜானாகி கொண்டிருந்தார்//

ஹாஹ்ஹா, இது சூப்ப‌ர் சகா :)))

இராகவன் நைஜிரியா on March 24, 2010 at 3:36 AM said...

கலக்கல் ... .

சுசி on March 24, 2010 at 4:15 AM said...

கலக்கல் கார்க்கி..

தொழிலதிபர் கார்க்கி கிட்ட வேலை கிடைக்காதா ஏழுவுக்கு??

பிரியமுடன்...வசந்த் on March 24, 2010 at 4:49 AM said...

வார்த்தையால விளையாடியிருக்காரு ஏழு சூப்பர்ப் கார்க்கி...

டம்பி மேவீ on March 24, 2010 at 5:21 AM said...

உங்க ஏழு எங்க யுவன் மாதிரியே இருக்காரே ...... மொக்கை தங்க முடியல. இருந்தாலும் கெமிஸ்ட்ரி சரியாய் வேலை செய்யல. கொஞ்சம் பினாயில் ஊதுங்க

Rajalakshmi Pakkirisamy on March 24, 2010 at 5:33 AM said...

Mokkaiiiiiiiiiiii

jai on March 24, 2010 at 7:26 AM said...

//எதுக்குங்க ரேட் எழுத போறீங்க?

என் மெயில் ஐடி வந்து ”ஏழுடாட்ஆறுஅட்தரேட்ஜிமெயில்.காம்”//

haha super mokkai.

அன்புடன் அருணா on March 24, 2010 at 8:14 AM said...

"ஏழுவுக்கு வேலை போயிடுசச்சு டோய் !

cheena (சீனா) on March 24, 2010 at 8:40 AM said...

அய்யோ தூள் கெளப்புறாங்கப்பா

ஏழு நான் நேரல் சந்திக்கணுமே - ம்ம்ம்ம்

அட் தெ ரேட் ஆஃப் - தாங்கல

பாத்து ஓட்டுறது - அய்யொ அய்யோ

லெப்ட் ரைட்டு - ரைட்டு ரைட்டா - ரைட்டில்லயா

வி.வி.சி

நல்வாழ்த்துகள் கார்க்கி

தராசு on March 24, 2010 at 9:20 AM said...

இது, இது .....

ஏழு வந்தா சாளரமே சும்மா அதிருதல்ல.....

தாரணி பிரியா on March 24, 2010 at 9:30 AM said...

ஏழுவை அடிக்கடி கூட்டிட்டு வாங்க கார்க்கி :)

தாரணி பிரியா on March 24, 2010 at 9:31 AM said...

எல்லாத்துக்கும் வேலை வாங்கி தர்றீங்க. அப்படியே ஏழுவுக்கும் ஒரு வேலை வாங்கி தந்தா புவியியல் உங்க பேரை சொல்லிக்கிட்டே இருக்குமே :)

மாதேவி on March 24, 2010 at 9:55 AM said...

ஏழும் ஆறும் சேர்ந்து ஒரு ஆபீஸ் ஆரம்பித்தால்... :))))

GHOST on March 24, 2010 at 10:11 AM said...

சூப்பர் மொக்கை

கார்க்கி on March 24, 2010 at 10:26 AM said...

நல்ல தொடக்கத்திற்கு நன்றி ராஜா

நன்றி ஷிவா

ரகு, அடுத்த மேட்சிலே ஜெய்ப்போம் பாருங்க :))

நன்றி நைஜீரிய பிரதமரே

சுசி, இதெல்லாம் நடந்து சில வ்ருஷமாச்சு

நன்றி வசந்த்

மேவீ, உன் வாயிலியா, முகத்திலா?

ராஜி,புட்டிக்கதைகளன்னா மொக்கைதான்

நன்றி ஜெய்

அருணா மேம். அதுல என்ன சந்தோஷம் உங்களுக்கு?

நன்றி சீனா அய்யா :))

தராசு, ஹிஹிஹிஹி

தா.பி, பியருக்கும் சைட் டிஷுக்கு காசு அனுப்புங்க. Name :Arivazahagan

மாதேவீ, ஆறு இருந்தா உருப்படுங்க :))

கார்த்திகைப் பாண்டியன் on March 24, 2010 at 10:49 AM said...

A perfect shot after a very long time.. congrates saga..:-))))

டம்பி மேவீ on March 24, 2010 at 11:08 AM said...

என் முகம் எச்சி தொட்டி மாதிரி இருக்கும், வாய் குப்பை தொட்டி மாதிரி இருக்கும். நீங்கள் எதில் ஊதினாலும் சந்தோசம்.

அப்பொழுதாவது நான் இலக்கியவாதி ஆகி விடுவேனா என்று பார்க்கலாம் .......


(பிரபலம் என்றால் எதையாவது எங்கேயாவது ஊத்தி கொண்டே இருக்க வேண்டும்)

நாய்க்குட்டி மனசு on March 24, 2010 at 11:51 AM said...

அய்யோ! முடியலடா சாமி.

மோகன் குமார் on March 24, 2010 at 11:54 AM said...

:)))

தொழிலதிபர் கார்க்கி!! :)))

ஸ்ரீமதி on March 24, 2010 at 12:02 PM said...

hahahaha :)))

Anbu on March 24, 2010 at 12:46 PM said...

:-))

நர்சிம் on March 24, 2010 at 2:06 PM said...

ரைட்ட்டு சகா.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on March 24, 2010 at 2:43 PM said...

//..மாதேவி on March 24, 2010 9:55 AM said...

ஏழும் ஆறும் சேர்ந்து ஒரு ஆபீஸ் ஆரம்பித்தால்... :))))

GHOST on March 24, 2010 10:11 AM said...

சூப்பர் மொக்கை ..//

மாதேவி கேள்விக்கு GHOST பதில் நல்லாருக்கு சகா.. :-))

Anonymous said...

ஏழு வழக்கம்போல :)

அறிவிலி on March 24, 2010 at 4:05 PM said...

:-)

வெற்றி on March 24, 2010 at 4:43 PM said...

நல்ல வேளை ஏழு வேலை போயிடுச்சு..இல்லன்னா இந்த மாதிரி மொக்கை காவியங்கள் நிறைய மிஸ் பண்ணிருப்போம் :)

வெற்றி on March 24, 2010 at 4:44 PM said...

இதுல இருக்குற டபுள் மீனிங் கண்டுபிடிங்க பார்க்கலாம்..

மங்குனி அமைச்சர் on March 24, 2010 at 4:53 PM said...

ஹய்யோ...... ஹய்யோ......

வெற்றி on March 24, 2010 at 4:55 PM said...

எப்படி ரெஸ்ட் எடுக்காம பதிவா போட்டு தள்ளுறீங்க சகா?

♠ ராஜு ♠ on March 24, 2010 at 7:59 PM said...

\\டம்பி மேவீ said...
கொஞ்சம் பினாயில் ஊதுங்க\\

பினாயில ஊதனுமா..? ஏண்ணே இப்பிடி டெரரா யோசிக்கிறீங்க..?

vanila on March 25, 2010 at 10:07 AM said...

7'o clock ..

கார்க்கி on March 25, 2010 at 10:52 AM said...

அனைவருக்கும் நன்றி.

வெற்றி, எனக்கு பதிவெழுத அரை மணி நேரம் ஆகிறது. ட்விட்டர் மொக்கை, கும்மி, குறைத்தால் எழுதிவிடலாம். அதனால்தான் ட்விட்டர் பக்கம் சில நாள் வரவில்லை.

Karthik on March 25, 2010 at 11:24 AM said...

ஹாஹா :))))

தமிழ்ப்பறவை on March 25, 2010 at 11:45 PM said...

excellent... enjoyed...

விக்னேஷ்வரி on March 27, 2010 at 2:22 AM said...

ம், சிரித்தேன். ரசித்தேன்.

ஆதிமூலகிருஷ்ணன் on March 27, 2010 at 10:46 AM said...

வெண்ணையாக வழுக்கிச்செல்லும் கிரேஸி ஸ்டைல் காமெடி. (பாராட்டாக எடுத்துக்கொள்ளவும்)

RaGhaV on March 27, 2010 at 4:47 PM said...

அருமையான பதிவு சகா.. :-) மிகவும் ரசித்தேன்..:-)

ரோகிணிசிவா on March 31, 2010 at 1:58 AM said...

நல்ல காமெடி ஷோ பார்த்த பீல் !!!!! சூப்பர்ப்ப்!!!!!

 

all rights reserved to www.karkibava.com