Mar 31, 2010

தோழிப்பண்ணை


 

  உலக வெப்பமயமாக்கல் குறித்த விழிப்புணர்ச்சிக்காக எல்லா இடங்களிலும் மின்சாரத்தை நிறுத்தி வைத்த அன்று நடந்தது இது, நானும் தோழியும் எங்கள் வீட்டு பால்கனியில் பேசிக் கொண்டிருந்தோம். கீழே இருந்து ஒருவர் கத்தினார் “கார்க்கி. மெழுவர்த்தியைக் கூட அணைச்சு விடனுமாம்”. சிரிக்கப் போன தோழியை தடுத்து நிறுத்தினேன். எமெர்ஜென்ஸி விளக்கு என்று சொல்லிவிடுவார்களோ என பயந்து.

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  

சிக்கனை மட்டும் சிக்கன எண்ணம் இல்லாமல் சாப்பிடுவாள் தோழி. ”நீ ஏண்டா கோழிப்பண்ணை ஆரம்பிக்க கூடாது” என்றவள் என்ன நினைத்தாளோ முகத்தை சுழித்துக் கொண்டு சொன்னாள் “நீ தோழிப்பண்ணை நடத்ததாண்டா லாயக்கு”

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥   

நான்கு நாட்கள் சுற்றுலா சென்று திரும்பி வந்த தோழி சொன்னாள் “நீ இல்லாம நான் சிம் கார்டு இல்லாத மொபைல் போல ஆயிட்டேண்டா”. மனசு முழுக்க சந்தோஷத்துடன் ஒரு ஆற்றங்கரையில் அவள் சிரித்துக் கொண்டிருந்த புகைப்படத்தை பார்த்து அவளைப் பார்த்தேன். எமர்ஜென்சி கால்ஸ் அலவ்ட் தானே? என்றாள்.

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  

தும்மும் போதெல்லாம் God bless you என்பது தோழியின் வழக்கம். ஒரு நாள் அப்படி சொன்னபோது எந்த காட் என்றேன். “ம்ம்ம்ம். நான் தான்” என்றாள். good என்றேன். “Good. இல்லடா God” என்றாள். “தெரியும். நான் godக்கு O போட்டேன். அதான் Good ஆயிட்டாரு” என்றேன்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

எல்லாத்துக்கும் சங்கம் தொடங்கறாங்களே. காதலுக்கு சங்கம் ஆரம்பியேண்டா என்ற தோழியிடம் “ நான் காதலிக்கும் தங்கம் மட்டும் எனக்கு போதும்” என்றேன். சிறிது நேரம் எந்த பதிலுமில்லை. “ஐ லவ் யூ டா சிங்கம்” என்று சொல்லியிருக்கலாம் தோழி. இன்னும் என் பயிற்சி போதவில்லையோ என்றேன். “ம்க்கும். இந்த பயிற்சி ரொம்ப முக்கியம்” என்றவள் நானறியாததை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

33 கருத்துக்குத்து:

புன்னகை on March 31, 2010 at 11:12 AM said...

:-)

புன்னகை on March 31, 2010 at 11:14 AM said...

Hey me de 1st pa!!!

தோழி பறந்து போச்சுன்னு யாரோ சொன்னாங்க??? திரும்ப வந்துடுச்சு போல??? நல்லா இருந்த சரி தான்! :-)

yuva on March 31, 2010 at 11:21 AM said...

Splendid............

லோகேஷ்வரன் on March 31, 2010 at 11:26 AM said...

//“கார்க்கி. மெழுவர்த்தியைக் கூட அணைச்சு விடனுமாம்”//
ஒ ... மெழுவர்த்தியை கூட 'ன அப்போ வேற எதெல்லாம் தலைவா அணைச்சு இருந்தீங்க

KTM Nizar on March 31, 2010 at 11:26 AM said...

கலக்கல் தல..

தராசு on March 31, 2010 at 11:31 AM said...

ஒரு மார்க்கமாத்தான் போயிகிட்டிருக்கீங்க.....

மன்னார்குடி on March 31, 2010 at 11:49 AM said...

மின்சாரத்த சேமிக்கிரதுல இப்படி ஒரு பலன் இருக்கா..? கலக்குங்க.

Nallavar on March 31, 2010 at 11:55 AM said...

என்னது?? ஆப் பண்ண சொன்ன அனச்சுகிட்டிங்கள?? அப்புறம் தோழி-யா டுப்லைட்-நு எல்லாம் சொல்றிங்களே?

தமிழ்ப்பறவை on March 31, 2010 at 12:11 PM said...

பேக் டூ ஃபார்மா?... கலக்கல்ஸ்...

~~Romeo~~ on March 31, 2010 at 12:28 PM said...

:-)

சுசி on March 31, 2010 at 1:12 PM said...

அடடடடா..

ஒண்ணொண்ணும் கவிதை மாதிரி இருக்கே..

குடுத்து வைத்த கார்க்கியின் தோழிகள்..

Anonymous said...

எல்லாமே சூப்பர் கார்க்கி

வால்பையன் on March 31, 2010 at 2:11 PM said...

//. “Good. இல்லடா God” என்றாள். “தெரியும். நான் godக்கு O போட்டேன். அதான் Good ஆயிட்டாரு” என்றேன்//


இப்படி மொக்கை போட்டும் கூட இருந்தாங்கன்னா, உண்மையிலேயே தோழியா, கோழியான்னு சந்தேகம் வருது!

நர்சிம் on March 31, 2010 at 2:52 PM said...

நீ நடத்துப்பா மகராசா.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on March 31, 2010 at 3:19 PM said...

எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க ?
கலக்கல் போங்க .............

taaru on March 31, 2010 at 3:32 PM said...

//என்றவள் நானறியாததை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்//
ஆரம்பிச்சாச்சா ....வானமே எல்லை... அடிச்சு கிள்ளப்ப வாழ்த்துக்கள்..

கார்க்கி on March 31, 2010 at 3:38 PM said...

புன்னகை, அதான் சுற்றுலா முடிஞ்சு வந்துடுச்சுன்னு சொல்லி இருக்கேனே

நன்றி யுவா

லோகேஷ், பேசாம நீங்க தம்மடிக்க போங்க சகா :))

நன்றி நிசார்

தராசண்ணே.. நித்யமார்க்கம் இல்ல தல

மன்னார்குடி, ஹிஹிஹி..

நல்லவரே, நீங்க ரொம்ப நல்லவருங்க

தமிழ்ப்பறவை, :(((

நன்றி ரோமியோ

சுசி, ஏங்க? ஏன் இந்த கொலைவெறி..

நன்றி அம்மிணி

வால், தனிமடலில் சொல்கிறேன் :)

நன்றி நர்சிம். :)

வெற்றி on March 31, 2010 at 5:12 PM said...

உங்கள் சிந்தனா முறையை கொஞ்சம் எங்களுக்கும் போதிக்க முடியுமா சகா :))

அதிலை on March 31, 2010 at 7:16 PM said...

all mokkai

அன்புடன் அருணா on March 31, 2010 at 7:28 PM said...

/தும்மும் போதெல்லாம் God bless you என்பது தோழியின் வழக்கம். ஒரு நாள் அப்படி சொன்னபோது எந்த காட் என்றேன். “ம்ம்ம்ம். நான் தான்” என்றாள். good என்றேன். “Good. இல்லடா God” என்றாள். “தெரியும். நான் godக்கு O போட்டேன். அதான் Good ஆயிட்டாரு” என்றேன்/
O

டம்பி மேவீ on March 31, 2010 at 8:57 PM said...

nalla irukku sagaa

ஆதிமூலகிருஷ்ணன் on March 31, 2010 at 9:57 PM said...

அழகிய குட்டிக்கவிதைகள்.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on April 1, 2010 at 12:03 AM said...

//.. நானறியாததை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள் ..//

அது என்ன சகா..??

Kafil on April 1, 2010 at 12:10 AM said...

saar.. ippavum kettu pogala unmaiya solunga.. thozhi nijama poiyya

ர‌கு on April 1, 2010 at 12:17 AM said...

ம‌றுப‌டியும் ஆர‌ம்பிச்சாச்சா?....ந‌ட‌த்துங்க‌ :)

பாலராஜன்கீதா on April 1, 2010 at 12:52 AM said...

//கூட அணைச்சு விடனுமாம்//
;-)

கயல் on April 1, 2010 at 2:08 AM said...

எல்லாமே நல்லாயிருக்குங்க! எப்புடி....இதெல்லாம் ... சரி சரி தீட்சை எடுத்துக்கிட்டு வந்து சத்தமில்லாம எனக்கு மட்டும் மெயில் அனுப்புங்க..எங்க தோழருக்கும் சொல்லிக் கொடுபோமுல்ல. வாழ்க கார்க்கி பகவான்!விண்ணை முட்டட்டும் அவர் புகழ். :))

RR on April 1, 2010 at 5:17 AM said...

//"புன்னகை மன்னன் தீம் மியூசிக் கேட்க 9789887048 "//
புன்னகை மன்னன் தீம் மியூசிக் கேக்கலாம்னு ஆசையா கூப்பிட்டா, பாதியில எடுத்து hello சொன்ன எப்படி?

vanila on April 1, 2010 at 9:33 AM said...

S ... ப்பா... சரக்கு நல்லா இருந்துச்சு.. நான் குட்'க்கு S போட்டேன். Goods ஆயிடுச்சு .. Beautifull Karki.. Keep Rocking..

SenthilMohan K Appaji on April 1, 2010 at 12:10 PM said...

இன்னொரு தபு ஷங்கர் உருவாகிறார். :)
வாழ்த்துக்கள்.

வால்பையன் on April 1, 2010 at 12:13 PM said...

//இன்னொரு தபு ஷங்கர் உருவாகிறார். :)/


இப்படி உசுபேத்து உசுபேத்தி தான் ப்ளாக் ரணகளமா மாறிகிட்டு இருக்கு!

தோழியை ஊருக்கு அனுப்பு,
கோழியை பிரியாணிக்கு அனுப்பு!

கும்க்கி on April 1, 2010 at 12:45 PM said...

:))

நல்லாருப்பா...

விக்னேஷ்வரி on April 9, 2010 at 12:31 PM said...

பழைய டி.ஆர். படங்கள் அதிகம் பார்க்குறீங்களா?

 

all rights reserved to www.karkibava.com