Mar 30, 2010

சுறா– புட்டு இல்ல மச்சி… ஹிட்டு


 

Sura 1

1) வெற்றி கொடி ஏத்து (ரஞ்சித் &முகேஷ்) வாலி, எஸ்.பி.ராஜ்குமார்

எதிர் நீச்சல் போட்டு வந்த எங்க வீட்டுப் பிள்ளை

வெற்றி என்ற சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை

என்ற தொகையறாவோடு தொடங்குறது பாடல்.அதிரடி பாடல் இல்லை. ஆனால் ஓப்பனிங் பாடலாகத்தான் தெரிகிறது. அதனால் விஜய் ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமாக தெரியலாம். பழைய கஞ்சிதான். ஆனால் எளிதில் ரீச்சாகும் பீட்டிலே நடைப் போட்டிருக்கிறார் மணிஷர்மா. கேட்க ஓக்கே. ஆனால் முதல்நாள் அரங்கில் ரசிகர்களை உசுப்பேற்றுமா என்பது கேள்விக்குறிதான். அதனை சரிக்கட்டும் விதத்தில் இடையே ஒரு பி.ஜி. எம்மை மட்டும் வேகமாக போட்டிருக்கிறார்கள்.

”இனி வருங்காலம் நம் கையில்தாண்டா” என்ற வரி நிஜமானால் சந்தோஷம்.  நேற்று நடந்த இசை வெளியீட்டில் பேசிய விஜய் “இனிமேல் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாம். 3 இடியட்ஸ் செய்ய ஆசைப்படுகிறேன். விரைவில் நல்ல செய்தி வரும்” என்றிருக்கிறார். காலம் பதில் சொல்லும் வரை அமைதி காக்கிறேன்.

2) வங்க கடல் எல்லை (நவீன், மாலதி) கபிலன்

டிபிக்கல் விஜய் குத்து. ஆரம்ப அடியே இது அந்தப் பாட்டு இல்லை என்று சொல்ல வைக்கும். அதனாலென்ன? முடிஞ்சா ஆடாமல் சொல்லுங்க அதை என்கிறார் மணிஷர்மா. மாலதியும், நவீனும் பாடவில்லை. ஆடியிருக்கிறார்கள். படம் நல்லாயிருந்தா தமிழக திரையரங்குகளில் இன்னொரு அப்படி போடுதான். தமன்னா. பார்த்து ஆடும்மா தாயீ. செம குத்து.

ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிளை பார்த்தேன்
உன்னை மட்டும் உன்னை மட்டும் மாப்பிள்ளை பார்த்தேன்..
ரைட்டு

3) தஞ்சாவூர் ஜில்லாக்காரி (ஹேராசந்திரா, சைந்தவி) நா.முத்துக்குமார்

”பாட்ட பாடிட்டு போகமுடியாது. அது நெலைக்காது. அதுவா நடக்கணும். நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும். அதான் செம பாட்டு. அது எனக்கு நடந்தது. என்ன அடிச்சது அந்த பாட்டு”

சூ மந்திரகாளி…. பிக் ஆஃப் த ஆல்பம் என்பார்களே.. அந்தப் பாட்டு இதுதான் என்று தோன்றுகிறது. அதிக வேகம் ஆபத்து என்பதை மணிஷர்மா எப்போதும் தெரிந்து வைத்திருக்கிறார். டோலு டோலுதான் போல மிதமான வேகத்தில் மிரட்டுகிறார். யாருப்பா ஹேராசந்திரா? புதுசு புதுசா வந்து கலக்கறாங்க.”பொம்மாயி பொம்மாயி” எளிதில் நம் உதட்டில் ஒட்டாது என்பதை ஒப்புக் கொண்டாலும் இந்தப் பாடல் விரைவில் இன்னொரு தளபதி கீதம். நோட் பண்ணிக்கோங்க.

சூ மந்திரகாளி.. I wanna make u காலி
give me my தாலி. my life ஜாலி ஜாலி

நா.முத்துக்குமார் வாழ்க வாழ்க…

4) சிறகடிக்கும் நிலவு (கார்த்திக், ரீட்டா) சினேகன்

    மணிஷர்மாவின் மெலடி எப்போதுமே ஸ்பெஷல். மெல்லினமே,சர்க்கரை நிலவே,  கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு, தமிழ்தமிழ் என எல்லா மெலடியும் மெகா ஹிட். இந்த முறை சுமாரான பாடலாகத்தான் தெரிகிறது. இந்த மெலடிகள் மட்டும் எனக்கு வைனைப் போல. கேட்க கேட்கவே பிடிக்கின்றன. எனவே காத்திருந்து பார்ப்போம். கார்த்திக்கின் குரல் வசீகரம் குறையாமல் ஒலிக்கிறது. நியூசிலாந்துக்கு சென்ற வாரம் சென்றதாம் படக்குழு. வேறு எந்த பாடலாய் இருக்கும்? ராஜூ சுந்தரமாக இருந்தால் கொண்டாட்டம்தான்.

புன்னகைகள் சிந்தும் பொன்னகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான்

அந்த மாதிரி காட்டுங்கப்பா. சின்னத்தாமரை மாதிரி சோதனைகள்(experiment) வேண்டாமே

5)  நான் நடந்தால் அதிரடி (நவீன், ஷோபா) கபிலன்

இன்னொரு டூயட். இது மணிஷர்மா ஸ்பெஷல் எனலாம். ஹெட்ஃபோனில் கேட்பவர்களுக்கு தோதான பாடல். பேஸ் கிட்டார் விளையாடுகிறது. ஷார்ப்பான பீட்ஸும், நவீனின் குரலும் இசைந்திருக்கும் அழகை ரசிக்கலாம். சின்ன சின்ன இசைக் குறிப்புகளுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர். அழகாய் வந்திருக்கிறது. படம் வெளிவந்த பின் தளபதியும், தமன்னாவும் ஆடுவதை பார்ப்பதே தலை’யாய வேலையாக இருக்கும். எனவே ஹெட்ஃபோனில் ஒரு முறை இப்போதே கேட்டுவிடுங்கள்.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

உள்ளத்தின் கூச்சல் நீ.. உள்ளுக்குள் காய்ச்சல் நீ
ரத்தத்தில் காதல் நீச்சல் நீ

ஆதி, இது ஓக்கேவா? கபிலன் தான்

6) தமிழன் வீரத் தமிழன் (ராகுல் நம்பியார்) கபிலன்

தீம் சாங். அப்புறமா கேட்டுக்கலாம். நான் தஞ்சாவுரு கேட்க போகிறேன்.

பி.கு: கந்தசாமி, ஆதவன், வேட்டைக்காரன் என நான் நல்லா இருக்குன்னு சொன்ன படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் பலரும் மொக்கை என்று பின்னூட்டமிட்டார்கள். ஆனால் அந்தப் பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பியது என்பதை அறீவீர்கள். (நக்கீரன், ரிப்போர்ட்டர் மாதிரி புலம்ப விட்டாங்களே) எனவே காத்திருங்கள். சுறா வேட்டை தொடங்கும்வரை. என்னைப் பொறுத்தவரை இது விஜயின் சமீபத்திய சிறந்த ஆல்பம்.

உங்களுக்காக பாடலின் சிலப் பகுதிகள்.

http://www.youtube.com/watch?v=0osJczU-Zkc&hl=en_US&fs=1&

வீடியோ உபயம் : haro2k10

42 கருத்துக்குத்து:

கரன் on March 30, 2010 at 1:58 AM said...

வெற்றி கொடி ஏத்துவோம்...!

சுசி on March 30, 2010 at 2:35 AM said...

ஹிட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடு..

கார்க்கி

ஹிட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடு..

நீங்க நல்லா எழுதி இருக்கீங்க.

தஞ்சாவூர் ஜில்லாக்காரி..
// ”பாட்ட பாடிட்டு போகமுடியாது. அது நெலைக்காது. அதுவா நடக்கணும். நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும். அதான் செம பாட்டு. அது எனக்கு நடந்தது. என்ன அடிச்சது அந்த பாட்டு” //
கலக்கல் பாட்டு..
//சூ மந்திரகாளி….// போட்டு கம்போஸ் பண்ணிட்டாங்கப்பா..

சிறகடிக்கும் நிலவு வரிகளும் சேர்ந்து கொன்னு போடுது.. அவ்வ்வ்..

வாசகி on March 30, 2010 at 4:15 AM said...

silarukku ketta udane pidikkaadhu... kekka kekka dhaan pidikkum.

ர‌கு on March 30, 2010 at 4:26 AM said...

எப்ப‌டின்னே தெரிய‌ல‌ ச‌கா, ச‌மீப‌ கால‌மா விஜ‌ய்யோட‌ பாட‌ல்க‌ள் (ம‌ட்டுமாவ‌து) செம‌ ஹிட்டாயிடுது :))

ஜெட்லி on March 30, 2010 at 7:01 AM said...

பாட்டு மட்டும் ஹிட் ஆகி என்ன பண்றது!!

ஆனா வெளியே பாட்டு கூட பயங்கரமா இருக்கிறதா
பேசிக்கிறாங்க......

இவன் சிவன் on March 30, 2010 at 9:01 AM said...

மத்தபடி எல்லாம் சரித்தேன்...Label மட்டும் நகைச்சுவை னு மாத்திருங்க.....

கார்த்தி on March 30, 2010 at 9:43 AM said...

Naam Nadanthal... intha paatu... vijay "Nadanthara" Poararu... Intha paatu'oda Telugu version ketrukeengala???

கார்க்கி on March 30, 2010 at 10:10 AM said...

நன்றி கரன்...

சுசி,நன்றி.

வாசகி. பலருக்கு அபப்டித்தாங்க. எப்படி இருந்தாலும் படம் ரிலீசானதான் பாடல்கள் முழுமையா ரீச் ஆகும்

ரகு, எபப்வுமே அவர் பாடல்கள் ஹிட் ஆயிடும். :))

ஜெட்லீ, அதுவாச்சும் ஆகுதேன்னு சந்தோஷப்பட்டுக்கிறோம்...அது சரி, வெளியே எந்த படத்தை பத்தி பேசினாங்க? சிடி இன்னைக்குதானே கடைல கிடைக்கும்?

இவன் சிவன், எதுக்குங்கண்ணா?ஏற்கனவே பதிவுல் சொல்லியிருக்கேன். படம் வரும்போது இந்த பாட்டு எல்லாம் ஹிட் ஆகலைன்னா என்ன செயய்னும் சொல்லுங்க. என்னோட பெட்ட அப்புறம் சொல்றேன்

கார்த்தி, வங்க கடல் எல்லை, பொம்மாயி இதனோடு தெலுங்கு வெர்ஷனும் பார்த்தாச்சு சகா :))

புன்னகை on March 30, 2010 at 10:11 AM said...

//ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிளை பார்த்தேன்
உன்னை மட்டும் உன்னை மட்டும் மாப்பிள்ளை பார்த்தேன்..//
உங்க தோழிக்குக் கூட பிடித்தமான வரிகள் போல? ;-)

Kolipaiyan on March 30, 2010 at 10:17 AM said...

இசையில், எல்லா பாடலுமே எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு.

புது புது வரிகளை போட்டு விஜய்க்கு மேலும் அரசியம் சாயம் பூச தயாராகிவிட்டார்கள் நம் கவினர்கள்.

Cable Sankar on March 30, 2010 at 10:33 AM said...

கார்க்கி உனக்கு ஒரு ஆறுதல் செய்தி. படத்தில் காமெடி நன்றாக வந்திருப்பதாக செய்தி.

மோனி on March 30, 2010 at 11:35 AM said...

..//Cable Sankar said...
கார்க்கி உனக்கு ஒரு ஆறுதல் செய்தி. படத்தில் காமெடி நன்றாக வந்திருப்பதாக செய்தி..//

சார்..
விளையாடாதீங்க சார்..
விஜய் படம் வர்றதே ஒரு காமெடிதான் ..

(சும்மா விளையாட்டுக்கு கார்க்கி..)

~~Romeo~~ on March 30, 2010 at 11:50 AM said...

\\ஜெட்லி said
பாட்டு மட்டும் ஹிட் ஆகி என்ன பண்றது!!//

repeat .. he he he

~~Romeo~~ on March 30, 2010 at 11:50 AM said...

அஜித் மேட்டர் என்ன ஆச்சு சகா ???

yuva on March 30, 2010 at 12:05 PM said...

fantabulous review

radhika on March 30, 2010 at 12:29 PM said...

karki, I like bommayi and athiradi songs. Wish all the best for you and sura team. Good review.

sohndesmonds on March 30, 2010 at 12:35 PM said...

நல்ல விமர்சனம்..
உங்களை கேளாமலயே உங்கள் விமர்சன பக்கத்திற்கு எனது இடுகையில் இருந்து தொடர்பு கொடுத்துள்ளேன்.
மன்னிக்கவும். நன்றி.
ரெண்டுக்கும் சேத்து தான் பாஸு.
சுறா பாடல்களை டவுன்லோட் செய்ய என் வலைக்கு வருகை தாருங்கள்.
http://sohndesmonds.blogspot.com/2010/03/suraa-songs-free-download.html

ஜெட்லி on March 30, 2010 at 12:44 PM said...

ஆர்குட்இல் நேற்றே விவாதத்தை தொடங்கி விட்டார்கள்.....
எத்தனை பேரு சி.டி வாங்குறாங்க... எல்லாம் நெட்தான்...
நான் இன்னும் கேக்கலை...
கேட்டுட்டு அப்புறமா நானும் பதிவு போடுறேன்

Karthik on March 30, 2010 at 1:09 PM said...

//”இனி வருங்காலம் நம் கையில்தாண்டா” என்ற வரி நிஜமானால் சந்தோஷம். நேற்று நடந்த இசை வெளியீட்டில் பேசிய விஜய் “இனிமேல் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாம். 3 இடியட்ஸ் செய்ய ஆசைப்படுகிறேன். விரைவில் நல்ல செய்தி வரும்” என்றிருக்கிறார். காலம் பதில் சொல்லும் வரை அமைதி காக்கிறேன்.//

ஹையோ ஹையோ.. மிச்சத்த அப்புறம் வந்து படிக்கறேன். :))

gane on March 30, 2010 at 1:37 PM said...

vija padatha pathi pesa yendha naaikum(moni) arugadhai kedayadhu......

(chumma vilayattukr karthi)

ராமய்யா... on March 30, 2010 at 2:21 PM said...

Vijaya parthu oru Tamilpadame vanthathe.. innuma thirunthala????

athe kuthu.. engayo ketta mathiri tunes..

padathoda results ippave kannukku theriyuthu...

3 idiotsa??? Vijay = Amir Khan???

read this in Gounder style..

"SATHIYA SOTHANAI"

senthilkumar on March 30, 2010 at 2:38 PM said...

ஆறு பாட்டில் மூன்று பாட்டு தெலுங்கு பாட்டு.

தஞ்சாவூர் ஜில்லாக்காரி.. - இது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா நடித்த படத்தில் இருந்து வந்த பாட்டு...

மற்ற பாட்டுகளையும் கேட்டிருக்கேன். ஆனா எந்த படம் ன்னு தெரியலை.

புதுசா எதாவது யோசிங்கப்பா.....

நர்சிம் on March 30, 2010 at 2:44 PM said...

வாழ்த்துகள் சகா.. ரைட்ட்ட்டுஹிட்டு

"ராஜா" on March 30, 2010 at 2:55 PM said...

வாழ்த்துக்கள்

கார்க்கி on March 30, 2010 at 3:11 PM said...

நெகட்டிவ் ஓட்டு போட்ட hsemarக்கு நன்றி
_________________

புன்னகை, தோழிதான் பறந்து போச்சுன்னு சொன்னேனே

கோழிப்பையன்
//ஆரம்ப அடியே இது அந்தப் பாட்டு இல்லை என்று சொல்ல வைக்கும். அதனாலென்ன? முடிஞ்சா ஆடாமல் சொல்லுங்க அதை என்கிறார் மணி//

நானும் சொல்லியிருக்கேனே சகா

கேபிள், கேள்விப்பட்டேன். படமே நன்றாக இருப்பதாகவும் சன் டிவி நண்பர்(அவர்தான்) சொன்னார்

மோனி, வழக்கம் போல முதல் நாள் பார்த்துடுங்க சகா :))

ரோமியோ, அது என்ன அஜித் மேட்டர் சகா?????????

நன்றி யுவா

நன்றி ராதிகா

sohndesmonds , நன்றி சகா. ஆனா டவுன்லோடு கொடுப்பதுதான் இடிக்குது.:)))

ஜெட்லீ, உண்மைதான். ஒன்னும் பண்ண முடியாது ஜெட்லீ

கார்த்திக், உனக்கு 3 இடியட்ஸே பிடிக்கலை தானே?

gane, ஏங்க இந்த கொலைவெறி? அவரை கலாய்க்க வேணாம்னு சொல்லல. ஆன இப்படி வேண்டாம். சாரி, மோனி

ராமய்யா.. ஆமாங்க அதே குத்து. இவன் திருந்தவே மாட்டான். ரிசல்ட் தெரிஞ்சிடுச்சா... என்னங்க இது?

நாராயணா!!! *&*&*&*&*
இதையும் கவுண்டட் ஸ்டைலிலே படிக்கவும் :)))

செந்தில், இன்னொன்னு பவன் கல்யாண் படம். இன்னொன்னு ஜூனியர் என்.டீ.ஆரும் சமீராவும் நடிச்ச படம். தெலுங்கு பாட்டு னீங்க கேட்ப்பிங்க. அதுக்காக எல்லோருமே கேட்டு இருப்பாங்களா சகா? புதுசுன்னு அரேப்யா மொழி பாடல்களை திருடி போடறதுக்கு இது பெஸ்ன்னு நினைக்கிறேன்

நன்றி நர்சிம்

ஸ்பெஷல் நன்றி ராஜா

அதிஷா on March 30, 2010 at 3:21 PM said...

பாஸ் முதல் பாட்டு கேட்டு சீரியஸாவே அப்படித்தான் எழுதினீங்களாஅ

அதிஷா on March 30, 2010 at 3:31 PM said...

நன்றாக இருக்கிறது தோழரே.ஓட்டும் போட்டு விட்டேன்

நேரம் கிடைத்தால் என் பக்கமும் வரவும். புதியவனை ஆதரியுங்கள்

www.athishaonline.com

எனக்கும் ஓட்டு போடுங்கள்

அன்புடன்,அதிஷா
சென்னை

கார்ல்ஸ்பெர்க் on March 30, 2010 at 5:03 PM said...

வெறும் வாழ்த்துக்கள் மட்டும்
சொல்றதெல்லாம் வேஸ்ட்'ணா.. அதெல்லாம் படத்து மேல
நம்பிக்க இல்லாம பேசுறது..வாங்க, நாம படத்தோட வெற்றி விழாவ பத்தி பேசலாம்..

pappu on March 30, 2010 at 5:08 PM said...

சூ மந்திரகாளி.. I wanna make u காலி
give me my தாலி. my life ஜாலி ஜாலி

நா.முத்துக்குமார் வாழ்க வாழ்க…///

இந்த வரிகள் தெலுகு ஒரிஜினலிலெயே வருது., ஆம், பல பாடல் தெலுகில் ஹிட் அடித்தவை.
பொம்மாலி பாட்டில் அனுஷ்காவைப் பாத்தீங்க.... ஒரிஜன்ல் -தெலுகு பில்லா

நான் நடந்தா அதிரடி - மை நேம் இஸ் பில்லா (தெலுகு)


இரண்டும் ஓகே... ட்விட்டரில ஆளைக்காணோம்?

திவ்யாஹரி on March 30, 2010 at 7:40 PM said...

\\ஜெட்லி said
பாட்டு மட்டும் ஹிட் ஆகி என்ன பண்றது!!//

repeat..

:))

வெற்றி on March 30, 2010 at 7:59 PM said...

சகா இதை எதிர்பார்த்துதான் இன்னிக்கு ரீடர் ஓபன் பண்ணேன்..நீங்க ஏமாத்தல

பாடல்கள் ரொம்ப சூப்பர்..வேட்டைக்காரன் போலல்லாமல் கேட்டவுடன் விஜய் ரசிகர்களுக்கு மிக பிடிக்கக்கூடிய வகையில் இருக்கிறது..விஜய்க்கேற்ற மாஸான பாடல்கள்..ரசிகர்களுக்கு நல்ல தீனி உள்ளது..

வெற்றி on March 30, 2010 at 8:01 PM said...

//ஆரம்ப அடியே இது அந்தப் பாட்டு இல்லை என்று சொல்ல வைக்கும். அதனாலென்ன? முடிஞ்சா ஆடாமல் சொல்லுங்க அதை என்கிறார் மணிஷர்மா. //

ரசித்தேன் :))

வெற்றி on March 30, 2010 at 8:03 PM said...

இப்பவே மைனஸ் வோட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க போல

கும்க்கி on March 30, 2010 at 8:46 PM said...

புது படங்களா தம்பி...

விஜய் படமுங்களா....

சரிங்க தம்பி...வரட்டும் பார்க்கலாம்.

யோ வொய்ஸ் (யோகா) on March 30, 2010 at 8:47 PM said...

உங்க ஆளோட படம் வர்ற சந்தோஷத்தில் இருக்கீங்க போல

sweet on March 30, 2010 at 10:40 PM said...

huh

i hate vijay

he is entirely copying rajini

he don't have brain like U :)))

ok-ya cool

aalu illadha ooru-la iluppai poo sakkarai. thatz why that foolish guy songz r hit.

hey if u have dare publish this comment


i love surya

singam hit sura flop :)

madhumidha
madhumidha1@yahoo.com

கார்க்கி on March 30, 2010 at 10:55 PM said...

அனைவருக்கும் நன்றி

//hey if u have dare publish this comment//

அறிவின் சிகரம் ஸ்வீட் அவர்களுக்கு,
இதை நான் வெளிடவே தேவையில்லை. ஏனென்றால் இங்க மாடரேஷனே கிடையாது. இந்த அழகுல மத்தவங்க அறிவ பத்தி பேச்சு தேவையா?

சிங்கம் ஹிட் ஆக வாழ்த்துகள். பேருக்கேற்றது போல இருக்க உங்களுக்கும் வாழ்த்துகள்

கார்க்கி on March 30, 2010 at 10:56 PM said...

//he don't have brain like U//

இங்க்லீஷுதான் வரலையே. அப்புறம் ஏன் அதையே பிடிச்சு தொங்குற ஸ்வீட் கண்ணு?

Anonymous said...

suraa super hits songs siragadikkum nilavu songs super .........

Anonymous said...

கார்கி,
படம் வெற்றி பெற வாழ்த்துகள். விஜயோட டெம்ப்லேட் ஆல்பம், ஆனா ஒரு நச் மெலடி மிஸ்ஸிங். உங்களுக்கு நல்ல இசை ஞானம் இருப்பதால், (கிடார் எல்லாம் வாசிக்கறீங்க) ஏன் சமீபத்தில் வந்து கவனிக்க படாமல் போன நல்ல மெலோடீஸ்சை ப்ரோமோ பண்ண கூடாது.

உதாரணம்: ஏன் இப்படி மயக்கினாய், அறியான் படங்களில் இருந்து http://tinyurl.com/ygsm25j, http://tinyurl.com/yfg5oww, http://tinyurl.com/ygxt7mz

-அன்பன் பாலா

ஆதிமூலகிருஷ்ணன் on March 31, 2010 at 10:03 PM said...

அடுத்த சோதனை அதற்குள் ஆரம்பமாயிடுச்சா.? ஹூம்.

கார்க்கி on March 31, 2010 at 11:06 PM said...

பாலா,
நன்றி..

நான் எல்லாப் பாடல்க குறித்தும் எழுதி அவ்ருகிறேன். சில மாதஙக்ளாக வேலை பளு காரணமாக பாட்டு கேட்பது குறைந்துவிட்டது. இருந்தாலும் அவ்வபோது நான் ரசித்த பாடல்களும், இசை விமர்சனமும் எழுதித்தான் வருகிறேன்.

விஜய்.. என் தனிப்பட்ட ரசனை. அதை எழுதாமல் இருக்க முடியாது. மேலும் இதுவும் இசைதானே? வருஷத்துக்கு ஒரு விஜய் படம் தானே வருகிறது? :))))

சமீபத்தில் கூட அவள் பெயர் தமிழரசி, வி.தாவா, தமிழ்ப்படம், அசல் என எழுதினேனே

முன் தினம் பார்த்தேனே ஈர்ர்த்தது. ஆனால் மூனே நாளில் போரடித்தால எழுதவில்லை. நாணயத்தில் ஒரு பாடல் மட்டும் கவர்ந்தது. அதையும் எழுதினேன்

:))

 

all rights reserved to www.karkibava.com