Mar 29, 2010

சங்கத்து ஆள அடிச்சது எவண்டா?


 

ஹலோ. நான் இதுவரைக்கும் வலையுலகம் விஷயத்த பத்தி எழுதல.

அடேய் போன வாரம்தானே பதிவர் வீட்டுல கேமரான்னு எழுதின.

அது போன வாரம். நான் சொல்றது இந்த வாரம்

   கைப்புள்ள சங்கம் மாதிரி இல்லாம நல்லபடியாக ஒரு குழுமம் ஆரம்பிக்க நினைத்தது ஒன்றும் படுபாதக செயலாக தெரியவில்லை. ஆனால் வேறு வழியில்லாமல் சங்கம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஒருங்கிணைப்பாளர்களை காயப்படுத்த வேண்டியதாகிவிட்டது. சங்கமோ, குழுமமோ.. ரெஜிஸ்டர்டோ அன்அப்ரூவ்டோ. டீயோ சரக்கோ.. மெரீனாவோ லைப்ரரியோ… சென்னையோ.திரு… இல்லல்ல.. அது மட்டும் சென்னைதான். எங்க நம்ம மக்கள் கூடினாலும் நான் வர்றேன்ப்பா. அவ்ளோதான் சரி. சங்கத்து முதல் சந்திப்பில் நடந்த சில முக்கிய விஷயங்கள்.

ஜாக்கி சேகரைப் பார்த்து அண்ணே பதிவர் தன்னை அழகாக படமொன்று எடுக்க சொன்னார். ”அச்சச்சோ தெரிஞ்சிருந்தா பெரிய கேமரா எடுத்துட்டு வந்திருப்பேனே” என்றார் ஜாக்கி. உடனிருந்த நான் ”பரவாயில்ல, சின்ன சைஸிலே எடுங்க” என்றேன். முறைத்த ஜாக்கி ”இல்லப்பா. அட்வான்ஸ் டெக்னாலஜி கேமரான்னு சொன்னேன்” என்றார். நானும் விடாமால் “ஓ. அப்துல்லா மாதிரி ஆளுங்கள அழகா எடுக்கிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துடுச்சா” என்றபடி நகர்ந்துவிட்டேன். ஏன் நகர்ந்தேனா? டெக்னாலஜி இல்லைன்னா உங்காள வச்சு எப்படி படம் எடுக்கிறாங்கன்னு கேட்டாருன்னா என்ன செய்றது?.

மொபைலை நோண்டியபடி இருந்தார் நம்ம அழகியதமிழ்மகன். என்னதான் சகா பண்றீங்கண்ணு கேட்டேன். “Will you come for dinner. or will HAVE and come?”என்ற மெசஜை காட்டினார். அது என்ன சகா have மட்டும் கேப்ஸ்ல இருக்கு என்றேன். சிரித்தார். என்னமோ ஆயிடுச்சு இவருக்கு என்று எதிர்புறம் சென்று அமர்ந்துக் கொண்டேன். அதே சகாவிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. “shall we HAVE vodka tonight?” . ரைட்டு

தங்கமணி பதிவருக்கு கால் மேல கால் வந்துச்சு. ஓரங்கட்டி பேசிக் கொண்டிருந்தார். ”அண்ணியாண்ணே என்றேன். ம்ம் என்று தலையாட்டியவர் சிறிது நேரத்தில் பக்கத்தில் வந்து அமர்ந்தார். என்னண்ணே பிரச்சினை என்றேன். கிட்ட      வா கிட்ட வா  கிட்டவா என்று காற்றுபுகாதபடி இழுத்தவர் காதில் சொன்னார் “பூரி செய்றாளாம். எழும்ப மாட்டுதாம். என்ன செய்யன்னு கேட்கிறாப்பா உங்கண்ணி” என்றார். நம்மால் ஆன உதவிய செய்யலாம் என்று தலையை பிய்த்து ஒரு வழி சொன்னேன். கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டார். என்ன சொன்னேனா? “பக்கத்துல அலாரம் வச்சு பார்க்க சொல்லுங்கண்ணே. எழுந்திருக்கும்”

  தெளிவான அஜெண்டா இல்லததாலும், திறமையான ஒருங்கிணைப்பாளர் இல்லாததாலும் சந்திப்பு சவசவ என்று போவதாக இன்னொரு நண்பர் வருத்தப்பட்டார். இப்படி ஒருவராவது இருக்கிறாரே என்று அவருடனே உட்கார்ந்துக் கொண்டேன். இறுதிவரை ஆர்வமாக அனைவரின் பேச்சையும் கூர்ந்து கவனித்தபடி இருந்தவரிடம் “சகா முடிஞ்சிடுச்சு வாங்க போலாம் என்றேன். சாய்ந்தபடி அமர்ந்திருந்த மகான் நேராக அமர்ந்துக் கொண்டு சொன்னார் “தம்பி. டீ இன்னும் வரல”

சரி. மத்த கதையை விடுவோம். இப்போ என் கருத்து என்னன்னு சொல்லிடறேன். என்னைப் பொறுத்த வரைக்கும் உலகத்துல இருக்கிற எல்லா சங்கத்தையும் கலைக்கனும். சென்னை குழுமத்தையும்தான். ஆனா சங்கத்தை கலைக்கணும்ன்னா முதல்ல கூட்டணுமில்ல?. அதனால சங்கம்னு ஒன்னு தொறக்கிறத நான் ஆதரிக்கிறேன். சங்கம் இல்லைன்னாலும் ஈகா, அபிராமி, மோட்சம்னு ஏதாவது ஒன்னு ஆரம்பிங்கப்பா. ஏன்னா எனக்கும் பொழுது போகனுமில்ல.

பி.கு: இதே லேபிளில் இன்னும் சில பதிவுகள் வெளிவரலாம்.

40 கருத்துக்குத்து:

இராகவன் நைஜிரியா on March 29, 2010 at 1:24 AM said...

// “பக்கத்துல அலாரம் வச்சு பார்க்க சொல்லுங்கண்ணே. எழுந்திருக்கும்” //

லொள்ளுன் உச்சகட்டம்...

பிரியமுடன்...வசந்த் on March 29, 2010 at 1:43 AM said...

//“பூரி செய்றாளாம். எழும்ப மாட்டுதாம். என்ன செய்யன்னு கேட்கிறாப்பா உங்கண்ணி” என்றார்//

இதுவும் இதுக்கடுத்துவரும்

// “பக்கத்துல அலாரம் வச்சு பார்க்க சொல்லுங்கண்ணே. எழுந்திருக்கும்” //

நட்ட நடுசாமத்துல சத்தம் கேட்டு பேய்வர்ற அளவு சிரிச்சாச்சு நிஜமாவே ஆதிஅண்ணே சொன்னதுதானா?

சுசி on March 29, 2010 at 1:58 AM said...

கிளம்பிடுச்சில்ல.. கண்டிப்பா வெற்றி பெறும் கார்க்கி..

//இதே லேபிளில் இன்னும் சில பதிவுகள் வெளிவரலாம்//
கொஞ்சம் இடைவெளி விட்டு வெளிவிடுங்க கார்க்கி..
இதுக்கே இன்னமும் சிரிச்சுட்டு இருக்கேன்..

நல்ல வேளை வ போ ஆஃபீஸ்ல வச்சு படிக்கல :))))

சுசி on March 29, 2010 at 2:03 AM said...

//செண்ணை எலுத்தாலர்கல் குயுமம்//

சூப்பரோ சூப்பரு..

உங்க லொள்ள சொன்னேன்.

பா.ராஜாராம் on March 29, 2010 at 3:14 AM said...

:-)))

இப்படி ஒரு ஆளு வேணுமுல்ல சங்கத்துக்கு.

Muthu on March 29, 2010 at 3:42 AM said...

poori matter SEMA :-)

வாசகி on March 29, 2010 at 4:59 AM said...

ஓங்கி செவுள்ள ஒன்னு உட்டா கூட எந்திரிக்க வாய்ப்புண்டு.. (பூரிய தானப்பா யப்போய்..)

pappu on March 29, 2010 at 6:34 AM said...

பூரி எந்திரிக்கனுமா? பூரிக்கு எந்திரிக்கனுமா? நித்யானந்தா மாத்திரைகளை வாங்கி கொடுங்க!

ர‌கு on March 29, 2010 at 7:23 AM said...

ச‌ங்க‌ம் அடிக்க‌டி கூட‌ட்டும், அப்போதானே இப்ப‌டி போய் லொள்ளு ப‌ண்ணி, ப‌திவா போட்டு த‌ள்ளுவீங்க‌! ப‌திவோட‌ த‌லைப்பு உங்க‌ சார்பா யாராவ‌து கேட்ட‌தா ச‌கா?...;))

cheena (சீனா) on March 29, 2010 at 8:12 AM said...

அன்பின் கார்க்கி - நக்கலுக்கு ( லொள்ளுன்னும் சொல்லலாம் ) கொறச்ச இல்ல - பூரிக்கு அலாரம் தேவையா- கட்டையாலேயே நாலு போட்டா எந்திரிக்காதா ? ம்ம்ம்ம்ம்

சரி சரி கூடியாச்சு - எப்போ கலக்கப் போறாங்களாம்

நல்லாருங்கப்பா

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on March 29, 2010 at 9:33 AM said...

வேற எதோ தலைப்பு வெக்கபோறதா சொன்னீங்களே கார்க்கி..! :)

தராசு on March 29, 2010 at 9:38 AM said...

//ஆனா சங்கத்தை கலைக்கணும்ன்னா முதல்ல கூட்டணுமில்ல?.//

அப்ப சங்கத்து பில்டிங்கை கூட்டி சுத்தம் பண்ற பொறுப்பை நீங்க எடுத்துக்கறீங்க, அப்படித்தானே.....

ரோஸ்விக் on March 29, 2010 at 10:32 AM said...

பாவம் கல்யாணம் ஆன பதிவர்களை போட்டு தாக்குறீங்களே! (பூரி மேட்டர் ச்சூபரு... நல்ல வேலை வேற எதுவும் பப்பு சொல்ற மாதிரி மாத்திரை குடுக்க சொல்லலை.) SMS - மேட்டரையும் நுணுக்கமா பார்த்து கோர்த்து விட்டீங்க... :-))

மோனி on March 29, 2010 at 10:59 AM said...

குயுமம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அபராதத்துலதான் ஓடிட்டு இருக்காமே?

Anbu on March 29, 2010 at 11:08 AM said...

அந்த விஜய் ஸ்டில்லை கொஞ்சம் மாத்தக்கூடாதா...

பதிவு நல்லா இருக்கு...

ஸ்ரீமதி on March 29, 2010 at 11:09 AM said...

:))))))))))

நர்சிம் on March 29, 2010 at 11:20 AM said...

//மொபைலை நோண்டியபடி இருந்தார் நம்ம அழகியதமிழ்மகன். என்னதான் சகா பண்றீங்கண்ணு கேட்டேன். “Will you come for dinner. or will HAVE and come?”என்ற மெசஜை காட்டினார். அது என்ன சகா have மட்டும் கேப்ஸ்ல இருக்கு என்றேன். சிரித்தார். என்னமோ ஆயிடுச்சு இவருக்கு என்று எதிர்புறம் சென்று அமர்ந்துக் கொண்டேன். அதே சகாவிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. “shall we HAVE vodka tonight?” . ரைட்டு//

எல்லாம் சரி, விஜய் பட டைட்டில் தானா கிடைச்சது ;(..

~~Romeo~~ on March 29, 2010 at 11:28 AM said...

சங்கத்து ஆள அடிச்சது எவண்டா??? இதை தான் மணிகண்டனும் கேட்டுட்டு இருதார்.. யார்பா அந்த ஆளு ??

யாரு கார்கியா ???

Karthik on March 29, 2010 at 11:33 AM said...

கடைசில கார்க்கியையும் கருத்து கந்தசாமி ஆக்கிட்டாங்களே? கலிகாலாம். :))

நாய்க்குட்டி மனசு on March 29, 2010 at 11:55 AM said...

உங்க ஸ்டைலில எழுதிடீங்க கார்க்கி. யாரைப் பத்தியாவது கிசு கிசு எழுதினா அவங்களாவே வந்தா ஆஜர் ஆவாங்க?அது யாருப்பா அழகிய தலைமகன் அப்படின்னு பின்னூட்டம் போட வேண்டாம்.
நகைச்சுவை உணர்வு அதிகம் பேருக்கு கிடைக்காத ஒன்று உங்களிடம் இருக்கிறது வறண்டு விடாமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள், திருமணம் ஆன பின்னும்

ராஜன் on March 29, 2010 at 12:05 PM said...

// “பூரி செய்றாளாம். எழும்ப மாட்டுதாம். என்ன செய்யன்னு கேட்கிறாப்பா உங்கண்ணி” என்றார்.//


எண்ணையில் போட்டால் எழும்பும்

வாணலி நிறைந்தால் தளும்பும் !

# நித்திய கவிதை

ராஜன் on March 29, 2010 at 12:05 PM said...

// தெளிவான அஜெண்டா இல்லததாலும்,//

யாரு பாஸ் அந்த பிகர் !

ராஜன் on March 29, 2010 at 12:05 PM said...

//உலகத்துல இருக்கிற எல்லா சங்கத்தையும் கலைக்கனும்.//

கலைக்கனும் எல்லாத்தையும் கலைக்கனும் ! எல்லாம் ஓகே தாதா போட்டோ இருந்த எடத்துல தருஹல போட்டோ போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் ! தல தாதா ரசிகர்கள் பின் குத்துகுத்தவும்

ராஜன் on March 29, 2010 at 12:18 PM said...

//தருஹல //

தறுதலை என்று போடுவதற்கு பதிலாக வேறு மாதிரி போட்டதற்கு மானா வாரியாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

திவ்யாஹரி on March 29, 2010 at 12:35 PM said...

//“பக்கத்துல அலாரம் வச்சு பார்க்க சொல்லுங்கண்ணே. எழுந்திருக்கும்”//

சரியான லொள்ளு.. ஹா..ஹா..ஹா..

yuva on March 29, 2010 at 1:08 PM said...

Hai,
Blog supera poitu irukku
Vaaaaaaaazhthukkalh

Anonymous said...

கொலைவெறி

அன்புடன் அருணா on March 29, 2010 at 3:54 PM said...

// “பக்கத்துல அலாரம் வச்சு பார்க்க சொல்லுங்கண்ணே. எழுந்திருக்கும்” //
அய்யய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓஓ!

ஜெட்லி on March 29, 2010 at 4:09 PM said...

//இன்று பாடல் வெளியீடு - வெற்றி பெற வாழ்த்துகள் //

உங்க தன்னம்பிக்கையை நான் பாராட்டுறேன்....
அப்புறம் படம் வந்ததுக்கு பின்னாடி வாந்தி பூந்தினு
சொல்ல கூடாது .....

LOGESHWARAN on March 29, 2010 at 5:22 PM said...

//சங்கத்து ஆள அடிச்சது எவண்டா//

சரியா காதுல விழல கிட்ட வந்து சொல்லு ....

sweet on March 29, 2010 at 5:35 PM said...

hey r u vijay fan? crazy guy... he is coping rajini

no brain at all... i think u too :)

i am a surya fan... fantastic actor-ya

madhumidha

ராஜன் on March 29, 2010 at 5:51 PM said...

//madhumidha//

அம்மணி சொல்றதுதான் சரி ! (அம்மணி என்ன என்ன சொன்னாலும் சரி !)

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on March 29, 2010 at 6:00 PM said...

//.. “பக்கத்துல அலாரம் வச்சு பார்க்க சொல்லுங்கண்ணே. எழுந்திருக்கும்” ..//

இதுக்குதான் தலைப்பு பொருத்தமா இருக்கு சகா..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on March 29, 2010 at 6:29 PM said...

/////////ஜாக்கி சேகரைப் பார்த்து அண்ணே பதிவர் தன்னை அழகாக படமொன்று எடுக்க சொன்னார். ”அச்சச்சோ தெரிஞ்சிருந்தா பெரிய கேமரா எடுத்துட்டு வந்திருப்பேனே” என்றார் ஜாக்கி ////////////


ஹா ஹா ஹா ஹா

மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி !

அறிவிலி on March 29, 2010 at 7:15 PM said...

:-)

அதிலை on March 29, 2010 at 7:27 PM said...

திருநெல்வேலி உங்கள என்ன பண்ணுச்சு?

V.Radhakrishnan on March 29, 2010 at 7:31 PM said...

அடிச்சவங்க கைதான் வலிக்குதாம்

வெண்பூ on March 31, 2010 at 9:12 AM said...

சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் on March 31, 2010 at 10:06 PM said...

படிச்சாச்சு.

விக்னேஷ்வரி on April 9, 2010 at 12:40 PM said...

உங்களை எல்லாருமா சேர்ந்து கும்மாம விட்டாங்களே...

 

all rights reserved to www.karkibava.com