Mar 26, 2010

ஊத்திக்கோ ஸ்பெஷல்


 

   ஒரு நாள் வெளியே சென்று வந்த களைப்பில் இருந்தாrர்கள் என் அம்மாவும், பப்லு அம்மாவும். நான் டிஃபன் செய்றேன்ம்மா என்று கிளம்பினான் பப்லு. சிறுது நேரத்தில் திரும்பி வந்து ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைத்தான். (என் முன்னாடி இல்லப்பா) “ஏன் மம்மி தோசை ஊத்துறதுன்னு சொல்றாங்க? தோசை மாவு ஊத்தறுதுன்னு தானே சொல்லனும்?”.  நமக்கு பிறந்தது இவ்ளோ புத்திசாலியான்னு கொஞ்சினார்கள். சரி மம்மி. நான் போய் தோசை மாவு ஊத்தறேன்” என்று சூறாவளி கிளம்பியது. குழந்தைக்கு ஹெல்ப் செய்யுடா தண்டசோறு என்று என்னையும் அனுப்பினார்கள். அங்க போனா….. இருந்த மொத்த மாவையும் தரையில் ஊத்தி வச்சிருந்தான்.  அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் “மம்மிதான் மாவ ஊத்த சொன்னாங்க”

_______________________________

கடைசியா போட்ட புட்டிக்கதையை படிச்சிட்டு நம்ம குஜராத் குமரன் மெயில் அனுப்பினார். அலுவலகத்தில் பின்னூட்டமிட முடியாதாம். அதான் மெயிலாம்.  பதிவைப் படித்து விட்டு ஊ.ஊ.சி சகா என்றார்.  “வி.வி.சி” என்பதே விடுதலை சிறுத்தையா எனக் கேட்ட அறிவாளி நான். அது விழுந்து விழுந்து சிரிப்பது என்பது நான் கேட்டபின் ஒருவர் அப்படி சிரித்த போதுதான் தெரிந்துக் கொண்டேன். இது என்னப்பா புதுசா ஊ. ஊ. சி என்றேன். கையில் காஃபி கப்பை வைத்துக் கொண்டே படித்தாராம். ஆங்காங்கே ஏழு செய்த கலாட்டாவைப் படித்து காபியை கிபோர்டின் மேல் ஊத்தி ஊத்தி சிரித்தாராம். அதுதான் ஊ. ஊ. சி. என்றார். அதுவும் சரிதான். ஏழுவுக்கு ஊத்த ஊத்த நமக்கு சிரிப்புதான்

_____________________________

தோழி அப்டேட்ஸ் படிச்சு இருக்கிங்க இல்ல?  நீண்ட நாள் கழித்து ட்விட்டரில் ஒரு தோழி அப்டேட் போட்டேன். “உன் பிரிவில் உன்னிடத்தில தான் பேச முடியவில்லை. ஆனால் அனைவரிடமும் உன்னைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை # தோழி பறந்து போச்சு”.  ஒருவரும் பதில் அளிக்கவில்லை. என்னடா என்றால் ”ஊத்தி முடிய பின் எதற்கு பேச வேண்டும்? கார்க்கியை விடவா நல்ல ஆள் கிடைக்க போறா தோழிக்கு” என்றார் சகா ஒருவர். பொதுவாக ரிலேஷன்ஷிப் ஊத்திக்கிட்டா கூடவே இருந்து ஊத்திக் கொடுக்கும் நண்பர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக தெரிந்தார். புத்திசாலித்தனமாகவும் பேசினார்.  ஆனால் தோழி என்ற ஒன்று கற்பனை என்று நான் சொல்வதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார் என்று தெரியவில்லை.

_________________________________

பிரபுதேவா பற்றிய பேச்சு வந்தது எங்கள் நட்பு வட்டாரத்தில். ஊத்திக்கின்னு கடிச்சுக்கவா படத்தில் ராமாயணத்தை வெகு சிறப்பாக சில நொடிகளிலே காட்டியிருப்பார் பிரபு. அப்போதே இவர் இயக்குனராக ஆவார் என்று நான் சொன்னதை நினைவிருக்கும் வரை மறக்க முடியுமா என்று இப்போது சொன்னான் நண்பன் ஒருவன். பேச்சு வேறு திசைக்கு சென்றது. கடிச்சிக்கிட்டும் ஊத்திகலாம் என்பது டெக்னிக்கலி ராங்காம். ஊத்திக் கொண்ட பின்தான்கடிக்க வேண்டுமாம். ஏன்னு கேட்பதற்குள் அவன் ஊத்திக்  கொண்டு கடித்து மட்டையானதால் கேட்க முடியவில்லை. உங்களுக்கு தெரியுமா?

_____________________________________

அஜித்தின் அடுத்தப்படம் பற்றி ஒரு ஸ்கூப் செய்தி கிடைத்தது. அதை எழுதலாம் என்று தொடங்கியபோது எச்சரிக்கை மணி அடித்தது. ஊத்திக்கோ ஸ்பெஷல் பதிவில் அவரைப் பற்றிய செய்தி போடும் நுண்ணரசியலைக் கண்டிக்கிறேன் என்று கார்த்திக்கோ, ராஜூவோ பின்னூட்டமிட்டுவிட்டால் விழப்போகும் கும்மாங்குத்தையோ வரப்போகும் ஆட்டோவையோ தாங்கக் கூடிய வலிமை இப்போதைக்கு இல்லாததால் அந்த அரிய செய்தி அடுத்த வாரம்..

33 கருத்துக்குத்து:

♠ ராஜு ♠ on March 26, 2010 at 12:20 AM said...

\\”ஊத்தி முடிய பின் எதற்கு பேச வேண்டும்? கார்க்கியை விடவா நல்ல ஆள் கிடைக்க போறா தோழிக்கு”\\

இது நல்லாருக்கே...!

யூ மீன் தட் பிரபுதேவாஆஆஆ..! த டயரடக்கர் ஆஃப் த வில்லு`ஊஊஊ’ மூவி..!

அப்பறம், இன்னிக்கு வையம் முழுவதும் வாங்கிப் போட்டு ”குத்தப்” போகும் இசை வெளியீடு போலவே..!


எப்பிடியோ நல்ல தொடக்கம் போட்டுட்டேன். இனிமே வர்றவங்க வேலைய கரெக்ட்டா பண்ணீருவாங்க..!
:-)

♠ ராஜு ♠ on March 26, 2010 at 12:20 AM said...

இதென்ன,காக்டெய்லின் நீட்சியா அல்லது அதன் வேறு படிமமா..?

சுசி on March 26, 2010 at 12:43 AM said...

// “உன் பிரிவில் உன்னிடத்தில தான் பேச முடியவில்லை. ஆனால் அனைவரிடமும் உன்னைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை //

இத தவிர வேற எதுவும் படிக்க முடியல கார்க்கி..

எப்டித்தான் யோசிக்கிறீங்களோ..

நாங்க கூடத்தான் நம்பல :)))
(மாவ ஊத்தினது பப்லுதானாங்கிறத)

சுசி on March 26, 2010 at 12:49 AM said...

//அந்த அரிய செய்தி அடுத்த வாரம்.//

அப்போ லாரி வந்தாலும் வரலாம்.
அதுக்கு இப்போவே சொல்லி இருக்கலாம்.

தமிழ்ப்பறவை on March 26, 2010 at 12:51 AM said...

செம ஊத்தல்...(நான் பாராட்டுறேன்னு கூட வச்சுக்கலாம்)

ர‌கு on March 26, 2010 at 2:51 AM said...

'உன‌க்கும் என‌க்கும்' போன‌ற‌ காத‌ல் ப‌ட‌ங்க‌ள் எடுத்தாலே, பிர‌புதேவா ந‌ல்ல‌ இய‌க்குன‌ராக‌ வ‌ருவார். "வில்லு - த‌மிழ்ல‌ ஒரு ஜேம்ஸ் பாண்ட் டைப் ப‌ட‌ம்" இது ப‌ட‌ம் ரிலீஸாகுற‌துக்கு முன்னாடி பிர‌புதேவாவே ஒரு பேட்டியில‌ சொன்ன‌து ;))

//ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைத்தான். (என் முன்னாடி இல்லப்பா)//

அறிவுப்பூர்வ‌மான‌ கேள்வின்னு சொல்லிட்டு "(என் முன்னாடி இல்லப்பா)"ன்னு சொல்லியிருக்கீங்க‌ளே..........அப்பாவியா வ‌ள‌ர்ந்துட்டீங்க‌ ச‌கா :)))

Rajalakshmi Pakkirisamy on March 26, 2010 at 3:31 AM said...

தலய பத்தி எழுதாம உங்களால இருக்கவே முடியாதா? :(

டம்பி மேவீ on March 26, 2010 at 5:58 AM said...

"குழந்தைக்கு ஹெல்ப் செய்யுடா தண்டசோறு"

i like it ....

உண்மையில் இதை விட கேவலமாக தான் சொல்லிருப்பாங்க ... கார்க்கி டச் தெரியுது.

(அந்த சோறு எங்கே கிடைக்கும் ??? ஒரு பிளேட் எவ்வளவு ????)


ஏழு போட்ட மொக்கையை படித்து விட்டு நானும் அதே மாதிரி என் ஆபீஸ் ல try பண்ணினேன் ....... இப்பொழுது REFERENCE CHECK பலமாக இருக்கிறது

ர‌கு on March 26, 2010 at 6:12 AM said...

//Rajalakshmi Pakkirisamy said...
தலய பத்தி எழுதாம உங்களால இருக்கவே முடியாதா? :(//


அந்த‌ ப‌த்தியில‌ 'அஜித்'க்கு ப‌தில் 'விஜ‌ய்'ன்னு போட்டு பாருங்க‌, ந‌ல்லாவே பொருந்தும் :)))

Rajalakshmi Pakkirisamy on March 26, 2010 at 8:19 AM said...

//அந்த‌ ப‌த்தியில‌ 'அஜித்'க்கு ப‌தில் 'விஜ‌ய்'ன்னு போட்டு பாருங்க‌, ந‌ல்லாவே பொருந்தும் :)))//

Super :))))))

@ Karki,
இனி தலய பத்தி தப்பா எழுதுனீங்கன்னா ஆட்டோ வராது.. லாரி தான் வரும்...

cheena (சீனா) on March 26, 2010 at 8:29 AM said...

ஊத்தறதப் பத்தி ஒரு முழு இடுகை - அய்யோ - பசங்அக் என்னாமா சிந்திக்கறாங்க

நாய்க்குட்டி மனசு on March 26, 2010 at 10:00 AM said...

ஆனால் தோழி என்ற ஒன்று கற்பனை என்று நான் சொல்வதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார் என்று தெரியவில்லை//

பதிவில இது மட்டும் டகால்டி. அப்படிதானே கார்க்கி ?

Kafil on March 26, 2010 at 10:08 AM said...

sari vidunga karki, Aids awareness pathi Aids vanthavanthaan pesanuma.. kaathal pathi elutha kaathal pannanuma enna..{ settana ore figurayum mokka pottu saagadichittu inga vanthu feelings "Bit"}

Ramyaa on March 26, 2010 at 10:13 AM said...

தினமும் உங்க பதிவ வேலைக்கு வந்த உடனே படிக்கிறேன்.நல்ல பதிவுகள் அனைத்துமே. வாழ்த்துக்கள்.
இன்னைக்கு கொஞ்சம் கெத்து குறைச்சலா தான் இருக்கு :(

கார்க்கி on March 26, 2010 at 10:15 AM said...

ராஜூ, ஆவ்வ்வ்.. நீ அவ்ருவேன்னு தெரியும். ஆனா முதல்லேவா

சுசி, நிஜமாங்க. நான் தண்டசோறுதான். தண்ட தோசை இல்லை. :))

பறவை, ரைட்டு சகா

ரகு, அப்போ வில்லு ஜேம்ஸ்பாண்டு படம் இல்லையா? ஆவ்வ்வ்வ்வ்

மேவீ, நிஜமா ஏழு தொடர படமாக்கினா நீதாம்ப்பா என் சாய்ஸ் :)ராஜி, எழுதக் கூடாதுன்னுதானே அடுத்த வாரம் போஸ்ட்போன் பண்ணியிருக்கேன் :((

ரகு, நல்லா முயற்சி செய்ங்க சகா. புதுசா ஏதாவ்து வ்ரும் :))

ராஜி, ட்ரெயினே வந்தாலும் கலங்கமாட்டோம்.

சீனா அய்யா, நாங்க இந்தியா வல்லரசாக்க போகும் இளைய சண்முகம். ச்சே சமூகம்

நாய்க்குட்டி, அப்பப்ப நீங்க குட்டி மாதிரி பேச மாட்றீங்க.. அமைதி சகா அமைதி

Anbu on March 26, 2010 at 10:30 AM said...

Present sir...

புன்னகை on March 26, 2010 at 10:33 AM said...

//ஆனால் தோழி என்ற ஒன்று கற்பனை என்று நான் சொல்வதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார் என்று தெரியவில்லை.//
மேல.......

நர்சிம் on March 26, 2010 at 11:27 AM said...

சகா..பதிவு ஊத்திக்கல..கலகல ஸ்பெஷல். கலக்கவும்.

பிரியமுடன்...வசந்த் on March 26, 2010 at 12:06 PM said...

//அஜித்தின் அடுத்தப்படம் பற்றி ஒரு ஸ்கூப் செய்தி கிடைத்தது. அதை எழுதலாம் என்று தொடங்கியபோது எச்சரிக்கை மணி அடித்தது. ஊத்திக்கோ ஸ்பெஷல் பதிவில் அவரைப் பற்றிய செய்தி போடும் நுண்ணரசியலைக் கண்டிக்கிறேன் என்று கார்த்திக்கோ, ராஜூவோ பின்னூட்டமிட்டுவிட்டால் விழப்போகும் கும்மாங்குத்தையோ வரப்போகும் ஆட்டோவையோ தாங்கக் கூடிய வலிமை இப்போதைக்கு இல்லாததால் அந்த அரிய செய்தி அடுத்த வாரம்..//

:)))))))))))

நீங்க கலக்குங்க சகா ஆட்டோ லாரி எதுவந்தாலும் அடிச்சு நொறுக்க நாம இருக்கோம்ல....

விக்னேஷ்வரி on March 26, 2010 at 3:42 PM said...

பப்லு உங்களை ஹெல்ப்புக்குக் கூப்பிட்டா ஊத்திக்காம எப்படி இருக்கும்...

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on March 26, 2010 at 5:20 PM said...

:-))

Eagles Place on March 26, 2010 at 7:01 PM said...

ஏழுவ கிரிக்கெட் ஆட சொல்லு தல...

~~Romeo~~ on March 26, 2010 at 7:11 PM said...

அஜித் மேட்டர் மறக்காம எழுதுங்க ..

மறத்தமிழன் on March 26, 2010 at 8:07 PM said...

கார்க்கி,

நல்லாத்தான் கலக்கியிருக்கீங்க...

Rathi on March 26, 2010 at 9:43 PM said...

கார்க்கி,

அவ்வப்போது மனம் பாரமாகிப்போகும் போது சிரிக்க என்று உங்கள் பதிவில் ஒதுங்குவேன். இன்றும் அப்படித்தான் வந்தேன். மனம் லேசாகிப்போனது. COOL!!

கார்க்கி on March 27, 2010 at 10:30 AM said...

அனைவருக்கும் நன்றி

//அவ்வப்போது மனம் பாரமாகிப்போகும் போது சிரிக்க என்று உங்கள் பதிவில் ஒதுங்குவேன்//

ரதி, இதை விட வேறு என்ன பெரிய சந்தோஷம் இருக்க போகிறது எனக்கு? நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் on March 27, 2010 at 10:36 AM said...

சுவாரசியம்.

ராஜன் on March 27, 2010 at 10:52 AM said...

// அஜித்தின் அடுத்தப்படம் பற்றி ஒரு ஸ்கூப் செய்தி கிடைத்தது. அதை எழுதலாம் என்று தொடங்கியபோது எச்சரிக்கை மணி அடித்தது.//

அது ! தலையத் தொட்டா தமிழ்நாடே அதுரனும் !

ராஜன் on March 27, 2010 at 10:53 AM said...

//அந்த அரிய செய்தி அடுத்த வாரம்...//

கண்ணா நீ தப்பிக்கல ! ஒரு வாரம் தள்ளிப் போட்டுருக்க ! ஹா ஹா ஹா ! ராஜூ அண்ணே ம்ம்ம் கிளப்புங்கள்

Karthik on March 27, 2010 at 2:28 PM said...

அது..!

me the 30th.

RaGhaV on March 27, 2010 at 4:45 PM said...

:-)))

RaGhaV on March 27, 2010 at 4:49 PM said...

//நேற்று ”கப்ப தூக்குறோம் மச்சி” இன்று “கம்முனு தூங்கறோம் மச்சி”//

அப்படி வாங்க வழிக்கு.. ;-)

வெற்றி on March 28, 2010 at 11:54 AM said...

பதிவு நல்லா இருக்கு..பட் ஊத்திகிச்சு போலயே சகா..இன்னும் ஹிட்டாகலையே :)

 

all rights reserved to www.karkibava.com