Mar 25, 2010

சோமபானமும் கலைஞரின் பாராட்டு விழாவும்


 

மொக்கைவர்மனின் பால் தீராத அன்பு கொண்ட சிலர் “எங்கய்யா போனாரு எங்க மன்னரும், மங்குனி அமைச்சரும்” என கேள்வியாய் கேட்கிறார்கள். ஏழுவ மட்டும் கூட்டிட்டு வந்துட்ட என்ற உபதொல்லை வேறு. விஷயம் இதுதான். அடுத்த மொக்கைவர்ம பாகத்தின் கதைப்படி (டைரக்டர் தொணி வருதா?) மன்னரும், அவர்தம் சகாக்களும் ஒன்றாக அமர்ந்து குடிக்கிறார்கள். கதைப்படி ஆரம்பிக்கும்போது அவர்கள் சியர்ஸ் சொல்ல வேண்டும். அங்கதான் கதையில் ட்விஸ்ட் வருகிறது. ஆனால் மன்னர்காலத்தில் ஏது சியர்ஸ்? அப்படியென்றால் அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேண்டுமே? அந்த வார்த்தைக் குறித்த ஆராய்ச்சியாலே மன்னர் வர தாமதமாகிறது.

போகட்டும். இப்போது நாம் ஆராய்ச்சிக்கு வருவோம். ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் முன்னோர்கள் என்ன வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் என சில மூத்த, இளைய, புதிய, பழைய, பிரபல, பிராப்ள, சின்ன, பெரிய, லோக்கல், ஐ.எஸ்.டி , புக் போட்டவங்க, போடாதவங்க என எல்லோரையும் கேட்டேன். பல ஆச்சரிய பதில்கள் கிடைத்தன. ஒரு அன்பர் சொல்கிறார், சியர்ஸ் என்பதே சரக்கு சரியா ஊத்தியிருக்கானா.. அளவு கரீக்ட்டா என்பதை சோதிக்கவே சொல்லப்படுகிறதாம். ஆர்யா முதல் நித்யா வரை தமிழர்கள் அடுத்தவனை கண்மூடித்தனமாக நம்பியே மோசம் போகும் ஆசாமிகள் என்பதால் சியர்ஸ்க்கு வேலை இருந்திருக்காது என்கிறார். ம்ம்

cheers

அடுத்த பதிவர் இன்னும் விவ”ரம்”. அந்தக் காலத்தில் மண்பாண்டங்கள் அல்லவா உபயோகித்தார்கள். அதை மோதிக்கொள்ளும்போது உடைந்து விடாதா? அப்படி உடைந்த பாண்டங்கள் இருந்திருந்தால் “குற்றம். நடந்தது என்ன? நிகழ்ச்சியில் அதை தோண்டி போட்டிருக்க மாட்டார்களா என்று வினவினார். (அவங்க இல்லப்பா) அதனால் அந்தப் பழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவரது கருத்து.

அவரது கருத்தைக் கேட்டபின் இன்னொரு கேள்வியும் நம் ஆராய்ச்சியில் சேர்ந்துக் கொண்டது. ஆதி தமிழன் (அய்.ரெண்டுமே தள படம்) எதில் குடித்திருப்பான்? வட்டிலா, கலசமா, குவளையா, ஓலையா? நம் ஆராய்ச்சித் தாளில் இன்னொரு கேள்வியைக் கூட்டிக் கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அடுத்த பதிவர் பதில் தெரியாது என்று சொல்ல கூச்சப்பட்டு எதிர்கேள்வி கேட்டார். “உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் கேள்வி தோணுது?”. இதன் மூலம் தன்னை கவுண்டராகவும், என்னை செந்திலாகவும் ஆக்க முயலும் நுண்ணரசியல் புரிந்து நான் விலகிவிட்டாலும், இவ்வுலகிற்கு இந்தக் கேள்வி தோன்றிய வரலாற்றை சொல்லாவிட்டால் நான் நிஜ செந்திலாகும் அபாயம் இருப்பதால் இன்னொரு பத்தியை சேர்த்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்கள் எல்லாம் குடித்துவிட்டு கல்கி ஆசிரம பக்தர்கள் போல் மிதக்கும் வேளையில் நான் மட்டும் பியர் ஊறிய சிக்கனையும், ரம் ஏறிய கடலையையும், விஸ்கி வாசனை மட்டனையும் கொறித்துக் கொண்டிருந்தால் ஏன் தோன்றாது? அடுத்த புத்தாண்டு வருவதற்கு இன்னும் 9 மாதம் இருக்கிறது. இல்லையெனில் இனி சைட் டிஷ் சாப்பிடிவதில்லை என்ற உறுதிமொழியையாவது எடுத்து விடுவேன். இதுவும் போகட்டும். நாம் ஆராய்ச்சிக்கு வருவோம்.

பதிலே கிடைக்காமல் ஆராய்ச்சி இன்னமும் அங்காடித் தெரு படம் போல ஆகிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் இவைதான்

"CHEERS என்பதற்கு இணையான தூய தமிழ்ச்சொல் என்ன இருக்கிறது? (கூட்டாக தண்ணியடிக்கும்போது தமிழர் பயன்படுத்திய வார்த்தை)"

தமிழர் கூட்டாக தண்ணியடித்தார்களா?

அப்படி தண்ணியடிக்கும்போது தங்கள் பாத்திரங்களை மோதிக்கொண்டார்களா?

தமிழர்கள் எதில் மதுவைக் குடித்தார்கள்? (கலசமா?, வட்டிலா? )

- இவையெல்லாம் துணைக்கேள்விகள்

இதற்கு சரியான பதில்கள் தரும் அறிஞர்களுக்கு செம்மொழி மாநாட்டில் கலைஞர் கையால ஒரு குவாட்டரோ, ஃபுல்லோ பரிசாகக் கிடைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறேன். யோசித்து பாருங்கள். ஹலோ அதுக்கு எதுக்கு மேல பார்க்கறீங்க? செம்மொழி என்று மார்தட்டும் வேளையில் சியர்ஸுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லையென்பது எவ்வளவு வேதனையான விஷயம்? கண்டுபிடியுங்கள்

எப்படியும் நம் மக்கள் இதற்கு சரியான பதத்தை கண்டு பிடித்துவிடுவார்கள். அது எனக்கு கவலையில்லை. என் ஒரே கவலையெல்லாம் அப்படி கண்டுபிடிக்கப்போகும் அறிஞருக்கு ஒரு குவார்ட்டரோ, ஃபுல்லோ தரப்போகும் கலைஞருக்கு “செம்மொழியின் குடிகாத்த செங்குடியறிஞர்'” என்று பட்டமளித்து யாராவது பாராட்டு விழா நடத்திவிடுவார்களோ என்பதே. :(

பி.கு : மேலே இருக்கும் படத்திற்கு குசும்பன் சொன்ன கமெண்ட்

   “ஸ்டாலினும் அழகிரியும் இப்படி ஒன்னா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்”

27 கருத்துக்குத்து:

நாய்க்குட்டி மனசு on March 25, 2010 at 11:00 AM said...

அடடா ! நான் முதலாவதா?

நாய்க்குட்டி மனசு on March 25, 2010 at 11:02 AM said...

இந்த மன்னரின் நாட்டு 'குடி' மக்கள் ரொம்ப மகிழ்ச்சியானவர்களாய் இருப்பார்கள்னு நினைக்கிறேன். எதெதுக்கு தான் ஆராய்ச்சினு கிடையாதா?

பாபு on March 25, 2010 at 11:07 AM said...

"குடி ஓங்குக"

இப்படி சொன்னால் குடியை சொன்ன மாதிரியும் இருக்கும் , மக்களை சொன்ன மாதிரியும் இருக்கும்

Karthik on March 25, 2010 at 11:19 AM said...

சியர்ஸ் என்ற பழந்தமிழ்ச் சொல்லை ஆங்கிலப்பதம் என்று தவறான கருத்தியலை மிகச் சாமர்த்தியமாக முன்வைக்கும் கார்க்கியை வன்மையாக கண்டிக்கிறேன். எல்லாமே இங்கிருந்து போனதுதான் ஐயா. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...

தாரணி பிரியா on March 25, 2010 at 12:17 PM said...

contact ஆயிரத்தில் ஒருவன் டீம் :)

தராசு on March 25, 2010 at 12:49 PM said...

//ஆதி தமிழன் (அய்.ரெண்டுமே தள படம்) எதில் குடித்திருப்பான்? //

நம்ம ஆதி, தமிழன் தான். அப்ப அவர் கிட்டயே கேக்க வேண்டியதுதானே,

தல ஆதி, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

ரிஷி on March 25, 2010 at 12:51 PM said...

சோம் சோம் !!!


இதுவே பின்னர் மருவி சோம பானம் ஆகீருக்குமோ???

:)

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on March 25, 2010 at 1:02 PM said...

அந்த காலத்தில் கள்ளு கோட்டையில்(பனை ஓலையால் செய்யப்படும் ஒரு பாத்திரம் மாதிரி) தான் குடித்திருப்பார்கள்.
அதில் கள்ளை ஊற்றியவுடன், எங்காவது ஒரு ஓட்டையில் ஒழுகும். அப்படி ஒழுகும்போது அவசரமாக குடிக்கும் முயற்சியில் "சியர்ஸ்" சொல்லி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on March 25, 2010 at 1:04 PM said...

கலைஞர் கையால ஒரு குவாட்டரோ, ஃபுல்லோ உனக்கு கன்பார்ம்டா சம்பத்து..

taaru on March 25, 2010 at 2:01 PM said...

எங்க ஊர்ல அந்த காலத்துல இருந்தே சாராயம் குடிச்ச ஒரு பெருசுகிட்ட கேட்டோம்ல...சியர்ஸ் சொல்ல வாய்ப்பே இல்லையாம்... கள்ளு மொந்தைய அப்பிடியே எறக்கி குடிச்சுருப்பாய்ங்க.. "என் பங்க கொடு"ன்னு சண்ட வேணும்னா வந்திருக்கும்னு... சொல்றாரு..so.. கலைஞர் கையால கால் கண்ணாடி [quarter bottle] எனக்கே... [இதுக்கு அந்த பெருசு ஒரு பாட்டே பாடி காமிச்சாரு..நீங்க விருப்பபட்டா அத அடுத்த கமெண்ட்ல போடுறேன்]

mythees on March 25, 2010 at 2:08 PM said...

//சியர்ஸுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லையென்பது எவ்வளவு வேதனையான விஷயம்? //

ஏய்யா இப்புடி மொக்க போடறிங்க

பார்த்தசாரதி... on March 25, 2010 at 3:37 PM said...

சியர்ஸ்

பார்த்தசாரதி... on March 25, 2010 at 3:37 PM said...
This comment has been removed by the author.
சுசி on March 25, 2010 at 3:58 PM said...

உங்கள ஒண்ணும் சொல்ல முடியாது கார்க்கி..
//மொக்கைவர்மனின் பால் தீராத அன்பு கொண்ட சிலர்//
அவங்கள சொ(கொ)ல்லணும்..

கிரைண்டர் கார்க்கிங்கிரத மறுபடி நிரூபிச்சிட்டீங்க.. :))

அவருக்கு நடத்துறாங்களோ இல்லையோ //“செம்மொழியின் குடிகாத்த செங்குடியறிஞர்'” // இமேஜ டாமேஜ் பண்ணதுக்கு உங்களுக்கு நடத்துவாங்க :)))

திவ்யாஹரி on March 25, 2010 at 5:44 PM said...

“செம்மொழியின் குடிகாத்த செங்குடியறிஞர்'” என்று பட்டமளித்து யாராவது பாராட்டு விழா நடத்திவிடுவார்களோ என்பதே.

செஞ்சாலும் செய்வாங்க..

கார்க்கி on March 25, 2010 at 5:47 PM said...

நாய்க்குட்டி, தடை போடாதிங்க பாஸ்> ஒரு நாள் உலகமே மெச்சும்படி ஏதாவ்து கேட்போம் பாருங்க.

பாபு, மப்புல யாராவ்து நாக்கு குழறி பேசுனா ஏடாகூடமா ஆயிடற மாதிரி இருக்கு சகா. வேற வேற வேற

கார்த்திக், எப்போ ஹேக் பண்ணாங்க உன் ஐடிய?

தா.பி. போஸ்ட்ட டெலீட் செஞ்சிடவா?

தராசு, அவரு வர மாட்டாரு. வரவே மாட்டாரு

ரிஷி, ஹிஹிஹிஹி

நீ சம்பத் இல்லப்பா, சமத்து.. வெரிகுட் :))

டாரு, கதையை எடுத்து விடுங்க.. ஆனா அந்த பெருச எங்க பார்த்திங்க? பாத்ரூம் கண்ணாடிலதானே?

மைதீஸ், பதில் சொல்லனாலும் பரவாயில்ல சகா. ஆனா இப்படி டிஸ்கரேஜ் பண்ணாதிங்க

பார்த்தா, சியர்ஸ் சகா. ஹைதல உங்ககூட சியர்ஸ் சொல்ர பாக்கியத்த இழந்துட்டேன் :((

சுசி, என்னையே டேமேஜ் செய்றீங்களா? இருங்க..

வெற்றி on March 25, 2010 at 8:01 PM said...

:)))

Kafil on March 25, 2010 at 8:10 PM said...

naanga thanni adikkumpothu

"magilchi" apdinnu solluvom..

விக்னேஷ்வரி on March 25, 2010 at 8:15 PM said...

யப்பா.. எப்படிப்பா இப்படி ஈவு, இரக்கமே இல்லாம மொக்கை போடுற.. சீரியஸா படிக்கணுமா, சிரிச்சிக்கிட்டே படிக்கணுமான்னு தெரியாம ஒரு மார்க்கமாவே வாசிச்சேன்.

கும்க்கி on March 25, 2010 at 9:29 PM said...

தம்பி நீ ஏடிஎம்கே தானே.,
உன் அட்ரெஸ் சொல்லு....

கும்க்கி on March 25, 2010 at 9:30 PM said...

அப்படீங்கற கேள்வி இன்னும் வரலையா...?

smart on March 25, 2010 at 11:26 PM said...

நல்லாயிருக்கு நண்பா

கார்க்கி on March 26, 2010 at 12:11 AM said...

நன்றி வெற்றி

நன்றி காஃபில்

விக்கி, இந்தப் பதிவுக்கு கிடைத்த அதிகபட்ச பாராட்டாக இதை எடுத்துக் கொள்கிறேன் :))

கும்க்கியண்ணே, ஏன் ஏன் ஏன் ஏன்

நன்றி ஸ்மார்ட்

யாசவி on March 26, 2010 at 11:13 AM said...

karki,

seriously we don't have something like this

English - Cheers

Vietnam - Yow

Korea - Chik mung

Japan, thai , china all they have during drinking.

This is true.

யாசவி on March 26, 2010 at 11:13 AM said...

Nice one

ஆதிமூலகிருஷ்ணன் on March 27, 2010 at 10:39 AM said...

இதுமாதிரியெல்லாம் உக்காந்து சிந்திக்க உன்னாலதான் முடியும். ஆனா எதற்கெடுத்தாலும் கலைஞரை வம்பிழுப்பதற்கு என்ன் செய்யலாம் என்றுதான் யோசிச்சிகிட்டிருக்கேன்.

சங்கீதன் on May 1, 2010 at 8:45 AM said...

"சப்பி சாப்பிடு மச்சி" - இது ஒர்க் அவுட் ஆகுமா?

பி. கு.: இது நம்ப நட்பு வட்டத்துல எல்லா சந்தோசமான விசயத்துக்கும் புழங்கற வாக்கியம்.. :)

 

all rights reserved to www.karkibava.com