Mar 19, 2010

நான் நான் தான்


 

   தன் வயதையொத்த சிறுவர்கள் எல்லாம் புழுதியில் புரண்டு சடுகுடு ஆடிக்கொண்டிருக்க பாபு மட்டும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான். பன்னிரெண்டு வயதில் யாருக்கும் இயல்பாய் வராத பயம் பாபுவிற்கு வந்தது.அடுத்து வாழ்க்கைகயில் என்ன செய்யப் போகிறோம் என்ற தீவிர சிந்தனையில் இருந்தான்.பச்சாதாபமற்ற இவ்வுலகை எப்படி எதிர்கொள்வது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் அம்மா, மாமா மற்றும் மாமன் மகள் இந்து மட்டும்தான்.இன்று அவர்களை விட்டு வெகுதூரம் தள்ளி வந்துவிட்டான் பாபு.

         விளையாடிக்கொண்டிருந்த சிறுவனில் ஒருவன் இவனருகில் வந்து "யார் நீ?" என்றான்.

      "பாபு" என்ற ஒற்றை வார்த்தை பதிலை வெகு நேர யோசனைக்குப் பின் சொன்னான்.

       "இதுக்கு முன்னால ஒன்ன பார்த்தது இல்லையே.யார் வீடு" என்று தொல்லையை தொடர்ந்தான் அவன்.

      "நான் ஊருக்கு புதுசு"

     "புதுசுன்னா தனியாவா வருவாங்க.யார் கூட வந்த?உன் அம்மா அப்பா இல்லை"

      "த‌னியாத்தான் வந்தேன்.என‌க்கு இங்க‌ யாரையும் தெரியாது" என்றான் பாபு.

  ஏதொ ப‌ட‌மெடுத்த‌ நாக‌த்தை க‌ண்ட‌து போல் ப‌ய‌ந்து ஓடினான் அவ‌ன்.ஓடிய‌வ‌ன் த‌ன் ச‌காக்க‌ளிட‌ம் இவ‌னைப் ப‌ற்றி சொல்வ‌தை எந்த‌ ச‌ல‌ன‌முமின்றி பார்த்துக் கொண்டிருந்தான் பாபு.விளையாடுவ‌தை நிறுத்திவிட்டு இவ‌னை நோக்கி எல்லோரும் வ‌ந்தார்க‌ள்.வ‌ந்த‌வ‌ர்க‌ள் அவ‌னை சூழ்ந்து கொண்டு சிரிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் முழித்தான் பாபு.

     "ஒனக்கு வீடே இல்லையா?" என்றான் ஒருவன்.இவன் இல்லை என்பது போல் தலையாட்ட சிரிப்பு பலமானது.

       "நீ யாருன்னு உனக்கே தெரியாதா?" என்ற அடுத்தவனின் கேள்வி இவனை நிலைத் தடுமாற செய்தது.இவன் முழிப்பதைக் கண்ட அவர்களின் சிரிப்பொலி இன்னும் சத்தமானது.அடுத்தடுத்து அவர்கள் கேட்பதும் இவன் முழிப்பதும் அவர்கள் இன்னும் பலமாக சிரிப்பதும் பாபுவை அசிங்கப்பட வைத்தது.சாரிடான் விளம்பரத்தில் வருவதைப் போல் பயங்கர உருவம் கண்ட பலர் இவன் தலைக்குள் அடிப்பதும் சிரிப்பதும் போல் உணர்ந்தான். வெறுப்பும் கோபமும் அவனுள் தோன்றியது.என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து ஒருவனின் தலையில் ஓங்கி அடித்தான். பறவைகள் கூட்டமாக பறக்கும்போது ஒரு பறவை மட்டும் வேடனின் குண்டுக்கு இரையாகினால் அக்கூட்டம் எப்படி சிதறுமோ அதுப்போல் ஆளுக்கொருப்பக்கம் தலைத்தெறிக்க ஓடினார்கள்.ஒரு கணம் பேயறைந்தது போல் நின்ற பாபு அவர்கள் ஒடுவதைக் கணடு புன்னகைத்தான்.மெல்லிய புன்னகை மெல்ல சிரிப்பாக மாறியது.வெகு தூரம் ஓடிய பின் ஒருவன் பாபுவைத் திரும்பிப் பார்த்தான்.செங்கல்லை இன்னமும் அவன் கையில் இருப்பதைக் கண்ட அவன் வேகத்தைக் கூட்டி ஓடத் தொடங்கினான். இதைப் பார்த்த பாபுவிற்கு உற்சாகம் தலைக்கேறியது.சத்தம் போட்டு சிரிக்க தொடங்கினான்.அவர்கள் அனைவரது மொத்த சத்தத்தை விட அதிக சத்தம் வேண்டுமென்று இன்னும் பலமாய் சிரிக்கத் தொடங்கினான் பாபு.

       சிறிது தூரத்தில் அடிவாங்கிய சிறுவனின் நண்பன் ஒருவன் இருவது வயது மதிக்கதக்க இரு வாலிபர்களோடு இவனை வழி மறித்தான்.பாபுவின் கையில் இன்னமும் அந்த செங்கல்லை கண்ட அவன் ஒரு வித பயத்துடனே இவன்தான் என்று கைக்காட்டினான்.

    "யார்ரா நீ?எதுக்கு அவன அடிச்ச?" என்றான் ஒருவன்.மறுபடியும் "யார் நீ?" என்ற கேள்வி பாபுவைக் கலவரப்படுத்தியது.

     "பாபு" என்றான் சன்னமான குரலில்.

     "பாபுன்னா பாரத பிரதமரா? யாருன்னு ஒழுங்கா சொல்லுடா.உங்க அப்பா எங்க இருக்காருனு சொல்லு" என் மிரட்டினான் இன்னொருவன்.மீண்டும் அதே கேள்வி அவனுக்கு வெறுப்பை தந்தது.

     "பாபுன்னு சொல்றேன் இல்ல.அப்புறம் யார் யார்னு கேட்டா என்ன சொல்றது" என்றான் சற்று சத்தமாக.இதை சொல்லும்போதே சற்று பெருமையாகவும் சந்தோசமாகவும் உணர்ந்தான்.

      "ஒழுங்கா பதில் சொல்லுடா பொடிப்பையா" என்ற படி அவனை அடிக்க எத்தனித்தான் ஒருவன்.சிங்கத்திடம் சிக்கிய மானின் கடைசிப் போராட்டத்தைப் போல அவனையும் செங்கல்லால் அடிக்க முயன்றான்.லாவகமாக இவன் கையை முறுக்கி முதுகில் குத்தினான்.வலித்தாங்காமல் கத்தினான் பாபு."சொல்லு,நீ யாருன்னு சொல்லு" என்றபடி அடிப்பதை தொடர்ந்தனர் இருவரும்.அவர்கள் அடிப்பதை விட அவர்கள் கேட்கும் "யார் நீ?" என்ற கேள்வியே அவனுக்கு அதிகம் வலித்தது.ஒவ்வொரு அடிக்கும் "நான் பாபுதான்..நான் பாபுதான்" என்று கத்த தொடங்கினான்.வலித்தாங்கி கொண்டு தன் பேர் சொல்வதில் இனம் புரியாத ஒரு வித இனபத்தை கண்டான்.மெல்ல சிரிக்க ஆரம்பித்தான்.இவன் சிரிப்பதைக் கண்டு அவர்கள் வேகமாக அடிக்க தொடங்க, இவனும் "நான் பாபுதான்" என்று சத்தமாய் சிரித்துக் கொண்டே சொன்னான்."பாபுனு நீயே பேர் வச்சிகிட்டியா?உங்க அம்மா அப்பாதானே வச்சாங்க? யாரு அவங்க?எங்க இருக்காங்கனு சொல்றா..அது வரைக்கும் உன்ன விட மாட்டோம்" என்று அவர்களும் அடிப்பதை நிறுத்தவில்லை.

       அவர்கள் அதை சொன்ன போது, அவன் பேரும் அவனுக்கு சொந்தமில்லை.அவன் அப்பா வைத்தது என நினைத்தான் பாபு.இப்போது அவனுக்கு "நான் பாபு தான் " என்று கத்த மனம் வரவில்லை.. " நான் நான் " என இழுத்தான்.அவர்களும் அடிப்பதை நிறுத்த இவன் என்ன சொல்வது எனத் தெரியாமல் "நான் நான் " என்று அழத் தொடங்கினான்.இவனது விசித்திர குண‌த்தைக் கண்ட அவர்களும் அப்படியே விட்டுவிட்டு போய்விட்டார்கள்.முதுகை விட அவனுக்கு மனசு வலித்தது.அவன் அம்மா இவனை எரிச்சலுடன் "டேய் பாபு" "பாபு நாய" என்று அழைத்ததை எண்ணினான்.இப்போது அவனுக்கு பாபு என்ற பேரே பிடிக்காமல் போனது.. நான்.. நான்.. பாபு.. இல்ல.." என்று முனகி கொண்டே கீழே சரிந்தான்.இமைகள் மெல்ல மூடத் தொடங்கின.உதடுகள் மட்டும் "நான் பாபு இல்ல" என்று முனகி கொன்டிருந்தது.

    அப்படியே மயக்குமுற்ற அவனின் உள்மனதில் அவனின் சிறுவயது ஞாபகங்கள் ஓடத் தொடங்கியது. மூன்றாவது படிக்கும் போது இவன் அப்பா வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போனது, அதன் பின் எல்லோரும் இவன் அப்பவின் செய்கையாலே அடையாளம் கண்டது, அவர் செய்த தவறு என்னவென்று அறியா வயதிலே அவர் மீதான வெறுப்பு, முதலில் பாசமாக இருந்த அம்மாவும் நாள‌டைவில் எரிச்சலுற்றது, இந்து அவனுக்கு நல்ல சாப்பாடு கொடுத்தாள் என்பதற்காக அவன் மாமா அவளுக்கு உதையும்,இவனுக்கு சூடும் போட்டது என எல்லாம் அவன் மனத் திரையில் மங்கலாக ஓடியது.தான் உண்மையாக சிரித்த நாள் அவன் நினைவில் இல்லவே இல்லை.உச்சகட்ட காட்சியாக ,ஆந்திராவிற்கு வேலை செய்ய இவன் அம்மாவும் மாமாவும் இவனை முரட்டு மீசைக்காரனிடம் விலை பேசியதை கண்டு லாரி ஏறி இந்த ஊருக்கு ஓடி வந்த காட்சியோடு முடிந்தது.

       நினைவு வந்து கண் திற‌ந்து பார்த்தான்.எதிரே ஒரு போலிஸ் நின்று கொண்டிருந்தார். இவன் கண் திறந்ததைக் கண்டவுடன் கையில் ஒரு பேப்பருடன் வந்த அவர் " யார்ரா நீ?உன் பேரென்ன?" என மிரட்டினார்.கண்விழித்த அடுத்த நொடியே அதே கேள்வியை எதிர் கொண்ட அவனுக்கு,அப்படியே கண் மூடியே போயிருக்கலாமென்று தோண்றியது.இந்த முறை கேட்டவர் போலிஸ் என்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தான்.அப்போது அங்கே வந்த டாக்டர் போலிஸை கடிந்து கொண்டு வெளியே இருக்குமாறு சொன்னார். அருகில் வந்த டாக்டர் "தம்பி பயப்படாதே.நான் இருக்கிறேன்" என்றார்.சற்றே ஆறுதலாய் உனர்ந்தான்.அவன் தலையில் கைவைத்து தடவிய அவர் அவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.அதை அவன் குடித்து கீழே வைக்கும்  போதே டாக்டர் அவனிடம் " இப்போ சொல்லுப்பா..யார் நீ?உன் பேரென்ன?" என்றார்.கண் மூடி ஒரு கணம் யோசித்த அவன் தீர்க்கமாக சொன்னான் "நான் நான் தான்..."..சொல்லிவிட்டு மீண்டும் படுத்தான்.அவன் கண்கள் மெல்ல மூடத் தொடங்கியது

_______________________________

பி.கு: நான் முதன் முதலாக எழுதிய கதை. ஏனோ மீண்டும் படித்த போது மீள்பதிவிட தூண்டியது.

25 கருத்துக்குத்து:

Chitra on March 19, 2010 at 10:10 AM said...

நல்ல கதை. வாழ்த்துக்கள்.

Chitra on March 19, 2010 at 10:15 AM said...

மனதை நெகிழ வைக்கும் உணர்வுகள் கொண்ட கதையெல்லாம் எழுதி இருக்கீங்களே!

நாய்க்குட்டி மனசு on March 19, 2010 at 10:18 AM said...

இளமையில் ஏற்படும் காயம் ஆறாத உள் காயமாக ஆகிவிடும்.
சிலருக்கு மட்டும் அந்த சோகம் நிகழ்ந்து விடுகிறது. அதை உணர்வதே பெரிய விஷயம். பாராட்டுக்கள் அதை முதல் கதைக்கு கருவாய் எடுத்ததற்கு.

Anonymous said...

நல்லா இருக்கு.

தராசு on March 19, 2010 at 10:57 AM said...

கார்க்கி கார்க்கி தான்

ராஜன் on March 19, 2010 at 10:57 AM said...

ஸ்மைலி !

rajesh on March 19, 2010 at 12:44 PM said...

இந்த பாதையிலே சென்றிருந்தால் நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கும். பிறருக்காக மாறுவதாக சொல்லி தேவையில்லாமல் மொக்கையில் உங்களை அழித்துக் கொண்டீர்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும் . இனியாவது இந்த கதை, முருகன் தருவான், முரண் போல எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on March 19, 2010 at 12:57 PM said...

நல்லா இருக்கு கார்க்கி..:))

பாபு on March 19, 2010 at 1:49 PM said...

ஸ்மைலி !

Yalini on March 19, 2010 at 1:51 PM said...

நன்றி கார்க்கி :)))

தாரணி பிரியா on March 19, 2010 at 2:32 PM said...

எனக்கு பிடித்த பதிவுகளில் இதுவும் ஒண்ணு :)

விக்னேஷ்வரி on March 19, 2010 at 2:33 PM said...

கதைக்கரு நல்லா இருக்கு. கதையின் நடை இன்னும் முயற்சி பண்ணுங்க கார்க்கி.

யுவகிருஷ்ணா on March 19, 2010 at 2:55 PM said...

இயல்பா வந்திருக்கு கார்க்கி! எனக்குப் பிடிச்சிருக்கு.

//போல, போல்//

மாதிரியான உவமானங்களை தவிர்த்து விட்டால் நன்றாக இருக்கும்.

எழுதுபவனை விட வாசகன் புத்திசாலி. நாம் என்ன சொல்ல வருகிறோமென்று நம்மைவிட அவனுக்கு தெளிவு அதிகம் என்று நினைக்கிறேன்.

நான் சுட்டிக்காட்டுவது குறையல்ல. பகிர்வு.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on March 19, 2010 at 3:17 PM said...

நல்லாருக்கு சகா..

சுசி on March 19, 2010 at 4:30 PM said...

முன்னாடியே படிச்சிருந்தாலும் மறுபடியும் படிக்க நல்லா இருந்துது கார்க்கி :)))

♠ ராஜு ♠ on March 19, 2010 at 8:36 PM said...

லக்கி சொல்றாரு பாருங்க..!
பெத்த ரிப்பிட்டுலு.

ர‌கு on March 20, 2010 at 12:47 AM said...

இன்னும் கொஞ்ச‌ம் அழுத்த‌மாக‌ இருந்திருக்க‌லாம். அப்ப‌டியே ராஜேஷ் பின்னூட்ட‌த்தை, மைண்ட்ல‌யோ, கிட்னில‌யோ, லிவ‌ர்ல‌யோ.....எங்கேயாவ‌து வெச்சுக்குங்க‌ ச‌கா :)

வெறுமை on March 21, 2010 at 11:47 AM said...
This comment has been removed by the author.
SanjaiGandhi™ on March 21, 2010 at 11:11 PM said...

//வாழ்வின் கதவுகள் அடைபட்டாலும் சாளரம் வழியே காற்று வரத்தான் செய்யும்//

எச்சுச்மி டியர் கார்க்கி, ஒருத்தர் இப்டி தான் கதவ தொற காத்து வரட்டும்னு சொல்லிட்டு இருந்தார்.. காத்தோட சேர்ந்து மேமராவும் உள்ள போய்டிச்சி.. பார்த்துக்கோங்க பாஸ்.. சாளரத்தின் வழியே கேமராவும் வந்துடப் போகுது :)))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on March 21, 2010 at 11:31 PM said...

நல்ல கதை. அருமையான சிந்தனை !வாழ்த்துக்கள்.

vanila on March 22, 2010 at 8:57 AM said...

என்னமோ தெரியல... மணிரத்னம் உங்கள மாதிரியே இருபத்தஞ்சு வருஷம் முன்னாடி யோசிச்சிருக்கார் பாருங்க.. நாயகன், தளபதி பாத்த மாதிரியே இருந்தது..

ஸ்ரீமதி on March 22, 2010 at 11:53 AM said...

mudiyala :))

Kafil on March 22, 2010 at 5:35 PM said...

rombo nalla irunthuthu nanbare.. neenga "pin" navinathuvathukku pottiya "hook" navinathuva kathaigal eluthunga hit ayiralam..:) just kidding.. but its truely nice

கார்க்கி on March 23, 2010 at 10:46 AM said...

@சஞ்சய்,

கேமரா வந்தாலும் தப்பு இல்ல. நாம என்ன தப்பா செய்றோம்? :))

அனைவருக்கும் நன்றி..

தமிழ்ப்பறவை on March 31, 2010 at 12:17 PM said...

நல்லா இருக்கு சகா...
கதையில அண்டர்லைன், போல்டு லெட்டர்ஸ் எல்லாம் வேணாம் சகா...
அவ்வளவு மோசமா எல்லாம் நம்மாளுங்க கிடையாது...

 

all rights reserved to www.karkibava.com