Mar 16, 2010

பிரபல பதிவர்கள் வீட்டில் ரகசிய கேமரா


 

இன்றைய தேதியில் உலகையே ஆட்டிப் படைக்கும் விஷயம் கேமரா. அதாங்க பென்சில் சைசுல மறைச்சு வைக்கிறாங்களே, அந்த கேமராக்கள். சில “பிரபல” பதிவர்கள் வீட்டில் அதை பொருத்தி வைக்கப்பட்டதில் பதிவான வீடியோக்களின் சாராம்சம் இங்கே. முதலில் ஹிஹிஹி பதிவர்.

பிரபல பதிவர் : ஏம்மா உன் கூட இதே தொல்லையா போச்சு? சொல்றதையே கேட்க மாட்டியா?

தங்கமணி : என்ன ஆச்சு?

பி.ப: வெங்காயம் வெட்ட கத்தி தேடினா காணோம். இங்கதான் வச்சேன். உன்னை யாரு இங்க வந்து இதெல்லாம் எடுக்க சொன்னா?

த.மணி: நான் ஏன் கிச்சனுக்கு எல்லாம் வரப் போறேன்?  கத்தி வேணும்னா கத்தி தான் கேட்பிங்களா?.ஓவரா சத்தம் போடாம பொறுமையா தேடுங்க.கிடைக்கலைன்னா பக்கத்துல உட்கார்ந்து உங்க சிறுகதையை படிச்சு காட்டுங்க. வெங்காயமே அழுதுகிட்டு துண்டாகிடும்.

பி.ப: ஆஹா. என்ன அருமையான வர்ணனை?அவள் கதைக் கேட்டு வெங்காயமே கண்ணீர் விட்டது.

த.ம: முத்திப் போச்சு. இது திருந்தாது.

_______________________________________________________

அடுத்த பிரபல பதிவர்

மொபைல் அலறுகிறது. எடுக்கவா என்று கேட்கிறார் பி.ப.

தங்கமணி: ஃபோனுல பேசிதானே நெத்தில நாமம் போட்டுக்கிட்டிங்க.

பி.ப: அது கார் ஓட்டும் போதும்மா. இப்ப என்ன?

த.ம: இப்ப கூடத்தான் மிக்ஸீ ஓட்டிக்கிட்டு இருக்கிங்க. வெயிட் பண்னுங்க.

அவசரகதியில் சட்னி அரைத்துவிட்டு எடுக்கிறார்

பி.ப: ஹலோ

அடுத்த முனை :*****

பி.ப: சொல்லுங்க. எப்படி இருக்கிங்க? பதிவ படிச்சிங்களா?

அ.மு: *******

பி.ப: அப்படியா? பன்ணிடலாம்.

அ.மு: *****

பி.ப: எங்க வீட்டுல எல்லாமே நான் சொல்றதுதான் முடிவு. (தங்கமணி முறைக்கிறார்) ஆனா என்ன முடிவுன்னு வீட்டுல கேட்டுட்டு சொல்றேனே

அ.மு: *******

பி.ப: ச்சேச்சே . அப்படி இல்லை… இல்லை… அந்தளவுக்கு இல்லை. கொஞ்சம்ன்னு வச்சிக்கிலாம். ஆனா…. ஆமாங்க. அவங்க ஓக்கே சொன்னாதானே வர முடியும்?

__________________________________________________________________________________

இவர் மி.பி.ப. முதல் காட்சியில், அவரது குழந்தை குளித்துவிட்டு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறான். இவரும்.. அட அவசரப்படாதிங்கப்பா.. அவனை அழ வைக்காமல் உடை மாட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

மி.பி.ப: கண்ணா. வா வா வா. டிராயர் மாட்டிக்கலாமா?

குழந்தை: எனக்கு எல்லாம் டிராயர் பத்தாதுப்பா. வேற வேற வேற ஃபேண்ட்டுதாம்ப்பா வேணும்

மி.பி.ப: அப்பாகிட்ட எதிர்த்து பேசக்கூடாதுன்னு சொல்லித்தரலையா உங்க அம்மா?

குழந்தை: சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன்

மி.பி.ப: அப்படியெல்லாம் பேசக்கூடாது செல்லம். பாராதியார் குழந்தைகளுக்கு என்ன சொல்றாருன்னா

குழந்தை: தெரியுமே. பாரதிய படிச்சுப்புட்டா.. பெண்களுக்கு வீரம் வரும்..

மி.பி.ப: டேய். நான் விளக்கம் சொன்னா எல்லோருமே கேட்கிறாங்க. நீ கேட்க மாட்டியா? விஜய் என்ன சொல்றாரு? “அம்மா அப்பாவ வணங்கி பாரு”ன்னுதானே சொல்றாரு

குழந்தை: வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் பாரு வில்லு.

வேறு வழியில்லாமல் குழந்தையோடு டண்டணக்கு ஆட்டம் போடுகிறார் அந்த மி.பி.ப.

______________________________________________________

அடுத்த சிடி விரைவில் வெளியீடு

36 கருத்துக்குத்து:

Ibrahim A on March 16, 2010 at 10:20 AM said...

மிக ரசித்தேன்.....

http://www.rojavinkadhalan.blogspot.com/

புன்னகை on March 16, 2010 at 10:24 AM said...

இதெல்லாம் என்னன்னு கேட்க மாட்டீங்களா ஆதி? ;-)

Anonymous said...

ஆதி, பரிசல் சரி.

மூணாவது பதிவர் வருங்கால ரங்கமணி கார்க்கியா :)

முகிலன் on March 16, 2010 at 10:31 AM said...

ஆதி, பரிசல், நர்சிம்... :))

Busy on March 16, 2010 at 10:45 AM said...

Kalakal Karki..................

சங்கர் on March 16, 2010 at 10:47 AM said...

அப்போ உங்க அப்பா மிக பிரபல பதிவரா :)))

தராசு on March 16, 2010 at 10:48 AM said...

தலைப்புல பிரபல பதிவர்கள்னு சொல்லீட்டு, அப்புறம் என்ன மி.பி.ப ?

இப்படிக்கு,

குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குவோர் சங்கம்.

எம்.எம்.அப்துல்லா on March 16, 2010 at 10:59 AM said...

:)

ஆதிமூலகிருஷ்ணன் on March 16, 2010 at 11:13 AM said...

அவ்வ்வ்வ்.. :-))

கார்க்கி on March 16, 2010 at 11:16 AM said...

நன்றி இப்ராஹிம்

புன்னகை, ஏங்க அவரு கேட்கனும்? நான் என்ன அவரையா கிண்டல் பன்ணியிருக்கேன்?

அம்மிணி, நானா இருந்தா பையனை ஏன் திட்ட போறேன்?

முகிலன், அவங்களுக்கு எல்லாம் இப்போ என்ன சகா?

நன்றி பிசி

சங்கர், ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புங்க

தராசு, மிகவும் பிரபலங்க

அண்ணே, அடுத்த வாரம்தான் உங்க சிடி. வீட்டுக்கு வந்தது எதுக்குன்னு இப்போ தெரியுதா? :))

ஆதி, ஹிஹிஹி

Chitra on March 16, 2010 at 11:22 AM said...

funny one.

நாய்க்குட்டி மனசு on March 16, 2010 at 11:27 AM said...

naanum kandu pidichitten
aathi patri athigam theriyaathathaala konjam doubt but kandu pidichiten

வரதராஜலு .பூ on March 16, 2010 at 11:31 AM said...

கலக்கிட்டிங்க போங்க.

இதிலேயும் தொடர் பதிவா? சரி சரி,
சீக்கிரம் அடுத்த சீடி-ய ரிலீஸ் பண்ணுங்க.

Han!F R!fay on March 16, 2010 at 11:43 AM said...

இங்கும் கேமரா வா......ஹா ஹா ஹா ஹா .....

பாலாஜி on March 16, 2010 at 12:10 PM said...

"ஃபோனுல பேசிதானே நெத்தில நாமம் போட்டுக்கிட்டிங்க."

மிக ரசித்தேன்.....

GHOST on March 16, 2010 at 12:17 PM said...

super next part eppo

KVR on March 16, 2010 at 12:46 PM said...

மூணு பேர் வீட்டிலேயுமே நெசமாவே கேமரா வச்ச மாதிரி இருக்கு :-)

//அவரது குழந்தை குளித்துவிட்டு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறான். இவரும்.. அட அவசரப்படாதிங்கப்பா.. //

:-))))))))))))))))))))))))

இராகவன் நைஜிரியா on March 16, 2010 at 1:20 PM said...

கலக்கல்...

பி.ப வா இருப்பது பிராப்ளம்தான் போலிருக்கு..

விக்னேஷ்வரி on March 16, 2010 at 2:18 PM said...

ஹாஹாஹா... நல்ல காமெடி. பாவம் ஆதி, பரிசல், நர்சிம்.

சீக்கிரமே உங்க வீட்ல கேமரா வெச்சு உங்க தோழி யாருன்னு கண்டுபிடிக்கிறோம்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on March 16, 2010 at 2:46 PM said...

ரைட்டு..:)))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ on March 16, 2010 at 2:53 PM said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

மீண்டும் வருவான் பனித்துளி

Naanmanidhan on March 16, 2010 at 3:04 PM said...

நெறைய பதிவர்கள் வீட்ல அடி விழறது எல்லாம் edit பண்ணிட்டீங்க போல !!அடுத்த வாரம் யாரோ, உஷார் ஆகுங்க பெருமக்களே !

ஜெஸ்வந்தி on March 16, 2010 at 4:42 PM said...

கலக்கல். அந்தக் கமெரா வேறு எங்கெல்லாம் இருக்குமோ! கவனம்.

A Simple Man on March 16, 2010 at 5:42 PM said...

pls visit http://iamverysimple.blogspot.com/
for daily predictions of IPL 2010 matches.
Thanks,
ASM

சுசி on March 16, 2010 at 6:46 PM said...

அடுத்த சிடில அதி பிரபல பதிவர் கார்க்கியோட வீடியோ சாராம்சத்த போடுங்கப்பா..

Rajalakshmi Pakkirisamy on March 16, 2010 at 7:59 PM said...

Super :)

Next Karki veetulaya?

shiva... on March 16, 2010 at 11:03 PM said...

அந்த மீ.பி.ப நீங்க தானே ..???

pappu on March 17, 2010 at 9:45 AM said...

எல்லோரும் நித்தி ரசிகர்களா? கதவைத் திறந்து வைக்கும் போது கேமரா உள்ள உட்டுறதா?

கார்க்கி on March 17, 2010 at 10:16 AM said...

அனைவருக்கும் நன்றி. நன் வீட்டில் நானே கேமிரா செட் செய்ய முடியாது. வேறு யாராவ்து முயற்சி செய்யுங்களேன்

செந்தழல் ரவி on March 17, 2010 at 1:55 PM said...

அல்டிமேட் !!!

நாளும் நலமே விளையட்டும் on March 17, 2010 at 2:59 PM said...

சிரிச்சாலும் அழுகை வரும்ல?
ரொம்ப நல்லா சிரிக்க வச்சீங்க அப்பு.
நீங்க நல்லா இருக்கணும்!

thenammailakshmanan on March 17, 2010 at 8:45 PM said...

:))))))

வெற்றி on March 18, 2010 at 8:51 AM said...
This comment has been removed by the author.
வெற்றி on March 18, 2010 at 8:52 AM said...

மூணாவது பதிவர் கேபிளாரா சகா :))

தமிழ்ப்பறவை on March 18, 2010 at 9:43 PM said...

:-)

பா.ராஜாராம் on April 28, 2010 at 8:42 PM said...

:-))

 

all rights reserved to www.karkibava.com