Mar 14, 2010

தாதாவுக்கு வடை கிட்டுமா? - கார்க்கி


 

    சைடு பாரில் எங்க தாதாவின் புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக அறிகிறேன். இன்னுமா உலகம் நம்புது என்பது போன்ற போன்ற வசனங்களை  குசும்பன் முதல் பலரும் சொல்லி வருவது துரதிர்ஷ்டமே. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஐ.பி.எல் சீசனில் வெல்வார்களா என்றால் நிச்சயம் வெல்வார்கள். எப்படி? இதோ எங்களுக்கு சாதகமான சில புள்ளிகள். அதாங்க பாயிண்ட்ஸ்.

1) முதல் சீசன் சாம்பியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸீன் உடை நீல நிறம். ஆனால் டெக்கான் சார்ஜர்ஸின் நிறம் சாம்பல். அடுத்த சீசனில் நீல நிறத்திற்கு மாறினார்கள் சார்ஜர்ஸ். கோப்பை அவர்கள் வசமானது. கருப்பையே இரண்டு முறை கட்டியழுத நாங்கள், இந்த முறை நீலத்திற்கு(purple தான்) மாறியிருக்கிறோம். கோப்பையை வெல்ல வேற என்ன வேண்டும் சொல்லுங்கள்

2) முதல் சீசன் முடிந்த பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் கடைசி இடத்தில் இருந்தார்கள். இரண்டாம் சீசனில் அவர்கள் கோப்பையை வென்றது வரலாறு. இரண்டாம் சீசனில்  டெக்கான் சார்ஜரின் இடத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிடித்ததை நீங்கள் அறிவீர்கள். அப்படியெனில் இந்த முறை யார் கோப்பையை வெல்வார்கள்? யோசியுங்கள்.

3) அடுத்த சாம்பின்யன்ஸ் நாங்கள் என்பதை குறிக்கும் வகையில் நைட்ரைடர்ஸின் சீருடையில் NEXT என்று அச்சிடப்பட்டிருப்பதை சிலர் கவனித்திருக்கக் கூடும். அது ஏதோ ஒரு எலக்ட்ரானிக் ஸ்டோர்சின் விளம்பரம் என நம்புவது முட்டாள் தனம். Next champions என்பதே அதன் அர்த்தம். Champions எங்கே இருக்கிறது என்று கேட்காதீர்கள். அதை அணியும் எல்லோருமே சாம்பியன்ஸ் தானே?

4) முக்கியமான விஷயம். ஆம். அதேதான். அண்ணன் அகர்கார் அவர்கள் நடந்து முடிந்த இரண்டு மேட்ச்களிலும் ப்ளேயிங் 11ல் இல்லை. எனிதிங் மோர் நீட் டூ சே?

5) அல்டிமேட் காரணம். அட அவர் இல்லைங்க. அவரேதான் அந்த பட்டம் வேணாம்.தல போதும்னு சொல்லிட்டாரே. நான் சொல்ல வந்தது ஆக முக்கியமான காரணம்.  எத்தனை முறை தோற்றாலும் தாதா ஃபேன்ஸ் , ஜெயிப்போம்னு தானே நம்புவோம்? தொடர் தோல்விகள் குறித்து பேசும் போது தல பெயர் வந்தது தற்செயலானது. இதைக் குறிப்பிட்டு பின்னூட்டம் போடுவது போங்கு ஆட்டம் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

_____________________________________-

35 கருத்துக்குத்து:

விக்னேஷ்வரி on March 14, 2010 at 11:03 PM said...

ஒரு குருட்டு நம்பிக்கைல இருக்கீங்க. பார்ப்போம்.

kartin on March 14, 2010 at 11:25 PM said...

next champions!!

thats true...may be next season right!!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on March 14, 2010 at 11:32 PM said...

தாதான்னா தளபதிதானே..:)

வேஸ்ட்டுய்யா..
--

தல போல வருமா..:)

தமிழ் பிரியன் on March 14, 2010 at 11:42 PM said...

நான்காவது பாயிண்ட் தான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.. ;-))

மன்னார்குடி on March 15, 2010 at 12:04 AM said...

இந்த தடவ தாதாவோட fielding-a பாத்தீங்களா? கலக்குறார். கோப்பைய ஜெயிக்கிறாங்களோ இல்லையோ, semi-finals வந்தாலே நல்ல விஷயம் தான். நீங்க சொன்ன மாதிரி அகார்க்கர் இல்லாதது பெரிய பலம் :-). Team Balance கொஞ்சம் நல்லா இருக்கு. முரளி கார்த்திக்கோட பௌலிங் ஒரு பெரிய்ய பிளஸ் பாயிண்ட். நானும் தாதாவோட fan கார்க்கி.

சுசி on March 15, 2010 at 12:13 AM said...

K K R
Karki Knight Rider னும் வருமே..

இது போதாதா அவங்க வெல்ல.. கிங் மேக்கர்??

வெற்றி on March 15, 2010 at 1:09 AM said...

//தொடர் தோல்விகள் குறித்து பேசும் போது தல பெயர் வந்தது தற்செயலானது.//

நம்புறேன் சகா :)

வெற்றி on March 15, 2010 at 1:11 AM said...

//தலை தெறிக்கும் வேகத்தினில் தல'விதி மாறுது.. இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது :))) //

எனி உள்குத்து ?

pappu on March 15, 2010 at 3:14 AM said...

குத்துறதெல்லாம் குத்திபுட்டு வலிக்கலைல மச்சி என கேட்பீர்கள் போல

Anonymous said...

சீரியஸா படிச்சேன். தலைப்பை மறுபடி படிச்சப்பறம்தான் புரிஞ்சுது :)

Rajalakshmi Pakkirisamy on March 15, 2010 at 8:18 AM said...

இந்த முறையும் சார்ஜர்ஸ்க்கு தான் வெற்றி :)

Sundar சுந்தர் on March 15, 2010 at 8:53 AM said...

நல்ல காமெடி!

தராசு on March 15, 2010 at 9:28 AM said...

அதான பார்த்தேன், எங்கடா அந்த 5வது பாயிண்டை டச் பண்ணாம போயிருவிங்களோன்னு பார்த்தேன்.

வரதராஜலு .பூ on March 15, 2010 at 9:51 AM said...

//4) முக்கியமான விஷயம். ஆம். அதேதான். அண்ணன் அகர்கார் அவர்கள் நடந்து முடிந்த இரண்டு மேட்ச்களிலும் ப்ளேயிங் 11ல் இல்லை. எனிதிங் மோர் நீட் டூ சே//

இது நெஜமாவே கொ.க்.ரை. டீமுக்கு பெரிய ப்ளஸ்தான்.

மத்தது எல்லாத்துக்கும் ஒரு :)

Anbu on March 15, 2010 at 9:57 AM said...
This comment has been removed by the author.
Anbu on March 15, 2010 at 9:57 AM said...

\\\குத்துறதெல்லாம் குத்திபுட்டு வலிக்கலைல மச்சி என கேட்பீர்கள் போல\\\

:-)))))))

தாரணி பிரியா on March 15, 2010 at 10:52 AM said...

:)

அன்புடன் அருணா on March 15, 2010 at 11:17 AM said...

ம்ம்ம்..நம்பிக்கைதானே வாழ்க்கை!

Mutharasan Ilango on March 15, 2010 at 11:52 AM said...

it would be interesting to see our state guy G. Vignesh also in ganguly's playing eleven...... that will more more variety and balance in the side... letz see... he can replace rohan gavaskar

Mehar on March 15, 2010 at 2:25 PM said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)

GHOST on March 15, 2010 at 2:53 PM said...

//K K R
Karki Knight Rider னும் வருமே..

இது போதாதா அவங்க வெல்ல.. கிங் மேக்கர்??//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

டம்பி மேவீ on March 15, 2010 at 2:58 PM said...

"தாதாவுக்கு வடை கிட்டுமா? - கார்க்கி"இதில் எதாவது டபுள் மீனிங் இருக்கா ????

Karthick on March 15, 2010 at 3:13 PM said...

Hi,
This is all fine.
In the same lines, Just have a query...
Neelai chokkaai podra team Jeikkumna, namma Indian Team romba kaalama Neela chokkaai than poduraanga...
Appuram enn namma Indian team world cup or any other big tournament ellam jeikka maatraanga..

லேகா on March 15, 2010 at 3:21 PM said...

Only 4th one is acceptable dude!! :-))))))

கார்க்கி on March 15, 2010 at 3:34 PM said...

விக்கி, வாழ்க்கை என்னும் சக்கரமே... சரி விடுங்க

கார்டின், நன்றி சகா. எங்க மேல நம்பிக்கை வச்சு அடுத்த சீசனும் ஜெயிப்பொனு சொன்னதுக்கு :))

ஷங்கர், வேணாம்ம்... தனியா சொல்றேன்

தமிழ்பிரியன், ஹிஹிஹிஹி

மன்னார்குடி, சொன்னா ஒத்துக்க மாட்டங்க பாஸ்.. இந்த தடவ செமிஸ் நிச்சயம்

சுசி, ஆவ்வ்வ்வ்வ்வ்.. யாரங்கே? ஒரு ஜோடி வைர கம்மல்கள் பார்சல்

வெற்றி, நோ குத்து :))

பப்பு, நிஜமா வலிக்கல இல்ல?

அம்மிணி, அதான் இன்னும் லேபிள் போடல.. :))

ராஜி, அல்வா தான். செம அடி வாங்க போறாங்க பாருங்க

சுந்தர், கலவர பூமியில் வந்து காத்து வாங்கறாரு பாருங்க

தராசு, ஹிஹிஹி..

வரதராஜலு, நிஜமாங்க

அன்பு, நன்றி

தா.பி, இருங்க ஏழுமலை சார் கிட்ட சொல்றேன்

டீச்சர், நன்றி

ஆமாம். இளங்கோ. அடுத்த மேட்ச் சென்னையுடன் அவர் ஆடுவார் என நினைக்கிறேன்

கோஸ்ட், எப்படிங்க? வைரக்கம்மல் தருவேன்னு தெரிஞ்சுதானே ரிப்பிட்ட் போட்டிங்க :))

டம்பி மேவீ, இந்த பேருல ஏதாவது டபுள் மீனிங் இருக்கா?

கார்த்திக், அது ஐ.பி.எல்லுக்கு மட்டும் தான் அப்ளிகபிள். அதூவ்ம் மும்பை இண்டியன்ஸ் விதிவிலக்கு :))

லேகா, இது ஒரு காமெடி பதிவு என்பதை நினைவுப்படுத்துகிறேன். :) (சொன்னாதான் தெரியுதுடா கார்க்கி)

டம்பி மேவீ on March 15, 2010 at 3:50 PM said...

@ karki : irukkunga....

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on March 15, 2010 at 4:18 PM said...

//.. தொடர் தோல்விகள் குறித்து பேசும் போது தல பெயர் வந்தது தற்செயலானது ..//

:-D))

Han!F R!fay on March 15, 2010 at 8:16 PM said...

கடைசியா.....தாதா என்ன சொல்லுவார் தெரிமா..

ஆஹா....ஒரு வடை போச்சே...... :-) :-)

Kafil on March 15, 2010 at 9:04 PM said...

kaarki, ungala vechu yaaro "mendal" research panna poraangalaam.... athukulla epdi veliya therinjuthu....

ர‌கு on March 15, 2010 at 9:57 PM said...

ஷாரூக்காக‌ செமி ஃபைன‌ல் வ‌ரைக்கும் வ‌ர‌ணும்

ஆனா க‌ங்குலிக்காக‌ செமி ஃபைன‌ல் வ‌ரைக்கும்தான் வ‌ர‌ணும்.........வ‌ரும் :)

ஆதிமூலகிருஷ்ணன் on March 16, 2010 at 12:42 AM said...

என்னுது ரைட் சைடுல இருக்குறது உங்க தாத்தாவா? அவருக்கு எதுக்கு வடை? யூத்தா வேற இருக்காரு.. தாத்தானு சொல்றே?

கார்க்கி on March 16, 2010 at 10:27 AM said...

அனைவருக்கும் நன்றி.

நான் காமெடியாக எழுதினாலும் இந்த முறை தாதா கலக்கப் போவது உறுதி. இன்றைய மேட்ச் முடிந்த பின் பாருங்கள்.

Rajalakshmi Pakkirisamy on March 16, 2010 at 8:01 PM said...

No way Karki!

SenthilMohan K Appaji on March 17, 2010 at 9:06 AM said...

//*நான் காமெடியாக எழுதினாலும் இந்த முறை தாதா கலக்கப் போவது உறுதி. இன்றைய மேட்ச் முடிந்த பின் பாருங்கள்.**/

நீலக் கலர் சட்டை மேல வெச்ச நம்பிக்கையை உன் மேல வை.
உன்ன இல்ல கார்க்கி. உங்க டீம் தல-க்கு.
:)

A Simple Man on March 17, 2010 at 1:45 PM said...

Even I wish KKR to reach semi-finals.. but my favourite for championship is "MI".
-ASM

 

all rights reserved to www.karkibava.com