Mar 11, 2010

அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள்


 

    இதுவரை ஏழுவை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  ஒரு வித யவ்வனமான நிலையில் கிணற்றின் மீது அமர்ந்தபடி நிலவைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

”காதலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

  அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள் தன் சீடரில் ஒருவனைப் பார்த்து கேட்டுவிட்டு. அருகில் இருந்த பியர் பாட்டிலை கோப்பைக்குள் கவிழ்த்தார் . அவர் ஊற்றிய பியருக்கு ஏற்ற அளவில் தண்ணீரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கோப்பையை சுவாமிகளிடம் தந்தான் ஒரு சீடன்.  கல்ப்பாக அடிப்பது ஆகம விதிப்படி ஆகாது என்பதால் சிப் சிப்பாக அடிக்கத் தொடங்கினார் சுவாமிஜி. முதல் சிப்பை சிப்பியபின் கோப்பையை கீழே வைத்துவிட்டு சீடர்களைப் பார்த்தார்.

”உன்னைத்தான் கேட்கிறேன்.காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்”

ஒரு சிப்பிலே குரு ஏகாந்த நிலை அடைந்துவிட்டதை புரிந்துக் கொண்ட சீடன் ஒருவன் பதில் சொன்னான் “அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.

  ஆசிரமத்தில் சேர அடிப்படைத் தகுதியே இல்லாமல் பதில் சொன்னான் மூடன். இல்லை இல்லை சீடன். சுவாமிகளுக்கு கோவம் வந்துவிடுமோ என்று அஞ்சியபடி சீடனை முறைத்தார்கள் மற்ற இருவரும். ஆனால் ஒரு அகோர சிரிப்பு சிரித்து தன்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் அரை….. சுவாமிகள்.

சிஷ்யா.. பிசையப்படும் மைதா மாவு பரோட்டா ஆகுமா, பூரி ஆகுமா என்று மாவுக்கு தெரியாது. ஆனால் பிசையும் மாஸ்டருக்கு தெரியும் இல்லையா?

தலை சொறிந்தபடி ஆம் என்றான் ஒரு சீடன். இன்னொரு சீடன் ஞானம் பெற்றவன். அவனுக்கு சுவாமிகள் சொல்வது புரிந்து, ”ஆம். சுவாமி. பரோட்டா மாஸ்டர் தானே பெற்றவர்கள். அவர்களுக்கு தெரியாதா?” என்றான்.

”நீ அரைபியர் போலவே அரைஞானஸ்நானம் பெற்றிருக்கிறாய். நான் முடித்து விடுகிறேன். அந்த பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது  மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” சுவாமிகள் கேட்ட கேள்வியை விட கேட்டபின் விட்ட லுக் சீடர்களுக்கு அடிவயிற்றில் பிரளயத்தையே உண்டு பண்ணியது.

”காதலும் அவ்வாறுதான். இந்த பூமியில் பிறந்த யாருக்கும் அவர்கள் துணை யாரென்று தெரிவதில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது” என்றார் சுவாமிகள்.

காதல் எல்லாம் போலி குருவே. சில காலம் சென்ற பின் போரடித்துவிடும்.

”இல்லை சிஷ்யா. ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது”

இவர் பல்பு வாங்க போறது என்னவோ நிஜம்தான் என்று முனகிய இன்னொரு சீடன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “குருவே த்ரிஷா போனா திவ்யா. அல்லது ரஞ்சிதா போனா ரகசியா என்பதுதானே காதல்?”

மீண்டும் தன் அ”கோர” சிரிப்பை உதிர்த்த சுவாமிகள் ஒரு கேள்வியை முன் வைத்தார். “ஒரு பூனையின் முன் இரு தட்டுகள். ஒன்றில் மீன் துண்டு. இன்னொன்றில் பால். பூனையின் கண் எதன் மேலிருக்கும்?”

யோசித்த சீடர்கள் ஆளுக்கொரு விடையை சொன்னார்கள்.

இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா?

இதற்கு மேலும் புரியவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாத சிஷ்யர்கள் குருவோடு ஒத்துப் போனார்கள்.  இந்தக் கொடுமையெல்லாம் கேள்விப்பட்ட ஆறு, பாலாஜியை அழைத்துக் கொண்டு மடத்திற்கு, ச்சே கிணத்தடிக்கு சென்றான். சீடர்களை ஓடுங்கடா என்று விரட்டிவிட்டு என்னடா பிரச்சினை என்றான் . தன் காதலை விளக்கிய ஏழு அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. அது சாத்தியமில்லை என்றபடி மிச்ச பியரை குடித்தான். ஏற்கனவே பியரில் அரைபாட்டில் இல்லாததைக் கண்ட ஆறு, இனிமேல் இவனை இங்கே விட்டால் கிணத்துக்குள் விழுந்து விடுவான் என்பதால் பாலாஜியின் துணையோடு அவனை அறைக்கு தூக்கி சென்றான்.

பதறியபடி வந்த நண்பர்களிடம் ”இன்னைக்கும் அரை பீர முழுசா குடிச்சிட்டாண்டா. ராவா அடிச்சானா என்னன்னு தெரியல” என்று புலம்பினான் ஆறு. நிலைத் தடுமாறி படுக்கையில் விழுந்த ஏழு சொன்னான் “ஹாஃப் முடிஞ்சுதா? இந்த மொடா குடிகாரனை கட்டிக்கிட்டு என்ன செய்ய போறாளோ அவ”. ஆறுவைத் தவிர அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள், மொடா குடிகாரன் என்ற சொல்லாடலைக் கேட்டு.

மறுநாள் அரைபீர் மயக்கம் தெளிந்து எழுந்த ஏழு, தேடிப்பிடித்து அதிகம் அழுக்கில்லாத ஒரு ஜீன்ஸூம், டீஷர்ட்டும் அணிந்துக் கொண்டு ஆறு எழுதி தந்த காதல் கடிதத்தோடு புறப்பட்டான். முதலாம் ஆண்டு கணிணி துறையில் படிக்கும் ஏழுவின் காதலி சரியாக எதிரில் வந்துக் கொண்டிருந்தாள். நேராக எதிரில் சென்ற ஏழு கடிதத்தை தந்து படிக்க சொன்னான். எழுத்துக் கூட்டி கூட்டி ஒரே ஒரு பக்கத்தை 14 நிமிடம் படித்த பின் வாய் திறந்தாள் ஏழுவின் தேவதை

 

 

 

 

 

“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஏழு தன் சீடர்களோடு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.

____________________________________________

பி.கு: ஏழுவை மீண்டும் இழுத்து வந்த சிங்கை நண்பர் ஜெய் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்

43 கருத்துக்குத்து:

சுசி on March 11, 2010 at 11:15 PM said...

முதல்ல ஏழுவுக்கு ஒரு வணக்கம்.

வெறுமை on March 11, 2010 at 11:19 PM said...

நல்லாருக்கு கார்க்கி :)

தர்ஷன் on March 11, 2010 at 11:22 PM said...

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஏழு
அருமை அடிக்கடி ஏழு வரட்டும்

நாய்க்குட்டி மனசு on March 11, 2010 at 11:26 PM said...

கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.//
இங்க பிடிச்சது ஸ்பீடு !

Rajalakshmi Pakkirisamy on March 11, 2010 at 11:42 PM said...

ha ha... Nalla irukku :)

பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” //

Ha ha ha

♠ ராஜு ♠ on March 11, 2010 at 11:46 PM said...

கள கட்டலையே..!
ஆறு இல்லாததாலா..?

ர‌கு on March 11, 2010 at 11:52 PM said...

//“அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.//

அந்த‌ சீட‌ன் பேர் என்ன‌ ச‌கா? 'கா'ல‌ ஆர‌ம்பிச்சு 'கி'ல‌ முடியுமா?

//இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கின் மீதுதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா?//

ய‌ப்பா சாமி, முடிய‌ல‌!

//அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது//

ஆட்டோ அல்ல‌ உட‌ன்பிற‌ப்பே, சுமோவும், குவாலிஸும் வ‌ருமென்றே நினைக்கின்றேன்...:)

தமிழ் பிரியன் on March 12, 2010 at 12:07 AM said...

கலக்கல் கார்க்கி! வி.வி.சி... ;-))

Kafil on March 12, 2010 at 12:35 AM said...

kalakkal karki...

சுசி on March 12, 2010 at 1:49 AM said...

யப்பா.. சிரிச்சு முடியல கார்க்கி..

//இதுவரை ஏழுவை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.//

நிஜம்தான். ஏழு ரொம்ப வித்யாசமா கலக்கிட்டார் இந்த தடவை.

// ”காதலும் அவ்வாறுதான். இந்த பூமியில் பிறந்த யாருக்கும் அவர்கள் துணை யாரென்று தெரிவதில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது”//

இத.. ஏழு சொன்னாரா?? யாரோ காதல் குரு சொன்னா மாதிரி இருக்கே..

இருந்தாலும் இது அநியாயம்.. நீங்க மட்டும் தோழி அப்டேட்ஸ் எழுதிட்டு ஏழுவ இப்டி விடக் கூடாது.

//ஏழுவை மீண்டும் இழுத்து வந்த சிங்கை நண்பர் ஜெய் அவர்களுக்கு//
நன்றிகள்.. :)))

Nanum enn Kadavulum... on March 12, 2010 at 2:14 AM said...

Hilarious... Couldn't stop laughing.

விக்னேஷ்வரி on March 12, 2010 at 3:46 AM said...

யவ்வனமான //
என்ன வார்த்தை ராசா இது.. புதுசா கேள்விப்படுறேன்.

எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது //
ஓ, விஷயம் அதுதானா... வாழ்த்துகள் கார்க்கி.

ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது //
ஆனா, ஃப்யூஸாகிடுமே தள. (கவனிக்கவும், ’தல’ அல்ல; ’தள’)

அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. //
ஹாஹாஹா... இது மேட்டரு.

சூப்பர். வெல்கம் பேக் ஏழு.

taaru on March 12, 2010 at 6:46 AM said...

//ஆனந்தமயானந்த//
இந்த பேருல மயானம் எல்லாம் வரும் போதே யூகிச்சு இருக்கணும்... கடீசில தான் கண்ணு கலங்கிருச்சு... எழுவுக்கு தான் இப்டி பப்லு சாரி பல்பு கொடுத்தே கதை இருக்கு... அங்க எப்படி? already பாத்தாச்சா? இல்ல அம்மா பாக்குறாங்களா? இது பதில் சொல்றீரு... இது நம்ம கட்டளை... ளை.. ளை... ளை...

மன்னார்குடி on March 12, 2010 at 7:29 AM said...

பீரையே மிக்ஸ் பண்ணி அடிக்கிரவறால இந்த காதல் வலிய எப்படி தான் தாங்க முடியுமோ?

Anbu on March 12, 2010 at 8:31 AM said...

///அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. //

கலக்கல்

கார்க்கி on March 12, 2010 at 8:32 AM said...

நன்றி சுசி. ஏழுவிடம் சொல்லி விடுகிறேன். அந்த பரோட்டா மேட்டர், ஏழுவிற்கு ஏதாவது காதல் குரு சொல்லியிருக்கலாம்.

நன்றி வெறுமை.

தர்ஷன், வருவாருன்னு நினைக்கிறேன்.

நாய்க்குட்டி, நன்றி

நன்றி ராஜி

ராஜூ, அப்படியா? அடுத்து ஆறு வச்சு அடிச்சு ஆடிடுவோம்

ரகு, ஹிஹிஹி.. அப்படித்தான் வானிலை அறிக்கை சொல்கிறது

நன்றி தமிழ் பிரியன். அது என்ன “விழுந்து விழுந்து சிரிச்சிங்களா?:

@நானும் கடவுளும், நன்றி

நன்றி காஃபில்

விடிய விடிய விழுத்து கமெண்ட்டிய விக்கிக்கு நன்றிகள். ஃப்யூஸ் போகலாம், ஆனால் சாம்பால் ஆகாது என்பதே கருத்து. யவ்வணமான நிலையை பற்றி தெரிந்து கொள்ள நர்சிம்மை தொடர்பு கொள்ளுங்கள். மாறவர்மன் மேட்டர் அது

@டாரு, அம்மாவையே பார்க்க சொல்லிவிட்டேன். ஆனால் வீட்டுக்கு அழைத்து சென்று அவர்களை பார்க்க சொல்ல வேண்டும். அந்த வேலையை மட்டும் நான் எடுத்துக் கொள்ளலாம் என இருக்கிறேன் :))

@மன்னார்குடி, செம பாயிண்ட் தலைவரே.....

pappu on March 12, 2010 at 9:30 AM said...

யப்பா, இத எம்புட்டு நாளா கேட்டுட்டு இருக்கோம். இப்ப தான் சரக்கு கிடைச்சதா?

நாமக்கல் சிபி on March 12, 2010 at 9:49 AM said...

கலக்கல் கர்க்கி!

அற்புதம்!

ரொம்ப நாளாச்சு!

நாமக்கல் சிபி on March 12, 2010 at 9:52 AM said...

//கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்//

:))

மோகன் குமார் on March 12, 2010 at 10:11 AM said...

ரொம்ப நாள் கழிச்சு ஏழு என மகிழ்ச்சி; ஆனா ரெகுலர் சிரிப்பு வரலை..

vanila on March 12, 2010 at 10:35 AM said...

//யோசித்த சீடர்கள் ஆளுக்கொரு விடையை சொன்னார்கள்.

இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல்.//

கார்க்கி, "பூனே உனக்காக"' னு ஒரு படம் எடுக்க போறாராம் விக்ரமன்.. அதுக்காக கிளைமாக்ஸ் டயாலாக் யோசிச்சிட்டி=ருக்காரு.. நான் இந்த dia(mono)logue அ அனுப்பி வச்சுட்டேன்..

vanila on March 12, 2010 at 10:37 AM said...

எனக்கென்னமோ அந்த photo ல இருந்தது ஏழுமலை மாதிரி தெரியல.. கார்க்கி தானோ'ன்னு சந்தேகமா இருக்கு..

கார்க்கி on March 12, 2010 at 10:44 AM said...

// ”இல்லை சிஷ்யா. ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது” //

அட அட அட.... என்ன தத்துவம் என்ன தத்துவம்.....

// இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா? //

போட்டுத்தாக்கு....

// “அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?” //

புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

Very funny post Saga… kalakkunga.

Note : itha vasagar kadithama treat pannikunga… :P (office la comment poda mudiyathu…. L ).


Cheers,
Magesh R

ராஜன் on March 12, 2010 at 10:53 AM said...

பிரிச்சு மேஞ்சுட்டீங்க ! பயனுள்ள இடுகை

அற்ப்புதம் .... நீங்க பொருளாதார வல்லுனர்னு மற்றுமொரு முறை கடப் பாறைத் தனமா நிரூபிச்சாச்சு தும் ததா !

வரதராஜலு .பூ on March 12, 2010 at 11:01 AM said...

ரொம்ப நாளாச்சி ஏழுவை பற்றிய பதிவைப் படிச்சியும் இப்பிடி விழுந்து விழுந்து சிரிச்சியும்.

//பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” //

//“அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.//

//இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கின் மீதுதான் இருக்கும். //

//அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது//

திரும்ப திரும்ப சிரிச்சிக்கிட்டே இருக்கேன்.

//எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது //

இது ஏழவ பத்திதானே. வேற யாரும் இல்லியே?

//ஏழுவை மீண்டும் இழுத்து வந்த சிங்கை நண்பர் ஜெய் அவர்களுக்கு//

எனது நன்றிகளும்.

ஸ்ரீமதி on March 12, 2010 at 11:14 AM said...

Mokkaivarman enna aanaar????????

புன்னகை on March 12, 2010 at 11:53 AM said...

//“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”//
இதையே தான் உங்கள நாங்க கேக்கணும் போல??? ;-)

SenthilMohan K Appaji on March 12, 2010 at 11:59 AM said...

7 back with the Bang.

கார்க்கி on March 12, 2010 at 12:21 PM said...

தமிழ்மணத்தில் முதல் ஓட்டே நெகட்டிவ் ஓட்டு போட்டு சித்து அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி..

_________________________

நன்றி அன்பு

நன்றி பப்பு.. :))

நன்றி நாநக்கலாரே

நன்றி மோகன். சரி செய்றேன் சகா

வாநிலா, உங்கள கேட்டு வசனம் எழுதறாரா? ரைட்டு..எந்த ஃபோட்டோவ சொல்றீங்க?

நன்றி மகேஷ்

ராஜன், பேசி தீர்த்துப்பொமே

வரதராஜலு, நன்றி..:))

ஸ்ரீமதி, உங்களுக்காகவே அடுத்த வாரம் வருவார்

புன்னகை, பேருக்கேத்த மாதிரி நடந்துக்கனும். அழ வைக்க கூடாது:))

நன்றி செந்தில் மோகன்

தராசு on March 12, 2010 at 12:23 PM said...

அப்பா, ரொமப நாளைக்கப்புறம் ஏழு வந்துட்டருப்பா.

radhika on March 12, 2010 at 12:33 PM said...

Perfect come back for our beergreen star.

Hilarious to the core karki.

Just want to share one thing. This week has been a real star week for you. Started with a offbeat karki post Muran, followed by excellent creativity stuff invitation. Then your thozi post was my favourite one. Y'day, 10+2 was also a good one. Now ezu. What else one can expect from a blogger?So this is a real star week. Keep rocking and entertain us.

My marks are

1) Muran - 8/10
2) soru podrom - 8/10
3) thozhi updates - 9/10
4) 10+2 - 8/10
5) swamy ezhu - 10/10
I would like to give a title "Most versatile blogger" to you. Kindly accept. lol

அமுதா கிருஷ்ணா on March 12, 2010 at 3:06 PM said...

"பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது"

இது சூப்பர்...

தாமோதர் சந்துரு on March 12, 2010 at 5:50 PM said...

அய்யோடா இப்பேர்ப்பட்ட மொடாக் குடிகாரனை இப்பத்தா பாக்கிறேன். இவராட்டம் எல்லாரும் குடிக்க ஆரம்பிச்சா டாஸ்மாக்குக்கு ஆப்புதான்

பாண்டி-பரணி on March 13, 2010 at 10:06 AM said...

//“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஏழு தன் சீடர்களோடு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான். //

சூப்பர் :) :) :)

பாத்து பா தல டாஸ்மாக்கு போவுது
full beer அடிக்கபோது தலைக்கு தாங்காதுப்பா !?

____________________________________________

RaGhaV on March 13, 2010 at 12:10 PM said...

//எனக்குள் காதலும் வந்துவிட்டது
சந்தேகமா இருந்தது.. இப்ப confirm ஆகிடுச்சு..

//பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும்
உங்களுக்கு Nobel பரிசு காத்திருக்கு..

//“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”
அததான் நானும் கேக்குறேன்.. ;-)

//தூக்குறோம் மச்சி இந்த வருஷம் கோப்பையை
இந்த comedy எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

குசும்பன் on March 13, 2010 at 4:41 PM said...

பாலாஜியை பத்தி தனி எபிஸோட் ஒன்னு போடு சகா!:)))

அரைபீர் செம கலக்கல்.

****************
ஆமாம் பப்ளிக்கா கோப்பைய தூக்குறோம் என்று சைட் பாரில் போட்டு இருக்கீயே, இந்த மேட்டர் ஷாருக், கங்"எலி"க்கு தெரியுமா?

கேட்டா இன்னுமா இந்த உலகம் நம்மை நம்பிக்கிட்டு இருக்குன்னு ஆனந்த கண்ணீர் வடிப்பானுங்க:)))

SShathiesh on March 14, 2010 at 12:40 AM said...

உங்களை கிரிக்கெட் ஆட அழைத்துள்ளேன். வந்து ஆடித்தான் பாருங்களேன்.
http://sshathiesh.blogspot.com/2010/03/blog-post_13.html

வெற்றி on March 15, 2010 at 1:02 AM said...

:)))))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் on March 16, 2010 at 12:53 AM said...

பியரடிக்கும் அழகு, தொடர் கேள்வி பதில்கள்.. அடுத்தடுத்து பெப் அப் கூடிக்கொண்டே போய் முடிவு வரை ரசிக்கும்படி இருந்தது. எடுத்துச்சொல்வதானால் முழுவதுமே சொல்லவேண்டியதிருக்கும். ஏழு பதிவுகளில் சிறப்பான பகுதி இது. ரசித்தேன். :-))

Sivakumar on March 16, 2010 at 10:55 AM said...

lol....super!

தமிழ்ப்பறவை on March 18, 2010 at 9:36 PM said...

ரசித்தேன் சகா...ஏழுவை வரவழைத்தது நித்யானந்தரின் சக்தி போலும்ம்....

Karthik on March 25, 2010 at 11:25 AM said...

C.H.A.N.C.E.L.E.S.S.

epic fun. thanks karki. :)

உமா கிருஷ்ணமூர்த்தி on February 26, 2011 at 1:47 PM said...

//ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது//
மிக சிறந்த தத்துவம்

// பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல்.//

//அந்த பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?”//

//அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது.//

//“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”//

நல்ல வேலை அருகில் வேறு எவரும் இல்லை.விழுந்து விழுந்து சிரித்தேன்.(அடி பட வில்லை )

அருமையாக இருக்கிறது.நிஜமாகவே ஏழு என்ற நண்பர் உங்களுக்கு இருக்கின்றாரா அல்லது உங்களது கற்பனை பாத்திரமா கார்க்கி ?.

 

all rights reserved to www.karkibava.com