Mar 9, 2010

நெக்லஸும் நானும் ஒன்று


 

காலையில் அழைத்து குட் மார்னிங் சொன்னேன் தோழியிடம். நீ கூப்பிட்டாலே குட் மார்னிங் தானே. அப்புறம் தனியா வேற சொல்லனுமா என்கிறாள்

வீடியோ சேட்டில் வெகு நேரம் அரட்டையடித்தப் பின் தூங்கப் போகிறேன் என்றேன் தோழியிடம். கைகளை நீட்டியபடி கிட்ட வா என்கிறாள். என் தூக்கத்தை கலைக்கும் கலையறிந்தவள்

உன்னைப் பற்றி எழுதினால் சிரிக்கிறார்கள் என்றேன். நிலவில் இறங்கிய ஆர்ம்ஸ்ட்ராங்டா நீ. அவர்களுக்கு என்ன தெரியும் நிலவின் அருமை என்கிறாள் தோழி

ஜென்சி குரலுக்கு என் சொத்தையே எழுதி வைப்பேன் என்றால், அலறுகிறாள் தோழி “என்னால் அவங்க கூட போக முடியாதுப்பா” என்று

என்னடா பண்ற என்றேன் தோழியிடம், ”லேப்டாப்பை மடியில் வைத்து சேட் செய்கிறேன்” என்றாள் . கொடுத்து வச்ச லேப்டாப்.

நெக்லஸும் நீயும் ஒன்று என்றாள் தோழி. இரண்டும் தங்கமாம். நான் வேறு ஒன்றை நினைத்தேன் என்றேன். என்னவென்று கேட்டு இன்னமும் நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். # மனதை தொடுதல்.

”வைரம் உருவாக பல ஆண்டுகள் ஆகுமாமே. நீ எப்படி 10 மாசத்துல” என்றேன் தோழியிடம். “10 மாசம் கூட இல்ல. உன்னைப் பார்க்கிற அவசரத்துல எட்டரை மாசத்திலே வந்துட்டேன் என்கிறாள்” தோழி.

pic3-couple-coffee

காஃபி ஷாப்பில் சந்தித்த போது பரஸ்பரம் சைட்டடித்துக் கொண்டு சர்க்கரையை கலக்க மறந்துவிட்டோம். முதல் சிப்பிற்கு பின் தெரிந்துக் கொண்டு சர்க்கரை எடுக்கப் போனேன். கோப்பையை மாற்றி வைத்தாள் தோழி # சர்க்கரை மிச்சம்

என்னடா மச்சி ஆச்சு என்ற நண்பனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பெப்பே என்று சைகை காட்டிக் கொண்டிருக்கிறேன் நான். என்ன சாப்பிட்ட என்ற சிநேகிதியிடம் ”காலைல அவன் உதடு, மதியம் அவன் கன்னம்” என்று வெட்கமே இல்லாமல் சொல்லியிருக்கிறாள் தோழி.

45 கருத்துக்குத்து:

மணிவேலன்.க Mani on March 9, 2010 at 11:48 PM said...

ம்ம்ம்ம்... நல்லாயிருக்கு கார்க்கி..

கொடுத்து வைத்தவள் ஜென்ஸி....

kutipaiya on March 9, 2010 at 11:52 PM said...

:) :) chweeties :)

சுசி on March 10, 2010 at 12:11 AM said...

கலக்கல் கார்க்கி..

தோழி யாருன்னுதான் சொல்ல மாட்றீங்க..

பாத்துங்க.. ப்ளாக் எழுத கையயாவது விட்டு வைக்க சொல்லுங்க :)))

Nanum enn Kadavulum... on March 10, 2010 at 12:29 AM said...

Very nice....

பிரியமுடன்...வசந்த் on March 10, 2010 at 12:44 AM said...

//நெக்லஸும் நீயும் ஒன்று என்றாள் தோழி. இரண்டும் தங்கமாம். நான் வேறு ஒன்றை நினைத்தேன் என்றேன். என்னவென்று கேட்டு இன்னமும் நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். # மனதை தொடுதல்//

மனச தொடுறீங்களே சகா...

எல்லாமே நல்லாருக்கு...

சின்ன அம்மிணி on March 10, 2010 at 3:56 AM said...

//காஃபி ஷாப்பில் சந்தித்த போது பரஸ்பரம் சைட்டடித்துக் கொண்டு சர்க்கரையை கலக்க மறந்துவிட்டோம். முதல் சிப்பிற்கு பின் தெரிந்துக் கொண்டு சர்க்கரை எடுக்கப் போனேன். கோப்பையை மாற்றி வைத்தாள் தோழி # சர்க்கரை மிச்சம்//

இது விக்கி கிட்ட இருந்து சுட்டதுதானே :)

ர‌கு on March 10, 2010 at 5:01 AM said...

ஸ்ஸ்ஸ‌ஸ‌ஸ‌ப்பா முடிய‌ல‌!

karkibava.comஅ kadhalbava.comனு மாத்திடுங்க‌:))

//என்னடா பண்ற என்றேன் தோழியிடம், ”லேப்டாப்பை மடியில் வைத்து சேட் செய்கிறேன்” என்றாள் . கொடுத்து வச்ச லேப்டாப்//

டாப்:)

//சின்ன அம்மிணி said...
//காஃபி ஷாப்பில் சந்தித்த போது பரஸ்பரம் சைட்டடித்துக் கொண்டு சர்க்கரையை கலக்க மறந்துவிட்டோம். முதல் சிப்பிற்கு பின் தெரிந்துக் கொண்டு சர்க்கரை எடுக்கப் போனேன். கோப்பையை மாற்றி வைத்தாள் தோழி # சர்க்கரை மிச்சம்//

இது விக்கி கிட்ட இருந்து சுட்டதுதானே :)//

இத‌ ஏற்க‌ன‌வே ஆறெழுத்து ப‌திவ‌ர் எழுதியிருக்காங்க‌ன்னு பின்னூட்ட‌லாம்னு நினைச்சேன், தோசை போச்சே:(

Chitra on March 10, 2010 at 5:48 AM said...

:-)

அன்புடன் அருணா on March 10, 2010 at 6:34 AM said...

காலங்கார்த்தாலே ஆரம்பிச்சாச்சா!!!

யாசவி on March 10, 2010 at 7:01 AM said...

nice and cute

சொல்லச் சொல்ல on March 10, 2010 at 7:29 AM said...

பொய்சொல்லப் போறேன்

வெற்றி on March 10, 2010 at 7:37 AM said...

கலக்குங்க பாவா !

pappu on March 10, 2010 at 8:23 AM said...

பாவா, ட்விட்டரில் தாங்காமல் இங்க வந்த....

(கார்த்திக்) நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்கல!

நாய்க்குட்டி மனசு on March 10, 2010 at 8:59 AM said...

எல்லாம் சரி தான். இன்னும் தோழி தோழி னு சொல்றது தான் ஜூட் விட ரெடியா இருக்கிறாப் போல தோணுது.

தராசு on March 10, 2010 at 9:05 AM said...

//காஃபி ஷாப்பில் சந்தித்த போது பரஸ்பரம் சைட்டடித்துக் கொண்டு சர்க்கரையை கலக்க மறந்துவிட்டோம். முதல் சிப்பிற்கு பின் தெரிந்துக் கொண்டு சர்க்கரை எடுக்கப் போனேன். கோப்பையை மாற்றி வைத்தாள் தோழி # சர்க்கரை மிச்சம்//

இது சூப்பர் தல.

Ganesh on March 10, 2010 at 9:16 AM said...

\\காஃபி ஷாப்பில் சந்தித்த போது பரஸ்பரம் சைட்டடித்துக் கொண்டு \\

\\உன்னைப் பற்றி எழுதினால் சிரிக்கிறார்கள் என்றேன். நிலவில் இறங்கிய ஆர்ம்ஸ்ட்ராங்டா நீ. அவர்களுக்கு என்ன தெரியும் நிலவின் அருமை என்கிறாள்\\

நல்லாயிருக்கு சகா....

விலெகா on March 10, 2010 at 9:24 AM said...

super !!
//நெக்லஸும் நீயும் ஒன்று என்றாள் தோழி. இரண்டும் தங்கமாம். நான் வேறு ஒன்றை நினைத்தேன் என்றேன். என்னவென்று கேட்டு இன்னமும் நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். # மனதை தொடுதல்//
super.

எறும்பு on March 10, 2010 at 10:00 AM said...

//பெப்பே என்று சைகை காட்டிக் கொண்டிருக்கிறேன் நான். //

அண்ணே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குங்க...

Maduraimalli on March 10, 2010 at 10:40 AM said...

Dhool.

taaru on March 10, 2010 at 10:56 AM said...

ரசனைக்காரனய்யா நீர்... சகா இப்போ எல்லாம் ஒரே லவ் பாட்டா தான் கேட்க பிடிக்குது... ஹம்.. பட்டய கிளப்புங்க..நம்ம அரசன ரொம்ப நாளா காணல?!!

Anbu on March 10, 2010 at 11:07 AM said...

கலக்கல் கார்க்கி அண்ணே..

ஸ்ரீமதி on March 10, 2010 at 11:19 AM said...

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது.. :))))))))))))

kavisankar on March 10, 2010 at 11:31 AM said...

நல்ல தோழி எனக்கு பொறாமையா இருக்கு.

Rajeswari on March 10, 2010 at 11:32 AM said...

:-))

Sen22 on March 10, 2010 at 11:35 AM said...

kt//என்னடா மச்சி ஆச்சு என்ற நண்பனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பெப்பே என்று சைகை காட்டிக் கொண்டிருக்கிறேன் நான். என்ன சாப்பிட்ட என்ற சிநேகிதியிடம் ”காலைல அவன் உதடு, மதியம் அவன் கன்னம்” என்று வெட்கமே இல்லாமல் சொல்லியிருக்கிறாள் தோழி. //

Ithu Toppu..

தாரணி பிரியா on March 10, 2010 at 12:05 PM said...

தோழிக்கு சீக்கிரம் பிரமோசன் தாங்க கார்க்கி :).

கார்க்கி on March 10, 2010 at 12:38 PM said...

நன்றி மணி.

நன்றி குட்டிபையா

நன்றி சுசி. தோழி என் சினேகிதிதான்

நன்றி கடவுளே

நன்றி வசந்த். யார் மனச சொல்றிங்க?

அம்மிணி, எ.கொ.அ.இ?

ரகு, அதெல்லாம் நீஙக்ளா பார்த்து ஏதாவ்து பட்டம் கொடுக்கனும் :))

நன்றி சித்ரா

டீச்சர், இது நேத்து நைட்டே எழுதியது

நன்றி யாசவி

நன்றி சொல்ல சொல்ல

நன்றி வெற்றி

நன்றி பப்பு. எதுக்கு கார்த்திக்க கொசுன்னு சொல்ற?

நாய்க்குட்டி,அபப்டியெல்லாம் இல்லயே

நன்றி தராசு

நன்றி கணேஷு

நன்றி விலேகா. எங்க போனிங்க?

நன்றி எறும்பு. பண்ணிடுவோம்

நன்றி மதுரை மல்லி.

நன்று டாரு. ஆமா இல்ல? வருவாரு

நன்றி அன்பு

நன்றி ஸ்ரீமதி. எங்க நடக்குது?

நன்றி கவிஷஙர்

நன்றி ராஜி

நன்றிச் சென்

தா.பி, அது அவ கையில இருக்கு :)

திவ்யாஹரி on March 10, 2010 at 1:13 PM said...

ஒவ்வொன்னும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க.. எதை select பண்ணி அருமைன்னு சொல்ல?

புன்னகை on March 10, 2010 at 1:15 PM said...

//என்னடா பண்ற என்றேன் தோழியிடம், ”லேப்டாப்பை மடியில் வைத்து சேட் செய்கிறேன்” என்றாள் . கொடுத்து வச்ச லேப்டாப்.//
வேற மாதிரி எழுதியிருக்கணும்! :-)

Veliyoorkaran on March 10, 2010 at 1:19 PM said...

எப்பெய்...சூப்பரு வாத்யாரே...டாப்பா கீது....(உங்களோட இந்த பதிவு சாப்ட்வேர் கம்பெனிகள்ல இன்னிக்கு செம ஹிட்.இந்த லிங்க் எனக்கு இன்போசிஸ்லேர்ந்து மெயில்ல வந்துச்சு...ஒரு பிரெண்டுகிடேர்ந்து...!!..பின்றீங்க..இன்னிக்கு ஒரு லவ் லெட்டர் உங்களுக்கு கன்பார்ம்..)

Veliyoorkaran on March 10, 2010 at 1:22 PM said...

ஆனா இது எல்லாத்தையுமே எங்கேயோ படிச்ச மாதிரியே இருக்கு..கொஞ்சம் வேற மாதிரி...கண்டுபுடிக்கறான் வெளியூர்க்காரன் .!! :)

விக்னேஷ்வரி on March 10, 2010 at 3:04 PM said...

அய்யா சாமி, சீக்கிரம் கண்ணாலம் கட்டிக்கோங்க. உங்க தொல்லை தாங்க முடில. :)

தோழி பாவம்.

GHOST on March 10, 2010 at 3:48 PM said...

என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது

லேகா on March 10, 2010 at 3:56 PM said...

நல்ல புனைவு கார்க்கி :-))))))

Vidhoosh on March 10, 2010 at 3:57 PM said...

ஏழு எங்கப்பா...


இங்க சொல் ... அஹ் அஹ்.. ஜொள் அருவி மழையா சொரியுது.. கேட்க யாருமே இல்லையா...

நர்சிம் on March 10, 2010 at 4:17 PM said...

//GHOST said...
என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது
//

மீண்டும் முருங்கையேறிட்டீங்களா..ரைட்டு..

சகா..

நடக்கட்டும்..14 போயி ரொம்ப நாளாச்சப்பா..இல்ல 14ஆ?

"உழவன்" "Uzhavan" on March 10, 2010 at 5:24 PM said...

//”வைரம் உருவாக பல ஆண்டுகள் ஆகுமாமே. நீ எப்படி 10 மாசத்துல” என்றேன் தோழியிடம். “10 மாசம் கூட இல்ல. உன்னைப் பார்க்கிற அவசரத்துல எட்டரை மாசத்திலே வந்துட்டேன் என்கிறாள்” தோழி. //
 
சூப்பர்

கார்த்திகைப் பாண்டியன் on March 10, 2010 at 6:02 PM said...

எல்லாமே பட்டாசா இருக்கு.. காதல் பொங்கி வழியுது சகா.. கலக்குங்க

கார்க்கி on March 10, 2010 at 10:14 PM said...

மீண்டும் நன்றி நண்பர்களே... இந்த வாரம் என்ன ஆச்சு? எல்லா பதிவும் ஹிட் ஆயிட்டே வருது

RaGhaV on March 11, 2010 at 12:03 AM said...

அட நம்ம ஏரியா.. அட்டகாசமான பதிவு கார்க்கி.. :-))

அப்படியே தோழிக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.. ;-)

gowri on March 11, 2010 at 2:33 PM said...

kavithai super!!!

வெறுமை on March 12, 2010 at 11:07 PM said...

தலைவா உங்க கைய கொடுங்க ....(தோழி கோவிச்சிக்க மாட்டங்கனு நினைக்கிறேன்)

ஆதிமூலகிருஷ்ணன் on March 16, 2010 at 12:57 AM said...

SMSகள் போல இருக்கிறது. சுவாரசியம்.!

தமிழ்ப்பறவை on March 18, 2010 at 9:42 PM said...

ஓ.கே...

Venkatesh on March 19, 2010 at 6:52 PM said...

நல்ல இருக்கு கார்கி!!

 

all rights reserved to www.karkibava.com