Mar 8, 2010

சோறும் சரக்கும் இலவசம்…


 

ஹலோ கார்க்கிதானே இது?

அது இது என்ற ஏகவசனம் வேண்டாம் தோழரே..நீங்கள் யார்?

உனக்கு ஏகன் வசனம் தாண்டா பிடிக்காது. ஏகவசனம் பழகின ஒன்னுதானே?

நீங்க பிளாகரா?

என்னடா உளர்ற? நான் சுதாகர்டா. CPT சுதாகர்.

டேய் மாம்ஸ்…

அதுக்கு மேல நாங்க பேசியதை எழுதினால் என் பிளாகை சன் டிவி ரேஞ்சுக்கும், என்னை நித்யானாந்தா ரேஞ்சுக்கும் நீங்கள் நினைத்து விடக் கூடுமென்பதால் இதோடு அதை விட்டுவிடுவோம். அவன் அழைத்த விஷயம் என்னவென்றால், அவனுக்கு கல்யாணமாம். அதுக்கு திருமண அழைப்பிதழ் போட வேண்டுமாம். நண்பர்களுக்கு மட்டும் அச்சடிக்கப் போகும் பத்திரிக்கையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய உத்தேசமாம். உடம்பு சரியில்லன்னா டாக்டர் கிட்ட போலாமாம். பசிக்குதுன்னா ஹோட்டலுக்கு போலாமாம். வித்தியாசமன்னா கார்க்கியிடம்தான் போகனுமாம். எத்தன “மாம்”? ஸப்பா..இதனால்தான் அவனை நாங்க மாம்ஸ்ன்னு கூப்பிடுவோம்.ப்ளூரல்ன்னா(Plural) ”ஸ்” தானே சேர்க்கனும்?

சரி. நம்பி வந்துட்டான். என்ன மாம்ஸ் செய்யனும் என்றேன்.

மச்சி. நம்ம பசங்க, அப்புறம் ஏரியா பசங்களுக்கு மட்டும்  தான் இந்த இன்விடேஷன கொடுக்கப் போறேன். அதனால் அடிச்சு ஆடு. ஆனா பசங்க அப்படியே ஷாக் ஆகனும்.

அடிச்சா ஆடித்தாண்டா ஆகனும். சரிடா. அரை மணி நேரம் கழிச்சு கூப்பிடு

டொக்.

கபாலத்தில் கடம் வாசிக்க, அலுவலகத்தில் அங்குமிங்கும் நடந்து யோசித்து இந்த பத்திரிக்கையை தயார் செய்தேன்.

சோறு போடறோம். வந்துடு மச்சி


எங்க :    சென்னை மயிலாப்பூரில் இருக்கும் AVM  ராஜேஷ்வரி மண்டபத்தில்

எப்ப : 25, ஏப்ரல் 2010, காலை 7.30 –9

என்ன : பூரி, இட்லி, வடை, பொங்கல், etc

ஏன் :           நானும், ரேவதி என்ற பொண்ணும் கண்ணாலம் கட்டிக்க போறோம். அதுக்காகத்தான்.

மெயில் பார்த்துட்டு அழைத்தான். வாய்ப்பே இல்லையென்று 4 முறையும், சான்ஸே இல்லையென்று 5 முறையும், அருமையென்று 6 முறையும் சொன்னான். அந்த சரக்கு மேட்டர் மாம்ஸ் என்றதற்கு அது உண்டு மச்சி என்றான். லூசுப்பையன். கார்டின் பின்புறம் அடிக்க வேண்டிய மேட்டரை படிக்கவில்லை போலும். நீங்களும் பார்த்திடுங்க.

கார்டுக்கு பின்னாடி போட்டிருக்கிற மாதிரி, கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்டு, மண்டபத்துக்கு பின்னாடி இருக்கிற ரூமில் பேச்சுலர் பார்ட்டி உண்டு. வெறும் டம்ளரோடும், டவுசரோடும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அழைப்பிதழ் அவன் மாமனார் கண்ணிலோ, அவனுக்கு வாழ்வுத் தரப்போகும் பெண்ணின் கண்ணிலோ படாமல் இருக்க எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வணங்குவோம்.

55 கருத்துக்குத்து:

சுசி on March 9, 2010 at 12:06 AM said...

முடியல கார்க்கி.. இப்போதான் தமிழ்ப்படம் பார்த்தேன்.

அதுக்கு சிரிச்சத விட இதுக்கு சிரிச்ச்ச்ச்ச்ச்சிட்டேன்..

உங்க நண்பன்.. என்ன சொல்ல..

உங்களுக்கு நண்பனா இருக்கிரதால ஆயுள் கெட்டி அவருக்கு.

அவருக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்..

ர‌கு on March 9, 2010 at 12:26 AM said...

அடுத்த‌ பார்த்திப‌ன்‍?....:)

gulf-tamilan on March 9, 2010 at 12:35 AM said...

பெண்ணின் கண்ணில் பட்டால் அவங்க ப்ரண்ட்சும் சரக்குக்கு பங்குக்கு வந்துருவாங்க :)))

பொற்கோ on March 9, 2010 at 12:57 AM said...

குடும்பத்தோடு சிரித்தோம் . உங்களுடைய இந்த "சோறும் சரக்கும் இலவசம்" சிரிப்பை படித்துவிட்டு .....சிரித்தோம் ! குலுங்கி ,குலுங்கி சிரித்தோம் . தொடரட்டும் தங்களின் அடித்து ஆடும், ஆட்டம்! நன்றி!!!

பிரபாகர் on March 9, 2010 at 1:21 AM said...

சகா,

உங்க நட்ப நினச்சி அப்படியே ஆனந்த கண்ணீர் வருது...

(அடப்பாவி மனுஷா, இப்படியா நம்பி சொன்ன ஒரு மனுஷன கவுத்துவிட்டது புரியாம கலங்குறது...)

நம்ம வீட்டு காதணிவிழாவுக்கு கூட சாகாகிட்ட ஐடியா கேக்கலாம் போல இருக்கு...

(இத பாத்துட்டும் கேக்குறியே, மன சாட்சியே இல்லையா?)

பிராக்கெட்ல இருக்கிறது நான் சொல்றது இல்ல சகா!

பிரபாகர்.

இரா.சுரேஷ் பாபு on March 9, 2010 at 1:34 AM said...

சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது... மிக நன்று

Anonymous said...

/எப்ப போடறோம்: 25, ஏப்ரல் 2010, //

தேதியை எல்லாரும் பாத்திருப்பாங்க, 1, ஏப்ரல் இல்லைன்னு நிம்மதியா இருந்திருக்கும் :)

Dr.P.Kandaswamy on March 9, 2010 at 4:08 AM said...

ஏனுங்க, நம்ப்ப்ப்ப்பி வந்துடலாங்களா?

வெற்றி on March 9, 2010 at 5:42 AM said...

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

சான்ஸே இல்லை

அருமை

அருமை

அருமை

அருமை

அருமை

அருமை

அருமை :)

புலவன் புலிகேசி on March 9, 2010 at 5:45 AM said...

//எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வணங்குவோம்.//

யாருங்க அவுரு...

இது நல்லா இருக்கு...மைந்த்ல வச்சிருக்கேன்..யூஸ் பண்ணிக்கிறேன்

taaru on March 9, 2010 at 6:29 AM said...

தேன்க்க்ஷுப்பா... அப்படியே அடிச்சுரலாம்...

பிரியமுடன்...வசந்த் on March 9, 2010 at 7:04 AM said...

:))))))

சகா நீங்க எம்புட்டு நல்ல ஃப்ரண்டு

ஃப்ரண்டுக்கே இப்டின்னா உங்களுக்கு எப்டில்லாம் வெளம்பரம் கொடுப்பீங்க?

pappu on March 9, 2010 at 8:14 AM said...

எப்படி இவ்வளவு தைரியமா பத்திக்கை அடிக்கிறாங்க?

பித்தனின் வாக்கு on March 9, 2010 at 8:17 AM said...

இம்ம் நல்லா இருக்கு, கார்க்கி, சோறும்,சரக்கும் ஓசியில கிடைக்குதுன்னு ஓடி வந்தா இப்படி வயித்து வலி வந்துருச்சே (சிரிச்சுத்தான்).

அது சரி, நவதிருப்பதியில் இருக்கும் பெருமாள் பெயரில் ஏன் க் சேர்க்க வில்லை. மகரநெடுங்குழைக்காதன் தானே அவரு பெயரு.

நன்றி கார்க்கி.

Ganesh on March 9, 2010 at 8:45 AM said...

வாய்ப்பே இல்லை சகா.....

Chitra on March 9, 2010 at 9:08 AM said...

வாய்ப்பே இல்லை - சான்சே இல்லை - அருமை.
:-)

தராசு on March 9, 2010 at 9:33 AM said...

//அலுவலகத்தில் அங்குமிங்கும் நடந்து யோசித்து இந்த பத்திரிக்கையை தயார் செய்தேன்.//

ஏன் மல்லாக்கப் படுத்து யோசிக்க மாட்டீங்களா.....

கலக்குங்க.

நாய்க்குட்டி மனசு on March 9, 2010 at 10:11 AM said...

இதுக்கு பேரு தான் நெல்லைக் குசும்பு. தம்பிக்கு எந்த ஊரு ?

பரிசல்காரன் on March 9, 2010 at 10:12 AM said...

செம.

ஆனா ஒரு சின்ன விஷயத்தை யோசிக்கல போல.. சரி.. விடு!

Rajeswari on March 9, 2010 at 10:24 AM said...

:-)) nice

இலங்கன் on March 9, 2010 at 10:26 AM said...

அதாவது வித்தியாசமாக
"உருவாக்கும் சிந்தனையுடையவர்களுக்கு பெரிய வெளிச்சமான எதிர்காலம் உண்டாம்..."
அறிஞர்.. ஆ.சே. உசிங் சொன்னது..
கலக்கல்... அண்ணா..

கார்க்கி on March 9, 2010 at 10:33 AM said...

@கணேஷ்,
நன்றி சகா

@சித்ரா,
ஹிஹிஹிஹி

@தராசு,
மல்லாக்கப் படுத்த அடுத்த நிமிஷம், “இன்னுமாடா தூங்கல கார்க்கின்னு” தூங்கிடறேங்க

@நாய்க்குட்டி,
நான் நெல்லை இல்லை பாஸ்..

@பரிசல்,
அதை சின்ன விஷயம் என்று சொல்லும் உங்கள பார்த்தா பொறாமையா இருக்குங்க :))

@ராஜேஷ்வரி,
நன்றிங்கோவ்

@இலங்கன்,
முதல் கமெண்டிற்கு நன்றி சகா

Anbu on March 9, 2010 at 11:05 AM said...

வர வர உங்க மொக்கை கூடிக்கிட்டே போகுது..

:-))

எம்.எம்.அப்துல்லா on March 9, 2010 at 11:39 AM said...

// சென்னை மயிலாப்பூரில் இருக்கும் AVM ராஜேஷ்வரி மண்டபத்தில் 25, ஏப்ரல் 2010, காலை 7.30 –9

//

இந்த இடம்,தேதி நேரமெல்லாம் உண்மைதானே :)//ஏன் மல்லாக்கப் படுத்து யோசிக்க மாட்டீங்களா.....

//

சாரி தராசண்ணே.அதுக்கு நான் பேடண்ட் ரைட்ஸ் வாங்கிருக்கேன்.// புலவன் புலிகேசி said...
//எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வணங்குவோம்.//

யாருங்க அவுரு.

//

தென் திருப்பேரை என்ற ஊரில் இருக்கும் பெருமாள் கோவில் அது. மூத்த பதிவர் டோண்டுவின் குலதெய்வம் :)

ஸ்ரீமதி on March 9, 2010 at 11:40 AM said...

அடப்பாவி :))))

மகேஷ் : ரசிகன் on March 9, 2010 at 11:46 AM said...

அடுத்து உங்க கல்யாணம் தானே சகா?

அது என்னவோ தெரியல.... யாருக்கு கல்யாணம்னு சொன்னாலும் இதத் தான் கேக்கத் தோணுது....

உங்க கல்யாணப் பத்திரிக்கை எப்படி இருக்கும்? Any Plans?

கார்க்கி on March 9, 2010 at 12:56 PM said...

சுசி, ரகு,கல்ஃப்-தமிழன்,பிரபாகர், சுரேஷ் பாபு, அம்மிணி, கந்தசாமி, வெற்றி, புலிகேசி, டாரு, வசந்த், பப்பு, பித்தன்..

உங்க எல்லோருக்கும் ஒரு நன்றி சொல்லி பின்னூட்டம் டைப் பண்ணேன்..எங்க போச்சுன்னு தெரியலையே..

நன்றி அன்பு

அப்துல்லா அண்னே, வரலாற்றுக்கு நன்றி

ஸ்ரீமதி, உன் கல்யாணத்துக்கு இதை மிஸ் பண்ணிட்டியேன்னுதானே ஃபீல் பண்ற? :))

மகேஷ், உன்னை நேரில் கவனிச்சிக்கிரேன்.. :))

அமுதா கிருஷ்ணா on March 9, 2010 at 1:31 PM said...

பாவி மனுஷா...

ராஜன் on March 9, 2010 at 1:57 PM said...

//அடிச்சா ஆடித்தாண்டா ஆகனும். சரிடா.//

டபுள் மீனிங் ஓவரா இருக்கு கண்டனங்கள்

ராஜன் on March 9, 2010 at 1:57 PM said...

//டம்ளரோடும், டவுசரோடும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன்.//

ஆண் பெண் இருபாலருமா ?

ராஜன் on March 9, 2010 at 1:57 PM said...

/மகரநெடுங்குழைகாதனை வணங்குவோம்.//

அந்த கொடைக் காதன விடுங்க
ஆமா சிம்பு காது ஏன் அப்பிடி சூம்பிப் போட்ட பனங்கொட்டை கணக்கா இருக்கு

ராஜன் on March 9, 2010 at 1:59 PM said...

//சென்னை மயிலாப்பூரில் இருக்கும் AVM ராஜேஷ்வரி மண்டபத்தில் //

தல பொய் சொல்லாதீங்க ! நீங்க சொல்ற நேரத்துல அங்க வேறொரு பாராட்டு விழா நடக்கப் போவுது

GHOST on March 9, 2010 at 2:42 PM said...

சான்சே இல்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலி கண்டு போச்சு :)

vanila on March 9, 2010 at 2:52 PM said...

pudhusu kanna pudhusu

வேங்கை on March 9, 2010 at 3:30 PM said...

super appu

விக்னேஷ்வரி on March 9, 2010 at 3:45 PM said...

Hilarious!

பட்டாபட்டி.. on March 9, 2010 at 4:53 PM said...

Good joke buddy..

டம்பி மேவீ on March 9, 2010 at 5:03 PM said...

unga kalyanam epp sir???

KVR on March 9, 2010 at 5:37 PM said...

முன் பக்கம் usual. பின்பக்கம் தான் rocking :-)

ஜெஸ்வந்தி on March 9, 2010 at 6:24 PM said...

உங்க கல்யாணத்துக்கு இப்பிடிப் போட்டால் என்ன ஆகும் என்று யோசித்தேன்?...

A Simple Man on March 9, 2010 at 6:48 PM said...

most bloggers may ask u "enakku oru invitation parcel" :-))

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on March 9, 2010 at 7:00 PM said...

//..

பரிசல்காரன் said...
ஆனா ஒரு சின்ன விஷயத்தை யோசிக்கல போல.. சரி.. விடு!

@பரிசல்,
அதை சின்ன விஷயம் என்று சொல்லும் உங்கள பார்த்தா பொறாமையா இருக்குங்க :)) ..//

என்ன நடக்குது இங்க..??

Sathish on March 9, 2010 at 7:10 PM said...

//பொற்கோ on March 9, 2010 12:57 AM said...
குடும்பத்தோடு சிரித்தோம் //

குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் கேள்விப்பட்டிருக்கிறேன். இது என்ன குடும்பத்தோடு படிக்க வேண்டிய பிளாக்கா? (தப்பான அர்த்ததுல சொல்லல...

அன்புடன் அருணா on March 9, 2010 at 7:40 PM said...

பாவம் உங்க ஃப்ரெண்ட்!!!!

~~Romeo~~ on March 9, 2010 at 7:49 PM said...

சகா ஆபீஸ்ல என்னுடன் வேலை செய்யும் இரண்டு பெண்கள் இதை படிச்சு சிரி சிரின்னு சிரிச்சிட்டு இருந்தாங்க.

Karthik on March 9, 2010 at 7:59 PM said...

சத்தியமா முடியல. உங்களை இப்படிலாம் யோசிக்க சொல்லி யார் சொல்றா?

ILLUMINATI on March 9, 2010 at 9:02 PM said...

உமக்கு உடம்பெல்லாம் விசம்யா....
உம்ம பிரண்டு பாவம்.....
நண்பன் கல்யாணத்துக்கே இந்தக் கூத்துன்னா உம்ம கல்யாணத்துக்கு ... :)

நர்சிம் on March 9, 2010 at 10:01 PM said...

வாழ்த்துகள்

கனவுகள் விற்பவன் on March 9, 2010 at 11:03 PM said...

//வெறும் டம்ளரோடும், டவுசரோடும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன்//

வாய்???

கனவுகள் விற்பவன் on March 9, 2010 at 11:33 PM said...

50...

கார்க்கி on March 10, 2010 at 7:50 AM said...

பேராதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.. நன்றி..நன்றி

ஆர்.கே.சதீஷ்குமார் on March 10, 2010 at 11:50 AM said...

ஏன் 52 வதா ஒருத்தன் வரமாட்டானா....

ஆர்.கே.சதீஷ்குமார் on March 10, 2010 at 11:50 AM said...

53 வதாவும் ஒருத்தன் வருவான்

ஆதிமூலகிருஷ்ணன் on March 16, 2010 at 1:02 AM said...

சுவாரசியம். அதுமாதிரி அடிச்சாரா? அப்டேட் பண்ணவும்.

ஆமா, டம்ளர் ஓகே. அதெதுக்கு டவுசர்?

kannabiran, RAVI SHANKAR (KRS) on November 2, 2011 at 11:21 AM said...

இதை மெய்யாக்கவாணும், கார்க்கி திருமணம் விரைவில் அரங்கேறணும்:)
அரங்கேறட்டும் முருகா அரங்கேறட்டும்:)

 

all rights reserved to www.karkibava.com