Mar 7, 2010

முரண்


 

    வெள்ளிக் கம்பியாய் விழுந்து கொண்டிருந்தது அருவி. 17ஆம் நம்பர் பேருந்து அருவியைக் கடந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ஊருக்குள் நுழைந்து வலதுபக்க வளைவில் திரும்பியவுடன் துரத்த ஆரம்பித்தான் மகேஷ். இவன் ஓடி வருவதை பார்த்த கண்டக்டர் விசிலடித்து பேருந்தை நிறுத்தினார். பேருந்து நிற்கும் முன்னே முன்புற படி வழியா்க ஏறியவன் டிரைவர் சீட்டருகே இருந்த மாலை நாளிதழ் கட்டிலிருந்து ஒன்றை உருவியபடி ஓடினான். எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தார் கண்டக்டர். பேப்பருடன் அருவிப் பக்கம் ஓடியவன் ஓரிடத்தில் நின்று படப்படப்புடன் பேப்பரை புரட்டினான். முதல் பக்கத்திலே ஓரத்தில் கட்டம் ஒன்றில் மன்னிப்பு வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

“நேற்று வெளியான ப்ளஸ் டூ முடிவில் 89765432 என்ற எண் தவறுதலாக விடுப்பட்டிருந்தது. அச்சுப் பிழைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்”

காடு அதிர கத்தினான் மகேஷ். பேப்பரை சுக்கு நூறாக கிழித்து எறிந்து அருகிலிருந்த அருவியை நோக்கி ஓடியவன் “மேகலா” என்று கத்திக் கொண்டே எகிறி குதித்தான்

()()()()()

   இரண்டு கால்களையும் சேர்த்தபடி நேரான நிலையில் கிடத்தப்பட்டிருந்த மேகலாவுக்கு 17 வயதிருக்கும். அவள் கழுத்தில் இருந்த தடயத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டடி தள்ளி தொடாமல் அழுதுக் கொண்டிருந்தார்கள் சற்றே வயதான பெற்றோர். மேகலாவின் பெற்றோர்.

”ஏதாச்சும் லெட்டர் இருந்துச்சாய்யா” என்று அய்யா ஒருவர் சின்னய்யாவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதெல்லாம் இல்லை சார். ட்வெல்த்ல ஃபெயிலாயிருக்கு

அப்புறம் என்னய்யா? கேஸ க்ளோஸ் பண்ணிட்டு, போஸ்ட் மார்டம் செய்து பாடியை கொடுத்து விடுங்க.

()()()()()

இருட்டிக் கொண்டிருந்தது. தன்னுடைய அறையில் இருந்த மேஜையின் மீது தலை சாய்த்து படுத்திருந்தாள் மேகலா. அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருந்த திசையில் அழகிய ஷோகேஸ் தெரிந்தது. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்பைகளும், ஷீல்டுகளும் இடப்பற்றாக்குறையால் ஒன்றின் மீது ஒன்று உரசிக் கொண்டிருந்தன. இமைகள் தூங்கிவிட்டிருந்தன. கண்களில் இருந்து வழிந்து செல்லும் கன்ணீர் மேஜையை நனைத்து தரையில் சொட்ட துவங்கியிருந்தது. பழைய காலத்து மின்விசிறி ஒன்று சத்தத்துடன் சுற்றிக் கொண்டிருந்தது.

”ஸ்கூலுக்கு போனா படிக்கிற வேலையை மட்டும் பார்க்கனும். பசங்க கூட பேசறதுக்கில்ல இவ போனா”. அம்மா வயதில் இருந்தவரின் பேச்சுக்கு பிண்ணனி இசையாக செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார் ஒருவர். ”பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடி”

  ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை எழுந்து நிறுத்திய மேகலா, கொடியில் தொங்கிக்கொண்டிருந்த நீல நிற தாவணியை உருவினாள்.

()()()()()

வெள்ளிக் கம்பியாய் விழுந்துக் கொண்டிருந்தது அருவி. 17ஆம் நம்பர் பேருந்து அருவியை கடந்துச் சென்று கொண்டிருந்தது. பேருந்து ஊருக்குள் நுழைந்து வலதுப்பக்க வளைவில் திரும்பியவுடன் ஒரு கும்பலே துரத்த ஆரம்பித்தது. மகேஷ் தான் முதலில் ஏறினான். பேப்பர் கட்டில் இருந்து நாலைந்து பேப்பரை மட்டும் மகேஷிடம் எடுத்துத் தந்தார் கண்டக்டர். மொத்தக் கூட்டமும் மகேஷை விரட்டத் தொடங்கியது. பள்ளிக்கூடம் வரை ஓடிய மகேஷ் நின்று பேப்பரை புரட்டினான். அவனோடு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய எல்லோரின் எண்ணையும் பார்த்தான். 89765432  மட்டும் காணவில்லை. மேகலாவைப் பார்த்தான். பேப்பரை பிடுங்கிப் பார்த்த மேகலாவுக்கு இதயமே நின்றுவிட்டது. எல்லாப் பக்கத்தில் தேடியும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

()()()()()

”இந்த நேரத்தில எங்கடி போற” மேகலாவின் தாய் சத்தம் போட்டாள். பவித்ரா வீட்டுக்கு என்றபடி நடந்தாள் மேகலா. நான்கு தெரு தள்ளி போய்க் கொண்டிருந்த மேகலாவின் எதிரில் மகேஷ் வந்துக் கொண்டிருந்தான்.

இந்த நேரத்துல எங்க போற?

ம்ம்.பவித்ரா விட்டுக்கு என்று சின்ன புன்னகை பூத்தாள் மேகலா

எப்படியும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி பட்டணம் போயிடுவ படிக்க. என்னை மறந்துட மாட்டியே?

என்ன மகேஷ் பேசுற? நான் வாங்குற மார்க்ல பாதி உன்னுது.

அவ்ளோதான் எடுப்பேனா நான்?

அதில்ல முசுடு. நான் என்ன மார்க் வாங்கினாலும் அதுக்கு நீதான் காரணம். உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்டு கிடைக்க புண்ணியம் செஞ்சிருக்கனும்.

ஸ்டேட் ஃபர்ஸ்ட்டா.. டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்டா தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன்.

உன் ஃப்ரெண்ட்ஷிப் மேல நம்பிக்கை வை. ஸ்டேட் ஃபர்ஸ்ட் கூட வருவேன். உன் அன்பு உண்மைன்னா நல்ல மார்க் வரும்.நான் கிளம்பறேன். அம்மா கத்தும்.

அவள் மறையும் வரை காத்திருந்த மகேஷ் சிரித்தபடி சொன்னான் “அப்படின்னா நீ உலகத்துல ஃபர்ஸ்ட்டு வருவ செல்லம்”

()()()()()

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்திலே முதல் மாணவியாக வந்த மேகலாவை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். அவர் வகு”

கணக்கு வாத்தியார் பேசிக் கொண்டிருந்தார். எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்திருந்த அவளின் புகைப்படத்தை நண்பர்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மேகலா. ஆங்கிலத்தில் மட்டும் இன்னும் 5 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் மாநிலத்திலே முதலாவதாக வந்திருக்கலாம். அதற்கெல்லாம் கவலைப்படாமல் சந்தோஷமாக இருந்தாள். மேகலாவின் பெற்றோரின் படத்தை பிரசுரித்து இருந்தது தினமணி. மேகலாவை பேசும்படி அழைத்தார் கணக்கு வாத்தியார். அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவள் முகம் இறுக்கமானது. கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்க்க அதை துடைத்த படி மேடையேறியவள் வேறெதுவும் பேசாமல்

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்

என்று சொல்லிவிட்டு இறங்கினாள். தன் கைவலிக்க தட்டிக் கொண்டேயிருந்தான் மகேஷ், அடுத்து அவன் பேச வேண்டும் என்பதை மறந்து.

()()()()()

எட்டாம் வகுப்பு மாணவர்கள் திருக்குறள் போட்டிக்காக பேர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மகேஷுக்கும், மேகலாவுக்கும்தான் போட்டி என்று சொல்லிக் கொண்டிருந்தார் தமிழாசிரியர். போட்டி நாளும் வந்தது. ஆசிரியர் சொல்லும் வார்த்தையில் தொடங்கும் அல்லது முடியும் குறளைச் சொல்ல வேண்டும். போட்டி தொடங்குமுன் உனக்கு பிடித்த குறளை சொல்லு மேகலா என்றார் ஆசிரியர்.

 "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு"

42 கருத்துக்குத்து:

சுசி on March 8, 2010 at 12:06 AM said...

பாராட்டுவதற்கு வார்த்தைகளை தேடிட்டு இருக்கேன் கார்க்கி..

ரொம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு..

நாய்க்குட்டி மனசு on March 8, 2010 at 12:16 AM said...

வித்தியாசமான முயற்சி. கதையைக் கடைசியில் இருந்து வாசிக்கணும் , தானே , சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்

♠ ராஜு ♠ on March 8, 2010 at 12:30 AM said...

லேபிளை மாத்துங்க..இது சிறுகதையில்லை..திரைக்கதை.
God Screenplay.

சுசி on March 8, 2010 at 12:35 AM said...

ரொம்ப வித்யாசமான எழுத்து.

படிக்கும்போது இலகுவான நடையா தெரிஞ்சாலும் அங்கங்க உங்க டச்.. கலக்கல் கார்க்கி.

// வெள்ளிக் கம்பியாய் விழுந்துக் கொண்டிருந்தது அருவி.//

//இமைகள் தூங்கிவிட்டிருந்தன.//

//“அப்படின்னா நீ உலகத்துல ஃபர்ஸ்ட்டு வருவ செல்லம்”//

குறள்கள அவ்ளோ பொருத்தமா சேர்த்திருக்கீங்க.

Kathir on March 8, 2010 at 12:40 AM said...

நல்லாயிருக்கு சகா.

முகிலன் on March 8, 2010 at 12:41 AM said...

நல்ல கதை..புளிச்சிப் போன பழங்கஞ்சினாலும் நீங்க பரிமாறின பாத்திரம் சூப்பரா இருந்தது. இதே ஸ்டைல்ல நான் ரொம்ப நாள் முன்னாடி ஒரு கதை எழுதியிருந்தேன்..


படிச்சிப் பாருங்க.. :))

இராமசாமி கண்ணண் on March 8, 2010 at 12:52 AM said...

ரொம்ப நல்லா இருக்கு.

Anonymous said...

ஷார்ட் அண்ட் ஷாக்கிங்கா நல்லா வந்திருக்கு.

Rajeswari on March 8, 2010 at 8:10 AM said...

very nice:)

Ganesh on March 8, 2010 at 9:07 AM said...

//“அப்படின்னா நீ உலகத்துல ஃபர்ஸ்ட்டு வருவ செல்லம்”//

ரொம்ப நல்லா இருக்கு சகா....

தராசு on March 8, 2010 at 9:25 AM said...

இது என்ன ஸ்டைலுங்கண்ணா,
பின்னாலிருந்து படிக்கோணுமுங்ளாணா??

கலக்கீட்டீங்ணா.

Sivakumar on March 8, 2010 at 10:11 AM said...

nice one...though the content is old i like the time at which u chose the topic & story(+2 exam's are on).

forgot...this is 'memento' style story telling ...right? nice one

கார்க்கி on March 8, 2010 at 10:12 AM said...

நன்றி சுசி..

நன்றி நாய்க்குட்டி

ராஜூ, GOD or GOOd? :))))

நன்றி கதிர்

முகிலன், ஓ.... சீனியர் பாஸ் :)

நன்றி ராமசாமி

நன்றி சின்ன அம்மிணி

நன்றி

நன்றி கணேஷ்

நன்றி தராசு

புன்னகை on March 8, 2010 at 10:20 AM said...

நீங்களும் இப்படி தான் செய்தித்தாள் வாசிப்பீங்க போல??? கதை நல்லா இருக்கு கார்க்கி! மகளிர் தின சிறப்புப் பதிவு ஏதும் இல்லையா?

முரளிகுமார் பத்மநாபன் on March 8, 2010 at 10:27 AM said...

சகா கலக்கல், அருமையா இருக்கு

நர்சிம் on March 8, 2010 at 10:40 AM said...

நல்லா இருக்கு சகா.

Anbu on March 8, 2010 at 10:52 AM said...

அண்ணா...கலக்கல்...

செந்தில் நாதன் on March 8, 2010 at 11:27 AM said...

அசத்திடிங்க போங்க...

பிரியமுடன்...வசந்த் on March 8, 2010 at 11:49 AM said...

நல்லாருக்கு சகா...

கண்ணால் காண்பது பொய்ன்னு கூட சொல்லலாமா?

NO on March 8, 2010 at 12:49 PM said...

சிறுகதை புத்தம் வெளியிட்டவர்கள் எல்லாம் கொஞ்சம் வறீங்களா?

நல்லா இருக்கு. ஆனா இது நீங்க எழுதியதுதானா கார்க்கி? நம்பமுடியலையே

ரிஷி on March 8, 2010 at 12:52 PM said...

நல்லா இருக்கு சகா!!

கும்க்கி on March 8, 2010 at 2:25 PM said...

அட.,

யோசிச்சிட்டிருந்தேன்.

அதே மாதிரி.

வெரிகுட் ப்ரதர்.

பரிசல்காரன் on March 8, 2010 at 2:33 PM said...

வந்துட்டேன்!


கார்க்கி.. மெரட்டுது உன் புது அவதாரம்..!

ராஜூவோட கமெண்ட்டை ரொம்பப் பாராட்டறேன். நான் நெனச்சதும் அதே. எக்ஸலண்ட் ஸ்க்ரீன் ப்ளே. ஆதியை கேமராவோட, ராவோட ராவா வரச்சொல்லு. குறும்படம் பண்ணுங்க. செம!

வெள்ளிநிலா ஷர்புதீன் on March 8, 2010 at 3:17 PM said...

:) i want to act int his film... :)

Yuva on March 8, 2010 at 3:18 PM said...

Very Nice! Enjoyed it lot!!

திவ்யாஹரி on March 8, 2010 at 3:18 PM said...

சாதாரண கதையை ஹைடெக் கதையா மாத்திட்டீங்க.. ரொம்ப நல்லா இருக்கு கார்க்கி.. கலக்கிட்டீங்க.. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

கார்க்கி on March 8, 2010 at 4:00 PM said...

நன்றி சிவக்குமார்

புன்னகை, நன்றி

முரளிகுமார் நன்றி சகா

நன்றி நர்சிம்

நன்றி அன்பு

நன்றிச் செந்தில்

நன்றி வசந்த்

நோ, நன்றி. இப்ப எதுக்கு அவஙக்ள கூப்பிடறீங்க? அவங்கதான் எழுதி தந்திருப்பாங்கன்னு சொல்றீங்களா?

நன்றி ரிஷி

நன்றி கும்க்கி

நன்றி பரிசல். நிறைய கேரக்டர். படம் எடுப்பது சிரமம். அடுத்த கதை ஒருவனை மட்டுமே எழுத உத்தேசம்

வெள்ளிநிலா, எப்போ டிஸ்கஷன்..

நன்றி யுவா

நன்றி திவ்யாஹரி..

Kafil on March 8, 2010 at 4:18 PM said...

thala... vaayila irukura varaikum thaan brandy. kakkuna athu vaanthi... neenga Putti katha Eluthuveenga Eluthuveengannu naanum daily varren.. ipdi yemaathitte irukeengale.. Elu Phone Number kodunga .. avar kittaya avar kathaya Keppom...

Kafil on March 8, 2010 at 4:18 PM said...

thala... vaayila irukura varaikum thaan brandy. kakkuna athu vaanthi... neenga Putti katha Eluthuveenga Eluthuveengannu naanum daily varren.. ipdi yemaathitte irukeengale.. Elu Phone Number kodunga .. avar kittaya avar kathaya Keppom...

மோகன் குமார் on March 8, 2010 at 4:25 PM said...

ரொம்ப நல்லாருக்கு சகா. உங்களால் இப்படியும் எழுத முடியுமா?? அசத்திடீங்க

~~Romeo~~ on March 8, 2010 at 5:20 PM said...

நல்ல டச் இருக்கு சகா. கீழ் இருந்து படித்தால் சிறுகதை. மேல் இருந்து படித்தால் நல்ல திரைக்கதை.

அனுஜன்யா on March 8, 2010 at 6:26 PM said...

அட!

அனுஜன்யா

pappu on March 8, 2010 at 7:23 PM said...

நல்லா இருக்கு. ஆனா, இப்படி ரிவர்ஸில் எழுதியதிற்கு பர்பஸ் இருக்கா?

பெயர் சொல்ல விருப்பமில்லை on March 8, 2010 at 7:41 PM said...

அற்புதம்..............வேறென்ன சொல்ல?

சி.வேல் on March 8, 2010 at 9:25 PM said...

வணக்கம் கார்க்கி
ரொம்ப நல்லா இருக்கு சகா.

வித்தியாசமான அப்ரோச்

தர்ஷன் on March 8, 2010 at 10:04 PM said...

கதையை திருப்பி திருப்பி படிக்க வச்சிட்டீங்க சகா

ர‌கு on March 8, 2010 at 10:16 PM said...

இந்த‌ மாதிரி நிறைய‌ எழுதுங்க‌ கார்க்கி, என‌க்கென்ன‌வோ அடுத்த‌ எழுத்தாள‌ர் ரெடியாயிட்டு இருக்கார்னு தோணுது:)

கார்க்கி on March 9, 2010 at 8:26 AM said...

அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவில் இலவச சோறும் சரக்கும் போட்டாச்சு.. அங்க வாங்க

விக்னேஷ்வரி on March 9, 2010 at 4:13 PM said...

என்னப்பா இது? தலை சுத்துது.

ஆதிமூலகிருஷ்ணன் on March 16, 2010 at 1:10 AM said...

சாதாரண கதை. முடிவில் சிறிது அழுத்தம் தந்து, வித்தியாசமான டிரீட்மெண்டில் சிறப்பாகிவிட்டது.

தமிழ்ப்பறவை on March 18, 2010 at 9:41 PM said...

சகா... நல்லா இருக்கு....
வித்தியாசம்...

சுபத்ரா on November 25, 2010 at 2:00 AM said...

இம்போசிசன் மாதிரி ரெண்டு தடவை படிக்க வேண்டியதாப் போச்சு! :-)

இன்னோவேடிவ் தின்கிங்க் :)

 

all rights reserved to www.karkibava.com