Mar 4, 2010

மொக்கை ராக்ஸ்


 

மு.கு: என் மொக்கையை படிச்சு படிச்சு மொக்கையா மாறி, மொக்கையா  எழுத ஆரம்பிச்ச ஒரு புண்ணிய ஆத்மாவின் வலைப்பூவை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.. ஆரம்பமே மரண மொக்கை போடும் இவர், விரைவில் தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துகிறேன்

http://timepass-asha.blogspot.com/2010/03/blog-post.html

_____________________________________________-

அலாரம் ஷார்ப்பா(ப்பா.அதுவும் மொக்கையா இல்லை) காலை 8:30 மணிக்கு அடிச்சு எழுப்பி விட்டுருச்சு. கண்ண தொறக்க முடியாம ஒரு 5 நிமிஷம் படுக்கலாம்னு படுத்தேன். எந்திரிச்சு பார்த்தா மணி 11. ஆத்தாடி, ஆபீஸ் காப் (cab) மிஸ்(உடனே அப்ப கார் பெண்பாலான்னு கேட்காதிங்கப்பா) ஆய்டுச்சுனு அவசர அவசரமா எந்திரிச்சேன்.

இன்னும் 15 நிமிஷத்துலே கரண்ட் போய்டும். டிரஸ் வேற அயர்ன் பண்ணலே. சரி, மொத காரியமா அயர்ன் பண்ணுவோம்னு டிரஸ், அயர்ன் பாக்ஸ் எல்லாம் ரெடியா கட்டில் மேல வெச்சேன். பிளக் போட்டு திரும்புறேன் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னு ஒரு சத்தம். என்னான்னு திரும்பி பார்த்தா, தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தி போட்ட மாதிரி ப்ளக் பாயிண்ட்லே இருந்து நெருப்பு வருது. அய்யய்யோனு அலறி சுவிட்ச் ஆப் பண்ணேன். பிளக் பாயிண்ட், நான் சுட்ட அப்பளம் மாதிரி கருகி போய்டுச்சு. (எந்த ஹோட்டல் சுட்டன்னு கேட்க மாட்டிங்கதானே)அயர்ன் பாக்ஸ் பிளக், காதலியை கண்ட காதலன் மாதிரி உருகிடுச்சு.

எச்சிலை விழுங்கிட்டு சுத்தும் முத்தும் பார்த்தேன். நல்ல வேளை லைட், ஃபேன் எல்லாம் நல்ல படியா ஓடுச்சு.(ஆனா அசல்தான் ஓடல) ஒரு பெருமூச்ச வெளிய விட்டுட்டு, பிளக் பாயிண்ட்லே ஏதோ கோளாறு போல, நம்ம வேற பிளக் பாயிண்ட்லே போட்டு பாப்போம்னு அயர்ன் பாக்ஸ் பிளக்க வேற பிளக் பாயிண்ட்லே சொருகினேன். பயப்புள்ளே, ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷனும் காட்டலே. இதென்னடா சோதனைனு, பக்கத்து ரூம்லே இருந்து அயர்ன் பாக்ஸ் கடன் வாங்கி அயர்ன் பண்ணி ஒரு வழியா 12:30 க்கு வீட்டை விட்டு கிளம்பிட்டேன்.

அப்புறம் தான் தோணுச்சு, நாளைக்கு அயர்ன் பண்ண வழி இல்லையே. எவ்ளோ நாள் தான் பக்கத்து ரூம்லே இருந்து கடன் வாங்குறது. நமக்குனு ஒரு பிரஸ்டீஜ் இருக்குலே. (ஏன்?பிரிமியர் இல்லையான்னு கேட்டா வி.தா.வுக்கு அனுப்பிடுவேன்) அதனால, திரும்பவும் வீட்டுக்கு வந்து அயர்ன் பாக்ஸ் எடுத்து போய் கடையிலே ரிப்பேருக்கு குடுத்தேன். அந்த கடைக்காரன் வெவரமானவன். என் நெத்தியிலே என்னாத்த படிச்சானோ(நெத்தியடி மாதிரி, நெத்திபடி ) தெரியல, மேடம் சர்வீஸ் அமௌன்ட் Rs.800/- அப்படின்னு ஒரு குண்டு தூக்கி போட்டான். இதுக்கு நான் ஒரு புது அயர்ன் பாக்ஸ் வாங்கிடுவேன்னு சொல்ல, அவன் எங்க கடையிலே நெறைய மாடல் இருக்கு மேடம், பாருங்கனு சொன்னான். அவ்வ்வ்வ்வ்வ். எப்படியும் அயர்ன் பாக்ஸ் வேணும் அதனாலே, தொலையுதுன்னு (புகையுதுன்னுதானே வேற வாங்கற.இப்ப தொலையுதுன்னு சொல்றியேன்னு கேட்டா..) ஒரு புது அயர்ன் பாக்ஸ் வாங்கியாச்சு. (எவ்ளோ லன்ச் பாக்ஸ் வாங்குறோம். அயர்ன் பாக்ஸ் வாங்க மாட்டோமா பன்ச் டயலாக் பேசியிருக்கலாமோ?)

இந்த களேபரம் எல்லாம் முடிய மணி 1:00 ஆய்டுச்சு. ஒரு ஆட்டோ புடிச்சு, ஆபீஸ்க்கு வந்து க்யூபிக்கில்லே பேக் வைக்கும் போது மணி 1:30. அய்யய்யோ, லஞ்ச் டைம் ஆய்டுச்சு. தன்யா வெயிட் பண்ணிட்டு இருப்பானு, பில்டிங் அதிர அவ ப்ளோருக்கு ஓடினேன். அங்க பார்த்தா, காஷ்மீர் தீவிரவாதிய கண்ட கேப்டன் மாதிரி கண்ணே உருட்டி, செவப்பாக்கி நின்னுட்டு இருந்தா தன்யா. அத பார்த்து பயந்து, “அயர்ன் பாக்ஸ், ரிப்பேர், புதுசு வாங்கியாச்சு” னு மணிரத்னம் பட டயலாக் எல்லாம் சொல்லி, அவ கை, கால்லே விழுந்து, காண்டீன்க்கு அவள கூட்டிக்கிட்டு பறந்தேன். பசி!

18 கருத்துக்குத்து:

Chitra on March 4, 2010 at 12:10 PM said...

Thank you for introducing a nice mokkai. it is very funny!

ஆதிமூலகிருஷ்ணன் on March 4, 2010 at 12:22 PM said...

இருக்கறது பத்தாதுன்னு வர்றவங்களும் இப்பிடியாய்யா..

சுசி on March 4, 2010 at 12:55 PM said...

ஆதியை எக்கச்சக்கமாக வழி மொழிகிறேன்..

புன்னகை on March 4, 2010 at 1:39 PM said...

முடியல!!!

விக்னேஷ்வரி on March 4, 2010 at 1:44 PM said...

பதிவுல ஒண்ணும் மொக்கையா இல்லைன்னு தானே நடுவுல உங்க மொக்கையை சேத்திருக்கீங்க. அப்புறம் ஏன் இந்தத் தலைப்பு?

வர வர எங்க பாடு தான் திண்டாட்டமாகிடுச்சு. நீங்க எழுதுறது எல்லாத்தையும் வாசிக்க வேண்டியிருக்கு :(

கார்க்கி on March 4, 2010 at 1:56 PM said...

நன்றி தியாகு :))

சித்ரா, மொக்கைய வளர்க்கனும் மேடம். உயிர்மை மாதிரி மொக்கைமைன்னு ஒரு பதிப்பகம் தொடங்கனும். பல கனவு இருக்கு :))

@ஆதி, இருந்தாலும் உஙக்லையே நீங்க டேமேஜ் பண்ணக்கூடாது சகா. அதுக்குதான் நாங்க இருக்கோமில்ல

@சுசி, வீராதி வீர.. வீர குலத்திலக மொக்கை மகாராணியே மொக்கைக்கு எதிராகவா? அய்யகோ..

@புன்னகை, ஹிஹிஹிஹி

@விக்கி, நன்றி. அறிமுகம் தேவைப்படாத அளவுக்கு வளர்ந்த நீங்கள், கவிதையை நோக்கி சென்று கொண்டிருப்பதால் மொக்கையின் வீரியம் மறந்து போயிருப்பீர்கள். நாளையே ஒரு சூர மொக்கை போட்டு நினைவுப்படுத்துகிறேன் :)

விக்னேஷ்வரி on March 4, 2010 at 3:18 PM said...

மொக்கையை மறக்கல கார்க்கி. ஆனா, இது மொக்கைன்னு சொல்ற உங்களைத் தான் மன்னிக்க முடியாதுன்னு சொல்றேன்.

உங்களின் சூர மொக்கைக்கு வெயிட்டிங். :)

விக்னேஷ்வரி on March 4, 2010 at 3:19 PM said...
This comment has been removed by the author.
Anbu on March 4, 2010 at 4:24 PM said...

நடத்துங்க..நடத்துங்க..

அன்புடன் அருணா on March 4, 2010 at 4:46 PM said...

Really MOKKAI ROCKS!

Subha on March 4, 2010 at 7:40 PM said...

நாங்க கலை வளர்க்க பாடுபட்டு சாமியார் கிட்ட எல்லாம் வேண்டிகொண்டிருக்கும் போது நீங்க மொக்கை வளர்ப்பது சரியா

திவ்யாஹரி on March 4, 2010 at 7:47 PM said...

வர வர எங்க பாடு தான் திண்டாட்டமாகிடுச்சு. நீங்க எழுதுறது எல்லாத்தையும் வாசிக்க வேண்டியிருக்கு :(

:))) hahaha..

இய‌ற்கை on March 4, 2010 at 8:24 PM said...

:-))

வெற்றி on March 4, 2010 at 8:48 PM said...

//பிரிமியர் இல்லையான்னு கேட்டா வி.தா.வுக்கு அனுப்பிடுவேன்//

பிரிமியர் இல்லையா?

கேட்டுட்டேன்..டிக்கெட்ட வீட்டுக்கு அனுப்பி வையுங்க :)

வெற்றி on March 4, 2010 at 8:49 PM said...

//ஆனா அசல்தான் ஓடல//

அதுதான் எப்பவோ தியேட்டரை விட்டு ஓடியாச்சுல..இன்னும் ஓடலன்னு சொல்றீங்களே சகா :))

ர‌கு on March 4, 2010 at 10:57 PM said...

மொக்கைக்கு ம‌ட்டும்தான் ச‌ப்போர்ட் ப‌ண்ணுவிங்க‌ளா? மொக்காலுக்குலாம் ப‌ண்ண‌மாட்டிங்க‌ளா?...:)

"உழவன்" "Uzhavan" on March 5, 2010 at 11:37 AM said...

super :-))

நர்சிம் on March 5, 2010 at 12:43 PM said...

சபாஷ்

 

all rights reserved to www.karkibava.com