Mar 3, 2010

அவள் பெயர் தமிழரசி


 

  காதல் கேன்சர் என்றார் நண்பர் ஒருவர் ட்விட்டரில். இல்லை அது சுகர். அது வந்துடுச்சுன்னா ஏறவும் கூடாது.இறங்கவும் கூடாது. அப்படியே மெயிண்டைன் பண்ணனும் என்றேன் பதிலுக்கு. காதலி உடனிருக்கும் போது தெறிக்கும் காதலை விட அவள் விட்டுப் போன பின் வரும் கண்ணீருக்கே வேகம் அதிகம். அது போன்ற பாடல்கள் தமிழில் ஏராளம். சமீபத்தில் அஞ்சல. அதை விட மென்மையாக ஒரு பாடல் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் இருக்கிறது

வடக்கா தெக்கா கிழக்கா மேக்கா எந்த திசை போன புள்ள
என் நெஞ்சு கூடு தாங்கவில்லை.

முதல் வரியிலே சூழ்நிலையை விளக்கிவிடுகிறார். அதன் பின் ஒவ்வொரு வரியிலும் தனிமையில் தவிப்பனின் நிலைமையை கண்ணீரில் குழைத்து கொடுக்கிறார்கள்.

இரை தேடி போன பறவை நீ.. இன்னும் கூடு வந்து சேரலையே
என் இரு விழிகள் கரையுதடி..சொன்னாலும் கேட்கலையே..

காதலியை பிரிந்தபின் வரும் முதல் இரவை எவராலும் மறக்க முடியாது. தவளை கத்தும் சத்தமும், கீறிச்சிடும் பூச்சியின் ஒலியும் காதலனின் விசும்பலுக்கு துணையாக எதிரொலிக்கும். தன்னை உருக்கி வெளிச்சம் தரும் மெழுகின் ஒளியிலும் அவளின் முகமே தெரிய,வெளிப்படும் கண்ணீர் மெழுகின் மீது விழுந்து அதையும் அணைத்துவிடும். இரவின் அடர் இருளில் தொலைத்த காதலை தேடிக் கொண்டிருப்பான். தேடும் இடமெங்கும் அவள் ஏற்படுத்தி சென்ற தடயமே தெரியும்.

நீ முகம் பார்த்த கண்ணாடில உன் நெத்தி பொட்டு இருக்கு..
நீ குளிச்சு இடத்துலதான் மஞ்ச துண்டு கிடக்கு..
நீ விட்டத்துல சொருகி வச்ச கோழி இறக்கை இருக்குதடி..
நீ சிக்கெடுத்து போட்ட முடி கால சுத்தி கிடக்குதடி..

நம் பதின்ம வயது காதலியின் நினைவாக சேகரித்த சாக்லெட் பேப்பர், ரப்பர் பேண்ட் எல்லாம் நிழலாடி செல்கிறது. பல்லவிக்கும் சரணத்துக்குமிடையே புல்லாங்குழல் பிட் ஒன்று கரைக்கிறது நம்மை. இரண்டு கண்களால் அழுவதையே தாங்க முடியாத போது, அத்தனை கண்களால் குழல் அழுவும்போது ஏதோ செய்கிறது. வார்த்தைகளில் வீசும் கிராமிய மணம் இசைக்கோர்வையிலும், பாடகரின் குரலிலும் இல்லை என்பதைத் தவிர வேறு எந்த குறையும் தெரியவில்லை. பாடல் எழுதி மெட்டமைத்தது கூட காரணமாக இருக்கலாம். எல்லா வரிகளும் மனதைத் தைத்தாலும் இந்த வரி…………

நான் அழுத கண்ணீருல அரைக்காணி நனைஞ்சுடுமே..
அதுல உழுது விதைச்சாலும் ஒரு போகம் விளைஞ்சுடுமே.

கனத்த மனதோடு அடுத்த பாட்டுக்கு செல்ல முடியாமல் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கிறேன். மீள்வதற்குள் படம் வந்துவிடும். காதலை தரிசிக்க விண்ணைத் தாண்டி செல்ல வேண்டிய அவசியமில்லை. அது நம்மோடுதான் வாழ்கிறது. தமிழரசியை தரிசிக்க காத்திருக்கிறேன்.

aval-peyar-thamizharasi-photos-02

__________________________________________________________-

பாடலாசிரியர் : ஏகாதசி
பாடகர்                : வினீத் சீனிவாசன் (கத பறயும் போல் இயக்குனர் சீனிவாசனின் மகன்)
இசை                   :விஜய் ஆண்டனி

                                    பல்லவி

வடக்கா தெக்கா கிழக்கா மேக்கா எந்த திசை போன புள்ள
என் நெஞ்சு கூடு தாங்கவில்லை.

இரை தேடி போன பறவை நீ.. இன்னும் கூடு வந்து சேரலையே
என் இரு விழிகள் கரையுதடி..சொன்னாலும் கேட்கலையே..
(வடக்கா தெக்கா)

                                சரணம் - 1

நீ முகம் பார்க்கும் கண்ணாடில உன் நெத்தி பொட்டு இருக்கு..
நீ குளிச்சு இடத்துலதான் மஞ்ச துண்டு கிடக்கு..
நீ விட்டத்துல சொருகி வச்ச கோழி இறக்கை இருக்குதடி..
நீ சிக்கெடுத்து போட்ட முடி கால சுத்தி கிடக்குதடி..
என்னை சுத்தி எல்லாமே உன் பேரத்தான் சொல்ல
ஒத்தையிலெ விட்டுப்புட்டா நான் எங்க செல்ல..
நான் எங்க செல்ல
(வடக்கா..)

                                சரணம் –2

நீ விரல் நீட்டி பேசயில அடி வானவில்லு உதிக்கும்
நீ நடந்த தடத்துலதான் சொர்க்க வாசல் திறக்கும்
நீ அன்னமுன்னு தெரியாம அம்பு கொண்டு எய்ஞ்சுப்புட்டேன்
இந்தப் பாவம் தீர்த்துடத்தான் எந்த ஆத்தில் குளிக்கப் போவேன்
நான் அழுத கண்ணீருல அரைக்காணி நனைஞ்சுடுமே..
அதுல உழுது விதைச்சாலும் ஒரு போகம் விளைஞ்சுடுமே.
அதுல ஒரு போகம் விளைஞ்சுடுமே..
(வடக்கா தெக்கா)

 

28 கருத்துக்குத்து:

ரிஷி on March 3, 2010 at 10:42 AM said...

Nice One!

ROMEO on March 3, 2010 at 10:49 AM said...

பாடல் வெளிவந்து ரொம்ப நாள் ஆச்சு சகா. அதே படத்தில் இருக்கும் " நீ ஒத்த சொல் சொல்லு" பாடலும் அருமை.

pappu on March 3, 2010 at 11:02 AM said...

பாஸ் ஒவ்வொரு படப் பாடலுக்கு எதிர்பார்க்கிறேன்னு சொல்றீங்க. சொல்ற படமெல்லாம் கவுந்திருதே?

பைதிவே, என்னை கிரெடிட் செய்யலயே?

Anbu on March 3, 2010 at 11:08 AM said...

டவுண்லோட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு..இனிமே தான் கேட்கணும்

புனிதா||Punitha on March 3, 2010 at 12:01 PM said...

nice song review :-)

சுசி on March 3, 2010 at 12:42 PM said...

//இரண்டு கண்களால் அழுவதையே தாங்க முடியாத போது, அத்தனை கண்களால் குழல் அழுவும்போது ஏதோ செய்கிறது.//

பாடல் முதல் தடவை கேட்டப்போவே மனசு கனத்துப் போச்சு. இப்போ உங்க விமர்சனம் படிச்சதும்..

அருமையா எழுதி இருக்கீங்க கார்க்கி.

விக்னேஷ்வரி on March 3, 2010 at 1:49 PM said...

இன்னாப்பா.. தோழி விட்டுட்டு ஓடிப் போயிச்சா.. ;)

தர்ஷன் on March 3, 2010 at 2:03 PM said...

காதலி பிரிந்த பின் வரும் முதலிரவா என்ன சகா சொல்றீங்க

நாய்க்குட்டி மனசு on March 3, 2010 at 2:09 PM said...

இரண்டு கண்களால் அழுவதையே தாங்க முடியாத போது, அத்தனை கண்களால் குழல் அழுவும்போது ஏதோ செய்கிறது//
wow! superb!!

ஜெட்லி on March 3, 2010 at 2:35 PM said...

இப்பதான் இந்த பாட்டு கேட்டேன்...நல்ல பீலிங்க்ஸ் சாங் !!
நம்ம fauvorite குஜு குஜு கூட்ஸ் வண்டியும்....
பாளையம்கோட்டை பாட்டும் தான்.....

புன்னகை on March 3, 2010 at 2:43 PM said...

//பல்லவிக்கும் சரணத்துக்குமிடையே புல்லாங்குழல் பிட் ஒன்று கரைக்கிறது நம்மை. இரண்டு கண்களால் அழுவதையே தாங்க முடியாத போது, அத்தனை கண்களால் குழல் அழுவும்போது ஏதோ செய்கிறது.//

வைரமுத்துவின் தாக்கம்???

தோழி கிட்ட தான் சண்டை ஏதும் இல்லையே? அப்புறம் ஏன் இவ்ளோ வயலின்கள்???

கார்க்கி on March 3, 2010 at 3:44 PM said...

நன்றி ரிஷி

ரோமியோ, நாலு பாட்டு பிடிச்சுது. கூட்ஸ் வண்டியும், மராத்தி பாட்டும் கூட

பப்பு, பாட்டு நல்லாத்தாம்ப்பா இருக்கு. ஹிட் கூட ஆகுது. ஆனா படம் ஊத்தினா என்ன செய்ய? :))

அன்பு, கேட்டுப்பாரு..உனக்கு பிடிக்கும்

நன்றி புனிதா. இதை நல்ல பாட்டோட விமர்சனம் என்று எடுப்பதா, பாட்ட பத்தி நல்ல விமர்சனம் என்று எடுத்துக்கவா?

நன்றி சுசி

விக்கி, முதலில் தோழி எப்ப வந்தாங்கன்னு சொல்லுங்க. எனக்கே தெரியாம.

தர்ஷன், அவள் இல்லாம போன முதல் இரவுதானே?

நன்றி நாய்க்குட்டி. எவனோ ஒருவன் பாடலில் கூட அதை சொல்லுவாரு கவிப்பேர்ரசு

ஜெட்லி, கூட்ஸ் வண்டி கலக்கல் பாட்டுப்பா

புன்னகை, ஹிஹிஹி, சரியா சொல்லிட்டிங்க :)

பிரியமுடன்...வசந்த் on March 3, 2010 at 4:10 PM said...

பாட்டு கேட்டேன் சகா நெஞ்சு குழியில ஆழமா ஆணி இறங்குதே சகா வடக்கா
தெற்க்கா...

ராஜன் on March 3, 2010 at 4:39 PM said...

ஹிஹிஹி...

Mottai on March 3, 2010 at 4:42 PM said...

Just adding a count in comments as you felt bad that everybody is talking about nithyananda and R today. :)

Jokes apart, I like Vijay Antony. Will definitely hear the song.

gulf-tamilan on March 3, 2010 at 4:53 PM said...

இன்னும் பாட்டு கேக்கல!.

gulf-tamilan on March 3, 2010 at 4:54 PM said...

இன்னைக்கு டெளன்லோடு செய்து கேட்கிறேன்.

gulf-tamilan on March 3, 2010 at 4:56 PM said...

வி.தா.வா.ஏன் பிடிக்கல இன்னும் சொல்லவேயில்ல

gulf-tamilan on March 3, 2010 at 4:58 PM said...

/தோழி கிட்ட தான் சண்டை ஏதும் இல்லையே? அப்புறம் ஏன் இவ்ளோ வயலின்கள்???/
அட இத கவனிகல :))

தண்டோரா ...... on March 3, 2010 at 5:04 PM said...

நீ ஒரு பீர்தானே அடிச்சே!!

அன்புடன் அருணா on March 3, 2010 at 5:10 PM said...

இன்னும் பாட்டு கேக்கல!கேட்டுட்டுச் சொல்றேன்!

கார்க்கி on March 3, 2010 at 6:03 PM said...

வசந்த், காட்சியாக இன்னும் நல்லா இருக்கும்னு நம்பறேன்

ராஜன், எதுக்கு இது?

மொட்டை, நன்றி பாஸ். :) அது ச்சும்மா. வெளையாட்டுக்கு

நன்றி கல்ஃப் தமிழன். வி.தா.வ.வில் இசை, சிம்பு, த்ரிஷா, ஒளிப்பதிவு என எல்லாமே பிடிச்சது. பிடிக்காத ஒரே ஆள். கெளதம். மொக்கை ஸ்ப்ரிப்ட் பாஸ் அது

தண்டோரா, நான் பீர் அடிப்பதில்லை தோழரே

கேட்டு மார்க் போடுங்க டீச்சர்

தமிழ்ப்பறவை on March 3, 2010 at 9:21 PM said...

கண்டிப்பாக் கேட்கணும் சகா...
வரிகள் நல்லா இருக்கு...
//இரண்டு கண்களால் அழுவதையே தாங்க முடியாத போது, அத்தனை கண்களால் குழல் அழுவும்போது ஏதோ செய்கிறது//
க்ளாஸ்...

வெற்றி on March 3, 2010 at 9:29 PM said...

அடப்போங்க சகா..நீங்க இப்புடித்தான் ஏத்தி விடுவீங்க..நாங்க அத நம்பி முதல் நாளே படம் பார்ப்போம்.நாங்க சிலாகிச்சு படத்த பீல் பண்ணி நல்லா இருக்குன்னு சொன்னா நீங்க வாந்தி,சதின்னு சொல்வீங்க..(நாங்க மொக்கைன்னு சொன்னா நீங்க பூந்தினு சொல்லுவீங்க):)

புலவன் புலிகேசி on March 4, 2010 at 9:01 AM said...

இன்னும் பாடல்கள் கேட்கவில்லை...கேட்கிறேன்

r.selvakkumar on March 4, 2010 at 12:10 PM said...

நாளைக்கு தியேட்டர்ல காட்சியுடன் பார்க்கப் போகிறேன்.

cheena (சீனா) on March 5, 2010 at 3:06 AM said...

பாட்டு புது விதமா நல்லா இருக்கு - படம் பாப்போம்

Priya on March 7, 2010 at 4:33 AM said...

நைஸ்!

 

all rights reserved to www.karkibava.com