Mar 31, 2010

தோழிப்பண்ணை

33 கருத்துக்குத்து

 

  உலக வெப்பமயமாக்கல் குறித்த விழிப்புணர்ச்சிக்காக எல்லா இடங்களிலும் மின்சாரத்தை நிறுத்தி வைத்த அன்று நடந்தது இது, நானும் தோழியும் எங்கள் வீட்டு பால்கனியில் பேசிக் கொண்டிருந்தோம். கீழே இருந்து ஒருவர் கத்தினார் “கார்க்கி. மெழுவர்த்தியைக் கூட அணைச்சு விடனுமாம்”. சிரிக்கப் போன தோழியை தடுத்து நிறுத்தினேன். எமெர்ஜென்ஸி விளக்கு என்று சொல்லிவிடுவார்களோ என பயந்து.

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  

சிக்கனை மட்டும் சிக்கன எண்ணம் இல்லாமல் சாப்பிடுவாள் தோழி. ”நீ ஏண்டா கோழிப்பண்ணை ஆரம்பிக்க கூடாது” என்றவள் என்ன நினைத்தாளோ முகத்தை சுழித்துக் கொண்டு சொன்னாள் “நீ தோழிப்பண்ணை நடத்ததாண்டா லாயக்கு”

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥   

நான்கு நாட்கள் சுற்றுலா சென்று திரும்பி வந்த தோழி சொன்னாள் “நீ இல்லாம நான் சிம் கார்டு இல்லாத மொபைல் போல ஆயிட்டேண்டா”. மனசு முழுக்க சந்தோஷத்துடன் ஒரு ஆற்றங்கரையில் அவள் சிரித்துக் கொண்டிருந்த புகைப்படத்தை பார்த்து அவளைப் பார்த்தேன். எமர்ஜென்சி கால்ஸ் அலவ்ட் தானே? என்றாள்.

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  

தும்மும் போதெல்லாம் God bless you என்பது தோழியின் வழக்கம். ஒரு நாள் அப்படி சொன்னபோது எந்த காட் என்றேன். “ம்ம்ம்ம். நான் தான்” என்றாள். good என்றேன். “Good. இல்லடா God” என்றாள். “தெரியும். நான் godக்கு O போட்டேன். அதான் Good ஆயிட்டாரு” என்றேன்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

எல்லாத்துக்கும் சங்கம் தொடங்கறாங்களே. காதலுக்கு சங்கம் ஆரம்பியேண்டா என்ற தோழியிடம் “ நான் காதலிக்கும் தங்கம் மட்டும் எனக்கு போதும்” என்றேன். சிறிது நேரம் எந்த பதிலுமில்லை. “ஐ லவ் யூ டா சிங்கம்” என்று சொல்லியிருக்கலாம் தோழி. இன்னும் என் பயிற்சி போதவில்லையோ என்றேன். “ம்க்கும். இந்த பயிற்சி ரொம்ப முக்கியம்” என்றவள் நானறியாததை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்

♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥  ♥ 

Mar 30, 2010

சுறா– புட்டு இல்ல மச்சி… ஹிட்டு

42 கருத்துக்குத்து

 

Sura 1

1) வெற்றி கொடி ஏத்து (ரஞ்சித் &முகேஷ்) வாலி, எஸ்.பி.ராஜ்குமார்

எதிர் நீச்சல் போட்டு வந்த எங்க வீட்டுப் பிள்ளை

வெற்றி என்ற சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை

என்ற தொகையறாவோடு தொடங்குறது பாடல்.அதிரடி பாடல் இல்லை. ஆனால் ஓப்பனிங் பாடலாகத்தான் தெரிகிறது. அதனால் விஜய் ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமாக தெரியலாம். பழைய கஞ்சிதான். ஆனால் எளிதில் ரீச்சாகும் பீட்டிலே நடைப் போட்டிருக்கிறார் மணிஷர்மா. கேட்க ஓக்கே. ஆனால் முதல்நாள் அரங்கில் ரசிகர்களை உசுப்பேற்றுமா என்பது கேள்விக்குறிதான். அதனை சரிக்கட்டும் விதத்தில் இடையே ஒரு பி.ஜி. எம்மை மட்டும் வேகமாக போட்டிருக்கிறார்கள்.

”இனி வருங்காலம் நம் கையில்தாண்டா” என்ற வரி நிஜமானால் சந்தோஷம்.  நேற்று நடந்த இசை வெளியீட்டில் பேசிய விஜய் “இனிமேல் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாம். 3 இடியட்ஸ் செய்ய ஆசைப்படுகிறேன். விரைவில் நல்ல செய்தி வரும்” என்றிருக்கிறார். காலம் பதில் சொல்லும் வரை அமைதி காக்கிறேன்.

2) வங்க கடல் எல்லை (நவீன், மாலதி) கபிலன்

டிபிக்கல் விஜய் குத்து. ஆரம்ப அடியே இது அந்தப் பாட்டு இல்லை என்று சொல்ல வைக்கும். அதனாலென்ன? முடிஞ்சா ஆடாமல் சொல்லுங்க அதை என்கிறார் மணிஷர்மா. மாலதியும், நவீனும் பாடவில்லை. ஆடியிருக்கிறார்கள். படம் நல்லாயிருந்தா தமிழக திரையரங்குகளில் இன்னொரு அப்படி போடுதான். தமன்னா. பார்த்து ஆடும்மா தாயீ. செம குத்து.

ஊருக்குள்ள எத்தனையோ ஆம்பிளை பார்த்தேன்
உன்னை மட்டும் உன்னை மட்டும் மாப்பிள்ளை பார்த்தேன்..
ரைட்டு

3) தஞ்சாவூர் ஜில்லாக்காரி (ஹேராசந்திரா, சைந்தவி) நா.முத்துக்குமார்

”பாட்ட பாடிட்டு போகமுடியாது. அது நெலைக்காது. அதுவா நடக்கணும். நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டு திருப்பணும். அதான் செம பாட்டு. அது எனக்கு நடந்தது. என்ன அடிச்சது அந்த பாட்டு”

சூ மந்திரகாளி…. பிக் ஆஃப் த ஆல்பம் என்பார்களே.. அந்தப் பாட்டு இதுதான் என்று தோன்றுகிறது. அதிக வேகம் ஆபத்து என்பதை மணிஷர்மா எப்போதும் தெரிந்து வைத்திருக்கிறார். டோலு டோலுதான் போல மிதமான வேகத்தில் மிரட்டுகிறார். யாருப்பா ஹேராசந்திரா? புதுசு புதுசா வந்து கலக்கறாங்க.”பொம்மாயி பொம்மாயி” எளிதில் நம் உதட்டில் ஒட்டாது என்பதை ஒப்புக் கொண்டாலும் இந்தப் பாடல் விரைவில் இன்னொரு தளபதி கீதம். நோட் பண்ணிக்கோங்க.

சூ மந்திரகாளி.. I wanna make u காலி
give me my தாலி. my life ஜாலி ஜாலி

நா.முத்துக்குமார் வாழ்க வாழ்க…

4) சிறகடிக்கும் நிலவு (கார்த்திக், ரீட்டா) சினேகன்

    மணிஷர்மாவின் மெலடி எப்போதுமே ஸ்பெஷல். மெல்லினமே,சர்க்கரை நிலவே,  கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு, தமிழ்தமிழ் என எல்லா மெலடியும் மெகா ஹிட். இந்த முறை சுமாரான பாடலாகத்தான் தெரிகிறது. இந்த மெலடிகள் மட்டும் எனக்கு வைனைப் போல. கேட்க கேட்கவே பிடிக்கின்றன. எனவே காத்திருந்து பார்ப்போம். கார்த்திக்கின் குரல் வசீகரம் குறையாமல் ஒலிக்கிறது. நியூசிலாந்துக்கு சென்ற வாரம் சென்றதாம் படக்குழு. வேறு எந்த பாடலாய் இருக்கும்? ராஜூ சுந்தரமாக இருந்தால் கொண்டாட்டம்தான்.

புன்னகைகள் சிந்தும் பொன்னகையும் நீதான்
பெண்ணுலகம் ரசிக்கும் பேரழகன் நீதான்

அந்த மாதிரி காட்டுங்கப்பா. சின்னத்தாமரை மாதிரி சோதனைகள்(experiment) வேண்டாமே

5)  நான் நடந்தால் அதிரடி (நவீன், ஷோபா) கபிலன்

இன்னொரு டூயட். இது மணிஷர்மா ஸ்பெஷல் எனலாம். ஹெட்ஃபோனில் கேட்பவர்களுக்கு தோதான பாடல். பேஸ் கிட்டார் விளையாடுகிறது. ஷார்ப்பான பீட்ஸும், நவீனின் குரலும் இசைந்திருக்கும் அழகை ரசிக்கலாம். சின்ன சின்ன இசைக் குறிப்புகளுக்கு கடுமையாக உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர். அழகாய் வந்திருக்கிறது. படம் வெளிவந்த பின் தளபதியும், தமன்னாவும் ஆடுவதை பார்ப்பதே தலை’யாய வேலையாக இருக்கும். எனவே ஹெட்ஃபோனில் ஒரு முறை இப்போதே கேட்டுவிடுங்கள்.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

உள்ளத்தின் கூச்சல் நீ.. உள்ளுக்குள் காய்ச்சல் நீ
ரத்தத்தில் காதல் நீச்சல் நீ

ஆதி, இது ஓக்கேவா? கபிலன் தான்

6) தமிழன் வீரத் தமிழன் (ராகுல் நம்பியார்) கபிலன்

தீம் சாங். அப்புறமா கேட்டுக்கலாம். நான் தஞ்சாவுரு கேட்க போகிறேன்.

பி.கு: கந்தசாமி, ஆதவன், வேட்டைக்காரன் என நான் நல்லா இருக்குன்னு சொன்ன படங்கள் எல்லாம் ஆரம்பத்தில் பலரும் மொக்கை என்று பின்னூட்டமிட்டார்கள். ஆனால் அந்தப் பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பியது என்பதை அறீவீர்கள். (நக்கீரன், ரிப்போர்ட்டர் மாதிரி புலம்ப விட்டாங்களே) எனவே காத்திருங்கள். சுறா வேட்டை தொடங்கும்வரை. என்னைப் பொறுத்தவரை இது விஜயின் சமீபத்திய சிறந்த ஆல்பம்.

உங்களுக்காக பாடலின் சிலப் பகுதிகள்.

http://www.youtube.com/watch?v=0osJczU-Zkc&hl=en_US&fs=1&

வீடியோ உபயம் : haro2k10

Mar 29, 2010

சங்கத்து ஆள அடிச்சது எவண்டா?

40 கருத்துக்குத்து

 

ஹலோ. நான் இதுவரைக்கும் வலையுலகம் விஷயத்த பத்தி எழுதல.

அடேய் போன வாரம்தானே பதிவர் வீட்டுல கேமரான்னு எழுதின.

அது போன வாரம். நான் சொல்றது இந்த வாரம்

   கைப்புள்ள சங்கம் மாதிரி இல்லாம நல்லபடியாக ஒரு குழுமம் ஆரம்பிக்க நினைத்தது ஒன்றும் படுபாதக செயலாக தெரியவில்லை. ஆனால் வேறு வழியில்லாமல் சங்கம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஒருங்கிணைப்பாளர்களை காயப்படுத்த வேண்டியதாகிவிட்டது. சங்கமோ, குழுமமோ.. ரெஜிஸ்டர்டோ அன்அப்ரூவ்டோ. டீயோ சரக்கோ.. மெரீனாவோ லைப்ரரியோ… சென்னையோ.திரு… இல்லல்ல.. அது மட்டும் சென்னைதான். எங்க நம்ம மக்கள் கூடினாலும் நான் வர்றேன்ப்பா. அவ்ளோதான் சரி. சங்கத்து முதல் சந்திப்பில் நடந்த சில முக்கிய விஷயங்கள்.

ஜாக்கி சேகரைப் பார்த்து அண்ணே பதிவர் தன்னை அழகாக படமொன்று எடுக்க சொன்னார். ”அச்சச்சோ தெரிஞ்சிருந்தா பெரிய கேமரா எடுத்துட்டு வந்திருப்பேனே” என்றார் ஜாக்கி. உடனிருந்த நான் ”பரவாயில்ல, சின்ன சைஸிலே எடுங்க” என்றேன். முறைத்த ஜாக்கி ”இல்லப்பா. அட்வான்ஸ் டெக்னாலஜி கேமரான்னு சொன்னேன்” என்றார். நானும் விடாமால் “ஓ. அப்துல்லா மாதிரி ஆளுங்கள அழகா எடுக்கிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துடுச்சா” என்றபடி நகர்ந்துவிட்டேன். ஏன் நகர்ந்தேனா? டெக்னாலஜி இல்லைன்னா உங்காள வச்சு எப்படி படம் எடுக்கிறாங்கன்னு கேட்டாருன்னா என்ன செய்றது?.

மொபைலை நோண்டியபடி இருந்தார் நம்ம அழகியதமிழ்மகன். என்னதான் சகா பண்றீங்கண்ணு கேட்டேன். “Will you come for dinner. or will HAVE and come?”என்ற மெசஜை காட்டினார். அது என்ன சகா have மட்டும் கேப்ஸ்ல இருக்கு என்றேன். சிரித்தார். என்னமோ ஆயிடுச்சு இவருக்கு என்று எதிர்புறம் சென்று அமர்ந்துக் கொண்டேன். அதே சகாவிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. “shall we HAVE vodka tonight?” . ரைட்டு

தங்கமணி பதிவருக்கு கால் மேல கால் வந்துச்சு. ஓரங்கட்டி பேசிக் கொண்டிருந்தார். ”அண்ணியாண்ணே என்றேன். ம்ம் என்று தலையாட்டியவர் சிறிது நேரத்தில் பக்கத்தில் வந்து அமர்ந்தார். என்னண்ணே பிரச்சினை என்றேன். கிட்ட      வா கிட்ட வா  கிட்டவா என்று காற்றுபுகாதபடி இழுத்தவர் காதில் சொன்னார் “பூரி செய்றாளாம். எழும்ப மாட்டுதாம். என்ன செய்யன்னு கேட்கிறாப்பா உங்கண்ணி” என்றார். நம்மால் ஆன உதவிய செய்யலாம் என்று தலையை பிய்த்து ஒரு வழி சொன்னேன். கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டார். என்ன சொன்னேனா? “பக்கத்துல அலாரம் வச்சு பார்க்க சொல்லுங்கண்ணே. எழுந்திருக்கும்”

  தெளிவான அஜெண்டா இல்லததாலும், திறமையான ஒருங்கிணைப்பாளர் இல்லாததாலும் சந்திப்பு சவசவ என்று போவதாக இன்னொரு நண்பர் வருத்தப்பட்டார். இப்படி ஒருவராவது இருக்கிறாரே என்று அவருடனே உட்கார்ந்துக் கொண்டேன். இறுதிவரை ஆர்வமாக அனைவரின் பேச்சையும் கூர்ந்து கவனித்தபடி இருந்தவரிடம் “சகா முடிஞ்சிடுச்சு வாங்க போலாம் என்றேன். சாய்ந்தபடி அமர்ந்திருந்த மகான் நேராக அமர்ந்துக் கொண்டு சொன்னார் “தம்பி. டீ இன்னும் வரல”

சரி. மத்த கதையை விடுவோம். இப்போ என் கருத்து என்னன்னு சொல்லிடறேன். என்னைப் பொறுத்த வரைக்கும் உலகத்துல இருக்கிற எல்லா சங்கத்தையும் கலைக்கனும். சென்னை குழுமத்தையும்தான். ஆனா சங்கத்தை கலைக்கணும்ன்னா முதல்ல கூட்டணுமில்ல?. அதனால சங்கம்னு ஒன்னு தொறக்கிறத நான் ஆதரிக்கிறேன். சங்கம் இல்லைன்னாலும் ஈகா, அபிராமி, மோட்சம்னு ஏதாவது ஒன்னு ஆரம்பிங்கப்பா. ஏன்னா எனக்கும் பொழுது போகனுமில்ல.

பி.கு: இதே லேபிளில் இன்னும் சில பதிவுகள் வெளிவரலாம்.

Mar 26, 2010

ஊத்திக்கோ ஸ்பெஷல்

33 கருத்துக்குத்து

 

   ஒரு நாள் வெளியே சென்று வந்த களைப்பில் இருந்தாrர்கள் என் அம்மாவும், பப்லு அம்மாவும். நான் டிஃபன் செய்றேன்ம்மா என்று கிளம்பினான் பப்லு. சிறுது நேரத்தில் திரும்பி வந்து ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைத்தான். (என் முன்னாடி இல்லப்பா) “ஏன் மம்மி தோசை ஊத்துறதுன்னு சொல்றாங்க? தோசை மாவு ஊத்தறுதுன்னு தானே சொல்லனும்?”.  நமக்கு பிறந்தது இவ்ளோ புத்திசாலியான்னு கொஞ்சினார்கள். சரி மம்மி. நான் போய் தோசை மாவு ஊத்தறேன்” என்று சூறாவளி கிளம்பியது. குழந்தைக்கு ஹெல்ப் செய்யுடா தண்டசோறு என்று என்னையும் அனுப்பினார்கள். அங்க போனா….. இருந்த மொத்த மாவையும் தரையில் ஊத்தி வச்சிருந்தான்.  அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் “மம்மிதான் மாவ ஊத்த சொன்னாங்க”

_______________________________

கடைசியா போட்ட புட்டிக்கதையை படிச்சிட்டு நம்ம குஜராத் குமரன் மெயில் அனுப்பினார். அலுவலகத்தில் பின்னூட்டமிட முடியாதாம். அதான் மெயிலாம்.  பதிவைப் படித்து விட்டு ஊ.ஊ.சி சகா என்றார்.  “வி.வி.சி” என்பதே விடுதலை சிறுத்தையா எனக் கேட்ட அறிவாளி நான். அது விழுந்து விழுந்து சிரிப்பது என்பது நான் கேட்டபின் ஒருவர் அப்படி சிரித்த போதுதான் தெரிந்துக் கொண்டேன். இது என்னப்பா புதுசா ஊ. ஊ. சி என்றேன். கையில் காஃபி கப்பை வைத்துக் கொண்டே படித்தாராம். ஆங்காங்கே ஏழு செய்த கலாட்டாவைப் படித்து காபியை கிபோர்டின் மேல் ஊத்தி ஊத்தி சிரித்தாராம். அதுதான் ஊ. ஊ. சி. என்றார். அதுவும் சரிதான். ஏழுவுக்கு ஊத்த ஊத்த நமக்கு சிரிப்புதான்

_____________________________

தோழி அப்டேட்ஸ் படிச்சு இருக்கிங்க இல்ல?  நீண்ட நாள் கழித்து ட்விட்டரில் ஒரு தோழி அப்டேட் போட்டேன். “உன் பிரிவில் உன்னிடத்தில தான் பேச முடியவில்லை. ஆனால் அனைவரிடமும் உன்னைத் தவிர வேறொன்றும் பேச முடியவில்லை # தோழி பறந்து போச்சு”.  ஒருவரும் பதில் அளிக்கவில்லை. என்னடா என்றால் ”ஊத்தி முடிய பின் எதற்கு பேச வேண்டும்? கார்க்கியை விடவா நல்ல ஆள் கிடைக்க போறா தோழிக்கு” என்றார் சகா ஒருவர். பொதுவாக ரிலேஷன்ஷிப் ஊத்திக்கிட்டா கூடவே இருந்து ஊத்திக் கொடுக்கும் நண்பர்கள் மத்தியில் இவர் வித்தியாசமாக தெரிந்தார். புத்திசாலித்தனமாகவும் பேசினார்.  ஆனால் தோழி என்ற ஒன்று கற்பனை என்று நான் சொல்வதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார் என்று தெரியவில்லை.

_________________________________

பிரபுதேவா பற்றிய பேச்சு வந்தது எங்கள் நட்பு வட்டாரத்தில். ஊத்திக்கின்னு கடிச்சுக்கவா படத்தில் ராமாயணத்தை வெகு சிறப்பாக சில நொடிகளிலே காட்டியிருப்பார் பிரபு. அப்போதே இவர் இயக்குனராக ஆவார் என்று நான் சொன்னதை நினைவிருக்கும் வரை மறக்க முடியுமா என்று இப்போது சொன்னான் நண்பன் ஒருவன். பேச்சு வேறு திசைக்கு சென்றது. கடிச்சிக்கிட்டும் ஊத்திகலாம் என்பது டெக்னிக்கலி ராங்காம். ஊத்திக் கொண்ட பின்தான்கடிக்க வேண்டுமாம். ஏன்னு கேட்பதற்குள் அவன் ஊத்திக்  கொண்டு கடித்து மட்டையானதால் கேட்க முடியவில்லை. உங்களுக்கு தெரியுமா?

_____________________________________

அஜித்தின் அடுத்தப்படம் பற்றி ஒரு ஸ்கூப் செய்தி கிடைத்தது. அதை எழுதலாம் என்று தொடங்கியபோது எச்சரிக்கை மணி அடித்தது. ஊத்திக்கோ ஸ்பெஷல் பதிவில் அவரைப் பற்றிய செய்தி போடும் நுண்ணரசியலைக் கண்டிக்கிறேன் என்று கார்த்திக்கோ, ராஜூவோ பின்னூட்டமிட்டுவிட்டால் விழப்போகும் கும்மாங்குத்தையோ வரப்போகும் ஆட்டோவையோ தாங்கக் கூடிய வலிமை இப்போதைக்கு இல்லாததால் அந்த அரிய செய்தி அடுத்த வாரம்..

Mar 25, 2010

சோமபானமும் கலைஞரின் பாராட்டு விழாவும்

27 கருத்துக்குத்து

 

மொக்கைவர்மனின் பால் தீராத அன்பு கொண்ட சிலர் “எங்கய்யா போனாரு எங்க மன்னரும், மங்குனி அமைச்சரும்” என கேள்வியாய் கேட்கிறார்கள். ஏழுவ மட்டும் கூட்டிட்டு வந்துட்ட என்ற உபதொல்லை வேறு. விஷயம் இதுதான். அடுத்த மொக்கைவர்ம பாகத்தின் கதைப்படி (டைரக்டர் தொணி வருதா?) மன்னரும், அவர்தம் சகாக்களும் ஒன்றாக அமர்ந்து குடிக்கிறார்கள். கதைப்படி ஆரம்பிக்கும்போது அவர்கள் சியர்ஸ் சொல்ல வேண்டும். அங்கதான் கதையில் ட்விஸ்ட் வருகிறது. ஆனால் மன்னர்காலத்தில் ஏது சியர்ஸ்? அப்படியென்றால் அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேண்டுமே? அந்த வார்த்தைக் குறித்த ஆராய்ச்சியாலே மன்னர் வர தாமதமாகிறது.

போகட்டும். இப்போது நாம் ஆராய்ச்சிக்கு வருவோம். ஆங்கிலேயர் வருவதற்கு முன் நம் முன்னோர்கள் என்ன வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் என சில மூத்த, இளைய, புதிய, பழைய, பிரபல, பிராப்ள, சின்ன, பெரிய, லோக்கல், ஐ.எஸ்.டி , புக் போட்டவங்க, போடாதவங்க என எல்லோரையும் கேட்டேன். பல ஆச்சரிய பதில்கள் கிடைத்தன. ஒரு அன்பர் சொல்கிறார், சியர்ஸ் என்பதே சரக்கு சரியா ஊத்தியிருக்கானா.. அளவு கரீக்ட்டா என்பதை சோதிக்கவே சொல்லப்படுகிறதாம். ஆர்யா முதல் நித்யா வரை தமிழர்கள் அடுத்தவனை கண்மூடித்தனமாக நம்பியே மோசம் போகும் ஆசாமிகள் என்பதால் சியர்ஸ்க்கு வேலை இருந்திருக்காது என்கிறார். ம்ம்

cheers

அடுத்த பதிவர் இன்னும் விவ”ரம்”. அந்தக் காலத்தில் மண்பாண்டங்கள் அல்லவா உபயோகித்தார்கள். அதை மோதிக்கொள்ளும்போது உடைந்து விடாதா? அப்படி உடைந்த பாண்டங்கள் இருந்திருந்தால் “குற்றம். நடந்தது என்ன? நிகழ்ச்சியில் அதை தோண்டி போட்டிருக்க மாட்டார்களா என்று வினவினார். (அவங்க இல்லப்பா) அதனால் அந்தப் பழக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவரது கருத்து.

அவரது கருத்தைக் கேட்டபின் இன்னொரு கேள்வியும் நம் ஆராய்ச்சியில் சேர்ந்துக் கொண்டது. ஆதி தமிழன் (அய்.ரெண்டுமே தள படம்) எதில் குடித்திருப்பான்? வட்டிலா, கலசமா, குவளையா, ஓலையா? நம் ஆராய்ச்சித் தாளில் இன்னொரு கேள்வியைக் கூட்டிக் கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அடுத்த பதிவர் பதில் தெரியாது என்று சொல்ல கூச்சப்பட்டு எதிர்கேள்வி கேட்டார். “உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் கேள்வி தோணுது?”. இதன் மூலம் தன்னை கவுண்டராகவும், என்னை செந்திலாகவும் ஆக்க முயலும் நுண்ணரசியல் புரிந்து நான் விலகிவிட்டாலும், இவ்வுலகிற்கு இந்தக் கேள்வி தோன்றிய வரலாற்றை சொல்லாவிட்டால் நான் நிஜ செந்திலாகும் அபாயம் இருப்பதால் இன்னொரு பத்தியை சேர்த்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்கள் எல்லாம் குடித்துவிட்டு கல்கி ஆசிரம பக்தர்கள் போல் மிதக்கும் வேளையில் நான் மட்டும் பியர் ஊறிய சிக்கனையும், ரம் ஏறிய கடலையையும், விஸ்கி வாசனை மட்டனையும் கொறித்துக் கொண்டிருந்தால் ஏன் தோன்றாது? அடுத்த புத்தாண்டு வருவதற்கு இன்னும் 9 மாதம் இருக்கிறது. இல்லையெனில் இனி சைட் டிஷ் சாப்பிடிவதில்லை என்ற உறுதிமொழியையாவது எடுத்து விடுவேன். இதுவும் போகட்டும். நாம் ஆராய்ச்சிக்கு வருவோம்.

பதிலே கிடைக்காமல் ஆராய்ச்சி இன்னமும் அங்காடித் தெரு படம் போல ஆகிக் கொண்டிருக்கிறது. கேள்விகள் இவைதான்

"CHEERS என்பதற்கு இணையான தூய தமிழ்ச்சொல் என்ன இருக்கிறது? (கூட்டாக தண்ணியடிக்கும்போது தமிழர் பயன்படுத்திய வார்த்தை)"

தமிழர் கூட்டாக தண்ணியடித்தார்களா?

அப்படி தண்ணியடிக்கும்போது தங்கள் பாத்திரங்களை மோதிக்கொண்டார்களா?

தமிழர்கள் எதில் மதுவைக் குடித்தார்கள்? (கலசமா?, வட்டிலா? )

- இவையெல்லாம் துணைக்கேள்விகள்

இதற்கு சரியான பதில்கள் தரும் அறிஞர்களுக்கு செம்மொழி மாநாட்டில் கலைஞர் கையால ஒரு குவாட்டரோ, ஃபுல்லோ பரிசாகக் கிடைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறேன். யோசித்து பாருங்கள். ஹலோ அதுக்கு எதுக்கு மேல பார்க்கறீங்க? செம்மொழி என்று மார்தட்டும் வேளையில் சியர்ஸுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லையென்பது எவ்வளவு வேதனையான விஷயம்? கண்டுபிடியுங்கள்

எப்படியும் நம் மக்கள் இதற்கு சரியான பதத்தை கண்டு பிடித்துவிடுவார்கள். அது எனக்கு கவலையில்லை. என் ஒரே கவலையெல்லாம் அப்படி கண்டுபிடிக்கப்போகும் அறிஞருக்கு ஒரு குவார்ட்டரோ, ஃபுல்லோ தரப்போகும் கலைஞருக்கு “செம்மொழியின் குடிகாத்த செங்குடியறிஞர்'” என்று பட்டமளித்து யாராவது பாராட்டு விழா நடத்திவிடுவார்களோ என்பதே. :(

பி.கு : மேலே இருக்கும் படத்திற்கு குசும்பன் சொன்ன கமெண்ட்

   “ஸ்டாலினும் அழகிரியும் இப்படி ஒன்னா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்”

Mar 23, 2010

ஏழுவுக்கு வேலை கிடைச்சிடுச்சு டோய்

40 கருத்துக்குத்து

 

  ஏழுவிற்கு வேலை கிடைத்துவிட்டது. ஆம், வெகு நாட்கள் வேலையே இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்ததால் தண்ணியடிப்பதும், தலைக்குப்புற கவிழ்ந்து கிடப்பதுவுமே அவன் தலையாய வேலையாக இருந்தது. எங்களோடு படித்தும் உருப்பட்ட ஒரு நல்லவன் ஒருவன் அவனது நிறுவனத்திலே வேலை வாங்கித் தந்தான். ஒரே ஒரு நிபந்தனை, அங்கே ஏழு அவனை மேலதிகாரியாக பாவிக்க வேண்டும். வேலைக்கு திங்களன்று சேர வேண்டும். ஞாயிறு இரவு ட்ரீட் தந்தான் ஏழு. வழக்கம் போல் மறுநாள் எழுந்திருக்க லேட்டாகி விட்டது. அவசரமாக கிளம்பினான். பாலாஜி தன் பைக்கை எடுத்துட்டு போடா என்றான். உடனே குளிக்காமல் கிளம்பிய ஏழுவை கடிந்துக் கொண்டான் ஆறு.

குளிச்சிட்டு வண்டி ஓட்டினா போலிஸ் புடிக்கும்னு அன்னைக்கே சொன்னியே மச்சி என்ற ஏழு குடிப்பதைத்தான் குளிப்பது என்று சொல்லியதன் மூலம் மப்பு இன்னும் இறங்கவில்லை என்பது உறுதியானது. வேறு வழியில்லாமல் ஏழுவை வாழ்த்தி அனுப்பி வைத்தோம் முதல் பகலுக்கு. வீட்டுக்கு வெளியே வந்து லெஃப்டடில் திரும்பினான் ஏழு. எதிரே ஒருவர் ரைட் சைடில் முறுக்கிக் கொண்டு வந்து சடென் பிரேக் அடித்தார்.

சார். நான் வந்தது லெஃப்ட்டு. ஆனா ரைட்டு. நீங்க வந்தது ரைட்டு. ஆனா ரைட்டா?”  எங்கேயோ படித்த மொக்கை கேள்வியை கேட்ட ஏழுவை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே சென்றார்.

பாலாஜி மட்டும் கத்தினான் “பார்த்து ஓட்டுடா”. அவன் பைக்.

முதல் நாளே அலுவலகத்துக்கு லேட்டாக வந்த ஏழுவை எங்கள் நண்பன் கடிந்துக் கொண்டான்.

ஹாய் மச்சி

ஆஃபிஸ்ல மச்சின்னு எல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொன்னேன்னடா. மொத நாளே ஏழுமலை லேட்ன்னு பேரு வாங்க போறியா? சீக்கிரம் வரலாம் இல்ல?

பாலாஜி பைக்ல வந்தேன். ஃபாஸ்ட்டா வந்து, ஆக்ஸிடென்ட் ஆகி  ”லேட்” ஏழுமலை ஆக விரும்பல.அதான்.

திஸ் இஸ் டூ மச் ஏழு.

இப்ப நீ மட்டும் எதுக்கு மச்சின்னு சொல்ற. தி இஸ் ஆஃபிஸ் யூ நோ?

ஏழுவை நன்கு அறிந்தவன் என்பதால் வேறு எதுவும் பேசாமல், அட்மினுக்கு சென்று ஜாயினிங் ஃபார்மிலிட்டிஸ் முடிக்க சொன்னான். அங்கே ஒரு ஃபிகர் அப்ளிகேஷனை நீட்டி ஏழுவை ஃபில் செய்ய சொன்னது

Last nameல் பேனாவை வைத்து இங்க என்ன எழுத என்றான் ஏழு

உங்க லாஸ்ட் நேமை எழுதுங்க

(மறுபடியும் ELUMALAI என்று எழுதினான்)

அச்சோ. லாஸ்ட் நேமை எழுத சொன்னேன்

எனக்கு ஃபர்ஸ்ட்டுல இருந்து லாஸ்ட் வரைக்கும் ஏழுமலைதாங்க பேரு

உங்க அப்பா பேர எழுதுங்க சார்.

ஓ. நான் அப்பான்னா fatherனு நினைச்சிட்டேன். Last னாலும் அப்பாவா?

சார். ஒழுங்கா ஃபில் பண்ணுங்க சார்.

இதுல இமெயில் கேட்டு இருக்காங்க

எழுதுங்க. ஏன்.ஐடி இல்லையா?

இருக்கு. ஆனா ஜிமெயில் ஐடிதான் இருக்கு. அதான் யோசிக்கிறேன்.

ஒல்லியா, தக்கையா ஒருத்தர் வருவாருன்னுதான் பாஸ் சொன்னாரு. இவ்ளோ மொக்கையா இருப்பிங்கன்னு தெரியாது. ஜிமெயிலும் இமெயில்தான் சார். எழுதுங்க.

மேடம். கோச்சிக்காம ரேட் எப்படின்னு சொல்றிங்களா?

வாட்????????

இல்ல மேடம். ரேட் என்ன ஸ்பெல்லிங்னு சொல்றீங்களா ப்ளீஸ்

எதுக்குங்க ரேட் எழுத போறீங்க?

என் மெயில் ஐடி வந்து ”ஏழுடாட்ஆறுஅட்தரேட்ஜிமெயில்.காம்”

அய்யோ சார் (@ எழுதி காட்டுகிறார்)

ஒவ்வொரு முறை கடிக்கும் போதும் ஏழு ஃபிகரையே முறைத்துப் பார்த்ததும், ரேட்டுக்கு ஸ்பெல்லிங்கை மார்க்கமாக கேட்டதும் அவரை கடுப்பேத்த பாஸிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். உள்ளே அழைத்த பாஸ் ”ஏண்டா அவளையே முறைச்சு பார்க்கிற” என்றார்.

தலை கவிழ்ந்த ஏழு சொன்னான் “பாலாஜி தான் சார் பார்த்து ஓட்டுன்னு சொன்னான். அதான் அவங்கள பார்த்து பார்த்து ஓட்டினேன்”.

அப்போ வேணும்னேதான் டீஸ் பண்ணியா. யூ ப்ளடி.

தொங்கிய முகத்துடன் வெளிய வந்த ஏழு சீட்டில் சென்று அமர்ந்தான். மாலை ஐந்து மணி ஆனது. தூக்க கலக்கத்தில் இருந்த ஏழுவுக்கு அது ஆறு மணி போல் தெரிய, வீட்டிற்கு கிளம்பினான். அதை கவனித்த பாஸ் கடுப்பாகி ”என்ன ஆச்சு ஏழு? வாட் ஹேப்பன்ட்” என்று மேஜர் சுந்தர்ராஜனாகி கொண்டிருந்தார்.

சுதாரித்த ஏழு சொன்னான் “ காலைலே லேட் ஆயிடுச்சு சார். அதான் ஈவ்னிங் சீக்கிரமா கிளம்பி காம்பென்சேட் பண்ணலாம்னு”.

ஜாயினிங் ஃபார்மை கிழித்த பாஸ், அப்படியே போயிடு. நாளைக்கு வராத என்றார். சோகத்துடன் வந்து எங்களிடம் விஷயத்தை விளக்கிய ஏழு “மச்சி. சந்தோஷத்தில் நான் ட்ரீட் தந்தேன் இல்ல. இப்போ நீங்க வாங்கி கொடுங்கடா” என்றான்.

பாலாஜியும் நானும் போய் ஆளுக்கொரு பியரும், ஏழுவுக்கு ஒரு மினிபியரும் வாங்கி வந்து பூஜையை ஆரம்பித்தோம். விஷயம் கேள்விப்பட்டு வந்த ஆறு கத்தினான். அது எப்படிடா உனக்கு மட்டும் டைம் ஆறுன்னு தெரியும்?

பாதி மப்பில் ஏழு சொன்னான் “என் கண்ணுக்கு எல்லாமே நீயா தெரியுது மச்சி. என்ன செய்ய?”

Mar 19, 2010

நான் நான் தான்

25 கருத்துக்குத்து

 

   தன் வயதையொத்த சிறுவர்கள் எல்லாம் புழுதியில் புரண்டு சடுகுடு ஆடிக்கொண்டிருக்க பாபு மட்டும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான். பன்னிரெண்டு வயதில் யாருக்கும் இயல்பாய் வராத பயம் பாபுவிற்கு வந்தது.அடுத்து வாழ்க்கைகயில் என்ன செய்யப் போகிறோம் என்ற தீவிர சிந்தனையில் இருந்தான்.பச்சாதாபமற்ற இவ்வுலகை எப்படி எதிர்கொள்வது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் அம்மா, மாமா மற்றும் மாமன் மகள் இந்து மட்டும்தான்.இன்று அவர்களை விட்டு வெகுதூரம் தள்ளி வந்துவிட்டான் பாபு.

         விளையாடிக்கொண்டிருந்த சிறுவனில் ஒருவன் இவனருகில் வந்து "யார் நீ?" என்றான்.

      "பாபு" என்ற ஒற்றை வார்த்தை பதிலை வெகு நேர யோசனைக்குப் பின் சொன்னான்.

       "இதுக்கு முன்னால ஒன்ன பார்த்தது இல்லையே.யார் வீடு" என்று தொல்லையை தொடர்ந்தான் அவன்.

      "நான் ஊருக்கு புதுசு"

     "புதுசுன்னா தனியாவா வருவாங்க.யார் கூட வந்த?உன் அம்மா அப்பா இல்லை"

      "த‌னியாத்தான் வந்தேன்.என‌க்கு இங்க‌ யாரையும் தெரியாது" என்றான் பாபு.

  ஏதொ ப‌ட‌மெடுத்த‌ நாக‌த்தை க‌ண்ட‌து போல் ப‌ய‌ந்து ஓடினான் அவ‌ன்.ஓடிய‌வ‌ன் த‌ன் ச‌காக்க‌ளிட‌ம் இவ‌னைப் ப‌ற்றி சொல்வ‌தை எந்த‌ ச‌ல‌ன‌முமின்றி பார்த்துக் கொண்டிருந்தான் பாபு.விளையாடுவ‌தை நிறுத்திவிட்டு இவ‌னை நோக்கி எல்லோரும் வ‌ந்தார்க‌ள்.வ‌ந்த‌வ‌ர்க‌ள் அவ‌னை சூழ்ந்து கொண்டு சிரிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் முழித்தான் பாபு.

     "ஒனக்கு வீடே இல்லையா?" என்றான் ஒருவன்.இவன் இல்லை என்பது போல் தலையாட்ட சிரிப்பு பலமானது.

       "நீ யாருன்னு உனக்கே தெரியாதா?" என்ற அடுத்தவனின் கேள்வி இவனை நிலைத் தடுமாற செய்தது.இவன் முழிப்பதைக் கண்ட அவர்களின் சிரிப்பொலி இன்னும் சத்தமானது.அடுத்தடுத்து அவர்கள் கேட்பதும் இவன் முழிப்பதும் அவர்கள் இன்னும் பலமாக சிரிப்பதும் பாபுவை அசிங்கப்பட வைத்தது.சாரிடான் விளம்பரத்தில் வருவதைப் போல் பயங்கர உருவம் கண்ட பலர் இவன் தலைக்குள் அடிப்பதும் சிரிப்பதும் போல் உணர்ந்தான். வெறுப்பும் கோபமும் அவனுள் தோன்றியது.என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து ஒருவனின் தலையில் ஓங்கி அடித்தான். பறவைகள் கூட்டமாக பறக்கும்போது ஒரு பறவை மட்டும் வேடனின் குண்டுக்கு இரையாகினால் அக்கூட்டம் எப்படி சிதறுமோ அதுப்போல் ஆளுக்கொருப்பக்கம் தலைத்தெறிக்க ஓடினார்கள்.ஒரு கணம் பேயறைந்தது போல் நின்ற பாபு அவர்கள் ஒடுவதைக் கணடு புன்னகைத்தான்.மெல்லிய புன்னகை மெல்ல சிரிப்பாக மாறியது.வெகு தூரம் ஓடிய பின் ஒருவன் பாபுவைத் திரும்பிப் பார்த்தான்.செங்கல்லை இன்னமும் அவன் கையில் இருப்பதைக் கண்ட அவன் வேகத்தைக் கூட்டி ஓடத் தொடங்கினான். இதைப் பார்த்த பாபுவிற்கு உற்சாகம் தலைக்கேறியது.சத்தம் போட்டு சிரிக்க தொடங்கினான்.அவர்கள் அனைவரது மொத்த சத்தத்தை விட அதிக சத்தம் வேண்டுமென்று இன்னும் பலமாய் சிரிக்கத் தொடங்கினான் பாபு.

       சிறிது தூரத்தில் அடிவாங்கிய சிறுவனின் நண்பன் ஒருவன் இருவது வயது மதிக்கதக்க இரு வாலிபர்களோடு இவனை வழி மறித்தான்.பாபுவின் கையில் இன்னமும் அந்த செங்கல்லை கண்ட அவன் ஒரு வித பயத்துடனே இவன்தான் என்று கைக்காட்டினான்.

    "யார்ரா நீ?எதுக்கு அவன அடிச்ச?" என்றான் ஒருவன்.மறுபடியும் "யார் நீ?" என்ற கேள்வி பாபுவைக் கலவரப்படுத்தியது.

     "பாபு" என்றான் சன்னமான குரலில்.

     "பாபுன்னா பாரத பிரதமரா? யாருன்னு ஒழுங்கா சொல்லுடா.உங்க அப்பா எங்க இருக்காருனு சொல்லு" என் மிரட்டினான் இன்னொருவன்.மீண்டும் அதே கேள்வி அவனுக்கு வெறுப்பை தந்தது.

     "பாபுன்னு சொல்றேன் இல்ல.அப்புறம் யார் யார்னு கேட்டா என்ன சொல்றது" என்றான் சற்று சத்தமாக.இதை சொல்லும்போதே சற்று பெருமையாகவும் சந்தோசமாகவும் உணர்ந்தான்.

      "ஒழுங்கா பதில் சொல்லுடா பொடிப்பையா" என்ற படி அவனை அடிக்க எத்தனித்தான் ஒருவன்.சிங்கத்திடம் சிக்கிய மானின் கடைசிப் போராட்டத்தைப் போல அவனையும் செங்கல்லால் அடிக்க முயன்றான்.லாவகமாக இவன் கையை முறுக்கி முதுகில் குத்தினான்.வலித்தாங்காமல் கத்தினான் பாபு."சொல்லு,நீ யாருன்னு சொல்லு" என்றபடி அடிப்பதை தொடர்ந்தனர் இருவரும்.அவர்கள் அடிப்பதை விட அவர்கள் கேட்கும் "யார் நீ?" என்ற கேள்வியே அவனுக்கு அதிகம் வலித்தது.ஒவ்வொரு அடிக்கும் "நான் பாபுதான்..நான் பாபுதான்" என்று கத்த தொடங்கினான்.வலித்தாங்கி கொண்டு தன் பேர் சொல்வதில் இனம் புரியாத ஒரு வித இனபத்தை கண்டான்.மெல்ல சிரிக்க ஆரம்பித்தான்.இவன் சிரிப்பதைக் கண்டு அவர்கள் வேகமாக அடிக்க தொடங்க, இவனும் "நான் பாபுதான்" என்று சத்தமாய் சிரித்துக் கொண்டே சொன்னான்."பாபுனு நீயே பேர் வச்சிகிட்டியா?உங்க அம்மா அப்பாதானே வச்சாங்க? யாரு அவங்க?எங்க இருக்காங்கனு சொல்றா..அது வரைக்கும் உன்ன விட மாட்டோம்" என்று அவர்களும் அடிப்பதை நிறுத்தவில்லை.

       அவர்கள் அதை சொன்ன போது, அவன் பேரும் அவனுக்கு சொந்தமில்லை.அவன் அப்பா வைத்தது என நினைத்தான் பாபு.இப்போது அவனுக்கு "நான் பாபு தான் " என்று கத்த மனம் வரவில்லை.. " நான் நான் " என இழுத்தான்.அவர்களும் அடிப்பதை நிறுத்த இவன் என்ன சொல்வது எனத் தெரியாமல் "நான் நான் " என்று அழத் தொடங்கினான்.இவனது விசித்திர குண‌த்தைக் கண்ட அவர்களும் அப்படியே விட்டுவிட்டு போய்விட்டார்கள்.முதுகை விட அவனுக்கு மனசு வலித்தது.அவன் அம்மா இவனை எரிச்சலுடன் "டேய் பாபு" "பாபு நாய" என்று அழைத்ததை எண்ணினான்.இப்போது அவனுக்கு பாபு என்ற பேரே பிடிக்காமல் போனது.. நான்.. நான்.. பாபு.. இல்ல.." என்று முனகி கொண்டே கீழே சரிந்தான்.இமைகள் மெல்ல மூடத் தொடங்கின.உதடுகள் மட்டும் "நான் பாபு இல்ல" என்று முனகி கொன்டிருந்தது.

    அப்படியே மயக்குமுற்ற அவனின் உள்மனதில் அவனின் சிறுவயது ஞாபகங்கள் ஓடத் தொடங்கியது. மூன்றாவது படிக்கும் போது இவன் அப்பா வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போனது, அதன் பின் எல்லோரும் இவன் அப்பவின் செய்கையாலே அடையாளம் கண்டது, அவர் செய்த தவறு என்னவென்று அறியா வயதிலே அவர் மீதான வெறுப்பு, முதலில் பாசமாக இருந்த அம்மாவும் நாள‌டைவில் எரிச்சலுற்றது, இந்து அவனுக்கு நல்ல சாப்பாடு கொடுத்தாள் என்பதற்காக அவன் மாமா அவளுக்கு உதையும்,இவனுக்கு சூடும் போட்டது என எல்லாம் அவன் மனத் திரையில் மங்கலாக ஓடியது.தான் உண்மையாக சிரித்த நாள் அவன் நினைவில் இல்லவே இல்லை.உச்சகட்ட காட்சியாக ,ஆந்திராவிற்கு வேலை செய்ய இவன் அம்மாவும் மாமாவும் இவனை முரட்டு மீசைக்காரனிடம் விலை பேசியதை கண்டு லாரி ஏறி இந்த ஊருக்கு ஓடி வந்த காட்சியோடு முடிந்தது.

       நினைவு வந்து கண் திற‌ந்து பார்த்தான்.எதிரே ஒரு போலிஸ் நின்று கொண்டிருந்தார். இவன் கண் திறந்ததைக் கண்டவுடன் கையில் ஒரு பேப்பருடன் வந்த அவர் " யார்ரா நீ?உன் பேரென்ன?" என மிரட்டினார்.கண்விழித்த அடுத்த நொடியே அதே கேள்வியை எதிர் கொண்ட அவனுக்கு,அப்படியே கண் மூடியே போயிருக்கலாமென்று தோண்றியது.இந்த முறை கேட்டவர் போலிஸ் என்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தான்.அப்போது அங்கே வந்த டாக்டர் போலிஸை கடிந்து கொண்டு வெளியே இருக்குமாறு சொன்னார். அருகில் வந்த டாக்டர் "தம்பி பயப்படாதே.நான் இருக்கிறேன்" என்றார்.சற்றே ஆறுதலாய் உனர்ந்தான்.அவன் தலையில் கைவைத்து தடவிய அவர் அவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.அதை அவன் குடித்து கீழே வைக்கும்  போதே டாக்டர் அவனிடம் " இப்போ சொல்லுப்பா..யார் நீ?உன் பேரென்ன?" என்றார்.கண் மூடி ஒரு கணம் யோசித்த அவன் தீர்க்கமாக சொன்னான் "நான் நான் தான்..."..சொல்லிவிட்டு மீண்டும் படுத்தான்.அவன் கண்கள் மெல்ல மூடத் தொடங்கியது

_______________________________

பி.கு: நான் முதன் முதலாக எழுதிய கதை. ஏனோ மீண்டும் படித்த போது மீள்பதிவிட தூண்டியது.

Mar 17, 2010

மூடிக்கிறேன் வாயை

34 கருத்துக்குத்து

 

confusion

நான் நீ

அவன் அவள்

இவன் இவள்

அது இது

அங்கு இங்கு..

எல்லாம் மாயை

பிடி அந்த பேயை

இப்போதைக்கு

மூடிக்கிறேன் வாயை

Mar 16, 2010

பிரபல பதிவர்கள் வீட்டில் ரகசிய கேமரா

36 கருத்துக்குத்து

 

இன்றைய தேதியில் உலகையே ஆட்டிப் படைக்கும் விஷயம் கேமரா. அதாங்க பென்சில் சைசுல மறைச்சு வைக்கிறாங்களே, அந்த கேமராக்கள். சில “பிரபல” பதிவர்கள் வீட்டில் அதை பொருத்தி வைக்கப்பட்டதில் பதிவான வீடியோக்களின் சாராம்சம் இங்கே. முதலில் ஹிஹிஹி பதிவர்.

பிரபல பதிவர் : ஏம்மா உன் கூட இதே தொல்லையா போச்சு? சொல்றதையே கேட்க மாட்டியா?

தங்கமணி : என்ன ஆச்சு?

பி.ப: வெங்காயம் வெட்ட கத்தி தேடினா காணோம். இங்கதான் வச்சேன். உன்னை யாரு இங்க வந்து இதெல்லாம் எடுக்க சொன்னா?

த.மணி: நான் ஏன் கிச்சனுக்கு எல்லாம் வரப் போறேன்?  கத்தி வேணும்னா கத்தி தான் கேட்பிங்களா?.ஓவரா சத்தம் போடாம பொறுமையா தேடுங்க.கிடைக்கலைன்னா பக்கத்துல உட்கார்ந்து உங்க சிறுகதையை படிச்சு காட்டுங்க. வெங்காயமே அழுதுகிட்டு துண்டாகிடும்.

பி.ப: ஆஹா. என்ன அருமையான வர்ணனை?அவள் கதைக் கேட்டு வெங்காயமே கண்ணீர் விட்டது.

த.ம: முத்திப் போச்சு. இது திருந்தாது.

_______________________________________________________

அடுத்த பிரபல பதிவர்

மொபைல் அலறுகிறது. எடுக்கவா என்று கேட்கிறார் பி.ப.

தங்கமணி: ஃபோனுல பேசிதானே நெத்தில நாமம் போட்டுக்கிட்டிங்க.

பி.ப: அது கார் ஓட்டும் போதும்மா. இப்ப என்ன?

த.ம: இப்ப கூடத்தான் மிக்ஸீ ஓட்டிக்கிட்டு இருக்கிங்க. வெயிட் பண்னுங்க.

அவசரகதியில் சட்னி அரைத்துவிட்டு எடுக்கிறார்

பி.ப: ஹலோ

அடுத்த முனை :*****

பி.ப: சொல்லுங்க. எப்படி இருக்கிங்க? பதிவ படிச்சிங்களா?

அ.மு: *******

பி.ப: அப்படியா? பன்ணிடலாம்.

அ.மு: *****

பி.ப: எங்க வீட்டுல எல்லாமே நான் சொல்றதுதான் முடிவு. (தங்கமணி முறைக்கிறார்) ஆனா என்ன முடிவுன்னு வீட்டுல கேட்டுட்டு சொல்றேனே

அ.மு: *******

பி.ப: ச்சேச்சே . அப்படி இல்லை… இல்லை… அந்தளவுக்கு இல்லை. கொஞ்சம்ன்னு வச்சிக்கிலாம். ஆனா…. ஆமாங்க. அவங்க ஓக்கே சொன்னாதானே வர முடியும்?

__________________________________________________________________________________

இவர் மி.பி.ப. முதல் காட்சியில், அவரது குழந்தை குளித்துவிட்டு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக நிற்கிறான். இவரும்.. அட அவசரப்படாதிங்கப்பா.. அவனை அழ வைக்காமல் உடை மாட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

மி.பி.ப: கண்ணா. வா வா வா. டிராயர் மாட்டிக்கலாமா?

குழந்தை: எனக்கு எல்லாம் டிராயர் பத்தாதுப்பா. வேற வேற வேற ஃபேண்ட்டுதாம்ப்பா வேணும்

மி.பி.ப: அப்பாகிட்ட எதிர்த்து பேசக்கூடாதுன்னு சொல்லித்தரலையா உங்க அம்மா?

குழந்தை: சாமி முன்னாடி மட்டும்தான் சாந்தமா பேசுவேன்

மி.பி.ப: அப்படியெல்லாம் பேசக்கூடாது செல்லம். பாராதியார் குழந்தைகளுக்கு என்ன சொல்றாருன்னா

குழந்தை: தெரியுமே. பாரதிய படிச்சுப்புட்டா.. பெண்களுக்கு வீரம் வரும்..

மி.பி.ப: டேய். நான் விளக்கம் சொன்னா எல்லோருமே கேட்கிறாங்க. நீ கேட்க மாட்டியா? விஜய் என்ன சொல்றாரு? “அம்மா அப்பாவ வணங்கி பாரு”ன்னுதானே சொல்றாரு

குழந்தை: வில்லு வில்லு வில்லு வில்லு வர்றான் பாரு வில்லு.

வேறு வழியில்லாமல் குழந்தையோடு டண்டணக்கு ஆட்டம் போடுகிறார் அந்த மி.பி.ப.

______________________________________________________

அடுத்த சிடி விரைவில் வெளியீடு

Mar 14, 2010

தாதாவுக்கு வடை கிட்டுமா? - கார்க்கி

35 கருத்துக்குத்து

 

    சைடு பாரில் எங்க தாதாவின் புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக அறிகிறேன். இன்னுமா உலகம் நம்புது என்பது போன்ற போன்ற வசனங்களை  குசும்பன் முதல் பலரும் சொல்லி வருவது துரதிர்ஷ்டமே. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த ஐ.பி.எல் சீசனில் வெல்வார்களா என்றால் நிச்சயம் வெல்வார்கள். எப்படி? இதோ எங்களுக்கு சாதகமான சில புள்ளிகள். அதாங்க பாயிண்ட்ஸ்.

1) முதல் சீசன் சாம்பியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸீன் உடை நீல நிறம். ஆனால் டெக்கான் சார்ஜர்ஸின் நிறம் சாம்பல். அடுத்த சீசனில் நீல நிறத்திற்கு மாறினார்கள் சார்ஜர்ஸ். கோப்பை அவர்கள் வசமானது. கருப்பையே இரண்டு முறை கட்டியழுத நாங்கள், இந்த முறை நீலத்திற்கு(purple தான்) மாறியிருக்கிறோம். கோப்பையை வெல்ல வேற என்ன வேண்டும் சொல்லுங்கள்

2) முதல் சீசன் முடிந்த பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் கடைசி இடத்தில் இருந்தார்கள். இரண்டாம் சீசனில் அவர்கள் கோப்பையை வென்றது வரலாறு. இரண்டாம் சீசனில்  டெக்கான் சார்ஜரின் இடத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிடித்ததை நீங்கள் அறிவீர்கள். அப்படியெனில் இந்த முறை யார் கோப்பையை வெல்வார்கள்? யோசியுங்கள்.

3) அடுத்த சாம்பின்யன்ஸ் நாங்கள் என்பதை குறிக்கும் வகையில் நைட்ரைடர்ஸின் சீருடையில் NEXT என்று அச்சிடப்பட்டிருப்பதை சிலர் கவனித்திருக்கக் கூடும். அது ஏதோ ஒரு எலக்ட்ரானிக் ஸ்டோர்சின் விளம்பரம் என நம்புவது முட்டாள் தனம். Next champions என்பதே அதன் அர்த்தம். Champions எங்கே இருக்கிறது என்று கேட்காதீர்கள். அதை அணியும் எல்லோருமே சாம்பியன்ஸ் தானே?

4) முக்கியமான விஷயம். ஆம். அதேதான். அண்ணன் அகர்கார் அவர்கள் நடந்து முடிந்த இரண்டு மேட்ச்களிலும் ப்ளேயிங் 11ல் இல்லை. எனிதிங் மோர் நீட் டூ சே?

5) அல்டிமேட் காரணம். அட அவர் இல்லைங்க. அவரேதான் அந்த பட்டம் வேணாம்.தல போதும்னு சொல்லிட்டாரே. நான் சொல்ல வந்தது ஆக முக்கியமான காரணம்.  எத்தனை முறை தோற்றாலும் தாதா ஃபேன்ஸ் , ஜெயிப்போம்னு தானே நம்புவோம்? தொடர் தோல்விகள் குறித்து பேசும் போது தல பெயர் வந்தது தற்செயலானது. இதைக் குறிப்பிட்டு பின்னூட்டம் போடுவது போங்கு ஆட்டம் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

_____________________________________-

Mar 11, 2010

அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள்

43 கருத்துக்குத்து

 

    இதுவரை ஏழுவை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.  ஒரு வித யவ்வனமான நிலையில் கிணற்றின் மீது அமர்ந்தபடி நிலவைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

”காதலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

  அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள் தன் சீடரில் ஒருவனைப் பார்த்து கேட்டுவிட்டு. அருகில் இருந்த பியர் பாட்டிலை கோப்பைக்குள் கவிழ்த்தார் . அவர் ஊற்றிய பியருக்கு ஏற்ற அளவில் தண்ணீரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கோப்பையை சுவாமிகளிடம் தந்தான் ஒரு சீடன்.  கல்ப்பாக அடிப்பது ஆகம விதிப்படி ஆகாது என்பதால் சிப் சிப்பாக அடிக்கத் தொடங்கினார் சுவாமிஜி. முதல் சிப்பை சிப்பியபின் கோப்பையை கீழே வைத்துவிட்டு சீடர்களைப் பார்த்தார்.

”உன்னைத்தான் கேட்கிறேன்.காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்”

ஒரு சிப்பிலே குரு ஏகாந்த நிலை அடைந்துவிட்டதை புரிந்துக் கொண்ட சீடன் ஒருவன் பதில் சொன்னான் “அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.

  ஆசிரமத்தில் சேர அடிப்படைத் தகுதியே இல்லாமல் பதில் சொன்னான் மூடன். இல்லை இல்லை சீடன். சுவாமிகளுக்கு கோவம் வந்துவிடுமோ என்று அஞ்சியபடி சீடனை முறைத்தார்கள் மற்ற இருவரும். ஆனால் ஒரு அகோர சிரிப்பு சிரித்து தன்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் அரை….. சுவாமிகள்.

சிஷ்யா.. பிசையப்படும் மைதா மாவு பரோட்டா ஆகுமா, பூரி ஆகுமா என்று மாவுக்கு தெரியாது. ஆனால் பிசையும் மாஸ்டருக்கு தெரியும் இல்லையா?

தலை சொறிந்தபடி ஆம் என்றான் ஒரு சீடன். இன்னொரு சீடன் ஞானம் பெற்றவன். அவனுக்கு சுவாமிகள் சொல்வது புரிந்து, ”ஆம். சுவாமி. பரோட்டா மாஸ்டர் தானே பெற்றவர்கள். அவர்களுக்கு தெரியாதா?” என்றான்.

”நீ அரைபியர் போலவே அரைஞானஸ்நானம் பெற்றிருக்கிறாய். நான் முடித்து விடுகிறேன். அந்த பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது  மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” சுவாமிகள் கேட்ட கேள்வியை விட கேட்டபின் விட்ட லுக் சீடர்களுக்கு அடிவயிற்றில் பிரளயத்தையே உண்டு பண்ணியது.

”காதலும் அவ்வாறுதான். இந்த பூமியில் பிறந்த யாருக்கும் அவர்கள் துணை யாரென்று தெரிவதில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது” என்றார் சுவாமிகள்.

காதல் எல்லாம் போலி குருவே. சில காலம் சென்ற பின் போரடித்துவிடும்.

”இல்லை சிஷ்யா. ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது”

இவர் பல்பு வாங்க போறது என்னவோ நிஜம்தான் என்று முனகிய இன்னொரு சீடன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “குருவே த்ரிஷா போனா திவ்யா. அல்லது ரஞ்சிதா போனா ரகசியா என்பதுதானே காதல்?”

மீண்டும் தன் அ”கோர” சிரிப்பை உதிர்த்த சுவாமிகள் ஒரு கேள்வியை முன் வைத்தார். “ஒரு பூனையின் முன் இரு தட்டுகள். ஒன்றில் மீன் துண்டு. இன்னொன்றில் பால். பூனையின் கண் எதன் மேலிருக்கும்?”

யோசித்த சீடர்கள் ஆளுக்கொரு விடையை சொன்னார்கள்.

இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா?

இதற்கு மேலும் புரியவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாத சிஷ்யர்கள் குருவோடு ஒத்துப் போனார்கள்.  இந்தக் கொடுமையெல்லாம் கேள்விப்பட்ட ஆறு, பாலாஜியை அழைத்துக் கொண்டு மடத்திற்கு, ச்சே கிணத்தடிக்கு சென்றான். சீடர்களை ஓடுங்கடா என்று விரட்டிவிட்டு என்னடா பிரச்சினை என்றான் . தன் காதலை விளக்கிய ஏழு அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. அது சாத்தியமில்லை என்றபடி மிச்ச பியரை குடித்தான். ஏற்கனவே பியரில் அரைபாட்டில் இல்லாததைக் கண்ட ஆறு, இனிமேல் இவனை இங்கே விட்டால் கிணத்துக்குள் விழுந்து விடுவான் என்பதால் பாலாஜியின் துணையோடு அவனை அறைக்கு தூக்கி சென்றான்.

பதறியபடி வந்த நண்பர்களிடம் ”இன்னைக்கும் அரை பீர முழுசா குடிச்சிட்டாண்டா. ராவா அடிச்சானா என்னன்னு தெரியல” என்று புலம்பினான் ஆறு. நிலைத் தடுமாறி படுக்கையில் விழுந்த ஏழு சொன்னான் “ஹாஃப் முடிஞ்சுதா? இந்த மொடா குடிகாரனை கட்டிக்கிட்டு என்ன செய்ய போறாளோ அவ”. ஆறுவைத் தவிர அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள், மொடா குடிகாரன் என்ற சொல்லாடலைக் கேட்டு.

மறுநாள் அரைபீர் மயக்கம் தெளிந்து எழுந்த ஏழு, தேடிப்பிடித்து அதிகம் அழுக்கில்லாத ஒரு ஜீன்ஸூம், டீஷர்ட்டும் அணிந்துக் கொண்டு ஆறு எழுதி தந்த காதல் கடிதத்தோடு புறப்பட்டான். முதலாம் ஆண்டு கணிணி துறையில் படிக்கும் ஏழுவின் காதலி சரியாக எதிரில் வந்துக் கொண்டிருந்தாள். நேராக எதிரில் சென்ற ஏழு கடிதத்தை தந்து படிக்க சொன்னான். எழுத்துக் கூட்டி கூட்டி ஒரே ஒரு பக்கத்தை 14 நிமிடம் படித்த பின் வாய் திறந்தாள் ஏழுவின் தேவதை

 

 

 

 

 

“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஏழு தன் சீடர்களோடு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.

____________________________________________

பி.கு: ஏழுவை மீண்டும் இழுத்து வந்த சிங்கை நண்பர் ஜெய் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்

Mar 9, 2010

நெக்லஸும் நானும் ஒன்று

45 கருத்துக்குத்து

 

காலையில் அழைத்து குட் மார்னிங் சொன்னேன் தோழியிடம். நீ கூப்பிட்டாலே குட் மார்னிங் தானே. அப்புறம் தனியா வேற சொல்லனுமா என்கிறாள்

வீடியோ சேட்டில் வெகு நேரம் அரட்டையடித்தப் பின் தூங்கப் போகிறேன் என்றேன் தோழியிடம். கைகளை நீட்டியபடி கிட்ட வா என்கிறாள். என் தூக்கத்தை கலைக்கும் கலையறிந்தவள்

உன்னைப் பற்றி எழுதினால் சிரிக்கிறார்கள் என்றேன். நிலவில் இறங்கிய ஆர்ம்ஸ்ட்ராங்டா நீ. அவர்களுக்கு என்ன தெரியும் நிலவின் அருமை என்கிறாள் தோழி

ஜென்சி குரலுக்கு என் சொத்தையே எழுதி வைப்பேன் என்றால், அலறுகிறாள் தோழி “என்னால் அவங்க கூட போக முடியாதுப்பா” என்று

என்னடா பண்ற என்றேன் தோழியிடம், ”லேப்டாப்பை மடியில் வைத்து சேட் செய்கிறேன்” என்றாள் . கொடுத்து வச்ச லேப்டாப்.

நெக்லஸும் நீயும் ஒன்று என்றாள் தோழி. இரண்டும் தங்கமாம். நான் வேறு ஒன்றை நினைத்தேன் என்றேன். என்னவென்று கேட்டு இன்னமும் நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். # மனதை தொடுதல்.

”வைரம் உருவாக பல ஆண்டுகள் ஆகுமாமே. நீ எப்படி 10 மாசத்துல” என்றேன் தோழியிடம். “10 மாசம் கூட இல்ல. உன்னைப் பார்க்கிற அவசரத்துல எட்டரை மாசத்திலே வந்துட்டேன் என்கிறாள்” தோழி.

pic3-couple-coffee

காஃபி ஷாப்பில் சந்தித்த போது பரஸ்பரம் சைட்டடித்துக் கொண்டு சர்க்கரையை கலக்க மறந்துவிட்டோம். முதல் சிப்பிற்கு பின் தெரிந்துக் கொண்டு சர்க்கரை எடுக்கப் போனேன். கோப்பையை மாற்றி வைத்தாள் தோழி # சர்க்கரை மிச்சம்

என்னடா மச்சி ஆச்சு என்ற நண்பனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பெப்பே என்று சைகை காட்டிக் கொண்டிருக்கிறேன் நான். என்ன சாப்பிட்ட என்ற சிநேகிதியிடம் ”காலைல அவன் உதடு, மதியம் அவன் கன்னம்” என்று வெட்கமே இல்லாமல் சொல்லியிருக்கிறாள் தோழி.

Mar 8, 2010

சோறும் சரக்கும் இலவசம்…

55 கருத்துக்குத்து

 

ஹலோ கார்க்கிதானே இது?

அது இது என்ற ஏகவசனம் வேண்டாம் தோழரே..நீங்கள் யார்?

உனக்கு ஏகன் வசனம் தாண்டா பிடிக்காது. ஏகவசனம் பழகின ஒன்னுதானே?

நீங்க பிளாகரா?

என்னடா உளர்ற? நான் சுதாகர்டா. CPT சுதாகர்.

டேய் மாம்ஸ்…

அதுக்கு மேல நாங்க பேசியதை எழுதினால் என் பிளாகை சன் டிவி ரேஞ்சுக்கும், என்னை நித்யானாந்தா ரேஞ்சுக்கும் நீங்கள் நினைத்து விடக் கூடுமென்பதால் இதோடு அதை விட்டுவிடுவோம். அவன் அழைத்த விஷயம் என்னவென்றால், அவனுக்கு கல்யாணமாம். அதுக்கு திருமண அழைப்பிதழ் போட வேண்டுமாம். நண்பர்களுக்கு மட்டும் அச்சடிக்கப் போகும் பத்திரிக்கையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய உத்தேசமாம். உடம்பு சரியில்லன்னா டாக்டர் கிட்ட போலாமாம். பசிக்குதுன்னா ஹோட்டலுக்கு போலாமாம். வித்தியாசமன்னா கார்க்கியிடம்தான் போகனுமாம். எத்தன “மாம்”? ஸப்பா..இதனால்தான் அவனை நாங்க மாம்ஸ்ன்னு கூப்பிடுவோம்.ப்ளூரல்ன்னா(Plural) ”ஸ்” தானே சேர்க்கனும்?

சரி. நம்பி வந்துட்டான். என்ன மாம்ஸ் செய்யனும் என்றேன்.

மச்சி. நம்ம பசங்க, அப்புறம் ஏரியா பசங்களுக்கு மட்டும்  தான் இந்த இன்விடேஷன கொடுக்கப் போறேன். அதனால் அடிச்சு ஆடு. ஆனா பசங்க அப்படியே ஷாக் ஆகனும்.

அடிச்சா ஆடித்தாண்டா ஆகனும். சரிடா. அரை மணி நேரம் கழிச்சு கூப்பிடு

டொக்.

கபாலத்தில் கடம் வாசிக்க, அலுவலகத்தில் அங்குமிங்கும் நடந்து யோசித்து இந்த பத்திரிக்கையை தயார் செய்தேன்.

சோறு போடறோம். வந்துடு மச்சி


எங்க :    சென்னை மயிலாப்பூரில் இருக்கும் AVM  ராஜேஷ்வரி மண்டபத்தில்

எப்ப : 25, ஏப்ரல் 2010, காலை 7.30 –9

என்ன : பூரி, இட்லி, வடை, பொங்கல், etc

ஏன் :           நானும், ரேவதி என்ற பொண்ணும் கண்ணாலம் கட்டிக்க போறோம். அதுக்காகத்தான்.

மெயில் பார்த்துட்டு அழைத்தான். வாய்ப்பே இல்லையென்று 4 முறையும், சான்ஸே இல்லையென்று 5 முறையும், அருமையென்று 6 முறையும் சொன்னான். அந்த சரக்கு மேட்டர் மாம்ஸ் என்றதற்கு அது உண்டு மச்சி என்றான். லூசுப்பையன். கார்டின் பின்புறம் அடிக்க வேண்டிய மேட்டரை படிக்கவில்லை போலும். நீங்களும் பார்த்திடுங்க.

கார்டுக்கு பின்னாடி போட்டிருக்கிற மாதிரி, கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட்டு, மண்டபத்துக்கு பின்னாடி இருக்கிற ரூமில் பேச்சுலர் பார்ட்டி உண்டு. வெறும் டம்ளரோடும், டவுசரோடும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அழைப்பிதழ் அவன் மாமனார் கண்ணிலோ, அவனுக்கு வாழ்வுத் தரப்போகும் பெண்ணின் கண்ணிலோ படாமல் இருக்க எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதனை வணங்குவோம்.

Mar 7, 2010

முரண்

42 கருத்துக்குத்து

 

    வெள்ளிக் கம்பியாய் விழுந்து கொண்டிருந்தது அருவி. 17ஆம் நம்பர் பேருந்து அருவியைக் கடந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ஊருக்குள் நுழைந்து வலதுபக்க வளைவில் திரும்பியவுடன் துரத்த ஆரம்பித்தான் மகேஷ். இவன் ஓடி வருவதை பார்த்த கண்டக்டர் விசிலடித்து பேருந்தை நிறுத்தினார். பேருந்து நிற்கும் முன்னே முன்புற படி வழியா்க ஏறியவன் டிரைவர் சீட்டருகே இருந்த மாலை நாளிதழ் கட்டிலிருந்து ஒன்றை உருவியபடி ஓடினான். எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தார் கண்டக்டர். பேப்பருடன் அருவிப் பக்கம் ஓடியவன் ஓரிடத்தில் நின்று படப்படப்புடன் பேப்பரை புரட்டினான். முதல் பக்கத்திலே ஓரத்தில் கட்டம் ஒன்றில் மன்னிப்பு வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.

“நேற்று வெளியான ப்ளஸ் டூ முடிவில் 89765432 என்ற எண் தவறுதலாக விடுப்பட்டிருந்தது. அச்சுப் பிழைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்”

காடு அதிர கத்தினான் மகேஷ். பேப்பரை சுக்கு நூறாக கிழித்து எறிந்து அருகிலிருந்த அருவியை நோக்கி ஓடியவன் “மேகலா” என்று கத்திக் கொண்டே எகிறி குதித்தான்

()()()()()

   இரண்டு கால்களையும் சேர்த்தபடி நேரான நிலையில் கிடத்தப்பட்டிருந்த மேகலாவுக்கு 17 வயதிருக்கும். அவள் கழுத்தில் இருந்த தடயத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டடி தள்ளி தொடாமல் அழுதுக் கொண்டிருந்தார்கள் சற்றே வயதான பெற்றோர். மேகலாவின் பெற்றோர்.

”ஏதாச்சும் லெட்டர் இருந்துச்சாய்யா” என்று அய்யா ஒருவர் சின்னய்யாவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதெல்லாம் இல்லை சார். ட்வெல்த்ல ஃபெயிலாயிருக்கு

அப்புறம் என்னய்யா? கேஸ க்ளோஸ் பண்ணிட்டு, போஸ்ட் மார்டம் செய்து பாடியை கொடுத்து விடுங்க.

()()()()()

இருட்டிக் கொண்டிருந்தது. தன்னுடைய அறையில் இருந்த மேஜையின் மீது தலை சாய்த்து படுத்திருந்தாள் மேகலா. அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருந்த திசையில் அழகிய ஷோகேஸ் தெரிந்தது. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்பைகளும், ஷீல்டுகளும் இடப்பற்றாக்குறையால் ஒன்றின் மீது ஒன்று உரசிக் கொண்டிருந்தன. இமைகள் தூங்கிவிட்டிருந்தன. கண்களில் இருந்து வழிந்து செல்லும் கன்ணீர் மேஜையை நனைத்து தரையில் சொட்ட துவங்கியிருந்தது. பழைய காலத்து மின்விசிறி ஒன்று சத்தத்துடன் சுற்றிக் கொண்டிருந்தது.

”ஸ்கூலுக்கு போனா படிக்கிற வேலையை மட்டும் பார்க்கனும். பசங்க கூட பேசறதுக்கில்ல இவ போனா”. அம்மா வயதில் இருந்தவரின் பேச்சுக்கு பிண்ணனி இசையாக செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார் ஒருவர். ”பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடி”

  ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியை எழுந்து நிறுத்திய மேகலா, கொடியில் தொங்கிக்கொண்டிருந்த நீல நிற தாவணியை உருவினாள்.

()()()()()

வெள்ளிக் கம்பியாய் விழுந்துக் கொண்டிருந்தது அருவி. 17ஆம் நம்பர் பேருந்து அருவியை கடந்துச் சென்று கொண்டிருந்தது. பேருந்து ஊருக்குள் நுழைந்து வலதுப்பக்க வளைவில் திரும்பியவுடன் ஒரு கும்பலே துரத்த ஆரம்பித்தது. மகேஷ் தான் முதலில் ஏறினான். பேப்பர் கட்டில் இருந்து நாலைந்து பேப்பரை மட்டும் மகேஷிடம் எடுத்துத் தந்தார் கண்டக்டர். மொத்தக் கூட்டமும் மகேஷை விரட்டத் தொடங்கியது. பள்ளிக்கூடம் வரை ஓடிய மகேஷ் நின்று பேப்பரை புரட்டினான். அவனோடு 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய எல்லோரின் எண்ணையும் பார்த்தான். 89765432  மட்டும் காணவில்லை. மேகலாவைப் பார்த்தான். பேப்பரை பிடுங்கிப் பார்த்த மேகலாவுக்கு இதயமே நின்றுவிட்டது. எல்லாப் பக்கத்தில் தேடியும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

()()()()()

”இந்த நேரத்தில எங்கடி போற” மேகலாவின் தாய் சத்தம் போட்டாள். பவித்ரா வீட்டுக்கு என்றபடி நடந்தாள் மேகலா. நான்கு தெரு தள்ளி போய்க் கொண்டிருந்த மேகலாவின் எதிரில் மகேஷ் வந்துக் கொண்டிருந்தான்.

இந்த நேரத்துல எங்க போற?

ம்ம்.பவித்ரா விட்டுக்கு என்று சின்ன புன்னகை பூத்தாள் மேகலா

எப்படியும் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கி பட்டணம் போயிடுவ படிக்க. என்னை மறந்துட மாட்டியே?

என்ன மகேஷ் பேசுற? நான் வாங்குற மார்க்ல பாதி உன்னுது.

அவ்ளோதான் எடுப்பேனா நான்?

அதில்ல முசுடு. நான் என்ன மார்க் வாங்கினாலும் அதுக்கு நீதான் காரணம். உன்னை மாதிரி ஒரு ஃப்ரெண்டு கிடைக்க புண்ணியம் செஞ்சிருக்கனும்.

ஸ்டேட் ஃபர்ஸ்ட்டா.. டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்டா தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன்.

உன் ஃப்ரெண்ட்ஷிப் மேல நம்பிக்கை வை. ஸ்டேட் ஃபர்ஸ்ட் கூட வருவேன். உன் அன்பு உண்மைன்னா நல்ல மார்க் வரும்.நான் கிளம்பறேன். அம்மா கத்தும்.

அவள் மறையும் வரை காத்திருந்த மகேஷ் சிரித்தபடி சொன்னான் “அப்படின்னா நீ உலகத்துல ஃபர்ஸ்ட்டு வருவ செல்லம்”

()()()()()

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்திலே முதல் மாணவியாக வந்த மேகலாவை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். அவர் வகு”

கணக்கு வாத்தியார் பேசிக் கொண்டிருந்தார். எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்திருந்த அவளின் புகைப்படத்தை நண்பர்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மேகலா. ஆங்கிலத்தில் மட்டும் இன்னும் 5 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் மாநிலத்திலே முதலாவதாக வந்திருக்கலாம். அதற்கெல்லாம் கவலைப்படாமல் சந்தோஷமாக இருந்தாள். மேகலாவின் பெற்றோரின் படத்தை பிரசுரித்து இருந்தது தினமணி. மேகலாவை பேசும்படி அழைத்தார் கணக்கு வாத்தியார். அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவள் முகம் இறுக்கமானது. கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்க்க அதை துடைத்த படி மேடையேறியவள் வேறெதுவும் பேசாமல்

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்

என்று சொல்லிவிட்டு இறங்கினாள். தன் கைவலிக்க தட்டிக் கொண்டேயிருந்தான் மகேஷ், அடுத்து அவன் பேச வேண்டும் என்பதை மறந்து.

()()()()()

எட்டாம் வகுப்பு மாணவர்கள் திருக்குறள் போட்டிக்காக பேர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மகேஷுக்கும், மேகலாவுக்கும்தான் போட்டி என்று சொல்லிக் கொண்டிருந்தார் தமிழாசிரியர். போட்டி நாளும் வந்தது. ஆசிரியர் சொல்லும் வார்த்தையில் தொடங்கும் அல்லது முடியும் குறளைச் சொல்ல வேண்டும். போட்டி தொடங்குமுன் உனக்கு பிடித்த குறளை சொல்லு மேகலா என்றார் ஆசிரியர்.

 "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு"

Mar 5, 2010

தொப்பிய கழட்டலாம் வாங்க

17 கருத்துக்குத்து

 

வார்த்தையே வரலைங்க… ஷ்ரேயா கோஷலின் குரல்தான் சிறந்தது என்றாலும், இவர் பாடும்போது என்னவோ செய்கிறது…அர்த்தம் புரிந்துதான் இந்த ஃபீல் கொடுத்தாரா என்பது தெரியவில்லை…

Mar 4, 2010

மொக்கை ராக்ஸ்

18 கருத்துக்குத்து

 

மு.கு: என் மொக்கையை படிச்சு படிச்சு மொக்கையா மாறி, மொக்கையா  எழுத ஆரம்பிச்ச ஒரு புண்ணிய ஆத்மாவின் வலைப்பூவை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன்.. ஆரம்பமே மரண மொக்கை போடும் இவர், விரைவில் தமிழ்மண நட்சத்திரமாக வாழ்த்துகிறேன்

http://timepass-asha.blogspot.com/2010/03/blog-post.html

_____________________________________________-

அலாரம் ஷார்ப்பா(ப்பா.அதுவும் மொக்கையா இல்லை) காலை 8:30 மணிக்கு அடிச்சு எழுப்பி விட்டுருச்சு. கண்ண தொறக்க முடியாம ஒரு 5 நிமிஷம் படுக்கலாம்னு படுத்தேன். எந்திரிச்சு பார்த்தா மணி 11. ஆத்தாடி, ஆபீஸ் காப் (cab) மிஸ்(உடனே அப்ப கார் பெண்பாலான்னு கேட்காதிங்கப்பா) ஆய்டுச்சுனு அவசர அவசரமா எந்திரிச்சேன்.

இன்னும் 15 நிமிஷத்துலே கரண்ட் போய்டும். டிரஸ் வேற அயர்ன் பண்ணலே. சரி, மொத காரியமா அயர்ன் பண்ணுவோம்னு டிரஸ், அயர்ன் பாக்ஸ் எல்லாம் ரெடியா கட்டில் மேல வெச்சேன். பிளக் போட்டு திரும்புறேன் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னு ஒரு சத்தம். என்னான்னு திரும்பி பார்த்தா, தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தி போட்ட மாதிரி ப்ளக் பாயிண்ட்லே இருந்து நெருப்பு வருது. அய்யய்யோனு அலறி சுவிட்ச் ஆப் பண்ணேன். பிளக் பாயிண்ட், நான் சுட்ட அப்பளம் மாதிரி கருகி போய்டுச்சு. (எந்த ஹோட்டல் சுட்டன்னு கேட்க மாட்டிங்கதானே)அயர்ன் பாக்ஸ் பிளக், காதலியை கண்ட காதலன் மாதிரி உருகிடுச்சு.

எச்சிலை விழுங்கிட்டு சுத்தும் முத்தும் பார்த்தேன். நல்ல வேளை லைட், ஃபேன் எல்லாம் நல்ல படியா ஓடுச்சு.(ஆனா அசல்தான் ஓடல) ஒரு பெருமூச்ச வெளிய விட்டுட்டு, பிளக் பாயிண்ட்லே ஏதோ கோளாறு போல, நம்ம வேற பிளக் பாயிண்ட்லே போட்டு பாப்போம்னு அயர்ன் பாக்ஸ் பிளக்க வேற பிளக் பாயிண்ட்லே சொருகினேன். பயப்புள்ளே, ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷனும் காட்டலே. இதென்னடா சோதனைனு, பக்கத்து ரூம்லே இருந்து அயர்ன் பாக்ஸ் கடன் வாங்கி அயர்ன் பண்ணி ஒரு வழியா 12:30 க்கு வீட்டை விட்டு கிளம்பிட்டேன்.

அப்புறம் தான் தோணுச்சு, நாளைக்கு அயர்ன் பண்ண வழி இல்லையே. எவ்ளோ நாள் தான் பக்கத்து ரூம்லே இருந்து கடன் வாங்குறது. நமக்குனு ஒரு பிரஸ்டீஜ் இருக்குலே. (ஏன்?பிரிமியர் இல்லையான்னு கேட்டா வி.தா.வுக்கு அனுப்பிடுவேன்) அதனால, திரும்பவும் வீட்டுக்கு வந்து அயர்ன் பாக்ஸ் எடுத்து போய் கடையிலே ரிப்பேருக்கு குடுத்தேன். அந்த கடைக்காரன் வெவரமானவன். என் நெத்தியிலே என்னாத்த படிச்சானோ(நெத்தியடி மாதிரி, நெத்திபடி ) தெரியல, மேடம் சர்வீஸ் அமௌன்ட் Rs.800/- அப்படின்னு ஒரு குண்டு தூக்கி போட்டான். இதுக்கு நான் ஒரு புது அயர்ன் பாக்ஸ் வாங்கிடுவேன்னு சொல்ல, அவன் எங்க கடையிலே நெறைய மாடல் இருக்கு மேடம், பாருங்கனு சொன்னான். அவ்வ்வ்வ்வ்வ். எப்படியும் அயர்ன் பாக்ஸ் வேணும் அதனாலே, தொலையுதுன்னு (புகையுதுன்னுதானே வேற வாங்கற.இப்ப தொலையுதுன்னு சொல்றியேன்னு கேட்டா..) ஒரு புது அயர்ன் பாக்ஸ் வாங்கியாச்சு. (எவ்ளோ லன்ச் பாக்ஸ் வாங்குறோம். அயர்ன் பாக்ஸ் வாங்க மாட்டோமா பன்ச் டயலாக் பேசியிருக்கலாமோ?)

இந்த களேபரம் எல்லாம் முடிய மணி 1:00 ஆய்டுச்சு. ஒரு ஆட்டோ புடிச்சு, ஆபீஸ்க்கு வந்து க்யூபிக்கில்லே பேக் வைக்கும் போது மணி 1:30. அய்யய்யோ, லஞ்ச் டைம் ஆய்டுச்சு. தன்யா வெயிட் பண்ணிட்டு இருப்பானு, பில்டிங் அதிர அவ ப்ளோருக்கு ஓடினேன். அங்க பார்த்தா, காஷ்மீர் தீவிரவாதிய கண்ட கேப்டன் மாதிரி கண்ணே உருட்டி, செவப்பாக்கி நின்னுட்டு இருந்தா தன்யா. அத பார்த்து பயந்து, “அயர்ன் பாக்ஸ், ரிப்பேர், புதுசு வாங்கியாச்சு” னு மணிரத்னம் பட டயலாக் எல்லாம் சொல்லி, அவ கை, கால்லே விழுந்து, காண்டீன்க்கு அவள கூட்டிக்கிட்டு பறந்தேன். பசி!

Mar 3, 2010

அவள் பெயர் தமிழரசி

28 கருத்துக்குத்து

 

  காதல் கேன்சர் என்றார் நண்பர் ஒருவர் ட்விட்டரில். இல்லை அது சுகர். அது வந்துடுச்சுன்னா ஏறவும் கூடாது.இறங்கவும் கூடாது. அப்படியே மெயிண்டைன் பண்ணனும் என்றேன் பதிலுக்கு. காதலி உடனிருக்கும் போது தெறிக்கும் காதலை விட அவள் விட்டுப் போன பின் வரும் கண்ணீருக்கே வேகம் அதிகம். அது போன்ற பாடல்கள் தமிழில் ஏராளம். சமீபத்தில் அஞ்சல. அதை விட மென்மையாக ஒரு பாடல் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் இருக்கிறது

வடக்கா தெக்கா கிழக்கா மேக்கா எந்த திசை போன புள்ள
என் நெஞ்சு கூடு தாங்கவில்லை.

முதல் வரியிலே சூழ்நிலையை விளக்கிவிடுகிறார். அதன் பின் ஒவ்வொரு வரியிலும் தனிமையில் தவிப்பனின் நிலைமையை கண்ணீரில் குழைத்து கொடுக்கிறார்கள்.

இரை தேடி போன பறவை நீ.. இன்னும் கூடு வந்து சேரலையே
என் இரு விழிகள் கரையுதடி..சொன்னாலும் கேட்கலையே..

காதலியை பிரிந்தபின் வரும் முதல் இரவை எவராலும் மறக்க முடியாது. தவளை கத்தும் சத்தமும், கீறிச்சிடும் பூச்சியின் ஒலியும் காதலனின் விசும்பலுக்கு துணையாக எதிரொலிக்கும். தன்னை உருக்கி வெளிச்சம் தரும் மெழுகின் ஒளியிலும் அவளின் முகமே தெரிய,வெளிப்படும் கண்ணீர் மெழுகின் மீது விழுந்து அதையும் அணைத்துவிடும். இரவின் அடர் இருளில் தொலைத்த காதலை தேடிக் கொண்டிருப்பான். தேடும் இடமெங்கும் அவள் ஏற்படுத்தி சென்ற தடயமே தெரியும்.

நீ முகம் பார்த்த கண்ணாடில உன் நெத்தி பொட்டு இருக்கு..
நீ குளிச்சு இடத்துலதான் மஞ்ச துண்டு கிடக்கு..
நீ விட்டத்துல சொருகி வச்ச கோழி இறக்கை இருக்குதடி..
நீ சிக்கெடுத்து போட்ட முடி கால சுத்தி கிடக்குதடி..

நம் பதின்ம வயது காதலியின் நினைவாக சேகரித்த சாக்லெட் பேப்பர், ரப்பர் பேண்ட் எல்லாம் நிழலாடி செல்கிறது. பல்லவிக்கும் சரணத்துக்குமிடையே புல்லாங்குழல் பிட் ஒன்று கரைக்கிறது நம்மை. இரண்டு கண்களால் அழுவதையே தாங்க முடியாத போது, அத்தனை கண்களால் குழல் அழுவும்போது ஏதோ செய்கிறது. வார்த்தைகளில் வீசும் கிராமிய மணம் இசைக்கோர்வையிலும், பாடகரின் குரலிலும் இல்லை என்பதைத் தவிர வேறு எந்த குறையும் தெரியவில்லை. பாடல் எழுதி மெட்டமைத்தது கூட காரணமாக இருக்கலாம். எல்லா வரிகளும் மனதைத் தைத்தாலும் இந்த வரி…………

நான் அழுத கண்ணீருல அரைக்காணி நனைஞ்சுடுமே..
அதுல உழுது விதைச்சாலும் ஒரு போகம் விளைஞ்சுடுமே.

கனத்த மனதோடு அடுத்த பாட்டுக்கு செல்ல முடியாமல் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கிறேன். மீள்வதற்குள் படம் வந்துவிடும். காதலை தரிசிக்க விண்ணைத் தாண்டி செல்ல வேண்டிய அவசியமில்லை. அது நம்மோடுதான் வாழ்கிறது. தமிழரசியை தரிசிக்க காத்திருக்கிறேன்.

aval-peyar-thamizharasi-photos-02

__________________________________________________________-

பாடலாசிரியர் : ஏகாதசி
பாடகர்                : வினீத் சீனிவாசன் (கத பறயும் போல் இயக்குனர் சீனிவாசனின் மகன்)
இசை                   :விஜய் ஆண்டனி

                                    பல்லவி

வடக்கா தெக்கா கிழக்கா மேக்கா எந்த திசை போன புள்ள
என் நெஞ்சு கூடு தாங்கவில்லை.

இரை தேடி போன பறவை நீ.. இன்னும் கூடு வந்து சேரலையே
என் இரு விழிகள் கரையுதடி..சொன்னாலும் கேட்கலையே..
(வடக்கா தெக்கா)

                                சரணம் - 1

நீ முகம் பார்க்கும் கண்ணாடில உன் நெத்தி பொட்டு இருக்கு..
நீ குளிச்சு இடத்துலதான் மஞ்ச துண்டு கிடக்கு..
நீ விட்டத்துல சொருகி வச்ச கோழி இறக்கை இருக்குதடி..
நீ சிக்கெடுத்து போட்ட முடி கால சுத்தி கிடக்குதடி..
என்னை சுத்தி எல்லாமே உன் பேரத்தான் சொல்ல
ஒத்தையிலெ விட்டுப்புட்டா நான் எங்க செல்ல..
நான் எங்க செல்ல
(வடக்கா..)

                                சரணம் –2

நீ விரல் நீட்டி பேசயில அடி வானவில்லு உதிக்கும்
நீ நடந்த தடத்துலதான் சொர்க்க வாசல் திறக்கும்
நீ அன்னமுன்னு தெரியாம அம்பு கொண்டு எய்ஞ்சுப்புட்டேன்
இந்தப் பாவம் தீர்த்துடத்தான் எந்த ஆத்தில் குளிக்கப் போவேன்
நான் அழுத கண்ணீருல அரைக்காணி நனைஞ்சுடுமே..
அதுல உழுது விதைச்சாலும் ஒரு போகம் விளைஞ்சுடுமே.
அதுல ஒரு போகம் விளைஞ்சுடுமே..
(வடக்கா தெக்கா)

 

Mar 1, 2010

முத்தமிடும் நாய்கள்

34 கருத்துக்குத்து

 

  கண்ணாடியில் இருந்து லென்ஸூக்கு மாறிய தோழி, எப்படிடா இருக்கு என்றாள்.எனக்கு பதிலா லென்ஸா என்றேன். சோடா பாட்டில் மீண்டும் பராக் ப்ராக்

  “உன் உதிரம் போலே நான் உன்னுடலில் ஓடுவேன்."  என்று தோழியிடம் சொன்னது தப்பா போச்சு.விரலை வெட்டிகொண்டு உன்னை பார்க்கனும்போல இருந்துச்சு என்கிறாள்

சச்சின் சதமடித்து விட்டதாக அலைபேசிய தோழியிடம் சொன்னேன். எனக்கு இன்னும் 5 தேவைப்படுது என்றவள் இச் இச் இச் இச் இச் என்றாள்

விண்ணை தாண்டி வருவாயா, பார்ப்பியா என்றாள் வெளிநாட்டு தோழி. ம்ம் என்றேன். நாடு தாண்டிதான் வர மாட்ட என்கிறாள்

முத்தம் தருவதில் நானொரு வித்துவான் என்றேன். அப்போ நானு என்ற தோழியிடம் “கத்துவான்” என்றேன் ரத்தம் வர மாதிரி கடிச்சா நீயும்தான் கத்துவ என்கிறாள்..

dsc_02724160

  இன்று தோழியுடன் வந்தேன்.வழியில் இரண்டு நாய்கள் முத்தமிட்டுக் கொண்டிருந்தன. நானும் ப்ளீஸ் என்றேன். ”பார்த்து. நாய் கடிச்சிட போது” என்கிறாள்

லூசாப்பா நீ? பட்டாம்பூச்சி புடிக்க சொன்ன என் கண்ணை புடிக்கிறே” என்று சலித்துக் கொள்கிறாள் தோழி

”ஏண்டா உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இவ்ளோ மோசமா இருக்காங்க”- இது தோழி. விடு அதான் உன் ஃப்ரெண்ட்ஸ் சூப்பரா இருக்காங்களே – இது நான்

நட்பு, நண்பன் என்றால் உதடுகள் ஒட்டும். காதல், காதலி என்றால் ஒட்டாது என்று நண்பன் சொல்கிறான் என்றேன் தோழியிடம். அவன் கிடக்கிறான் லூசு என்று உதடுகள் ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி காண்பிக்கிறாள்

திட்டிவிட்டேன் என்று அழுகிறாள் தோழி. கையில் ஏந்தியபடி சொன்னேன். நிலவில் தண்ணியிருக்குன்னு இவனுங்க சொன்னது நிஜம்தான் போலிருக்கு.

 

all rights reserved to www.karkibava.com