Feb 13, 2010

இன்னைக்கு ரேடியோ கேளுங்கப்பா


 

நாலு நல்ல விஷயங்கள் இன்று(14-02-2010)

1) இன்று இரவு 8 மணிக்கு ரேடியோ ஹலோ எஃப்.எம் 106.4 ல் “Hello magazine” என்ற நிகழ்ச்சியில் அடியேனின் படைப்பு ஒன்றும் வருகிறது. ஒரு மணி நேர நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் மட்டுமே வருமென்றாலும், விளம்பரங்கள் குறுக்கிடுமென்றாலும் பொறுமையாக கேளுங்கள். வலையுலகில் மட்டுமே காதலை கொண்டாடிய எனக்கு, தமிழகம் முழுவதும் காதல் மொழி பேச வாய்ப்பளித்த ஹலோ எஃப்.எம்முக்கு நன்றி. தமிழகம் முழுவதும்  எல்லா ஊர்களிலும் இந்நிகழ்ச்சியை கேட்டு ரசிக்கலாம்.

நான் பரிசலில் புத்தக வெளியீட்டில் இருக்கக்கூடுமென்பதால் நண்பர்கள் யாராவது நிகழ்ச்சியை பதிவு செய்து அனுப்ப முடிந்தால் கோடான கோடி நன்றியை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.

____________________________________________________________

2) பரிசல் மற்றும் கேபிளின் புத்தக வெளியீடு. ஏற்கனவே நர்சிம்மின் புத்தகம் மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. இப்போது பரிசல். பலருக்கும் தெரிந்திருக்கும், பரிசல் எனக்கு வலையுலக பிதாமகன். எழுத வந்த சில மாதங்களிலே பல வழிகளில் என்னை ஊக்கப்படுத்தியவர். என்னைப் பற்றி அடிக்கடி எழுதி பிரபலபடுத்தியவர். சந்தோஷத்தில் இருக்கிறேன். நாகரத்னா பதிப்பகத்திற்கு நன்றி.

கேபிள் பற்றி சொல்லியா தெரியனும்? இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். சீக்கிரம் ஒரு படம் பண்ணுங்க பாஸ்.

____________________________________________________________

3) யூத்ஃபுல் விகடனில் எனது கவிதைகள் சில காதலர் தின சிறப்பு பக்கத்தில் வெளிவந்திருக்கிறது. விகடன் குழுமத்திற்கு நன்றி.

____________________________________________________________

4) எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துகள். இந்த வாரம் முழுவதும் பின்னூட்டமிட்டும் , மடலனுப்பியும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

இந்த நல்ல நாளில் என்னுடைய மெஸெஜ்.

Spread the love and heal the world.

Pair

அவ்ளோதாம்ப்பா

23 கருத்துக்குத்து:

shabi on February 13, 2010 at 11:07 PM said...

கலக்குங்க காரக்கி

shabi on February 13, 2010 at 11:08 PM said...

me first ..............

கனவுகள் விற்பவன் on February 13, 2010 at 11:10 PM said...

//ஹலோ எஃப்.எம் 106.4 ல் அடியேனின் படைப்பு அடியேனின் படைப்பு,புத்தக வெளியீடு,யூத்ஃபுல் விகடனில் எனது கவிதைகள்,,காதலர் தின வாழ்த்துகள். //

வாழ்த்துக்கள்....

கார்த்திகைப் பாண்டியன் on February 13, 2010 at 11:31 PM said...

காதலர் தின வாழ்த்துகள் சகா.:-)))

||| Romeo ||| on February 14, 2010 at 12:35 AM said...

காதலர் தின வாழ்த்துகள்

எட்வின் on February 14, 2010 at 12:39 AM said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

வெற்றி on February 14, 2010 at 1:01 AM said...

சகா உங்க டெம்ப்ளேட்,ப்ரோபைல் மெசேஜ் எல்லாமே சூப்பர்..

மதுரை ஒலிபரப்பில் உங்கள் நிகழ்ச்சி வெளிவருமா ?

Chitra on February 14, 2010 at 2:14 AM said...

Best wishes! வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் on February 14, 2010 at 2:37 AM said...

வாழ்த்துக்கள் வருங்கால யூத்!(முதல்வர் அனு மன்னிக்க..)

ஆகா!

பெரிய சந்தோசம்!கலக்குங்க கூட்டாளிகளே...

சின்ன அம்மிணி on February 14, 2010 at 3:00 AM said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கார்க்கி.

Jaya on February 14, 2010 at 4:59 AM said...

Vaalthukkal Karki!! :))

புலவன் புலிகேசி on February 14, 2010 at 5:38 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி..நானும் அதே புத்தக வெளியீட்டில்தான் இருப்பேன். அதனால் யாராவது பதிந்து கொடுத்தால் ஒலியை வலைப்பூவில் போடுங்கள்

பிரியமுடன்...வசந்த் on February 14, 2010 at 5:44 AM said...

சந்தோஷம் சகா...

:)

அத்திரி on February 14, 2010 at 6:23 AM said...

காதலர் தின வாழ்த்துகள் சகா

டம்பி மேவீ on February 14, 2010 at 7:27 AM said...

அய்யோ ...இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாரும் இல்லையா ??????

வாழ்த்துக்கள் கார்க்கி ....

அன்புடன் அருணா on February 14, 2010 at 7:53 AM said...

பூங்கொத்து!

Cable Sankar on February 14, 2010 at 8:08 AM said...

நம்மை போன்ற யூத் தின வாழ்த்துக்கள்.

அறிவிலி on February 14, 2010 at 9:54 AM said...

//Cable Sankar said...
நம்மை போன்ற யூத் தின வாழ்த்துக்கள்.//

repeattu...

ஷங்கர்.. on February 14, 2010 at 10:26 AM said...

அவ்ளோதாம்ப்பா//

மற்றவை நேரில்..:))

சுசி on February 14, 2010 at 3:53 PM said...

வாழ்த்துக்கள்.. நீங்கள் //தமிழகம் முழுவதும் காதல் மொழி// பேசியதற்கு..

//நான் பரிசலில் புத்தக வெளியீட்டில் இருக்கக்கூடுமென்பதால்//
என்னது இருக்கக்கூடுமென்பதாலாஆ?? இருப்பீங்கன்னு எல்லாருக்கும் தெரியுமே குரு.. எஸ்கேப்லாம் ஆக முடியாதுப்பா..

பரிசல், கேபிளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

சுசி on February 14, 2010 at 3:57 PM said...

விகடனில் கவிதை வெளி வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் கார்க்கி.

//Spread the love and heal the world.//
சூப்பர் மெஸேஜ்பா..

சுசி on February 14, 2010 at 4:05 PM said...

சொல்ல மறந்துட்டேன்..

டெம்ப்ளேட் கலக்கல்..

படமும் நல்லா இருக்கு.

//காதல்-சிறப்பு வாரம்// இன்னையோட முடியிறது கவலையாவும் இருக்கு.

pappu on February 14, 2010 at 5:07 PM said...

வேற வேலையே இல்லையா? தினம் ஒரு டெம்ப்ளேட்?

 

all rights reserved to www.karkibava.com