Feb 25, 2010

கிங் மேக்கர்


 

    உலகெங்கும் இருந்து ஃபோனும், மெயில்களும் வந்த வண்ணம் இருந்தன. அது என்ன வண்ணம்? பச்சை பச்சையா திட்டினாங்களா?சிவப்பு கலர்ல ரத்தம் வர அடிச்சாங்களா? மெயிலிலே உனக்கு கருப்பு கொடி காட்டினாங்களா என்றெல்லாம் மொக்கை போடாம சொல்றத கேளுங்க. நேத்து நான் கிரிக்கெட் பற்றி எழுதிய ராசிதான் சச்சின் 200 அடிச்சாராம். ரெண்டு பேரும் வேற தனுசு ராசியாம். இல்ல இல்ல, ஒரே தனுசு ராசிதான்.  இந்த வேற… வேற.

   என்னன்னு பதில் அனுப்பறது சொல்லுங்க? இட்ஸ் ஓக்கேன்னு அனுப்பினாலும் தப்பு. பதில் அனுப்பாவிட்டாலும் தப்பு. என்னடா செய்யலாம்னு யோசிச்சப்ப ஒரு ஐடியா பல்பு சூர்யா பல்பு மாதிரி பளீருன்னு எரிஞ்சுது. என்னது?எந்த பல்பா?  எரிஞ்சது ஐடியா பல்புதாங்க. ஆனா சூர்யா பப்லு..ச்சே உங்களால குழம்பிட்டேன். சூர்யா பல்பு மாதிரி பிரகாசமா எரிஞ்சுதுன்னு சொல்ல வறேன். எங்க வறேன்னா? அடிங்.. அந்த பல்பு என்னன்னா, ராசி மேல இவ்ளோ நம்பிக்கையா இருக்கிறவங்களுக்கு ஜோஸ்யத்தை வச்சே பதில் சொல்லனும்ன்னுறதுதான். நாமளாம் லீவுல போனா வெகேஷன் ரெஸ்பான்ஸ் வைப்போம் இல்ல.. அந்த மாதிரி ஒரு டிராஃப்ட் ரெடி பண்ணேன்.

“அன்புடையீர்,

நிகழும் விரோதி ஆண்டு பங்குனி மாசம்.. ச்சே அண்ணனுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சதில் இருந்து இது ஒட்டிக்கிச்சு. அன்புடையீர்ன்னு தொடங்கி 10 சேம்பிள் காட்டியாச்சு அம்மாவுக்கு. ஆனா எதுவும் செட் ஆகல. ஆவ்வ்..ரூட் மாறுது. வாங்க

அன்புடையீர்,

தங்கள் மடலுக்கு நன்றி. நடைபெறும் சனி திசையில், தனுசு ராசிக்காரரான எனக்கு ஜிமெயிலில் கண்டம் இருப்பதாக என் ஆஸ்தான ஜோதிடர் குன்சாபுரம் கூதலப்பர் சொல்லியிருப்பதால் இன்னும் மூன்று மண்டலங்களுக்கு இந்த மெயிலை செக் செய்ய மாட்டேன். அதன் பின் பதில் அனுப்புகிறேன். நன்றி

இபப்டி ஒரு மெயிலை அனுப்பிய அனைவருக்கும் அனுப்பிட்டேங்க. எந்த வேலையும் செய்யாம எனக்கு கிங் மேக்கர்ன்னு பட்டம் வேற கொடுத்திருந்தாங்க ஒரு நல்லவங்க. இந்த குறையை எப்படிடா போக்கலாம்னு யோசிச்சப்ப.. இருங்க பல்பு எல்லாம் எரியல. இப்படி ஓடறீங்க. இந்த முறை நிலா. அதுவும் வெள்ளி நிலா.

ஆமாங்க. நம்ம வெள்ளி நிலா ஷர்ஃபுதின் கூப்ட்டாரு. ஒரு சூப்பர் மேட்டர் பேசினோம். வலையுலகில் யூத் அணி இருக்கு. அட விடுங்க. சொன்னா கேளுங்க. சரி அதுக்கு நான் தான் கேப்டன்.(பய புள்ளைக்கு சந்தோஷத்த பாரு)  கவிதை அணிக்கு அனுஜன்யா. சினிமா அணிக்கு கேபிள். இப்படி பல அணிகளாக வித்தியாசப்பட்டு இருந்தாலும் எல்லோருக்குமே பொதுவான விஷயம் என்னன்னு சொல்லுங்க.? ம்ஹும் அது இல்லை. இந்த சப்பை மேட்டர் கூட தெரியல உங்களுக்கு. அது தொப்பை. விளையாட்டு அணி என்று ஒன்று இல்லாததே அதுக்கு காரணம். நாம் ஏன் ஒரு வலையுலக கிரிக்கெட் அணி ஆரம்பிக்கக் கூடாதுன்னு நாங்க யோசிக்க காரணமா இருந்தது அந்த தொப்பைதான்.

நர்சிம், எறும்பு,பலாபட்டறை ஷங்கர், புலிகேசி, ரோமியோன்னு பல பேரு ஆர்வமா இருக்காங்களாம். அதான் இங்க இருந்து ஒரு சச்சின உருவாக்கி அப்புறமா அந்த கிங் மேக்கர் பட்டத்த ஏத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆகவே இவ்ளோ நீள மொக்கைக்கு அப்புறம் சொல்ல வர்ற மேட்டர் என்னன்னா… யார் யாருக்கெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆர்வம் இருக்கோ… அதுல யார் யாரெல்லாம் சென்னைல இருக்கிங்களோ.. அதுல யார் யாரெல்லாம் சனி, ஞாயிறு ஃப்ரீயா இருப்பிங்களோ…அவங்க மட்டும் தயவு செய்து சின்ன பசங்க மாதிரி கைய தூக்காம பேர பின்னுட்டத்தில் சொல்லுங்க. எந்த பால், எந்த கிரவுண்ட், எந்த தேதி, இதெல்லாம் பேசி தீர்த்துப்போம். நான் பேட்டிங் சைடு. என்னது? நீங்க செண்ட்டர்லதான் பேட் பண்னுவீங்களா? நான் அதை சொல்லல. உஙக்ளையெல்லாம் எப்படி ட்ரெயின் பண்ணி சச்சின் ஆக்கப் போறேனோ? ட்ரெயின் பண்ன முடியாவிட்டாலும், ஒரு பஸ், கார் ஷேர் ஆட்டோவாச்சும் பண்ணல.. என் பேரு கிங்மேக்கர் கார்க்கி கிடையாது. ரெடி ஸ்டார்ட். பேர கொடுங்க.

afp20100224210701778

அதுக்கு முன்னாடி நம்ம மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு வாழ்த்துகள் சொல்லிடுவோம். 36 வயசுல ஆதி 90க்கே முழி பிதுங்குறப்ப, 37 வயசுல 200 அடிச்சிட்டு ஸ்டெடியா நின்னாரே.. அங்க நிக்குறாரு.. ஓ ஆல்ரெடி நின்னாரேன்னு சொல்லிட்டேனா? அதாங்க சச்சின்.

38 கருத்துக்குத்து:

taaru on February 25, 2010 at 9:52 AM said...

me d first here...itho padichuttu varen sagaa...

எறும்பு on February 25, 2010 at 9:57 AM said...

Present sir...

taaru on February 25, 2010 at 10:07 AM said...

ஆகா...இது பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா மாதிரி, மெட்ராஸ்ல இருக்குரவாளுக்கு மட்டும் தானா? அப்டியே பெங்களூரு, ஹைதை யூத் களுக்கு எல்லாம் ட்ரைனிங் கொடுக்க மாட்டீயா மாப்பி...[நான் கொஞ்சம் லேட் தான்]..
anyway நீங்க ட்ரைனிங் மட்டும் பண்ணுங்க பாஸ்.. மிச்சத்த கேப்டன் பல்பு [sorry] பப்லு பாத்துப்பான்...

taaru on February 25, 2010 at 10:12 AM said...

hats off master blaster சச்சின்... ஹம் சொல்லிடுவோம்... வாழ்த்துக்கள் சச்சின் [இந்த இரு நூறை விளாசுனதுக்கும் & எங்களுக்கு dedicate பண்ணதுக்கும்]
long live SACHIN ... வா..! வா..! என் தலைவா...

Anbu on February 25, 2010 at 10:14 AM said...

ம்ம்..நடத்துங்க..நடத்துங்க..

மோகன் குமார் on February 25, 2010 at 10:20 AM said...

Present sir!!

ரிஷி on February 25, 2010 at 10:22 AM said...

Present sir!!

Chitra on February 25, 2010 at 10:26 AM said...

wow! Enjoy......!!!

பாசகி on February 25, 2010 at 10:29 AM said...

ஆசை காட்டி மோசம் பண்ணிடாதீங்க. நான் ரெடி... ரெண்டு கையையும் தூக்கிட்டேன்.

ரெண்டு கையையும் தூக்கிட்டு எப்படி டைப் பண்ணினனு கேக்கமாட்டீங்களே.

♠ ராஜு ♠ on February 25, 2010 at 10:38 AM said...

இதத்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அன்புமதின்றவரு சொல்லிட்டே இருந்தாப்ல..

ர‌கு on February 25, 2010 at 10:38 AM said...

ந‌ட‌த்துங்க‌:)

//ரெண்டு பேரும் வேற தனுசு ராசியாம்//

அப்புற‌ம் எப்ப‌டி ச‌கா ச‌ச்சின் ம‌ட்டும் மொக்கையே போடாம‌ பொள‌ந்து க‌ட்றாரு?....:)))

தராசு on February 25, 2010 at 10:59 AM said...

என்னது, பதிவர்களின் படையா, சூப்பர், ஆனா நமக்குத்தான் சென்னையில இருக்க குடுத்து வெக்கலையே.....,

அது சரி, கிங் மேக்கர்க்கு அப்புறம் குயின் மேக்கிங் வருமா தல???

முகிலன் on February 25, 2010 at 11:56 AM said...

நல்லா இருங்கையா..

ஏதோ பொகையிற வாசமடிக்குதா.. எல்லாம் நம்ம வயிறுதான்..

கார்க்கி on February 25, 2010 at 12:20 PM said...

@டாரு,
கார்க் பந்து வித்துஙக்ளே நேத்து? எப்படி பதிலடி கொடுத்தோம் பார்த்திங்களாண்ணே?

@எறும்பு,
நீங்க ஆர்கனைசர் பாஸ். :))

@அன்பு,
உன் பிளான் என்ன ஆச்சு?

@மோகன்,
வந்துடுவீங்க இல்ல?

@ரிஷி,
ஓக்கே.

@சித்ரா,’
நன்றி

@பாசகி,
ஆடறோம் சகா. கவலையே படாதிங்க.

@ராஜூ,
அப்புரம் என்ன ஆச்சு? விலையாட்டு துறை அமைச்சர் ஆனாரா இல்லையா?

@ரகு,
மொக்கை போடறதாலேதானே(பவுலர்) அவர் பிளந்து கட்றாரு?

@தராசு,
பரிசீலனை செய்யப்படும்

@முகிலன்,
ஹிஹிஹி.. ஆடிய பிறகு சொல்லுங்கண்ணே

Anbu on February 25, 2010 at 12:22 PM said...

\\\♠ ராஜு ♠ இதத்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அன்புமதின்றவரு சொல்லிட்டே இருந்தாப்ல..\\

ஞாபகமா மனதுக்குள்ள வைத்திருந்தமைக்கு நன்றிண்ணே..

Anbu on February 25, 2010 at 12:45 PM said...

\\\@ராஜூ,
அப்புரம் என்ன ஆச்சு? விலையாட்டு துறை அமைச்சர் ஆனாரா இல்லையா?\\\

ரைட்டு..

பாசகி on February 25, 2010 at 12:47 PM said...

நாம கிரிக்கெட் விளையாண்டா மத்தவங்க தான் கவலைப்படணும் சகா :)

காவேரி கணேஷ் on February 25, 2010 at 1:09 PM said...

கார்க்கி
விழுந்து விழுந்து சிரிச்சேன் , நடை அழகு.

கிரிக்கெட் , வலையுலக அணி நல்ல எண்ணம்.

நானும் வாரேன் , ஆட்டையில சேத்துக்கப்பா...

கவிதை காதலன் on February 25, 2010 at 1:57 PM said...

வாழ்த்துக்கள் சச்சினுக்கும் உங்களுக்கும்

சங்கர் on February 25, 2010 at 2:15 PM said...

நானும்,

ஒபெனிங் பவுலர், டு டவுன் பாட்ஸ்மன், லாங் ஆன் பீல்டர்

ஓகேவா ?

அத்திரி on February 25, 2010 at 2:25 PM said...

சந்தடி சாக்கில் அண்ணன் ஆதியை வம்புக்கு இழுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.....

ஆதி அண்ணே இதுக்கு கண்டிப்பா ஏதாவது பண்ணனும்...அவ்ளோதான்

ஆதிமூலகிருஷ்ணன் on February 25, 2010 at 2:37 PM said...

ப்ரெச‌ன்ட் சார்.! (ஹிஹி.. ஆடியன்ஸ் சைட்ல)

கிரிக்கெட்டில் எனக்கு தெரிந்த ஒரே ஒருவர் சச்சின் மட்டுமே. முறியடிக்கயியலாத சாதனைகளை அவர் செய்துகொண்டே இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துகள் சச்சின்.!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on February 25, 2010 at 2:44 PM said...

சச்சின் மாதிரியே ஸ்லிப் ல நிக்க வெச்சிடுங்க..

ஓப்பனிங் நாந்தான் (சீக்கிரம் ரெஸ்ட் எடுக்கனுமில்ல )

ரைட் ஆர்ம் ஆப் ஸ்பின்

டிரிங்க்ஸ் உண்டுல்ல..!

(அப்பாடி ஒரு மூணு பதிவு தேறும் - முகிலன் உங்களுக்கு போட்டோஸ் போடுவோமில்ல ..:)))


ஹாங் சொல்ல மறந்துட்டேனே எனக்கு பை ரன்னர் யாருங்க..??

pappu on February 25, 2010 at 2:52 PM said...

இதுக்கு ஏனய்யா ஆதிய இழுக்குறீங்க

மீடில் ஈஸ்ட் முனி on February 25, 2010 at 5:38 PM said...

karki,

aennakoru doubtu + idea = confusion ....as we are bloggers (Aennayum bloggers list la serthukonga pa please) we play our own literature game online... athey mathri every saturday or sunday nama aen cricket ah online la veliyadakudathu ??? Bcoz aennaya mathiri poor fellows vilaydalam illaya ..for example... Oru thodar pathivu arambitchi best 22 bloggers select panni , 11 peru oru ani (Royal bloggers), ennoru 11 peru oru ani nu pirichi (Tamil Tigers..Oops... "Tamil valaipathivar's" ) , umpire ah oru vayasana blogger ah select panni (yarra podalam ???suggestion ) , mundravathu umpire ah nama cable naina va pottu (Avar dhaan athigama TV dabava pakkuravar achae )...polls la Toss potu ...fielding team ah ball (comment) poda solli...next batting team la errunthu yaravarthu reply panna runs koduthu illaina second comment bowlers ball (comment) pottangana thrid umpire vachi out koduthu ...eppadi vilayadinomna ... Oru B20 (blogger's 20) mathiri pathikum...pichikum !!! ungaloda karuthu aenna???

அன்புடன் அருணா on February 25, 2010 at 6:21 PM said...

நாந்தான் third umpire! ok வா????

வெள்ளிநிலா ஷர்புதீன் on February 25, 2010 at 6:41 PM said...

so Mr Organisher,( yerumbu....? kaargi...?) pls take the list....

சுசி on February 25, 2010 at 6:41 PM said...

:)))

யோ வொய்ஸ் (யோகா) on February 25, 2010 at 7:07 PM said...

இலங்கைக்கு வந்து எங்களுக்கு ட்ரெயினிங் தர முடியுமா சகா

Rajalakshmi Pakkirisamy on February 25, 2010 at 7:44 PM said...

aiyoooooooo... Mokkai ...

அத்திரி on February 25, 2010 at 8:02 PM said...

மக்கள் சேவையில் நான் இருப்பதால் என்னால் வர இயலாது எனபதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

அறிவிலி on February 25, 2010 at 8:03 PM said...

அப்போ ஆதி 90க்கு ஆடினது உண்மைதானா?.

வெற்றி on February 25, 2010 at 9:28 PM said...

மதுரையிலிருந்து வந்து போக ப்ளைட் டிக்கட்(உங்கள் சொ(நோ)ந்த செலவில்) புக் பண்ணி தருவீங்களா சகா :)

கார்க்கி on February 25, 2010 at 11:05 PM said...

12 பேரு தந்திருககங்க. ரெடி பண்ணுவோம்.. விளையாட வரலைனாலும் பதிவர் சந்திப்புன்னு சொல்லி சேர்த்திட மாட்டோம்? :))))

பிரியமுடன்...வசந்த் on February 26, 2010 at 4:30 AM said...

:))

வெள்ளிநிலா ஷர்புதீன் on February 26, 2010 at 10:56 AM said...

12 people?! so we give one bet match with otehr team?!

விஜய் ஆனந்த் on February 27, 2010 at 12:41 AM said...

அடடா...மெட்ராஸ்ல இல்லாம போயிட்டனே...

Tech Shankar on February 28, 2010 at 10:35 AM said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

 

all rights reserved to www.karkibava.com