Feb 24, 2010

க்ரிக்கெட் தொடர்(புடைய)பதிவு


 

  தொடர்பதிவு என்றாலே எனக்கு அலர்ஜி. தொடர்பதிவினால் வரும் தொல்லைகளை எல்லாம் ஒரு பதிவாக எழுதி அதை நர்சிம்மையும், ஆதியயையும் தொடர சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முள்ளை முள்ளால தானே எடுக்கனும்? பின் ஏனோ அதை பதிவேற்றவில்லை. ஆனால் இந்த கிரிக்கெட் தொடர்பதிவை பார்த்ததும் கடவுளைக்(அவர சொல்லலப்பா) கண்ட பக்தனாக பரவசமடைந்தேன். ஒவ்வொருவர் பதிவாக போய் பார்த்தால் நம்மை வசதியாக மறந்திருந்தனர். இதென்னடா வம்பா போச்சுன்னு வாலன்ட்டியரா போய் கமெண்ட் போட்டு முகிலனிடம் சான்ஸ் கேட்டு வாங்கினேன். போதும் வாங்க நிகழ்ச்சிக்கு போவோம்.ச்சே பதிவுக்கு போவோம்.

________________________________________________________

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். (ச்சே. இதை பார்க்காம அவசரப்பட்டுட்டேனே)

2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை (அப்போ ஃபுட்பால் ப்ளேயர பத்தி சொல்லலாமா)

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும். (இப்பவே சொல்லிடறேன். ஒசாமா, ஒபாமா)

*******

1. பிடித்த கிரிக்கெட் வீரர்? (கள்?) :

கார்க்கி (ஜெயிக்கும்போது)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்? :

கார்க்கி (தோற்கும் போது)

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் :

கார்க்கி ( 60 கி.மீ போனாலே ஓவர் ஸ்பிடாமே)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் :

கார்க்கி (ஸ்டாப் லைனை தாண்டி போகும்போது அல்லது போடும்போது)

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :

கார்க்கி (கல்லில் பட்டு டர்ன் ஆகும்படி போடும்போது)

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் :

கார்க்கி (கல்லில் படாமல் பந்து போடும்போது)

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் :

கார்க்கி (வலது கையில் ஆடி சிக்சர் அடிக்கும் போது)

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் :

கார்க்கி (வலது கையில் ஆடி அவுட்டாகும் போது)

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் :

கார்க்கி (சின்ன பசங்களிடம் லெஃப்ட்டுல ஆடுவதாக கூறி காஜு ஆடும் போது)

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் :

கார்க்கி (சின்ன பசங்க பந்துல க்ளீன் போல்ட் ஆகும்போது)

11. பிடித்த களத்தடுப்பாளர் :

கார்க்கி (பந்தைப் பிடிக்கும் போது)

12. பிடிக்காத களத்தடுப்பாளர் :

கார்க்கி (பந்தை விட்டு களத்தில் தடுக்கி விழும்போது)

13. பிடித்த ஆல்ரவுண்டர் :

கார்க்கி ( ஆள் ரவுண்டாக இருப்பதால். ஹிஹிஹி)

14. பிடித்த நடுவர் :

கார்க்கி (ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்)

15. பிடிக்காத நடுவர் :

கார்க்கி (நானே நான் அவுட்டில்லை என்று முடிவு செய்து சண்டையிட்டதால்)

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் :

கார்க்கி (க்ரிக்கெட்டை பற்றின்னு சொல்லலையே. நான் நல்லா வர்ணிப்பேன்)

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் :

கார்க்கி (எல்லா பெண்களையும் கண்ண முடிக்கிட்டு அழகா இருக்காங்கன்னு வர்ணிப்பதால்)

18. பிடித்த அணி :

அறிவான கார்க்கி (ஹிஹிஹி.வஞ்ச புகழ்ச்சி அணி)

19. பிடிக்காத அணி :

அழகான கார்க்கி (இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி-

ஆடித்தான் பழக்கம். வேடிக்க பார்த்து அல்ல (பன்ச் டயலாக்)

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி-

20க்கான பதிலு ரிப்பீட்டேய்

22. பிடித்த அணி தலைவர் :

கார்க்கி (அணியில் அவர் மட்டுமே இருந்தாலும்)

23. பிடிக்காத அணித்தலைவர் :

கார்க்கி (அவரே அவருக்கு தலைமை ஏற்றதால்)

24. பிடித்த போட்டி வகை :

கார்க்கிக்கு மட்டன் போட்டிதான் புடிக்கும்.

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி :

கார்க்கியும், அவர் கூட ஆடுபவரும்.(கார்க்கி ஆடுவதால் புடிக்கும்)

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி :

கார்க்கியும், அவர் கூட ஆடுபவரும்.(கார்க்கி கூட ஆடுபவர் மட்டுமே ரன் அடிப்பதால் )

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் :

கார்க்கி. (அவர் வீரரா என்று இன்னமும் டெஸ்ட் செய்வதால்)

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் :

எனக்கும் தலை கனம் கிடையாது. அதனால் நீங்களே கார்க்கின்னு படிச்சிடுங்க.ப்ளீஸ்.

41 கருத்துக்குத்து:

வரதராஜலு .பூ on February 24, 2010 at 10:30 AM said...

மரண மொக்கைடா சாமி, இதுக்குதான் வாலன்ட்டியரா போய் கமெண்ட் போட்டு முகிலனிடம் சான்ஸ் கேட்டு வாங்கினிங்களா?

ஸ்ஸ்ஸ், யப்பா கண்ண கட்டுதுடா சாமி

ஆதிமூலகிருஷ்ணன் on February 24, 2010 at 10:32 AM said...

உன்னியவும் ஒருத்தன் தொடர் பதிவு எழுத கூப்பிட்டானுல்ல.. நல்லா வேணும்.!

♠ ராஜு ♠ on February 24, 2010 at 10:38 AM said...

\\ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்)\\

சங்கமமா..? இல்ல சமீபத்திய பட்டிமன்றமா..?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on February 24, 2010 at 10:41 AM said...

நல்லகாலம் நான் கார்க்கிய கூப்பிட்டத யாரும் பார்க்கல..:))

சின்ன அம்மிணி on February 24, 2010 at 10:42 AM said...

யோவ், நல்லா இருங்க :)

ரிஷி on February 24, 2010 at 10:45 AM said...

ஏன்??? ஏன் ??? இந்த கொலை வெறி !!!

தமிழ் பிரியன் on February 24, 2010 at 10:50 AM said...

;-))))

taaru on February 24, 2010 at 10:53 AM said...

இதனால வெறுப்பான எல்லாருக்கும் ஒரு அறிவிப்பு... இவ்விடம் கார்க்கி மண்டைய ஒடைக்க காரக் பந்துகள் இலவசமாக வழங்கப்படும்...
நீங்கள் முறையே கூக்ளி,சுவிங்,டர்ன் மற்றும் அசுர வேகமாக போட்டு எப்டினாலும் ஒடசுக்கலாம்... பெருங்காயம் ஏற்படுத்துவோருக்கு பரிசுகளும்அறிவிக்கப்படும்..

வெள்ளிநிலா ஷர்புதீன் on February 24, 2010 at 10:53 AM said...

பதிவர்கள் வெளியிட்ட எல்லா புத்தகங்களையும் 10 முறை தொடர்ந்து படிக்ககடவது!

தராசு on February 24, 2010 at 10:53 AM said...

நாளைய பத்திரிகை செய்தி::

சென்னையில் ஒரு வாலிபர் கண்மூடி தனமாக தாக்கப்பட்டார், தாக்குதலுக்கான பின்னணி அவர் எழுதிய கிரிக்கெட் பதிவு என தெரிகிறது.

கார்க்கி on February 24, 2010 at 11:04 AM said...

@வரதராஜுலு,
ஆரம்பமே அதகளம். பதிவு ஹிட்டுதான் போல :))

@ஆதி,
அதுவும் அவரா கூப்பிடல. கூப்பிட வச்சோம்மில்ல..ஹிஹிஹி

@ராஜூ,
ஹிஹிஹி. எனக்குதான் பெருமை பேசறது புடிக்காதே

@ஷங்கர்,
மிஸ் பண்னிட்டேனே. அதையும் முன்னுரையில் சேர்ர்க்கனும்

@அம்மிணி,
நோ நோ நோ டென்ஷன்..

@ரிஷி,
பழகிடுச்சுங்க :))

@தமிழ்பிரியன்,
நன்றி

@டாரு,
மாப்பி, செம கூக்ளியா? இப்பதான்யா சந்தோஷமா இருக்கு. :))

@ஷர்புதின்,
அவ்ளோ ஏங்க? அந்த பதிவர் பத்திரிக்கையை ஒரு முறை படிச்சா போதுமே :))))

@தராசு,
வாலிபரா? அப்போ நான் தான் :((((

அனுஜன்யா on February 24, 2010 at 11:04 AM said...

டேய் பொருள எடுங்கடா! ஆட்டோவ அனுப்புங்கடா! இனிமேலும் தாங்க முடியாது. நான் முடிவு எடுத்தாச்சுன்னா .....அத என்னாலையே மாத்தமுடியாது. மைன்ட் இட்.

அனுஜன்யா

Nithyaswarna on February 24, 2010 at 11:10 AM said...

ha ha ha... good one! :)

தர்ஷன் on February 24, 2010 at 11:11 AM said...

சகா ஏன் இந்தக் கொலைவெறி
அடடடா என ஆசையுடன் ஓடி வந்தேன், முகிலனின் பதிவில் அவர் யாரும் கூப்பிடலன்னு கவலைப்பட்டீங்கல்ல என சொல்லியிருந்ததைப் பார்த்தப் போதே ஆஹா பெருசா ஏதோ இருக்கும்னு நினைச்சேன்
ஆனா இப்படி இருக்கும்னு நினைக்கவே இல்லை பிராயச்சித்தமாக என்ன செய்வதாய் உத்தேசம்

Chitra on February 24, 2010 at 11:12 AM said...

ha,ha,ha,ha..... Man of the match is Gorky.

Sen22 on February 24, 2010 at 11:18 AM said...

Ithuthan marana mokkai..

Ethukku mela Thodar Pathivu ezhutharavanga Yosippanga..



Senthil,
Bangalore..

vanila on February 24, 2010 at 11:32 AM said...

கிரிக்கெட்ட கண்டுபிடிச்சவன் மட்டும் இப்ப என் கையில மாட்டுனான்.. மவனே.. அவனுக்கு என் கையால தான் ஸ்விங்கு. சாரி சங்கு..

pappu on February 24, 2010 at 11:36 AM said...

யாருய்யா இந்த மாதிரி தொடர் பதிவுகளைத் தொவக்குபவர்?

யோ வொய்ஸ் (யோகா) on February 24, 2010 at 11:38 AM said...

கடவுளே என்ன காப்பாத்து என்னால தாங்க முடியல சாமியோவ்

மோகன் குமார் on February 24, 2010 at 12:03 PM said...

கிரிக்கட்டே மறந்துடும் போல ஆய்டுச்சு (அப்படி ஆனா நல்லதுதான்:)))

வெள்ளிநிலா ஷர்புதீன் on February 24, 2010 at 12:05 PM said...

இதுவும் வேணும் இன்னமும் வேணும் ., இவங்கள எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலே...!
(என்னா..வில்லத்தனம்...!)

முகிலன் on February 24, 2010 at 12:11 PM said...

இந்தப் பதிவைப் படிச்சிட்டு எனக்கு ஆட்டோ அனுப்ப யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று தயவு செய்து கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக்கொள்கிறேன்

வரதராஜலு .பூ on February 24, 2010 at 12:14 PM said...

//Blogger முகிலன் said...

இந்தப் பதிவைப் படிச்சிட்டு எனக்கு ஆட்டோ அனுப்ப யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று தயவு செய்து கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக்கொள்கிறேன்//

ஆட்டோ அப்பவே கௌம்பிடிச்சே, இன்னுமா வரல?

புன்னகை on February 24, 2010 at 12:19 PM said...

என்னைய சொல்லணும்! இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு, உங்கள மதிச்சு வந்து பதிவப் படிச்சேன்ல!!! :@

நர்சிம் on February 24, 2010 at 12:22 PM said...

14வது பதிலும் 17வது பதிலும் வெகு அற்புதம் 12ம் 10ம் சுவாரஸ்யம். 21 அதி சுவாரஸ்யம்.



வேற வழி..?

T.V.ராதாகிருஷ்ணன் on February 24, 2010 at 12:44 PM said...

:-))

கார்க்கி on February 24, 2010 at 12:50 PM said...

@அனுஜன்யா,
எல்லோரையும் கிளப்பிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க தல? வண்டிய நீங்க எடுங்க முதல்ல :))

@நித்யா,
நன்றி

@தர்ஷன்,
என்ன சகா? இன்னுமா நம்மள பத்தி தெரியல?

@சித்ரா,
செக் எதுவும் கிடையாதாங்க?

@சென்22,
நன்றி சகா.(இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்னு கேட்ககூடாது)

@வெண்ணிலா,
அவனுக்கு சங்கு ஊதி பல வருஷமாச்சுங்க :))

@பப்பு,
யாரு தொடங்கினாங்கன்றது முக்கியமல்லப்பா.. யாரு முடிக்கிறாங்கன்னுதான் பார்க்கனும்

@யோகா,
அந்த கடவுளை சொல்லலையே?

@மோகன்,
ஏங்க? க்ரிக்கெட் நல்ல கேம். அதுல பல நல்ல ப்ளேயர் இருக்காங்க, கார்க்கி மாதிரி

@வெள்ளிநிலா,
சீக்கிரம் கத்துக்கொங்க பாஸ். எஙக்ள வச்சு பத்திரிக்கை நடத்த நினைக்கிற உங்கள பார்த்தா எனக்கு பாவமா இருக்கு :))

@முகிலன்,
தப்பு பண்ணவன விட தூண்டியவனுக்கே தண்டனை அதிகம் சகா :))

@புன்னகை,
இந்த மாதிரி ஒரு பேர வச்சிக்கிட்டு கோவப்படக்கூடாதுங்க. டென்ஷன குறைக்க உங்க தோஸ்துங்க யாராவது
கிட ஃபோன் பண்ணி பேசுங்க

@நர்சிம்,
தங்களின் நேர்மையான கருத்துக்கு நன்றி. ஓட்டு போட்டிங்களா?

ர‌கு on February 24, 2010 at 12:53 PM said...

//தொடர்பதிவு என்றாலே எனக்கு அலர்ஜி.//

இனிமே நீங்க‌ தொட‌ர்ப‌திவு எழுத‌னா எங்க‌ளுக்கு அல‌ர்ஜி:))))

//ஆடித்தான் பழக்கம். வேடிக்க பார்த்து அல்ல (பன்ச் டயலாக்)//

ஏன் ச‌கா, இது பன்ச் ட‌ய‌லாக்னு அடைப்புக்குறிக்குள்ள‌ நீங்க‌ போட்டாதான் எங்க‌ளுக்கு தெரியுமா?!

மொத்த‌த்தில் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் ப‌டித்து ம‌கிழ‌வேண்டிய‌ ப‌திவு. அனேக‌மா அடுத்த‌ த‌மிழ்ம‌ண‌ம் போட்டில‌ முத‌ல் ப‌ரிசு வாங்க‌ற‌துக்கு வாய்ப்பிருக்கு:))

GHOST on February 24, 2010 at 12:54 PM said...

கொலைவெறிப்பதிவா இருக்கே?

வெள்ளிநிலா ஷர்புதீன் on February 24, 2010 at 1:15 PM said...

அப்துல்லா அண்ணனே இப்பெல்லாம் ஒன்றிரண்டு கட்டுரை எழுதும் போது,உங்களையெல்லாம் வச்சு பத்திரிகை நடத்துறது அத விட கடினமான விசயமா கிரிக்கெட்டர் கார்க்கி ?!! ( அப்பாவியாய் யோசிப்போர் சங்கம்)

வெற்றி on February 24, 2010 at 2:42 PM said...

இனிமேல் யாராச்சும் தொடர்பதிவு எழுதுவாங்கன்னு நெனைக்கிறீங்க?

நாஞ்சில் பிரதாப் on February 24, 2010 at 4:20 PM said...

பிடித்த பதிவர் : கார்க்கி (மொக்கைப்போடும்போது)

பிடிக்காத பதிவர் : கார்க்கி ( இந்த மாதிரி மரண மொக்கைபோடும்போது)

pappu on February 24, 2010 at 4:21 PM said...

நாங்களும் ஒண்ண முடிச்சு வச்சிருக்கோம்..

வரதராஜலு .பூ on February 24, 2010 at 4:23 PM said...

//நாங்களும் ஒண்ண முடிச்சு வச்சிருக்கோம்..//
என்னா கொலவெறி. ம்ம்.
:)

Dinesh A on February 24, 2010 at 8:04 PM said...

சூப்பர் பதிவு boss..........

நீங்க cricket பத்தி சொன்னது எல்லாம் correct'u
ஆனா ஒரே ஒரு சின்ன தப்பு.......
என் பெயர் "கார்க்கி" இல்ல "தினேஷ்" :-)

Rajalakshmi Pakkirisamy on February 24, 2010 at 10:13 PM said...

நல்லா இருங்க :)எனக்கு தேவை தான்

ROMEO on February 24, 2010 at 11:14 PM said...

கார்க்கி ஏன் இந்த கொலைவெறி ??

முகிலன் on February 25, 2010 at 12:26 AM said...

//taaru on February 24, 2010 10:53 AM said...
இதனால வெறுப்பான எல்லாருக்கும் ஒரு அறிவிப்பு... இவ்விடம் கார்க்கி மண்டைய ஒடைக்க காரக் பந்துகள் இலவசமாக வழங்கப்படும்...
நீங்கள் முறையே கூக்ளி,சுவிங்,டர்ன் மற்றும் அசுர வேகமாக போட்டு எப்டினாலும் ஒடசுக்கலாம்... பெருங்காயம் ஏற்படுத்துவோருக்கு பரிசுகளும்அறிவிக்கப்படும்.//

நானு நானு நானு..

புலவன் புலிகேசி on February 25, 2010 at 8:22 AM said...

இங்கயும் மொக்கையா...

கார்க்கி on February 25, 2010 at 9:39 AM said...

ஹிஹிஹி

அனைவருக்கும் நன்றி சொல்றதா, மன்னிச்சிடுங்கன்னு சொல்றதா தெரியல :))

ராமய்யா... on February 25, 2010 at 10:51 AM said...

கிரிக்கெட்டில் அதிக கோல் போட்ட வீரர்...

கார்க்கி...

எப்பிடிப்பா நம்ம பில்டப்பு?

 

all rights reserved to www.karkibava.com