Feb 23, 2010

தோழி அப்டேட்ஸ்


 

  ட்விட்டும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஒரு செட்டா போய் ஒரே நேரத்தில் கும்ம ஆரம்பித்த்தால் சொகமா போது நேரம்.சென்ற வாரம் ஃபேவரிட் டயலாக் என்று பரிசல் எடுத்துவிட 10 பேருக்கு மேல் ஆர்வத்துடன் 300க்கும் அதிகமான வசனம் பேசி அசத்தினார்கள். சரி. நம்ம மேட்டருக்கு வருவோம். தோழி அப்டேட்ஸ் என்று ட்விட்டரில் அவ்வபோது சொல்லி வருகிறேன். 140 எழுத்துகளில் சொல்வதில் பல சமயம் சிக்கல் வருவதால் பதிவிலும் போடலாமே என்று ஞானம் வந்தது. இதோ ஆரம்பித்தாகிவிட்டது..

  கேக் சாப்பிடும் தோழி, உனக்கு வேண்டுமா என்கிறாள். பின் அவளே உனக்கு ஸ்வீட் பிடிக்காது இல்ல என்கிறாள். அவளை பிடிக்காமல் எப்படி பேசுவேன் என்று கூட யோசிக்காமல் இருக்கும் அவளை என்ன செய்வது? # டவுட்டு

ட்விட்டரில் இதைப் பார்த்துவிட்டு, இதையெல்லாமா ட்விட்டரில் போடுவேன்னு கேட்கிறாள் தோழி. உடனழைத்து கொடுத்த தொலைபேசி முத்தத்தை சொன்னாளா, அல்லது எதை சொன்னாள் என தெரியவில்லை # அகைன் டவுட்டு

  வீக் எண்ட் பிளான் பற்றி கேட்ட நண்பனிடம் ஈ.சி.ஆர் என்றேன். நாலு வாரம் போயும் போரடிக்கலையா என்று கேட்கிறான். ஒரே கதையென்றாலும் எம்.ஜி.ஆருக்கு பதில் ரஜினி நடித்தால் சுவாரஸ்யமாகத்தானே இருக்குமென்றேன். புரியவில்லை என்கிறான். # வாயால் வடை சுடுவது

பைக் வேணாம். உன் ஸ்கூட்டில போலாம். நீயே ஓட்டு என்றேன். நீ வேஸ்ட்டுடா என்ற தோழி, என் சில்மிஷங்களை மிஸ் பண்ண போற என்றாள். நான் தல ரசிகன் இல்லை. இருந்தாலும் எனக்கு தன்னம்பிக்கை அதிகம் என்றேன். ஸ்கூட்டி கிளம்பியது #வா.வ.சு

தூக்கம் வருது. ஒரு நல்ல பாட்டு சொல்லேன் என்றேன். தூங்காத விழிகள் இரண்டு என்று பாடினாள் தோழி. # கொடுமை

ட்விட்டும் இன்னொரு தோழி பார்த்துவிட்டு, டேய் நான் வேற பாட்டில்ல பாடினேன் என்கிறாள்  # அடுத்த கொடுமை.

Sing a song என்றாள் தோழி.  இந்த மான் உந்தன் சொந்த மான் என்ற பாடலை டைப்பினேன். என்ன மேன் உளர்ற என்கிறாள் பீட்டர் தோழி # இதுவும் வா.வ.சு

என் வானிலே.. ஒரே கார்க்கிதான் என்றார்  தோழி. என் வானமே நீதான் என்றேன். அதன் பின் பதிலில்லை. என்ன ஆயிருக்கும் அவருக்கு? #அவசரம்108

36 கருத்துக்குத்து:

Anbu on February 23, 2010 at 10:25 AM said...

me the first

Anbu on February 23, 2010 at 10:29 AM said...

உங்களோட எல்லாப்பதிவிலும் தல நடக்கிறார்..

♠ ராஜு ♠ on February 23, 2010 at 10:30 AM said...

\\என் வானிலே.. ஒரே கார்க்கிதான் என்றார் தோழி. என் வானமே நீதான் என்றேன். அதன் பின் பதிலில்லை. என்ன ஆயிருக்கும் அவருக்கு? #அவசரம்108\\

எலிப்பாஷானம் சாப்பிட்டிருப்பார்.

♠ ராஜு ♠ on February 23, 2010 at 10:31 AM said...
This comment has been removed by the author.
♠ ராஜு ♠ on February 23, 2010 at 10:33 AM said...

\\வீக் எண்ட் பிளான் பற்றி கேட்ட நண்பனிடம் ஈ.சி.ஆர் என்றேன். நாலு வாரம் போயும் போரடிக்கலையா என்று கேட்கிறான். ஒரே கதையென்றாலும் எம்.ஜி.ஆருக்கு பதில் ரஜினி நடித்தால் சுவாரஸ்யமாகத்தானே இருக்குமென்றேன். புரியவில்லை என்கிறான்\\


அண்ணே, நீங்க Birdடாண்ணே..!

♠ ராஜு ♠ on February 23, 2010 at 10:42 AM said...

\\தோழி அப்டேட்ஸ் என்று ட்விட்டரில் அவ்வபோது சொல்லி வருகிறேன்.\\

ஜொல்லி வருகிறீர்கள்.

எம்.எம்.அப்துல்லா on February 23, 2010 at 10:45 AM said...

//160 வார்த்தைகளில் //

வார்த்தை அல்ல எழுத்து.

டுவிட்டரால் இப்போதெல்லாம் பதிவு எழுதுறதையே மறந்துட்டேன் :)

♠ ராஜு ♠ on February 23, 2010 at 10:45 AM said...

\\இதையெல்லாமா ட்விட்டரில் போடுவேன்னு கேட்கிறாள் \\

தஞ்சாவூர் கல்வெட்டு ஞாபகம் வந்துருக்குமே..!

♠ ராஜு ♠ on February 23, 2010 at 10:46 AM said...

\\எம்.எம்.அப்துல்லா said...
டுவிட்டரால் இப்போதெல்லாம் பதிவு எழுதுறதையே மறந்துட்டேன் :)\\

இல்லைன்னாலும்...!

முகிலன் on February 23, 2010 at 10:46 AM said...

சகா, கிரிக்கெட் தொடர் பதிவுக்குக் கூப்பிடலைன்னு வருத்தப்பட்டிங்களே.. இங்க கூப்பிடிருக்கேன். தொடருங்க..

உங்க ட்விட்ஸ் அருமை.. பஸ்ஸுல கும்மலாமே?

எம்.எம்.அப்துல்லா on February 23, 2010 at 10:54 AM said...

ராஜூ,கார்க்கி ரெண்டுபேரும் உடனே டுவிட்டர் வாங்க.

மோகன் குமார் on February 23, 2010 at 10:55 AM said...

:)))

கார்க்கி on February 23, 2010 at 11:06 AM said...

@அன்பு, ஹிஹிஹி.,இதுல நல்லபடியாத்தான் சொல்லியிருக்கேன்

@ராஜூ, தனித்தனியா பதில் சொல்ல முடியாது. ஃபார் சேஃப்ட்டி, இரண்டாவது கமென்ட்டை டெலீடிக்கலாமா? :)))

@அப்துல்லா, நான் எழுதுற ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வார்த்தை போல அர்த்தம் பொதிந்ததுன்னு சொல்றேண்ணா... ஸப்பா

@முகிலன், ஏனோ எனக்கு பஸ் பிடிக்கலைங்க.. ட்விட்டர்தான் பெஸ்ட்.தொடர்ப்திவு எழுதிடலாம்

@மோகன், நன்றி சகா

வெயிலான் on February 23, 2010 at 11:25 AM said...

அப்படியே அந்த டிவிட்டர் ப்ரொபைல் படத்தையும் போட்டா நல்லாருக்கும் கார்க்கி ;)

♠ ராஜு ♠ on February 23, 2010 at 11:28 AM said...

\\வெயிலான் said...
அப்படியே அந்த டிவிட்டர் ப்ரொபைல் படத்தையும் போட்டா நல்லாருக்கும் கார்க்கி ;)\\

உங்களுக்கு அம்புட்டு மனதெகிரியமாண்ணே..?

pappu on February 23, 2010 at 11:28 AM said...

140 எழுத்துக்களில் இல்ல?

♠ ராஜு ♠ on February 23, 2010 at 11:32 AM said...

\\pappu said...
140 எழுத்துக்களில் இல்ல?\\

எழுத்துக்களில்லை.வார்த்தைகள் இன் கார்க்கீஸ் லாங்க்வேஜஸ்.

முகிலன் on February 23, 2010 at 12:01 PM said...

ட்விட்டர் ஆஃபீஸ்ல இருந்து போக மாட்டேங்குதே? பஸ்ஸுதான் மெதுவாப் போனாலும் பரவாயில்ல நல்லாவே போகுது.. :)

Anonymous said...

//♠ ராஜு ♠ on February 23, 2010 10:42 AM said...

\\தோழி அப்டேட்ஸ் என்று ட்விட்டரில் அவ்வபோது சொல்லி வருகிறேன்.\\

ஜொல்லி வருகிறீர்கள்.
//

இப்ப மாத்திட்டாங்களா
ஜொள்ளி வருகிறீர்கள் இல்லையா :)

நல்லா இருக்கு கார்க்கி

♠ ராஜு ♠ on February 23, 2010 at 12:30 PM said...

@சின்ன அம்மிணி

ஜொள் என்பது தமிழா..? எழுதுப்பிழையெல்லாம் பாக்குறீங்க..!
:)

சங்கர் on February 23, 2010 at 12:39 PM said...

அகில உலக பஸ் பயணிகள் சங்கம் சார்பாக உங்களை அழைக்கிறோம்

susi on February 23, 2010 at 2:07 PM said...

// ட்விட்டும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஒரு செட்டா போய் ஒரே நேரத்தில் கும்ம ஆரம்பித்த்தால் சொகமா போது நேரம்.//
ஓஹோ.. சொகமா.. நடத்துங்க..

திவ்யாஹரி on February 23, 2010 at 3:29 PM said...

\\தோழி அப்டேட்ஸ் என்று ட்விட்டரில் அவ்வபோது சொல்லி வருகிறேன்.\\

ஜொல்லி வருகிறீர்கள்.

:) ha ha ha

ர‌கு on February 23, 2010 at 4:21 PM said...

ஜொள்ளெல்லாம் மாணிக்க‌....ஸாரி...கார்க்கியின் ஜொள்ளாகுமாஆஆஆ?

♠ ராஜு ♠ on February 23, 2010 at 4:36 PM said...

25.

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on February 23, 2010 at 5:13 PM said...

:-))

டம்பி மேவீ on February 23, 2010 at 5:54 PM said...

ட்விட்டரில் வருவதெல்லாம் கார்க்கியின் திருக்குறள்கள் ......

தலைவர்
கார்க்கி ரசிகர் மன்றம்
திருச்சி கிளை

SanjaiGandhi™ on February 23, 2010 at 6:10 PM said...

முதல் ட்விட் கலக்கல் கார்க்கி.. சான்சே இல்லை .. செம ரொமாண்டிக்..:)) அது படு ஜோராக இருப்பதால் அனிச்சையாகவே அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் மற்றவைக்கு கொஞ்சம் கம்மி மார்க் தான்.. ஈசிஆர் மேட்டரும் நைஸ் ( உண்மைன்னு கூட தோனுது:) )

ஆதிமூலகிருஷ்ணன் on February 23, 2010 at 7:28 PM said...

:-))

தாரணி பிரியா on February 23, 2010 at 8:16 PM said...

நல்லாதான் டுவிட்டறீங்க‌

இய‌ற்கை on February 23, 2010 at 8:28 PM said...

நல்லா இருக்கு:-))

Rajalakshmi Pakkirisamy on February 23, 2010 at 8:56 PM said...

நல்லாதான் டுவிட்டறீங்க

யோ வொய்ஸ் (யோகா) on February 23, 2010 at 10:31 PM said...

நாங்களும் டிவிட்டுறமுள்ள எங்களையும் தொடருங்களே...

என் டிவிட்டர் பெயர் yoghs007

புலவன் புலிகேசி on February 24, 2010 at 5:55 AM said...

//என் வானிலே.. ஒரே கார்க்கிதான் என்றார் தோழி. என் வானமே நீதான் என்றேன். அதன் பின் பதிலில்லை. என்ன ஆயிருக்கும் அவருக்கு? #அவசரம்108//

எந்த ஆஸ்பத்திரில இருக்காங்க...நான் போயி ஆறுதல் சொல்லனும்

தராசு on February 24, 2010 at 9:05 AM said...

டெம்ப்ளேட்

கார்க்கி on February 24, 2010 at 10:39 AM said...

அனைவருக்கும் நன்றி.. உங்கள் ஆதரவால் இனி தினமும் இரண்டு அப்டேட்டை ட்விட்டலாம் என்றிருக்கிறேன். அவ்வ போது பதிவில் தொகுப்போம் :))

 

all rights reserved to www.karkibava.com