Feb 22, 2010

பிரார்த்தனையும், வாழ்த்துகளும்


 

PA070020[2]

பதிவர் பரிசலுக்கு சனிக்கிழமை சிறு விபத்து நேர்ந்துவிட்டது. காரில் சென்றுக் கொண்டிருந்தபோது முன்னே சென்றவன் சட்டென்று நிறுத்த, இவரும் சடென் பிரேக் அடிக்க, பின்னால் வந்த அசுமந்தம்,  பரிசல் காரின் பின்னாடி(பரிசல்காரரின் பின்னாடி அல்ல)  மோதியிருக்கிறான். இவர் காரின் முன்கண்ணாடியில் போய் மோதி, தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது. தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்த்தவுடன் என்ன பண்ணிங்க என்றிருக்கிறார் டாக்டர்.

“பார்க்கிறவங்க எல்லாம் குழந்தை முகம்னே சொல்றாங்க டாக்டர். அதான் ரவுடி ஆகலாம்னு ஒரு வெட்டு போட்டுக்கிட்டேன் என்றாராம். நொந்துப் போன டாக்டர், ஒரு ஸ்கேன் செஞ்சி  உள்ள எதுவும் ஆகலையான்னு பார்த்திடலாம் என்றாராம். அதற்கும் “வேணாம். டாக்டர். உள்ள எதுவும் இல்லைன்றதும் தெரிஞ்சுடுமே” என்றாராம்.

பேசாமலே சிகிச்சை பார்த்தாராம் மருத்துவர். தொடர்ந்த நண்பர் அழைப்புகளால் பிசி ஆகிவிட்டார் பரிசல். ஒரு பாசக்கார நண்பர் “கண்ணு பட்டுடுச்சு பரிசல்” என்றிருக்கிறார். நம்ம எழுத்தாளர் பதில் சொன்னாராம் “இல்ல பாஸ். கண்னாடிதான் பட்டிடுச்சு”

விஷயம் அவ்வளவு சீரியஸில்லை. பரிசல் ஜாலியாகத்தான் இருக்கிறார் என்ற விஷயம் நண்பர்களிடத்தில் பரவியவுடன் சற்று நிம்மதி அடைந்தனர். பரிசலை கலாய்க்க ஃபோன் செய்த அந்த கிரிமினல் பதிவர், “என்ன சகா? காருக்கு கூட ஹெல்மேல் போடனும் போல இருக்கே” என்றாராம். எழுத்தாளர்ன்னா சும்மாவா? “காருக்கு எதுக்குங்க? நமக்குதான் ஹெல்மேட் போடனும்”. டொக்.

தலைக்கு நேரம் சரியில்லை. அடி விழுந்திட்டே இருக்கு என்றார் சிலேடையுடன்.

என்னடா இவன்.. இவ்ளோ சீரியஸ் மேட்டரிலும் இப்படி விளையாடறேன்னு நினைக்காதிங்க. 10 தையல்னாலும் பயப்பட ஒன்னுமில்லை என்பதை சொல்லவே இந்தப் பதிவு. சீக்கிரம் அவர் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்திப்போம்.

___________________________________________________________________________________

இன்று **வது பிறந்த நாள் காணும் பதிவர் புன்னகையை வாழ்த்தலாம் வாங்க. அவர் இன்று போல என்றும் பிறந்த நாளைக் கொண்டாடமல், அடுத்த வருடம் திருமதி. புன்னகையாக கொண்டாட வாழ்த்துகிறேன்.

மனதில் உண்மை மட்டும் இருக்கும் இடத்தில் புன்னகை எப்போதும் இருக்கும் என்பார் இவர்.

IMG_0659

பிறந்த நாள் வாழ்த்துகள்

மேலே உள்ள படத்தின் வயதறிய தொலபொருள் ஆராய்ச்சியாளரின் உதவியை நாடவிருக்கிறேன். உங்களுக்கு யாரையாவது தெரியுமா என்றேன் நண்பர் ஒருவரிடம். அவர் “கேமரா கண்டுபிடிச்சே சில நூற்றாண்டுகள்தான் சகா ஆகுது” என்றார் சிரிப்புடன். ஆயிரத்தில் ஒருவன் படமென்றால் லாஜிக் வேண்டாமென்ற அவர், ஆயிரத்தில் ஒருத்தியின் படத்திற்கு மட்டும் தலைகீழாய் நின்று லாஜிக் தேடுவது ஏனோ?

என்னம்மோ போங்கப்பா..

40 கருத்துக்குத்து:

Rajalakshmi Pakkirisamy on February 22, 2010 at 9:02 AM said...

Get Well Soon பரிசல்

------------------------

Happy B'day புன்னகை!!!

♠ ராஜு ♠ on February 22, 2010 at 9:02 AM said...

GET WELL SOON WRITER. PARISAL..!

BIRTHDAY WISHES PUNNAGAI..!

திருவாரூரிலிருந்து சரவணன் on February 22, 2010 at 9:04 AM said...

சீரியஸ் மேட்டரையும் இப்படி மொக்கபதிவாக்கிட்டீங்கிலே? ஆனா காரோட கண்ணாடி போச்சே....

vanila on February 22, 2010 at 9:05 AM said...

Get well soon Parisal.. I will pray for a quicker remedy..

முகிலன் on February 22, 2010 at 9:07 AM said...

Get well soon பரிசல்..

புன்னகைக்கு வாழ்த்துகள்.

பிரபாகர் on February 22, 2010 at 9:19 AM said...

சகா,

படிச்சிட்டு டென்ஷனாகுது, அத கூட ஜாலியா சொல்றீங்க! பரிசல் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்.

பிரபாகர்.

சென்ஷி on February 22, 2010 at 9:30 AM said...

Get well soon பரிசல்..

சின்ன அம்மிணி on February 22, 2010 at 9:37 AM said...

//தலைக்கு நேரம் சரியில்லை. அடி விழுந்திட்டே இருக்கு என்றார் சிலேடையுடன். //

கார்க்கி, உங்களுக்கு இந்த கமெண்ட் கேட்டதும் குஷியாயிருந்திருக்குமே!!!!
பரிசல் சீக்கிரம் குணமடைந்து இந்த அனுபவத்தையும் ஒரு பதிவாகப்போட்டு அதுவும் புத்தகமாக வெளிவர வாழ்த்துக்கள்
(பட்டர்பிளை எபெக்ட்)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on February 22, 2010 at 9:40 AM said...

அடடா, பரிசல்- பிரார்த்தனை
-----
:) - வாழ்த்துகள்

-----
மனதில் உண்மை மட்டும் இருக்கும் இடத்தில் புன்னகை எப்போதும் இருக்கும் என்பார் இவர்.

- :)

டம்பி மேவீ on February 22, 2010 at 9:47 AM said...

get well soon "ILAKKIYAVATHI" PARISAL ....


=======

HAPPY BDAY SMILE

டம்பி மேவீ on February 22, 2010 at 10:16 AM said...

நர்சிம்க்கு கிடைத்த மாதிரி பரிசலுக்கு முத்தம் கிடைக்கவில்லை ...அதான் அடி பட்டுருச்சு

ஜெனோவா on February 22, 2010 at 10:18 AM said...

Get Well Soon Parisal.


Happy B'day Punnagai!!!

நர்சிம் on February 22, 2010 at 10:22 AM said...

//டம்பி மேவீ said...
நர்சிம்க்கு கிடைத்த மாதிரி பரிசலுக்கு முத்தம் கிடைக்கவில்லை ...அதான் அடி பட்டுருச்சு
//

ரைட்ட்டு.

பர்சல் திருஷ்டி?

புன்னகைக்கு,மேலும் புன்னகைக்க வாழ்த்துகள்.

மோகன் குமார் on February 22, 2010 at 10:25 AM said...

இதை படிக்கிறப்ப தான் உண்மையிலேயே கண் படுரதெல்லாம் இருக்குமோன்னு லைட்டா டவுட் வருது. பரிசல் சீக்கிரம் குணமடையட்டும்

புன்னகைக்கு பிறந்த நாள் வாழ்த்து

இருந்தாலும் கார்க்கி நீங்க ஒரு பாச கார பய புள்ள :))

Anbu on February 22, 2010 at 10:58 AM said...

நடிகர் விஜயும்,கேபிளும்,கார்க்கியும்..

http://anbu-openheart.blogspot.com/2010/02/blog-post_20.html

Karthik on February 22, 2010 at 10:59 AM said...

பரிசல் அண்ணாவுக்கு பிரார்த்தனைகள்.. புன்னகைக்கு வாழ்த்துக்கள்!! :)

//டம்பி மேவீ said...
நர்சிம்க்கு கிடைத்த மாதிரி பரிசலுக்கு முத்தம் கிடைக்கவில்லை ...அதான் அடி பட்டுருச்சு

Chanceless, ROFL. :))))

கார்க்கி on February 22, 2010 at 11:39 AM said...

பரிசலுக்கு எல்லாம் நல்லபடியாக ஆனவுடன் அவரது வலது கை கட்டைவிரலை காணிக்கையாக தருவதாக வேண்டிக் கொண்டேன்.


எப்படி இனி டைப் பண்றாருன்னு பார்க்கிறேன் :))))

ர‌கு on February 22, 2010 at 11:43 AM said...

//ஒரு பாசக்கார நண்பர் “கண்ணு பட்டுடுச்சு பரிசல்” என்றிருக்கிறார்//

இருக்க‌லாம் ச‌கா, சில‌துலாம் ந‌ம்ம‌ள‌ மீறிதான் ந‌ட‌க்குது. ப‌ரிச‌ல் சீக்கிர‌ம் குண‌ம‌டைய‌ பிரார்த்திக்கிறேன்

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் புன்ன‌கை:)

ஜோசப் பால்ராஜ் on February 22, 2010 at 11:49 AM said...

Saha,
un route la poi alaga solitta.
The same kind of accident already happened to Abdulla Anna. And now it happened to Parisal Anna. If they put their seat belt, this can be avoided. At least hereafter people should use seat belt.

selvanambi on February 22, 2010 at 11:51 AM said...

பரிசல் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்

☼ வெயிலான் on February 22, 2010 at 11:55 AM said...

// ஒரு பாசக்கார நண்பர் “கண்ணு பட்டுடுச்சு பரிசல்” என்றிருக்கிறார் //

கண்ணுபடலை..... அதனால் தான்.

முன்னால போய்ட்டிருந்த வண்டியில பரிசல் கண்ணுபடாததால் தான் இவ்வளவும் நடந்தது.

சுரேகா.. on February 22, 2010 at 11:58 AM said...

அய்யோ அம்மா வென்று கவலைப்படாமல், இப்படித்தான் இந்தச்சூழலை வென்றெடுக்கவேண்டும் கார்க்கி! மிகச்சரியாகச் செய்திருக்கிறீர்கள்.
பரிசல் நல்லா இருக்காரு! இருப்பாரு! :)

புன்னகைக்கு வாழ்த்துக்கள்!

ஜ்யோவ்ராம் சுந்தர் on February 22, 2010 at 12:05 PM said...

Get well soon parisal.

ஆதிமூலகிருஷ்ணன் on February 22, 2010 at 12:12 PM said...

Get Well Soon பரிசல்.!

Happy B'day புன்னகை!!

சிநேகிதி on February 22, 2010 at 12:21 PM said...

பரிசல்காரர் சீக்கரம் குணமாக எனது பிராத்தனைகள்..

புன்னகை என்றும் மனதிலும் முகத்திலும் புன்னகை மாறாமல் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக..

தாரணி பிரியா on February 22, 2010 at 3:33 PM said...

பரிசலுக்கு குணமடைய பிரார்த்தனைகளும், புன்னகைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும்

அன்புடன் அருணா on February 22, 2010 at 5:04 PM said...

பூங்கொத்துடன் Get Well Soon பரிசல்
பூங்கொத்துடன் Happy B'day புன்னகை!!!

Sure on February 22, 2010 at 6:23 PM said...

பரிசலுக்கு அடி பட்ருச்சுன்னு தெரிஞ்ச உடன் பதறிய மனசு , உங்க பதிவ பார்த்தவுடன், அமைதி ஆய்டுச்சு .

//பரிசலுக்கு எல்லாம் நல்லபடியாக ஆனவுடன் அவரது வலது கை
கட்டைவிரலை காணிக்கையாக தருவதாக வேண்டிக் கொண்டேன்.
எப்படி இனி டைப் பண்றாருன்னு பார்க்கிறேன் :))))//

ஏன், ஏன் , ஏன் , ஏன் ஏன் ..............ன் . இந்த கொல வெறி

susi on February 22, 2010 at 6:33 PM said...

அறியத் தந்த குருவுக்கு நன்றிகள்..

சீக்கிரம் குணமடைய பரிசலுக்கு பிரார்த்தனைகள்..

புன்னகையோடு என்றும் வாழ புன்னகைக்கு வாழ்த்துக்கள்..

திவ்யாஹரி on February 22, 2010 at 7:11 PM said...

பரிசல் அண்ணாவுக்கு பிரார்த்தனைகள்..
புன்னகைக்கு வாழ்த்துகள்..

RaGhaV on February 22, 2010 at 7:18 PM said...

பரிசலுக்கு பிரார்த்தனைகள்.. புன்னகைக்கு வாழ்த்துக்கள்.. :-)

மயில் on February 22, 2010 at 11:14 PM said...

get well soon krishna

யோ வொய்ஸ் (யோகா) on February 22, 2010 at 11:17 PM said...

பரிசல் சீக்கிரம் குணமாக பிரார்த்திப்போம்

சி.வேல் on February 23, 2010 at 4:04 AM said...

Get well soon parisal.

Muthu on February 23, 2010 at 5:03 AM said...

Get Well Soon பரிசல்.

நீங்கள் சொல்லிய விதம் பிடித்திருந்தது கார்க்கி :-)

பா.ராஜாராம் on February 23, 2010 at 5:20 AM said...

பத்ரமா வாங்க பரிசல்.

வந்து,இந்த காரோட, கீயை எடுத்தறலாம்.

என்னா அலும்புயா? :-)

இவன் சிவன் on February 23, 2010 at 6:06 AM said...
This comment has been removed by the author.
இவன் சிவன் on February 23, 2010 at 6:08 AM said...

பரிசல்னு பேரைவச்சிகிட்டு கார்ல போனதால இருக்குமோ!!! Hope he get well soon...
பரிசல் கார் வாங்கிய நேரத்தில் என நினைக்குறேன் ..ஏதோ ஒரு பதிவில் கார்க்கியுடனான நட்பைச்சொல்ல ,'எப்போதும் என்னிடம் இருப்பது 'கார்..க்கீ''
என சிலேடை போட்டார் . இதை விசாரணைக்குழு கருத்தில் கொள்ள வேண்டும்.

புலவன் புலிகேசி on February 23, 2010 at 6:56 AM said...

///“பார்க்கிறவங்க எல்லாம் குழந்தை முகம்னே சொல்றாங்க டாக்டர். அதான் ரவுடி ஆகலாம்னு ஒரு வெட்டு போட்டுக்கிட்டேன் என்றாராம். நொந்துப் போன டாக்டர், ஒரு ஸ்கேன் செஞ்சி உள்ள எதுவும் ஆகலையான்னு பார்த்திடலாம் என்றாராம். அதற்கும் “வேணாம். டாக்டர். உள்ள எதுவும் இல்லைன்றதும் தெரிஞ்சுடுமே” என்றாராம்.//

அங்கயும் நக்கல விடல...புன்னகைக்கு வாழ்த்துக்கள்...பரிசல் சீக்க்ரம் குணமடைந்து வாங்க

புன்னகை on February 24, 2010 at 11:42 AM said...

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! கார்க்கி, உங்களுக்கு இல்ல!!! :-)

 

all rights reserved to www.karkibava.com