Feb 18, 2010

ஒரு சூறாவளி கிளம்பியதே


 

  அதிவேகத்தில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். 9.30க்கு எல்லாம் எப்படியாவது போய் சேர்ந்துவிட வேண்டுமென்பதில் குறியாய் இருப்பேன் நான். அன்று பப்லுவிற்கு விடுமுறை. சேவாக்கின் அட்டகாச பவுண்டரியை பார்க்கவிடாமல் சாராவையோ டோராவையோ வைத்து கடுப்பேற்றிக் கொண்டிருந்தான். மணி 9.10. இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் 9.30க்கு செல்ல முடியாது. இருந்தாலும் சேவாக்கை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனிடம் சண்டை போட்டு இரண்டு பவுண்டரிகள் பார்த்தேன். லேட்டா ஆயிடுச்சா என்று பரிகசித்தான் பப்லு. 9.30க்கு ஆஃபீஸ் போயிட்டு ஃபோன்(லேண்ட்லைனில் இருந்து)  பண்றேன் பாருடா என்று கிளம்பினேன். என்ன லேட்டானாலும் காதில் இயர்பிளகை மாட்டாமல் கிளம்பமாட்டேன். ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து அவனுக்கு பை சொல்லிவிட்டு ஐபோடை ஆன் செய்து ரிப்பீட் பட்டனைத் தட்டினேன்.

ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

ரட்சகன் படத்தில் நாகர்ஜுனனுக்கு ஆனது போல் நரம்புகள் புடைக்கிறதா என்று பார்த்தேன். ம்ஹூம். ஆக்ஸீலேட்டரை திருகி கிளட்ச்சை விட்ட போது முன்சக்கரம் குதிரை போல கனைத்துக் கொண்டே மேலேழுந்தது.

சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை சீண்டிவிட்டாய்

பப்லு. மனதுக்குள் கத்திக் கொண்டே விர்ர்ர்ர்ர்ர்ரென கிளம்பினேன். பிக்கப் மட்டுமே பஜாஜ் வண்டியில் எதிர்பார்க்கலாம். வ்ரூஊஊஊஊஉமென்று மெதுவாக பறக்கத் தொடங்கினேன்

கோடீஸ்வரா அனுபவிப்பாய்
கோடீஸ்வரா நீ அனுபவிப்பாய்

பப்லுவை பார்த்து பாடினால், கேடீஸ்வரா என்றுதானே வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பந்தயம் என்னவென்று மீண்டும் யோசித்தேன். ஒரு வாரம் என்னை வாடா போடா சொல்ல மாட்டான். நினைத்துப் பார்க்கவே எவ்ளோ நல்லா இருக்கு? பஜாஜ் XCDல் நான்கு கியர் மட்டும்தான் போலும். அதற்கு மேல் அழுத்தினாலும் விழவில்லை.

ஒரு சூறாவளி கிளம்பியதே
சிவ தாண்டவம் தொடங்கியதே..

குறுக்கு சந்துகளை கடந்து மெயின்ரோட்டை அடைந்த போது கிறுக்கு பசங்க வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த சந்துக்குள் பைக்கை செலுத்தினேன்.

தடைகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்

எதிர்பாராமல் அங்கே ஒரு கட்டை கட்டியிருந்தது. காலால் தட்டியவுடன் பிரச்சினையில்லாமல் கிழே விழுந்து வழிவிட்டது. கட்டையை சட்டை செய்யாமல் முன்னேறி சென்றேன். கை வந்த கலைதானே? ஏன் காலால் தட்டினோம் என்று யோசிப்பதற்குள் அடுத்த வரியை பாடிவிட்டார் ஷங்கர் மகாதேவன்.

பணத் திமிரினை எதிர்க்கவும் பதிலடி கொடுக்கவும்
துணிந்தவன் யாரு இவன்தான்

மீண்டும் மெயின் ரோட்டில் ஏறியபோது டிராஃபிக் மாமா, ச்சே போலிஸ் வழி மறித்தார். ஒன்வே என்றார். நான் என் வே சார் என்றேன். காலையிலே கரன்சியை எதிர்பார்க்கிறார் என்று தெரிந்ததும், ஃபைன் போடுங்க சார்.கட்டிட்டு போறேன் என்று வண்டியை குறுக்கே நிறுத்தேனேன். என்ன நினைத்தாரோ போங்க சார். இனிமேல் வராதிங்க என்றார்.

இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது லட்சிய வெறி

எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில் தூங்காது விழி.

3 நிமிடங்கள் வீணாகிவிட்ட துயரத்தில் இன்னும் முறுக்கினேன். வண்டியின் அலறல் சத்தத்தில் தானாக விலகி வழிவிட்டனர் சென்னை வாசிகள். அது ஜெயிக்க வேண்டுமென்று என் ரத்த செல்கள் போட்ட சத்தம் என்பது பிற்பாடுதான் எனக்கே தெரிந்தது

தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது

கடைசி சிக்னல். இதைத் கடந்துவிட்டால் இலக்கை அடைந்துவிடலாம். ஷார்ப்பாக ”ரெட்” சிக்னல் விழுந்தது. சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். ஸ்பைக் தலையுடன் அதே பில்லா கண்ணாடியுடன்  “அசல்” போஸ்டரில்  அட்டகாசமாக நடந்துக் கொண்டிருந்தார் அஜித். நேற்று அந்த போஸ்டர்  பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான்  நடக்கிறார் தல. அதுக்கெல்லாம் நேரமில்லை. புதிய வரலாறு படைக்கப் போகும் நேரமது. தல போஸ்டர் ஒட்டியிருந்த சுவரோரமாக லாவகமாக நுழைந்து சிக்னலை கடந்தேன். நேரம் 9.28.

இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது

மூச்சிறைக்க ஓடி வந்து அலுவலக விளக்குகளை எரியவிட்டேன். பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என தமிழனைப் போல எல்லா நிறங்களிலும் விளக்குகள் எரிந்தன. லேண்ட்லைனில் இருந்து வீட்டிற்கு அழைத்தேன். லேண்ட்லைனில் சிகப்பு நிறம்.

சிவா சிவா சிவா சிவா
சிவா சிவா சிவா சிவா

அம்மாதான் எடுத்தார்கள். ஏம்மா எனக்கு சிவான்னு பேர் வைக்கல என்றேன்.

அதெல்லாம் வீட்டுக்கு வா சொல்றேன் என்றார்கள்.

இன்னைக்கு நான் வர லேட்டாகும்ன்னு சொன்னேனே.

டேய்.லேப்டாப்ப விட்டுட்டு போயிட்ட. வந்து எடுத்துட்டு போ.

ஷிட். அப்பவே ஃபோன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே?

ஃபோனும் இங்கதான் இருக்கு.

டொக்.

பொறுமையாக இறங்கி வந்து மெதுவாக ஹெட்ஃபோன் மாட்டி, ஹெல்மட்டை தலையில் கவிழ்த்து ஐபோடை ஆன் செய்தேன்.

ஓ மகசீயா ஓ மகசீயா.. நாக்க முக்க நாக்க.. ஓ ஷக்கலக்கா..ஓ ரண்டக்கா

பின்னால் இருந்து ஹார்ன் அடித்துக் கொண்டே வந்திருக்கிறார் ஒருவர். என்னை ஒவர்டேக் செய்த போது ஏதோ சொல்லிக் கொண்டே சென்றார். சத்தத்தை குறைத்து என்ன சொல்கிறார் என்று கவனித்தேன்.

கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு.

57 கருத்துக்குத்து:

dharshini on February 18, 2010 at 9:29 AM said...

me the first?!

Rajes on February 18, 2010 at 9:33 AM said...

hi karki... keep it up... best wishes ... narrating simply nice...

அனுஜன்யா on February 18, 2010 at 9:34 AM said...

ஹா ஹா. நல்லா இருக்கு. ஆனால், கடைசியில் ரிலாக்ஸ் பண்ணனுமா? - ஹோசானா மட்டும் கேட்டால் போதும் :)

அனுஜன்யா

"ராஜா" from புலியூரான் on February 18, 2010 at 10:03 AM said...

//ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் தல

அது வெற்றி நடை சகா ... (ஆனாலும் உங்க கிண்டல் நல்லாவே இருந்தது)

தராசு on February 18, 2010 at 10:04 AM said...

//டேய்.லேப்டாப்ப விட்டுட்டு போயிட்ட. வந்து எடுத்துட்டு போ. ஷிட். அப்பவே ஃபோன் பண்ணி சொல்ல வேண்டியதுதானே? ஃபோனும் இங்கதான் இருக்கு. //

இது டாப்பு ஆப்பு.., சூப்பரப்பு

சங்கர் on February 18, 2010 at 10:18 AM said...

இதுக்கு தான் போன்ல பாட்டு கேக்கணும்னு சொல்றது

பாலாஜி on February 18, 2010 at 11:16 AM said...

குத்துவிளக்கு பாட்ட கேட்டா இந்த பிரச்சனை இல்ல

குசும்பன் on February 18, 2010 at 11:22 AM said...

கார்க்கி இந்த போட்டோவில்தான் நீ ஹேண்டசம்மா இருக்க!

♠ ராஜு ♠ on February 18, 2010 at 11:27 AM said...

என் இனமய்யா நீர்..!

\\சங்கர் said...
இதுக்கு தான் போன்ல பாட்டு கேக்கணும்னு சொல்றது\\

நீரும் என் இனமே..!

♠ ராஜு ♠ on February 18, 2010 at 11:30 AM said...

கார்க்கி மின்சாரவாரியம்.

கார்க்கி குடிநீர் வாரியம்.

கார்க்கி சிறைச்சாலை.

கார்க்கி பிணக்கிடங்கு.

ச்சே..கேட்கவே எவ்ளோ திவ்யமா இருக்கு.

கார்க்கி on February 18, 2010 at 11:42 AM said...

தர்ஷினி.. நலமா?

நன்றி ராஜேஸ்..

@அனு, ஹோசான்னா கேட்டா வண்டி ஓட்ட மாட்டேன் தல. அபப்டியே நின்னுடுவேன் :))

@ராஜா, ஆஹா. இது தெரியாம போச்சே.. :))

@தராசு, வாப்பூ..போய் சேர்ந்தாச்சா ஊருக்கு?

@சங்கர், முடிவு செய்திட்டேன். ஆணிய புடுங்க வேணாம்ன்னு

@பாலாஜி, வேற பிரச்சினை வருமே:)

@குசும்பன், நிஜமா? அட ஆமா...:)

@ராஜு, யாருப்பா அந்த திவ்யா? ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் திவ்யாவா?

பத்மநாபன் on February 18, 2010 at 12:16 PM said...

நல்ல பரிகாசமான பாடல் .... அழகா பிட்டப் பண்ணி இருக்கீங்க

மறத்தமிழன் on February 18, 2010 at 12:25 PM said...

கார்க்கி,

உண்மையிலேயே நீங்க சொன்னமாதிரித்தான் திட்டுனாரா...

எனக்கு வேற...வேற..வேற ..மாதிரி கேட்டதே :))

நம்மிள் பலருக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கும்..

சுசி on February 18, 2010 at 1:35 PM said...

அட.. உங்களுக்காகவே எழுதினா மாதிரி இருக்கே..
அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை இருக்கணும்பா..

கலக்கல் கார்க்கி..

சுசி on February 18, 2010 at 1:38 PM said...

ஃபோட்டோவுக்கு கண்ணு பட்டிருக்கும்.. அம்மாவ சுத்தி போட சொல்லுங்க :)))

ஆதிமூலகிருஷ்ணன் on February 18, 2010 at 1:42 PM said...

உண்மையிலேயே விறுவிறுப்பான போஸ்ட் இது. குறிப்பாக அந்த 'பெட்' சுவாரசியம்.

ஆனால்..

பைக்கில் ஹெட்போனில் பேசிக்கொண்டோ, பாட்டுக்கேட்டுக்கொண்டோ செல்வது தவறு, குற்றம். அதுவும் ஹார்ன் ஒலி கூட கேட்காத அளவில் வால்யூம் வைத்துக்கொள்வதை நிச்சயம் ஏற்கமுடியாது. அதை கேஷுவல்தான் என்பது போல எழுதியிருப்பதைக்காணும் போது இன்னும் கோபம்தான் வருகிறது. ஐ'ம் ஸாரி.

பரிசல்காரன் on February 18, 2010 at 2:51 PM said...

யப்பே......... அடிச்சு விடு!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on February 18, 2010 at 2:58 PM said...

henry J on February 18, 2010 2:03 PM said...
nalla iruku

(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

High Definition Youtube Video Download free Click here

MOVIE TICKETS BOOKING ONLINE :) CLIck HeRe

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here//


ரிப்பீட்டு... (எவ்ளோ பேருக்கு கமென்ட் போடறார் இது கூட பண்ணலைனா எப்படி சகா :))

கார்க்கி on February 18, 2010 at 3:11 PM said...

நன்றி பத்மநாபன்

நன்றி மறத்தமிழன். உங்களுக்கு பாம்பு காதுங்க :))

நன்றி சுசி. அம்மாகிட்ட சொன்னா தலைலதான் போடுவாங்க :))

ஆதி, பாட்டு கேட்டா குற்றமில்லைங்க. பேசினாதான் குற்றம்.பாட்டு கேட்பதும் குற்றம்ன்னா காரில் எல்லாம் எதுக்கு மியுஸீக் பிளேயர்? அரசாங்கம் அதை தடை செய்வதுதானே முறை? நோ டென்ஷல் பாஸ்... அதை நான் கேஷுவலாக எழுதல. பயங்கர கடுப்புல இறங்கிவருவது போல்தானே இருக்கு. அவர் திட்டியவுடன் ஆஃபே செய்துவிட்டேன் என்பது மேலதிக தகவல் :))

பரிசல், என்ன இது சகா?????

ஷங்கர், அவர் பின்னூட்டத்த டெலீட் செய்துவிட்டேன். உங்கள என்ன செய்ய?????:))

வெண்பூ on February 18, 2010 at 3:25 PM said...

//
அசல்” போஸ்டரில் அட்டகாசமாக நடந்துக் கொண்டிருந்தார் அஜித். நேற்று அந்த போஸ்டர் பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் தல.
//
Good :)))

//
என்ன லேட்டானாலும் காதில் இயர்பிளகை மாட்டாமல் கிளம்பமாட்டேன். ஹெட்ஃபோன் மாட்டி
//
Bad :(

//
ஆதி, பாட்டு கேட்டா குற்றமில்லைங்க. பேசினாதான் குற்றம்.பாட்டு கேட்பதும் குற்றம்ன்னா காரில் எல்லாம் எதுக்கு மியுஸீக் பிளேயர்? அரசாங்கம் அதை தடை செய்வதுதானே முறை?
//
Ugly :((((((((

taaru on February 18, 2010 at 3:28 PM said...

இந்த போட்டோவுல கார்க்கியே தெர்ல...ஏதோ handlebar பிடிகிறது வச்சு யூகிச்சா தான் உண்டு... ஆனாலும் படம் சூப்பர்..
எங்கேடா இந்த பப்லு பயல காணோமேனு பாத்தேன்..வந்தாச்சா... படிச்சிட்டு அடக்க முடியாம சிரிச்சுட்டே இருக்கேன்...
அப்டியே இந்த பாட்டுல சிவா இடத்துல கார்க்கி ஓடி வர மாதிரி imagination ல தான் அம்பூட்டு சிரிப்பு.. [அந்த திருஷ்டி பூசநில 50 பைசா; எடுக்குற மாதிரி ஒரு கற்பனை; என்னால தாங்க முடியல...:-) :-))))))))]

pappu on February 18, 2010 at 3:48 PM said...

//
அசல்” போஸ்டரில் அட்டகாசமாக நடந்துக் கொண்டிருந்தார் அஜித். நேற்று அந்த போஸ்டர் பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் தல.
//

ஹி.. ஹி..

நர்சிம் on February 18, 2010 at 3:54 PM said...

நடத்துங்க சகா

விக்னேஷ்வரி on February 18, 2010 at 4:10 PM said...

அதிகமா விஜய் படம் பார்த்த எஃபெக்ட் பதிவு முழுக்க தெரியுது. கடைசில விஜய் படம் மாதிரியே சொதப்பலாகிடுச்சா... :)

@குசும்பன், நிஜமா? அட ஆமா...:) //
ஹிஹிஹி... ஏன்னா இதுல ஹெல்மட் தான் தெரியுது. முகம் இல்ல. :)

அன்புடன் அருணா on February 18, 2010 at 4:20 PM said...

/நான் என் வே சார் என்றேன்/
கலக்கல்ஸ் கார்க்கி வாழ்க!

ஆதிமூலகிருஷ்ணன் on February 18, 2010 at 4:45 PM said...

பாட்டு கேட்பது குற்றம் என நான் சொல்ல வரவில்லை. ஹார்ன் ஒலி கேட்காத அளவில் வால்யூம், //என்ன லேட்டானாலும் காதில் இயர்பிளகை மாட்டாமல் கிளம்பமாட்டேன்// என்றெல்லாம் எழுதிவிட்டு //காரில் எல்லாம் எதுக்கு மியுஸீக் பிளேயர்? அரசாங்கம் அதை தடை செய்வதுதானே முறை? அவர் திட்டியவுடன் ஆஃபே செய்துவிட்டேன்// என சும்மா சமாளிக்க வேண்டாம். அது பொறுப்பற்றத்தனம் என்றால் பொறுப்பற்றத்தனம்தான்.!

இதுக்கும் எதுனா பதில் சொன்னா வாயில ஏதாவது வந்துரும்.. சொல்லிட்டேன்.!

டம்பி மேவீ on February 18, 2010 at 5:11 PM said...

பைக் ல போனாலும் பஸ் டிக்கெட் வாங்குவான்.......பாட்டு கேட்டாலும் கண்களை முடி தான் தூங்குவான்...அவன் கார்க்கி (எப்புடி ...உங்களுக்காகவே ரொம்ப நேரம் யோசிச்சேன்)


பthiவு naல்ல iruக்ku :)))))))

டம்பி மேவீ on February 18, 2010 at 5:17 PM said...

"கஸ்மாலம். காலைலே தூங்கிக்கிட்டே வண்டி ஓட்டுது பாரு."


wow...ennai kooda ippadi solli irukkanga.... ஒரு வேளை தூங்கி கொண்டே வண்டி ஓட்டினால் தான் பதிவுலகத்தில் பிரபலமாக முடியுமா ????

கார்க்கி on February 18, 2010 at 6:26 PM said...

நன்றி வெண்பூ... மற்றதுக்கு ஆதிக்கு சொல்லும்போது சேர்த்து சொல்றேன்..

டாரு, டோட்டல் டேமேஜ்.. இருந்தாலும் சிவா ஒரு ஹீரோ என்பதால் அட்ஜஸ்ட் செஞ்சிக்கிறேன் :))

நன்றி பப்பு

நர்சிம், இது செல்லாது செல்லாது

@விக்கி, விஜய் படமாச்சும் கடைசிலதான் சொதப்பும்.. :))

நன்றி டீச்சர்

ஆ.மூ.கி, நீங்க சட்டப்படி பேசறீங்களா, தர்மப்படி பேசறீஙக்ளான்னு தெரியல. தனிப்பட்ட முறையில் மட்டுமே ஆபத்து விளைவிக்க கூடிய ஹெல்மட்டை கட்டாயமாக்கிவிட்டு, சிகரெட்டை பப்ளிக்காக அடித்த நாடு இது. நம்முடைய வசதிப்படி பல சட்டஙக்ளை மீறிக் கொண்டுதான் இருக்கிறோம். எனக்கு பாட்டு பிடிச்சிருக்கு அதனால் கேட்கிரேன். ஏதோ கொலையே செய்தது போல் மிரட்டறீங்களே :)))..

நமது வசதிக்காக எத்தனை தவறுகள் செய்றோம்னு யோசிச்சு பாருங்க. அதுக்காக நானும் அபப்டித்தான்னி சொல்லல. சில விஷயஙக்ளை இவ்வலவு சீரியஸா எடுத்துக் கொள்ள வேண்டாம். பாட்டுக் கேட்டுக் கொண்டே யார் மீதோ இடித்துவிட்டேன் என்றால் திட்டுங்க :))

மேவீ, முடிவே பண்ணியாச்சா நான் தூங்கினெனெனு? ஏம்ப்பா 5 நிமிஷம் முன்னாலதான் அந்த சீறு சீறினேன்னு சொல்லி இருக்கேனே..

அப்புறம் ஆ.மு.கி, வெண்பூ & எல்லோருக்கும், சத்யமா இது புனைவுதாங்க.. உண்மையும், டகால்ட்டியும் சரிவிகிதத்தில் கலந்த புனைவு :))

திவ்யாஹரி on February 18, 2010 at 6:35 PM said...

//ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் தல.//

haa haa haa..

V.A.S.SANGAR on February 18, 2010 at 6:44 PM said...

அதே நக்கல் அதே கிண்டல்

ரிஷி on February 18, 2010 at 7:12 PM said...

Nice naration boss...

ரிஷி on February 18, 2010 at 7:13 PM said...

போன பதிவுலே எது பட்டி மன்றம் பத்தி சொல்றத சொன்னீங்க எங்க அது?

ரிஷி on February 18, 2010 at 7:15 PM said...

ஆதிக்கு தான் என்னோட ஒட்டு ...

ஓவர் ஸ்பீட் , ஓவர் சவுண்ட் உடம்புக்கு ஆகாது

வெற்றி on February 18, 2010 at 8:35 PM said...

//ஸ்பைக் தலையுடன் அதே பில்லா கண்ணாடியுடன் “அசல்” போஸ்டரில் அட்டகாசமாக நடந்துக் கொண்டிருந்தார் அஜித். நேற்று அந்த போஸ்டர் பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் தல.//

ஹா ஹா ஹா :)))

இது புனைவாக எழுதப்பட்ட பதிவாக இருந்தாலும் இதில் வரும் முயற்சிகளை நிஜ வாழ்வில் அப்ளை செய்யாதீங்க சகா..

முரளிகுமார் பத்மநாபன் on February 18, 2010 at 8:47 PM said...

நேற்று அந்த போஸ்டர் பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் ///

அஜீத் நடக்கும் அசலா? அடிச்சி ஆடு சகா.

காலங்காத்தால செம்ம்ம பல்பு போல? கி கி கி

SanjaiGandhi™ on February 18, 2010 at 9:45 PM said...

தோடா :)

Rajalakshmi Pakkirisamy on February 18, 2010 at 9:47 PM said...

நேற்று அந்த போஸ்டர் பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் ///

தலய ஏங்க இழுத்து விடுறீங்க?

:(((((

நாய்க்குட்டி மனசு on February 18, 2010 at 9:51 PM said...

நீங்க கடோசில சொன்னத நாங்க முதலிலேயே எதிர்பாத்தோம், ஏன்? என்ன பழக்கம் வண்டி ஓட்டும் போது அதுவும் சென்னை மாநகரத்தில பாட்டு கேட்டுக்கிட்டே வண்டி ஓட்டுறது

யோ வொய்ஸ் (யோகா) on February 18, 2010 at 9:52 PM said...

தமிழ்படம் மாதிரியா இது சகா?

pappu on February 18, 2010 at 10:10 PM said...

இதுக்கும் எதுனா பதில் சொன்னா வாயில ஏதாவது வந்துரும்.. சொல்லிட்டேன்.!///

ஆதி, நம்ம ஆளு தான்னு சும்மா வர்றத சொல்லுங்க! அடுத்தவன் திட்டு வாங்குறத கேக்குற சுகம் இருக்கே!

Sundar சுந்தர் on February 18, 2010 at 11:24 PM said...

What the heck....if a chicken wants to cross a road, it might as well wear an ipod and do it in style.

Sundar சுந்தர் on February 18, 2010 at 11:26 PM said...

//நேற்று அந்த போஸ்டர் பக்கத்து சுவரில் இருந்த மாதிரி ஞாபகம். ஆனாலும் ஓவராத்தான் நடக்கிறார் தல.//

:)

Chitra on February 19, 2010 at 12:11 AM said...

கலக்கல் பதிவு.

Arun on February 19, 2010 at 4:20 AM said...

Karki,
I am reading your blog for very long time and I am one among your crazy fans. My request is - "dont listen to music on headphones/ipod while driving". Listening to music while driving car is different as we are not hearing through an headphone/ipod and it is only tough speakers. But while driving bike, we need to be very careful and hopefully u will take this in the right sense. This is not at all a good practice. Please change this right away and don't do it anymore. One humble request from your fan

Thanks,
Arun

புலவன் புலிகேசி on February 19, 2010 at 6:34 AM said...

ஹா ஹா ஹா...அதென்ன கெட்டப் பழக்கம் வண்டி ஓட்டும்போது பாட்டு கேக்குறது...

Jaya on February 19, 2010 at 8:08 AM said...

Nalla irunthathu Sir. Aana ellorum sonna mathiri paatu ketute bike otuvathai thayavu seythu niruthavum.!!

Jaya on February 19, 2010 at 8:08 AM said...
This comment has been removed by the author.
Rajalakshmi Pakkirisamy on February 19, 2010 at 8:28 AM said...

// "dont listen to music on headphones/ipod while driving".//

sss

கார்க்கி on February 19, 2010 at 10:11 AM said...

அனைவருக்கும் நன்றி..

@ரிஷி,
எழுதிட்டே இருக்கேன் பாஸ்.கொஞ்சம் பிசி..

@ராஜி,
எதுவும் தப்பா சொல்லலையேங்க :(((

@அருண்,
ரொம்ப நன்றி சகா..

மக்களே, இந்த கதை உண்மையாக நடந்திருக்கும்னு நினைக்கிறீங்களா? இல்லைங்க. அதுக்காக நான் பாட்டே கேட்க மாட்டென்னு சொல்லல.. அப்பபப் கேட்பேன்.. இனிமேல் கேட்கல... உங்க அறிவுரைக்கு நன்றி..

Karthik on February 19, 2010 at 11:13 AM said...

அடடா சூப்பர்ப் போஸ்ட்க்கு லேட்டா வந்திருக்கேனே?! 'நட'ந்து வரணும்ல அதான்..;)

கலக்கல்ல்ல்...

"உழவன்" "Uzhavan" on February 19, 2010 at 12:21 PM said...

சில நேரங்களில் இப்படியெல்லாம் நடப்பதுண்டு. கலக்கலான காமெடிப் பதிவு :-)

ஜோசப் பால்ராஜ் on February 19, 2010 at 1:23 PM said...

If its imagination, Very Good.
If its real , then very bad saha. Chennai traffic is very worst. Don't compare car sterio with yours. Coz car sterio comes in open air, and we can hear other sounds. But when you hear music with headphone, how other sounds will reach your ear ?
Nee ellam nallapadiya niraya naalu irukka vendiya aalu. Manasula vachukka .

Vidhoosh on February 19, 2010 at 4:03 PM said...

ithu nijamaave nadanthuthaa karki. udansuthaane!

thenammailakshmanan on February 20, 2010 at 11:03 AM said...

ட்ராபிக் ரூல்ஸை எல்லாம் தடை ஒட்டம் ஓடச் செய்துருச்சா ஒரு பாட்டு கார்க்கி

தமிழ்ப்பறவை on February 21, 2010 at 8:23 PM said...

:-) நகைத்தேன் சகா....நல்லா இருந்தது...

sahana on February 23, 2010 at 8:10 PM said...

இன்னைக்கு தான் பார்த்தேன் பரவசம் குறையவில்லை... கலக்கல் கார்க்கி.

 

all rights reserved to www.karkibava.com