Feb 17, 2010

கார்க்கியை சந்தித்த கார்க்கி


 

சிறு வயதில் என் அப்பாவிடம் நான் அதிகம் கேட்ட கேள்வி “ஏம்ப்பா இந்த பேரு வச்சீங்க?”. கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள். மேக்ஸிம் கார்க்கி(Maxim Gorky) என்ற அந்த ரஷ்ய எழுத்தாளர் தனது வாழ்க்கை முழுவதும் துயரத்தை மட்டுமே சந்தித்தவர். இதையெல்லாம் அவர் என்னிடம் சொல்ல முடியுமா? எனக்கு பிடிக்கிற மாதிரி பதில் சொல்லுவார், வைரமுத்துவின் மகன் பெயரும் கார்க்கிதான்.மதன் கார்க்கி. அந்த பதில் எந்த விதத்தில் என்னை திருப்திபடுத்தியது என்று தெரியவில்லை. அதன் பின் என் பெயர் குறித்து கேட்பவரிடத்தில் எல்லாம் நான் தவறாமல் சொல்லும் விஷயம் “வைரமுத்து அவர்களின் மகன் பெயரும் மதன் கார்க்கிதான்.”

   இப்படியாக முகமே பார்க்காமல் மதன் கார்க்கி என்ற கதாபாத்திரத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவரைப் பற்றிய செய்திகளை தவறாமல் படிக்கத் தொடங்கினேன்.  வாசிக்க தொடங்கிய காலத்தில் முதலில் என் கைகளில் கிடைத்த “சிற்பியே உன்னை செதுக்குகிறேன்” கவிப்பேரரசு மீது பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது. நம்ம கார்க்கியோட அப்பாவாச்சே என்பதும் காரணம் என்று  சொன்னால் நம்புவீர்களோ மாட்டீர்களோ என்பதால் சொல்லாமல் விடுகிறேன். என்னுடைய பல கதைகளில் நாயகனின் பெயர் மதனாகத்தான் இருக்கும். மதன். எனக்கு நானே சூட்டிக் கொண்ட இன்னொரு பெயர். அதற்கு காரணமும் மதன் கார்க்கிதான்.

mad 8

   எனக்கும் அவருக்குமிடையேயான ஸ்நானபிராப்தி அவ்வளவுதான். ஒரு பொன்மாலைப் பொழுதில் அவரைப் பற்றி நான் எழுதி இருந்த பதிவில் கமெண்ட்டியிருந்தார். சந்தோஷத்துடன் போனது அந்நன்னாள். பின் ட்விட்டரில் உரையாடிக் கொண்டோம். காதலர் தினத்தை முன்னிட்டு காதல் கவிதைகள் விளையாட்டை நான், பரிசல், இளா , குசும்பன் விளையாடிக் கொண்டதை பார்த்து பதிலிட்டார். முதலில் பொன்மாலைப் பொழுதென்று சொன்னோமல்லவா? இப்போது இளைய நிலா பொழியும் வேளையென்று போட்டுக்கோங்க.. ட்விட்டரில் ஒரு டைரக்ட் மெசெஜ் வந்திருந்தது. அனுப்பியவர் மதன் கார்க்கி.

madhankarky: கார்க்கி, வரும் செவ்வாய் மதியம் ஒரு மணிக்கு தமிழ் பட்டிமன்றம் நடக்குது. நடுவரா வருவதற்கு உங்களுக்கு நேரம் இருக்குமா? டெக்கோஃபெஸ் சார்புல.”

விளையாடாதிங்க பாஸ் என்றால் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார். மாணவர்களுக்கான பட்டிமன்ற போட்டியது. நிஜமாகவே ஒரு யூத் வந்தால் நன்றாக இருக்குமென நினைப்பதாக சொன்னார். வலையுலக நிகழ்ச்சிகளில் கூட சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்வதிலோ, மற்ற சம்பிராதயங்களுக்கோ என்னை அழைக்க மாட்டார்கள். அவன் சின்னப்பையன் என்று சொல்வதே வழக்கம். அதனால் இந்த அழைப்பு எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. சரி. போய்தான் பார்ப்போமே என்று பதில் அனுப்பினேன். செவ்வாய் மதியம் நிகழ்ச்சி. அதன் பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை சொன்னார்.

செவ்வாய் மதியம் கார்க்கியிடமிருந்து அழைப்பு. நிகழ்ச்சிக்கு முன் மதிய உணவு அவருடன் என்று முடிவானது. என் அலுவலகத்தின் அருகே வந்து அலைபேசியில் அழைத்தார். இறங்கி சென்ற போது எனக்காக காத்துக் கொண்டிருந்தார். இருவரும் அஞ்சப்பர் சென்றோம். சிக்கனமாக பேசினோம். கூடவே சிலவகை சிக்கன்களையும் உண்டோம். பரஸ்பர அறிமுகத்துக்குப் பின் பேச்சு சினிமாவை நோக்கி திரும்பியது. கண்டேன் காதலில் ஓடோ ஓடோ ஓடோடி போறேன் என்ற பாடலைத் தொடர்ந்து எந்திரனில் ஒரு பாடல் எழுதியுள்ளாராம். அதுதான் அவரது முதல் பாடல் கூட. மட்டுமின்றி, எந்திரனில் டெக்னிக்கல் கோ ஆர்டினேட்டர் என்ற பொறுப்பும் உண்டு. கிட்டத்தட்ட இவரின் பங்கு மேக்கிங்கை பொறுத்தவரை எல்லாவற்றிலுமே இருக்கிறது. இயக்கம் மீதும் ஆர்வம் உள்ள இவர் விரைவில் ஒரு நல்ல படம் இயக்க வாழ்த்துவோம்.

இதையெல்லாம் விட அவரின் மற்ற புராஜெக்டுகள்தான் என்னை வியப்பில் ஆழ்த்தின. தமிழை தொழில்நுட்பத்தோடு இணைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் ஆச்சரியமானவை. அசாத்தியமானவை. கிட்டத்தட்ட இவரின் எல்லா முயற்சிகளுமே தமிழை கணிணி உலகில் பீடு நடை போட வைப்பதாகவே இருக்கிறது. அவரின் தனி அறையில் அவர் செய்து கொண்டிருக்கும் புராஜக்டுகளை எனக்கு விளக்கிய போது ஒரு விதமான பரவச நிலையிலே இருந்தேன். ஆஸ்திரேலியாவில் டாக்டரேட் முடித்தவர், தமிழகத்தில் ஒரு கல்லூரி பேராசிரியராக தமிழுக்காக உழைக்கிறார். அறைக்கதவில் “முனைவர். மதன் கார்க்கி” என்ற பெயர்ப்பலைகையே நம்மை வரவேற்கிறது.அவர் தந்தை தமிழுக்கு செய்த தொண்டை விட இவரின் பங்கு அதிகமானது என்பேன் நான்.

_____________________________________________________________

உலகமயமாக்கலால் இந்தியா வளர்ந்திருக்கிறதா வளைந்திருக்கிறதா?

இணையம்.. மாணவர்களை சீராக்குகிறதா? சீரழிக்கிறதா?

மாணவர்கள் தமிழை விட ஆங்கில புத்தகங்களையே அதிகம் வாசிக்க காரணம், அவர்களை கவரும்படி எழுதாத தமிழ் எழுத்தாளர்களின் தவறா அல்லது ஆங்கில மோகமா?

இந்த தலைப்புகள்தான் நான் சொல்லியிருந்தேன். அது குறித்தும், மாணவர்களின் பேச்சு குறித்தும் அடுத்த பதிவில்..

63 கருத்துக்குத்து:

சரவணகுமரன் on February 17, 2010 at 8:15 AM said...

வாழ்த்துக்கள் பாஸ்... :-)

சரவணகுமரன் on February 17, 2010 at 8:15 AM said...

பட்டிமன்ற வீடியோ இருக்கா?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on February 17, 2010 at 8:48 AM said...

நான் சொல்லல இப்பிடி ஒவ்வொரு மெயில் ச்சீ மைல் கல்லையும் முழுங்கி இளைக்காத கார்க்கி (நீங்கதான்) வாழ்க! (இப்பதான் ஷோல்டர தூக்கணும்.:)

---

ரொம்ப சந்தோஷம் கார்க்கி :)) வாழ்க வளர்க.

---
உங்க 3 தலைப்புக்கும் பதில் இரண்டும்தான்.:))

Chitra on February 17, 2010 at 8:58 AM said...

வாழ்த்துக்கள்! பட்டிமன்ற தலைப்புக்கள் மூன்றுமே நல்லா இருக்குங்க.
:-)

சுரேகா.. on February 17, 2010 at 9:01 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!

எல்லா உயரங்களையும் தொடும், எல்லாத்தகுதியும் உங்களுக்கு இருக்கிறது.

அன்று அன்புடன் அழககாக புகைப்படங்கள் எடுத்து அசத்தியதற்கு நன்றி நண்பா!

vanila on February 17, 2010 at 9:11 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி. என்னமோ தெரியல சந்தோஷமா உணருகிறேன்..

புலவன் புலிகேசி on February 17, 2010 at 9:32 AM said...

வாழ்த்துக்கள் தோழா..பட்டி மன்றம் பத்தி சீக்கிரம் எழுதுங்க

மோகன் குமார் on February 17, 2010 at 9:34 AM said...

ஆஹா நாட்டாமையா நம்ம சகாவா? ரொம்ப சந்தோசம்.. சொன்னா வந்து பாத்திருப்போமுள்ள?

மதன் கார்க்கி எனது 2010 TOp 10 songs பதிவில் " ஓடோ ஓடோ " பாடல் இடம் பெற்ற போது நன்றி சொல்லி பின்னூட்டம் இட்டிருந்தார். கோடம்பாக்கத்தில் அவர்கள் இல்லம் சில முறை சென்றுள்ளேன் அப்போதெல்லாம் அவர் ரொம்ப சின்னவர். வாழ்த்துக்களை சொல்லவும்

மோகன் குமார் on February 17, 2010 at 9:35 AM said...

2010 என தவறுதலாக எழுதி விட்டேன்; அது 2009 Top 10 songs!!

சங்கர் on February 17, 2010 at 9:35 AM said...

வாழ்த்துகள் :)

சங்கர் on February 17, 2010 at 9:36 AM said...

இந்திய அரசியல் சட்ட புத்தகம் வாங்கிட்டீங்களா ?? :))

சங்கர் on February 17, 2010 at 9:37 AM said...

தலைப்புகளில் ஒன்றில் கூட இளைய தளபதி வராததை வன்மையாகக் கண்டிக்கிறேன்

Rajalakshmi Pakkirisamy on February 17, 2010 at 9:52 AM said...

வாழ்த்துகள் :)

Anonymous said...

கார்க்கி,

இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். உன் திறமைக்கு நீ இன்னும் பல உயரங்களைத் தொடமுடியும்.

இன்னும் கொஞ்சம் தன் முனைப்பும், படிப்பதில் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டால் போதும்.

வாழ்த்துக்கள்.

Karthik on February 17, 2010 at 10:08 AM said...

வாழ்த்துக்கள்!! :)

குசும்பன் on February 17, 2010 at 10:18 AM said...

கார்க்கி முன்பு "புதிய தலைமுறையில்" கார்க்கின்னு அவரை வைத்து நீ எழுதியது மாதிரி இருக்கும் என்று நினைத்து வந்தேன்:)

மிகவும் மகிழ்வாக இருக்கிறேன்.


//அழைக்க மாட்டார்கள். அவன் சின்னப்பையன் என்று சொல்வதே வழக்கம். //

டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கிடா வயசு ஆவுது இன்னும் சின்னப்பையனாம் சின்னப்பையன். அடிங்க!

Anbu on February 17, 2010 at 10:18 AM said...

வாழ்த்துக்கள் அண்ணே...!!

மண்குதிரை on February 17, 2010 at 10:19 AM said...

வாழ்த்துக்கள் நண்பா
உங்கள் நண்பருக்கும்.

கார்க்கி on February 17, 2010 at 10:28 AM said...

நன்றி சரவணகுமரன். அந்த அளவுக்கு எல்லாம் இல்லைங்க :)

நன்றி ஷங்கர். இன்னும் இரண்டு மாதத்தில் 5 கிலோ குறைக்க உறுதி பூண்டிருக்கிறேன். :))

நன்றி சித்ரா. அதில் இரண்டாவது பரிசலார் சொன்னது

நன்றி சுரேகா.

வெண்ணிலா, உங்கள் பின்னூட்டம் எனக்கும் அதிக மகிழ்ச்சியை தருகிறது

நன்றி புலவரே

நன்றி மோகன்குமார். போயிருக்கிங்களா? சூப்பர்

நன்றிச் சங்கர்.அவர் அதையும் கேட்டார்.”நீங்க விஜய் ஃபேன் தானே” என்று.. :))

நன்றி ராஜி

நன்றி அண்ணாச்சி.

நன்றி கார்த்திக்.

நன்றி குசும்பரே. என்ன செய்ய? வலையில் எல்லாம் கிழடுகளாக இருப்பதால் நான் இப்படி சொல்ல வேண்டியதாக இருக்கிறது

நன்றி அன்பு

நன்றி மண்குதிரை

பேரரசன் on February 17, 2010 at 10:53 AM said...

சகா... உண்மையிலேயே...

எனக்கு மிக மகிழ்ச்சியா இருக்கு..ஏன் சொல்லவே இல்லை...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

சின்ன பையனாமில்லா...இப்படி சொல்லிட்டே இருந்தா எப்ப கல்யாணம் பண்ணி வைப்பாங்க.. இதெல்லாம் ப்ரொஃபைலில் சேர்த்து சீக்கிரம் ஆக வேண்டியத பாருப்பா :))

மறந்துட்டேன்.. வாழ்த்துக்கள் :))

வெயிலான் on February 17, 2010 at 11:11 AM said...

மகிழ்வுடனான வாழ்த்துக்கள் கார்க்கி!!!

taaru on February 17, 2010 at 11:13 AM said...

சகா!! பட்டி மன்றத்துக்கு தலைமைப் பொறுப்பு;தலைப்புகள் -சத்தியமா புல் அரிச்சுடுச்சு... மிகச் சரியான ; ஆகச் சிறந்த தேர்வு... இங்ஙனம் கார்க்கிக்கு[வைர-முத்து] நன்றியும்... கார்க்கிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும்...

வடகரை அய்யா சொன்னா மாதிரி செஞ்சா எங்கோ போக வாய்ப்பு இருக்கு...டுர் டுர் டுர்ரும்....
ஜக்கம்மா வாழ்த்து சொல்ல.. என் வழியா வந்துருக்கா...

ஜோசப் பால்ராஜ் on February 17, 2010 at 11:28 AM said...

புட்டிக்கதைகள் டூ பட்டிமன்றம். வாழ்த்துக்கள் சகா.

அப்ப அடுத்த சாலமன் பாப்பையா கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க.

நர்சிம் on February 17, 2010 at 11:42 AM said...

வாழ்த்துகள் சகா.

ஜெட்லி on February 17, 2010 at 11:51 AM said...

கலக்குங்க பாஸ்....

♠ ராஜு ♠ on February 17, 2010 at 11:59 AM said...

வாழ்த்துக்கள்ண்ணா..!
கேட்கவே சந்தோஷமா இருக்கு.

Bala on February 17, 2010 at 1:10 PM said...

நண்பா நான் முதன் முதலில் பதிவு படிக்க ஆரம்பிக்கும் போது உங்கள் வலைப்பக்கைத்தை எழுதுவது வைரமுத்துவின் மகன் என்றுதான் நினைத்தேன் :)

நேரமிருந்தால் படித்துப்பார்க்கவும் http://balapakkangal.blogspot.com/2010/02/king-of-chennai.html

Kafil on February 17, 2010 at 1:20 PM said...

ennathu indiragandhi Sethu poitaangala....

பேநா மூடி on February 17, 2010 at 1:21 PM said...

வாழ்த்துக்கள் சகா..,

தாரணி பிரியா on February 17, 2010 at 1:21 PM said...

வலையுலக சாலமன் பாப்பையாவிற்கு வாழ்த்துக்கள்

தராசு on February 17, 2010 at 1:47 PM said...

சந்தோஷம்,

வாழ்த்துக்கள்.

Anonymous said...

நான் ஏதோ மொக்கை மன்னன் ஸ்டைல் பதிவுன்னு நினைச்சு வந்தேன்.
வாழ்த்துக்கள் கார்க்கி!!!!

சுசி on February 17, 2010 at 2:26 PM said...

//இறங்கி சென்ற போது எனக்காக காத்துக் கொண்டிருந்தார். //
அவரையுமா??

வாழ்த்துக்கள் கார்க்கி.

மதன் கார்க்கிக்கும் சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்.

இன்று முதல் 'நடுவர் கார்க்கி' என்ற பட்டமும் உங்களுக்கு வழங்கி கெளரவிக்கப்படுகிறது. பொன்னாடை நேரில் போர்த்தப்படும்.

கும்க்கி on February 17, 2010 at 2:55 PM said...

நல்லது ப்ரதர்..

மூன்றாம் தலைப்பு கொஞ்சம் உதைக்கிறது..

தமிழில் இல்லாததா...?

லேகா on February 17, 2010 at 3:29 PM said...

கார்க்கி வாழ்த்துக்கள்!! :-)

அன்புடன்-மணிகண்டன் on February 17, 2010 at 3:37 PM said...

சூப்பர் கார்க்கி... My Best Wishes!!!

அன்புடன்-மணிகண்டன் on February 17, 2010 at 3:39 PM said...

கார்க்கி.. நாம் கலந்து (கலாய்த்துக்) கொண்டு சிறப்பித்த விழாவின், புத்தக விமர்சனம் இங்கே.. ;)
http://anbudan-mani.blogspot.com/2010/02/blog-post_17.html

நேசன்..., on February 17, 2010 at 3:43 PM said...

கலக்கல் சகா!......உங்க பட்டிமன்ற டிவிடி வெளியீடு எப்போ?.......

எறும்பு on February 17, 2010 at 6:01 PM said...

வாழ்த்துக்கள் அண்ணே.. எவ்வளவு உயரத்துக்கு போனாலும், இந்த தம்பிய கொஞ்சம் ஞாபகம் வச்சுகோங்க அண்ணே
:)

thenammailakshmanan on February 17, 2010 at 6:05 PM said...

கேபிள் சார் பின்னூட்டம் பார்த்து வந்தேன் கார்க்கி ..
மிக இளவயதில் அசத்தலாய் எழுதுகிறீர்கள் ..

கொடுத்துள்ள தலைப்புகள் கூட அருமை

கார்க்கி என்றால் கசப்பு என்பதை மாற்றி உழைப்பு என அகராதியில் போட்டு விடலாம்.. அவ்வளவு அருமை..

ஆதிமூலகிருஷ்ணன் on February 17, 2010 at 6:12 PM said...

சற்று பொறாமையுடன் கூடிய வாழ்த்துகள்..!

pappu on February 17, 2010 at 6:29 PM said...

ஓடோ ஓடாடி’ பாட்டெழுதினது கார்க்கியா? ஹ்ம்ம்... நோட் பண்ணிக்குறேன்..

வெறுமை on February 17, 2010 at 6:35 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.

அன்புடன் அருணா on February 17, 2010 at 6:39 PM said...

சற்று பொறாமையுடன் கூடிய வாழ்த்துகளும் பூங்கொத்தும்!

அனுஜன்யா on February 17, 2010 at 6:53 PM said...

நல்லது. சீக்கிரமே .....என்ன சொல்ல? எல்லா நல்லதும் நடக்கட்டும் :)

அனுஜன்யா

மறத்தமிழன் on February 17, 2010 at 7:27 PM said...

கார்க்கி,

முதலில் ரெண்டு கார்க்கிகளுக்கும் வாழ்த்துக்கள் !

முன்பே சொல்லியிருக்கீங்க நீங்கள் இருவரும் நண்பர்கள் என்று...

பட்டிமன்றத்தைப் பத்தி விரிவா படிக்க ஆவல்...

பரிசல்காரன் on February 17, 2010 at 7:46 PM said...

//லையுலக நிகழ்ச்சிகளில் கூட சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்வதிலோ, மற்ற சம்பிராதயங்களுக்கோ என்னை அழைக்க மாட்டார்கள். அவன் சின்னப்பையன் என்று சொல்வதே வழக்கம்./

இதை இப்போதுதான் படிக்கிறேன். ஆனால் முன்பே சொல்லிவிட்டேன், திருப்பூர் நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு உனக்கிருக்கிறது என்று.

இருந்தாலும் இந்த வரிகளைப் படித்தபோது வலித்தது, அனுபவித்தவன் என்கிற முறையில். (வலையுலகிற்கு வரும் முன்!)

வெற்றி on February 17, 2010 at 9:41 PM said...

//கார்க்கி என்றால் கசப்பு என்று பொருள்//

அது தமிழர்கள் பல பேருக்கு தெரியாது..நீங்கள் பிரபலமானால் கார்க்கி என்றால் 'இனிமை' என்று தமிழ் அகராதி பொருள் கூறும் :))

வெற்றி on February 17, 2010 at 9:48 PM said...

//வலையுலக நிகழ்ச்சிகளில் கூட சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்வதிலோ, மற்ற சம்பிராதயங்களுக்கோ என்னை அழைக்க மாட்டார்கள். அவன் சின்னப்பையன் என்று சொல்வதே வழக்கம்.//

உங்கள் திறமை அவர்களுக்கு தெரியாது போயிருக்கும் சகா..அல்லது பொறாமையாக கூட இருந்திருக்கும்..உங்கள் பதிவை வாசிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்..ஏன் என் எழுத்தில் கூட உங்கள் பாதிப்பை நீங்கள் அதிகம் உணரலாம்..

ஆரம்பித்திலிருந்து சொல்வதுதான்..மறுபடியும் சொல்கிறேன்..நீங்கள் தமிழ்ப்படம் போல் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம்..

வெற்றி on February 17, 2010 at 9:51 PM said...

/madhankarky: கார்க்கி, வரும் செவ்வாய் மதியம் ஒரு மணிக்கு தமிழ் பட்டிமன்றம் நடக்குது. நடுவரா வருவதற்கு உங்களுக்கு நேரம் இருக்குமா? டெக்கோஃபெஸ் சார்புல/

ச்சே..டெக்கோஃபெஸ்ல கலந்துக்க சொல்லி மெயில் அனுப்பிருந்தாங்க..வந்திருந்தா உங்க பட்டிமன்றத்தையாவது கேட்டிருக்கலாம்..மிஸ் ஆயிடுச்சு.. :((

Dhina on February 17, 2010 at 9:58 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!!

தர்ஷன் on February 17, 2010 at 10:07 PM said...

வாழ்த்துக்கள் சகா

~~~Romeo~~~ on February 17, 2010 at 11:49 PM said...

அடுத்த சாலமன் பாப்பையாவை வரவேற்கிறேன்.

கார்க்கி on February 18, 2010 at 12:13 AM said...

அனைவருக்கும் நன்றி..

ஆனாலும் நம் மக்கள் கொஞ்சம் அதிகமாகவே வாழ்த்திட்டிங்க. :)))

@வெற்றி,
ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா..

Rajes on February 18, 2010 at 9:34 AM said...

best wishes karki....

"ராஜா" from புலியூரான் on February 18, 2010 at 9:51 AM said...

கலக்கிடீங்க சகா, வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி on February 18, 2010 at 4:06 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி.

Madhan Karky on February 18, 2010 at 9:15 PM said...

மிக அழகான பதிவு கார்க்கி. வழக்கமாக நான் காய் வாங்க சென்றால் கூட கேமரா எடுக்காமல் செல்வதில்லை. ஆனால் அன்று ஏனோ கொண்டு செல்ல தோன்றவில்லை. இது நீண்ட நாள் தொடரப் போகும் நட்பு என்று உள் மனம் சொல்லியிருக்கலாம். ஆயிரம் நிழ்ற்படங்கள் செய்யும் வேலையை உங்கள் ஒற்றைப் பதிவு செய்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
கார்க்கி

SanjaiGandhi™ on February 18, 2010 at 9:44 PM said...

சூப்பரப்பு

Sundar சுந்தர் on February 19, 2010 at 12:00 AM said...

உங்கள் பெயர் வழி ஒற்றுமையும், தொடரும் நட்பும், புனைவுகளை விட சுவாரசியமாக இருக்கிறது. உங்கள் இருவரின் நட்பு தொடர வாழ்த்துக்கள்!

ரோஸ்விக் on February 19, 2010 at 8:03 AM said...

சுவாரஸ்யம். தொடர்ந்து பலதுறைகளில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ்ப்பறவை on February 21, 2010 at 8:24 PM said...

கலக்கல் கார்க்கி....

 

all rights reserved to www.karkibava.com