Feb 14, 2010

காதல் மொழி.


 

பயம் வேண்டாம். நேற்றோடு காதல் ஸ்பெஷல் முடிந்துவிட்டது. நேற்று இரவு ஹலோ எஃப்,எம்மில் ”காதல் மொழி” என்ற தலைப்பில் ஒலிபரப்பப் பட்டதை பதிவு செய்ய இயலவில்லை. ஒரு வேளை,  தப்பித்தவறி,  தெரியாத்தனமாக,  யாராவது பதிவு செய்திருந்தால் மடலிடுங்கள். இதோ  எழுத்து வடிவமாக உங்கள் பார்வைக்கு. ஹலோ எஃப்.எம்முக்கு மீண்டும் ஒரு நன்றி

_________________________________________

  தமிழ் மொழிதான் என்றாலும் அதிலே பல பிரிவு உண்டு. கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ் முக்கியமாக சென்னைத் தமிழ்.. இப்படி பல வட்டார மொழி இருப்பது போல அவரவர் செய்யும் வேலையின் அடிப்படையிலும் பல மொழி இருக்குங்க.

உதாரணத்திற்கு.. காவல்துறையில் அய்யா என்றால் இன்ஸ்பெக்டருக்கும் மேல் இருப்பவர்கள், சினிமாவில் சார் என்றால் கண்டிப்பா டைரக்டர் அல்லது ஹீரோ தான்.. சாஃப்ட்வேர் சக்கரவர்த்திகள் Np(நோ பிராப்ளமாம்), tc(டேக் கேராம்), vgm(வெறி..ச்சே வெரி குட் மார்னிங்) என்பார்கள்.. பேசும்போதா என்று கேட்காதிங்க. அவங்க பக்கத்து டெஸ்க் அக்கா கூடவே சேட்தான் பண்ணுவாங்க.

அட மத்த தொழிலெல்லாம் விடுங்க. நம்மள மாதிரி காதல் செய்யும் தொழிலாளர்கள் எப்படி பேசுவாங்க? அவங்களுடைய ஸ்பெஷல் மொழி என்ன? கொஞ்சம் பார்ப்போமா?

1950,60களில் அழகாய் பேசுவார்கள் காதலர்கள்.

நாதா.. என்று காதலிகள் சொல்லும்போதே நமக்கு திருப்தி கிடைத்துவிடும். நாக்கில் தேன்குழைத்து பேசுவார்களோ என்பது போல் இருக்கும். குரல் மட்டுமல்ல, மாடுலேஷனிலும் பின்னுவார்கள். ஒரு முத்தம் கேட்டால் போதும் “தங்கள் சித்தம். என் பாக்கியம்” என்பார்கள். அதைக் கேட்டால் முத்தமெல்லாம் தேவையில்லாமல் ஆகிவிடும். கடிதமெல்லாம் தேவையில்லை. எழுதுவது போலவே பேசவும் செய்வார்கள் அந்தக் கால ரோமியோக்கள்.

அப்படியே 1970,80கள் பக்கம் வருவோம். பேச்சுத்தமிழுக்கும் எழுத்துக்கும் நிறைய வித்தியாசம் ஏற்பட்டுவிட்ட சமயம். காதலிக்கு கடிதம் கொடுப்பதும், கவிதை எழுதுவதும் என கெளபாய்கள் பிசி.

அன்பே, ஆருயிரே, மதிமுக நாயகியே என கடிதங்கள் புயலென புறப்பட்ட சமயம். ”பாவை புருவத்தை வளைப்பது ஒரு விதம். அதில் பரதமும் படிக்குது அபிநயம்” என்று எழுதத் தெரிந்தால் போதும், டீ.ஆர்களுக்கு கூட பெண்கள் மடங்கிய, மயங்கிய காலம். காதலர்கள் பேசும்போது கூட கடல் அலை, உன் மூக்கு கிளி, கண்ணு மீன் என காதலியை வர்ணிப்பதிலே நேரம் கழித்தார்கள் பாக்யராஜ்களும், டீ.ஆர்களும்.  மெல்லினங்கள் பாடு பெண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும் என சகட்டு மேனிக்கு தாங்கினார்கள் தத்தம் காதலிகளை, மொழியின் வாயிலாக.

1990-2000 கலக்கல் காலம். தபூஷங்கர் பாணி கவிதைகளில் காதலிகளை நீராட்டினார்கள் ப்ளேபாய்கள். அம்மு, செல்லம், கன்னுகுட்டி, என்ற செல்லப்பெயர்கள் பரவலாக்கப்பட்டன. நன்றியில்லாத பெண்கள் பசங்களுக்கு வைத்த பெயர்கள் “பொறுக்கி, தடியா, நாட்டி, இடியட்”. எந்த அளவுக்கு உங்களுக்கு மோசமான பெயர் கிடைக்கிறதோ அந்தளவுக்கு அவரின் காதல் என்று புதுவித அர்த்தம் கற்பித்தார்கள் அந்தக் கால காதல்நாயகிகள்.

2000க்கு பின் அசுர வளர்ச்சி காதலுக்கு. ஐ லவ் யுக்கள் i think i am in love with u என்றானது. what about coffee ல் தொடங்கும் சிநேகம் எளிதில் wanna be my girl friendsல் மாறுகிறது. அன்பேக்கள் honey, darling, sweety ஆகிவிட்டது. காதலி girl friend ஆகி விட்டாள். முத்த பரிமாற்றங்கள் சம்பிராதயம் ஆகிவிட்டது.

மொத்தத்தில் இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.

38 கருத்துக்குத்து:

cheena (சீனா) on February 15, 2010 at 12:17 AM said...

அன்பின் கார்க்கி

வானொலியில் கேட்டேன் - ரசித்தேன் - மகிழ்ந்தேன்

அருமையான உரை. நல்ல ஏற்ற இறக்கத்துடன் படித்தனர். நன்றாக இருந்தது ஆராய்ச்சி

நல்வாழ்த்துகள் கார்க்கி

கனவுகள் விற்பவன் on February 15, 2010 at 12:31 AM said...

//மதிமுக நாயகியே//

இது புதுசால்ல இருக்கு...???
எனக்கு "மதிமுக" நாயகன் தான் தெரியும்..அவுரே இப்ப எங்க இருக்காருன்னு தெரில...:-)))

Starjan ( ஸ்டார்ஜன் ) on February 15, 2010 at 1:24 AM said...

அருமையான ரசனைகள்

சுசி on February 15, 2010 at 2:09 AM said...

மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் கார்க்கி.

கலக்கலா எழுதி இருக்கீங்க.

ஒலிபரப்ப கேக்க முடியாம போனது வருத்தமா இருக்கு.

உதாரணத்தில ஒண்ண விட்டுட்டீங்களே குரு..
வலையுலகத்தில இளைய தளபதின்னா கண்டிப்பா கார்க்கி தான்.

சுசி on February 15, 2010 at 2:26 AM said...

//தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.//

கொஞ்சம் குழப்பமா இருக்கு. புரிஞ்சு கிட்டா எதுக்கு பிரியணும்??

டம்பி மேவீ on February 15, 2010 at 5:25 AM said...

கார்க்கி, நான் எப்புடி முயற்சித்துப் பார்த்தாலும் அது மொக்கையாக தான் போகிறது ....நான் செய்ய ???? என்னை மாதிரி காமெடி பீஸ்க்கள் எப்புடி காதலை சொல்வது என்று நீங்கள் ஆராய்ச்சி பண்ண கூடாதா ????????

வெற்றி on February 15, 2010 at 5:46 AM said...

நல்லா வந்திருக்கு சகா..ஆனா கடைசி பாய்ன்ட் தான் இடிக்குது..

அத்திரி on February 15, 2010 at 6:36 AM said...

சகா உன்னுடைய வரிகள் படிக்கப்படும் பொழுது மணி 9ஐ தாண்டிவிட்டது........எந்த எப்.எமையும் 5நிமிடத்திற்கு மேல் ஒழுங்கா கேட்க மாட்டேன்.....நேற்று கிட்டத்தட்ட 1மணிநேரத்திற்கும் மேல் அதான் கேட்டேன்.........வாழ்த்துக்கள் சகா

BULLET மணி on February 15, 2010 at 7:01 AM said...

இந்த பதிவுக்கு எப்படி Research பண்ணிங்க ?
பாட்டு வரிகள்ல எங்க இருந்துதான் வருதோ ?

பதிவு ரொம்ப நல்லாவே இருக்கு

Chitra on February 15, 2010 at 8:18 AM said...

////மொத்தத்தில் இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.///////


........நிறையவே ஆராய்ச்சி செய்து, lab-test results தெரிவிச்சிருக்கீங்க. அசத்தல் தான். :-)
super write-up!

Sundar சுந்தர் on February 15, 2010 at 9:13 AM said...

வாழ்த்துக்கள்!

♠ ராஜு ♠ on February 15, 2010 at 9:13 AM said...

வாழ்த்துக்கள்ண்ணா..!

vanila on February 15, 2010 at 9:28 AM said...

மதிமுக நாயகியே ???? "#$%^$@*"

கார்க்கி on February 15, 2010 at 10:16 AM said...

நன்றி சீனா சார்

@கனவுகள் விற்பவன்,
ஹிஹிஹி.. கேள்விப்பட்டது இல்லையா பாஸ்?

@ஸ்டார்ஜன்,
நன்றி

@சுசி,
என்ன உதாரணம் அது?
ஆமாங்க. இந்த காலத்து பசங்க புரிஞ்சிக்காமலே லவ் ஸ்டார்ட் ஆகுது.. பழகிய காலத்தில் புரிஞ்சுக்கிட்டு பிரிஞ்சிடறீங்க.. இது தொடர்ந்தா கடைசி வரைக்கும் பிரிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். ஏன்னா ஒத்த அலைவரிசை ஆட்கள் யாருமே கிடையாது. கிடட்த்தட்ட வேண்டுமென்றால் இருப்பாங்க. எனவே ரிலேஷஷிப்பில் அட்ஜஸ்ட்மண்ட் முக்கியம்.

@மேவி,
நம்மள மாதிரி காமெடி பீஸ்கள் காதலை காமெடியாகவே சொல்லிவிடலாம். ஒர்க் அவுட் ஆகும் பாஸ் :))

@வெற்றி,
நன்றி சகா. சுசிக்கு சொல்லியிருக்கும் பதிலை பாருங்க

@அத்திரி, தேங்க்ஸுப்பா. இந்த அன்புதான்... வலையின் பலம்

@புல்லட்,
நன்றி சகா. ஆராய்ச்சி எல்லாம் இல்லை. அவங்க கேட்ட 15 நிமிஷத்தில் எழுதப்பட்டது. :))

நன்றி சித்ரா

நன்றி சுந்தர்

நன்றி ராஜூ

நன்றி வானிலா.(சரியா, அல்ல்து வெண்ணிலாவா?

தர்ஷன் on February 15, 2010 at 10:17 AM said...

ச்சே சகாவுக்கு வயசாகிருச்சு
நம்ம காலம் போல வருமா பாணியில் எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டாரே

சங்கர் on February 15, 2010 at 11:00 AM said...

நானும் கேட்டேன், நல்லா தான் பண்றீங்க ஆராய்ச்சி :))


// சுசி said...
வலையுலகத்தில இளைய தளபதின்னா கண்டிப்பா கார்க்கி தான்.//

அதே அதே

கும்க்கி on February 15, 2010 at 11:53 AM said...

கேட்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது ப்ரதர்...எங்கயாவது புடிச்சி போடுங்க..
படிப்பது ஒரு வகை அதையே கேட்பது ரசனையாக இருக்கும்..

நானெல்லாம் காதலிக்கும்போது...வேணாம் விடுங்க ஒரே புகையா சுத்துது..

விக்னேஷ்வரி on February 15, 2010 at 12:26 PM said...

கடைசி வரி ரொம்ப சரி. நல்லாருக்கு.

Baski.. on February 15, 2010 at 12:50 PM said...

//மொத்தத்தில் இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.//

super

Anonymous said...

//மொத்தத்தில் இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.//

திடீர்னு 1960 பெருசு மாதிரி கவுத்திட்டீங்களே :)

சுசி on February 15, 2010 at 2:26 PM said...

//@சுசி,
என்ன உதாரணம் அது? //
அடுத்த லைன்லவே போட்டிருக்கேனே.. படிக்கலையா குரு??
//உதாரணத்தில ஒண்ண விட்டுட்டீங்களே குரு..
வலையுலகத்தில இளைய தளபதின்னா கண்டிப்பா கார்க்கி தான்.//

ஓ.. இதத்தான் சொன்னீங்களா?? புரிஞ்சிடுச்சு இப்போ.. :)))

நேசன்..., on February 15, 2010 at 2:33 PM said...

சுவாமி!......அற்புதம்!......பேஷ்!பேஷ்!..பலே!பலே!

புன்னகை on February 15, 2010 at 3:07 PM said...

//நன்றியில்லாத பெண்கள் பசங்களுக்கு வைத்த பெயர்கள் “பொறுக்கி, தடியா, நாட்டி, இடியட்”.//
இந்த வரிகளைக் கேட்ட போது, செல்லக் கோபம் வந்துச்சு கார்க்கி, எப்படி இப்படி பளீச்சுன்னு உண்மையச் சொல்லலாம்னு! ;-)

மீடில் ஈஸ்ட் முனி on February 15, 2010 at 3:49 PM said...

நைனா, அந்த கடைசி வரில எங்கயோ போய்ட்ட பா ....!!!! பாருங்க பா... தல என்னமா ஃபீல் பன்னிகிறார்னு

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on February 15, 2010 at 4:48 PM said...

// சுசி said...
வலையுலகத்தில இளைய தளபதின்னா கண்டிப்பா கார்க்கி தான்.//

//திடீர்னு 1960 பெருசு மாதிரி கவுத்திட்டீங்களே :)//

//கேட்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது ப்ரதர்...எங்கயாவது புடிச்சி போடுங்க..//

எதாச்சும் செய்யணும் கார்க்கி..:))

கார்க்கி on February 15, 2010 at 5:46 PM said...

தர்ஷன், இப்பலாம் 2 வருஷத்திலே காலம் மாறிடுது பாஸ் :))

நன்றி ஷங்கர்

நன்றி கும்க்கி. ம்ம்ம்

நன்றி விக்கி

நன்றி பாஸ்கி

அம்மிணி, 2003ல செல்ஃபோன் இல்லாததால் பிரிஞ்சு போன பல காதல் எனக்கு தெஇர்யும். இன்னைக்கு அப்படியா? அந்த ஒரு கருவினால எவ்ளோ வித்தியாசம்? இப்பலாம் 3 வருஷத்திலே நம் லைஃப் ஸ்டைல் மாறிடுது. அதனால் அப்படி சொன்னேங்க நா 1960 இல்ல. 2005:))

நன்றி நேசன்

நன்றி புன்னகை. கடைசி வரி படிக்கிறதுகுள்ள மறுபடியுமான்னு நினைச்சிட்டேன் :))

மிடில் ஈஸ்ட் முனி, எப்படியா பேரு யோசிக்கிறீங்க? :))

ஷங்கர், செய்வோம் பாஸ்>.:))

கார்த்திKN on February 15, 2010 at 10:04 PM said...

//”பாவை புருவத்தை வளைப்பது ஒரு விதம். அதில் பரதமும் படிக்குது அபிநயம்”
"மதிமுக நாயகியே"
"தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்"//
இவை அனைத்தும் அருமையான சொற்செட்டுக்கள்..
உங்கள் ஆராய்ச்சிக்கு டாக்டர் பட்டம் வங்கிகொங்க..
சூப்பர்..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ on February 15, 2010 at 10:08 PM said...

இ.த.டாக்டர்.கார்க்கி வாழ்க...


(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கார்க்கி குமாரா..? )

பிரியமுடன்...வசந்த் on February 16, 2010 at 12:32 AM said...

சுசி said...

வலையுலகத்தில இளைய தளபதின்னா கண்டிப்பா கார்க்கி தான்...//

டபுள் ரிப்பிட்டேய்ய்.....

”பாவை புருவத்தை வளைப்பது ஒரு விதம். அதில் பரதமும் படிக்குது அபிநயம்”

பாவம்தான் உங்களிடம் லெட்டர் வாங்குனவங்க எல்லாம்...

:))

மறத்தமிழன் on February 16, 2010 at 11:45 AM said...

கார்க்கியின் காதல்மொழியை நானும் வழிமொழிகிறேன் !

மறத்தமிழன் on February 16, 2010 at 11:47 AM said...

கார்க்கி,

கடைசி வாக்கியம் நச் !

நீங்க சொன்னமாதிரி இப்பெல்லாம் 1,2 வருஷத்திலேயே காலம் மாறிடுது ..

அப்புறம், எனது சந்தேதகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி..
அதாங்க‌ வி..வு..ல கட்டுரை எழுதுவது நீங்க இல்லைங்றத...

நன்றி..

SanjaiGandhi™ on February 16, 2010 at 9:04 PM said...

பெரிய ஆராய்ச்சி தான் :))

கமலேஷ் on February 16, 2010 at 11:01 PM said...

ரசனையான பதிவு வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

Rajalakshmi Pakkirisamy on February 17, 2010 at 1:23 AM said...

மொத்தத்தில் இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்.//

Really?

ஆதிமூலகிருஷ்ணன் on February 17, 2010 at 6:16 PM said...

சுவாரசியம்.

அன்புடன் அருணா on February 17, 2010 at 6:35 PM said...

ஒலிபரப்ப கேக்க முடியாம போனது வருத்தமா இருக்கு.நீங்க பதிந்திருந்தல் கேட்டு வாங்கிக்கலாம்னு நினைத்தேன் :(

/இந்தக் கால லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்/
ரொம்ப சரி!

தமிழ்ப்பறவை on February 21, 2010 at 8:26 PM said...

ஒலிபரப்பு கேட்கமுடியலை கார்க்கி வாழ்த்துக்கள்....
பதிவு சுமார்தான்...அடுத்த முறை இன்னும் பெட்டரானதை கொடுங்க...

உமா கிருஷ்ணமூர்த்தி on February 28, 2011 at 4:46 PM said...

//லவ்வர்ஸ், தவறான புரிதலால் காதல் செய்யத் தொடங்கி, ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துக் கொள்ளும் போது பிரிந்துவிடுகிறார்கள்//

உண்மை

//!கொஞ்சம் குழப்பமா இருக்கு. புரிஞ்சு கிட்டா எதுக்கு பிரியணும்??
//
புரிஞ்சதுனால தான் பிரிவே!அவங்களுக்கு பிடித்தமான மாதிரி இல்லைன்னா அல்லது இருவரது எண்ண அலைகளும் ஒத்து வராது என்று அறிந்தால் பிரிவு தானே

 

all rights reserved to www.karkibava.com