Feb 13, 2010

ஐ அம் ஜஸ்ட் அஸிஸ்டெண்ட்


 

ஆண்ட்டி.

சொல்லுடா செல்லம்.

என் ஃப்ரெண்ட் நிதின்க்கு இன்னைக்கு பர்த்டே. எட்டு மணிக்கு கேக் கட் பண்ணுவான். அவங்க வீட்டுக்கு வறீங்களா?

தெரியுமே. காலைல அவன் வந்து சொன்னான். நீ வேற சொல்லனுமா?

என் ஃப்ரெண்ட் பர்த்டே இல்ல. அதான். வரும்போது அனிதாவையும் கூட்டிட்டு வந்துடுங்க. (குடுகுடு)

நில்லுடா. அனிதா இல்லைன்னா நான் வரக்கூடாதா? வாலு. வாலு

___________________________________________________

ஹலோ அங்கிள். ஸ்வீட் எடுத்துக்கோங்க.

ஹாய் என்ன ஸ்பெஷல்ப்பா?

நம்ம ஃப்ளாட் அகிலன் டென்த்ல ஸ்டேட் செகண்ட் வந்திருக்கான்.

நீ என்ன மார்க்க்ப்பா?

நான் இப்பதான் நைன்த் அங்கிள். அடுத்த வருஷம் அவன் ஸ்வீட் தருவான்.

குட் ஃப்ரெண்ட்ஸ்.

தேங்க்ஸ் அங்கிள். மதுமிதா இல்லையா?

__________________________________________________

ஹாய் வித்யா

ஹாய். ஹவ் ஆர் யூ?

ஃபைன். ஹேய்.. நம்ம மதன் பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசனும்

ஐ நோ. ஏன் அவன் பேச மாட்டானா?

அவனுக்காக நான் பேசக்கூடாதா? ஐ வாண்ட் ஹிம் டு பீ ஹேப்பி ஆல்வேஸ். அவன் உன்னை ரொம்ப டீப்பா லவ் பண்றான் வித்யா.

தெரியும்டா. இன் ஃபேக்ட்.. நானும்தான்.(தரையை பார்க்கிறார்)

ரியலி? என் வேலை மிச்சம்.

இடியட். இதை சொல்லக் கூட பயமா அவனுக்கு,

லீவ் இட். பை தி வே, ஷீலா எங்க மியூசிக் கிளாஸ் போறானு தெரியுமா?

__________________________________________________

அதேதான் மக்கா.

நண்பர் பரிசல்,கேபிளின் புத்தகம் வருது. இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்கோங்க. மறக்காம புக்க வாங்கிடுங்க. முடிஞ்சவங்க ஞாயித்துக்கிழமை வந்துடுங்க. காதலர் தினத்தப்ப வச்சா எப்படி வறதுன்னு ஃபீல் பண்ற என்னை மாதிரி யூத்கள்… அங்க வாங்க. ஒரு வித்தியாசமான காதலர் தினமா இருக்கட்டும். காதலரே இல்லைன்னு சொல்றவங்க.. சரி விடுங்க.அத இன்னொரு நாள் பார்ப்போம்.

தேதி : 14.02.10
நேரம் : மாலை 5.30

சிறப்பு விருந்தினர்கள் : நீங்கள்... மற்றும்
பிரமிட் நடராஜன் - நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் - இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா - எழுத்தாளர்
பொன்.வாசுதேவன் - பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78


பரிசல் காரன் : 9894747014
கேபிள் சங்கர் : 9840332666
குகன் : 9940448599

20 கருத்துக்குத்து:

சுசி on February 13, 2010 at 1:40 AM said...

// காதலர் தினத்தப்ப வச்சா எப்படி வறதுன்னு ஃபீல் பண்ற என்னை மாதிரி யூத்கள்…//

என்ன குரு.. வொய் பீலிங்ஸ்?
உங்களுக்காகத்தான் காதலர் தினத்தப்ப வைக்கிராங்க.

அப்படியே பட்டமளிப்பையும் நடத்த போறாங்களோ என்னமோ..

//வலையுலகக் காதல் மன்னன் அப்படின்னா சும்மாவா ?//
//வலையுலகின் அசல் காதல் மன்னன் அப்படின்னு சொல்லுங்க :)//
//வலையுலகின் அசல் காதல் மன்னன் வாழ்க//

சுசி on February 13, 2010 at 1:50 AM said...

//சிறப்பு விருந்தினர்கள் : நீங்கள்... மற்றும்//

கலக்கல் கார்க்கி..

அழைப்பிதழ் எழுதிய விதம் புதுசா இருக்கு.

வரமுடியலேன்னாலும் வாழ்த்திக்கிறேன்.

Anonymous said...

அப்ப இந்தப்பதிவு போட்டதோட பர்ப்பஸ்
சரி புரிஞ்சது. வாழ்த்துக்கள் பரிசல் @ கேபிள்

அன்புடன் அருணா on February 13, 2010 at 7:27 AM said...

காதல் வாரத்தில் நட்புக்கு மரியாதையா? வாழ்த்துகள் !

டம்பி மேவீ on February 13, 2010 at 8:56 AM said...

அடடா ....நான் இன்னும் எனது வாழ்த்துரையை தயார் பண்ணவில்லையே .....பரவலையா????

கார்க்கி உங்களின் கிடார் வாசிப்பு உண்டா ????

radhika on February 13, 2010 at 9:51 AM said...

ippadiye ethanai naal thaan oorai ematharinganu paarkiren. :))

பரிசல்காரன் on February 13, 2010 at 10:31 AM said...

வாவ்!

நன்றி.. நன்றி!!!!!

பரிசல்காரன் on February 13, 2010 at 10:32 AM said...

சுசியோட ரெண்டாவது பின்னோட்டம் படிக்கறப்போ லேசா சிரிப்பு வந்துச்சு!!!

:-)

சொல்றவங்க சொன்னாத்தான் கவனிக்கறாங்கப்பா!

Rajeswari on February 13, 2010 at 11:55 AM said...

:-))

வாழ்த்துக்கள்..

Karthik on February 13, 2010 at 12:26 PM said...

பேக் டு பார்ம். நல்லாருக்கு. :))

வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும்!!

கும்க்கி on February 13, 2010 at 12:31 PM said...

:-))

க்கள்..

Hamitha on February 13, 2010 at 12:53 PM said...

பரிசல்,

என்ன இன்னும் குழந்தை மாதிரி? அது நான் எழுதினதுன்னு நேரடியா சொல்ல ஈகோ தடுக்குதோ? விடுங்க பாஸ்.

கார்க்கி on February 13, 2010 at 1:36 PM said...

@சுசி,
நன்றி நன்றி
அது பரிசல் பதிவில் இருந்து காப்பி பேஸ்ட் செய்தது. :))

@அம்மிணி,
அவ்ளோதான் தாங்க விஷயம் :)

@அருணா,
ஹிஹிஹி

@மேவீ,
ஒரே நேரத்தில் மூன்று அணுகுண்டுகள் எதற்கு?

@ராதிகா,
:(

@பரிசல்,
அட்ஜஸ்ட் பண்ணிக்கொங்க பாஸ் :)

@கார்த்திக்,
அப்போ நாலு நாளா போட்ட கமெண்ட்ஸ் எல்லாம்???

@ராஜேஷ்வரி,
நன்றி

@கும்க்கி,
:))

@ஹமீதா,
:))

முரளிகுமார் பத்மநாபன் on February 13, 2010 at 3:30 PM said...

ஐ அம் ஜஸ்ட் அஸிஸ்டெண்ட்//

மீ டூ சகா, உங்க TShirt Size என்ன?

அத்திரி on February 13, 2010 at 3:55 PM said...

YES SAka

cheena (சீனா) on February 13, 2010 at 4:18 PM said...

வெளியீட்டு விழ வெற்றி பெற நல்வாழ்த்துகள் - இடுகை நல்லாருக்கு - வாவ்

Cable Sankar on February 13, 2010 at 4:43 PM said...

நன்றி.. நன்றி. கார்க்கி..

SanjaiGandhi™ on February 13, 2010 at 6:44 PM said...

தண்டனை நிச்சயம்..

ஆதிமூலகிருஷ்ணன் on February 17, 2010 at 6:19 PM said...

நல்ல ஐடியா. சிறப்பா பண்ணியிருக்கிறாய். :-))

தமிழ்ப்பறவை on February 21, 2010 at 8:27 PM said...

க்யூட்....

 

all rights reserved to www.karkibava.com