Feb 9, 2010

முத்தம் முத்தம் முத்தமா..


 

முதன்முறை எப்போது..

   ஒரு வழியாய் நீ உன் காதலை கடற்கரையில் என்னிடம் சொல்லிய தினத்தன்றா? இல்லை அன்று நம் கண்கள் மட்டுமே முத்தமிட்டன. அவையெல்லாம் கணக்கில் வராது.

    அதற்கடுத்த தினமே நாம் கடற்கரை சென்றோம். என் வலக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.பாறையாய் என்னையும் அலையாய் உன்னையும் உருவகப் படுத்தினேன். அலை என்றால் சென்று விடும். என்றும் உன்னை வருடும் தென்றலாய்தான் நானிருப்பேன் என்றாய். உன் புறங்கையில் மென்மையாய் முத்தமிட்டேன். முழுவதும் முடிக்குமுன் வெடுக்கென பிடிங்கினாய். "வேறு இடமா கிடைக்கல" என்ற உன் வார்த்தையை, கடற்கரையைத்தான் சொல்கிறாய் எனத் தவறாக புரிந்து கொண்டது என் சிற்றறிவு.

      மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம். நேற்று நடந்ததற்கு விளக்கம் கொடுத்தாய். அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தேன். ஏனோ அன்று மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. மூன்றாம் நாளே நாம் நம் முதல் குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம். முத்ததிற்கே வழியில்லை, இதில் குழந்தையாம் என மனதிற்குள் நீ சிரித்திருக்கலாம். எனக்கு கேட்கவில்லை.

     மறுநாள் இல்லை, ஆனால் மீண்டும் ஒரு நாள் கடற்கரை வந்தோம். அன்று எப்படியாவது முத்தமிட வேண்டும் என முடிவு செய்தது நானில்லை. ஆனால் உன் முடிவை நீ என்னிடம்  சொல்லவில்லை. தூரத்தில் வானமும் கடலும் முத்தமிட்டு கொண்டிருப்பதாக சொன்னாய். காதல் மொழி புரியவில்லை எனக்கு. பார்ப்பதற்கு அப்படி தெரிந்தாலும் அந்த சங்கமம் எங்கேயும் நடப்பதில்லை என்றேன் நான். ஒரு பார்வை பார்த்தாய்.

     மறுநாள் கடற்கரை அழைத்தேன்.செல்லமாய் கோபப்பட்டாய். இந்த முறை முத்தம் உண்டு என்ற உத்தரவாதத்துடன்தான் வர சம்மதித்தாய். ஆண் வர்க்கத்திற்கே தீராத களங்கம் ஏற்படுத்திய கவலை சிறிதும் இல்லாமல் உன்னுடன் நடந்தேன். எப்படி, எங்கே, எப்போது என வீட்டுப்பாடம் எதுவும் செய்யாததால் முழித்துக் கொண்டிருந்தேன். என் காதலி அல்லவா நீ.. என்னைப் போலவே நீயும் பெண் வர்க்கத்திற்கு களங்கம் செய்ய நினைத்தாயோ என்னவோ திடீரென என கன்னத்தில் இச்சென்றாய். முத்தமிட்ட உன்னைப் பார்க்காமால் சுற்றுமுற்றும் பார்த்தேன் நான். என்ன நினைத்தாயோ தெரியவில்லை.

     உன்னை பழிதீர்க்க வேண்டாமா? நீ கொடுத்ததை திருப்பித் தர வேண்டாமா என வீராவேச வசனங்கள் பேசி மீண்டும் கடற்கரைக்கு அழைத்தேன். துள்ளி குதித்து வந்தாய். பேச்சின் நடுவே உன்னைப் போல் நீ எதிர்பாராத தருணத்தில் என் கணக்கைத் தீர்த்தேன். நானும் முத்தமிட்டதை போல் உணரவில்லை. நீயும். இப்படி கொடுப்பதெல்லாம் முத்தமல்ல என்றேன் நான். செல்லமாய் அடித்தாய். " நானா வேணான்னு சொல்றேன்" என சிணுங்கினாய்.

      நல்லதொரு சந்தர்ப்பத்திற்காக இருவரும் காத்திருந்தோம். தொலைபேசியில் முத்தமிடுவாய். உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா என்பேன் நான். உன்னைப் போல் ஒருவனை காதலித்த பெண்ணின் கண்ணீரால்தான் என வம்படிப்பாய். திரையரங்கில் முத்தம் கேட்டாய். சம்மதமில்லை என்றேன் நான். குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும் என்றேன் நான். ஆச்சரியமாய் பார்த்தாய். என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.

     அதன் பின் நடந்ததெல்லாம் சொல்லும்படி இல்லை. நம் காதல் நம்மைத் தவிர அந்தக் கடலுக்கு மட்டுமே தெரியும் என்றாய். கடல் கூட கண் வைக்குமா என்ன? எல்லாம் சிதறியது. நம் போராட்டம், உன் தந்தையின் மிரட்டல், என் கடமைகள், என எல்லாம் நமக்கெதிராய் சதி செய்தன. பின் ஒரு மழைக்கால மாலையில் வெகுநாட்களுக்கு பிறகு நம் கடற்கரையில் சந்தித்தோம். கடைசி சந்திப்பு என்ற உன் நிபந்தனை பேரில்தான். என்ன வேண்டும் என்றாய். உன் புகைப்படம் என்றேன் நான். முத்தம்? என்றாய். ஏனோ மறுத்து விட்டேன்.  “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.. ஏதேதோ பேசி விட்டு புகைப்படமும் தராமால் சென்று விட்டாய்.

     இதுவரை நிகழவில்லை நான் கனவு கண்ட அந்த முத்தம். இனி மேல் நிகழ்ந்தாலும் அது முத்தமாக கணக்கிட முடியாது. உனக்காக காத்திருக்கிறேன். ஒரு முடிவுக்காக காத்திருக்கலாம்.. ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது.

47 கருத்துக்குத்து:

சுசி on February 9, 2010 at 11:44 PM said...

கதைக்கு பொருத்தமா ஒரு கனத்தோட இருக்கு டெம்ப்ளேட்..

என்ன குருவே மூணாம் நாள் இப்டி அழ விட்டுடீங்க..

சுசி on February 9, 2010 at 11:46 PM said...

// என் வலக்கையின் ஐந்து விரல்களை பத்தாய் மாற்றிக் கொன்டிருந்தது உன் இடக்கை.//

இது ஒரு உதாரணம்..
இப்டி நிறைய்ய்ய இடங்கள் ரசிக்கும்படியா இருக்கு கார்க்கி.

சுசி on February 9, 2010 at 11:58 PM said...

// மறுநாள் மீண்டும் கடற்கரை வந்தோம்//
நாங்களும் வந்திட்டோம்..

// என்னை விட்டு என் முத்தத்தை காதலிக்க போவதாய் சொன்னாய்.//
ஓ.. கதையில முத்தம்தான் வில்லனா??

//ஆனால் என் கதையில் காத்திருப்பதே முடிவாகிவிட்டது.//
ஹூ..ம்.. எங்களையும் சேத்துல்ல காக்க வச்சிருக்கீங்க.. :((

முடிவ மாத்துங்க கவிஞரே.. :))

YUVARAJ S on February 10, 2010 at 12:33 AM said...

nice posting karki.

Find my scribbling at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

keep blogging

Madurai Saravanan on February 10, 2010 at 12:34 AM said...

rasikkum patiyaaka irukkirathu muththak kanavu . naanum kaththirukkiran muththam tharuvathai paarkka.

கனவுகள் விற்பவன் on February 10, 2010 at 12:38 AM said...

// “ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’//

நல்லா இருக்கு...

வெறுமை on February 10, 2010 at 12:39 AM said...

அருமையான அனுபவம்..படித்த எனக்கும் பகிர்ந்த உங்களுக்கும்...

Rajalakshmi Pakkirisamy on February 10, 2010 at 1:18 AM said...

:((

yyyyyyyyyy ippadi?

தேடல் on February 10, 2010 at 2:01 AM said...

ஒவ்வொரும் வரியும் ரசனைக்குரியது. எழுதியவருக்கு வலித்ததோ இல்லையோ, படிப்பவருக்கு வலிக்கிறது.

பிரியமுடன்...வசந்த் on February 10, 2010 at 2:09 AM said...

முடிவு ப்ச்..

சில இடங்களில் இலக்கிய காதல்

காதல் புரிந்தாலே இலக்கியவாதியாகிவிடுவார்களாமே உங்களைப்போல...

Anonymous said...

காதலர் தினத்துக்கு சந்தோஷமான பதிவா போடுமய்யா :)

வெற்றி on February 10, 2010 at 6:17 AM said...

//குழி விழும் உன் மெல்லிய கன்னங்களை என் கைகளில் ஏந்தி, காந்தத்தால் செய்யப்பட்ட உன் கண்களை உற்று நோக்கி, தேன் சுமக்கும் உன் இதழ்களை என் இதழ்களால் வருடி முத்தமிட வேண்டும். அந்த முதல் முத்தம் குறைந்த பட்சம் ஐந்து நிமிடம் நீடிக்க வேண்டும்//

Nice lines..keep rocking..

சங்கர் on February 10, 2010 at 9:48 AM said...

//சுசி said...
கதைக்கு பொருத்தமா ஒரு கனத்தோட இருக்கு டெம்ப்ளேட்..//

கதையா ????

Chitra on February 10, 2010 at 9:52 AM said...

“ உன் கன்னத்தில் மட்டும் ஏன் குழி என நினைத்திருக்கிறேன். அன்று, ஒரு கண்ணீர்த் துளி கண்களில் பிறந்து உன் கன்னத்தை தடவி, குழியில் இறங்கி உன் உதட்டில் உயிரை விட்டது. கடவுளே!! அந்தக் கண்ணீர்த் துளியாகவவாது நான் பிறந்திருக்க கூடாதா? ’’.

........... mmmmmm......... அழகான வரிகள் - சோகத்திலும்.

மோகன் குமார் on February 10, 2010 at 10:09 AM said...

//About Me
ஏ சலசாலா இஸ்குபராரா அசக்குமொராயா.. பூம் பூம் ஜகாகா முக்காலா மையா மையா லாலாக்கு லாலாக்கு டோல்டப்பிமா.//

என்னாதிது??? தமிழ் படம் பாதிப்பா?

கார்க்கி on February 10, 2010 at 10:14 AM said...

சுசி, காதலில் எல்லாமும் இருக்குங்க.:)

@யுவராஜ்,
நன்றி பாஸ். நிச்சயம் பார்க்குறேன்

@சரவணன்,
நன்றி

@கனவுகள் விற்பவன்,
நன்றி

@வெறுமை,
நன்றி. அது ஏங்க இப்படி ஒரு பேரு?

@ராஜி,
ஏன்? என்ன ஆச்சு????

@தேடல்,
:)))

@வசந்த்,
நோ நோ நோ பேட் வேர்ட்ஸ் சகா

அம்மிணி,
போட்டுடுவோம்.இனிமேல் ஒன்லி ஹேப்பி :))

@வெற்றி,
நன்றி

@ஷங்கர்,
ஆமா. பின்ன என்ன சகா?

@சித்ரா,
நன்றிங்க

@மோகன்,
ஆமா பாஸ்... :))

ஸ்ரீமதி on February 10, 2010 at 10:16 AM said...

புலம்பல்? :)) டெம்ப்ளேட் சூப்பர்.

புன்னகை on February 10, 2010 at 10:19 AM said...

:-(

taaru on February 10, 2010 at 10:24 AM said...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...
எந்த பீச் சகா? illiots? அப்போ எங்களையும் பாத்து இருக்கணுமே?!
நல்லாருக்கு...

Priya on February 10, 2010 at 11:22 AM said...

வாழ்த்துக்கள் தல தொடரட்டும் உங்கள் காதல் சுனாமி

பாலாஜி on February 10, 2010 at 11:25 AM said...

நல்ல ரசனையான பதிவு

நர்சிம் on February 10, 2010 at 12:05 PM said...

ரத்தம்..

selvanambi on February 10, 2010 at 12:18 PM said...

அருமையான பதிவு.keepitup!

ர‌கு on February 10, 2010 at 12:26 PM said...

முடிய‌ல‌ ச‌கா, ரொம்ப‌வே அப்பாவியோ???

ராஜன் on February 10, 2010 at 12:32 PM said...

லாலாக்கு லாலாக்கு டோல்டப்பிமா.

Lakshmi Narasimhan on February 10, 2010 at 12:42 PM said...

appdiye oru romance look kudunge...:)

so romantic!!!!

பரிசல்காரன் on February 10, 2010 at 12:46 PM said...

சகா..

வாழ்த்துகள்!

கார்க்கி on February 10, 2010 at 1:00 PM said...

@ஸ்ரீமதி,
நன்றிங்கோ

@புன்னகை,
வொய் வொய் வொய்?

@டாரு,
“கதை” பாண்டியில் நடக்குதுன்னு வச்சிக்கொங்க பாஸ்

@ப்ரியா,
நன்றி.:))

@பாலாஜி,
நன்றி

@நர்சிம்,
எதுக்கு சகா?புரியல

@செல்வனம்பி,
நன்றி

@ரகு,
பேரு என்ன ஆச்சு? குறும்பன்

@ராஜன்,
இதுக்கு எதுக்கு பாஸ் நெகட்டிவ் ஓட்டு போட்டிங்க???????

@லக்‌ஷ்மி,
தனியா விடரேன் சகா. மக்கள்ஸ் பாவமில்ல :))

@பரிசல்,
நன்றி. வெளிய சொல்லிடாதிங்க

ராஜன் on February 10, 2010 at 1:02 PM said...

//இதுக்கு எதுக்கு பாஸ் நெகட்டிவ் ஓட்டு போட்டிங்க???????//
தலைவா நான் ஓட்டே போடல ! என்னோட கம்ப்யூட்டர்ல ஒட்டு பட்டையே தெரியாது

பேநா மூடி on February 10, 2010 at 2:09 PM said...

இலக்கியவாதி ஆகிட்டிங்க சகா...,

கார்க்கி on February 10, 2010 at 2:49 PM said...

@ராஜன்,
சகா, தமிழ்மணத்துல rajanradhamanalan என்ற ஐடில எனக்கு நெகடீவி ஓட்டு விழுந்திருக்கு. யாராவ்து உங்க பேர டேமேஜ் செய்ய க்ரியேட் பண்ணாங்களானு பாருங்க..


@பேநா மூடி,
ரைட்டு சகா. எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துப்போம்

ராஜன் on February 10, 2010 at 3:11 PM said...

//உங்க பேர டேமேஜ் செய்ய க்ரியேட் பண்ணாங்களானு பாருங்க..//

ம்க்கும் ..... அதுக்கு வேற யாருமே தேவை இல்ல சகா நானே போதும்

Anbu on February 10, 2010 at 4:49 PM said...

நடத்துங்க அண்ணா...ரொம்ப நல்லா இருக்கு..

Anbu on February 10, 2010 at 4:51 PM said...

ஓ மகசீயா ஓகோ மகசீயா நாக்கமுக்க நாக்க ஓசகலக்கா ஓகோ ரண்டக்க....

:-((

அன்புடன் அருணா on February 10, 2010 at 5:07 PM said...

ம்ம்ம் ரசனையான புலம்பல்!

||| Romeo ||| on February 10, 2010 at 5:07 PM said...

சோகமா எழுதாதிங்க சகா. சந்தோஷ முடிவுகளை வரவேற்போம் !!!

தாரணி பிரியா on February 10, 2010 at 5:12 PM said...

இனி வருபவையெல்லாம் புதிய பதிவாகத்தான் இருக்கும் ‍ அப்படின்னு யாரோ சொன்னாங்களே :)

இது உங்க ஏரியா , அடிச்சு விளையாடறீங்க கார்க்கி கலக்குங்க :)

Ponkarthik on February 10, 2010 at 5:43 PM said...

arumai saha nan ungalin rasigan kadanth 4 mathangalaga anal enakku eppadi tamilil type seivathu enbathu theryathu enavae nan tanglishil type saeikiran..

can u tell me how to type in tamil? it'll really helpful for me.

ennudaya muthal pathivu ithu than vanthu parungal saha...

mikka nandri..

http://ponkarthiktamil.blogspot.com/

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on February 10, 2010 at 5:54 PM said...

//.. உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும். ..//
அருமை சகா..

Ponkarthik on February 10, 2010 at 6:15 PM said...

saha how to write in tamil give me some ideas..

Rathi on February 10, 2010 at 8:57 PM said...

கார்க்கி,

காதலுக்கு முகவுரை மட்டுமல்ல முற்றுப்பெறாத முத்தமே முடிவுரையும் ஆனது நெகிழ்ச்சியானது. உங்கள் எழுத்துகள் இன்னமும் மெருகேற வாழ்த்துக்கள். Valentines Day கொண்டாட்டம் என்பது இந்நாட்களில் பணம் பார்க்கும் நோக்குடன் வியாபாரமாக்கப்படவில்லையா?

கார்க்கி on February 10, 2010 at 10:07 PM said...

நன்றி அன்பு

நன்றி அருணா

நன்றி ரோமியோ. இனிமேல் வராம பார்த்துக்கிறேன்..

தா.பி.நீங்கதாங்க ஷார்ப். சரியா கண்டுபுடிச்சிட்டிங்க..:))

நன்றி பொன்கார்த்திக். கூகிளில் nhm wirter என்று தேடுங்கள். அதன் முதல் லின்க்கில் டவுன்லோடு செய்தால் தமிழில் டைப்பலாம். அல்லது www.tamileditor.org முயற்சி செய்ங்க. வாழ்த்துகள்..

நன்றி பட்டிக்காட்டான்

ரதி..உண்மைதான். அதற்காக நாம கொண்டாடம இருக்க முடியுமா? இந்த காலத்தில் எதில்தான் வணிகமயம் இல்லை?

கார்க்கி on February 10, 2010 at 10:11 PM said...

@ponkaarthik,

http://software.nhm.in/products/writer

Karthik on February 11, 2010 at 11:08 AM said...

one of my fav post. :)

ஆதிமூலகிருஷ்ணன் on February 11, 2010 at 9:34 PM said...

உண்மையில் மிக மிக அழகான பதிவு. ர்ர்ர்ர்ரசித்தேன்.

உன் முத்தங்களையெல்லாம் அது எடுத்துக் கொண்டு எனக்கு வெறும் சத்தததையே தரும்.// உச்சம்.

Selvamani on February 13, 2010 at 1:07 AM said...

மிக மிக நல்ல ரசனை.

தொடரடும்..

தமிழ்ப்பறவை on February 21, 2010 at 8:35 PM said...

மிகப் பிடித்திருந்தது.. இதைக் காதலர் வார சிறப்பு டெம்ப்ளேட்டில் படிக்கவில்லையே என்பதுதான் என் கவலை...

 

all rights reserved to www.karkibava.com