Feb 8, 2010

பிள்ளையார் எனும் களவாணிப்பையன்


 

உனக்கொரு குட்டி தங்கை

உண்டா என்றபோது முறைத்தாய்

ஹைக்கூவைப் பற்றி

நான்

தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பொண்ணு பின்னாடி சுத்தறான்

என்று யாரோ அம்மாவிடம்

சொல்லி இருக்கிறார்கள்.

இல்லை சரியா பாருங்க

அவன் தேவதை பின்னால்தானே போறான்

என்றார்களாம் உன் அத்தை

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எதற்கு தோதாக

கருப்பு நிற பொட்டு

என கேட்க நினைத்து

உனக்குத்தாண்டா என்று

நீ சொல்லிவிடக்கூடுமென்பதால்

விட்டுவிட்டேன்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீ

கன்னத்தில் கை வைத்திருக்கும்

அழகைப் பார்க்க

எத்தனை

கப்பலை வேண்டுமென்றாலும்

கவிழ்க்கலாமடி..

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பிள்ளையாரிடம் வேண்டும்போது

கண்களை மூடிக் கொள்ளாதே..

களவாணிப்பையன்..

உன் முன்பு வந்து

தோப்புக்கரணம் போட்டு

என்னத்த வேண்டிக்கிட்டானோ?

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

கோவிலுக்கு வருபவர்களெல்லாம்

உண்டியலில் சில்லறை போடுகிறார்கள்.

நீ போய்

சிரித்து விட்டு வந்துவிடு

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

பையன் எவ்ளோம்மா சம்பாதிக்கிறார்

என்ற தரகரிடம்

”கைநிறைய” என்றார் அம்மா.

இனி முத்தத்தை கைகளில்

தந்துவிடு

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

50 கருத்துக்குத்து:

நாஞ்சில் பிரதாப் on February 8, 2010 at 11:41 PM said...

எல்லாமே கலக்கல்....
கடைசில கவிதை சூப்பர் தல...

Asha on February 8, 2010 at 11:43 PM said...

Kadhalum Karkiyum!! Kalakkureenga Karki!

Template OK!

//எவ்ளோம்மா சம்பாதிக்கிறார் என்ற தரகரிடம் ”கைநிறைய” என்றார் அம்மா. இனி முத்தத்தை கைகளில் தந்துவிடு //
//பொண்ணு பின்னாடி சுத்தறான் என்று யாரோ அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்கள். இல்லை சரியா பாருங்க அவன் தேவதை பின்னால்தானே போறான் என்றார்களாம் உன் அத்தை //

My picks!! Super!! :))

சங்கர் on February 8, 2010 at 11:46 PM said...

//நீ
கன்னத்தில் கை வைத்திருக்கும்
அழகைப் பார்க்க
எத்தனை
கப்பலை வேண்டுமென்றாலும்
கவிழ்க்கலாமடி..//

எத்தனை விரல் பதிந்தது ?

:))

Madurai Saravanan on February 9, 2010 at 12:07 AM said...

super arumai. pillaiyaar enrathum njanak kuuththanin kavithai ninaivukku varukirathu.

/theivangkalil
enakkup pillaiyaarai
rembavum pidikkum
verentha theivam
oppukkollum
kumpittapin
thookki utaikka /

எட்வின் on February 9, 2010 at 12:07 AM said...

ஆஹா இப்பவே பிப்ரவரி 14 வாசம் வீசுதே... ம்ம்ம்ம்

தமிழ்ப்பறவை on February 9, 2010 at 12:07 AM said...

கலக்கல் சகா...
ரசித்தேன்...

பிரியமுடன்...வசந்த் on February 9, 2010 at 12:11 AM said...

//எதற்கு தோதாக

கருப்பு நிற பொட்டு

என கேட்க நினைத்து

உனக்குத்தாண்டா என்று

நீ சொல்லிவிடக்கூடுமென்பதால்

விட்டுவிட்டேன்
//


இது ரொம்ப வருத்தமா எழுதுனதா சகா இதுதான் நல்லாயிருக்கு.....
காதலுக்கு இதயம் மொழியாகும்போது கண் ஃபெயிலாயிடுது இதயம் பாஸ் அப்புறம் என்ன கருப்பு வெள்ளை?

பரிசல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் அண்ணா கார்க்கி ப்ரோஃபைல் வாக்கியத்துக்கு அர்த்தம் நீங்க சொல்லலைன்னா மண்டை வெடிச்சுடும்போல....

காதலும் கார்க்கியும் ரொம்ப மேட்ச்சா இருக்கு டெம்ப்ளேட்டும்... யாரோ நல்ல ரசனையான ஆள் செலக்ட் பண்ணி கொடுத்திருக்காங்க... ரைட்டா?

முகிலன் on February 9, 2010 at 1:02 AM said...

கூடிய விரைவில் கார்க்கியின் காதல் தொகுப்பு வெளியாகும்னு எதிர்பார்க்கலாமா?

Chitra on February 9, 2010 at 2:16 AM said...

நீ

கன்னத்தில் கை வைத்திருக்கும்

அழகைப் பார்க்க

எத்தனை

கப்பலை வேண்டுமென்றாலும்

கவிழ்க்கலாமடி..


........... so sweet!

சுசி on February 9, 2010 at 4:13 AM said...

//சாளரம்//
இன்னும் சூப்பரா இருக்கு..

//எப்பத் தெரியுமா?//
காதலும் கார்க்கியும் வந்தத்தில இருந்து..

//காதல் வாரம்//
கலக்கல்தான் கார்க்கி.. :)))

சுசி on February 9, 2010 at 4:15 AM said...

யார் அந்த ஒற்றை இதயம் (கார்)கீயோடன்னு கேட்டா சரியா பாருங்க அது கார் கீயே கிடையாதும்பீங்க.

அப்போ நேத்திருந்த மிச்ச இதயங்கள் என்னாச்சு??

தமிழ்ப்படம் பாத்து ரொம்பவே கெட்டுப் போய்ட்டீங்க.

சுசி on February 9, 2010 at 4:16 AM said...

கருப்புப் பொட்டும்,
கன்னத்தில வச்ச கையும்,
களவாணிப் பயலும் சூப்பரா இருக்கு..

கை நிறைய சம்பாதிக்கிறது செம..

Anonymous said...

நடத்துங்க நடத்துங்க

ஆனந்தன் on February 9, 2010 at 4:56 AM said...

கவிதைகள் சிறப்பு,உங்கள் தலைப்புக்கு என் செருப்பு.

பிள்ளையார் கவிதையில் உங்கள் தலைப்புக்கேற்ற வகையில் எந்த பொருளும் இல்லை? எநில் உங்கள் நோக்கம் இந்துக்களை புண்படுத்டுவதும்,மற்றவர்களை மகிழ வைக்கவும் என எடுத்துக் கொள்ளலாமா?

வெற்றி on February 9, 2010 at 5:30 AM said...

எல்லாமே கலக்கல் சகா..அதுவும் அந்த பிள்ளையார் கவிதை கலகலகலக்கல் :))

உங்களை அந்த ஐயர் பொண்ணு மிஸ் பண்ணிடுச்சு சகா..

Dinesh on February 9, 2010 at 6:40 AM said...

என்ன தான் வயசானாலும் யூத் மாதிரியே எழுதிறீங்க பாருங்க... முடியல...

கார்க்கி on February 9, 2010 at 7:44 AM said...

நன்றி பிர்தாப்

நன்றி ஆஷா. அந்த படத்துக்காகத்தான் இந்த டெம்ப்ளேட்டே :)

சங்கர்.. விரல் அல்ல :))

நன்றி சர்வணன்

நன்றி எட்வின். ம்ம்ம்ம்..ஆமாங்க

நன்றி பறவை

வசந்த், அதுவும் சரிதான். புரொஃபைல் வரி எந்த பாட்டுன்னு தெரியுமில்ல? டெம்ப்ளேட் நான் தான் செல்கட் செய்தேன் பாஸ் :))

முகிலன், ஹிஹிஹிஹிஹி.நன்றிங்க

சுசி, அந்த பல இதயம் குழப்பம் தந்ததாலே இப்படி மாத்திட்டேன். எனக்கு எல்லாம் ஒரே ஒரு இதயம் போதும், ஒரு நேரத்தில் :))

நன்றி அம்மிணி,

ஆனந்தன், என்ன பாஸ்? நான் இதுவரைக்கும் அந்த மாதிரி எழுதி இருக்கேனா? தலைப்பு பிடிக்கலைன்னு சொன்னாலே போதாதா? காதலில் யாரை வேண்டுமானாலும் திட்டலாங்க, காதலியைத் தவிர.. :)))

@வெற்றி, இல்லவே இல்ல சகா. நானும் தான் மிஸ் பண்ணிட்டேன்..

@தினேஷ், அட என்னங்க நீங்க 18 எல்லாம்.. சார் 25 எல்லாம் ஒரு வயசா? அப்புறம் கேபிள்கிட்ட புடிச்சி தந்துடுவேன் :))

நாய்க்குட்டி மனசு on February 9, 2010 at 8:25 AM said...

எனக்கு எல்லாம் ஒரே ஒரு இதயம் போதும், ஒரு நேரத்தில் :))//
புழைக்க தெரிஞ்ச பய பிள்ளை .
கார்க்கியின் காதல் வாரம் எதிர்பார்ப்பை கூட்டுகிறது .

செந்தில் நாதன் on February 9, 2010 at 8:48 AM said...

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ பையன் எவ்ளோம்மா சம்பாதிக்கிறார் என்ற தரகரிடம் ”கைநிறைய” என்றார் அம்மா. இனி முத்தத்தை கைகளில் தந்துவிடு ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ நீ கன்னத்தில் கை வைத்திருக்கும் அழகைப் பார்க்க எத்தனை கப்பலை வேண்டுமென்றாலும் கவிழ்க்கலாமடி
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

எல்லாமே சூப்பர். எனக்கு பிடித்தவை மேலே.

செந்தில் நாதன் on February 9, 2010 at 8:49 AM said...

சொல்ல மறந்துட்டேன்..டெம்ப்ளட் சூப்பர்..

Anonymous said...

முத்துக்கள் கோர்த்த சரம்....

தாரணி பிரியா on February 9, 2010 at 8:55 AM said...

எல்லாமே சூப்பர். காதல் வாரம் களை கட்டுது. காதலும் கார்க்கியும் ரொம்ப மேட்ச் ஆகி இருக்கு :)

taaru on February 9, 2010 at 9:35 AM said...

பிள்ளையாரிடம் வேண்டும்போது
கண்களை மூடிக் கொள்ளாதே..
களவாணிப்பையன்..
உன் முன்பு வந்து
தோப்புக்கரணம் போட்டு
என்னத்த வேண்டிக்கிட்டானோ?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அடடா ! என்னே! அழகு!!! அந்த புள்ள நெம்ப கொடுத்து வச்சு இருக்கணும் சகா [அழைக்கலாம் ல?!! தவறு இல்லியே?]
ரெண்டு பேருக்கும் இனிய யூத் காதலர் தின வாழ்த்துக்கள்...
அது சரி.. இந்த பய புள்ள செய்றதுக்கு அவீங்க அப்பன[களவாணி பையன்] ஏன் திட்டுறீங்க.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிபிட்டேன் ஆமா..

மோகன் குமார் on February 9, 2010 at 9:44 AM said...

ம்ம்.. நற.. நற..

கார்க்கி: என்னா சகா .. பொறாமை???

மோகன்: லைட்டா...

Dinesh on February 9, 2010 at 9:51 AM said...

முன்ன எல்லாம் எங்க ஊர்ல சின்ன பயலுக எல்லாம் வயசுல மூத்தவங்களா அண்ணன் என்று கூப்பிடுவாங்க. இப்போ எல்லாம் ஒரு 10 வருட இடை வெளி வந்தாலே அங்கிள் ஆக்கிடுறாங்க நகரத்து வாண்டுகள். நானும் இப்போ நிறைய பேருக்கு அங்கிள் ஆயிட்டேன். ஸோ இனிமே யாராவது இங்க யூத் அப்புடீண்ணு சொன்னீங்க அவ்வளவு தான், எங்க ஏரியா
வாண்டுகளை விட்டு ஒரு நாள் முழுவதும் அழகிய பெண்கள் முன் அங்கிள் என்று தங்களை அழைக்கும் போராட்டம் நடக்கும் என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.

எல்லாரும் அங்கிள் தான்.
ஏன்னா, இனிமே எல்லாம் அப்புடி தான்...

Bala on February 9, 2010 at 10:01 AM said...

//நீ
கன்னத்தில் கை வைத்திருக்கும்
அழகைப் பார்க்க
எத்தனை
கப்பலை வேண்டுமென்றாலும்
கவிழ்க்கலாமடி..//

மிகவும் ரசித்தது. கலக்கிட்டீங்க நண்பா.

தற்போது கை நிறைய சம்பாதிக்கறீங்களா?

Mohan on February 9, 2010 at 10:09 AM said...

சில நேரங்களில்(பல?) கவிதையை விடக் ஹைகூவும் நன்றாக இருப்பது உண்மைதான்!

Anbu on February 9, 2010 at 10:11 AM said...

உங்க அட்டகாசம் தாங்கமுடியலை...

Sen22 on February 9, 2010 at 10:51 AM said...

Karki,

Kavithaikal Ellame Arumai..

Advance wishes for u..


Senthil,
Bangalore

கார்க்கி on February 9, 2010 at 11:03 AM said...

நன்றி நாய்க்குட்டி

நன்றி செந்தில்நாதன்

நன்றி தமிழரசி

நான்றி தா.பி. தேடி பிடிச்சிட்டோமில்ல

டாரு, அதெல்லாம் சொல்லலாம். தப்பில்ல. ஆனா ரெண்டு பேருக்கு வாழ்த்துகள்ன்னு சொன்னிங்களே. யாரு அந்த ரெண்டாவது?

ஹிஹிஹி.நன்றி மோகன்குமார்

தினேஷ், டன்ட்டன் டன்டன் டன் டன்(நாயகன் மீஸீக்)

நன்றி பாலா. இப்போதைக்கு எனக்கு வேலையே இல்ல பாஸ் :))

நன்றி மோகன்

நன்றி அன்பு

நன்றி சென்.

காவேரி கணேஷ் on February 9, 2010 at 11:34 AM said...

பய புள்ளைங்க அட்டகாசம் தாங்க முடியல.

எங்கேப்பா அந்த கேபிளு?

விக்னேஷ்வரி on February 9, 2010 at 11:36 AM said...

கோவிலுக்கு வருபவர்களெல்லாம்

உண்டியலில் சில்லறை போடுகிறார்கள்.

நீ போய்

சிரித்து விட்டு வந்துவிடு //

அப்படியே கோவிலுக்கு வெளியேயும்.... கிர்ர்ர்ர்ர்ர்ர்இனி முத்தத்தை கைகளில்

தந்துவிடு //

இது நல்லா இருக்கு.

இந்தக் கவிஞர் கார்க்கி எப்போ முடிப்பார்? பாவ்ம்பா நாங்க.

விக்னேஷ்வரி on February 9, 2010 at 11:41 AM said...

இடப்பக்கம் படம் - வலப்பக்கம் காதலும் கார்க்கியும். சரி தான். ஆனா, இடப்பக்க கீ ’கார்’’கீ’ மாதிரி இல்லையே...

ஆனாலும் நல்லாவே போகுது காதல் வாரம்.

குசும்பன் on February 9, 2010 at 11:48 AM said...

//உனக்கொரு குட்டி தங்கை

உண்டா என்றபோது முறைத்தாய்

ஹைக்கூவைப் பற்றி //

ஏன் அப்படி வீட்டில் இருக்கும் மரபு கவிதையை பற்றியும் தெரிஞ்சுக்க முயற்ச்சி செய்யேன்!

படுவா ராஸ்கோல்ஸ்!

குசும்பன் on February 9, 2010 at 11:49 AM said...

//உண்டியலில் சில்லறை போடுகிறார்கள். நீ போய் சிரித்து விட்டு வந்துவிடு //

சரியான சில்லறை குடும்பமா இருக்கும் போல!

குசும்பன் on February 9, 2010 at 11:51 AM said...

//கன்னத்தில் கை வைத்திருக்கும் அழகைப் பார்க்க எத்தனை கப்பலை வேண்டுமென்றாலும் கவிழ்க்கலாமடி.. //

மூக்கை பிடித்திருக்கும் அழகை பார்க்க எத்தனை நாள் வேண்டும் என்றாலும் குளிக்காமல் இருக்கலாம்!
(ங்கொய்யாலே அப்படியாவது சாகட்டும்)

பேநா மூடி on February 9, 2010 at 12:14 PM said...

// ஏ சலசாலா இஸ்குபராரா அசக்குமொராயா.. பூம் பூம் ஜகாகா முக்காலா மையா மையா லாலாக்கு லாலாக்கு டோல்டப்பிமா. //

எனக்கு இந்த கவித தான் பிடிச்சிருக்கு

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). on February 9, 2010 at 12:17 PM said...

Rightu Sagaa..

Raj on February 9, 2010 at 12:26 PM said...

நீ
கன்னத்தில் கை வைத்திருக்கும்
அழகைப் பார்க்க
எத்தனை
கப்பலை வேண்டுமென்றாலும்
கவிழ்க்கலாமடி..

அழகான‌ வ‌ரிக‌ள்.

வாழ்த்துக்க‌ள் ச‌கா.

Jaya on February 9, 2010 at 12:45 PM said...

கலக்கறீங்க கார்க்கி ..எல்லாமே சூப்பர்.

காதல் கவிஞர் கார்க்கி வாழ்க!! வாழ்க!! :))))

பாலாஜி on February 9, 2010 at 1:11 PM said...

எல்லாமே நன்றாக இருந்தது

||| Romeo ||| on February 9, 2010 at 2:18 PM said...

தபுவின் வீச்சு தெரிகிறது சகா..

Sure on February 9, 2010 at 3:00 PM said...

"உலகின் முதல் அழகிய காதலன் - கார்கி"
(கவிதைகள் இன்னும் இருக்குள்ள , I WAITING)

Karthik on February 9, 2010 at 4:15 PM said...

அண்ணன் Prosaic கமெண்ட் போட்டிருக்காறான்னு பார்த்தேன். இல்ல. ;)

நாசவேலைகள் தொடரட்டும். :))

அன்புடன் அருணா on February 9, 2010 at 5:14 PM said...

பாவம் பிள்ளையார் வுட்டுருங்க!

வெறுமை on February 9, 2010 at 6:08 PM said...

கிழிச்சிட்டிங்க கார்க்கி !!!! (மானாட மயிலாட நடுவர் குஷ்பூ ஸ்டைலில் படிக்குவும்)

டம்பி மேவீ on February 9, 2010 at 6:59 PM said...

:)))))))))))))


nalla irukku

கார்க்கி on February 9, 2010 at 8:45 PM said...

அனைவருக்கும் நன்றி..

கார்த்திக்.. ரொம்ப நல்லவர்ப்பா நீ...

ஏற்கனவே அண்னாத்த மைல்டா டவுட்டு இருக்குன்னு சொல்லியிருக்காராம்.. நீ வேற..:))

ஆதிமூலகிருஷ்ணன் on February 11, 2010 at 9:38 PM said...

கடைசிக்கவிதை மனம் கவர்ந்தது. இது போன்ற தபூபோபியா (கவனிக்க தபூமேனியா இல்லை) கவிதைகள் எழுதி ரொம்ப நாளாச்சு. விரைவில் பதிவிடுகிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் on February 11, 2010 at 9:39 PM said...

ஹிஹி.. மீ த 50. (பாரா கவனிக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் நீண்ட நாட்களுக்குப்பின்னர்)

 

all rights reserved to www.karkibava.com